Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நகரும் புத்தனின் நிழல்கள்!

 
1_3060032f.jpg
 

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய 60-ம் ஆண்டு இது. அதையொட்டி, அம்பேத்கரியர்கள் நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்கள், அம்பேத்கரிய மாநாடுகள், ஓவியக் கண்காட்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். அந்த நிகழ்வுகளின் மூலம் அம்பேத்கரின் கருத்துகளையும், பவுத்த மத மேன்மைகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

8_3060025a.jpg

அப்படி ஒரு நம்பிக்கை தரும் நிகழ்வு சமீபத்தில் நாக்பூரில் நடந்திருக்கிறது. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய 60-ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் அங்கு அம்பேத்கரியர்களால் ‘லிபரேஷன் 60’ என்ற தலைப்பில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக ‘அம்பேத்கரிய பவுத்த ஓவியர்’ என்று அழைக்கப்படும் ஓவியர் சவி சாவர்க்கரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

7_3060026a.jpg

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கரோபா மைதான் எனும் இடம், காலம் காலமாக அம்பேத்கரியச் செயல்பாடுகளுக்குப் பெயர் போன பகுதி ஆகும். அங்கு 1961-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மகர் இனத்தில் பிறந்தார் சவிந்தர் சாவர்க்கர் எனும் சவி சாவர்க்கர். 1956-ம் ஆண்டு அம்பேத்கரின் பெருமுயற்சியால் பலரும் புத்த மதத்தைத் தழுவினர். அவர்களில் சவி சாவர்க்கரின் குடும்பமும் ஒன்று.

6_3060027a.jpg

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்த சவி சாவர்க்கர், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கலையில் பட்டம் பெற்றார். பின்னர் பரோடா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புப் படித்தார். அப்போது அவர், அங்கிருந்த‌ தேவதாசிகள் குறித்து வரைந்த ஓவியங்கள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். 1970 மற்றும் 80-களில் பரோடாவில் தங்கியிருந்த கேரள ஓவியர்களால் ‘நரேட்டிவ் மூவ்மென்ட்’ எனும் ஓவிய பாணி காத்திரமாக வளர்ந்து வந்தது. அப்போது பல ஜென் குருக்களும் ஓவியம் வரைவதில் ஈடுபட்டுவந்தார்கள். அவை எல்லாம் சேர்ந்து சவி சாவர்க்கரின் மேல் தாக்கம் செலுத்த, அவர் பவுத்த அழகியல் தொடர்பான ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.

5_3060028a.jpg

தன் ஓவியங்களுக்குள் தலித் பிரச்சினைகளைக் கொண்டுவந்த முதல் ஓவியர் இவர்தான். தன்னுடைய தலித் பவுத்த ஓவியங்கள் குறித்து சவி சாவர்க்கர் கூறும்போது "புத்தர் என்பவரைக் கண்களை மூடி அமர்ந்திருக்கும் படிமமாக நான் பார்க்கவில்லை. விழிப்புடன், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, அன்பை போதித்து, மீண்டும் ஒருமுறை ஞானத்தை வழங்குபவராகப் பார்க்கிறேன்" என்கிறார். அவரின் ஓவியங்கள் சில, உங்கள் பார்வைக்கு...

4_3060029a.jpg

3_3060030a.jpg

2_3060031a.jpg

 

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

 

தற்காலிகமாக மௌனிக்கும் பிக் பென் கடிகாரம்

உலகப் புகழ்பெற்ற லண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும்.

கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய மராமத்து பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.

உலகத்தின் பல இனங்களையும் புராதன சின்னங்களையும் மதங்களையும் அழித்தொழித்த அல்லது அழிக்க முயன்ற ஒரு சாம்ராம்சியத்தின் நினைவுச்சின்னம் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
அரசபரம்பரை களவெடுத்ததை நான் இதிலை சேர்க்கேல்லை. tw_blush:

  • தொடங்கியவர்

http://srirangaminfo.com/img/greetings/happy_diwali_greetings_tamil.jpg

  • தொடங்கியவர்

ஆபத்தான மலையைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்!

china2_13029.jpg

டிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் எப்பேர்பட்ட தடங்கலையும் தகர்த்துவிட்டு பள்ளிக்குச் சென்று படிக்கலாம் என நிரூபித்து வருகிறார்கள், சீனாவைச் சேர்ந்த சிறுவர்கள். தென்கிழக்குச் சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் 2,624 அடி உயரத்தில் அமைந்துள்ளது Atule'er கிராமம். இங்கு சுமார் 72 குடும்பங்கள்  வசித்துவருகின்றன.

 

இவர்களுக்குத் தொழில் விவசாயம். எல்லோரும் மிளகாய் பயிரிட்டு வருகிறார்கள். இந்தக் கிராமத்தை வெளி உலகுடன் தொடர்புகொள்ளச் செய்ய உதவுகிறது, இரும்பு ஏணி. தாங்கள் பயிரிட்ட மிளகாயை சந்தைக்குக் கொண்டுசெல்லவும் இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் இந்த இரும்பு ஏணி மூலம்தான் கீழே இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்குமுன் கிராமத்து மக்கள் வெளி ஊர்களுக்குச் செல்ல, மூங்கில் ஏணிகள் மூலமே கீழே இறங்கிச் சென்றுகொண்டிருந்தனர். ஏணியில் இறங்கும்போது, சில நேரம் தவறி விழுந்து, பலர் உயிரிழந்துள்ளார்கள்.

 

china5_13104.jpg

பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக கிராமத்து மக்களே தற்போது 1,500 இரும்புப் பைப்களால் ஆன ஏணியால் பாதை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மலைக் கிராமத்து மக்கள் கீழேயும் மேலேயும் சென்று வர, சுமார் இரண்டு மணி நேரம் ஆகிறது. 15 குழந்தைகள் இங்கிருந்து Zhaojue மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். மாணவர்கள் கீழே இறங்கும்போதும் ஏறும்போதும் கூடவே பாதுகாப்புக்கு பெற்றோர்களும் செல்கிறார்கள்.

china4_13331.jpg

தினமும் இந்த ஆபத்தான பாதையைக் கடக்கமுடியாததால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பள்ளியிலேயே தங்கிவிட்டு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த மாணவர்கள்  6 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இப்படி ஆபத்தான நிலையில் கிராமத்து மக்கள் மற்றும் குழந்தைகள் கீழே இறங்கி ஏறவேண்டியுள்ளது. மலை உச்சியில் இருக்கும் இந்த  கிராமத்துக்கு சாலை அமைக்க சீன அரசாங்கம் திட்டம் தீட்டியது. ஆனால், சாலை அமைக்க செலவு அதிகம் என்பதாலும், குறைவான மங்கள்தொகையே இருப்பதாலும் சாலை அமைக்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

இவ்வளவு ரிஸ்க் எடுத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பாராட்டவேண்டும். இதேபோன்று மற்ற ஊர்களிலும் ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்து பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை 'க்ளிக்' பண்ணுங்கள்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியது யார் தெரியுமா?

28diwali1_16568.jpg

அறியாமை எனும் இருள் நீங்கி அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்துவதே தீபாவளித் திருநாள்.  புத்தாடை, பட்சணங்கள், பட்டாசுகள் மட்டுமின்றி, நாம் அறிந்து கொண்டாடவேண்டிய இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் உண்டு இந்த பண்டிகை நாள் குறித்து.

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.

28diwali2_16486.jpg

 

தமிழகத்தில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்களாம். அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். அவர் தோன்றிய நாளே தீபாவளி.

28diwali3_16441.jpg


சிவபெருமானின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ரங்கத்தில் திருவரங்கநாதர் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று திருவரங்கனுக்கு விசேஷமாக `ஜாலி அலங்கார’ வைபவம் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.
குஜராத் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டு மகிழ்வர்.

 தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

28diwali4_16127.jpg

 

 புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

 உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தன், ‘சாகாஸ்’ என்பவர்களை வென்று, வாகை சூடிய நாள் தீபாவளி என்பர்.

 வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 பீகார் மாநிலத்தில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கின்றனர். இந்த விழாவுக்கு ‘தன்தெராஸ்’ என்று பெயர்.
 பீகாரில் ஒரு பிரிவினர், மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகன் தனது திக் விஜயத்தை முடித்து, நாடு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
 மத்தியப்பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாகக் கருதுகின்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை.

 உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக... ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அன்று புத்தாடை மற்றும் ஆபரணம் வாங்கும் வழக்கமில்லை.

28diwali5_16558.jpg


 கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. பூச்சட்டி கொளுத்தும்போது, எவரது வாணம் அதிக உயரத்தில் சென்று பூக்களைக் கொட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவர்!

 மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.
 நேபாளத்தில், தீபாவளியை ‘தீஹார்’ திருவிழாவாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிராணிகளுக்கு உணவு படைப்பார்கள்.


எண்ணெய்க் குளியல் எப்போது?

சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக் கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், ‘தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூற வேண்டும்’ என்றும் ‘அன்று எண்ணெயில் லட்சுமியும், தண்ணீரில் கங்காதேவியும் உறையவேண்டும்’ என்றும் பகவானிடம் வேண்டி வரம்பெற்றாள் பூமாதேவி.

 

 

 

எனவே தீபாவளி திருநாளில், அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம். அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6.00 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15-மணிக்கு நீராட வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்

1,260 கார்கள் தீபாவளி போனசாக வழங்கிய தொழிலதிபரின் ‘அடடே’ பின்னணி!

car%20_10400.jpg

சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா. சுமார் ரூ.6 ஆயிரம் கோடி டர்ன் ஓவர் கொண்ட நிறுவனம் இது. இந்த நிறுவனம் 71 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தொழிலதிபர்களில் சவ்பாஜி தோலாக்கியா சற்று வித்தியாசமானவர். ஒரு முறை அமெரிக்காவில் எம்பிஏ படித்த மகனுக்கு வெறும் ரூ. 7 ஆயிரம் கொடுத்து அவசியமானதைத் தவிர வேறு எதற்காகவும் செலவழிக்கக் கூடாது. கேரளாவுக்கு சென்று பிழைத்துக் கொள் என கூறி விட்டார்.

கேரளா சென்ற  மகனுக்கு ஒரு சில கண்டிசன்களையும் சவ்ஜிபாய் போட்டிருந்தார். 'மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது எனது மகன் என்று யாருக்கும் தெரியக் கூடாது' எனவும் கட்டளையிட்டிருந்தார். தந்தையின் கட்டளையை ஏற்று மகன் த்ரேவியா தோலாக்கியா கேரளாவில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்தார். மக்கள் வேலையில் சேர்வதற்காக கஷ்டப்படுவதையும் ஏழைகளின் கஷ்டத்தையும் மகன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சவ்ஜிபாய் மகனுக்கு இத்தகையை சோதனை நடத்தினார். இந்த செய்தி வெளியானபோது, பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

தனது மகனை மட்டுமல்ல தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரையும் பிள்ளைகளாக கருதுவதும் சவ்ஜிபாயின் வழக்கம். அதனால், ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை சவ்ஜிபாய் நோக்கமாக வைத்துள்ளார். இவரது நிறுவனத்தில் 5,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தீபாவளி போனசாக கார்கள் மற்றும் பிளாட்டுகளை வழங்கப்படும் என சவ்ஜிபாய் அறிவித்தார்.

சொன்னபடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனசாக கார்கள், பிளாட்டுகளை வழங்கி வருகிறார். நிறுவனத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணிபுரிபவர்களை தேர்வு செய்து தீபாவளி பண்டிகை போனசாக கார்கள், பிளாட்டுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு 1,260 கார்கள், 400 பிளாட்டுகளை தனது ஊழியர்களுக்கு போனசாக வழங்கி அசத்தியுள்ளார் தோலாக்கியா. இது தவிர வைர நகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்டுள்ள பிளாட்டுகள் பல லட்சம் மதிப்புக் கொண்டவை. ஆனால், அந்த பிளாட்டுகளை ரூ.15 லட்சத்துக்கு தோலக்கியா வழங்கியுள்ளார். ஒவ்வொரு பிளாட்டும் 1,100 சதுர அடி கொண்டவை. அந்த நிறுவனத்தின் வீடு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த பிளாட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் 11 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல் கார் லோனுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனம் 5 ஆயிரம் வழங்கும்.

இதுகுறித்து சவ்ஜிபாய் தோலாக்கியா கூறுகையில், ''திறமையின் அடிப்படையில் இந்த ஆண்டு 1,716 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வீடு வைத்திருப்பவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 491 கார்களும் 200 பிளாட்டுகளும் வழங்கப்பட்டன. இதற்காக நிறுவனம் ரூ. 50 கோடி செலவிட்டுள்ளது. இந்த திட்டம் ஊழியர்களிடம் நேர்மையான போட்டியை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது. எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சொந்த வீடும் காரும் இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அடுத்த 5 ஆண்டுகளில் எனது ஊழியர்கள் அனைவருமே சொந்த வீட்டுக்கும் காருக்கும் உரிமையாளர்களாக இருப்பார்கள். ஊழியர்கள் தங்கள் உழைப்பைக் கொட்டிக் கொடுக்கின்றர். அவர்களது உழைப்புக்கு நிறுவனம் கைமாறு செய்கிறது' என்கிறார்.

சவுராஸ்ட்ரா பகுதியில் அம்ரேலி மாவட்டத்தில் துகாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சவ்ஜிபாய். தனது மாமாவிடம் கொஞ்சம் பணம் கடனாக வாங்கி இந்த வைர ஏற்றுமதி தொழிலைத் தொடங்கினார். இவரது நிறுவன ஊழியர்கள் சவ்ஜிபாயை  மாமா என்றே அழைக்கின்றனர்.

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: தல இல்லாத தீபாவளி

 
meme_3060045f.jpg
 

meme_2_3060046a.jpg

 

meme5_3060042a.jpg

meme4_3060043a.jpg

meme3_3060044a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 2 Personen
 

போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் - சிறப்பு பகிர்வு

போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.

முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும்
வேகப்படுத்தியது.

உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும்
பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான் தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில் கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.

யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து
கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.

சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? "என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?". அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது.

vikatan

  • தொடங்கியவர்

 

“தண்ணீர் சண்டை” - காணொளி
ஆசியாவில் உருவெடுக்கும் தண்ணீா சண்டை

BBC

  • தொடங்கியவர்

 

கிளிக் - தொழில்நுட்ப காணொளி

ஓட்டுநரில்லா டிரக் வண்டிகள், விண்டோஸ் 10ல் மேம்பட்ட வசதிகள், ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய வையர்கள் இல்லாத ஈயர் போன்கள் ஆகியவை அடங்கிய காணொளி

  • தொடங்கியவர்

“வெடி” வெடிக்காத வேப்பம்பட்டி..! - அசத்தும் அழகான கிராமம்

IE01BAT1_11558.jpg

ட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமமே வெடியைத் தவிர்த்து தீபாவளியைக் கொண்டாடுகிறது.  காரணம், வெளவால்.!

தருமபுரியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேப்பம்பட்டி கிராமம். அந்த ஊருக்கே பிரதானமாக ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் வசிக்கின்றன. அந்த வெளவால்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளியானாலும் வெடியை வெடிக்காமல் இருக்கிறார்கள் வேப்பம்பட்டி மக்கள். வெளவாலுக்காக யாராவது வெடி வெடிக்காமல் இருப்பார்களா.? என்று அசால்ட்டாக  கேட்டால், “ஆலமர அம்மன் கோவில்” அதிசயத் தகவல்களை அள்ளி வீசுகிறார்கள்.

அங்கு உள்ள அம்மன்கோவிலில் பூசாரியாக இருக்கும் குப்பம்மாளிடம் வெடி வெடிக்காத வரலாறு பற்றி கேட்டோம் “பல தலைமுறைகளாக எங்க கிராமத்துல, வெடி வெடிக்கிறதே இல்லை. இந்த ஆலமரத்துல குடியிருக்கிற ஆயிரக்கணக்கான வெளவால்கள் அம்மனின் குழந்தைங்க என்பது எங்க முன்னோர்களுடைய நீண்டகால நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட. வெளவாலுக்கு ஏதாவது பிரச்னை கொடுத்தால், அது கிராமத்துக்கே பெரிய ஆபத்தாக மாறிடும்.

இப்படித்தான் ஒரு வருஷம் ஒருத்தர் வெளவால் மேல கல்லைத் தூக்கி அடிச்சிட்டார். அம்மனுக்கு கோபம் வந்துருச்சி. பல வருஷமா மழை தண்ணி கொடுக்காம ஊரையே பஞ்சத்துல திண்டாட வச்சிட்டா அம்மன். அப்புறம், ஏதேதோ பரிகாரமெல்லாம் பண்ணி, அம்மனை சாந்தப்படுத்தினாங்க. அதுலயிருந்து அம்மனின் குழந்தைங்களை (வெளவால்கள்) யாரும் தொந்தரவு செய்றது கிடையாது. இதை சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கும் சொல்லி வளர்ப்பதால் அவுங்களும் புரிஞ்சிகிட்டு வெடி வெடிக்கணும்னு அடம்பிடிக்கிறது இல்லை. அம்மன் குத்தம் ஆகிடக்கூடாது இல்லையா" என்கிறார்.

அந்த ஊரில் வாழும் படித்தவர்களிடம் விசாரித்தால் “ இந்த நம்பிக்கை ஊர்முழுக்க இருக்கு. அதை நாங்களும் ஏத்துக்குறோம். ஏன்னா, பல கிராமத்துல வெளவால்களே இல்லாம அழிஞ்சிருச்சி. வெளவால்கள் இருந்தால், அதன்மூலம் அந்த பகுதிக்கான உரங்கள் நிறைய கிடைக்கும். வெளவால்களால் பல நன்மைகள் இருக்கிறது. வெடியால் தீமைகள்தான் வருகிறது. அம்மன் பெயரைச்சொல்லி நல்லது நடந்தால் வரவேற்க வேண்டியதுதானே" என்கிறார்கள். இதேபோல், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்துக்கு அடுத்துள்ள அனுமந்தபுரம் கிராமத்திலும், சிவகங்கையில் ஒருய் கிராமத்திலும் வெளவாலுக்காக வெடி வெடிக்காமல் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

52p1.jpg

* கானுயிர் புகைப்படக் கலையின் ஆஸ்கர் எனக் கருதப்படும் விருது, பிபிசி-யின் வைல்ட் லைஃப் 52p2.jpgபோட்டோகிராஃபர் விருது. 90 நாடுகளில் இருந்து 50 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த ஆண்டுக்கான போட்டியில், பெருமைக்குரிய இந்த விருதை வென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த நயன் கனோல்கர். அவருடைய `The Alley cat' என்ற புகைப்படத்துக்கு இந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. மும்பையின் சுற்றுப்புறங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுற்றும் சிறுத்தையை, நான்கு மாதங்கள் தேடி அலைந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் நயன். மகிழ்ச்சி!


52p3.jpg

* ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பைவிட அவரது ஒன்றரை வயது பேரனின் சொத்து மதிப்பு அதிகம் என்பதுதான் தெலுங்கு உலகில் பரபரப்புப் பட்டாசு. மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் சொத்து வெறும் 3.74 கோடி ரூபாய்தான் என, கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவான்ஷின் சொத்து மதிப்பு 11 கோடி ரூபாய். நல்லா சொல்றாங்கப்பா டீடெய்லு!


52p4.jpg

* அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வமான கடைசி பார்ட்டியை நடத்தி முடித்திருக்கிறது பராக் ஒபாமா - மிச்சேல் ஜோடி. பார்ட்டியை கலர்ஃபுல்லாக்கி உடையால் வைரல் ஆனவர் மிச்சேல் ஒபாமா. பார்ட்டியின் சிறப்பு விருந்தினர்களாக இத்தாலி பிரதமரும் அவரது மனைவியும் வர, சர்ப்ரைஸாக இத்தாலிய உடையில் மிச்சேல் வர... அசந்து மிரண்டது கூட்டம். உடையின் விலை ஜஸ்ட் எட்டு லட்சம் ரூபாய்தானாம். நீங்க நடத்துங்க!


52p5.jpg

* ``பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆவதுதான் எனது லட்சியம். பெனாசிர் பூட்டோ எப்படி இரண்டு முறை பிரதமர் பதவி வகித்து பெண்களுக்கு நன்மை செய்தாரோ, அவரைப் போன்று நானும் சிறுமிகள் மற்றும் பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பேன். இதுமட்டும் அல்லாமல், உலக அளவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் என் முழுக் கவனத்தையும் செலுத்துவேன்'' என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் மலாலா யூசுஃப்சாய். ஆனால், அவர் பெனாசிர் பூட்டோவைப் புகழ்ந்து பேசியிருப்பதால், `அவர் எங்கள் கட்சியில்தான் சேருவார்' என பாகிஸ்தான் மக்கள் கட்சியும், `அவருக்கு பிரதமர் நவாஸ் ஷெரிஃபைப் பிடிக்கும்' என ஆளும் கட்சியும் மோத ஆரம்பித்துவிட்டன. அரசியல் ஆட்டம் ஆரம்பம்!

vikatan

  • தொடங்கியவர்

மார்ஸ் செட்டப்பில் ஒரு புகைப்படம்

அமெரிக்காவின், வடக்கு டக்கோட்டா பல்கலைக்கழகத்தில் இருக்கும், கென்னடி விண்வெளி மையத்தில், மார்ஸ் கிரகத்தில் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி, ஒரு பெரிய கண்ணாடி பெட்டி செய்யப்பட்டு, அதில் முன்னோட்ட ஆய்வுகள் செய்யப்பட்ட போது எடுத்த ஒரு புகைப்படம் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

14885764_1201203686592895_1158452052_n_2

அதாவது, மார்ஸ் கிரகத்திற்கு போகும் முன்னர் விஞ்ஞானிகள் இந்த கண்ணாடி பெட்டியில் முன்னோட்டம் பார்ப்பார்கள். அப்படி, பார்க்கும் போது தான், மேலே இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது. மிக தத்ரூபமாக இந்த புகைப்படம் அமைந்ததால், பரவலாக பேசப்பட்டு வருகிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியிடப்பட்டது.

vikatan

  • தொடங்கியவர்

வண்ண மழை, மீத்தேன் மழை, மீன் மழை!

  • rain_2_3049857g.jpg
     
  • rain_3049855g.jpg
     
  • rain_3_3049856g.jpg
     

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கப் போகிறது. குழந்தைகளுக்கு மழை என்றாலே குஷிதான்! கன மழை என்றால் லீவு கிடைக்கும். அதையும் தாண்டி மழைக்கு முன்பாக மண்ணில் எழும் வாசம், தெருக்களில் புரண்டோடும் வெள்ள நீர், அதில் காகிதக் கப்பல் விடும் வாய்ப்பு, மழை ஓய்ந்ததும் மரத்தடியில் கிளைகளை அசைத்து நனைவது, திடீரெனக் குறுக்கிடும் மழையில் நனையும் சந்தோஷம். இப்படி மழை அழைத்து வரும் சுவாரசியங்கள் ஏராளம். மழை குறித்த சுவாரசியங்கள் இன்னும்கூட நிறைய உண்டு. அவற்றையும் பார்ப்போமா?

> நீர்த்துளிகளாகப் பெய்தால் மழை என்கிறோம். இதுவே நீர்த்துளிகளுக்குப் பதிலாகப் பனிக்கட்டி துகள்களாகவும், பனித்தூவலாகவும் பெய்தால் அது ‘ஆலங்கட்டி மழை’.

> பூமியில் மழையே பெய்யாத நிலப்பரப்பு, அண்டார்டிகாவில் உள்ளது. உறைபனி சூழல் நிலவுவதால் இங்கு நீர்த்துளியாக மழை பெய்யாது. இதனால் இது பூமியின் ‘வறண்ட’ கண்டம் எனப்படுகிறது.

> பாலைவனங்களிலும் மழை பெய்வதுண்டு. ஆனால், அவை அங்கு நிலவும் அதிக வெப்பம் காரணமாகத் தரையை அடையும் முன்பே ஆவியாகி விடும்.

> பூமியைப் போலவே மற்ற கோள்களிலும் மழை பெய்வதுண்டு. ஆனால், அவை நீராலான மழை கிடையாது. வியாழன் கோளில் கந்தக அமில மழையும், சனி கோளின் நிலவான டைட்டனில் மீத்தேன் மழையும் பெய்யும்.

> மழை நீரின் pH அளவு 5.6 ஆகும். மழை நீருக்குச் சற்றே அமிலத் தன்மை உண்டு. இந்த pH அளவில் குறைந்ததாகப் பெய்யும் மழையே அமில மழை. தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுவால் வளிமண்டலத்தில் பெருகும் சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவை அமில மழைக்குக் காரணமாகின்றன.

> ஆலங்கட்டி மழை, பனி மழை போல, மெக்சிகோவின் தெற்கேயுள்ள ஹாண்டுராஸ் (Honduras) நாட்டில் மீன் மழை பிரபலம். 18-ம் நூற்றாண்டில் வருடந்தோறும் கனமழையின் போது நன்னீர் வாழ் மீன்கள் வானிலிருந்து கொட்டியதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மீன், தவளை, நீர்ப்பாம்பு உள்ளிட்ட நீர்வாழ்வன மழையுடன் கொட்டி உள்ளன. சூறைப்புயலின்போது மிகப்பெரும் நீர் நிலைகளிலிருந்து மேகத்துக்கு உறிஞ்சப்படும் நீர், மழையாகப் பெய்யும்போது மீன்கள் விழுவதாக ஆராய்ச்சியில் சொல்லியுள்ளார்கள்.

> சில இடங்களில் சிவப்பு நிறத்தில் பெய்வதை ‘ரத்த மழை’என்று பயமுறுத்துவார்கள். சிவப்பு மட்டுமல்ல, மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறங்களிலும் மழை பெய்வதுண்டு. கேரளாவின் கோட்டயம், இடுக்கி பகுதிகளில் இம்மாதிரி வண்ண மழைகள் பெய்துள்ளன. காற்றில் பரவியிருக் கும் மாசு, நுண்ணுயிரிகள் மழையில் கரைவதே வண்ண மழை பெய்யக் காரணம்.

> நீண்ட காலமாக மழை பெய்யாத பகுதிகளில், மேகங்களைத் தூண்டிவிட்டுச் செயற்கை மழையைப் பெய்யச் செய்கிறார்கள். விமானங்கள் மூலம் உலர்பனியை மேகங்களில் தூவிச் செயற்கை மழை உண்டாக்கப்படுகிறது.

> பாலைவனப் பரப்பு அதிகமுள்ள ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில், மழை என்னும் பொருள்படும் ‘புலா’ என்ற பெயரில் பணத்தை அழைக்கிறார்கள்.

> மழைக்கு எனத் தனியாக வாசனை கிடையாது. மண்ணில் அவை விழும்போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்களுடன் மழை நீர் வினை புரிந்து, நாம் உணரக்கூடிய ‘மண் வாசனை’பிறக்கிறது.

> மழையில் நனைந்த செடி கொடிகளின் இலைகள் முன்பைவிட பச்சைப்பசேலென்று காட்சியளிக்கும். இதற்கு மழை நீரில் கரைந்து வரும் நைட்ரஜனே காரணம்.

> மழைக்கு நாம் பயன்படுத்தும் குடை, வெயிலில் இருந்து தப்பிக்கவே முதலில் உருவாக்கப்பட்டது. நிழலுக்காக என்று பொருள்படும் லத்தீன் வார்த்தையிலிருந்தே ‘அம்ப்ரெல்லா’என்ற பெயர் உருவானது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடை, 11-ம் நூற்றாண்டு சீனாவில் புழக்கத்துக்கு வந்தது.

> அதிக மழை பெய்வதால் இந்தியாவிலுள்ள மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி மற்றும் மாவ்சின்ராம் ஆகிய இடங்கள் உலகப் புகழ் பெற்றுள்ளன. காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாவ்சின்ராம் கிராமம், உலகிலேயே மிக அதிக சராசரி மழை பெய்யும் இடம். இங்கு ஆண்டு சராசரி மழை 11,873 மி.மீ.. இதனால் உலகின் மிகவும் ‘ஈரமான’பகுதி என மாவ்சின்ராம் அழைக்கப்படுகிறது. இரண்டாம் இடத்திலிருக்கும் சிரபுஞ்சியின் ஆண்டு சராசரி மழையளவு 11,430 மி.மீ.

tamil.thehindu

  • தொடங்கியவர்
காலம் கடிதென ஓடும்…
 
 

article_1477281545-%5Do%5Bp.jpgஇழப்புக்கள் வரும்போது அது விதி என்று சொல்லிச் சமாதானத்தை தமக்குத் தாமே சொல்வதை ஆற்றாமை என்றுதான் சொல்ல வேண்டும். 

வரவுகளை நாம் சந்தோசத்துடன் ஏற்கின்றோம். இந்த வரவுகள் தங்களது முயற்சியால் ஏற்பட்டது எனத் திருப்திப்படுவார்கள்; அதே வேகத்துடனான வேகத்தை இழப்புக்கள் நேரிடும்போது விட்டுவிடக்கூடாது. 

துன்பம் வரும் கால் முடங்குதல் கோழைத்தனத்துடன் இயங்காத ஒரு ஸ்தம்பித நிலை உருவாக இடம்கொடுக்கக் கூடாது. இந்த நிலை மிகவும் ஆபத்தானது.

ஊக்கத்துடன் செயலாற்றுபவர்கள் காலநிலை சரியில்லை என எண்ணினால் எதிர்காலம் என்னாவது?

காலம் கடிதென ஓடும்; கழியும் காலத்தில் ஒருவினாடிப் பொழுதும் ஒருவனைக் கோடீஸ்வரனாக்கும். 

  • தொடங்கியவர்

ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

 

p40a.jpg

‘நான் சண்முகநாதன். சென்னை ஆலந்தூரில் வசிக்கிறேன். தனியார் மருந்து கம்பெனியில் அனலடிக்கல் கெமிஸ்ட். மனைவி வித்யா.  எங்களுக்கு ரித்திகா, ரசிகா என இரண்டு மகள்கள். எங்களின் பொழுதுபோக்கு சினிமாதான். நல்ல படங்களைத் தவறவிட மாட்டோம். பி.சி.ஸ்ரீராம் சாரின் ஒளிப்பதிவு அவ்வளவு பிடிக்கும். அதுவும் மணிரத்னம் காம்பினேஷனில் பி.சி சார் செய்த படங்கள் அவ்வளவு இஷ்டம். லைட்டிங்கைச் சிறப்பாக ஹேண்டில் செய்வதில் எனக்குத் தெரிந்து பி.சி சார்தான் பெஸ்ட்.

இப்படி எனக்கு ஆதர்சமாக இருக்கும் பி.சி சார்,  எனக்காக    ஒரு போட்டோகிராஃபராக மாற வேண்டும். ஆமாம், என் ஃபேமிலியை அவர் போட்டோ எடுத்துத் தர வேண்டும். எங்களின் இந்த ஆசையை ஆனந்த விகடன் நிறைவேற்றித் தருமா?’ - இது, நம் வாசகர் சண்முகநாதன், ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் (facebook.com/AnandaVikatan) எழுதியிருந்த ஆசை.

 ‘ரெமோ’ பட கலர் கரெக்‌ஷன், கிரேடிங் என லேபிலேயே இருந்தார் பி.சி.ஸ்ரீராம். விஷயத்தைச் சொன்னோம். `‘நான் போட் டோ கிராஃபர் கிடையாதே, சினிமாட்டோகிராஃபர்’’ - கலகலவெனச் சிரித்தார். `` ‘ரெமோ’ ரிலீஸ் வரை கொஞ்சம் பிஸியா இருப்பேன். ஆனா, ‘பி.சி கமிட்டட்’னு அந்த ஃபேமிலியிடம் சொல்லிடுங்க. நாள், நேரம், இடம் பிறகு சொல்றேன். நிச்சயமா பண்ணலாம்’’ - பரபர வேலைகளுக்கு மத்தியிலும் சம்மதம் சொன்னார் பி.சி.

`‘இந்தியாவின் மோஸ்ட் வான்ட்டட் கேமராமேன், எங்களை போட்டோ எடுக்க ஒப்புக்கிட்டது ரொம்பப் பெரிய விஷயம் சார்!’’ ஆசை நிறைவேறப்போகிறது என்ற உற்சாகம் சண்முகநாதனின் வார்த்தைகளில்.

‘ஆசை’யை நிறைவேற்ற நேரம் குறிக்கப்பட்டது. நேரம்: ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணி. இடம்: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பி.சி-யின் அலுவலகம். 

‘‘ ‘ஆசை ஃபேமிலி’ வந்துட்டாங்களா?’’   பி.சி-யின் வார்த்தைகளில் குறும்பு. பொக்கே, சால்வையுடன் சண்முகநாதன் வர ‘`எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி?’’-  தயக்கமும் ப்ரியமுமாக அன்பை ஏற்றுக்கொண்டார் பி.சி.

இந்தியாவின் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர், ஒரு குடும்பத்தை புகைப்படம் எடுக்க எடுத்துக்கொண்ட சிரத்தை, நம்மை வியக்கவைத்தது.

`‘முதல்ல ஆபீஸ்க்குள்ள வெச்சுக்கலாம். பிறகு, வெளியே எடுப்போம்’’ - போட்டோஷூட் ப்ளான் சொன்னார்.

`‘நீ நடுவுல வாம்மா. நல்லா ஜாலியா கலகலனு சிரிக்கணும். எங்கே ஸ்மைலையே காணோம்? போஸ் கொடுக்கக் கூடாது. அம்மா-அப்பாகூட ஜாலியா பேசிட்டிருங்க. சண்முகநாதன், நீங்க உங்க மனைவியைப் பார்த்துப் பேசுங்க. கேமராவைப் பார்க்காதீங்க’’ - அது, பி.சி போட்டோகிராஃபராக மாறி நின்ற மொமன்ட். உள்ளே ஸ்டுடியோவே அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அந்த எனர்ஜியை நம் கேமராவிலும் அள்ளிக்கொண்டோம்.

சின்ன லொக்கேஷன் சேஞ்ச். அடுத்த ஸ்பாட் வெளியே வராண்டாவில்.

`‘அந்த சேரை அப்படியே வெளியே இழுத்து உட்காருங்க. இப்படித்தான் உட்காரணும்னு கிடையாது. யார் வேணும்னாலும் யார் பக்கத்துலயும் உட்காரலாம்’’ - இன்ஸ்ட் ரக்‌ஷன் கொடுத்த பிறகு, க்ளிக்கிங் பாயின்ட்டில் போய் நின்றார் பி.சி. `‘ஏம்ப்பா இவ்ளோ சீரியஸா இருக்கீங்க? அங்கே பாரு, அப்பா நல்லா கைகாட்டுறார். அவர் நல்ல ஆக்டராகிடுவார் போலிருக்கே!’’ பி.சி-யின் கமென்ட்டுகளால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சிரித்துக் குவித்தது.

p40b.jpg

`‘நீ, அப்பா மடியில் உட்காருடா கண்ணா. ரெண்டு பேரும் அப்பா-அம்மாவுக்கு முத்தம் கொடுங்க’’ - அவர்களுக்கு மைண்ட் செட் பண்ணிக் கொடுத்துவிட்டு க்ளிக் பண்ண தயாரான பி.சி., `‘சார், இப்ப உங்க ஆக்ட்டிங்கை வெச்சுக்கங்க’’ என்றார் சண்முகநாதனிடம். வித்யாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

`‘உங்கள் மனைவி கொஞ்சம் கூச்சப்படுவார் போலிருக்கிறதே!’’- பி.சி சுத்தத் தமிழில் பேச, மீண்டும் மீண்டும் சிரிப்பு... மீண்டும் மீண்டும் க்ளிக்ஸ்.

‘‘போட்டோ எடுத்து ரொம்ப நாள் ஆச்சு. எனக்கும் இது ரெஃப்ரஷிங்கா இருந்தது’’ - பி.சி-யின் வார்த்தைகளில் ஒரு குடும்பத்தின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். போட்டோசெஷனுக்குப் பிறகு பி.சி-யின் உபசரிப்பு. காபி குடித்தபடி கான்வர்சேஷன் தொடங்கியது.

‘`உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டோம் சார்’’ - சண்முகநாதன்தான் தொடங்கினார்.

‘`இல்லை இல்லை... நான் அப்படி நினைக்கலை. இந்தச் சந்திப்புல எனக்கும் சந்தோஷம்தான். பொதுவா புகைப்படங்கள், நம் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவை. குடும்பத்தோடு கிளம்பி ஸ்டுடியோவுக்குப் போய், வெவ்வேறு பின்னணி மாற்றி, பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த அந்த ஃபேமிலி போட்டோக்கள், காலத்தால் மறக்க முடியாத நினைவுகள்.

p40c.jpg

நாம ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார்க்கணும். அப்போ, அதுவும் எப்போதாவது எடுத்த அந்தக் கறுப்பு-வெள்ளைப் படங்களை நாம பொக்கிஷமாப் பாதுகாத்துட்டு வர்றோம். ஆனா, இப்போ ஒரு நாளைக்கு குறைச்சலா 10 போட்டோக்களாவது எடுக்கிற இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் எத்தனை செல்ஃபிக்களை, ஃபேமிலி போட்டோக்களைப் பாதுகாக்குறோம்? ஒருபக்கம் க்ளிக் பண்ணிட்டே இருக்கோம். இன்னொரு பக்கம் டெலிட் பண்ணிட்டே இருக்கோம். இந்த டிஜிட்டலிலும் நம் பதிவுகளைப் பாதுகாக்கணும் என்பது ரொம்ப முக்கியம்’’ - பி.சி பேசப்பேச தலையாட்டி ஆமோதித்துக்கொண்டு இருந்தது சண்முகநாதனின் குடும்பம்.

‘‘உங்களால் மறக்க முடியாத பொக்கிஷ போட்டோன்னா, எதை சார் சொல்வீங்க?’’ இது சண்முகநாதன் மனைவி வித்யாவின் கேள்வி. டக்கென அமைதியான பி.சி., எதுவும் பேசாமல் தனக்குப் பின்னால் இருந்த தன் மகளின் போட்டோவைக் கைகாட்டுகிறார்.

‘‘தவறா எடுத்துக்காதீங்க சார். ப்ரியத்தில் கேட்கிறேன். உங்க மகள் இழப்புல இருந்து எப்படி சார் மீண்டு வந்தீங்க?’’ - தயங்கியபடி கேட்ட சண்முகநாதனை, உற்று நோக்கியபடி பேசுகிறார் பி.சி. ‘‘அதெல்லாம் மீளவே முடியாதுங்க. அந்த வருத்தங்களோடுதான் வாழக் கத்துக்கணும்; வாழ்ந்துதான் ஆகணும். நான் ஓ.கே. வெளியே, வேலைனு அந்த வருத்தத்தைக் கொஞ்சம் கரைச்சுக்கிறேன். ஆனா, என் மனைவிதான் ரொம்பக் கஷ்டப்படுறா. சில விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியாது. அப்படியே பகிர்ந்துக்கிட்டாலும் புரியாது’’ -அறையில் நிலவிய திடீர் அமைதியை, பி.சி-யே கலைக்கிறார்.

 

‘`ஓ.கே கமான். செல்ஃபி எடுக்க மறந்துட் டீங்களே...’’ என்றபடி ரசிகாவை செல்ஃபிக்கு அழைக்கிறார்.

ஒரு மகா கலைஞனின் ஃப்ளாஷ் மழையில் நனைந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றுக் கொண்டது சண்முகநாதனின் குடும்பம்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டோனி,கோஹ்லி ஜேர்சியில் பெண்களின் பெயர்கள் ; ஆச்சரியத்தில் ரசிகர்கள் 

254176.jpg

இந்த போட்டியில்  சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

டோனி மற்றும் கோஹ்லி தங்களது அணி ஜேர்சியில் பெயர்களை மாற்றியவாறு போட்டியில் பங்குகொண்டனர்.

இந்த போட்டியில் டோனியின் ஜேர்சியில் “தேவகி” எனவும்,கோஹ்லியின் ஜேர்சியில் “சரோஜ்” எனவும் பெயரிடப்பட்டிருந்தது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது தங்களது தாயாரின் பெயர்களை ஜேர்சியில் அச்சிட்டவாறு நேற்று போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

மின்மினிகளின் தீபாவளி

 
uyir_3062014f.jpg
 

மனிதக் கற்பனையின் அதிகபட்சக் காட்சிச் சித்திரங்களை நமக்குத் தந்த ‘அவதார்’, கிராஃபிக்ஸ் துணையுடன் இயற்கையின் எழிலைப் போற்றிய திரைப்படம். அந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு பல்வேறு இயற்கை அம்சங்கள் உத்வேகம் அளித்திருக்கலாம். ஒரு வேளை மகாராஷ்டிர மாநிலத்துக்கு அவர் வந்திருந்தால், அங்கிருக்கும் சிற்றுயிர்களால் நிச்சயம் அவர் உத்வேகமடைந்திருப்பார்.

இரட்டிப்பான ஒளி

மும்பையில் இருந்து மூன்று மணி நேரம் மேடு பள்ளங்களைக் கடந்து காட்டைத் தொட்டு, கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடிக்கு மேல் உள்ள மலைத் தொடரைச் சென்றடைந்தோம். மகாராஷ்டிர மாநிலம் சங்கமநர் அருகே உள்ள வான்ஜூல்ஷேட் என்ற சின்னஞ்சிறு கிராமம்.

காரிலிருந்து இறங்கி உடலைச் சோம்பல் முறித்தபோது, சில்லென்ற காற்று எங்களை வரவேற்றது. சூரியன் வீடு திரும்ப யத்தனிக்கும் மாலை நேரம். நீல வண்ணத்தில் இருந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாகக் கருநீலத்துக்கும், பிறகு சாம்பல் நிறத்துக்கும் தடம் மாறிக்கொண்டிருந்தது. அந்தக் கருமையை மேலும் இருட்டாக்குவதுபோல, மழை மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருந்தன. ஒரு நொடியில் அந்த இடம் முழுவதும் அமானுஷ்யமான அமைதி பரவியது.

அப்போது ஒரு மரத்தில் திடீரென்று ஒரு பொன்னிற ஒளி மின்னி, பிறகு அங்குமிங்குமாகக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை நான் இமைகளைச் சிமிட்டியபோதும், அந்த ஒளியை உருவாக்கிக்கொண்டிருந்த மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. கொஞ்ச நேரத்திலேயே அந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டுவிட்டது!

உச்சகட்ட ரசனை

மின்மினிப் பூச்சிகளின் மினுக்கும் ஒளியால், ஒரு மரத்துக்கே ஒளியூட்டினால் எப்படி இருக்கும். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். மரத்தின் ஒவ்வொரு இலையிலும் உட்கார்ந்து மரத்துக்கு அழகுற ஒளியூட்டியிருந்தன மின்மினிகள். அது இயற்கையின் உச்சக்கட்ட ரசனை போலிருந்தது. அந்த மரம் தங்க விக்ரகம் போலக் காற்றில் அசைந்தது, நடனமாடியது போலிருந்தது. மரத்தின் அந்த அற்புதமான நடனம், என் மனதில் அழிக்க முடியாத ஒரு காட்சியாகப் பதிந்துவிட்டது.

சின்ன வயசிலிருந்தே எனக்கு ரொம்ப பிடித்த சிற்றுயிர்களில் மின்மினிப் பூச்சிக்கு முதல் இடம் உண்டு. நம் நாட்டில் மே முதல் ஜூன் மாதம்வரை மட்டுமே மின்மினிப் பூச்சிகள் உயிரோடு இருக்கின்றன. இந்தக் காலத்தில் லட்சக்கணக்கான சிறிய மின்மினிப் பூச்சிகள் இனச்சேர்க்கை செயல்பாடுகளுக்குப் பிறகு இணைசேர்ந்து, முட்டையிடுகின்றன. இனச்சேர்க்கை செயல்பாட்டின்போதும், குஞ்சு பொரிக்கிற தருணத்திலும் லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகளையும் அவை விட்டுவிட்டு வெளிப்படுத்தும் ஒளியின் அழகையும் கண்டு மகிழலாம்.

அந்தச் சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சிகளிடம் என்னையே நான் இழந்திருந்தேன். இந்த அரிய நடனத்தை ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் வந்து பார்த்துவிட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதேநேரம் நான் செய்யக்கூடிய சிறந்த செயல், அந்த மின்மினிகளின் இயல்புக்குச் சிறிய இடையூறைக்கூடச் செய்யாமல் இருப்பதுதான் என்று உணர்ந்துகொண்டு அந்த இடத்திலிருந்து விடைபெற்றேன்.

மின்மினிப் பூச்சி: தெரிந்ததும் தெரியாததும்

# Lampyridae எனப்படும் பீட்டில் பூச்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒளிரக்கூடிய இரவாடிப் பூச்சிகள் மின்மினிகள்.

# மின்மினிப் பூச்சிகளால் வேகமாகப் பறக்க முடியாது.

# மென்மையான உடலைக்கொண்ட இந்தப் பூச்சிகள் 5 முதல் 25 மி.மீ. (2.5 செ.மீ.) நீளமுடையவை.

# பெரும்பாலான மின்மினிப் பூச்சிகள் மகரந்தத்தையும் பூந்தேனையும் உண்கின்றன. ஆனால், பருவமடைந்த மின்மினிப் பூச்சிகள் உண்பதில்லை.

# வயிற்றின் அடிப்பகுதியில் சிறப்பு ஒளிரும் உறுப்பை இவை கொண்டுள்ளன. இந்த உறுப்பு, விட்டுவிட்டு வெளிச்சத்தை வெளியிடுகிறது.

# பெண் மின்மினிப் பூச்சிகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் குறுகிய நேரத்துக்கு ஒளிரும் வெளிச்சத்தை வெளியிடுகின்றன. இந்த ஒளி ஆண் மின்மினிப் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கிறது. கவர்ந்து இழுக்கப்படும் ஆண் மின்மினிப் பூச்சிகளிடையே, அவற்றின் ஒளிரும் தன்மையைப் பொறுத்துப் பெண் மின்மினிப் பூச்சி தேர்ந்தெடுக்கிறது

tamil.thehindu

  • தொடங்கியவர்

முதன்முறையாக தீபாவளி கொண்டாடிய ஐநா

un_13428.png

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஐநா செயலக கட்டிடத்தில் வண்ணமையமான விளக்குகள் ஏற்றப்பட்டு தீபாவளி வாழ்த்துக்கள் என எழுதி அலங்கரிக்கப்பட்டது.

 

Cv_M6f9WYAAtCds.jpg

 

 

தீபாவளி பண்டிகைக்காக ஐநா கட்டிடம் அலங்கரிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். மேலும் இந்த வருடத்தில் இருந்து ஐநா  தீபாவளி பண்டிகைக்கு  விருப்ப விடுமுறை அறிவித்துள்ளது. ஐநா தீபாவளி கொண்டாட்டம் குறித்து ஐநா வின் இந்திய தூதர் சையத் அக்பருதீன் ட்வீட் செய்துள்ளார். 

  • தொடங்கியவர்

வட இந்தியாவில் ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி: சில சுவையான தகவல்கள்

 

 
deepavali_3062985f.jpg
 

வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தொடர்ந்து ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது. இதில் இன்றைய தினம் (ஞாயிறு) முக்கிய திருநாள் ஆகும்.

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருநாள் மட்டும் அன்றி வட இந்திய மாநிலங்களில் ’தீபாவளி பருவம்’ எனும் பெயரில் ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 28-ல் துவங்கி வரும் செவ்வாய்கிழமை நவம்பர் 1 ஆம் தேதி வரை ஆகும்.

’தந்தேரஸ்’ என அழைக்கப்படும் முதல் நாள் வீட்டிற்கு உலோகங்கள் வாங்கும் நாளாகக் கருதப்படுகிறது. இதில், பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி தங்க நகை முதல் வெள்ளி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் வரை வாங்குகிறார்கள். இதை மாலை வீட்டில் வைத்து லஷ்மியின் பெயரில் பூஜை செய்து மகிழ்கிறார்கள். மறுநாள் கொண்டாட்டம் ’சோட்டி தீபாவளி’(சின்ன தீபாவளி) எனப்படுகிறது. இந்த நாளில், செல்வம் தரும் கடவுளாக இந்துக்கள் கருதும் லஷ்மி மாலையில் தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக லஷ்மியை வரவேற்க அவர்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்திருப்பார்கள். அதே தினத்தில் தம் வீட்டில் உள்ள துர்தேவதைகளும் வெளியேறும் என்பதும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகும்.

மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தீபாவளி ஆகும். ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி பருவத்தின் முக்கியத் திருநாளாகும். இதில், புத்தாடை உடுத்தி தம் வீட்டிற்கு வந்து விட்டதாகக் கருதும் லஷ்மிக்கு மாலையில் பூஜை செய்வார்கள். பட்டாசுகளையும் வெடிப்பார்கள். பிறகு தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள். நான்காவது தினமான நாளை திங்கள் கிழமை ‘கோவர்தன் பூஜை’ நாளாகும். இதில், அனைவரும் பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து மகிழ்வார்கள். இத்துடன் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளும் தம் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பூஜை போட்டு புதுக்கணக்கு துவங்குவார்கள். இந்த நாளை உபி மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களில் ராமர் பெயரில் கொண்டாடுவதும் வழக்கம். ராவணனிடம் போரிட்டு வென்ற ராமர் அயோத்திக்கு திரும்பி முடிசூட்டிய நாளாகவும் இது கருதப்படுகிறது. இதற்காக, அவர்கள் ராமருக்கும் பூஜை செய்து வணங்குகிறார்கள்.

கடைசியாக ஐந்தாவது நாள் ‘பைய்யா தோஜ்’ என்பது ஆகும். இதில், பெண்கள் தம் சகோதரர்களை தேடிச் செல்வார்கள். மணமான பெண்களாக இருப்பினும் தங்கள் குடும்பப் பொறுப்பை தம் கணவன்மார்களிடம் விட்டு, விட்டு கவலைப்படாமல் கிளம்பி விடுவார்கள். இந்த நாளில் சாலைகளில் ஓடும் வாகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். இடம் கிடைக்காத போது பேருந்துகளின் மேற்புறங்களிலும் பெண்கள் அமர்ந்து செல்லத் தயங்குவதில்லை. இதற்காக, வட மாநிலங்களின் பெரும்பாலான அரசுகள் மூன்று நாட்கள் வரை அரசு விடுமுறையாக விடுவது உண்டு

tamil.thehindu

  • தொடங்கியவர்

இவர் உலகின் மிக மெதுவான கேஷியர் இல்லை

சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் உலகின் மிக ஸ்லோவான கேஷியர் என்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில் இருந்தது புனேவில் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கிளை ஒன்றில் பணிபுரியும் ப்ரேம்லதா ஷிண்டே எனும் பெண்மணி. இவர் மெதுவாக பணத்தை வாங்கி, எண்ணி, பாஸ் புக்கில் என்ட்ரி போடுவது ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு நக்கலாக பதிவிடப்பட்டது. ஆனால்...

400_16114.jpg

 

இரண்டு மாரடைப்புகள், பேரலடிக் ஸ்ட்ரோக்குக்குப் பிறகு, சமீபத்தில்தான் பணியில் சேர்ந்திருக்கிறார் ப்ரேம்லதா. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற உள்ளார் இவர். மாரடைப்புகளுக்குப் பிறகு தனது வேலையில் உள்ள ஈடுபாட்டால், மீண்டும் பணிக்கு வரக் கோரிய அவருக்காக, கூடுதலாக ஒரு கௌன்ட்டர் அமைத்துக் கொடுத்திருக்கிறது வங்கி. 

இது தெரியாமல், வீடியோ எடுத்து வைரலாக்கிவிட்டார்கள். 

vikatan

  • தொடங்கியவர்

(புகைப்படங்களில்) சிட்னியின் கடலோரப் பகுதிக்கு வந்த சிற்பங்கள்

 

இந்த ஆண்டு ராட்சத காலணி மற்றும் தலைகீழாக காட்சியளிக்கும் காண்டாமிரும் ஆகியவை இடம்பெறும், கடலோரத்தில் நடத்தப்படும் வருடாந்தர சிற்பக்காட்சியால் உயிர்ப்பான ஆஸ்திரேலிய சிட்னி கடற்கரை. (புகைப்படத் தொகுப்பு)

கடற்கரைக்கு பக்கத்தில் காட்சியளிக்கும் ஒரு சிற்பம்

போன்டி மற்றும் தமாராமா கடற்கரைகளுக்கு இடையில் அரை மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை இந்த இலவச சிற்பக்காட்சி ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடற்கரைக்கு பக்கத்தில் காட்சியளிக்கும் ஒரு சிற்பம்

17 நாடுகளில் இருந்து 100-க்கு மேலான கலைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள படைப்புகள், 20வது ஆண்டாக நடைபெறும் இந்த திறந்தவெளி கலாசார நிகழ்வில் இடம்பெறுகின்றன

 

இந்த திறந்தவெளி நிகழ்வுக்கு குறிப்பிட தலைப்பு இல்லை. கலைஞர்களின் சுதந்திரமான படைப்பாற்றலுக்கு ஆதரவு வழங்குகிறது.

 

இந்த சிற்பக்காட்சிக்கு குறிப்பிட தலைப்பு இல்லை. கலைஞர்களின் சுதந்திரமான படைப்பாற்றலுக்கு ஆதரவு வழங்குகிறது

 

தமாராமா கடற்கரையில் இது போன்ற 7 மீட்டர் நீள தலைகீழ் காண்டாமிருகத்தை தினமும் பார்க்க முடியாது.

 

தமாராமா கடற்கரையில் இது போன்ற 7 மீட்டர் நீள தலைகீழ் காண்டாமிருகத்தை தினமும் பார்க்க முடியாது.

 

இந்த கலைப் படைப்புகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவைகளை படைப்பது கடினமானது.

இந்த கலைப் படைப்புகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவைகளை படைப்பது கடினமானது.

உதாரணமாக, இந்த பெரிய மூங்கில் மற்றும் எஃகு கோளத்தை உருவாக்க ஒரு குழுவினர் ஒரு வாரம் செலவிட்டனர்.

உதாரணமாக, இந்த பெரிய மூங்கில் மற்றும் எஃகு கோளத்தை உருவாக்க ஒரு குழுவினர் ஒரு வாரம் செலவிட்டனர்.

 

 

சில சிந்தனைகளை கிளறுகின்ற கலைப் படைப்புக்களை சூரிய ஒளியில் தோலை பழுப்பாக்கிக்கொள்ள வந்தவர்கள், பார்வையிடுகின்ற வாய்ப்பு ஆயிரக்கணக்கானோருக்கு கிடைக்கிறது.

சில சிந்தனைகளை கிளறுகின்ற கலைப் படைப்புக்களை சூரிய ஒளியில் தோலை பழுப்பாக்கிக்கொள்ள வந்தவர்கள், பார்வையிடுகின்ற வாய்ப்பு ஆயிரக்கணக்கானோருக்கு கிடைக்கிறது.

 

கடற்கரையில் இந்த சிற்பக்காட்சி தொடங்கியபோது, அது ஒரு நாள் நிகழ்வுதான். அதை 25 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

கடற்கரையில் இந்த சிற்பக்காட்சி தொடங்கியபோது, அது ஒரு நாள் நிகழ்வுதான். அதை 25 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

இந்த சிற்பக்காட்சி முதலில் தொடங்கிய 1997 ஆம் ஆண்டு கலந்து கொண்ட சிற்பக் கலைஞர்களில் 20 பேர் இந்த ஆண்டு சிற்பக்காட்சிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிற்பக்காட்சி முதலில் தொடங்கிய 1997 ஆம் ஆண்டு கலந்து கொண்ட சிற்பக் கலைஞர்களில் 20 பேர் இந்த ஆண்டு சிற்பக்காட்சிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 20 முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை இந்த கடற்கரை சிற்பக்காட்சி நடைபெறுகிறது.

நவம்பர் 6 ஆம் தேதி வரை இந்த கடற்கரை சிற்பக்காட்சி நடைபெறுகிறது.

BBC

  • தொடங்கியவர்

‘நான் அகில உலக மாமனார் ...!’ - சாந்தாராமின் குறும்பு - நினைவு நாள் பகிர்வு

002_10178.jpg

“திரைப்படங்களை பொறுத்தவரை நான் கதைக்குத்தான் அடிப்படையான முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை சினிமா என்பது ஓர் சக்தி வாய்ந்த சாதனமாக கருதுகிறேன். இதை என் பிறந்த நாட்டிற்காகவும் அந்த மக்களின் நன்மைக்காகவுமே உபயோகிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்தான் என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்திருக்கிறேன்...“திரைப்படம் என்ற மாபெரும் ஊடகத்தின் சக்தியை உணர்ந்து ஒரு படைப்பாளிக்குரிய பொறுப்புடன் இப்படி கூறியவர் வட இந்திய திரையுலக மேதை சாந்தாராம்.

சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலைப்புர்வமாக திரைப்படமாக்கும் யுக்தியை இந்தியத் திரைப்பட இயக்குநர்களுக்கு கற்றுக்கொடுத்த மாமேதை சாந்தாராம். இன்று அவரது நினைவுநாள்

திரைப்படங்கள் மவுனப்படங்களாக வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் புனாவில் ஸ்டுடியோ ஒன்றில் காவலாளியாக தன் வாழ்க்கையை துவங்கிய சாந்தாராம், வடஇந்திய திரையுலகிற்கு நல்ல பல படங்களை தந்த ஸ்டுடியோ ஒன்றின் உரிமையாளராகவும், நாடுபோற்றும் நல்ல இயக்குனராகவும் உயர்ந்தவர்.

003a_10209.jpg1901 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ந்தேதி மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த அவரால் பள்ளிப்படிப்பை தொடரமுடியவில்லை. இளம்வயதிலேயே அங்குள்ள ரயில் தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் சேர்ந்தார். மாதம் 15 ரூபாய் வரை சம்பாதித்தாலும் தான் அச்சமயத்தில் ஆட்பட்டிருந்த ஒரு 'கெட்ட' பழக்கத்திற்காக மேலும் சம்பாதிக்கவேண்டியிருந்தது. அதற்காக பல வேலைகளை செய்து பணம் ஈட்டினார். வீட்டின் தேவைக்குப் போக தனக்கான தொகையில் அவர் அந்த கெட்ட பழக்கத்தினை தொடர்ந்தார். ஆம், வேலைநேரம்போக அவர் செல்லும் இடம் மவுனப்பட கொட்டகைகள். அதுதான் அவரது 'கெட்ட' பழக்கம். போதும் போதும் என்றளவிற்கு படங்களை பார்த்து ரசித்த அவருக்கு இக்காலகட்டத்தில் சினிமா மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அது ஒரு ரசிகனுக்கான ஈர்ப்பு அல்ல; அதையும் தாண்டி. ஓய்வு நேரத்தில் தம் நண்பர்களை கவர்வதற்காக தான் பார்த்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை போலவே நடித்து காட்டி தன் கலையார்வத்தை வெளிப்படுத்திவந்தார்.

சினிமா என்ற கலைவடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொண்டுவந்த சாந்தாராமுக்கு அதை நேரில் பார்த்து அதன் தொழில்நுட்ப விஷயங்களை கற்றுத்தேறும் ஆசை ஒருநாள் வந்தது. அதற்காக மாத ஊதிய வேலையை விடவும் மனமில்லை. இதற்காக ஓர் வழிகண்டறிந்தார். ஆம் புனாவில் அப்போது இயங்கிவந்த ஸ்டுடியோ ஒன்றில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார் அவர். அங்கு ஓரளவு சினிமா  தயாரிப்பு பற்றிய புரிதல் உண்டானது அவருக்கு.

பின்னர் கோல்ஹாபூரில் இயங்கிவந்த மஹாராஷ்டிர சினிமா கம்பெனியில் முறையாக ஸ்டுடியோ ஊழியராக அவர் வேலைக்குச் சேர்கிறார். பிறகு படிப்படியாக உயர்ந்து, கதாநாயகன் அந்தஸ்தை பெற்று 1925–ம் ஆண்டு அந்த நிறுவனம் தயாரித்த ‘சவுகரிபாஸ்’ என்ற கலைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இது சாந்தாராம் என்ற நடிகனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நடிப்பதோடு இன்றி ஃபிலிம் ஆய்வுக்கூடம் , ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், எடிட்டிங் என ஒரு திரைப்படம் குறித்த அத்தனை அம்சங்களையும் அங்குதான் அவர் கற்றார். சில ஆண்டுகளில் அங்கிருந்து விலகிவந்து நண்பர்கள் சிலருடன் இணைந்து 'பிரபாத் ஃபிலிம் கம்பெனி'யை 1929 ம் ஆண்டு நிறுவினார்.

இந்தியாவில் திரைப்படத்தொழிலில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. அவ்வளவாக திரைப்படத்தொழில் வளர்ந்திராத காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாகவும், வணிகரீதியான மையங்களாகவும் இது இயங்கியது. இந்தியாவில் திரைப்பட ஸ்டுடியோக்கள் வட நாட்டில்தான் முதலில் தோன்றின. இந்தியாவின் பிற பகுதியில் இருந்தவர்கள் தங்கள் திரைப்பட ஆசையை மஹாராஷ்டிராவில்தான் வளர்த்தெடுத்தனர். 40 களில் நாம் பார்த்து ரசித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இங்குள்ள கோல்காபூர், புனே, மும்பை ஸ்டுடியோக்களில் உருவானவைதான்.

தாதா பால்கேவின் 'ராஜா ஹரிச்சந்திரா' கதையை 1932-ம் ஆண்டு 'அயோத்தியே கா ராஜா' என்ற பெயரில் இயக்கினார் சாந்தாராம். திரைப்படங்களில் பெண்கள் நடிக்கவராத அக்காலத்தில் பெண்கள் வேடத்தை ஆண்களே ஏற்று நடிப்பது வழக்கமாக இருந்தது. முதன்முறையாக இந்த திரைப்படத்தில் பெண்களையே நடிக்க வைத்து சாதனை செய்தார் சாந்தாராம்.

மெளனப்படக் காலத்தில் சாந்தாராம் 6 படங்களை இயக்கினார். 1930 களின் மத்தியில் இந்தி மராத்தி என இருமொழிகளிலும் படம் எடுக்கத்துவங்கினார். 1934 ல் வந்த 'அம்ரித் மந்தன்' என்ற படம் இந்தியிலும், மராத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
1936-ல் வெளிவந்த 'அமர் ஜோதி', வெனிஸில் நடைபெற்ற சர்வதேசப் பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை பெற்றது.

1937 ம் ஆண்டிலேயே இளம்பெண்களை வயதானவர்கள் மணக்கும் சமூக கொடுமையை கண்டிக்கும்விதமாக 'துனியானா மேனே' என்ற படத்தினை எடுத்தார். பெண்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம அளித்து, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுடன் இந்த படம் இருந்தது. வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டித்த இந்த படத்தில், இந்த காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற முற்போக்கு கருத்தை முன்வைத்தார். ஒருவகையில் இந்த  கருத்தை வலியுறுத்திய முதல்படம் இதுதான்.

1939-ம் ஆண்டு அவர் இயக்கிய 'ஆத்மி',யில் பாலியல் தொழிலில் சிக்கி அதிலிருந்து மீள நினைக்கும் பெண் ஒருத்தியின் வாழ்க்கையை 005_10396.jpgமிகச்சிறந்த முறையில் திரையில் காட்டினார். வணிக சினிமாவில் இறுதிவரையில் பத்தினித்தன்மையோடு படம் எடுத்தவர் சாந்தாராம். சக்தி வாய்ந்த சாதனமான சினிமாவை தான் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்துவேன் என்பதில் உறுதியாக இருந்த சாந்தாராம், இந்தியாவில் இந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையேயான உறவின் மேம்பாட்டை வலியுறுத்தும் விதமாக 1941-ல் 'படோசி' என்கிற படத்தை வெளியிட்டார். அதில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் இனக்கலவரத்தில் இறக்க நேரிடுகிறது. அதன் உணர்ச்சியை ரசிகர்களுக்கு கொண்டுசேர்க்கும் விதமாக அந்த காட்சியை உருவகப்படுத்த பெரிய அணைக்கட்டு ஒன்று உடைந்து சிதறுவதுபோல காட்சிப்படுத்தியிருந்த விதம் திரைப்படத்துறையினரால் பெரிதும் பாராட்டப்பெற்றது.
பிரபாத் ஃபிலிம் கம்பெனியில் நல்ல தரமான படங்களை வெளியிட்டு புகழ்பெற்ற சாந்தாராம், 1941 ல் சொந்தமாக ராஜ் கமல் கலாமந்திர் என்ற நிறுவனத்தை துவங்கினார். இதன்மூலம் அவர் எடுத்த டாக்டர் கோட்னீஷ் கி அமர் கஹானி, சகுந்தலா, பர்ச்சாயின், தோ ஹாங்கே பாராஹாத், ஜனக் ஜனக் பாயல் பஜே உள்ளிட்ட படங்கள் அவரது திறமையை எடுத்துக்காட்டியது.

இவற்றில் பர்ச்சாயின்,டாக்டர் கோட்னீஷ் கி அமர் கஹானி உள்ளிட்ட சில படங்களில் சாந்தாராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களின் கதாநாயகி வேறு யாருமல்ல; அவரது மனைவி ஜெய்ஸ்ரீ.எந்த ஒன்றின் அடிப்படையை மாற்றாமல் அதனை தற்காலத்துக்கு ஏற்றபடி மாற்றி தரம் குறையாமல் படம் பிடிப்பது சாந்தாராமின் பாணி. காளிதாசரின் கதையான சகுந்தலத்தை ஸ்த்ரீ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். வெளிநாட்டில் வர்த்தக ரீதியில் திரையிடப்பட்ட முதல் இந்தியப் படம் இதுதான்.

சீனப்போரில் கலந்துகொண்ட வீரர்களுக்கு முதலுதவி செய்யும் இந்திய மருத்துவர் ஒருவர்  சீன தேசத்து நர்ஸ் ஒருவரையே திருமணம் செய்துகொண்டு அங்கேயே இறந்துபோய்விடுகிறார். மராட்டியத்தை சேர்ந்த அந்த மருத்துவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'திரும்பி வராத ஒருவர்' என்ற நாவல் எழுதப்பட்டது. கே.ஏ.அப்பாஸ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் அந்த நாவலைப் படித்த சாந்தாராம், ' டாக்டர் கோட்னீஸ் கா கஹாணி' என்கிற பெயரில் திரைப்படமாக்கி வெளியிட்டார்.


சீனா- ஜப்பான் போரின் போது, காயமுற்ற சீனர்களுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற டாக்டர்களில் ஒருவர் கோட்னீஸ். அவருக்கு உதவியாக இருக்கும் கிங்யாங் என்ற சீன நர்ஸ் மீது காதல் கொள்ளும் டாக்டர் அவளை திருமணம் செய்து கொள்கிறார்.
போர் முடியும் சமயம் அங்கு, இனம் தெரியாத தொற்று நோய் பரவுகிறது. அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து பலரை குணப்படுத்தும் டாக்டர் கோட்னீஸீம் எதிர்பாராதவிதமாக அந்த தொற்று நோய்க்கு ஆளாகிறார். நோய்முற்றி இறக்கும் தருணத்தில், தன் கர்ப்பிணி மனைவியிடம் ‘நீ நம் குழந்தையுடன் இந்தியாவுக்கு செல். நம் கிராமத்துக்கு போ. ரெயில் நிலையத்திற்கு வெளியே ஒரு மாட்டு வண்டியுடன் பெரியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொன்னால், நம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு என் தாயாரைப் பார். அவர் உன்னையும், நம் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்’’ என்று கூறியபடி உயிர் துறக்கிறார். படத்தின் இந்த இறுதிக் காட்சியை உள்ளம் உருகச்செய்யும் வகையில் மவுனமாகவே படமாக்கி இருப்பார் சாந்தாராம். இந்தியில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் படத்தை வெளியிட்டார், சாந்தாராம்.சோஷலிச நாடுகளில் இந்தப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதிபயங்கர குற்றவாளிகள் என சர்க்கார் முடிவெடுத்த 6 கைதிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை பண்புள்ளவரகளாக ஆக்கி சமூகத்தில் அவரகளது பொறுப்பை உணர்த்துகிறார் ஒரு காவல் அதிகாரி. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்கிற படத்தை எடுத்தார். 1957-ம் ஆண்டு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெள்ளிக்கரடி விருதினை பெற்றது.

1959-ல் வெளியான அவரது ஜனக் ஜனக் பாயல் பஜே திரைப்படம், வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். கதக் நடனத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கதையில் பாரம்பரிய கலைவடிவடிவமான கதக் நடனத்தை படம் எடுக்கப்பட்ட காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்து அதேசமயம் அதன் மெருகு குறையாமல் எடுத்தார். இந்த திரைப்படம் கதக் நடனத்திற்கு சமூகத்தில் இருந்த மதிப்பை பெருமளவில் உயர்த்தியதோடு சாந்தாராமுக்கு பல திசைகளிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. உலக திரைப்பட ஆளுமைகள் வரிசையில் வைத்து புகழப்பட்டார் சாந்தாராம்.

படத்தின் கதாநாயகி சந்தியாவின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டவர்களில் குறிப்பிட்ட மக்கள் என்றில்லாமல் நடுத்தர குடும்பம் முதல் பெரிய வீட்டுப்பெண்கள்வரை கதக் பயில ஆர்வம் கொண்டனர். வட இந்தியாவில் நிறைய கதக் நடனப்பள்ளிகள் உருவாகக் காரணமான இந்த திரைப்படம்தான் இந்தியாவின் முதல் வண்ணப்படமும் கூட.

முழுக்க முழுக்க வணிக சினிமாவில் இயங்கினாலும் தனது வாழ்வின் இறுதிவரை சமரசம் செய்துகொள்ளாத  ஒரு சிறந்த இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக சாந்தாராம் விளங்கினார்.

ஒப்புயர்வற்ற சாதனையாளரான சாந்தாராம் மீது தமிழக ஆளுமைகள் பலருக்கு ஈர்ப்பு இருந்தது. “தன்னிகரில்லாத சிறந்த கலை ரசிகரான சாந்தாராம்தான் என் பட உலக குரு” என ஒரு மேடையில் அவரை பெருமைப்படுத்தினார் ஜெமினி அதிபர் வாசன். “நான் சாந்தாராமின் மாணவன்” என உருகினார் ஸ்ரீதர்.

004_10050.jpgசாந்தாராமின் பன்முக ஆளுமைத்திறமையால் கவரப்பட்ட இன்னொரு தமிழக பிரபலம் எம்.ஜி.ஆர். இந்தியாவின் பிரலங்கள் திரண்ட மிகப்பெரும் திரைப்பட விழா ஒன்றின் மேடையில் சாந்தாராமின் காலில் விழுந்து வணங்கினார் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் பொது இடத்தில் இருவரது கால்களில் மட்டுமே விழுந்து வணங்கியிருக்கிறார். ஒருவர் அவரது நாடகம், சினிமா உலக வாழ்விற்கு அடித்தளமிட்ட எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே. ராதா. மற்றொருவர் சாந்தாராம். சாந்தாராமின் 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற படம் எம்.ஜி.ஆரின் ஃபார்மூலாவை ஒட்டியிருந்ததால் அதை தமிழில் 'பல்லாண்டு வாழ்க' என்ற பெயரில் எம்.ஜி.ஆர். எடுத்தார். இந்த படத்திற்கு விமர்சனம்  எழுதிய வெளிநாட்டுப்பத்திரிகைகள் இந்தியா நமக்கு பாடம் கற்றுத்தருகிறது என எழுதியது. இது சாந்தாராம் என்ற கலைமேதையின் திறமைக்கு சான்று. இதேபோல சாந்தாராமின்
'அப்னாதேஸ்' என்கிற படம்தான் 'நம் நாடு' என்ற பெயரில் எம்.ஜி.ஆர் ' நடிப்பில் வெளியானது.

சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி திரைப்படமாக்கும் கலையில் இன்றுவரை இந்தியத்திரையுலகிற்கு சாந்தாராம்தான் முன்னோடி.இந்திய திரையுலகிற்கு சாந்தாராம் ஆற்றிய சேவையை பாராட்டி 1985ம் ஆண்டு அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருதும், 1992 ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டன. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமையோடு சுமார் அரைநுாற்றாண்டுகாலம் சினிமாவில் இயங்கி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சாந்தாராம் 1990 ஆம் ஆண்டு தனது 89-வது வயதில் காலமானார்.

இந்திய ஒருமைப்பாட்டை தனது பல படங்களில் திரும்பதிரும்ப வலியுறுத்தியவர் சாந்தாராம். “தீன் பத்தி  ச்சார் ரஷ்தா“ என்ற அவரது திரைப்படத்தில் ஒரு மாநிலத்தை சேர்ந்த கதாநாயகன் இன்னொரு மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். ஒருமைப்பாட்டை திருமண கலாச்சாரம் வழியே பொருத்தி அதை திரைப்படமாக வழங்கிய சாந்தாராம், திரைப்படத்தில் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; நிஜவாழ்விலும் அதை கடைபிடித்தார். ஆம், அவரது மருமகன்களில் ஒருவர் மராத்தி, மற்றொருவர் குஜராத்தி, மூன்றாமவர் அமெரிக்கர்.

1973 ல் ஒரு சினிமா இதழுக்கு பேட்டி அளித்த அவர் பேட்டியில், தனது மருமகன்களைப் பற்றி குறிப்பிட்ட சாந்தாராம், “இந்த காரணங்களுக்காக நீங்கள் என்னை அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்” என்று முகத்தில் குறும்பு புன்னகையை தவழவிட்டபடிச் சொன்னார்.

கொள்கையை படைப்பாக்கி படைப்பின் வழி நிஜத்தை தன் வாழ்க்கையாக்கிய சாந்தாராம் புகழ் என்றும் நிலைக்கும்

vikatan

  • தொடங்கியவர்
கலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்த அவுஸ்திரேலிய மிருக வைத்தியர்கள்; மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக நிதி சேகரிப்புக்கான நடவடிக்கையாம்
2016-10-30 10:21:12

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த மிருக வைத்­தி­யர்கள் மற்றும் மிருக வைத்­தி­யத்­துறை மாண­வர்கள் சிலர் கலண்டர் ஒன்­றுக்கு நிர்­வா­ண­மாக போஸ் கொடுத்­துள்­ளனர்.

 

2028471.jpg

 

மன அழுத்­தங்கள் தொடர்­பான கவ­னத்தை ஈர்த்து தற்­கொ­லை­களை தடுப்­பதே இதன் நோக்­கமாம்.

 

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்­தி­லுள்ள ஜேம்ஸ் குக் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மிருக வைத்­தி­யத்­துறை மாணவ,மாண­வி­களும் தகுதி பெற்ற மிருக வைத்­தி­யர்­க­ளுமே இவ்­வாறு போஸ் கொடுத்­துள்­ளனர்.

 

 20284_vet5.jpg

 

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தற்­கொலை செய்­து­ கொள்ப­வர்­ களில் வேறு துறை­களை சார்ந்­த­வர்­க­ளை­விட மிருக வைத்­தி­யர்களின் சத­வீதம் அதி­க­மாக உள்­ளது என அவுஸ்­திரேலிய மிருக வைத்­தி­யர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

 

இந்­நி­லையில், மிருக வைத்­தி­யர்கள் தத்­த­மது அந்­த­ரங்க உள­வியல் பிரச்­சி­னைகள் குறித்து மற்­றவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வதை ஊக்­கு­விப்­பதன் மூலம் தற்­கொ­லை­களை தடுப்­ப­தற்கு ஜேம்ஸ் குக் பல்­க­லைக்­க­ழக மிரு­க ­வைத்­தி­யத்­துறை மாணவ,­ மா­ண­விகள் திட்­ட­மிட்­டனர்.

 

2028439.jpg

 

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமது அந்­த­ரங்­கங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அவர்கள் தீர்­மா­னித்­த­னராம்.

 

இவர்­களின் நிர்­வாண புகைப்­ப­டங்கள் 2017 ஆம் ஆண்­டுக்­கான கலண்டர் ஒன்றில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

 

இக்­க­லண்டர் விற்­பனை மூலம் கிடைக்கும் நிதியில் 10 சத­வீதம் “ரை அப் பிளெக் டோக்” எனும் தொண்டு நிறு­வ­னத்­துக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்தொண்டு நிறுவனம், குயின்ஸ்லாந்தில் தொலைதூர பிரதேசங்களில் மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவி வருகிறது.

 

metronews.lk

  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனை செய்த PPAP பென் பைனாப்பிள் பென்

 

 

 

சமீபத்தில் பிரபலமான PPAP பைனாப்பிள் பென் பாடலை மறக்க முடியாது. இப்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது இந்தப் பாடல். அமெரிக்காவின் பில்போர்டு டாப் 100 பாடல்கள் லிஸ்ட்டில் கடந்த 26 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட முதல் ஜப்பானியப் பாடல் இதுதான். இந்த லிஸ்ட்டில் இணைந்த மிகச்சிறிய பாடலுக்கான கின்னஸ் சாதனை பைனாப்பிள் பெண் பாடலுக்குத்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.