Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரி

Featured Replies

எதிரி

ஓய்வு நிலையிலிருந்த உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம். சூரியனும் தன் பொற் கிரணங்களை அள்ளி வீசத் தொடங்கி விட்டான். அவசர உலகத்தின் வேகத்திலே மனிதனை விஞ்சிவிட வேண்டுமே என்ற ஆவேசத்துடன் பறவைகள் தம் உறக்கம் கலைத்து இரை தேடக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. வெள்ளைச் சிறகு கட்டிய பள்ளிக் குழந்தைகள், தம் தோட்டத்தைப் பார்க்கச் செல்லும் கமக்காரர்கள், சந்தை வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள்... என வீதிகள் சுறுசுறுப்படையத் தொடங்கி விட்டன.

வழமையாக வசுமதி வீட்டில் பொழுது புலர்வதில் சற்றுச் சுணக்கந்தான். அவர்களுக்கென்ன? கடைகளைக் கவனிக்கக் கணக்கப்பிள்ளைமார், பொருட்களை வாங்குவதற்கும் வீட்டு அலுவல்களைக் கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல் வேலைகளிற்கு ஒன்றிற்கு இரண்டு சமையலாட்கள் என ஒரு 'படையே' இருக்கும் பொழுது அவர்கள் நேரத்திற்கு எழுந்து என்னதான் செய்யப் போகிறார்கள். நன்றாகத் தூங்கிவிட்டுப் போகட்டுமே.

ஆனால் இன்று ...

வழமைக்கு மாறாகக் காலையிலேயே வீடு அமர்கக்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. வசுமதியின் ஒரே மகனான ரகுவிற்கு மாலையில் தான் பெண்பார்க்கும் படலம் அரங்கேறப் போகிறது. வீடு அமர்க்களப்படாமல் இருக்குமா என்ன?

தன்னை அலங்கரிப்பதற்குத் தேவையான ஆடைகளையும் நகைநட்டுக்களையும் தயார் படுத்துவது, பெண்வீட்டிலே துப்பறிவதற்கும் குற்றங் கண்டுபிடிப்பதற்கு மென்றே அள்ளுப்பட்டுவிடும் 'பட்டாளங்களுடன்' தொடர்பு கொண்டு அவர்களுடைய வரவை உறுதிப்படுத்திக் கொள்வது எனப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள் வசுமதி.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவரைப் போல நடக்கும் கூத்துக்களை கட்டிலிலே சாய்ந்திருந்தவாறே அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகுமார் முதலாளி - வசுமதியின் கணவர். வீட்டிலே 'அம்மனாட்சி' நடப்பதால் அவருக்கு அங்கே செய்வதற்கு அதிகம் ஒன்றும் இருக்கவில்லை. பார்வையாளர் பாத்திரமே போதுமானதாக இருக்கின்றது.

சிவகுமார் முதலாளியின் மனச் சக்கரம் கடந்த காலம் எனும் பாதையில் பின்னோக்கி ஓடி முப்பது மைல் கற்கள் தாண்டி நிற்கிறது. அவர் இப்போது சிவகுமார் முதலாளியல்ல. வெறும் சிவகுமார் என்கின்ற துடிப்பான புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்ட இருபத்தைந்து வயது இளைஞன். சமுதாயச் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்பவன். சிறந்த பட்டிமன்றப் பேச்சாளன். அவன் பேச்சுக்களும் இந்தச் சமுதாயச் சீர்கேடுகளுககுச் சவுக்கடி கொடுக்கக் கூடியதாகத் தான் இருக்கும். சாதிக் கொடுமைகள், சீதனச் சீர்கேடுகள் போன்ற தலைப்புகளில் அவன் பேசத் தொடங்கினால் வார்த்தைகளில் அனல் பறக்கும். சபை அடங்கிக் கேட்டுக் கொண்டிருக்கும்.

வசுமதியை அவன் முதன் முதலில் சந்தித்தது கூட ஒரு பட்டிமன்ற மேடையில் தான். 'சீதனக் கொடுமைக்குக் காரணம் ஆண்களா, பெண்களா' என்று தலைப்பிடப்பட்ட அந்தப் பட்டிமன்றத்தில் சீதனக் கொடுமைக்குக் காரணம் பெண்களே என்ற அணியில் வசுமதியும் ஒரு பேச்சாளர்.

"இப்பொழுது இந்தச் சீர்கேட்டுக்குப் பெண்களே காரணம் என்று வாதிடுவதற்கு வருகிறார் ஒரு பெண். எங்கே அவர் வாதத்தைப் பார்ப்போமே"

நீதிபதியின் சிக்கனமான அறிமுகத்தைத் தொடர்ந்து மேடைக்கு வருகிறாள் வசுமதி.

சபையோர்களின் குறிப்பாக இளைஞர்களின் கரஒலியும் குரலொலியும் மண்டபத்தை அதிர வைக்கின்றது. அழகான இளம் பெண்ணொருத்தி மேடையில் தோன்றினால் பையன்கள் சும்மா இருப்பார்களா என்ன? அத்தனை கண்களும் அவளையே மொய்த்திருக்கின்றன.

"சபையோர்களே! இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற, இளம் பெண்களின் கல்யாணக் கனவுகளையே தகர்த்தெறிந்து அவர்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி நிற்கின்ற, இந்தச் சீதனக் கொடுமைக்குக் காரணம் பெண்களே என்று பேச வேண்டிய நிலையையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.

எம்மைச் சுற்றியிருக்கும், எம் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி நிற்கும், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராட வேண்டிய நாங்கள் கைகட்டி வாய்பொத்தி மைளனிகளாக இருப்பதன் மூலம் இந்தச் சாக்கடையை ஏற்றுக் கொள்கிறோம் என்று தானே அர்த்தமாகின்றது. மௌனம் சமமதத்தின் அறிகுறி தானே. பெண்களில் எத்தனை பேர் இந்த அடிமை விலங்கை அறுக்க கங்கணம் கட்டியிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெண் சமுதாயமே வெட்கித் தலைகுனியத் தான் வேண்டியிருக்கும்."

"ஒவ்வொருவரும் தத்தமது சுயநலம் கருதி தமக்கென ஒரு வாழ்க்கையினை அமைத்துக் கொள்வதற்காகச் சீதனத்தைக் கொட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கும் வரை இந்தச் சாபக்கேடும் எங்களுடன் ஒட்டிக் கொண்டுதானிருக்கப் போகின்றது. பல ஆயிரம் ஆயிரம் பெண்களுக்கு கல்யாணம் என்பது வெறும் கனவாகத் தானிருக்கப் போகின்றது"

மண்டபத்தில் ஊசியைப் போட்டால கூடச் சத்தம் கேட்கும் போலிருக்கிறது. அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே அங்கு வந்தவர்கள் அவள் பேச்சிலே கட்டுண்டு போயிருக்கிறார்கள். கைதட்டியும் விசிலடித்தும் சீண்டிக் கொண்டிருந்தவர்களின் காதுகள் மட்டுமே இப்பொழுது தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வசுமதியின் சொற்கணைகள் தொடர்கின்றன.

"அது மட்டுமா? உங்களில் எத்தனை பெண்கள் உங்கள் மகன்மாரையும் சகோதரர்களையும் ஏலம் போட்டு விற்றிருக்கின்றீர்கள்? அல்லது விற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றீர்கள்? இப்படி நீங்கள் ஒவ்வொரு முறை விலைகூவும் போதும் ஒரு பெண்ணின் எதிர்காலக் கனவுகளை சிதறடிக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஆகவே சகோதரிகளே! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். இந்தச் சாபக்கேட்டிற்கெதிராகப் போராடுவதற்கு இன்றைய தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம். எங்கள் வாழ்வும் ஒரு நாள் விடியும் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.."

கரகோசம் செய்வதற்குக் கூட நினைவற்றவர்களாய் எல்லாரும் மது அருந்திய மந்திகளைப் போல மெய்மறந்திருக்கிறார்கள். பட்டிமன்றத்தின் தீர்ப்பு எப்படியோ சிவகுமாரின் மனதிலே ஒரு தீர்ப்புக்கான ஆரம்ப உரைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன.

விவாதம் முடிவடைந்த பினனர் அவளைப் புடம் போட்டுப் பார்க்க விரும்பிய சிவகுமார் மெதுவாகப் பேச்சைத் தொடங்குகிறான்.

"சும்மா சொல்லக் கூடாது மதி, கலக்கிப் போட்டீர். உம்மடை பேச்சு அந்த மாதிரி"

"தாங்ஸ்"

"பெரிசா மேடையிலை பேசிப் போட்டீர். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருமோ?"

"ஏன் வராது? நாங்களெல்லாம் ஒத்து ஒருவருமே சீதனம் குடுத்துக் கலியாணஞ் செய்ய மாட்டம் எண்டு உறுதியா இருந்தால் இதுக்குக் கட்டாயம் ஒரு முடிவு வரும்"

"பெரிசாக் கதைக்கிறீரே? உம்மடை வீட்டிலை சீதனத்தோi;ட கலியாணம் பேசினால் நீர் ஒத்துக் கொள்ள மாட்டீரோ?"

"ஒரு நாளுமில்லை. நான் ஏற்கனவே வீட்டிலை சொல்லிப் போட்டன். சீதனம் குடுத்துத் தான் ஒருத்தருக்கு வாழ்க்கைப்பட வேணுமெண்டால் அப்பிடியொரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. காலம் பூரா இப்பிடியே இருந்திட்டுப் போவன்"

உறுதியாகப் பேசிய வசுமதியின் பேச்சு சிவகுமாரை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமன்றி அவள் மீது ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தியது. தான் தேடிக் கொண்டிருந்த பெண்ணைக் கண்டுவிட்ட சந்தோசம் வெளிப்படையாகவே அவன் முகத்தில் தெரிந்தது. அவள் தான் தன் மனைவி என்று மனத்திற்குள் நிச்சயப்படுத்தி விட்டான்.

குடும்பப் பொறுப்புகள் அதிகம் இல்லாததாலும் ஒரே பிள்ளையென்பதாலும் அவன் வீட்டிலே இலகுவாகப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது. கல்யாணமே வேண்டாம் என்று என்று சொல்லிக் கொண்டு ஊர் வேலை உலக வேலை என்று சுற்றிக் கொண்டிருந்தவன் இந்தளவிற்கு இறங்கி வந்ததே அவர்களுக்குச் சந்தோசம் தான்.

வசுமதியின் வீட்டிலே கொஞ்சம் இழுக்கத்தான் செய்தார்கள். அவர்களுக்குச் சற்றே சந்தேகம். படித்த பவிசான ஒரு இளைஞன் சீதனமே வேண்டாம் என்று பெண் கேட்டு வந்தால் சந்தேகம் வரத் தானே செய்யும். ஆனால் விசாரித்துப் பார்த்ததில் வசுமதிக்கு அதிஸ்டம் வீடு தேடி வந்திருப்பது தெரிய இருவீட்டாரின் ஆசியுடன் சிவகுமார் - வசுமதி தம்பதிகள் இல்லறத்தினுள் நுழைந்து விட்டனர்.

குடும்ப வாழ்வும் சுமுகமாகவே போய்க் கொண்டிருந்தது. அவர்களின் அன்பின் அடையாளமாக ரகு பிறந்தான்.

ஒரு நாள் மாலையில் வீட்டிலே ஓய்வாக இருக்கும் போது குழந்தையுடன் வந்தமர்ந்த வசுமதி பேசத் தொடங்கினாள்.

"சிவா எனக்கொரு விருப்பம் என்னெண்டால் எங்கடை ரகுவிற்கும் அப்பா மாதிரி சீதனமே வாங்காமல் கலியாணஞ் செய்து வைக்க வேணும்"

அந்த வார்த்தைகள் சிவகுமாரை உண்மையிலே பேருவகையிலே ஆழ்த்தியது. மௌனமாய் இருந்த அவனைச் சீண்டிப் பார்க்க நினைத்த வசுமதி சிரிப்புடனேயே கேட்டாள்.

"என்ன பேசாமல் இருக்கிறியள். உங்களுக்கு விருப்பமில்லைப் போலக் கிடக்கு. நான் விட்ட பிழையை ஏன் பிள்ளையையும் செய்ய வைப்பான் எண்டு யோசிக்கிறியளோ?"

"மதி நான் ஒரு விசயத்திலை நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுப்பன். பிறகு அதுக்காக ஒரு நாளும் கவலைப்பட மாட்டன். நான் சத்தமில்லாமல் இருந்தது என்ரை மனிசியை நினைச்சுப் பெருமைப் பட்டுத் தான்."

வசுமதியைத் தன்னோடு அணைத்தவாறே சொன்ன சிவகுமாரின் மனதிலே இந்த விடயம் ஆழப் பதிந்து விட்டது.

வாழ்க்கைச் சக்கரம் என்றும் ஒரே போல இருப்பதில்லையே. ரகு பிறந்த நேரமோ என்னவோ சிவகுமாரின் வாழ்க்கையிலே ஏறுமுகம் தொடங்கியது. 'சிவகுமார் ஸ்டோரடஸ்' என்ற சில்லறைக் கடை 'சிவகுமார் மல்ரி கொம்பிளெக்சாக' மாறியது. சிறிது காலத்திலேயே சொந்த வீடு, வாகனம் , வேலையாள் எனக் கடும்ப நிலமையே தலைகீழாக மாறிவிட்டது.

இவை வசுமதியின் நடவடிக்கைகளில் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை சிவகுமாரும் அவதானித்தாலும் அவள் மீதான காதல் அவனைக் கட்டிப் போட்டு விட்டது.

"என்ன கப்பல் கவுண்டதைப் போல யோசிச்சக் கொண்டிருக்கிறயள்? எழும்பி ஆக வேண்டியதைப் பாருங்கோவன்."

மனைவியின் வார்த்தைகளால் சிந்தனைக் கப்பல் கவிழ்ந்து போக எழும்பி அன்றாடக் கடமைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்.

மாலை மூன்றுமணியளவில் பெண் பார்ப்பதறகு வான் ஒன்றிலே புறப்பட்டுச் செல்கிறார்கள். பெண் வீட்டை அடைந்ததுமே 'வாருங்கோ' 'வாருங்கோ' என்ற பெண் வீட்டாரின் தடல்புடலான வரவேற்பு.

சிறிய வீடானாலும் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடு;. நான்கு வளர்நத பெண் பிள்ளைகள் இருப்பதை முற்றத்துப் ப+ந்தொட்டமும் வீடு கச்சிதமாய் அலங்கரிக்கப்பட்டிருப்பதிலு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு மணிவாசகன் சார்

பெண்ணுக்கு பெண் மட்டும் இல்லை எதிரி சார் ஆண்களும்தான்.

பொண்ணு பார்த்துவிட்டு அம்சடக்கமாய் அப்பாவியாய் ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே மாப்பிள்ளை அவரும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு மணிவாசகன் சார்

பெண்ணுக்கு பெண் மட்டும் இல்லை எதிரி சார் ஆண்களும்தான்.

பொண்ணு பார்த்துவிட்டு அம்சடக்கமாய் அப்பாவியாய் ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே மாப்பிள்ளை அவரும்தான்

அந்த அம்மா வாயைத் திறக்க விட்டால் எல்லோ பொடியன் பேச. எல்லாத்துக்கும் பெண்கள் தான் முக்கிய காரணம். :angry:

தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை. வாழ்த்துக்கள் மணிக்ஸ்!

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதுதான் உண்மை!

கறுப்பிக்கு ஏன் புரியவில்லை?

எங்களைச் சிந்திக்கவும் விடமாட்டீங்களாம்.... செயல்படவும் விடமாட்டீங்களாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறீங்க மணிவாசகன் எதுக்கும் தெருவில போகேக்க கவனமாயிருங்கோ, கறுப்ஸ் எங்கயனும் ஒட்டி நிண்டாலும் நிப்பா (பொல்லோட) ;)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

என் கதையை ( நான் எழுதிய) வாசித்துக் கருத்துச் சொன்ன கறுப்பி, நெடுக்காலை போவான், ஆதிவாசி, பிறின்ஸ் ஆகியோருக்கு நன்றி.

யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அழகான கதை.

வாழ்த்துக்கள் மணிவாசகன்

  • தொடங்கியவர்

நன்றி ஓவியன்இ

கறுப்பிக்காகவும் தனிமடல் மூலமாகத் தங்கள் கருத்துக்களை (கோபத்தை) காட்டியவர்களுக்காகவும் சில வார்த்தைகள்.

நீங்கள் சொல்வது போல ஆண்கள் தலைகுனிந்து தாய் சகோதரிகளது சொல்லுக்கு கட்டுப்படுவதை நான் சரியென்று சொல்ல வரவில்லை.

ஆனால் அடிமைப்படுத்தப்படும் அல்லது தன்பப்படுத்தப்படும் இனம் தனது நிலையிலிருந்து மீள்வதற்கு தான்தானே பொராடவேண்டும்.

உதாரணமாக சிங்களவர்களின் அநியாயத்திலிருந்து விடுபட பாதிக்கப்பட்ட தமிழினம்மானே போராட வேண்டும். போராடுகிறது. அதை விடுத்து சிங்களவர்களைக் குற்றஞ்சொல்லிக் கொண்டு அதே துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பது சரியா?

சரி பிறகு தான் அந்தச் சாக்கடையில் வீழ்ந்நதுமல்லாமல் தன்னுடைய மகனு;ககு சகோதரனுக்குச் சீதனம் கேட்பதற்கு முன்னிற்கும் பெண்களை ஒட்டுக்குழுக்களுக்கு ஒப்பிடலாமா? அல்லது அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதில்லை என்று சொல்கிறீர்களா?

நான் இந்தக் கதையில் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற கருவை வைத்தே எழுதினேன். எனவே அதற்கேற்றாற்போலத்தான் பாத்திரங்களையும் அமைத்திருந்தேன்.

அதற்காக இப்படியா ......... :angry: :D

யதார்த்தமான கதை பாராட்டுக்கள்

இது மனிதனின் மனமமப்பா..அது ஒன்றும் மாறிலி அல்லவே..

பிச்சை எடுக்கவேண்டியநிலையில் எடுக்கும்..அதுவே பிச்சை போடவேண்டிய நிலையில் கொள்கை மாறியிருக்கும்..

சீதன பிரச்சினைகளுக்கு ஆண்கள்தான் முக்கிய காரணம்..

கட்டிய ஆணோ(கணவன்)

கட்டப்போகிற ஆணோ முதுகெலும்பில்லாமல் இருப்பது யார் தவறு..

பெண்ணில் பழி போடல் தவறு(கதைதானே..ஒன்றிரண்டு பேர் இருக்கவும் செய்யலாம்..)

பெண் அதுவும் ஒரு தாயானவள் மிகவும் இரக்கமுள்ளவளாய் விடுவாள். அவளால் பிறர் வேதனைகளை இலகுவாக தாங்க முடிவதில்லை..இது உலக வளமை

என் தாயிடம் என் தந்தை சீதனம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார்...

என் அம்மா என் சின்ன வயதிலேலே நீ சீதனம் வாங்ககூடாது என அடிக்கடி சொல்லுவார்..

நான் வெளிநாட்டுக்கு வந்து பல லட்சங்களை வாங்ககூடிய நிலையிலும் அம்மா அதனை விரும்பவில்லை மாறாக ஒரு கஸ்டப்பட்ட பெண்ணை எனக்காக பாரத்துக்கொண்டிருக்கிறார்.

(உண்மையைச் சொல்கிறேன் எனக்கு ஒரு கொள்கையும் கிடையாது. அன்பளிப்பென்றாவது ஏதாவது வாங்கினால் என்ன என்ற சின்னப்புத்தி எனக்கு இருக்கத்தான் செய்கிறது..)

என் அம்மா போன்றே மற்ற அம்மாக்களும் பெரும்பாலும் இருப்பார்கள் இருக்கிறார்கள்.. சும்மா ரீவி

சீரீயல்ல வாற மாமியாரைப் பார்த்திட்டு பத்து பேருக்காக ஆயிரம் பேரை குறை சொல்லுவது தவநென்று நினைக்கிறேன்..

பெண்மை..தாய்மை..மென்மை மேன்மை எல்லாம் எங்கள் பெண்களிடம் இருக்கவேண்டும்..பெருமை தர வேண்டும்.

அதற்கு ஆண்கள் ஊக்கம் தரவேண்டும்..

நம்பி வருகின்ற பெண்ணைக் காப்பாற்ற என்று அவள் வீட்டினை வருத்திப்பணம் பெறுவது..ஒரு ஆணிண் கையாலாகாத்தனம்..

சில ஆண்கள் தாங்கள் ஏதும் சீதனம் வாங்காது விட்டால் ஏதோ குறை அதுதான் சீதனம் வாங்கவில்லை என சமுதாயம் நினைக்குமென நினைத்து சீதனம் வாங்குவதென்ற முடிவுக்கு வருகிறார்கள்..அது தவறு நினைப்பவர்கள் நினைக்கட்டும் அது தவறென நீங்கள் காலாத்தால் வாழ்ந்து காட்டுங்கள்.

நான் சொன்னதில் தவறுகள் இருந்தால் மறக்காமல் திட்டவும் கொட்டவும்..உங்களுக்கு உரிமை உண்டு :D

  • தொடங்கியவர்

கருத்துக்க நன்றி விகடகவி,

இது தொடர்பான ஏனையவர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.

கடைசியில் என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன்.

விகடகவி நீங்கள் சொல்வது சரியே இப்பத்தைய காலத்தில் எங்கட சமுகத்தில் மாமிமார் சீதனம் கேப்பது குறைவு மகன்மார் தான் இவ்வளவு வேணும் எண்டு கேட்டு வாங்கிறார்கள். ஆனால் சீதனம் வேண்டாம் என்று மறுக்கும் ஒரு சிலரும் உள்ளனர் ஆனால் அவர்கள் வீட்டில் சீதனம் வேண்டித்தான் கட்டுவன் என்று பெரிய பிரச்சினைகள் பண்ணுற ஆக்களும் இருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.