Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்கான US தீர்மானம் வலுவிழப்பு:

Featured Replies

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்கான US தீர்மானம் வலுவிழப்பு:

 
 
 

இலங்கை அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதற்காகவும், இந்தியாவின் கரிசனைகளை போக்குவதற்காகவும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை வியாழக்கிழமை ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற தீர்மானத்தின் நகல்வடிவில் சர்வதேசநீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுநர்களிற்கான பங்களிப்பு மற்றும்  அதிகாரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை அமைப்புகள் இது பாரிய பின்னடைவாகும் என தெரிவித்துள்ளன.

இதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான பொறுப்புக்கூறலிற்கான நம்பகத்தன்மை மிக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் அதேவேளை இலங்கை அரசாங்கத்தை அதற்கு இணங்க செய்யவேண்டிய தேவையிருப்பதை இந்த நடவடிக்கை புலப்படுத்தியுள்ளதாக சிலஇராஜதந்திரிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தீர்மானம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது,தீர்மானத்தின் வாசகங்கள் தெளிவற்றதாக காணப்படுகின்றனஎன சர்வதேச நெருக்கடிக்குழுவின் ஆய்வாளர் அலன்கீனன் தெரிவித்துள்ளார்.

வலுவான நீதிநடைமுறை காணப்படும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த மூத்த அதிகாரிகள், இராணுவஅதிகாரிகள் மற்றும் விடுதலைப்புலிகள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடனான அமெரிக்காவின் தீர்மானத்தின் நகல்வடிவம் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விசேட நீதிமன்ற கோரிக்கையை கருத்திலெடுக்கவில்லை.

கிழக்கு திமோர் உட்பட பல நாடுகளில் நீதிவழங்கும் வழிமுறையாக இவ்வாறான விசேடகலப்பு நீதிமன்றங்கள் உருவெடுத்துள்ளன.

எனினும் நகல்வடிவத்தில் இலங்கையின் நீதி நடைமுறையில் பொதுநலவாய நீதிபதிகள்,ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள்,போன்றவர்கள் பங்களிப்பு செய்வது குறித்து தெளிவற்றவிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சுயாதீனசர்வதேச வழக்கு தொடுநர்களையும்,பெரும்பான்மையான வெளிநாட்டு நீதிபதிகளையும் நியமிப்பதை எதிர்த்துவருவாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜோன் பிசர் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் நேர்மையான விசாரணைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பதற்கு அர்த்தபூர்வமான சர்வதேச பங்களிப்பு அவசியம் என்கிறார் ஜோன் பிசர் இலங்கை திங்கட்கிழமை   அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் ஆதரவை பெற்றுக்கொண்டது,அவர் இலங்கை ஜனாதிபதியை ஐக்கியநாடுகள் கூட்டத்தொடரின் இடையே சந்தித்தவேளை சர்வதேசசமூகத்தின் ஆதரவுடனான உள்நாட்டுப்பொறிமுறைக்கு தனது ஆதரவை வெளியிட்டார்.

எனினும் நடைமுறையில் இது எவ்வாறு செயற்படும் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவேண்டிய நிலையிலுள்ளன.நம்பகத்தன்மையை உறுதிசெய்ய சர்வதேசபங்களிப்பு அவசியம், ஆனால் இது குறித்து ஆலோசனை செயற்பாடுகளிற்கு பின்னரே தீர்மானிப்போம் என இலங்கை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் முழுமையான சர்வதேச விசாரணைகள் இடம்பெறுவதை தடுக்கும் முயற்சியில் இந்தியாவே முன்னின்றதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி மேற்குலக இராஜதந்திரியொருவர் தெரிவித்தார் என ரொயிட்டர் கூறுகிறது. நகல்வடிவில் சர்வதேசம் என காணப்பட்டதை வெளிநாடு என மாற்றுவதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது,காஸ்மீர் தொடர்பாக தானும் இதேபோன்ற தொரு நிலையை எதிர்கொள்ளலாம் னஎ இந்தியா கருதியதே அதற்கு காரணம், என அந்த இராஜதந்திரி குறிப்பிட்டார்.

எனினும் புதுடில்லி வட்டாரங்கள் இதனை முற்றான நிராகரித்ததுடன்,தனது இறமையை பாதுகாப்பது குறித்த இலங்கையின் கரிசனையை கருத்தில் கொண்டே தீர்மானம் வடிவமைக்கப்பட்டமாக தெரிவித்தன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124425/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விடயத்தில் மட்டுமே...
சர்வதேசம் கண்மூடி தூங்கிவிடும்!!!12079312_1695539043993720_59136578445041

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.