Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

13403983_1060849647297062_47148067825384

நியூஸ்லாந்து அணியின் கிரிகெட் வீரர் Daryl Tuffey
இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

June 11 - பண்பலை வானொலி ஒலிபரப்பின் பிறந்தநாள் இன்று.

அமெரிக்காவின் மிக நேர்த்தியான வானொலி ஒலிபரப்பின் ஆராய்ச்சியாளர், விஞ்ஞானியாகக் கருதப்படும்
Edwin Howard Armstrong 1935இல் பண்பலை ஒலிபரப்பை முதல் தடவையாக நியூ ஜெர்சியில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தார்

13435577_583135015186351_639910504555799

June 11 - பண்பலை வானொலி ஒலிபரப்பின் பிறந்தநாள் இன்று.

அமெரிக்காவின் மிக நேர்த்தியான வானொலி ஒலிபரப்பின் ஆராய்ச்சியாளர், விஞ்ஞானியாகக் கருதப்படும்
Edwin Howard Armstrong 1935இல் பண்பலை ஒலிபரப்பை முதல் தடவையாக நியூ ஜெர்சியில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தார்.

Armstrong was also the inventor of modern frequency modulation (FM) radio transmission.

FM ஒலிபரப்பினை விரிவுபடுத்தி அதனை வெற்றிகரமான ஒரு ஒலிபரப்பாக மாற்றிக்காட்டிய ஆர்ம்ஸ்ட்ரோங்கை நன்றியுடன் இன்றைய தினத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.

Edwin Howard Armstrong

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

லகம் முழுவதும் 4.6 கோடி மக்கள், அடிமைகளாக வாழ்வதாக ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ஆஸ்திரேலியாவின் வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன். உலகிலேயே அதிக அளவில் அதாவது 1.83 கோடிப் பேர் அடிமைகளாக வாழ்வது இந்தியாவில்தான். இதற்கு அடுத்து சீனாவில் 33.9 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 21.3 லட்சம் பேரும், வங்கதேசத்தில் 15.3 லட்சம் பேரும் அடிமைகளாக வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர், விருப்பத்துக்கு மாறாக தொழிற்சாலைகளிலோ, பண்ணைகளிலோ, பாலியல் தொழிலாளியாகவோ வாழ்ந்துவருகிறார்கள் என அதிரவைக்கிறது இந்த ஆய்வு அறிக்கை!


`பெரிய நடிகர்களின் வாரிசு என்றால் ஈஸியாக ஹீரோவாகிவிடலாம்; தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை என்பதற்கு நானே உதாரணம். எவ்வளவு பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் படம் தொடர்ந்து ஃப்ளாப் என்றால், அடுத்த பட வாய்ப்பு கிடைக்காது. நான் பட வாய்ப்புகள் இல்லாமல் கடந்த சில வருடங்களாக சும்மா இருக்கிறேன். யாரும் தோல்வி படங்களில் நடிக்க வேண்டும் என நடிப்பது இல்லை. ஆனால், என் படங்கள் தோல்வியில் முடிந்துவிட்டன’ எனப் புலம்பியிருக்கிறார் அபிஷேக் பச்சன்!


p22a.jpg

டென்னிஸ் மூலம் `100 மில்­லியன் அமெ­ரிக்க டாலர் பணப் பரிசை முதலில் எட்டப்போவது யார்?’ என்ற போட்டியில் ரோஜர் ஃபெடரரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் நோவாக் ஜோகோ­விச்­. வெறும் டென்னிஸ் வெற்றிகள் மூலம் கிடைக்கும் பந்தயப் பணத்தில், 100 மில்லியன் டாலர்... இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 673 கோடி சம்பாதித்து சாதனைப்படைத்திருக்கிறார் ஜோகோவிச். இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் உள்பட 64 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கும் ஜோகோவிச், சுலபமாக 150 மில்லியன் டாலர் சாதனையையும் முதலில் எட்டுவார் என்கிறார்கள் டென்னிஸ் நிபுணர்கள்!


p22b.jpg

சச்சினின் சாதனையை உடைத்திருக் கிறார் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக். `மிக இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்’ என்ற சாதனை, கடந்த 10 வருடங்களாக சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. `31 வயது, 10 மாதங்கள், 10 ஆயிரம் ரன்கள்’ என்பது சச்சினின் சாதனை. அதை `31 வயது 5 மாதங்க’ளில் கடந்திருக்கிறார் குக். உலகிலேயே இங்கிலாந்து அணிதான் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்பதோடு, குக் இன்னும் 5-6 வருடங்கள் விளையாடுவார் என்பதால், சச்சினின் அதிகபட்ச 15,921 ரன்களையும் குக் கடந்துவிடுவார்’ என்கிறார் முதன்முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த சுனில் கவாஸ்கர்!


p22c.jpg

`ஹாரிபாட்டர்’ வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மீண்டும் `ஹாரிபாட்டர்’ வருகிறார். சினிமாவாக அல்ல... நாடகமாக. `ஹாரிபாட்டர் அண்ட் தி கர்ஸ்ட் சைல்ட்’ என்கிற இந்த நாடகத்தை ஜே.கே.ரௌலிங் எழுதவிருக்கிறார். `ஹாரிபாட்டர்’ கதை, விட்ட இடத்தில் இருந்து சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை இது. வளர்ந்து பெரிய மனிதனாக ஆகிவிட்ட ஹாரி, இதில் வரப்போகிறார். இந்த நாடகத்தின் `ஹாரிபாட்டர்’ பாத்திரத்தில் முதல்முறையாக ­­டேனியலுக்குப் பதிலாக ஜேமி பார்க்கர் என்பவர் நடிக்க இருக்கிறார்!


p22e.jpg

`அபூர்வ சகோதரர்கள்’ அப்பு போல குள்ளமான மனிதராகத் தோன்றுகிறார் ஷாரூக் கான். இந்தப் படத்தை இயக்கப்போவது `தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' இயக்குநர் ஆனந்த் எல் ராய். முட்டியை மடக்கி நடித்து சிரமப்படாமல், முழுக்க முழுக்க கிராஃபிக்ஸிலேயே ஷாரூக் கானைக் குள்ள மனிதராக மாற்றுகிறார்கள். இதற்காக `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' படத்தின் கிராஃபிக்ஸ் டீம் மும்பை வந்து இறங்கியிருக்கிறது!


p22d.jpg

தமிழகத்தில் `அம்மா உணவகம்’ என்றால்... ஆந்திராவில் `அண்ணா உணவகம்’. தமிழகத்தில் அம்மா உணவகம் செம ஹிட் என்பதால் இதே ஐடியாவை ஆந்திராவில் தொடங்குகிறார் சந்திரபாபு நாயுடு. முதல் உணவகம் ஆகஸ்ட் மாதம் விஜயவாடாவில் உள்ள ஆட்டோ நகர் பகுதியில் தொடங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளதால், இந்த இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த உணவகம் 3.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது!

vikatan

  • தொடங்கியவர்

13411769_1060848680630492_61797382978056

கதாநாயகனான அறிமுகமாகி
இப்போது காமடியில் கலாட்டா பண்ணி கலக்கி வரும்
சத்யனுக்கு இன்று பிறந்தநாள்.

நண்பனும், துப்பாக்கியும் கொடுத்த திருப்புமுனை கடகடவென்று காமடியில் அசத்தி வென்றுவிட்டார்

  • தொடங்கியவர்

உலகின் இளமையான தேசிய கீதம்!

 

 
64_2848515f.jpg
 

தேசிய கீதம் என்றால் இப்படித்தான் இருக்கும்' என்று எல்லோருக்கும் ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. நீங்கள் அப்படி நினைப்பவரா? அப்படியானால், நீங்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது நேபாள நாட்டின் தேசிய கீதத்தைக் கேட்க வேண்டும்.

இனிமையோ இனிமை!

நேபாளத்தின் தேசிய கீதம் அவ்வளவு இனிமையாக இருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் இணையத்துக்குச் சென்று, நேபாள தேசிய கீதத்தைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும். (‘Korean students singing Nepali songs' என்று தேடிப் பாருங்கள். கிடைக்கும்) இந்தக் கீதத்தில், நமக்குப் பழக்கப்பட்ட பல சொற்கள், அதே உச்சரிப்புடன் அதே பொருளில் அமைந்து இருக்கின்றன என்பது சுவாரஸ்யமான செய்தி.

பக்கத்து நாடு

நமது அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இந்தியாவுக்கு வட கிழக்கே, சீனாவையொட்டி அமைந்துள்ள நாடு.

உலகின் மிக உயர்ந்த மலைகள் இங்கு உள்ளன. மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் நேபாளத்தில்தான் உள்ளது.

குடியரசு

நேபாளத்தின் மக்கள்தொகை மூன்று கோடிக்கும் குறைவு.

உலகிலேயே மிக அதிகமாக, 80 சதவீதத்துக்கும் மேலாக இந்து மக்களைக் கொண்ட இந்நாட்டின் தலைநகரம்,

காத்மாண்டு. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, மன்னரால் ஆளப்பட்டு வந்த நேபாளத்தில் இப்போது, கூட்டு ஜனநாயகக் குடியரசு ஆட்சி நடைபெறுகிறது.

வேறு ஒரு தேசிய கீதம்தான் முதலில் நேபாளத்தில் இருந்தது. அதை நீக்குவதாக, 2006 மே 16 அன்று ஒருமனதாக அந்த நாட்டு மக்களவை (பிரதிநிதி சபா) தீர்மானித்தது.

மக்கள் பாட்டு

பாகிஸ்தானைப் போலவே, நேபாளமும் தேசிய கீதம் எழுதி அனுப்புமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

தேசிய கீத தேர்வுப்பணிக் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 1200-க்கும் மேலான பாடல்கள் வந்து குவிந்தன.

ஒரு பாடல் எல்லோருக்கும் பிடித்தது. ஆனால், அந்தப் பாடலின் ஆசிரியர் ‘மன்னருடைய ஆள்’ என்று சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து விசாரித்து, முடிவில் சந்தேகம் தீர்ந்த்து. 2006 நவம்பர் 30 அன்று, இப்பாடலைத் தேர்ந்தெடுத்தது தேர்வுக்குழு.

நம்ம தர்பார்!

அந்த நாட்டு திட்டக் குழுவின் தலைமையகத்தில் ஓர் அரங்கம் உள்ளது. அதன் பெயர் - ‘சிங்க தர்பார்'!

இந்த அரங்கத்தில்தான், 2007 ஆகஸ்ட் 3-ம் நாள், நேபாளத்தின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இளமை - இனிமை!

நேபாளத்தின் கீதம் தோன்றி, இன்னும் பத்து ஆண்டுகள்கூட ஆகவில்லை! உலகிலுள்ள தேசிய கீதங்களில், இது மிக இளமையான கீதம்.

யாரால்.., எப்படி..?

இப்பாடலை இயற்றியவர் - ‘பையா மைலா' என அழைக்கப்படும் பிரதீப் குமார் ராய்.

இசை அமைத்தவர் - ஆம்பர் குருங். ‘குருங்' என்பது, நேபாள மொழிகளில் ஒன்று. அதையே பெயரில் கொண்டுள்ளார் இவர். நம் ஊரில் ‘செந்தமிழ்' என்று பெயர் வைத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போல.

இப்பாடலை இசைக்க ஆகும் நேரம்

- ஏறத்தாழ ஒரு நிமிடம்.

இந்தப் பாடல் இப்படி ஒலிக்கும்:

சாய துங்க பூ கஹாமி யூட்டை மாலா நேபாளி

சர்வ பவும்பை ஃபைலி லேகா மேச்சி மஹாகாளி

ப்ரக்ரிதி கா கோடி கோடி சம்ப தாகோ ஆசலா

பீர்ஹ ரூகா ராகதா லே ஸ்வதந்த்ர ரா ஆடலா

ஞானபூமி ஷாந்திபூமி தாராய் பாஹாட் ஹீமலா

அகண்ட யோ ப்யாரோ ஹம்ரோ மாத்ரிபூமி நேபாளா

பஹூல் ஜாதி, பாஷா, தர்மா, சஸ்க்ரிதி சான்பி பிஷாலா

ஆக்ரகாமி ராஷ்ட்ர ஹம்ரோ ஜெய ஜெய நேபாளா.

சரி..

என்ன சொல்கிறது இப்பாடல்...?

தமிழாக்கம்

பல நூற்றுக்கணக்கான பூக்களால்

தொடுக்கப்பட்ட ஒரே மாலை நேபாளம்;

மேச்சி முதல் மஹாகாளி வரை

வியாபித்து நிற்கும் இறையாண்மை நேபாளம்.

முடிவில்லாத இயற்கையின் வளமை,

ஆற்றல் மறவர்களின் குருதி போர்த்திய

சுதந்திரமான அசைந்து கொடுக்காத தேசம்;

ஞானபூமி; சாந்த பூமி, சமவெளிகள், குன்றுகள்,

நெடிதுயர் மலைகள் அமைந்த பூமி;

அகண்ட, பிரிக்கப்பட முடியாத,

நேசத்துக்குரிய அன்னை நிலம் நேபாளம்.

பல இனங்கள், மொழிகள், மதங்கள்,

பண்பாடுகளின் ஊடே

நம்பிக்கைகளுக்கு மேலாய், முன்னேறும் தேசம் -

எல்லாரும் போற்றும் எங்கள் நேபாளம்!

(கீதங்கள் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

SPB அன்று....

 

SPB இன்று....

  • தொடங்கியவர்

p12a.jpg

மீண்டும் பில்லா

ட்விட்டரில் பிரபலங்கள் டைம்பாஸாக ரசிகர்களுடன் சில நிமிடங்கள் சாட் செய்வார்கள். சிம்பு ஜாலியாக #askstr  என  களம் இறங்க, 2018-ல் ‘பில்லா3’ எடுக்கிறோம், நீங்க ரெடியா? என இயக்குநர் வெங்கட் பிரபு கேட்க, சிம்பு பிறந்ததில் இருந்தே ரெடி என பதில் அளிக்க, #billa2018 ட்ரெண்ட் ஆனது. 2030-ல் வெளிவர வாழ்த்துகள்!


p12b.jpg

சிங்கம்! சிங்கம்!

சாலையில் ஒரு பெண்ணிற்கும், இரு சிறுவர்களுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அங்கு சென்ற நடிகர் சூர்யா, ‘சிங்கம்’ பட பாணியில் பரேடு எடுத்து அடிக்க, தமிழகம் முழுவதும் டாபிக் ஆனார். ஒருகட்டத்தில் சூர்யா மேல் தான் தவறு என செய்திகள் வெளியாகத் தொடங்கின. குறிப்பிட்ட பெண்மணி ட்விட்டரில் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டுகளை அணிவகுக்க, சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். @PushpaKrishnasw என்ற ஐடி தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. என்னதான் சார் நடந்துச்சு?


p12c.jpg

நாயகர்கள்

ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே ட்ரெண்ட் அடித்தே ஓய்ந்தான் இணையவாசி. ஜூன் 2-ம் தேதி இளையராஜா, மணி ரத்னம், ஜூன் 3-ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜூன் 4-ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் என அடுத்தடுத்து தத்தமது ஆதர்ஷ நாயகர்கள் பிறந்தநாள் வர #hbdrajasir, #HBDKalaignar போன்றவை இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்தன. வாழ்த்த வயதில்லை மொமென்ட்!


p12d.jpg

புதிய மண்ணின் மைந்தன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், 2005-ம் ஆண்டில் இருந்து 9 முறை பட்டம் வென்றவர் ரஃபேல் நடால். ஃபெடரர், ஜோக்கோவிச் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் பலர் அவரிடம் தோற்று இருக்கிறார்கள். 2014, 2015-ம் ஆண்டுகளில் இறுதிவரை போராடிய ஜோக்கோவிச்சால் இரண்டாம் இடம் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. முதன்முறையாக, இந்த ஆண்டு மண் தரையில் பட்டம் வென்று இருக்கிறார் ஜோக்கோவிச். இதன் மூலம் ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்று செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் சாதனை படைத்துள்ளார். #djokovic என்ற வார்த்தை உலக அளவில் ட்ரெண்டானது. வாழ்த்துகள்!


p12e.jpg

ஒரே ட்விட். ஓஹோன்னு வாழ்க்கை

ட்விட்டரில் ஒரு சாதாரண நபர் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன நிகழ்வு கடந்த வாரம் நிகழ்ந்தது. ஜூன் 3-ம் தேதி, பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி காலமானார். அனதிதா பட்டேல் என பெண், ‘ரொனால்டோ, மாரடோனா, மெஸ்ஸி போன்ற கால்பந்து வீரர்களை விட முஹம்மது அலி சிறந்த கால்பந்து வீரர். அவர் மறைவிற்கு வருந்துகிறேன்’ என ட்விட்டினார். அந்த ஒரு ட்விட் மட்டும் 7000 முறை RT செய்யப்பட்டது. சுதாரித்த அனதிதா, பீலேவுக்கும், அலிக்கும் கன்ஃப்யூஸ் ஆகிவிட்டேன் என பதில் அளித்தும் அது பலனளிக்கவில்லை. #AnaditaPatel என்ற வார்த்தையை தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர் நெட்டிசன்ஸ். பலர் அனதிதாவிற்கு ஆதரவு அளித்ததுதான் ஓர் ஆறுதல். இதெல்லாம் பாவம் நெட்டிசன்ஸ்!


p12f.jpg

‘பாகுபலி’ - வேற லெவல் ரசிகர்கள்

கடந்த ஆண்டு வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் பல்வேறு சாதனைகள் படைத்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டதாம். அதைக் கொண்டாடும் விதமாக #1YearForEpicBaahubaliTrailer என்பதை ட்ரெண்ட் ஆக்கினார்கள். இனி வரும் காலங்களில், விஜய் அஜித் ரசிகர்களும் இது போன்று டீசர், ட்ரெய்லர்களுக்கு  எல்லாம் ஆண்டுவிழா கொண்டாடுவார்கள் என நம்பலாம். ரூம் போட்டு யோசிப்பீங்களோ?


p12g.jpg

நல்லதொரு க்ளைமாக்ஸ், பல்கலை சினிமா

தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான படங்களில் மிகச்சிறந்த க்ளைமாக்ஸ் எது என யாரோ ஒரு நெட்டிசன் கிளப்பிவிட, களை கட்டியது ட்விட்டர். சிறந்த திரைப்படங்களைப் பலர் வரிசைப்படுத்த, அங்கு வந்து தல-தளபதி ரசிகர்கள் குதித்தனர். ‘சுறா’டா, ‘வேதாளம்’ டா என சண்டை போட, தெறித்து ஓடினர் சினிமா ரசிகர்கள். #BestClimaxInTamilCinema என்ற டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. உங்களுக்குப் பிடிச்ச படம் எது பாஸ்?

vikatan

  • தொடங்கியவர்

ஜூன் 12: குழந்தைத் தொழிலாளர்கள்
எதிர்ப்பு தினம் இன்று.

13428413_732057326896812_386843666351606

ஜூன் 12: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

13418994_731358640300014_312656441507707

  • தொடங்கியவர்
ஸ்பைடர் மேன்வேடமணிந்து விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர்
 

மெக்­ஸி­கோவைச் சேர்ந்த விஞ்­ஞான ஆசி­ரியர் ஒருவர், மாண­வர்­க­ளுக்கு விஞ்­ஞானம் கற்­பிப்­ப­தற்கு விநோ­த­மான உபா­ய­மொன்றை கையாள்­கிறார். சுப்பர் ஹீரோ பாத்­தி­ர­மான ஸ்பைடர் மேன் வேட­ம­ணிந்த நிலையில் அவர் பாடங்­களைக் கற்­பிக்­கிறார்.

 

1724862.jpg

 

மோசஸ் வஸ்­குவெஸ் என்­ப­வரே இந்த ஆசி­ரி­ய­ராவர். மெக்­ஸி­கோ­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் இவர் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்­று­கிறார் என ரோய்ட்ர்ஸ் செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

 

26 வய­தான வாஸ்­கு­வெ­ஸுக்கு இளம் தலை­மு­றை­யி­னரின் விருப்பு வெறுப்­புகள் நன்கு தெரியும். இந்­நி­லையில் மாண­வர்­க­ளுக்கு ஆர்­வ­மூட்­டு­வ­தற்­காக ஸ்பைடர் மேன் வேட­ம­ணிந்து வகுப்­புக்கு வரு­கிறார்.

 

1724861.jpg

 

“ஏனைய எல்­லோ­ரையும் போன்றே நான் இப்­ப­ணியை செய்ய முடியும். இப்­ப­டியோர் ஆடை அணிந்து கொள்­வதால் மாத்­திரம் இந்த வகுப்பு உலகின் மிகச் சிறந்த வகுப்­ப­றை­யாக மாறி­விடும் என நான் எண்­ண­வில்லை.

 

ஆனால், நான் மிகவும் நேர்­மையும் அர்ப்­ப­ணிப்பும் கொண்­டவன் என்பதனை உறுதிப்படுத்துகிறேன். இந்த வகுப்­ப­றையை மேலும் சிறந்த ஓர் இட­மாக்­கு­வதே எனது நோக்­க­மாகும்” என அவர் தெரி­வித்­துள்ளார்.

 

1724863.jpg

 

ஒன்­றரை வருடங்களு க்கு முன்னர் ஸ்பைடர் மேன் வேடத்தில் மோசஸ் வஸ்­குவெஸ் ஆடை­ய­ணிய ஆரம்­பித்­த­போது இது அவரின் தொழிலைப் பாதிக்கும் என்றே அவரின் குடும்­பத்­தினர் எண்­ணி­னராம்.

 

ஆனால், மாணவர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது என வஸ்குவெஸ் தெரிவித்துள்ளார்.

 

1724864.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'கிங் மேக்கரி'ன் எளிமை!

13413142_1153850561340399_26685191938091

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

  • தொடங்கியவர்

13415589_1061468440568516_29582258332443

காலம் சென்ற நடன தாரகை
நாட்டிய பேரொளி பத்மினியின் பிறந்தநாள் இன்று.

நாட்டிய நட்சத்திரமாக சினிமா உலகிற்கு 1948 ஆம் ஆண்டு அறிமுகமாகி
தொடர்ந்து 03 ஆண்டுகள் இவரது நாட்டியம் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை. 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் வென்று நின்று தடம்பதித்தவர். 17 வயதில் திரையுலகம் புகுந்து, தமிழில் மணமகள் திரைப்படத்தில் முதன் முதலில் முகம் காட்டியவர்.

உலகப் புகழ் பெற்ற நாட்டியத் தாரகையாகவும், நடிகையாகவும் கோலோச்சிய நாட்டிய பேரொளி, அபிநய அசத்தல் நாயகி.

  • தொடங்கியவர்

தமிழ்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 12
 
 

article_1434087426-Kok300.jpg1665: முன்னாள் டச்சு குடியேற்ற பிரதேசமாக இருந்த நியூயோர்க்கில் மாநகர நிர்வாகத்தை இங்கிலாந்து  ஏற்படுத்தியது.

1889: வட அயர்லாந்தில்  இடம்பெற்ற ரயில் விபத்தினால் 78 பேர் பலி.

1898: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து பிலிப்பைன்ஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.

1943: உக்ரேனில் ஜேர்மனிய படைகளல் 1180 யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1964: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1975: இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார்.

1991: மட்டக்களப்பில்; 152 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1991: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.

1994: போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.

1999: நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.

2003: தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்கு, தமிழக அரசு தடை விதித்தது.

2005: அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.

2006: கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

2006: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13433338_1061482710567089_90447356552686

பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் Javed Miandad இன் பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p58a.jpg

dot1.jpg 2016-ம் ஆண்டு ஃப்ரெஞ்சு ஓபன் டென்னிஸில் எல்லோரும் ரசித்த சுவாரஸ்ய வெற்றி, லியாண்டர் பயஸ்-ஹிங்கிஸினுடையது. மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடியான சானியா -ஹிங்கிஸ் ஜோடி மூன்றாவது சுற்றிலேயே வெளியேறிவிட, கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டியில் சானியாவும் ஹிங்கிஸும் எதிர் எதிராக மோதிக்கொண்டனர். வெற்றி, பயஸ்-ஹிங்கிஸ் ஜோடிக்கு. கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் வென்றி ருக்கும் 10-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. சக்சஸ் பயஸ்!

p58b.jpg


dot1.jpg டெல்லிக்கு அடுத்து பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்ப்புகளை எகிறவைத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. 117 சட்டமன்ற உறுப்பினர்கள்கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல். `பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான ஷிரோன்மணி அகாலி தள் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதால், ஆம் ஆத்மி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்' என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. `பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யாராக இருக்க வேண்டும்?' என்ற கேள்விக்கு, பெரும்பாலான மக்கள் `அர்விந்த் கெஜ்ரிவால்' என்றே சொல்லியிருக்கிறார்கள். பல்லே... பல்லே!


p58c.jpg

dot1.jpg  ஒலிம்பிக்கில் 18 தங்கப்பதக்கங்கள் உள்பட 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கும் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், அப்பா ஆகியிருக்கிறார். முன்னாள் மாடல் அழகியான நிக்கோல் ஜான்சனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஃபெல்ப்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தீவிரமாகத் தயாராகிவரும் நிலையில், மகன் பிறந்திருப்பது எனக்குப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. இரண்டு மைக்கேல் ஃபெல்ப்ஸ்கள் சேர்ந்திருப்பதுபோல் உணர்கிறேன். இந்த ஒலிம்பிக்கில் நான் வாங்கப்போகும் தங்கப்பதக்கங்கள் எல்லாம் என் மகன் பூமர் ராபர்ட்டுக்குத்தான்’ எனச் சிலிர்க்கிறார் ஃபெல்ப்ஸ். தங்கமகன்!


p58d.jpg

dot1.jpg மாஸ்டர் பிளாஸ்டருன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் மெகா ஸ்டார். `இந்தியன் சூப்பர் லீக்' கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் கேரள அணியின் உரிமையாளர் சச்சின். இவருடன் கேரள அணியின் முதலீட் டாளர்களாக சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோரும் இணைந் திருக்கின்றனர். ‘கேரள அணிக்கு மும்பையைச் சேர்ந்த நானும், ஆந்திராவைச் சேர்ந்த சிரஞ்சீவி தலைமையிலான டீமும் உரிமையாளர் களாகி இருக்கிறோம் என்பது கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கும். நாங்கள் சர்வதேச தரத்தி லான கால்பந்து வீரர்களை உருவாக்கு வதை மட்டுமே குறிக் கோளாகக்கொண்டு செயல்படுகிறோம். இதன்மூலம் லாபம் சம்பாதிப்பது நோக்கம் அல்ல’ என்கிறார் சச்சின் டெண்டுல்கர். லெட்ஸ் ஃபுட்பால்!


p58e.jpg

dot1.jpg தமிழில் `இது நம்ம ஆளு'போல இந்தியில் `ஜக்கா ஜஸூஸ்'. டூ விட்டுப் பிரிந்த ரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் ஜோடி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 2014-ம் ஆண்டு தொடங்கியது.
ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ரன்பீருக்கும்-கத்ரீனாவுக்கும் முட்டிக்கொள்ள, படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. மீண்டும் சமசர ஒப்பந்தத்துக்குப் பிறகு 2015-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஷூட்டிங் மீண்டும் முடங்கியது. ‘இந்தப் படத்தில் வரும் காதல் காட்சிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நடிக்க முடியும்’ என இருதரப்புமே இயக்குநர் அனுராக் பாசுவிடம் சொல்லி ஓ.கே வாங்க, இப்போது மீண்டும் ஷூட்டிங் ஆரம்பம். காதல் கசக்குதய்யா!


p58f.jpg

dot1.jpg இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எப்போதும் பிடித்தது `டான்ட்' எனப் படும் விலை குறைவான பெங்காலி காட்டன் புடவைகள்தான். கால்களுக்கு ரப்பர் செருப்பு, தோள் பை என்ற அவரது அடையாளம் மாறவே இல்லை. ‘சொந்த வாழ்க்கையில் எளிமையைக் கடைப்பிடிப்பதால் தான், ஆட்சியையும் கட்சியையும் எளிமையானவர்களுக்கு, எளிமையாக என்னால் நடத்த முடிகிறது’ என்கிறார் மம்தா. வங்கத்து ராணி!


dot1.jpg ‘பாகுபலி’, ‘இஞ்சி இடுப்பழகி’ படங்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா வெயிட் போட்ட அனுஷ்கா, இப்போது மொத்தமாக 18 கிலோ எடை குறைந் திருக்கிறார். `நான் யோகா டீச்சர் என்பதால் எடையைக் குறைப்பதும் கூட்டுவதும் எனக்கு ரொம்ப சாதாரணம்' என்கிறார் ஸ்லிம் அனுஷ்கா. சைஸ் ஸீரோ!


p58g.jpg

dot1.jpg  நடித்துக்கொண்டே படிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், படித்துக் கொண்டே நடித்து மருத்துவ டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் சாய் பல்லவி. ‘ப்ரேமம்’ படத்தில் மலர் டீச்சராக உருக வைத்த சாய் பல்லவி, ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து டாக்டராகி இருக்கிறார். ‘சின்ன வயதில் இருந்தே யார் கேட்டாலும் `டாக்டராகப்போறேன்' என்றுதான் சொல்வேன். இடையில் நடிகையானாலும் படிப்பை நிறுத்தாமல் டாக்டர் பட்டம் வாங்கியதில் ரொம்ப ஹேப்பி’ என்கிறார் டாக்டர் சாய் பல்லவி. டீச்சர் இப்போ டாக்டர்!

vikatan

  • தொடங்கியவர்

முயல்களுக்கென ஒரு தீவு!

 
  • rabit1_2830420g.jpg
     
  • rabit_2830421g.jpg
     
  • rabit11_2830419g.jpg
     
  • rabit111_2830418g.jpg
     

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்யும் தீவாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒகுனோஷிமா. அந்தத் தீவு இன்று முயல்களின் சரணாலயமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல, ஒகுனோஷிமா என்ற தீவின் பெயர் ரேபிட் ஐலண்ட் (முயல் தீவு) என்றும் மாறிவிட்டது.

நூற்றுக்கணக்கான முயல்கள் வசிக்கும் இந்தத் தீவை நோக்கி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகிறார்கள். இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன முயல்கள். இங்கே வருகிறவர்கள் கண்டிப்பாக முயல்களுக்கான உணவுகளுடன்தான் வருகிறார்கள். கேரட், கீரைகள், கோஸ், ஆப்பிள், வாழைப்பழம், பருப்புகள் என்று விதவிதமான உணவைக் கொண்டுவருபவர்களை, முயல்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளன. உணவு கிடைக்காத காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தரும் உணவையே இவை நம்பி இருக்கின்றன. அதனால், மனிதர்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன முயல்கள்.

தீவில் இறங்கி, முயல்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தால் மனிதர்களை அவை சூழ்ந்துகொண்டுவிடுமாம். போட்டி போட்டுக்கொண்டு உணவைச் சாப்பிடுமாம். சுற்றுலாப் பயணிகள் தரையில் உட்கார்ந்தால் மடி, தலை மீது ஏறி ஜாலியாக உட்கார்ந்துகொண்டு சேட்டைகள் செய்யுமாம். சிலரை அப்படியே படுக்க வைத்து, அவர்கள் மீது ஏறி விளையாடி மகிழுமாம்.

முயல்களின் இந்த அளவுக்கு அதிகமான பாசத்தைக் கண்டு குழந்தைகள்கூட பயப்படுவதில்லை. முயல்களால் எந்தப் பிரச்சினையும் மனிதர்களுக்குக் கிடையாது அல்லவா? ஆனால், அப்படி விளையாடும்போது சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிடுமாம். அது மட்டும்தான் பிரச்சினை. உணவுப் பொருட்களுடன் யாராவது ஓடினால், நூற்றுக்கணக்கான முயல்கள் அவரைத் துரத்திக்கொண்டு வரும் காட்சியைப் பார்க்க அற்புதமாக இருக்குமாம்!

அதெல்லாம் சரி, ஒகுனோஷிமா தீவுக்கு முயல்கள் எப்படி வந்தன?

1929 முதல் 1945-ம் ஆண்டு வரை இந்த இடம், நச்சு வாயு தயாரிக்கக்கூடிய ரகசிய இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக 6 ஆயிரம் டன் நச்சு வாயு ராணுவத்தினரால் இங்கே உற்பத்தி செய்யப்பட்டது. வாயுவைப் பரிசோதனை செய்வதற்காக முயல்களை இங்கே கொண்டு வந்து, வளர்த்தார்கள். உலகப் போர் முடிந்த பிறகு, இந்தத் தீவில் இருந்த கட்டிடங்களை இடித்துவிட்டார்கள். அங்கே இருந்த மனிதர்கள் வெளியே அனுப்பிவிட்டார்கள். வரைபடத்தில் இருந்தே ஒகுனோஷிமா தீவு மாயமானது. ஆனால், முயல்கள் மட்டும் தொடர்ந்து அந்தத் தீவிலேயே இருந்தன என்கிறார்கள் சிலர். இன்னொரு கருத்தும்கூட உண்டு. 1971-ம் ஆண்டு இங்கே சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள், தாங்கள் கொண்டு வந்த 8 முயல்களை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார்களாம். அந்த முயல்கள் குட்டி போட்டுப் பெருகிவிட்டன என்கிறார்கள்.

முயல்கள் இந்தத் தீவுக்கு எப்படி வந்தன என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. முயல் தீவில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் மட்டும் அனுமதி கிடையாதாம். முயல்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்புதான் முயல் தீவு பற்றி வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது. அதற்குள்ளாகவே முயல் தீவு பிரபலமாகிவிட்டது. குறைந்த காலத்திலேயே ஏராளமான மனிதர்களைத் தீவை நோக்கி வரவழைத்துவிட்டன இந்த அழகிய முயல்கள்! அதே நேரம், இயற்கையில் திரியும் விலங்குகளுக்கு நாம் உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றைக் கொடுத்தால் அந்த விலங்குகள் இயற்கையாக இரை தேடும் பழக்கத்தை விட்டுவிட்டு மனிதர்களைச் சார்ந்து வாழ ஆரம்பித்துவிடும். ஆகவே, விலங்குகள் மீது நமக்கு உண்மையான அன்பிருந்தால் அவை வாழ்வதற்கான இயற்கையான சூழலை அவற்றுக்குத் தருவோம்!

tamil.thehindu

On 11/06/2016 at 1:14 PM, நவீனன் said:

இரும்புக்கை மாயாவி!

 

p52b.jpg

 

 

 

நவீனன் இந்த படத்தை பற்றி தேடிப்பார்த்தேன் - விபரம் கிடைக்கவில்லை. தெரிந்தால் இணைக்கவும். மைக்கலுக்கும் முகமத் அலிக்கும் இடையான உறவு பற்றி அறிய விருப்பம்.

  • தொடங்கியவர்
54 minutes ago, ஜீவன் சிவா said:

நவீனன் இந்த படத்தை பற்றி தேடிப்பார்த்தேன் - விபரம் கிடைக்கவில்லை. தெரிந்தால் இணைக்கவும். மைக்கலுக்கும் முகமத் அலிக்கும் இடையான உறவு பற்றி அறிய விருப்பம்.

ஜீவன்

நானும் தேடி பார்த்ததில் விபரம் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் இது போன்ற பல படங்கள் கிடைத்தது.

http://images.google.de/imgres?imgurl=http%3A%2F%2Fwww.feelnumb.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F02%2Fmuhammad_ali_michael_jackson_five_5.jpg&imgrefurl=http%3A%2F%2Fwww.feelnumb.com%2F2012%2F02%2F04%2Feveryone-wants-to-meet-muhammad-ali%2F&h=548&w=500&tbnid=sXBY119IcQfG6M%3A&docid=wDKhjXbekr6E3M&ei=iI1dV47lA6aV6ATSoLzoBw&tbm=isch&iact=rc&uact=3&dur=183&page=1&start=0&ndsp=40&ved=0ahUKEwiOyeWG9KLNAhWmCpoKHVIQD30QMwgkKAMwAw&bih=886&biw=1680

 

http://images.google.de/imgres?imgurl=http%3A%2F%2Fwww.billboard.com%2Ffiles%2Fmedia%2FMuhammad-Ali-and-michael-jackson-billboard-1240.jpg&imgrefurl=http%3A%2F%2Fwww.billboard.com%2Fphotos%2F7393569%2Fa-look-back-at-muhammad-alis-most-memorable-moments-with-musicians&h=847&w=1240&tbnid=-GjNJztE_CLzKM%3A&docid=sw8U7pUk6yLY5M&ei=iI1dV47lA6aV6ATSoLzoBw&tbm=isch&iact=rc&uact=3&dur=486&page=1&start=0&ndsp=40&ved=0ahUKEwiOyeWG9KLNAhWmCpoKHVIQD30QMwgqKAYwBg&bih=886&biw=1680

8 minutes ago, நவீனன் said:

ஜீவன்

நானும் தேடி பார்த்ததில் விபரம் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் இது போன்ற பல படங்கள் கிடைத்தது.

நன்றி.

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு 6 - அரங்கிலே மலர்ந்த சல்யூட் பாடல்!

 
 
விக்டோரியா திரையரங்கம்
விக்டோரியா திரையரங்கம்

‘உங்களுக்கு மிகவும் பிடித்த வெளிநாடு எது?' - மற்ற மாநிலங்களில் எப்படியோ. தமிழகத்தைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் என்று பலரும் சொல்வார்கள். ஏன் அப்படி?

மலாய், மேன்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு இணையாக, தமிழும் அங்கே ஆட்சி மொழி. அதனால்தான், அந்த நாட்டு அரசு, தனது தேசிய கீதத்தை, அதிகாரபூர்வமாகத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது.

படிப்படியாய் உயர்ந்தது

தனி நாடாக மலர்வதற்கு முன்பு சிங்கப்பூர், ஒரு மாநகரமாக இருந்தது. 1958-ல் சுபிர் சையது இயற்றி இசையமைத்த மலாய் மொழிப் பாடல் ஒன்று நகராட்சியின் விழாக்களில் இடம் பெற்றுவந்தது. அதன் பிறகு சிங்கப்பூர், 1959-ல் தன்னாட்சி பெற்ற பகுதியாக மாறியது. 1965-ல் முழு சுதந்திரம் பெற்ற தனி நாடாக ஆனது. இப்படி மாறியபோதும் அந்தப் பாடலே தேசிய கீதம் ஆனது.

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை வேண்டிப் போராட, மக்களை எழுச்சி பெறச் செய்ய, அந்தப் பாடலே உதவியது.

உருவானது கீதம்

சிங்கப்பூரில் பிரபலமாக இருந்தது விக்டோரியா திரையரங்கம். இது பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டு 1958-ல் திறக்கப்படவிருந்தது. திறப்பு விழாவையொட்டி, ‘அரங்கத்தின் கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக, புதிதாக ஒரு பாடல் எழுதி, இசை அமைத்து வழங்கினால் சிறப்பாக இருக்குமே' என்று திரையரங்க நிர்வாகம் கருதியது. அப்போது கேத்தே-கெரிஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பாடலாசிரியர், இசையமைப்பாளராக இருந்தார் சுபிர் சையது. அவரை அணுகியது நிர்வாகம். அவரும் ஒப்புக்கொண்டார். அந்தப் பாடலை எழுதி இசையமைத்து முடிக்க அவருக்கு ஏறத்தாழ ஓர் ஆண்டுக் காலம் ஆயிற்று.

எளிமையான பாடல்

1958 செப்டம்பர் 6 அன்று அரங்கத்தின் திறப்பு விழாவில் முதன்முறையாக இசைக்கப்பட்டது அப்பாடல். விழாவில் கலந்துகொண்டு சிங்கப்பூர் துணை மேயர் ஆங் பாங் பூன் இப்படிக் குறிப்பிட்டார்: “அத்தனை இன மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கிறது”.

நகர சபைக்கு நகர்ந்தது

துணைப் பிரதமர் தோ சின் சே நகரசபையின் பாடலாக இதைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு ஏற்ப, பாடல் வரிகளில் சில திருத்தங்கள் செய்து தந்தார் சுபிர் சையது. 1959 நவம்பர் 11 அன்று, சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது. 1959 நவம்பர் 30 அன்று, சட்டம் நிறைவேறியது. நாட்டுப் பாடல் ஆனது

தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்த ‘யூசுஃப் பின் இஷாக்' 1959 டிசம்பர் 3 அன்று முறையாக நாட்டு மக்களுக்கு பாடலை அறிமுகப்படுத்தினார். 1965 ஆகஸ்ட் 9 அன்று, மலேசியாவிடமிருந்து முழு சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக மலர்ந்த சிங்கப்பூர் இப்பாடலையே தனது தேசிய கீதமாக அறிவித்தது.

‘வரப்பு உயர, கோன் உயரும்' கதையாக, அரங்கத்திலிருந்து நகர சபைக்கு நகர்ந்த பாடல், நகரம் தனி நாடாக உயர்ந்த போது நாட்டுப் பாடலாகவும் உயர்ந்தது.

இப்பாடல் இப்படி ஒலிக்கும் (மலாய் மொழியில்)

(இரண்டாவது பத்தி, இரண்டு முறை பாடப்படுகிறது)

மரி கீ டாரா யத் சிங்கப்பூரா

ஸாம ஸம மெனுஜூ பஹாகியா

ஸிட்டா ஸிட்டா கீட்டா யாங் மூலியா

பேர்ஜயா சிங்கப்பூரா.

மாரிலா க்கீட்டா பேர்ஸரு

டெங்கன் ஸெமான்கட் யாங் பாரு

ஸெமூவா க்கீட்டா பேர்ஸரு

மஜூலா சிங்கப்பூரா

மஜூலா சிங்கப்பூரா

மாரிலா க்கீட்டா பேர்ஸரு

டெங்கன் ஸெமான்கட் யாங் பாரு

ஸெமூவா க்கீட்டா பேர்ஸரு

மஜூலா சிங்கப்பூரா

மஜூலா சிங்கப்பூரா.

தமிழாக்கம்

சிங்கப்பூர் மக்கள் நாம்

செல்வோம் மகிழ்வை நோக்கியே

சிங்கப்பூரின் வெற்றிதான்

சிறந்த நம் நாட்டமே.

ஒன்றிணைவோம் அனைவரும்

ஓங்கிடும் புத்துணர்வுடன்.

முழங்குவோம் ஒன்றிணைந்தே

முன்னேறட்டும் சிங்கப்பூர்

முன்னேறட்டும் சிங்கப்பூர்.

ஒன்றிணைவோம் அனைவரும்

ஓங்கிடும் புத்துணர்வுடன்.

முழங்குவோம் ஒன்றிணைந்தே

முன்னேறட்டும் சிங்கப்பூர்.

முன்னேறட்டும் சிங்கப்பூர்.

(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

ச்சோ ஸ்வீட்’ சொல்லவைக்கும் அசத்தல் அக்கட தேசத்து அழகிகள் இவர்கள்!

சாண்டல்வுட் - நிகிஷா படேல்

p32a.jpg

குஜராத்தி பொண்ணு, வளர்ந்தது எல்லாம் லண்டன் மண்ணு. பி.பி.சி-யில் பார்த்த வேலையை விட்டுவிட்டு  தெலுங்கு ‘புலி’யில் பவன் கல்யாணுக்கு ஜோடி சேர்ந்தார். நிகிஷாவின் அப்பாவும் பாலிவுட் சீனியர் நடிகர் தேவ் ஆனந்தும் நண்பர்கள். அவரின் தயாரிப்பில் தயாரான முதல் படம் ‘பியூட்டி குயின்’ ட்ராப் ஆனாலும் 2012-ல் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக கன்னடத்தில் நடித்த ‘நரசிம்மா’ படம் அதிரிபுதிரி ஹிட் ஆனது. அங்கிருந்து ஜிவ்வென கேரியர் எகிறியது. ‘டகோடா பிக்சர்’, ‘வரதநாயகா’, ‘நமஸ்தே மேடம்’, ‘அலோன்’ என கடகடவென படங்கள் கிடைக்க நல்ல மார்க்கெட் இப்போது நிக்கிக்கு. நிக்கி மனசுல நிக்கி!

மல்லுவுட் - பார்வதி நம்பியார்

p32b.jpg

நம் ஊர் நம்பியாருக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமில்லை. ஆனால் உருண்டைக் கண்ணால் வில்லன் நம்பியாரைப் போலவே மிரட்டி உருட்டுகிறார். மலையாள ஹிட் டைரக்டர் லால் ஜோஸின் ‘ஏழு சுந்தர ராத்திரிகள்’ படத்தில் திலீப்புக்கு ஜோடி இவர்தான். டி.வி-யில் காம்பியரிங், ரியாலிட்டி ஷோவில் அசத்தல் திறமைசாலி எனக் கலக்கியவர், லால் ஜோஸ் கொடுத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துவிட்டார். ‘ராஜம்மா அட் யாகூ’ படத்தை விட சைலன்டாய் வந்து நம்மை உலுக்கிய ‘லீலா’ படத்தின் லீலா கேரக்டர் இப்போது சேட்டன்கள் மனதை நிறைத்துள்ளது. இயக்குனர் மகேஷ் கேசவ்வின் ‘கோஸ்ட் வில்லா’ படம் அவரை இன்னும் பேர் சொல்ல வைக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த லீலா க்ளைமாக்ஸ் மெரசல்!

டோலிவுட் - அங்கனா ராய்

p32c.jpg

கொல்கத்தா ரசகுல்லா. தமிழில் கருணாஸுக்கு ஜோடியாக ‘ரகளைபுரம்’ படத்தில் கேரியரை ஆரம்பித்த மாடலிங் கேர்ள்! ‘வத்திக்குச்சி’யில் சின்ன ரோல், ‘மகாபலிபுரம்’ படத்தில் பிரதான ரோல் என வளர்ந்தவரை ‘ஸ்ரீமந்துடு’வின் ஃப்ரெண்ட் கேரக்டர் இப்போது ‘யாரு ஈ அம்மாயி?’ எனக் கேட்க வைத்துள்ளது. அப்புறமென்ன அக்கட தேசத்தில் அம்மணிக்கு ‘நா தேவுடு’ படத்தில் ஹீரோயின் ரோல். சூப்பர்லு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஜீவன் சிவா said:

நவீனன் இந்த படத்தை பற்றி தேடிப்பார்த்தேன் - விபரம் கிடைக்கவில்லை. தெரிந்தால் இணைக்கவும். மைக்கலுக்கும் முகமத் அலிக்கும் இடையான உறவு பற்றி அறிய விருப்பம்.

இனம் சம்பந்தமான உறவாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.:rolleyes:

3 hours ago, குமாரசாமி said:

இனம் சம்பந்தமான உறவாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.:rolleyes:

இருக்கலாம் இருவருமே தம் இனத்தை மிகவும் நேசித்தவர்கள்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

ஜூன் - 13

 

1373 :  இங்கிலாந்து, போர்த்துக்கல் நாடுகளுக்கிடையில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. உலகில் தற்போது அமுலில் உள்ள மிகப் பழைமையான கூட்டணி இது.

 

1525 : ரோமன் கத்தோலிக்க மதகுருக்களுக்கான விதிகளை மீறி, கத்ரினா வொன் போரா எனும் பெண்ணை மார்ட்டின் லூதர் திருமணம் செய்தார்.

 

1625 : இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், பிரெஞ்சு இளவரி ஹென்ரிட்டா மரியாவை திருமணம் செய்தார்.

 

74691565-004-0367A586.jpg1893 : அமெரிக்க ஜனாதிபதி குறோவர் கிளீவ்லேண்ட்டின் தாடையிலிருந்து புற்றுநோய் கட்டியொன்று இரகசிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் இறந்து 9 வருடங்களின் பின்னர்  1917 ஆண்டே இவ்விடயம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

 

1917 : முதலாம் உலக யுத்தத்தின்போது லண்டனில் ஜேர்மன் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சினால் 162 பேர் உயிரிழந்தனர்.

 

1934 : ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லரும் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியும்  இத்தாலியின் வெனிஸ் நகரில் சந்தித்தனர்.

 

1952 : பால்டிக் கடலின் மேல் பறந்துகொண்டிருந்த, சுவீடனின் இராணுவ விமானமொன்றை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்தியது.

 

1955 : சோவியத் யூனியனின் முதலாவது இரத்தினக்கல் சுரங்கமான மீர் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

1977 : அமெரிக்க கறுப்பினத்தவர்களின் சமவுரிமைக்காக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை கொலை செய்த ஜேம்ஸ் ஏர்ல் ரோய் சிறையிலிருந்து தப்பிச் சென்று 3 நாட்களின்பின் மீண்டும் கைதானார்.

 

1978 : லெபானானிலிருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெற்றன.

 

1982 : சவூதி அரேபியாவில் மன்னர் காலி;த் காலமானதையடுத்து அவரின் சகோதரர பஹ்த் புதிய மன்னரானார்.

 

1997 : இந்தியாவின் புது டில்லி நகரில் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 59 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 

2000 : வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் இல், தென்கொரிய ஜனாதிபதி கிம் டாயே ஜுங் ஆகியோர் வடகொரியாவில் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளின் தலைவர்களு க்கிடையிலான முதலாவது உச்சிமாநாடு இதுவாகும்.

 

2000 : பாப்பரசர் 2ஆம் அருளப்பர் சின்னப்பரை 1981 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்ட மெஹ்மெட் அலியை இத்தாலிய அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தது.

 

2002 : தென் கொரியாவில் அமெரிக்க இராணுவ வாகனமொன்றில் சிக்கி 14 வயதான ஒரு சிறுமி பலியானதால் அமெரிக்காவுக்கு எதிராக தென்கொரியாவில் பல மாதகாலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

 

2005 : 13 வயதான கெவின் அர்விஸோ எனும் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜோன்ஸன் விடுதலை செய்யப்பட்டார்.

 

2007 : ஈராக்கின் அல் அஸ்காரி பல்ளிவாசல் மீது இரண்டாவது தடவையாக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

 

2010 : இட்டோகவா எனும் எரிகல் பாகங்களைக் கொண்ட ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா பூமிக்குத் திரும்பியது.

 

2012 : ஈராக்கின் பல நகரங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 93 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13406939_1155715007820621_79594786355517

 
 
தெளிவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.