Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

Featured Replies

2015 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

 

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு  தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

nobel%20chemistry.jpg

மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், உடலில் உயிரணுக்கள் செயல்படும் விதத்தை தீர்க்கமாக அறிந்து கொள்வதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

மேலும், பல்வேறு பரம்பரை நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்தும், புற்று நோய், வயது முதிர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான மூலக்கூறு மாற்றங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரும் உதவி புரிந்துள்ளன.

அவர்களது கண்டுபிடிப்புகள் பல்வேறு உயிர்காப்பு சிகிச்சை முறைகளை உருவாக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளன என்று நோபல் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.vikatan.com/news/article.php?aid=53453

  • தொடங்கியவர்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு: பெலராஸ் நாட்டின் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் தேர்வு!

 

ஸ்டாக்ஹோம்: 2015-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டு எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சிற்கு  வழங்கப்படுகிறது.

lit%20nobel%20pic.jpg

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு தேர்வுக் குழு இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவித்து, “நம் காலத்தின் வேதனை மற்றும் தைரியத்துக்கான நினைவுச்சின்னமாக இவரின் குரல்கள்  உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் 31, மே, 1948-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள இவானோ-பிராங்கிவிஸ்க் என்ற நகரத்தில் பிறந்தார். இவரின் தாய் உக்ரேனிய நாட்டையும் தந்தை பெலாரஸ் நாட்டையும் சேர்ந்தவர்களாவர்.

பள்ளிப்படிப்பை முடித்த அலெக்ஸிவிச் ஆசிரியையாகவும் பத்திரிகைத் துறையிலும் பணியாற்றினார். 1967-72 இடையே மின்ஸ்க் பல்கலைக் கழகத்தில் இவர் இதழியல் கற்றார்.

2 ஆம்  உலகப்போரில் பங்கு பெற்ற நூற்றுக் கணக்கான பெண்களைச் சந்தித்து அவர் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையில் அலெக்ஸிவிச்சின் நூல்கள் வெளிவந்தன. முன்னாள் சோவியத் யூனியனின் மக்கள்  வாழ்க்கையை சித்தரிக்கும் நூல்களை எழுதினார்.

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய  1986 ஆம் ஆண்டின் செர்னோபில் அணு உலை துயரம் பற்றிய இவரது “Voices from Chernobyl- chronicle of the future(செர்னோபில்லின் குரல்கள்) என்ற வாய்மொழி வரலாற்றுப் பதிவு அணு உலை பேரழிவில் சிக்கி அழிந்த மக்களின் துயரக் கதைகளை வலியுடன் வெளிப்படுத்தியது.

Zinky boys என்ற நூலில்,  ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நடத்திய  போர் பற்றிய பயங்கரமான சித்தரிப்பு வெளிப்பட்டது இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=53452

  • தொடங்கியவர்

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 

ஒஸ்லோ: ஜப்பான் விஞ்ஞானி டகாகி கஜிடா மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்ட் ஆகியோருக்கு  நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக  2015-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

pic%20physics%20nobel.jpg

பிரபஞ்ச உருவாக்கத்தின் அடிப்படை மூலக்கூறு அல்லது அணுத்துகளாக கருதப்படும் நியூட்ரினோவின் ஊசலாட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்பதை இவர்கள் கண்டுபிடித்ததற்காக, இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் அகாடமியின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையிலான ஆய்வுகள், நியூட்ரினோக்களுக்கு நிறை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதியது. ஆனால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதன் அடையாளங்கள் மாறும் தன்மை கொண்டதால் நிறை இருப்பது அவசியமாகிறது என்பதுதான் இப்போதைய கண்டுபிடிப்பின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச உருவாக்கம், அதில் பொருட்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்பாக இவர்களது கண்டுபிடிப்புகள் திகழ்கின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=53350

  • தொடங்கியவர்

2015 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 

 ஒஸ்லோ: 2015 ஆம் ஆண்டின்  மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel%20pic.jpg

ஆண்டுதோறும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015 ஆம்  ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவருக்குக்  கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக்குப் பூச்சு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் சி.கம்ப்பெல் மற்றும் சடோசி ஓமுரா ஆகியோருக்கும், மலேரியாவிற்கான சிகிச்சை முறை குறித்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக யுயு து என்ற பெண்மணிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=53295

  • தொடங்கியவர்

அமைதிக்கான நோபல் பரிசு: துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு வழங்கப்படுகிறது!

 

ஓஸ்லோ: 2015 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு துனிசியாவின் தேசிய பேச்சு வார்த்தைக் குழுவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி முதல் இந்த ஆண்டின் நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. மருத்துவம், இயற்பியல்,வேதியியல் துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

peace%20nobel.jpg

நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் இதற்கான அறிவிப்பு வெளியானது.  துனிசியாவின் தேசிய பாதுகாப்பு  பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  துனிசியாவில் நடந்த புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது என்று நார்வே நோபல் பரிசு கழக தலைவர் அறிவித்துள்ளார்.

4 அமைப்புகளை உள்ளடக்கிய இந்த பேச்சுவார்த்தைக்குழு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட பேச்சுவார்த்தை குழு பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=53503

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கான நோபல் பரிசு: துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு வழங்கப்படுகிறது!

 

ஓஸ்லோ: 2015 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு துனிசியாவின் தேசிய பேச்சு வார்த்தைக் குழுவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியா சென்று, அங்குள்ள மக்கள் வாழ்வு குறித்த் அறிந்து, சமாதானப் பேச்சு வார்த்தை நடாத்தி, எழுதி வந்த எங்கள் அண்ணன் தமிழ் சிறியாரின் எழுத்து, சூது கவ்வியதால், இம்முறை பரிசு வேறு யாருக்கோ வழக்கப் பட்டு உள்ளது என்பதை இந்த நோபல் குழுவுக்கு, தெரிவிக்க கடமைப் பட்டுளோம்.:grin: :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு கொடுத்ததால்... அசைந்து கொடுத்ததால்....

துனீசியாவிற்கு சமாதான விருது போய்விட்டது.
இல்லையேல் ஜேர்மனிக்குத்தான் கிடைத்திருக்கும்.

  • தொடங்கியவர்

'வறுமை ஒழிப்பு நிபுணர்' ஆங்கஸ் டீட்டனுக்கு பொருளாதார நோபல்

 
 
ஆங்கஸ் டீட்டன் | கோப்புப் படம்
ஆங்கஸ் டீட்டன் | கோப்புப் படம்

2015-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆங்கஸ் டீட்டன் என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.

'நுகர்வு, வறுமை மற்றும் நலன் குறித்த இவரது ஆய்வுக்காக' நோபல் வழங்கப்பட்டதாக அகாடமி தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆங்கஸ் டீட்டன் 1945-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இங்கிலாந்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய பிறகு பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்துக்கு 1983-ம் ஆண்டு சென்றார்.

நுகர்வு பெரிதும் சிறிதும்

நலத்திட்டங்களை வளர்த்தெடுப்பது மற்றும் வறுமையைக் குறைப்பது என்பதை நோக்கிய பொருளாதார கொள்கையை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபரின் நுகர்வுக்கான தெரிவுகளை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம். இந்தப் புரிதலின் அவசியத்தை ஆங்கஸ் டீட்டன் பிறரைவிட சிறப்பாக புரிந்து வைத்திருப்பவர்.

விவரமான தனிநபர் தெரிவுகளையும் அதன் ஒட்டுமொத்தமான திரண்ட விளைவுகளையும் இணைத்து இவரது ஆய்வு நுண்பொருளாதாரவியல் மற்றும் பெரும் பொருளாதாரவியல் மற்றும் வளர்ச்சிப் பொருளாதாரம் ஆகிய புலங்களை மாற்ற உதவி புரிந்தது.

நோபல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆங்கஸ் டீட்டனின் வேலைப்பாடு 3 மைய கேள்விகளை உள்ளடக்கி ஆய்வு செய்கிறது.

பல்வேறு பொருட்களில் நுகர்வோர் எவ்வாறு செலவிடுகின்றனர்?

இந்தக் கேள்விக்கான விடை கொள்கை சீர்த்திருத்தங்களை வடிவமைக்க உதவுவது. அதாவது நுகர்வு வரி விதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்கள் எப்படி பல்வேறு மக்கள் குழுக்களின் நலனில் தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு இந்த கேள்விக்கான பதில் முக்கியத்துவம் வாய்ந்தது.

1980-ம் ஆண்டு வாக்கில் வெளிவந்த இவரது முதல் படைப்பில் டீட்டன், ஒரு லட்சிய தேவை ஒழுங்கமைப்பை உருவாக்கினார். அதாவது ஒவ்வொரு பொருளுக்குமான தேவை எப்படி அனைத்து பொருட்களின் விலைகள் மற்றும் தனிநபர் வருவாய்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மதிப்பிடும் ஒரு எளிய முறையை உருவாக்கினார். இவரது இந்த அணுகுமுறை மற்றும் இதன் பிந்தைய மாற்றங்கள் தற்போது கல்விப்புலத்திலும் சரி, அரசுசார்ந்த கொள்கை வகுத்தலிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

சமூகத்தின் வருவாயில் எவ்வளவு செலவழிக்கப்பட்டு, எவ்வளவு சேமிக்கப்படுகிறது?

மூலதன உருவாக்கம் மற்றும் அதன் வர்த்தக சுழற்சி பரிமாணங்களை விளக்க, வருவாய் மற்றும் காலப்போக்கிலான செலவினம் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். 1990-ம் ஆண்டுகளில் இவர் வெளியிட்ட பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் தனிநபர் வருவாய் தரவு மற்றும் ஒட்டுமொத்த வருவாய் தரவின் அவசியத்தை உணர்த்தியது. இந்த முறைதான் தற்போது பெரும் பொருளாதார ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நலம் மற்றும் வறுமையை எந்த சிறந்த வழியில் அளவிடலாம் அல்லது ஆராயலாம்?

தனிநபரின் வீட்டுபயோக நுகர்வு அளவுகள் எப்படி பொருளாதார வளர்ச்சி நிலையை கண்டுணர பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இவரது ஆய்வுகள் அறிவுறுத்தியது. வீட்டு உபயோக நுகர்வு தரவு என்பது வருவாய் மற்றும் கலோரி உட்கொள்ளும் அளவு மற்றும் குடும்பத்தினுள் பாலின பேதத்தின் வீச்சு மற்றும் பரப்பு ஆகியவற்றைத் தீர்மானிக்க எப்படி உதவுகிறது, இதன் மூலம் வறுமையை எப்படி புரிந்து கொள்வது என்பதை டீட்டனின் சமீபத்திய ஆய்வுகள் எடுத்தியம்பின.

பொருளாதார ஆய்வு வெறும் கல்விப்புல கோட்பாட்டு மட்டத்திலிருந்து கள ஆய்வு மற்றும் தனிநபர் தரவுகளை நோக்கி நகர்ந்திருப்பது டீட்டனால் என்றால் அது மிகையாகாது.

http://tamil.thehindu.com/world/வறுமை-ஒழிப்பு-நிபுணர்-ஆங்கஸ்-டீட்டனுக்கு-பொருளாதார-நோபல்/article7753680.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.