Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
கையோடு ஒட்டி இருக்கும் ...
கைபேசியை போல் ...
நெஞ்சோடு ஒட்டியிருக்கும் ....
நினைவுகளும் ....
தூங்காத இரவுகளை ....
நீண்டுசெல்ல வைக்கிறது ...!!!

உன் அழைப்பு வரை 
தலையணையோடு.....
என்னோடு காத்திருகிறது ....
கைபேசி - என்ன செய்வது ...?
என்னோடு சேர்ந்து அம்மாவிடம் ....
திட்டு வாங்குகிறது அதுவும் ...!!!

மற்றவர்களிடம் இருப்பது ....
கைபேசி - என்னிடம் இருப்பது ...
உன்னோடு பேசும் உயிர் பேசி ...!!!
 
  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தோல்வியின் மூலதனம் 
தயக்கம்....!!!
வெற்றியின் முதலீடு 
துணிச்சல்....!!!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

வெற்றியை விரும்பும் ......
நமக்குத் தோல்வியை....
தாங்கும் மனம் இல்லை....!!!
தோல்வியைத் தாங்கும் 
மனம் இருந்தால் அதுவும்.....
வெற்றிதான்.....!!!

இதயத்தில் மகிழ்ச்சி....
ஆன்மாவில் புத்துணர்வு....
வாழ்வில் வெற்றி...
முகத்தில் புன்னகை....
அன்பின் நறுமணம்....
இவை அனைத்தும் ....
வெற்றியின் பெறு பேறாகும்....!!!

  • தொடங்கியவர்

இதயத்தை பற்றிக்கொண்டால் ....
காதல் .....
இதயத்தில் பசுமையாய் இருப்பது ....
நட்பு .......!!!

கஸ்ரப்பட்டு இதயத்துக்குள் 
காதல் வரும் .....
இஷ்ரப்பட்டு இதயத்துக்குள் ....
நட்பு வரும் .....!!!

துயரத்தில் இருக்கும்போது ....
காதல் சுகம் தரும் .....
துயரத்தை துடைத்தெறிய ....
நட்பு கை கொடுக்கும் ....!!!

கட்டுப்பாட்டை தளர்த்தினால் ....
காதல் தோற்கும் ....
கட்டு பாட்டை  தளர்த்தினால் ....
நட்பு கேள்வி கேட்கும் ....!!!

காதல் சிலவேளை இலக்குகளை ....
கனவாக்கிவிடும் .....
காதல் சிலவேளை கனவுகளை .....
இலக்காக்கி விடும் .....!!!

காதல் திருமணத்தில் வெற்றி பெறும் ....
நட்பு கல்லறை வரை  வெற்றி தரும் ....!!!

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
உண்னும் உணவு பசியை .....
போக்க மட்டுமல்ல .....
உன் உணர்வையும் .....
வளர்க்க வைக்கவேண்டும் ...
உணவு என்பது உழவு மட்டுமல்ல ....
உனது மண்ணின் உணர்வும் ....!!!

உணவை தயாரிக்கும்போது ....
மன அமைதியுடன் சமைக்கவேண்டும் ....
உணவை தயாரிப்பவரின் உணர்வு ....
உணவில் நிச்சயம் கலக்கும் .....
குடும்ப சச்சரவுக்கு உணவு ஒரு ....
பிரதான காரணி - மன அமைதியான ...
உணவு தயாரிப்பு அமைதியான ....
குடும்ப உறவை வளர்க்கும் ....!!!

உலகமயபடுத்தலால் உணவை ....
மாற்றிவருகிறோம் -மாற்றாதீர் ....
உணவு முறையை மாற்றாதீர் .....
உணர்வுகளும் நிச்சயம்மாறும்....!!!
 
  • தொடங்கியவர்

அப்போ... 
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!

இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!

  • தொடங்கியவர்

உன்
விழிகளில் நான் ....
இல்லாமல் போகலாம் ...
நீ ஏமாற்றி விடலாம்.....
என் நினைவுகளில் ....
நீ விடுபட முடியாது ....!!!

இதயத்தில் இருந்து ....
நீ தூக்கி எறியலாம் ....
என் இதயகீதத்தில் ....
நீ விலக முடியாது .....!!!

எப்படி 
நான் ஏமாறுவது ...?
உன்னில் நானும்....
என்னில் நீயும்....
இந்த மண்ணில்.....
எண்ணி வாழ்வதே....
என் தலை விதி ....!!!

என் 
கண்ணில் உன்னை வைத்து
கனவுடன் வாழ்ந்திடுவேன்.....
காலமெல்லாம் காதலிப்பேன் ....
கண் மூடுவரை காதலிப்பேன் ...!!!

  • தொடங்கியவர்

நட்பிலும் காதலிலும் 
இதயத்தில் இரண்டு வரிகள் .. 
பழகும் வரை உண்மையாய் இரு .. 
பழகிய பின் உயிராய் இரு ...!!!

நட்பிலும் காதலிலும் ....
வார்த்தையில் இரண்டு தன்மை ....
அளவாக பேசு ....
உணர்ந்த பின் பேசு ....!!!

நட்பிலும் காதலிலும் ....
தோல்விக்கு இரண்டு காரணம் ....
அதிகமாக ஆசைப்படுவது ....
அளவுக்கு மீறி கோபப்படுவது ....!!!
 

  • தொடங்கியவர்
துணையையும் துணியையும்
எம்முடன் இரண்டற கலந்த ....
உடமை என்பேன்.....
துணையையும் துணியையும் ...
தூர விலக்கினால் - போவது ...
என்னவோ நம் மானம் தான் ....!!! 

துணையையும் துணியையும்....
தொலைத்தவர்கள்.... 
தொலைந்து போகின்றார்கள் ...
வாழ்தலைப் புரியாமல்....
வாழ்க்கையைப் பிணியாக்கி ....
தொலைந்துபோகின்றவர்கள்....!!!

துணைக்குள்ளும் துணிக்குள்ளும்
அடங்கி போனவர்கள் ....
நிம்மதிக்காய் அமைதிக்காய் ....
அலைந்து திரிகிறார்கள் ....!!!

வாழ்கையின் தூரம் புரியும் வரை...
வாழ்தல் எவருக்கும் புரிவதில்லை.....
வாழ்தல் அர்த்தம் புரியும் வரை
வாழ்வது எதுவும் வாழ்க்கை இல்லை....!!!


கே இனியவன் தத்துவ கவிதை
 
  • தொடங்கியவர்

சுட்டி காட்டவேண்டிய இடத்தில் 
கண்டிப்புடன் சுட்டிக்காட்டி ....
ஊக்கிவிக்கும்போது மனத்தால் 
ஊக்கிவித்து கருத்துகூறும் ...
என் அருமை நட்பே ....
என் கிறுக்கல்களை தொடர்ந்து ....
ருசி ரசி பகிர் ....!!!

என் உயிர் மூச்சில் கலந்து....
இன்றும் என்னை நேசித்து....
என் நட்பு தோட்டத்துக்குள்...
வந்து போகும் பறவையே..
உன் நட்பில் துயர் மறக்கிறேன்...
தொடர்வோம் பகிர்வோம் ....!!!

  • தொடங்கியவர்

கண்ணுக்குதெரியாத  
காற்றும்…
அவளுக்கு புரியாத 
கவிதையும்…
சொல்லாத முடியாத 
காதலும்…
கலையாத கனவும்..
என்றும் இனிமை ....!!!

மரணத்தை நோக்கி ...
நகரும் வாழ்க்கையில் ....
நம்மை வாழ சொல்லி ....
வற்புறுத்துவது ....
காதலும் நட்பும் தான்,...
காதலை நேசி .......
நட்பை சுவாசி........
வாழ்க்கை வசந்தமாகும் ...!!!

  • தொடங்கியவர்

ஊரின்.... 
நாக்கை நீ அடைக்கமுதல்
உன் நாக்கை  நீ அடக்கு .....
தானாக அடங்கும் உலகம் ...!!!

சிந்தித்து பேசத்தெரியாத உன்னைவிட ...
வேதனைப்படுத்தி பேசும்  உன்னைவிட ...
பண்பாக்க பேசதெரியாத உன்னைவிட ...
பேசவே முடியாமல் இருக்கும் உயிர்கள் ....
எத்தனையோ மடங்கு மேல் ...!!!

உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
உலகில் வாழ்ந்து பயனில்லை ...
மனம் திறந்து பேசத்தெரியாதவன் ....
மனிதனாக வாழ தகுதியில்லாதவன் ...!!!

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
உலகில் வாழ்ந்து பயனில்லை ...
 

உறுதிகொண்ட மனம் உள்ளோரும்..

உலகில் வாழ்ந்து பயனில்லை..

அதனால் அனுப்பிவிட்டோம்.. 

தேசியத் தலைவரை...!!! 

sangry_big_redteeth_100-100.gif

  • தொடங்கியவர்

குழந்தை அழுதால் பசி
குயில் அழுதால் தேடல் 
குடல் அழுதால்  பட்டினி 
உடல் அழுதால் நோய் 

விதை அழுதால் விரயம்  
வீரம் அழுதால் தோல்வி 
மானம்  அழுதால் இழப்பு 
தானம்  அழுதால் வறுமை 

மனம் அழுதால் மன்னிப்பு 
சினம் அழுதால் சீர்திருத்தம்
நீ அழுதால்  அது  நட்பு 
'நான்'(ஆணவம் ) அழுதால் 
"ஞானம்"

  • தொடங்கியவர்

அரைகுறை வெற்றியை விட ..
முழுமையான தோல்வி ..
வாழ்க்கையில் எவ்வளவோ ..
மேல் ....!!!

அரைகுறை வெற்றி 
காற்றில் அலைந்து திரியும் 
பஞ்சைப்போன்றது..
கீழேயும் விழாது மேலேயும் ..
செல்லாது ...!!!

நிறைய வாழ்க்கையில் ..
அரைகுறை வெற்றியால் ..
முழுவெற்றியை இழக்கிறோம் ...
நிறைய மனிதர்கள் அரைகுறை ..
வெற்றியை முழுவெற்றியாக ..
கருதியே சாதனையை 
இழக்கிறார்கள் ...!!!

கே இனியவன் தத்துவ கவிதை 

  • தொடங்கியவர்

கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில் 
யார் கண்டது நீ 
கண்ணில் படுயென்று ...?

கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!

வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?

கூலிக்கு தேவையா? 
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று 
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவன் அழுதாலும், சிரித்தாலும் கவிதை.:) வாழ்த்துக்கள்!!

  • தொடங்கியவர்

கவிப்புயல் இனியவன் அழுதாலும், சிரித்தாலும் கவிதை.:) வாழ்த்துக்கள்!!

நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

வெற்றி 
வளர்ச்சி கொடுக்கும் 
வளர்ச்சி 
மாற்றம் கொடுக்கும் 
காதலில் 
வெற்றி பெற்றேன் 
கணவன் 
என்ற பதவி பெற்றேன் 
காதலி என் மனைவி 
*
*
அன்று 
பாப்பா என்று அழைத்தேன் 
இன்று 
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள் 
ரசிப்பதுக்கு மட்டும்

  • தொடங்கியவர்

என்னதான் நீ 
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!

உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள் 

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''

வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்..... 
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்.... 
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..

'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)

  • தொடங்கியவர்

காதலிக்கும் போது 
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும் 
குடும்பத்தை  கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது 
குழந்தையாக இருங்கள் !!!

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள் 
ரசிப்பதுக்கு மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும்போது  குழந்தையாய் இருங்கள் , கல்யாணத்துக்குப் பின் வளரவே முடியாது...! :)

  • தொடங்கியவர்

காதலிக்கும்போது  குழந்தையாய் இருங்கள் , கல்யாணத்துக்குப் பின் வளரவே முடியாது...! :)

உண்மைதான் போல் இருக்கு 
நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

கண்ணாடியில் ...
என்னைப் பார்க்கிறேன்  ... 
என்னை காணவில்லை ...
என்னை மறந்ததும் ....
கண்ணாடி தெரிகிறது ....!!!

மனிதரில் 
என்னைப் பார்க்கிறேன் ....
என் உணர்வுகள் தெரிகின்றன ....
என்னை மறந்ததும்....
மனிதர்கள் தெரிகிறார்கள்  .....!!!

கே இனியவன் 
தத்துவ கவிதை

  • தொடங்கியவர்

 

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!

என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன் 
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!

+
கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.