Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவியைக் களைந்து விட்டு டெனிம் ஜீன்சுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற பிக்குகள் வசமாகச் சிக்கினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இசை நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக காவியுடையைக் களைந்து விட்டு, டெனிம் உடையில் சென்ற பௌத்த பிக்குமார் ஐவர், ஞாயிற்றுக்கிழமை இரவு மகரகமையில் பொலிசாரிடம் வசமாக மாட்டினர். ஞாயிறு இரவு மகரகமையில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பாதுகாப்பு வழங்கிய பொலிசார், பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐந்து வாலிபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இசை நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக காவியுடையைக் களைந்து விட்டு, டெனிம் உடையில் சென்ற பௌத்த பிக்குமார் ஐவர், ஞாயிற்றுக்கிழமை இரவு மகரகமையில் பொலிசாரிடம் வசமாக மாட்டினர். ஞாயிறு இரவு மகரகமையில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பாதுகாப்பு வழங்கிய பொலிசார், பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐந்து வாலிபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

   

குறித்த வாலிபர்கள் ஐந்து பேரும் மிகவும் கண்ணியமான முறையில் டெனிம் டிரவுசர் மற்றும் சேர்ட் அணிந்து காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட பொலிஸ் நிலையத்துக்கு ஏராளமான பிக்குகள் வருகை தந்த நிலையில் அது தொடர்பிலும் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கைதிக்கூண்டில் இருந்த ஐந்து பேரிடமும் மேற்கொண்ட கடுமையான விசாரணையின் போது அவர்கள் ஐவரும் பிக்குமார்கள் என்பதும், இசைக் கச்சேரியை பார்வையிடும் ஆசையில் காவியுடை களைந்து சாதாரண உடையில் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டிருந்த ஐந்து பிக்குமாரையும் திங்கட்கிழமை கங்கொடவில நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர் செய்தனர். பிக்குமார் ஐவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140957&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கர்கள், பிகருகளுடன் வந்திட்டினம் போல கிடக்குது?

இளந்தாரிப் பெடியள்... அரசாங்க சலுகைகளும் வேண்டும். வயது சந்தோசமும் வேண்டும் என்றால்....

இரண்டில ஒண்டை விடத்தான் வேண்டும்.

ஆனால், நம்ம பக்கமோ, அந்தப் பக்கமோ, காவி உடுப்பு எண்டால், நல்ல வசதி தான். பெண் பக்தர்கள் குவிவினம்.

சும்மா நாமளும், தமிழ் சிறியரும் உங்க நிண்டு கத்திக் கொண்டிராமல், காவி உடுப்பு போட வேண்டியது தான்... ரெடியே சிறியர்...:grin:

ம்ம்.. நீல.. கல.. கண்டம்... புத்தம் சரணம்... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி அவர்களே உங்கள் கத்தல் ஒன்றும் தமிழ் சிறி அவர்களுக்குக் கேட்காது. அவர் இப்போ குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பார். அல்லாகூ அக்பர்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.