Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி தலைவர்கள் பலர் விடுவிப்பு: எம்மை ஏன் விடுவிக்கவில்லை? கைதிகள் கேள்வி (வீடியோ)

Featured Replies

புலி தலைவர்கள் பலர் விடுவிப்பு: எம்மை ஏன் விடுவிக்கவில்லை? கைதிகள் கேள்வி (வீடியோ)

புலி தலைவர்கள் பலர் விடுவிப்பு: எம்மை ஏன் விடுவிக்கவில்லை? கைதிகள் கேள்வி (வீடியோ)

 

 
 

அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துள்ளனர்.

இதன்போது கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,

சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள அணைத்து ஆவணங்களையும் பரிசோதித்து பிரதமர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய தீர்வை இவ்வருட இறுதிக்குள் பெற்று கொடுப்பதாக கூறினோம். எனவே உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தோம்.

அவர்கள் நம் கோரிக்கைக்கு இணங்கி செயற்படுவார்கள் என நாம் நம்புவோம், என்றார்.

இதேவேளை சுமந்திரன் கருத்து வௌியிடுகையில்,

வருட இறுதிக்குள் தீர்வு பெற்று தருவதாக நீதி அமைச்சர் கூறினார். எனினும் கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிடும் கோரிக்கையை ஏற்கவில்லை, மற்றையோருடனும் கலந்துரையாடியே முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்கள்.

அவர்களை விடுவிப்பதாக உறுதியளிக்காததால் சிலர் உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என்றனர். ஜனாதிபதியிடம் இருந்து அவ்வாறானதொரு தகவல் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என்றனர்.

அவர்களது நிலைப்பாடு அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே, விடுதலைப் புலிகளின் தலைவர்களாக இருந்த சிலர் தற்போது விடுதலையாகியுள்ளனர். சிலரை விடுவித்து அமைச்சுப் பொறுப்பும் வழங்கியிருந்தனர். எனில் எம்மை ஏன் வைத்திருக்கின்றனர் என அவர்கள் கேட்கின்றனர்.

நாங்களும் அவர்கள் கூறியதையே கூறுகின்றோம். புனர்வாழ்வளிக்கப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டனர். இறுதி யுத்தத்தில் இருந்த பலர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை வைத்திருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

இன்று சம்பந்தன் நீதி அமைச்சரை சந்திப்பார். ஜனாதிபதி கொழும்பு வந்த பின் அவருடன் நாம் பேசுவோம், என்றார்.

மேலும் இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் வினாவிற்கு பதிலளித்த சுமந்திரன்,

தம்மை விடுவிக்க அரசியல் தீர்வை காண வேண்டும் என கைதிகள் கோரினர். அதற்கு அமைச்சர் தன்னால் தனித்து அந்த முடிவை எடுக்க முடியாது அமைச்சரவையே அதை தீர்மானிக்க வேண்டும். வரும் வாரத்தில் அமைச்சரவையில் பேசி அரசு அந்த முடிவு எடுக்குமா இல்லை என கூறுகிறேன் என்றார்.

அத்துடன் பொய் வாக்குறுதி தர எனக்கு அவசியம் இல்லை. வருட இறுதிவரை நேரம் தாருங்கள் அதற்கு முன் ஏற்ககூடிய தீர்வு தருவோம். எனவே தற்போது உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என அமைச்சர் குறிப்பிட்டார். எனினும் கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட இதுவரை முடிவு செய்யவில்லை.

இதேவேளை இதன்போது கலந்து கொண்ட விஜயகலா மகேஸ்வரன் கூறியவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்!

http://tamil.adaderana.lk/news.php?nid=73539&mode=lead

 

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்தே இவ்வளவு காலம் ஆகிறது. இன்னும் எதற்கு நேரம் தேவை என விளங்கவில்லை. நிலைமையை தணிக்க காலகெடு விதிப்பதும் பின்னர் இழுத்தடிப்பதும் தான் சிங்கள அரசுகள் செய்யும் சுத்துமாத்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.