Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம்: பிரதமர் தலைமையிலான குழு ஆராயும்

Featured Replies

தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம்: பிரதமர் தலைமையிலான குழு ஆராயும்
 
 

article_1444839863-mano600.jpg

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் பிரஸ்தாபித்தார். 

இக்கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணை கைதிகளாகவும், ஒருசிலர் வழக்கு கைதிகளாகவும், பிறிதொரு பிரிவினர் தண்டனை கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறையில் கழித்து வருகின்றனர்.

இவர்கள் இன்று கொழும்பு, கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உண்ணாவிரதம் இருப்பதையும், அவர்களில் சிலர் இதுவரைக்குள்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதையும், கடந்த  ஆட்சியில் நிலவிய நிலைமை நமது நல்லாட்சியில் நிலவுவதை நீடிக்க விடக்கூடாது எனவும் அமைச்சர் மனோ கணேசன் எடுத்துரைத்தார்.

அமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர், நீதித்துறை அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் சட்டமாதிபரை அழைப்பித்து ஆராய்ந்து தனக்கு அறிவிக்கவேண்டும் என  பணித்தார்.

இது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை உள்ளடங்கிய குழு தனது தலைமையில்  சட்டமாதிபரை அழைத்து கலந்துரையாடி இப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது தீர்க்க வேண்டும் என்பதுவே தனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும், 20ஆம் திகதி இது தொடர்பான முதற்கூட்டத்தை  நடத்துவோம் என அமைச்சர் மனோ கணேசனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். 
இந்த தகவலை,; கொழும்பு சிறைசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளிடம் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/156569/தம-ழ-அரச-யற-க-த-கள-வ-வக-ரம-ப-ரதமர-தல-ம-ய-ல-ன-க-ழ-ஆர-ய-ம-#sthash.7A6yQEEz.dpuf

 
 
உண்ணாவிரத கைதிகளை சந்தித்தார் செல்வம் எம்.பி
 
14-10-2015 09:39 PM
Comments - 0       Views - 15

article_1444839620-anuu.jpg

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அநுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை, அவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவினர், புதன்கிழமை(14) மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, சந்தித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை சார்பாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை மற்றும் பொறியியலாளர் ஏ.தேவானந் ஆகியோரே அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 30 அரசியல் கைதிகளை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதன் போது, சுமார் 20 முதல் 30 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை, பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறித்த அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்த அரசியல் கைதிகள், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனமடைந்து உள்ளமை தமது விடுதலைக்கு வலது கரம் உடைந்தது போன்று உள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/156568/உண-ண-வ-ரத-க-த-கள-சந-த-த-த-ர-ச-ல-வம-எம-ப-#sthash.NktID7Pr.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியலோ, கூட்டரசியலோ, எப்படியாவது அவர்களுக்கு உதவுங்கள்.

... சிங்கள சிறைகளில் நீண்டகாலமாக கேட்பாரற்று வாடுவோரை, ... தயவுசெய்து விடுதலை செய்து விடாதீர்கள்!!!!

.... விடுதலை செய்யப்பட்டால் ... எம் அரசியல்வாதிகள் ... அரசியல் வைத்து எஅடாத்திய ஓர் தூண் சாய்ந்து விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.