Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இன்னொரு செம்மணி? அரியாலையில் இரு எலும்புக்கூடுகள் மீட்பு! பெண்களுடையன என சந்தேகம்!!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இன்னொரு செம்மணி? அரியாலையில் இரு எலும்புக்கூடுகள் மீட்பு! பெண்களுடையன என சந்தேகம்!!

இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் இருந்த பகுதியில் இரு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளுக்கு அருகில் கிடந்த பொருட்களைக் கொண்டு அவை பெண்களுடையனவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யாழ்ப்பாணம் - அரியாலையின் முள்ளியிலேயே இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மணல் அகழ்ந்தவர்கள் இந்த எலும்புக்கூடுகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற ஒருவர் அதனைக் கண்டு தகவல் அளித்ததைத் தொடர்ந்தே இந்த விடயம் இப்போது வெளியே வந்துள்ளது.

முன்னர் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த இந்தப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்றின் மண்டை ஓட்டில் துளை ஒன்றும் காணப்படுகின்றது. இது துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட அடையாளமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அத்துடன் இந்த எலும்புக்கூடுகளுக்கு அருகே பாடசாலை புத்தகப் பை, 2 குடைகள், 2 ஜோடி செருப்புக்கள், பெண்கள் பயன்படுத்தும் கைப்பை என்பன மீட்கப்பட்டுள்ளன. இதனாலேயே இவை பெண்களுடையனவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இப்போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட முள்ளிக்கு சிறிது தொலைவில் உள்ள செம்மணியில் முன்னர் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த எலும்புக்கூடுகளில் பல பெண்களினுடையவை என்றும் இராணுவத்தினர் அவர்களைக் கைது செய்து தங்களின் முகாம்களுக்குக் கொண்டு சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்று இந்தப் பகுதியில் அவர்களைப் புதைத்தனர் என்றும், அவர்களை தேடிச் சென்றவர்களும் கொல்லப்பட்டு இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டது. செம்மணி குறித்த வழக்கு இன்று மறைந்துபோன நிலையில் அதற்கு சிறிது தொலைவில் உள்ள முள்ளியில் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தையும் அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ariyalai%202015%2010%2016%2001.jpg

http://www.malarum.com/article/tam/2015/10/16/12205/யாழ்ப்பாணத்தில்-இன்னொரு-செம்மணி-இரு-எலும்புக்கூடுகள்-மீட்பு-பாடசாலை-மாணவிகளினுடையதா-என-சந்தேகம்-.html#sthash.Bm5OuSi2.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கண்மணிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...சம் சும் கோஸ்டியும்...சுவாமினாதனும் கேள்விப்பட்டால்...நல்லிணக்க அரசியலில் குழப்பம் வேண்டாம்...அது பழைய சுடலை...நாய் கிண்டிவிட்டுது...அல்லது...புலிகள் சிங்களப்பெண்மணிகளை பாவித்தவை...குடையைப் பார்க்கத்தெரியுது என்பினம்...

மனித மண்டையோட்டுடன் பெண்களின் ஆடையணிகள்
மனித மண்டையோட்டுடன் பெண்களின் ஆடையணிகள்

அரியாலை முள்ளியில் மனித மண்டையோடு, எலும்புகள் மற்றும் 2 பெண்களின் ஆடைகள், அவர்களது பொருள்கள் என்பன இருந்தமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அங்குள்ள சூழமைவுகளைப் பார்க்கும் போது அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மண்டை ஓடு உள்ளிட்ட அந்தப் பொருள்கள் மணல் அகழும்போதே வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரியாலைக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏ  9 வீதியிலிருந்து செல்லும்போது வீதியில் ரயில் கடவை உள்ளது. அந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன.

சிறு வடலிகளும் பற்றைகளுமாக அந்த இடம் காணப்படுகின்றது. அங்கு மனித மண்டை ஒடு உள்ளிட்ட எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. தவிர பெண்களின் வெளி, உள்ஆடைகள், 2 கைப்பைகள், 2 விதமான செருப்புக்கள், பெண் பிள்ளைகள் பாவிக்கும் சிறியபேஸ் என்பன காணப்படுகின்றன. அந்த பேசினுள் பென்சில், பேனா, சில்லறைப் பணம் என்பன காணப்படுகின்றன. அதனடிப்படையில் 2 பெண்கள் அந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருட்டு மணல் அகழ்வது சட்டவிரோதமாக இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. நேற்றைய தினமும் அந்த இடத்தில் டிராக்டர்கள் சென்று வந்ததற்கான தடயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருட்டு மணல் அகழ்பவர்கள் மணல் அகழும்போது அந்த எலும்புக் கூடுகள் வெளிப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் அவற்றை வெளியே எடுத்துப் போட்டுவிட்டுச் சட்டவிரோத மணல் அகழ்வைத் தொடர்வதாகக் கருதமுடிகிறதென்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு அநாதரவாக எலும்புக்கூடுகள் இருப்பது பற்றித் தகவல் பரவியுள்ளது.

முன்னர் அந்த இடம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அந்த விடயம் தொடர்பாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது எலும்புக்கூடுகளைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

சூழமைவுகளைப் பார்க்கும்போது, அந்த இடம் சுடலை அல்ல என்பதனாலும், மண்டை ஓட்டில் ஓட்டை காணப்படுவதாலும் அவர்கள் கொல்லப்பட்டார்களா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன், அங்கு மேலும் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுவதாக அவர்  தெரிவித்தார். அது தொடர்பில் உரியவர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/1370

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.