Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12240222_945585135490181_212720570613636

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் கரி கேர்ஸ்டன் பிறந்தநாள்.

பின்னாளில் இந்திய, தென் ஆபிரிக்க அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் விளங்கியவர்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கண்ணீரும் புன்னகையும்: பிபிசி பட்டியலில் இந்தியப் பெண்கள்

 

saniya_2629986f.jpg
 

அரசியலில் முதல், பொருளாதாரத்தில் கடைசி

ரசியல் பிரிதிநிதித்துவ அடிப்படையில் இந்தியாவில் அமைச்சர் பதவி வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 13% அதிகரித்திருக்கிறது. முன்பு இருந்ததைவிட ஆறு இடங்கள் முன்னேறி, 145 நாடுகளின் பட்டியலில் 108-வது இடத்தை அடைந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு வழங்கப்படும் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் அடிப்படையில் 139-வது இடத்தில் இந்தியா இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரே வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் ஊதியத்தில் காட்டப்படும் பாகுபாடுதான் இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் என்றும் உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியான தன்னிறைவு, ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரப் பங்கேற்பு என்ற நான்கு அம்சங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா அரசியல் பங்கேற்பில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

தந்தைக்கு மரியாதை

ர்வதேச சிதார் கலைஞர் அனோஷ்கா ஷங்கர் தனது புதிய இசை ஆல்பமான ‘ஹோம்’-ஐப் பிரபலப்படுத்து வதற்காக இந்தியா வந்துள்ளார். டிசம்பர் 12-ம் தேதியிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் கச்சேரியும் செய்யவுள்ளார். இந்தப் புதிய இசை ஆல்பம் தன்னைப் பொருத்தவரை மிகவும் உணர்வுபூர்வமானது என்கிறார் அனோஷ்கா. தனது தந்தையும் குருவுமான பண்டிட் ரவிஷங்கருக்கு செய்யும் சமர்ப்பணம் இந்த இசை ஆல்பம் என்கிறார் அவர். ஃப்யூஷன் இசையிலிருந்து மீண்டும் செவ்வியல் இசைக்கு இந்த ஆல்பம் வழியாகத் திரும்பியுள்ளார். ரவிஷங்கர் உருவாக்கிய ஜோகேஸ்வரி ராகத்தில் சாகித்தியங்களை இந்த ஆல்பத்தில் வாசித்துள்ளார். நான்கு முறை கிராமி விருதுபெற்றுள்ள அனோஷ்காவுக்கு, இந்த ஆல்பம் இன்னொரு வகையிலும் மிகவும் நினைவுகூரத்தக்கது. இந்த இசை ஆல்பம் பதிவுசெய்யப்பட்டிருந்தபோது, தனது மகன் மோகனைக் கருவுற்றிருந்ததாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகள் பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் அனோஷ்கா.

பிபிசி பட்டியலில் இந்தியப் பெண்கள்

பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் உலகின் 100 சாதிக்கத் தூண்டும் பெண்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஏழு ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். பாடகி ஆஷா போஸ்லே, டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா மற்றும் இந்தி நடிகை காமினி கவுஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் செல்வாக்கு மிகுந்த நூறு பெண்களின் பட்டியலை பிபிசி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. விவசாயப் பெண்மணி ரிம்பி குமாரி, தொழிலதிபர் ஸ்ம்ரிதி நாக்பால் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளனர். ரிம்பி குமாரி தனது தங்கை கரம்ஜித்துடன் சேர்ந்து தந்தையின் மறைவுக்குப் பின்னர் 32 ஏக்கர் நிலத்தைப் பொறுப்பெடுத்து விவசாயம் செய்தவர். ஸ்ம்ரிதி, காது கேளாத லட்சக்கணக்கான மக்களுக்குச் சைகை மொழி மூலம் கல்வி கற்பித்துவருபவர்.

http://tamil.thehindu.com/society/women/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7905500.ece

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 24
 
 

article_1448336247-ssss.jpg1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.

1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.

1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

1917 - விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1922 - துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.

1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

- See more at: http://www.tamilmirror.lk/159837/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.3APrnfn8.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12307448_945956448786383_555343510985378

Pocket Dynamo என்று புகழப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர் ரொமேஷ் களுவிதாரணவின் பிறந்தநாள்.
அதிரடி ஆரம்பங்களை வழங்கி, இலங்கையின் பல வெற்றிகளில் பங்களித்த 'களு' 1996இல் இலங்கை உலகக்கிண்ணம் வென்றபோது முக்கியமான வீரர்.

இப்போது இலங்கையின் பல்வேறு இளையவர் அணிகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.

  • தொடங்கியவர்

12299107_1026709687387821_60732998896139

Heavy traffic: ஸ்தம்பித்த சென்னை...

  • தொடங்கியவர்

12248097_945966142118747_362335464036056

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர், தேர்வாளர் - பின்னாளில் கென்ய அணியின் பயிற்றுவிப்பாளராக விளங்கிய பிரிஜேஷ் பட்டேலின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை'

 

மத்துவத்துக்கு அடையாளமாக சென்னை மழை, எந்த மத, இன வர்க்கபேதமின்றி, எவரையும் விட்டு வைக்காமல் படுத்தி எடுத்துவருகிறது. பஞ்சர் ஒட்டிய சைக்கிள் பயணியானாலும் சரி, பல லட்சம் மதிப்பிலான கார்களில் பயணம் செய்பவர்களானாலும் சரி எவரும் அதற்கு தப்பவில்லை...

parthipan%20600%201.jpg

'குடைக்குள் மழை'யை பார்த்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் குடைக்கு வெளியே, தான் பார்த்த மழையை பார்த்து அரண்டுபோய்விட்டார் போல... மழை குறித்த அவரது கவிதை இங்கே...

நீரோடைகலாகும்
தார் சாலைகள் !
தார்மீக பொறுப்பை
யார் ஏற்பார்களாம் ?
(இது ஆந்திராவில்
நடந்ததாக குறிப்பு )
நம்மூரில் மழையால்
கூவம் சுத்தமாச்சு - but
ஊரே கூவமாச்சு !

http://www.vikatan.com/news/miscellaneous/55505-.art

  • தொடங்கியவர்

12239199_945972568784771_482445829537855


தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீள் மக்கென்சியின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

இயந்திர லோகத்து சுந்தரி
=======================
பெய்ஜிங்கில் நடந்த உலக ரோபோ மாநாட்டில் பலரையும் கவர்ந்தது, அச்சு அசலாக ஒரு பெண்ணைப் போலவே படைக்கப்பட்டிருந்த இந்த ரோபோதான்.

ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னணி நாடாக திகழ வேண்டும் என்பது சீனாவின் திட்டம்.

6 hours ago, நவீனன் said:

'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை'


நீரோடைகலாகும்
 

நவீனன் இவ்வசனம் சரியானதா?
நீரோடைகளாகும் என்றுதானே வரவேண்டும்.

நவீனன் இது உங்கள் பிழையில்லை. 
பார்த்திபனின் பிழையா - சந்தர்ப்பம் குறைவு
இணையத்தளத்தின் பிழையா
எனது தமிழின் பிழையா

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

எனக்கு தெரியாது யார் பிழை என்று. ஆனால்  நீங்கள் எழுதியது சரி.

நீரோடைகளாகும் என்று தான் வரவேணும்.

15 minutes ago, நவீனன் said:

எனக்கு தெரியாது யார் பிழை என்று. ஆனால்  நீங்கள் எழுதியது சரி.

நீரோடைகளாகும் என்று தான் வரவேணும்.

நன்றி நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

happy birthday little களு

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: நவம்பர் 25
 

article_1448427480-juu.jpg1343: டேர்ஹேனியன் கடலில் ஏற்பட்ட சுனாமியினால் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரம், அமல்பி குடியரசு உட்பட பல  இடங்கள் அழிந்தன.

1667:  தற்போதைய அஸர்பைஜானிலள்ள ஷேமாகா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 80 ஆயிரம் பேர் பலியாகினர்.

1703: தெற்கு பிரிட்டனில் பாரிய சூறாவளியினால் 9000 பேர் பலி.

1839: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கோதாவரியில் சூறாவளி தாக்கியதால் சுமார் 3 லட்சம் பேர்பலி.

1950 - மக்கள் சீனக் குடியரசு ஐ.நா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.

1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப்  திரைப்படமாக வெளிவந்தது.

1963: சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1973: கிறீஸ் நாட்டில் ஜோர்ஸ் பபாடோபொலஸ் தலைமையிலனா அரசாங்கம் படையினரின் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது.

1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.

1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.

- See more at: http://www.tamilmirror.lk/159947/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.ilci8J6s.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அய்யோ... மெரினா பீச்சுக்கு இந்த நிலைமையா?!

 

''கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு'' - பார்த்திபன் சொன்ன டைமிங் கவிதை மெரினாவுக்குத்தான் பொருந்தும் போல. கூவத்தில் இருந்து மட்டுமல்ல, ஊரில் உள்ள குப்பையெல்லாம் வாரிச்சுருட்டி அடித்துவந்த மழைநீர், அனைத்தையும் மெரினாவில்தானே கொட்டும்? விளைவு, உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை மாநகராட்சி குப்பைத்தொட்டியாய் காட்சியளிக்கிறது.

mereena03.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

ரோடுவரை வந்த கடற்கரை நீர் உள்ளே இறங்க இறங்க, கரைகளில் குப்பைகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன. குப்பையே இல்லாமல் கிடந்தபோது ''மெரினாவை சுத்தம் செய்கிறோம்'' எனக் களமிறங்கும் அமைப்புகளே... உங்கள் சேவை இப்போதுதான் தேவை!

mereena01.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மரக்கட்டைகள், மருந்து பாட்டில்கள், உயிரிழந்த எலி, நாய் என அந்தப் பகுதியே துர்நாற்றம் அடிக்கிறது. இந்தக் குப்பையிலேயே மக்கள் குளிக்கின்றனர், குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர், காதலர்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

mereena02.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கரையிலேயே இவ்வளவு குப்பையென்றால் மெரினாவில் கலந்த கழிவுகளை நினைத்துப்பாருங்கள்?

http://www.vikatan.com/news/tamilnadu/55533.art

  • தொடங்கியவர்

12248081_946496118732416_294719936434769

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் அல்விரோ பீட்டர்சனின் பிறந்தநாள்

 
  • தொடங்கியவர்

நம் பெண்கள் பத்திரமாக இருக்கிறார்களா?

 

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினம்!

நவம்பர் 25 - இன்றைய தினத்தை, பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினமாக 1999-ல் ஐ.நா சபை அறிவித்தது. ஆனால், இன்றும் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தண்டிக்க வழிவகுக்கும் சட்டம் கூட இல்லை. இந்நிலைக்கு நாம் ஒவ்வொருவருமே காரணம்தான். நம் மனநிலையில் மாற்றம் வராதவரை, நிலைமையில் முன்னேற்றம் இருக்காது. உங்கள் மனநிலையை மாற்றும் சில அதிர்ச்சி தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

wommmmmmmm1.jpg

Data source: UN women.org

http://www.vikatan.com/news/miscellaneous/55587-elimination-violence-against-women.art

  • தொடங்கியவர்

எங்கே இருந்தெடா கிளம்பி வாறீங்க....:grin:

  • தொடங்கியவர்

பென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் !

 

benz1.jpgகார்ல் பென்ஸ் பெட்ரோலில் இயங்கும் காரை முதன்முதலில் உருவாக்கியவர் என்கிற பெருமை பெற்றவர் . அடிப்படையில் இவர் அப்பா ஊர்திகள் சார்ந்த பொறியியலில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு ரயில் விபத்தில் இவரின் இரண்டாம் வயதில் மரணமடைந்து விட, இவரின் அம்மா இவரை வளர்த்தெடுத்தார்.

இவர் மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றபின் பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்த்தார் ;பின் தானே வொர்க்ஷாப் நடத்தினார் அதில் பங்குதாரர் ஏமாற்ற, இவர் மனைவி பெர்த்தாவின் வரதட்சணை முழுக்க அக்கடனை அடைக்கவே போனது.பின் பல்வேறு ஆட்டோமொபைல் இன்ஜின்களை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கினார், இரண்டு ஸ்ட்ரோக் பெட்ரோலிய இன்ஜினை உருவாக்கினார். அதீத உழைப்புக்கு பின் நான்கு ஸ்ட்ரோக் பெட்ரோலில் இயங்கும் காரை பேடன்ட் செய்தார்; மரத்தாலான டயர்கள் பயன்படுத்தப்பட்டன. பெட்ரோல் தட்டுப்பாடு வேறு இருந்தது; பார்மசிகளில் இருந்து வாங்கித்தான் மக்கள் பயன்படுத்தினார்கள்.

benz.jpg



ஒரே ஒரு கியர் இருந்ததால் மலைகளில் ஏறுவது கடினமாக இருந்தது, இவர் மனைவி இருநூறு கிலோமீட்டர் தூரத்துக்கு தைரியமாக காரை எடுத்துக்கொண்டு அதில் ப்ரேக் லைனிங் சேர்த்து, கூடவே ஒரு ஷு தைப்பவரிடம் சொல்லி ப்ரேக் ப்ளாக்களில் லேதரை சேர்த்து தைக்க சொல்லி இரண்டு பிள்ளைகளோடு போய் மீண்டும் வீடு வந்து சேர்ந்தார் ;அது இக்காரை பிரபலப்படுத்தியது. இதனாலேயே இன்னுமொரு கியரை சேர்த்து காரை மலைகளிலும் ஓட்டுகிற மாதிரி மாற்றினார் பென்ஸ். சில வருடங்களுக்கு பின் பொருளாதார மந்தநிலை காரணமாக டையாம்லர் பென்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்தன ;அப்போதிலிருந்து இன்றைக்கு பார்க்கும் மூன்று நட்சத்திர முத்திரை உருவானது, பெட்ரோலில் இயங்கும் முதல்காரை விற்பனைக்கு கொண்டு வந்த முதல் மனிதர் பிறந்த தினம் இன்று.

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=35273&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

12299230_946491195399575_432234195737321

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் 1992இல் உலகக் கிண்ணத்தை வென்றபோது தலைவராக விளங்கியவரும், உலகின் தலைசிறந்த சகலதுறைவீரருமான இம்ரான் கானின் பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

12249993_1027448410647282_86129929003181

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women)

உலக அளவில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 26
 
 

article_1448508012-1.jpg1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி.


1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.


1949: டாக்டர் பி.ஆர். அம்பேத்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பை இந்திய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.


1950: கொரிய யுத்ததத்தில் தென்கொரியா மற்றும் ஐ.நா. படைகளுக்கு எதிராக சீனா பாரிய தாக்குதல்களை ஆரம்பித்தது.


1954: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்.


1965:அஸ்டெரிஸ்-1 செய்மதியை சஹாரா பாலைவனத்தில் வைத்து ஏவியதன் மூலம் செய்திமதியை ஏவிய மூன்றாவது நாடாகியது பிரான்ஸ்.

 

1983: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 6800 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

 

1990: விண்கலங்களை ஏற்றிச்செல்லும் டெல்டா –ii ரொக்கட் தனது முதல் பறப்பை ஆரம்பித்தது.

 

2008: மும்பையில் தொடர் தாக்குதல்களில்  175 பேர் பலி, 300 இற்கும் அதிகமானோர் காயம்.

- See more at: http://www.tamilmirror.lk/159990/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.Kc9jLTTN.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12291894_1005068512889188_28782281852401

1965 ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி சிங்கப்பூர் உருவான போது அந்த நாட்டை இந்தியா அங்கீகரித்தது. இதுகுறித்த செய்தியை சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் பாரம்பரிய தமிழ் பத்திரிகையான தமிழ்முரசு முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நாளிதழின் நகலை பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ நினைவு பரிசாக வழங்கினார்.

 

https://www.facebook.com/leehsienloong/photos/a.1005068486222524.1073742221.125845680811480/1005068512889188/?type=3

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மில்க் மேன் வர்கீஸ் குரியன்!
 
தடைக்கல்லும் படிக்கல்லே!ச.ஸ்ரீராம்

 

தங்களுடைய பிரச்னைகளுக்கு வழி காண்பதற்கே ஒவ்வொருவரும் படாதபாடு படும்போது மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் ஒருசிலர் மட்டுமே. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வெண்மை புரட்சியை ஏற்படுத்திய வர்கீஸ் குரியன்.

1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்த குரியன், தனது கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்தார். அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு வந்த குரியன், குஜராத் அரசின் பால்வளத் துறையுடன் இணைந்து ஆய்வு செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கொஞ்சநாளில் அந்த வேலை பிடிக்காமல், வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று விலக நினைத்தார்.

nav82a.jpg

அப்போதுதான் அவரது நண்பர் திருபுவன்தாஸ் படேல், பால் கொண்டுவரும் மக்களின் துன்பத்தை நேரடியாக எடுத்துக்காட்ட, வேலையை விடும் முடிவைக் கைவிட்டார். குரியனுக்கு பால் என்றாலே பிடிக்காது. ஆனால், இந்த துயரங்களைப் பார்த்தபின் இவர்களுக்கு என ஒரு தனிச் சந்தையை அமைக்க கனவு கண்டார். அதற்கு தடையாக இருந்த விஷயம், இந்தியாவின் பால் உற்பத்தி. இங்கு உற்பத்தியாகும் பாலை பன்னாட்டு நிறுவனங்கள்  கொள்முதல் செய்ய வலியுறுத்தினார். ஆனால், அனைத்திலும் தோல்வியையே கண்டார்.

தொழில்நுட்ப ரீதியாக மேம்படும்போதுதான் பால் உற்பத்தியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பினார். ஆனந்த் பால் கூட்டுறவு நிறுவனத்தை (அமுல்) ஆரம்பித்தார். இதன்மூலம் பால் உற்பத்தி யாளர்கள் தங்கள் பாலை தாங்களே சந்தைப்படுத்தி விற்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். பால் மட்டும் விற்றால் லாபம் பார்க்க முடியாது. பால் பொருட்களையும் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததால், அதற்கான பயிற்சிகளை அளித்து, அரசே இந்த நிறுவனத்துக்கு உதவும் அளவுக்கு வெண்மை புரட்சியை ஏற்படுத்தினார்.

இன்றைக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங் களில் ஒன்றாக மாறியுள்ள அமுல் சர்வதேச நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக உருவாகி இருக்கிறது என்றால், காரணம் குரியன்தான். ஒரு தனிமனிதன் தன்முன் நிற்கும் தடைகளைக் கண்டு பயந்து ஒதுங்காமல், அவற்றைத் தாண்டி வந்தால் ஒரு தேசமே பயனடையும் என்பதற்கு இந்த மில்க் மேன் ஒரு மிகச் சிறந்த உதாரணம்!

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=101027&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

5.jpg

  • தொடங்கியவர்

கேரளாவில் ரூ. 55 கோடியில் கல்யாணம்: 23 கோடியில் திருமண செட்! ( வீடியோ)

 

ஹ்ரனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்.ஆர். குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை. கேரளாவை சேர்ந்த இவருக்கு, வளைகுடா நாடுகளில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

          

இவரது மொத்த சொத்து மதிப்பு 19 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஆகும். ரவி பிள்ளையின் மகள் ஆர்த்திக்கும் கொச்சியை சேர்ந்த ஆதித்யா விஷ்ணுவுக்கும் கொல்லத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

இதற்காக கொல்லத்தில் உள்ள அஷ்ராம் மைதானத்தில், ரூ. 23 கோடி செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இதனை 'பாகுபலி' பட புகழ் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் அமைத்துள்ளார். சுமார் 30 ஆயிரம் விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இந்த திருமணத்திற்காக ரூ.55 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.


சவுதி, பஹ்ரைன், அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை சேர்ந்த அரச குடும்பத்தினர், கேரள முதல்வர் உம்மண் சாண்டி போன்றவர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

http://www.vikatan.com/news/india/55621-spends-crore-daughters-wedding.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.