Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

வருமானம்

உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம் 
என்கிறார்களோ ...

உலக அழிவு

2012ல் உலகம் அழியாது என்று
முதல் முதல் சொன்னவள் ..என்
காதலிதான் ...
என்னை முத்தமிட்டி சொன்னால்
2013ல் மீண்டும் தருவேன் என்று
நிச்சயம் உலகம் அழியும்
இந்த உலகில் காதல் இல்லாத போது

இறப்பதற்கு முன் வருவாயா?
----
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்

கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை 
இல்லாமல் கவிதை வரலாம், 
ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது, 
இதயத்தில் இடம் கொடுப்பது காதல் 
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும் 
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள 
வரை மறக்க மாட்டேன்

  • Replies 390
  • Views 39k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எனக்கு மட்டுமே சொந்தம்


யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்

உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..

கிரிக்கட் காதல்


நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது

மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல

அதிஸ்டம் இல்லாத
--
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்

உண்மைதான்


கண்ணாடிக்கு 
எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்

இதய மயானம்


காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
 
  • தொடங்கியவர்

வாடினால்

---

மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!

இன்னும் இறக்கவில்லை ...
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால் 
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!

என் தொலைபேசி காதலி
------------

காற்றுக்கு தான்.....
நன்றி கூறுகிறேன்....
தினம் உன்குரல்...
சேர்ப்பதால் .....
தொலைவில் - நீ 
தொலைபேசியிலும் -நீ 
இன்ப தொல்லையும் -நீ 

  • தொடங்கியவர்
நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
 

குத்தாதீர்
----
தபாலகமே காதலி அனுப்பும்....
தீபாவளி  வாழ்த்து அட்டையை ....
இலச்சனையால் குத்தாதீர் ....
வர இருப்பது.......
வாழ்த்து அட்டை அல்ல ....
என் உயிரின் இதய அட்டை ...!!!

 

சொல்லமாட்டேன்...
-----
உன்னை என் இதயமென்று 
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன் 
நீயென்றே சொல்லுவேன்!!!

உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!
 
  • தொடங்கியவர்

காதல் உறவு ....!!!
---------

பலமுறை ஏங்குவதும் 
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!

காதல் கனவு!
----
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!

என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!

  • தொடங்கியவர்

ஒரு துளி கண்ணீர்
------

உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!

உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய் 
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!

மகிழ்வோடு வாழ்
----
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
+
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!

  • தொடங்கியவர்

என் மனைவி
-------------
ஒரு வேளை 
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில் 
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை நான் தான்....!!!

நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -...!!!

அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை 
யாரையும் வணங்க விடமாட்டேன் .-
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் 
.நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே 
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!

  • 7 months later...
  • தொடங்கியவர்
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ....!!!

ஆடம்பர மாளிகையில்
அலங்கார மின் விளக்குகளே 
அவர்கள் வீட்டு நட்சத்திரங்கள் 
எம் வீட்டில் நட்சத்திரங்களே 
அலங்கார விளக்குகள் 
வீட்டு கூரையில் பிரகாசமாய் 
ஒளிந்துகொண்டிருக்கும் 
எங்கள் வீட்டு மின் விளக்குகள் ….!!!

ஒரு கடி கடித்து விட்டு 
ஓரமாய் கிடக்கும் ஆப்பிள் பழம் 
அந்த வீட்டின் அநாதை பிறப்பு 
எப்போது எங்கள் வீட்டுக்கு 
அப்பிள் பழம் வரும் என்பது 
அப்பிளுக்கு எங்கள் வீடு 
பிரதம விருந்தினர் …..!!!

பழங்கஞ்சிதான் எங்கள் 
தினம் தோறும் ஊட்டப்பாணம் 
எம் குழந்தையின் அழுகை ஓசை 
அடங்கும் வரை …
“குழலினிது யாழினிது ” என்ற 
குறள் கூட வியப்புடன் தான் 
பார்க்கிறோம் …….!!!

சப்பாத்து இல்லையே என்று 
கவலைப்படாதே -கால் 
இருக்கே என்று சந்தோசப்படு 
என்றான் ஒரு தத்துவ ஞானி 
பழங்கஞ்சியாவது கிடைக்கிறதே 
என்று சந்தோசப்படுவதன் மூலம் 
வெறும் வயிற்றோடு துடிக்கும் 
குடும்பத்தை விட எம் குடும்பம் 
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ….!!! 

  • 3 months later...
  • தொடங்கியவர்

"மனவேறுபாடு "
----------------------
மனிதனோடு ......
மட்டுமல்ல பகை ......
உயிரினங்கள் .....
எல்லாவற்றோடும் பகை .....!!!

எல்லாவற்றோடும் ....
ஒப்பிட்டு ,வேறுபடுத்தி ....
தன்னை தானே குறைத்து ....
மதிப்பிட்டு வாழ்வதே .....
"மனவேறுபாடு " என்பர் ....!!!
+
குறள் 851
+
இகல்
+
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 71

  • தொடங்கியவர்

நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!

இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!  

+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்


நீக்கு நீக்கு ....
மனவேறுபாடு ......
நீக்கு .........
நீக்கவேண்டியதில் .....
இதுவே முதன்மை ....!!!

நீக்கிய மனவேறுபாடை ......
நீக்கிய கணமே ........
கொட்டி கிடைக்கும் .....
புகழ் ........!!!

+
குறள் 853
+
இகல்
+
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 
தாவில் விளக்கம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 73
+
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

துன்பத்தில் கொடிய ....
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!

மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!

+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74
+
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

மனவேறுபாடை .....
தோன்றும் போதே ....
தடுக்கும் ஆற்றல் .....
எவனுக்கு வருகிறதோ ....?
அவனை வெல்ல இந்த .....
உலகில் யாரும் இல்லை .....!!!

மன கசப்பை நீக்கியவன் .....
முன் அனைவரும் தோல்வியை .....
சந்தித்தே ஆகவேண்டும் .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே 
மிக்லூக்கும் தன்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 75
+

திருக்குறளை கொண்டு எழுதிய என் கவிதைகள் 
------------------
திருக்குறளும் இன்பத்து பால் - 250 கவிதைகள் 
திருக்குறளும் நட்பும்  - 75 கவிதைகள் ( தொடரும் )
திருக்குறள் சென்றியூ - 100 கவிதைக்கு மேல் 
திருக்குறள் வசனக்கவிதை - 10 கவிதை (தொடரும் )
திருக்குறள் கதையும் கவிதையும் - 05 கவிதை (தொடரும் )

நன்றி 
கவிப்புயல் இனியவன் 
 

  • 8 months later...
  • தொடங்கியவர்

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!

-------------------------------

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!

-------------------------------

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!

-------------------------------

உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!

-------------------------------

சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய்  நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?

------------------------------

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

---------------------------------------

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

-------------------------------

உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

-------------------------------

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

-------------------------------

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!

------------------------------

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!

------------------------------

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

------------------------------

வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
&
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

கவிப்புயலின் சிந்தனைகள் 

^^^
எரித்தால் ஒரு பிடி சாம்பல் 
பிடித்தால் ஒருபிடி இதயம் 
இடையில் ஆயிரம் ஆயிரம் 
சுமைகள் ....!

^^^

கூடி இருந்து சிரிக்கும் 
நண்பனையும் பார் ...!
தனியே இருந்து .....
அழுதபோது தன் சுட்டு 
விரலால் துடைத்த 
நண்பனையும் பார் ...!
சிரிக்கும் நண்பர்கள் 
நிலைப்பதில்லை ....!

^^^

பெண்ணின் அழுகை 
வலிமையானது 
ஆணின் அழுகை 
கொடூரமானது 
ஆண் அழுதால் 
அந்த குடும்பமே 
அழும் ....!

^^^

தெளிவான அறிவோடு பேசுங்கள்........
இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
இருங்கள்.........!

^^^

கவிப்புயல் இனியவன்

  • 3 months later...
  • தொடங்கியவர்

கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!

கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!

கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.