Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி:

உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள்

நாங்கள் அழைக்கப்படவுமில்லை

நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை

உட்காருவதற்கு

எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன

ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்

எங்கள் துயரங்களைப் பற்றி

எங்களுக்குச் சொல்கிறார்கள்

எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன

அவை அவர்களுடையதாய் மாறவேயில்ல

...........................

-வகாரு சோனாவனே

வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும்.

யாழ்ப்பாணம் சிகையலங்கரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் (வயது 40) 13 நவம்பர் 2006ல் மாலை 4.30 மணியளவில் யாழ் கஸ்தூரியார் வீதியில் வைத்து இனந் தெரிந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது இந்த மேற்சாதிய சமூக அமைப்பில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லாத அற்பச் செய்தியாக எல்லோருக்கும் போய்விட்டது.......................................... நிமலராஜனோ தராகி சிவராமோ ரவிராஜோ சுட்டுக் கொல்லப் பட்ட போது எப்படி பதறித் துடித்து எதிர்வினையாற்றியிருந்தது? சிவசுப்பிரமணியம் அவர்களின் படுகொலையை ஒரு செய்தியாக கூட இந்தச் சமூகம் எடுத்துக் கொள்ளவில்லையே! எல்லோருக்கும் சாதியத் தோல் தடித்துப் போய்விட்டது, மரத்துப்போய் விட்டது.

இம்மரணம் தலித்துக்களின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும் என எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறது. அரசியற் தீர்விற்கோ சமாதானத்திற்கோ இனி வாய்ப்பில்லை எனும் போது தலித்துக்களுக்கு மட்டும் விடிவு எப்படி வந்துவிடப் போகின்றதென நீங்கள் கேட்கலாம். அதற்காக யாழ் மத்திய கல்லூரி அதிபர் கணபதி இராசதுரை அவர்களுக்கு கொடுத்தது போன்று சிகையலங்காரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு கொடுத்ததைப் போன்று மரணத்தை மட்டுமே தீர்வாகக் கொடுக்க வேண்டியதில்லை.

வெள்ளாளர்கள் மிகவும் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களும்!

அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள்ளும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள். தமிழ்த் தேசியம் சமஷ்டி மாகாண அமைப்பிற்குள்ளும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள். ஓடி வந்த இடத்தில் ஸ்ருட்காட்டிலும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள்.

காலனித்துவ காலத்தில் தலித்துக்களுக்குக் கிடைத்த கல்வி வேலை வாய்ப்பு ஆகிய சலுகைகளை இடைமறித்துப் பறித்தெடுத்துக்கொண்டார்கள். மதம் ஒரு தடையாக இருந்தால் மதம் மாறி அதிகாரங்களையும் - அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் சாதிய அதிகாரத்தைக் கைவிட்டார்களில்லை. நானூறு வருட காலனித்துவ ஆட்சி அழிக்க முடியாத சாதியத்தை முப்பது வருட காலப் போர் எப்படி அழித்துவிட முடியும்? அடிப்படையில் தமிழ் அரசியல் என்பது வெள்ளாள அரசியலாகவும் ஜனநாயகம் என்பது வெள்ளாள ஜனநாயகமாகவும் இறுகிப் போய்விட்டது.

''தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய்'' என்று சிவரமணியின் கவிதை வரியொன்று சொல்கிறது. இக் கேள்வி அப்படியொன்றும் தூக்கி எறியப்பட முடியாத கேள்வியல்ல. மிகவும் சாதாரண கேள்விதான். எந்த எதிர்கால முக்கியத்துவமுமில்லாத கேள்விதான். போராட்டத்தில் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. ஆனால் ஓரேயொரு கேள்வியை மட்டும் மிகவும் கவனமாகத் தவிர்க்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்......அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது யார்? வெள்ளாளர்களா? சிகையலங்கரிப்பாளர் சங்கத் தலைவர் உயர்திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் கொலையில் இதற்கான பதில் இருக்கிறது.

இப்படுகொலையின் பின்னணியிலும் சமூகப் பின்னணியிலும் 02.09.1945ல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் மூன்றாவது மாநாட்டில் வழக்கறிஞர் டி.ஜே. ஆசீர்வாதம் அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் நான்கு அம்சக் கோரிக்கைகளும் அரசியற் தீர்விலிருந்தும் அரசியலிலிருந்தும் ஓரங்கட்டப்படும் தலித் சமூகத்திற்கு இன்றும் பொருத்தமானதாகவே இருக்கின்றன. எல்லாவற்றையும் விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உட்படுத்தும் வெள்ளாள சமூகவியலாளர்கள், வெள்ளாளக் கலை இலக்கியவாதிகள், வெள்ளாள மனித உரிமையியலாளர்கள் இக்கோரிக்கையின் அரசியலைக் கவனத்தில் எடுக்க மறுப்பது யோக்கியமற்றது. அவர்களின் அரசியல் நேர்மையைச் சாதியம் வென்றுவிடும் தருணம் இதுதான்.

டி.ஜே.ஆசீர்வாதம் தீர்வுத் திட்டம் - 02.09..1945ல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் மூன்றாவது மாநாட்டில் நிறைவேற்றியபடி:

1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று விஷேட பிரதிநிதித்துவம்.

2. பொருளாதார மீள் நிர்மாணம், மாற்றுத் திட்டங்கள் இவைகளுக்கான தனிச் சிறப்பு ஆணைக்குழு.

3.சகல ஸ்தல ஸ்தாபனச் சபைகளிலும் நிர்வாக அலகுகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய வகையில் வட்டாரங்கள் தேர்தற் தொகுதிகள் பிரிக்கப்படவும் மறுசீரமைக்கப்படவும் வேண்டும்.

4. கல்விப் பிரச்சனையில் முஸ்லீம் மக்களுக்க அளித்த விசேட சலுகையை – உரிமையை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்க வேண்டும்

மூலம்: சத்தியக்கடதாசி.

  • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிட்ட தமிழ் தேசியத்தின் மீது சாதியச் செல்வாக்குக்கான சந்தேகத்தைக் கிளப்பி சாதிய உணர்வுமீதிகளை தமிழ் தேசியத்துக்கு எதிராக கிளப்பும் செயல்.

அண்மையில் லண்டனில் இருந்து வெளிவரும் "தேசம்" என்ற முன்னாள் தேச விரோத சக்திகளால் நடத்தப்படும் சஞ்சிகையிலும் இதே வகையினதாக யாழ் நூலகத்தைத் திறக்க செல்லன் கந்தையாவை விடுதலைப்புலிகள் தடுத்ததாகக் கூறி அது சாதியக் கண்ணோட்டத்தில் விபரிக்கப்பட்டிருந்தது.

யாழ் களம் தமிழ் தேசிய ஆதரவுத்தளம் என்ற நிலையில் இருந்து கொண்டு தமிழ் தேசிய ஆதரவுச் சாயத்தோடு இந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரங்களுக்கும் தமிழ் தேசியத்துக்கு எதிரான சாதியக் கோட்பாடுகள் புத்தியிர்ப்புப் பெறுவதற்கும் இடமளிப்பதானது தமிழ் தேசியத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் பணியாகவே கருத வேண்டி உள்ளது.

தமிழ் தேசியம் மத சார்ப்பு சாதிய மேலாதிக்க நிறுவல் என்பவற்றுக்கு அப்பாலானது என்பது தெரிந்தும் தமிழ் தேசிய உச்சரிப்புடன் மத சாதிப் பிரச்சாரங்கள் இங்கு முன்வைக்கப்படுவது தமிழ் தேசியத்தின் மீது சந்தேகத்தையே உண்டு பண்ணி அதைப் பலவீனப்படுத்தும். ஒரு வகையில் இது தமிழ் தேசிய எதிரிக்கு துணைபோகும் பிரச்சார நிலையே.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான பல புளக் தளங்களிலும் இப்படியான சாதியக் கூச்சல்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றினை இங்கு அறிமுகம் செய்வதை தவிர்க்க விரும்புகின்றோம். :D:icon_idea:

Edited by nedukkalapoovan

வெற்றுக் கருத்து, அற்றுப் போய்க்கொண்டிருக்கும் ஒன்றுக்கு உயிர் கொடுத்து தான் முதன்மை பெறும் சுயநல நோக்கம். எனி என்ன போன இடத்திலையும் சாதிச்சங்கம் தொடங்கி அடிபடுஙகோ. அப்பதான் விடுதலைப் போரை இன்னும் நசுக்கலாம்.

சிறு குழந்தையிடம் எப்படி நாம் அதைச்செய்யாதே இதை செய்யாதே என வெருட்டி அடக்க முயன்று இறுதியில் நாம் தோற்ப்போகிறோமோ அது போலவே இதுவும். விரும்பத்தகாத தொன்றை தூசு தட்டி காட்டுவதன் மூலம் அதை இல்லாமல் செய்ய முடியாது.

நான் ஏற்றுக்கொள்கின்றேன் அது தவறு என்று. ஏனையவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வைப்பது? அதற்கு உமது திட்டம் தான் என்ன?

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றுக் கருத்து, அற்றுப் போய்க்கொண்டிருக்கும் ஒன்றுக்கு உயிர் கொடுத்து தான் முதன்மை பெறும் சுயநல நோக்கம். எனி என்ன போன இடத்திலையும் சாதிச்சங்கம் தொடங்கி அடிபடுஙகோ. அப்பதான் விடுதலைப் போரை இன்னும் நசுக்கலாம்.

சிறு குழந்தையிடம் எப்படி நாம் அதைச்செய்யாதே இதை செய்யாதே என வெருட்டி அடக்க முயன்று இறுதியில் நாம் தோற்ப்போகிறோமோ அது போலவே இதுவும். விரும்பத்தகாத தொன்றை தூசு தட்டி காட்டுவதன் மூலம் அதை இல்லாமல் செய்ய முடியாது.

நான் ஏற்றுக்கொள்கின்றேன் அது தவறு என்று. ஏனையவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வைப்பது? அதற்கு உமது திட்டம் தான் என்ன?

அற்றுப்போய்க்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறுமனே மீண்டும் ஜாதிப் பிரச்சனையைக் கிளப்புவதற்கு தலித் செய்கின்ற முயற்சி. சிலருக்கு அவ்வாறு இன முறுகலை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது போலும்.

இன்றைக்கு முக்கியத்துவமாகப் போன என்று சொல்கின்ற ரவிராஜோ, அல்லது தராகியோ, நிமலராஜனோ ஊடகவியலாளர்கள், அல்லது பாராளமன்ற உறுப்பினர். அவர்களுக்கு உலக மட்டத்தில் பெர் இருக்கின்றது. மேலும், இன்று யாழ்பாணத்தில் மரணம் என்பது சாதாரண நிகழ்வு போல போகும் அளவு துர்ப்பாக்கிய நிகழ்வாக இருக்கும்போது, யாரை யார் கவனிப்பது என்ற நிலை கூட இன்றில்லை.

சமீபத்தில் மீனவசங்கத் தலைவர்கள், கல்விமான்கள், ஏன் சிறிலங்கா உயர் பாதுகாப்பு வலயத்தில் கொல்லப்பட்ட, சிவமகராஜாவுக்கு கூட உரிய மரியாதை கொடுக்கமுடியாத துர் அதிஸ்டசாலியாக நாமிருக்கின்றோம். அந்த நிலமை தொடர்கின்றது.

சிகைஅலங்கார நிலையத் தலைவருக்கு உரிய கௌரவம் கொடுக்கவிரும்பவில்லை என்பது மிகவும் சிறுமைத்தனமானது. தமிழீழ தேசிய விடுதலைக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்குமே தமிழீழ மக்கள் நன்றியோடு தான் இருப்போம். ஆனால் இன்று சாப்பிடக்கூட வாயைத் திறக்க அஞ்சும் நிலையில் இப்படி ஜாதிப் பிரச்சனையைக் கிளப்பும் விதம் சரியானது அல்ல.

அதை விட, குறித்த ஜாதியின் கையில் யாழ்ப்பாணம் என்ற நிலை மாறீ நீண்டகாலமாகி விட்டது. இப்படியான பிரச்சனைகளைக் கிளப்பி, ஜாதிக் குரோதங்களைத் தூண்டும் நபர்களை யாழ்களம் கண்டிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் ஜாதிப் பிரச்சனைக்கு துளிர் விட நினைக்கும் சதியையும் நிறுத்த வைக்க வேண்டும் எனக் கே;டுக் கொள்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.