Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல்

Featured Replies

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல்
 
 

article_1444886797-van.jpg

பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டு திரும்பிய குடும்ப பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல், நேற்று புதன்கிழமை (14) மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இராசலிங்கம் ஜனாகி (வயது 32) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு முடிவடைந்து தனியார் பேருந்தில் கம்பர்மலையில் உள்ள வீட்டுக்;கு வந்திறங்கிய போது, எதிரே வந்த வெள்ளை வான் இருந்தவர்கள் இவரது வாயினை பொத்தி வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

 

- See more at: http://www.tamilmirror.lk/156602/ந-த-மன-றத-த-க-க-ச-ன-ற-த-ர-ம-ப-ய-க-ட-ம-ப-ப-ண-கடத-தல-#sthash.V99wB9BU.dpuf
  • தொடங்கியவர்
சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்
சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்

வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின் அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

வடமராட்சி  வல்வெட்டித்துறை கம்பர் மலைப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நேற்று முன்தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்குக்குச் சென்றார். வழக்கு முடிவடைந்ததும், குறித்த பெண்ணும் தாயாரும் வீடு நோக்கிப் புறப்பட்டனர். நேரம் பி.ப. 4.30 மணியளவில், கம்பர்மலை சந்தியை அவர்கள் நெருங்கினர். இதன்போது அங்கு வானொன்று அவர்களை நெருங்கியது.

அந்த வானில் இருந்தவர்கள் கம்பர் மலைக்குச் செல்லும் பாதையை குறித்த பெண்ணிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்பதில் சொன்னதும் புறப்பட்டுச் சென்றதுவான். பின்னர் உடனடியாகவே அந்த வான் திரும்பி வந்து குறித்த பெண் அருகில் நின்றது. அதிலிருந்த 4 பேர் பெண்ணின் தாயாரைத் தள்ளி வீழ்த்திவிட்டு குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றிக் கடத்தினர்.

கட்டளை வழங்கியவர் கணவர் 

கடத்திய பெண்ணுடன் வான் பறந்தது. புன்னாலைக் கட்டுவன் ஆலயம் ஒன்றுக்கு அருகில் வான் நிறுத்தப்பட்டது. அப்போது கடத்தல்காரர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் ஒரு வருக்குத் தகவல் வழங்கியுள்ளார். சிறிது நேரத்தில் குறித்த பெண்ணின் கணவர் முச்சக்கர வண்டியில் அங்கு வந்து சேர்ந்துள்ளார்.

அவர் கடத்தல்காரர்களிடம் குறித்த பெண்ணை இடமாற்ற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார். அங்கிருந்து புத்தூரில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குறித்த பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்று விசாரணையின் போது கடத்தப்பட்ட பெண் வாக்குமூலத்தில் தெரிவித்தார் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

பொலிஸ் அதிரடி 

குறித்த பெண் கடத்தப்பட்டார் என்று நேற்று முன்தினம் பிற்பகல் எமக்கு முறைப்பாடு கிடைத்தது. பெண் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாகவே பொலிஸார் உசாராகினர். உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழி நடத்தலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையிலான விசேட  பொலிஸ் குழு அதிகாலை குறித்த சட்டத்தரணியின் வீட்டைச் சுற்றி வளைத்தது.

 இந்த நடவடிக்கைக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரோ மற்றும் கங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க ஆகியோரின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வீட்டினுள் நுழைந்த பொலிஸார் சோதனையிட்டனர். இதன் போது கடத்தப்பட்ட பெண் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அதிரடியாக மீட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவரும் அங்கு நின்றிருந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டது வாகனம்  சிக்கினர் சந்தேகநபர்கள்

 கைது செய்யப்பட்ட கணவரிடம் பொலிஸார் முறைப்படியான' விசாரணைகளை மேற்கொண் டனர். விசாரணையின் பயனாக கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கல்வியங்காடு பகுதியில் கைப்பற்றப்பட்டது. வல் வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீடின் தலைமையிலான பொலிஸ் குழுவே இந்த வாகனத்தைக் கைப்பற்றியது. 

தொடர் விசாரணைகளைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட னர் என்று சந்தேகிக்கப்படும் எட்டு சந்தேகநபர்களும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னணி 

ஏற்கனவே குறித்த பெண் அவரது கணவர் தொடர்பான விவாகரத்து வழக்கு ஒன்றும் நீதிமன்றில் நடந்து வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஏற்கனவே பல மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேக நபர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை நிதி மோசடி செய்தார். அப்போது கணவர் என்ற ரீதியில் குறித்த பெண்பிணை எடுத்திருந்தார். அது சம்பந்தமான வழக்குக்கு சமூகம் அளித்து விட்டு வந்த நிலையிலேயே பெண் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பெண் தமக்கு வழங்கிய வாக்கு மூலத்தில்  இவ்வாறு தெரிவித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

http://onlineuthayan.com/news/1334

  • தொடங்கியவர்
குடும்பப் பெண் கடத்தல்; 10 ஆவது நபர் கைதானார்
குடும்பப் பெண் கடத்தல்; 10 ஆவது நபர் கைதானார்

வடமராட்சி கம்பர்மலையில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேக நபர்கள்கைது செய்யப்பட்ட நிலையில் 10  ஆவது சந்தேக நபரும் நேற்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது:-

வடமராட்சி கம்பர் மலை பகுதியை சேர்ந்த பெண் கடந்த புதன்கிழமை நீதிமன்றில் இருந்து வந்து கொண்டிருந்த சமயம் வாகனமொன்றில் வந்த மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பர் வழி நடத்தலில் விசாரணைகளை ஆரம்பித்த வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீடின் தலையிலான பொலிஸ் குழுக்கள் அதிரடியாகச் செயற்பட்டு எட்டு மணித்தியாலத்துக்குள் புத்தூரில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் வைத்துப் பெண்ணை மீட்ட தோடு சந்தேக நபரான பெண்ணின் கணவர் சிவானந்தராஜா சுசீந்திரன் என்ற நபரையும் கைது செய்திருந்தனர்.

கணவருடன் விவாகரத்து சம்பந்தமான  வழக்கு நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையிலேயே  பெண் கடத்தப்பட்டிருந்தார். இந்தக் கடத்தல் தொடர்பில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 8 சந்தேக நபர்களும் பொலிஸாரின் பல்வேறு சுற்றி வளைப்புகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து விசாரணைகளை தொடர்ந்த பொலிஸார் நேற்று அதிகாலையும் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கம்பர்மலையைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்திருந்தனர். குறித்த சந்தேக நபர் பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று முற்படுத் தப்பட்ட போது சந்தேக நபரை எதிர் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.    

http://onlineuthayan.com/news/1449

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூகவிரோதச் செயலுக்கு 9 பேர் உதவிக்குவரும் அளவிற்கு தமிழ்சமூகம் மாற்றம் கொண்டுவிட்டதா....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.