Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

p68a.jpg

*ம்மா ஆகிவிட்டார் கரீனா கபூர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சயீஃப் அலிகானைத் திருமணம் செய்த கரீனாவுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. `தைமூர் அலிகான்’ என, குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே பெயரை ட்விட்டரில் அறிவித்தார் சயிஃப் அலிகான். ஒருபக்கம் வாழ்த்துக்கள் குவிய, மறுபக்கம் சயிஃபுக்குக் கடும் கண்டனங்கள். `தைமூர், 70,000 பேரை வெட்டிக்கொலை செய்த மிக மோசமான ரத்தவெறி பிடித்த மன்னன். அவனுடைய பெயரை எப்படி வைக்கலாம்?’ என ட்வீட்டுகள் பறந்தன. பேருக்கெல்லாம் போரா!


p68b1.jpg

*``கவர்ச்சியாக நடிப்பது ஈஸி! எனப் பலரும்நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், கவர்ச்சி ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒரு பாடலில் கவர்ச்சியாக ஆடவேண்டியிருந்தால், அதுக்கு முந்தைய நாள் இரவு எதுவும் சாப்பிட மாட்டேன். ஷூட்டிங் முடியும் வரை தண்ணிகூடக் குடிக்க மாட்டேன். வயிறு கொஞ்சம்கூட வீங்கின மாதிரி தெரியக் கூடாதுங்கிறதுக் காகத்தான் இத்தனை கஷ்டங்களும். ஷூட் முடிஞ்சதும் ஸ்பாட்ல இருக்கிறவங்களே ‘ஐயோ பாவம்... ரகுலுக்கு சோறு வைங்கப்பா!’னு சொல்ற நிலையில் இருப்பேன்’’ என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். நீ சாப்பிடு செல்லம்!


p68c.jpg

*`என் உடல் குறித்து நான் என்றுமே மகிழ்ச்சி அடைந்தது இல்லை. சொல்லப்போனால், என் உடலைப் பார்த்தால் எனக்கு தாழ்வுமனப்பான்மைதான் அதிகமாகும்’ எனச் சொன்னது சாதாரண மனிதர் அல்ல... பாடிபில்டர், ஃபிட்னெஸ் குரு என உலகம் முழுவதும் கொண்டாடப்படும் அர்னால்டு ஸ்வாஸ்நேகர். 69 வயதாகும் அர்னால்டு, வயதான தன் உடலைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு கோபமும் வெறுப்பும் வருவதாக சமீபத்திய பேட்டியில் புலம்பியிருக்கிறார். `உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு, வொர்க்அவுட் செய்தால் போதுமானது’ என்றும் சொல்லியிருக்கிறார் முன்னாள் மிஸ்டர் ஒலிம்பியன். அர்னால்டையே அலறவைச்சுட்டாங்களே!


p68d.jpg

*2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறார், எழுத்தாளர் வண்ணதாசன். ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணதாசன், அழகியல் ததும்பும் நெகிழ்வான, உணர்வுபூர்வமான, கவித்துவமான சிறுகதைகளால் தனித்துவம் பெற்றவர். `கல்யாண்ஜி’ என்ற புனைப்பெயரில் கவிதை இலக்கியத்திலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து இயங்கிவரும் வண்ணதாசன், இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுபவர். அள்ள அள்ள அன்பு!


p68e.jpg

*வி.ஐ.பி 2’-வில் தனுஷுடன் படம் முழுக்க மோதப்போகிறார் கஜோல். படத்தில் ‘படையப்பா’ நீலாம்பரிக்கு இணையான நெகட்டிவ் கேரக்டராம் கஜோலுக்கு. பல கோடி ரூபாய் சம்பள டீலுக்குப் பிறகு ஓ.கே சொல்லியிருக்கிறார் கஜோல். இதே கேரக்டரில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். கோடி லேடீஸ்!


p68f.jpg

*ந்திய கால்பந்துக்கே அடையாளம் கொடுத்தவர் ஐ.எம்.விஜயன். ஆனால், அவருக்கே மரியாதை கொடுக்கத் தவறிவிட்டது கேரள கால்பந்து சங்கம். கொச்சியில் நடந்த ஐ.எஸ்.எல் இறுதிப்போட்டிக்கு சச்சின், கங்குலி ஆகியோரின் வருகை உறுதியாக, அவர்களோடு போட்டியைக் காண ஆசையாக இருந்த விஜயனுக்கு, கேரள கால்பந்து சங்கம் கொடுத்தது சாதாரண டிக்கெட். விஜயன் வெடிக்க, ‘உங்களுக்கெல்லாம் அதிகபட்சம் இவ்வளவுதான் செய்ய முடியும்’ என்றது கேரள கால்பந்து நிர்வாகம். விஷயத்தைக் கேள்விப்பட்டு, விஜயனுக்கு போன் அடித்திருக்கிறார் நிவின் பாலி. ‘நீங்க சாதாரண கேலரியில் இருக்கிறப்ப, நாங்க எப்படி விவிஐபி பகுதியில் உட்கார்ந்து பார்க்க முடியும்?’ என்றவர் நிர்வாகிகளிடம் பேசி விஜயனை அழைத்துவந்து விவிஐபி பகுதியில் உட்காரவைத்திருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோ நிவின்!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சசிகலாவா? சசிகலா புஷ்பாவா? கன்ஃப்யூஸான பத்திரிகை

 

15824675_583504768514561_1033073445_o_16

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து வெளிவரும் 'Daily Observer' என்ற நாளிதழ், அதனுடைய முதல் பக்கத்தில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கிறார் என்ற செய்திக்கு, தவறாக அக்கட்சி ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவின் படத்தை பேப்பரை அச்சிட்டுவிட்டது. இதையடுத்து இந்தப் படத்தை வைத்து நெட்டிஸன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

  • தொடங்கியவர்

மீம் பாய்ஸ்... மீம் பாய்ஸ்... இந்த வருஷம் எப்படிலாம் கலாய்ச்சீங்க? #MemeCreators #PartOne

 

உலகத்துல எது நடந்தாலும் எல்லாத்துக்கும் மீம் போட்டு காமெடி பண்றதுதான் மீம் பாய்ஸ் வேலை. மோடி வெளிநாட்டுக்குப் போனாலும் சரி, வர்தா உள்நாட்டுக்கு வந்தாலும் சரி எதுவா இருந்தாலும் மீம் போடுறதான் இப்போ இருக்கிற ட்ரெண்ட். மீமோடு விளையாடி, மீமோடு உறவாடினு சொல்ற ரேஞ்சுக்கு 2016 ஃபுல்லா சோஷியல் மீடியாவை மீம் போட்டு மீமோ பேட்டையா மாத்திட்டாங்க. ஏ.டி.எம் லைன்ல நிற்கிறப்பகூட பிசியா மீம் போட்டு சோஷியல் மீடியாவில் பெரிய சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ண இவங்கதான் ஃப்ரெண்ட்ஸ் 2016-ஐ கலக்கின பெஸ்ட் மீம்ஸுக்கு சொந்தக்காரங்க. அவங்களோட அனுபவங்களை அவங்களே சொல்றாங்க பாருங்க...

அருண் சாய் :

2015 நவம்பர் மாசத்துல ஒரு நல்ல நாள்லதான் முதல்முதல்ல மீம் போட ஆரம்பிச்சேன். என் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்த நிறையப் பேர் அப்போ மீம் போட்டுட்டு இருப்பாங்க. கரெக்டா அப்பதான் மீம் போடுற ட்ரெண்ட் பெருசாக ஆரம்பிச்சது. ஸோ அப்படியே நானும் கொஞ்சம் கொஞ்சமா அவங்களைப் பார்த்து மீம் போடக் கத்துகிட்டேன். நான் போட்ட மீம்ஸ் நல்லா இருந்திச்சுனு நிறையப் பேர் சொன்னாங்க, அதனால அப்படியே கன்டினியூ பண்ணேன். மீம் போட ஆரம்பிச்ச கொஞ்சநாள்லயே எல்லோரும் பாராட்டினாங்க, சப்போர்ட் பண்ணாங்க. இப்போவரைக்கும் மீம் போட்டுகிட்டு இருக்கேன். எனக்கு மழை வந்தப்போ ரமணன் சாரை வெச்சு க்ரியேட் பண்ண மீம் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதை கான்செப்ட்டா வெச்சே நிறைய மீம் பண்ணேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச மீம் டி.ராஜேந்தர் சாரை வெச்சு பண்ணின மீம்தான்.

மீம் பாய்ஸ்

பஞ்சா பாஸ்கர் :

சென்னையில் வெள்ளம் வந்த டைம்லதான் ஃபர்ஸ்ட் மீம் போட்டேன். சும்மா அப்போ நடந்த சில விஷயங்கள் வெச்சு ஃபன்னுக்காகப் போட ஆரம்பிச்சேன். முதல்ல வாட்டர் மார்க் இல்லாமத்தான் ஸ்டார்ட் பண்ணேன். அது நிறைய பேஜ்ல ஷேர் ஆனது. யாருக்குமே அது நான் போட்ட மீம்னு தெரியலை. அப்புறம் `பஞ்சா` அப்படின்னு  வாட்டர் மார்க் போட ஆரம்பிச்சேன். இப்போ அது ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டு. ஒரு வருஷம் ஆகிடுச்சு. அப்போ இருந்து இன்னும் மீம் போட்டுகிட்டு இருக்கேன். நிறையப் பேர் நான் போடுற மீம்ஸ் டெம்ப்ளேட் வாங்கிப் போடுவாங்க. இதுல ஒருத்தர் '2.0' படத்தோட க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட்லாம் வந்து கேட்டாரு. என்னோட ஃபர்ஸ்ட் 1k மீம்தான் எனக்குப் பிடிச்ச மீம்.

மீம் கிரியேட்டர்

விக்னேஷ்வரன் .எஸ்.பி : 

நான் மீம்ஸ் போட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பேர் மீம்ஸ் போட்டுகிட்டு இருந்தாங்க. அதெல்லாம் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். சும்மா ஜாலியா மீம் பார்த்துட்டுப் போயிடுவேன். அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு நாமளும் ஏன் மீம் போடக் கூடாதுனு தோணுச்சு. அப்படித்தான் மீம் போடவே ஆரம்பிச்சேன். எனக்கு ஒருத்தங்களோட உருவத்தை வெச்சுக் கிண்டல் பண்றது பிடிக்காது. லைஃப்ல நடக்கிற சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் வெச்சு மட்டும்தான் அதிகமா மீம் பண்ணுவேன். வேற யாரையும் ட்ரோல் பண்ண மாட்டேன்.

மீம் கிரியேட்டர்


ஆதித்யா ராமன் :

நான் மீம் பண்ண ஆரம்பிச்சது 2014-ல். முதலில் இங்கே மீம் கல்ச்சர் தொடங்குறதுக்கு முன்னாடி ஃபாரீன்ல நிறையப் பேர் பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தமிழ்லேயும் அந்த மாதிரி மீம் போடுற ட்ரெண்ட் ஆர்ம்பிச்சது. அப்படியே அதெல்லாம் ஃபாலோ பண்ணி நானும் மீம் போட ஆரம்பிச்சேன். வாழ்க்கைல நடக்கிற எல்லா விஷயத்தையும் மீமா போடுவேன். இதுக்காக ஜோக்கர் மீம்ஸ்னு ஃபேஸ்புக் பேஜே ஆரம்பிச்சிட்டேன். வடிவேலு காமேடி வெச்சுதான் அதிகமா மீம்ஸ் போட்டு இருக்கேன். மோடி, டிமானிடைஷேன் பற்றிலாம் பண்ணி இருக்கேன்.

மீம் கிரியேட்டர்


 

பபீன் லியோ ஜோசப் : 

வெளிநாட்டில் ஒரு வேலைக்காக போய் இருந்தப்போ தனியா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனு மீம் போட ஆரம்பிச்சேன். அது அப்படியே பெருசாகிட்டு. டைம்பாஸ் பேஜ்ல சில மீம்ஸ் வந்துச்சு. அது மூலமாதான் ரொம்ப ஃபேமஸ் ஆனேன். நிறையப் பேர் பாராட்டி இருக்காங்க. எங்கேயோ இருக்கிற சிலர் நம்ம மீம் பார்த்து சிரிக்கிறாங்கனு ரொம்ப சந்தோசமா இருக்கும். மக்களை சிரிக்க வைக்கிறதை விட பெரிய விஷயம் என்ன இருக்கு. 'சிங்கம்' படத்தையும், ஜேம்ஸ் பாண்டையும் வெச்சு ஒரு மீம் பண்ணேன். அது ரொம்ப ஃபேமஸ். எனக்கும் ரொம்பப் பிடிக்கும். எல்லோரையும் எப்பவும் சிரிக்க வைக்கணும்.

மீம் கிரியேட்டர்

 

தினேஷ் பிரபு :

ஆக்சுவலி நான் ஒரு டாக்டர். மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் மீம் போட ஆரம்பிச்சேன். அப்போ பொதுவா யாருமே தமிழ்நாட்டுல மீம் போட மாட்டாங்க. சென்னை மெடிக்கல் காலேஜ் மீம்ஸ் அப்படின்னு ஒரு பேஜ் இருந்தது. அந்த பேஜ் எனக்குப் பிடிச்சு இருந்தது. அதைப் பார்த்துதான் மீம் போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல எது கிடைச்சாலும் மீம் போடுவேன். அப்பறம் செலக்டிவ்வா பண்ண ஆரம்பிச்சேன். யாரையும் தாக்கி மீம் போடப் பிடிக்காது. தமிழ்நாட்டுல இப்போ யாரைக் கேட்டாலும் மீம் க்ரியேட்டர்ஸ் அப்படின்னுதான் சொல்றாங்க. மீம் க்ரியேட்டர்ஸுக்கும் ஒரு கொள்கை இருக்கணும். எல்லாத்துக்கும் மீம் போடாம நல்லதா, செலக்டிவ்வா மீம் போட்டாலே போதும். எனக்கு நிறைய மீம் க்ரியேட்டர்ஸ் பிடிக்கும் .சிபியோட மீம்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

மீம் கிரியேட்டர்

தமிழ்மணி ராமதாஸ் :

அது ஒரு மோசமான ஹிஸ்ட்ரி ப்ரோ. எப்பவும் வெளிநாட்டுல வர்ற மீம்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுவேன். அப்படித்தான் சும்மா டைம்பாஸ் பண்றதுக்காக மீம்ஸ் போட ஆரம்பிச்சேன். அப்பதான் தமிழ்லேயும் மீம்ஸ் போட்டா ஹிட் ஆகும்னு தெரிஞ்சது. நான் பண்ண ஆரம்பிச்ச டைம்ல மீம் கிரியேட்டர்ஸ் ரொம்ப கம்மி. அதான் நாமளும் ட்ரை பண்ணலாம்னு ஆரப்பிச்சேன். இப்போ மீம் க்ரியேட்டர்ஸ் எத்தனைப் பேர் இருக்காங்கன்னு கேட்டா, 'வானத்தை போல' படத்துல விஜயகாந்த்கிட்ட மண்ணை அள்ளிக் காட்டி எவ்வளவு இருக்குனு கேட்பாங்கள்ல. அந்த மாதிரிதான் சொல்லணும். எனக்கு செந்தில், கவுண்டமணி வெச்சு பண்ற மீம்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

tamil_mani_16238.jpg

கணேஷ் கிருஷ்ணமூர்த்தி : 

2010-ல் மீம் போட ஆரம்பிச்சேன். ஆனா ரொம்ப சீரியஸா களத்துல இறங்கினது 2013-ல் தான். மோஸ்ட்லி நான் இதுவரைக்கும் பண்ண மீம் எல்லாமே ரொம்ப ரசிச்சு பண்ணதுதான். எல்லாமே பிடிக்கும். பொதுவா சிச்சுவேஷனுக்கு மூவி செட் ஆகிட்டுனா மீம் போடுவேன். இதுவரைக்கும் விஜயகாந்த் வெச்சு ரெண்டே ரெண்டு மீம்தான் பண்ணிருக்கேன். மீம் பண்றது நல்ல விஷயம்தான். ஆனா இப்போ அதிகமா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்துக்கும் மீம் போட ஆரம்பிச்சிட்டாங்க. ஏதோ அவசியமா பண்ணியே ஆகனும்னு பண்ற மாதிரி இருக்கு. எதுவுமே அதிகமா பண்ணா நல்லா இருக்காது. நான் பண்ண மீம்ல நாரதர் மீம் ரொம்பப் பிடிக்கும்.

மீம் கிரியேட்டர்

 

vikatan

  • தொடங்கியவர்

புத்தாண்டை வரவேற்ற முதல் நகரம்!

 

auckland_nz_new_years_eve_fireworks_1820

2017 புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்துவிட்டது. 2017 புத்தாண்டை வரவேற்ற முதல் நகரம் நியூசிலாந்தின்  ஆக்லாந்து.  இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தின் தலைநகரான ஆக்லாந்து வீதிகள் மக்களின் கொண்டாட்டங்களினால் நிரம்பியுள்ளது. நள்ளிரவு 12 மணி ஆனதும் வான வேடிக்கைகளால் அந்நகரமே ஒளிமையமானது. நியூசிலாந்தை தொடர்ந்து ரஷ்யாவிலும் (இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ), ஆஸ்திரேலியாவிலும் (6.30 மணிக்கு) புத்தாண்டு பிறக்கிறது.

WR_20161231184906.jpeg

ஆங்கில புத்தாண்டையொட்டி நியூசிலாந்து நாட்டில் பிரசித்தி பெற்ற ஆக்லாண்ட் ஸ்கை டவரில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

  • தொடங்கியவர்

மீம் பாய்ஸ்... மீம் பாய்ஸ்... இந்த வருஷம் எப்படிலாம் கலாய்ச்சீங்க? #MemeCreators #PartTwo

 

உலகத்துல எது நடந்தாலும் எல்லாத்துக்கும் மீம் போட்டு காமெடி பண்றதுதான் மீம் பாய்ஸ் வேலை. மோடி வெளிநாட்டுக்குப் போனாலும் சரி, வர்தா உள்நாட்டுக்கு வந்தாலும் சரி எதுவா இருந்தாலும் மீம் போடுறதான் இப்போ இருக்கிற ட்ரெண்ட். மீமோடு விளையாடி, மீமோடு உறவாடினு சொல்ற ரேஞ்சுக்கு 2016 ஃபுல்லா சோஷியல் மீடியாவை மீம் போட்டு மீமோ பேட்டையா மாத்திட்டாங்க. ஏ.டி.எம் லைன்ல நிற்கிறப்பகூட பிசியா மீம் போட்டு சோஷியல் மீடியாவில் பெரிய சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ண இவங்கதான் ஃப்ரெண்ட்ஸ் 2016-ஐ கலக்கின பெஸ்ட் மீம்ஸுக்கு சொந்தக்காரங்க. அவங்களோட அனுபவங்களை அவங்களே சொல்றாங்க பாருங்க.

வெங்கட் பிரசன்னா : நான் ஐ.டி-ல வேலை பார்த்துகிட்டு இருக்கேன். 2013-ல் 'பரதேசி' படம் வந்தது, அப்போதான் முதன்முதலா மீம் போட்டேன். அந்த மீம்ல பாலா சார் ஷூட்டிங் ஸ்பாட்ல கூட்டமா
மக்கள்கிட்ட வேலை வாங்குவார்.  அதை வெச்சு ஆபீஸ் சம்பந்தமா ஒரு மீம் பண்ணி இருந்தேன். அப்போ ஆரம்பிச்சது விடாம மீம் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு வடிவேல் அண்ட் விவேக் வெச்சு மீம் க்ரியேட் பண்ண ரொம்பப் பிடிக்கும். அப்புறம் சில டைம்ஸ் கான்செப்ட்ஸ் வெச்சு நிறைய மீம் வித்தியாசமா பண்ணியிருக்கேன். எனக்கு நான் பண்ணதுல 'விருமாண்டி' இன்டர்வியூ வெச்சு பண்ண குக்கிங் ரொம்பப் பிடிக்கும்.

மீம் பாய்ஸ்

விஷாகன் சவுந்தர்ராஜன் : திலீபன் குருசேவ் அப்படினு ஒருத்தர் மீம் பண்ணீட்டு இருந்தாரு. மீம் போடுறதுல எனக்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். எனக்கு கவுண்டமணி, செந்தில் வெச்சு செய்ற மீம் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதிகமா அப்படித்தான் பண்ணிருக்கேன். இயல்பாவே மீம்ஸ் அவங்களை வெச்சுப் பண்ணலாம். தனி மனித தாக்குதல் பண்ண மாட்டேன். விவேக் 'குஷி' படத்துல ரெண்டு காலையும் சேர்த்து தூக்கி டான்ஸ் ஆடச் சொல்வார்ல... அதை வெச்சு பண்ண மீம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மீம் பாய்ஸ்

காட்டு பூச்சி : என்னோட உண்மையான பேரு ராஜ்குமார். நானும் என் காலேஜ் ஃப்ரெண்ட் நிஜோம் குமார் ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பேஜ் ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல சும்மா போட்டோ போட்டு அதுக்கு கேப்ஷன் மாதிரி எழுதிப் போடுவோம். அதெல்லாம் மீமே கிடையாது. அப்பல்லாம் அது மாதிரி நிறைய போஸ்ட் வந்தது. அப்போ எம்.எஸ் பெயின்ட்லதான் பண்ணுவோம். இப்பதான் ஆண்ட்ராய்டுக்கு மாறி இருக்கோம். எப்பவுமே மீம் எல்லாம் டைமிங்கா ட்ரெண்ட் பிடிச்சுதான் பண்ணுவோம். கிரிக்கெட், சென்னைஸ் அமிர்தா, விஜயகாந்த், எலக்‌ஷன், அப்படின்னு என்ன டாபிக் கிடைச்சாலும் மீம் பண்ணுவோம். வடிவேல் சார் வெச்சு மீம் பண்ணத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் இல்லாம மீமே இல்லை.

மீம் பாய்ஸ் - காட்டுப்பூச்சி

சிவகுமார் தேவசகாயம் : ஆரம்பத்துல ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணிட்டு இருந்தேன். ஃபேஸ்புக்ல பார்க்கிற மீம்ஸ் எல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். எனக்குப் படம் எடுக்கணும்னு ஆசை. அதனால மக்களோட மனநிலையைத் தெரிஞ்சிக்கிறதுக்காக மீம் பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நானா என் புரோஃபைல்ல போடல. மீம் க்ரியேட் பண்ணி பேஜ் எல்லாத்துக்கும் அனுப்புவேன். அவங்க நல்லா சப்போர்ட் பண்ணாங்க. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா என் புரோஃபைல்ல பண்ண ஆரம்பிச்சிட்டேன். அப்படியே கொஞ்சநாள்ல வீடியோ மீம்ஸூம் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எனக்கும் வடிவேல்தான் பிடிக்கும். எல்லா வீடியோ மீம்லயும் கடைசியா ஒரு மோட்டிவேஷன் டச் வெச்சுருப்பேன். அது நிறையப் பேருக்குப் பிடிக்கும். அந்த மீம் எல்லாம் இவ்வளவு ரீச் ஆகும்னு நினைக்கவே இல்லை.

 

 

 

கோகுல் கொசக்சி : இந்த வருசம்தான் மீம் க்ரியேட் பண்ண ஆரம்பிச்சேன். ஒரே வருசத்துல இந்த அளவுக்கு ரீச் ஆக எல்லோரும் பண்ண சப்போர்ட்தான் காரணம். எப்பவும் பக்கத்துல  இருக்கிறவங்களை சந்தோசப்படுத்தி பார்க்கப் பிடிக்கும். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் மீம் பயணம். எல்லோரும் நல்லா என்கரேஜ் பண்ணாங்க. என்னோட 100-வது மீமை 360 டிகிரி மீமா போட்டேன். அது நல்லா ரீச் ஆனது. எனக்கும் என்னோட அந்த 360 மீம் ரொம்பப் பிடிக்கும். பெண்களை சப்போர்ட் பண்ற மாதிரி சில மீம்ஸ் போட்டு இருக்கேன், அதுவும் பிடிக்கும்.

மீம் பாய்ஸ்


பரோட்டா மாஸ்டர் : என்னோட உண்மையான பேரு கெளதம். விஸ்காம் படிச்சு இருக்கேன். முதல்ல எதுவுமே தெரியாம மீம் போட ஆரம்பிச்சதால வடிவேலு காமெடியில் வர்ற பரோட்டா மாஸ்டர் அப்படிங்கிற வார்த்தையை வெச்சேன். ஆரம்பத்துல சும்மா வாட்ஸ் அப் குருப்ல காமெடி பண்ணத்தான் பேஜ் ஆரம்பிச்சேன். போகப்போக நிறையப் பேர் சப்போர்ட் பண்ணாங்க. எனக்கு மீம் சீரியஸ் பண்ண ரொம்பப் பிடிக்கும். தமிழர்கள் vs மத்திய அரசு அப்படினு ஓர் அரசியல் ஆல்பம் பண்ணினேன். அப்பறம் எதோ ஒரு கிராமத்தில் அப்படின்னு இன்னொரு சீரியஸும் பண்ணினேன். விஜயகாந்த், மோடி, சரத்குமார் இவங்களை எல்லாம் வெச்சு மீம் பண்ணப் பிடிக்கும்.

மீம் பாய்ஸ்

இக்னாடியஸ் கெளதம் : நான் மீம் போட ஆரம்பிச்சது போன வருசம் மார்ச் மாசத்துலதான். அப்போ கிரிக்கெட் வேர்ல்ட் கப் நடந்துகிட்டு இருந்தது அதை வெச்சுப் பண்ணேன். மீம் போடுறவங்கள்ல பஞ்சா பாஸ்கர், அருண் சாய், விக்னேஷ்வரன், பாலா ஜித் இவங்களை எல்லாம் பிடிக்கும். வைகோ வெச்சு நிறைய மீம்ஸ் பண்ணி இருகேன். அந்த மாதிரி மீம் போட பிடிக்கும். அப்புறம் விஜகாந்த் வெச்சும் மீம் பண்ணப் பிடிக்கும். அவரை யாருக்குதான் பிடிக்காது.

மீம் பாய்ஸ்

 

vikatan

  • தொடங்கியவர்

மகிழ்ச்சி... வெளியானது கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்! (வீடியோ)

 

கபாலி

டந்து போகவிருக்கும் 2016ம் ஆண்டின் மத்தியில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பாடவைத்த திரைப்படம், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பட்டையைக் கிளப்பிய ’கபாலி’.

கபாலியின் டீசர், டிரெய்லர், பாடல்கள் என்று இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு வீடியோவுமே அட்டகாசமான ‘வேற லெவல்’ வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. வெளியாகும் முன்பே அதிரிபுதிரி எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய ‘கபாலி’ வெளியானபின்பும் காட்சியமைப்புகளில் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 

இந்நிலையில் கபாலியில் நீக்கப்பட்ட காட்சிகளை இன்று யூடியூபில் ரசிகர்களுக்காக ரீலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். இதனை நேற்றே ட்விட்டரில் அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு. ஏற்கனவே படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடிய நிலையில், நீக்கப்பட்ட காட்சிகளையும் கூட வெளியான சிறிது நேரத்திலேயே பல லட்சம் ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதுதான் ‘கபாலி’யின் வெற்றி ரகசியம். 

பிறக்கப்போகும் புதுவருடத்தை நீங்கள் ‘கபாலி’யுடன் இணைந்து கொண்டாட அந்த வீடியோ லிங்க்குகள் இங்கே உங்களுக்காக:

 

 

 

 

 

...

vikatan

  • தொடங்கியவர்

ஆபாச பதிவு செய்தவருக்கு இளம்பெண்ணின் திடுக் தண்டனை !

 

c2_15215.jpg

Photo Source : Facebook

மூக வலைதளங்களில் தன்னைப்பற்றி ஆபாசமாக எழுதிய கேரளா அரசியல்வாதியை மன்னிப்பு கேட்க வைத்ததோடு, தவறுக்கு தண்டனையாக அவரை ஆதரவற்றோர் காப்பகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்.

உங்களுக்கு ஒரு போன் வருகிறது. மிக மோசமான பேச்சுடன் துவங்குகிறது அந்த உரையாடல். பாலியல் தொழிலாளியைப் போல் சித்தரித்து உங்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தால் என்ன செய்வீர்கள். சொல்ல முடியாத மன ரீதியான அழுத்தத்துக்கு உள்ளாவீர்கள். அதே தான் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஶ்ரீலட்சுமி என்பவருக்கு ஏற்பட்டது. ஆனால் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல், புத்திசாலித்தனத்தோடு இயங்கி அதில் இருந்து வெளியே வந்துள்ளார் அவர்.

அண்மையில் ஶ்ரீலட்சுமிக்கு ஒரு அழைப்பு வந்தது. பாலியல் தொழிலாளியைப்போல சித்தரிக்கப்பட்டிருந்தது அந்த கேள்விகள். அதிர்ந்து போன ஶ்ரீலட்சுமி, அந்த அழைப்பை துண்டித்தார். ஆனால் அது முற்று பெறவில்லை. தொடர்ச்சியாக அவருக்கு அதுபோன்ற அழைப்புகள் வரத்துவங்கியது. என்ன செய்வது எனத்தெரியாமல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்தார். ஆனால் அதோடு அவர் அழுது உட்காரவில்லை.

எல்லோருடைய கேள்வியும் ஒரே மாதிரியே இருந்ததால், எப்படி இது நடந்தது என யோசிக்கத் துவங்கினார். தனக்கு வந்த ஒரு எண்ணுக்கு அழைத்து பேசினார். தான் கல்வி ஆலோசகர் என்றும், பல கல்விநிறுவனங்களில் தொடர்ந்து  புத்துணர்வு முகாம்களையும் நடத்தி வருவதையும் சொல்லி, தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார். அந்த நபர் ஶ்ரீலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டார். "உங்களைப்பற்றி எனக்கு தெரியாது. வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் பாலியல் தொழிலாளி என அடையாளப்படுத்தப்பட்டு உங்கள் எண் குறிப்பிடப்பட்டிருந்தது" என மன்னிப்புக்கேட்ட அவர், ஶ்ரீலட்சுமியின் எண்ணை ஷேர் செய்தவரின் விவரத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினார்.

c1_15365.jpg

Photo Source : Facebook

ஶ்ரீவித்யாவின் எண்ணை சமூக வலைதளங்களில் இப்படி ஷேர் செய்தவர், தேசிய கட்சி ஒன்றின் இளைஞர் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி என்பது தெரியவந்தது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஶ்ரீலட்சுமி முயற்சி எடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த அந்த தேசிய கட்சி நிர்வாகிகள், "ஶ்ரீலட்சுமியை சந்தித்து, பிரச்னையை பேசித்தீர்த்துக்கொள்ளலாம். அவரை கட்சியில் இருந்து நீக்கி விடுகிறோம். நடவடிக்கை எடுக்கிறோம். புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்," என கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தார் ஶ்ரீலட்சுமி. அப்போது ஶ்ரீலட்சுமியை அந்த நபரின் வயது முதிர்ந்த பெற்றோர்கள் சந்தித்து மன்னிப்பு கேட்டனர். அப்போது உங்கள் மகன் ஏதாவது ஒரு மக்கள் அறக்கட்டளைக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி, அதன் ரசீதை கொடுத்தால் போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபரின் பேரில் ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு உணவுக்காக ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்ததையடுத்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவில்லை. அதே சூழலில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடாமல் பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை போட்டார். அதில் அறக்கட்டளைக்கு 25 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்ட ரசீதையும் இணைத்திருந்தார். அதில் அந்த நபரின் பெயர் மட்டும் மறைக்கப்பட்டிருந்தது.

.vikatan

  • தொடங்கியவர்

அன்றைக்கும்... இன்றைக்கும்... என்றைக்குமான புத்தாண்டு பொன்மொழிகள் 10.

 

பொன்மொழிகள்

ம் எதிரே புதிதாக ஓர் ஆண்டு! ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியன்று, புத்தாண்டுக் கொண்டாட்டம், பெரும்பாலானோர் எடுக்கும் தீர்மானங்கள், தலைவர்கள்-பிரபலங்கள் அருளும் வாழ்த்துச் செய்திகளைப்போல பொன்மொழிகளுக்கும் பிரத்தியேகமான ஓர் இடம் உண்டு. கடைப்பிடிக்க முடிகிறதோ, இல்லையோ... பல பொன்மொழிகள் நம்மைச் சிந்திக்கவைப்பவை. உலக அளவில் சில பிரபலங்கள் புத்தாண்டை ஒட்டி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன பொன்மொழிகள் இங்கே... 

277274_17305.jpg

``இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

*** 

``ஒரு புத்தகத்தின் அத்தியாயம் எழுதக் காத்திருப்பதைப்போல், புது வருடம் நம் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக, அந்தக் கதையை எழுத நாம் உதவுவோம்.’’ 

- மெலடி பீட்டி (அமெரிக்க எழுத்தாளர்)

*** 

``என் புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் கேட்டால், அது நான் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்காகத்தான் இருக்கும்.’’

-  சிரில் குஸேக் (ஐரிஷ் நடிகர்).

*** 

332865_17032.jpg

``புத்தாண்டு தினம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்தநாள்.’’

- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)

*** 

``புத்தாண்டை வரவேற்போம்; அதை உரிமையோடு பெறுவதற்கு நமக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.’’

- ஓபரா வின்ஃப்ரே (அமெரிக்க நடிகை)

*** 

``தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’

- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)

*** 

313475_17514.jpg

``உங்கள் குற்றங்களுடன் போரிடுங்கள்; அக்கம்பக்கத்தாருடன் அமைதியைப் பேணுங்கள்; பிறக்கும் ஒவ்வோர் ஆண்டும் உங்களைச் சிறந்த மனிதனாக அடையாளம் காணச் செய்யுங்கள்!’’

- பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (நவீன அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவர், விஞ்ஞானி). 

*** 

``அன்றன்றைய நாளுக்கான தீர்மானங்களைத்தான் நான் யோசிக்கிறேனே தவிர, ஆண்டுகளுக்காக அல்ல.’’

- ஹென்றி ஸ்பென்சர் மூர் (இங்கிலாந்து சிற்பி மற்றும் ஓவியர்)

*** 

``நாம் எல்லோருமே ஒவ்வொரு வருடமும் வேறொரு ஆளாக இருக்கிறோம்.  நம் வாழ்க்கை முழுக்க ஒரே மாதிரியான ஆளாக நாம் இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.’’

- ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (இயக்குநர்). 

*** 

308851_17169.jpg

``வருகிற ஆண்டிலும் நீங்கள் தவறுகள் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் தவறுகள் செய்த பிறகுதான் புதிய விஷயங்களைச் செய்கிறீர்கள்;  புதியவற்றை முயற்சிக்கிறீர்கள்; கற்றுக்கொள்கிறீர்கள்; அதற்காக வாழ்கிறீர்கள்; உங்களை முன்னுக்குக்கொண்டு வருகிறீர்கள்; உங்களை நீங்களே மாற்றிக்கொள்கிறீர்கள்; உங்கள் உலகத்தையும் மாற்றுகிறீர்கள். இதற்கு முன்னர் செய்யாதவற்றையெல்லாம் செய்கிறீர்கள். மிக முக்கியமாக, நீங்கள் ஏதோ செய்துகொண்டு இருக்கிறீர்கள்.’’

- நெயில் கெய்மேன் (இங்கிலாந்து எழுத்தாளர்). 

vikatan.

  • தொடங்கியவர்

விஜய் நடிக்கும் பைரவா பட ட்ரெய்லர்

 

பரதன்-விஜய் காம்போவில் உருவாகியிருக்கும் படம் பைரவா. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசையில் இதன் திம் மியூஸிக் வரவேற்பை பெற்றுள்ளது.  இதன் டீசர் மற்றும் இசை ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தான படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லரின் கடைசியில் வரும் 'நான் வரேன், தனியா வரேன்' என்ற பன்ச், விஜய் ரசிகர்களிடையே எதிரப்பார்ப்பை எகிற வைக்கும். படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

 

  • தொடங்கியவர்

புகழ் பெற்ற அறைக்கலன் மாதிரிகள்

 

 
table_3111294f.jpg
 
 
 

வீட்டுக்கு அழகு சேர்ப்பதில் அறைக்கலன்களுக்கு (Furnitures) முக்கியப் பங்குண்டு. ஆரம்ப காலத்தில் அறைக்கலன்கள் என்பது செல்வந்தர்கள் வீடுகளை மட்டுமே அலங்கரித்து வந்தன. இன்று பரவலாக எல்லாத் தரப்பு மக்களும் அறைக்கலன்களைப் பயன்படுத்திவருகிறார்கள். இதற்குக் காரணம் புதிய தொழில்நுட்பம். மரத்தைக் கொண்டு மட்டும்தான் முதலில் அறைக்கலன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. புதிய அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு பிளாஸ்டிக், இரும்பு போன்ற பொருள்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறைக்கலன்கள் வடிவமைப்பில் புதுமையை உண்டாக்கிய உலக முன்னோடிகள் குறித்து அவர்கள் கண்டுபிடித்த மாதிரி அறைக்கலனுடன் சிறு அறிமுகம்:

edward_3111302a.jpg

எட்வார்ட் வாம்லி (1907-1995), அமெரிக்காவைச் சேர்ந்த இவர், உலகின் மிகப் பிரபலமான உள் அலங்கார வடிவமைப்பாளராகத் திகழ்ந்துள்ளார். இவர் அறைக்கலன்கள் வடிவமைப்பிலும் பல புதுமைகளைக் கொண்டுவந்தார். டன்பார் என்னும் அறைக்கலன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இது இவர் வடிவமைத்த அறைக்கலன் மாதிரி.

 

greatta_3111299a.jpg

கிரெட்டா கிராஸ்மேன் (1906-1999), சுவீடனைச் சேர்ந்த இவர், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் சுவீடனிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகருக்கு இடம்பெயர்ந்தார். சுவீடனில் இருக்கும்போதே அறைக்கலன் வடிவமைப்பில் பயிற்சி பெற்றிருந்தார். சிறந்த அறைக்கலன் வடிவமைப்புக்கான விருதுகளும் பெற்றிருந்தார். அதனால் அமெரிக்காவில் லாஸேஞ்சல் நகரத்தில் அறைக்கலன் வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் அறைக்கலன் மட்டுமல்லாது விளக்குகள் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினார். அவர் வடிவமைத்த விளக்கு மாதிரிகள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

forge_3111301a.jpg

போர்ஜ் மோஜென்சன் (1914-1972), டென்மார்க்கைச் சேர்ந்த வடிவமைப்பாளரான இவர், அந்நாட்டின் தனித்துவமான கலாச்சாரத்தைத் தனது அறைக்கலன் வடிவமைப்பில் செலுத்தினார். தான் வடிவமைத்த அறைக்கலன்களுக்கான கண்காட்சியை இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்டப் பல நாடுகளில் நடத்தியுள்ளார். இவர் வடிவமைத்த ஸ்பானிய இருக்கை உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அறைக்கலன் மாதிரி.

 

arn_3111303a.jpg

ஆர்ன் ஜேக்கப்சன் (1902-1971), டென்மார்க்கைச் சேர்ந்த இவர், இருக்கை வடிவமைப்பில் உலகப் புகழ் பெற்றவர். முட்டை வடிவ இருக்கை, அன்னப் பறவை இருக்கை இவ்விரண்டு இருக்கை மாதிரிகளின் அவருக்கு மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

 

isamu_3111298a.jpg

இசமூ நொகுச்சி (1904-1988), அமெரிக்க வாழ் ஜப்பானியரான இவர் அமெரிக்காவின் நவீன அறைக்கலன் வடிவமைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவரது தந்தை ஜப்பானியக் கவிஞர். இவர் ஒரு சிற்பியும்கூட. இது இவர் வடிவமைத்த அறைக்கலன் மாதிரி.

 

olver_3111296a.jpg

ஆல்வர் ஆல்டோ (1898-1976), பின்லாந்தைச் சேர்ந்த இவர், மிகப் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளரும்கூட. அமெரிக்க ராயல் இன்ஸ்டியூட், இங்கிலாந்து ராயல் இன்ஸ்டியூட் ஆகிய அமைப்புகளிடமிருந்து கட்டிட வடிவமைப்புக்காக விருதுகள் பெற்றுள்ளார்.

 

marsel_3111297a.jpg

மார்செல் ப்ரூயர் (1902-1981), ஹங்கேரியைச் சேர்ந்த கட்டிட, அறைக்கலன் வடிவமைப்பாளர். இரும்புக் கம்பிகளையும் துணியையும் கொண்டு இவர் உருவாக்கி வாசிலி இருக்கை மாதிரி உலகப் புகழ்பெற்றது. அமெரிக்காவின் புரூக்ளின் அருங்காட்சியகத்தில் இவர் வடிவமைத்த அறைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

george_3111300a.jpg

ஜார்ஜ் நகஷிமா (1905-1990), அமெரிக்க வாழ் சீனரான இவர் கட்டிடவியலில் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் குடில் கட்டும் ஆணை அவருக்குக் கிடைத்தது. அங்குதான் நகஷிமா முதன் முதலாக அறைக்கலன் ஒன்றை வடிவமைத்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அமெரிக்கா திரும்பியவர், அறைக்கலன்கள் வடிவமைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

 

sam_3111295a.jpg

சாம் மலூஃப் (1916-2009), அமெரிக்காவைச் சேர்ந்த அறைக்கலன் வடிவமைப்பாளர். படைப்புத் திறனுக்காக வழங்கப்படும் மேக் ஆர்தர் ஃபெல்லோஷ்பை தனது அறைக்கலனுக்காகப் பெற்றுள்ளார். இவரது வடிவமைத்த அறைக்கலன்கள் அமெரிக்காவின் கண்காட்சியகங்கள் பலவற்றிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

எனை நோக்கி பாயும் தோட்டா பாட்டு செம.. மியூஸிக் டைரக்டர் யாரு?

 

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பின் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கும் திரைப்படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தில் தனுஷ், மேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் வந்து ஹிட்டடித்திருக்கும் நிலையில் இன்று ஒரு பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர். தாமரை வரிகளில் ‘மறு வார்த்தை பேசாதே’ என்ற இந்த பாடல், ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக வந்துள்ளது. 

ஆனால், இந்த டீசரிலும் படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸாகவே வைத்துள்ளனர்

 

 

  • தொடங்கியவர்

 

Burj Khalifa Fireworks 2017... Happy 2017 from Dubai!

  • தொடங்கியவர்

பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! #2016Rewind

 

பேய்

தமிழ் சினிமாவில் எல்லா புது ட்ரெண்ட்களுக்கும் ஒரு சீசன் உண்டு.அப்படி 2015ல் தமிழ்சினிமாவுக்குப் பிடித்த பேய் இந்த வருடமும் நான்ஸ்டாப் பேய்ப்படங்கள் என்று வரிசைகட்டி கெட்ட ஆட்டம் போட்டது. அந்தப் படங்களில் இருந்தது என்ன வகையான பேய்? அது பயமுறுத்தியதா என்கிற லிஸ்ட் கீழே...

பேய்கள் ஜாக்கிரதை:

Peigal-Jakkirathai-Movie-Stills-71_600_1

'ஜெமினி’ திரைப்படத்தில் இயக்குனர் சரணிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய கண்மணி இயக்கிய படம் இது. புதுமுகம் ஜீவா ரத்னம், ஈஷான்யா ஆகியோருடன் தம்பி ராமையா கைகோர்த்திருந்தார்.  இந்தப் பேய்ப்படத்தில் ஹீரோவின் கண்களுக்கு ஆவிகள் தெரிவதுதான் ஹைலைட் கதை. ஆனால், கடைசி கிளைமாக்ஸில் அந்த ஆவிகள் எல்லாம் யார்? என்று சின்ன ட்விஸ்ட் வைத்து கதை சொல்லியிருப்பார் இயக்குனர். சாவு வரை போய் வரும் ஹீரோவின் கண்களுக்குப் பேய் தெரிகிறது என்கிற டைப்பிலேயே போன வருடம் வெளியானது மாஸ் என்கிற மாசிலாமணி, ஓம் சாந்தி ஓம். கொஞ்சம் கொரியன் ஃபீவரை குறைங்க ஜீ என புலம்பவைத்தது படம். 

அரண்மனை 2:

aranmanai_2_600_14235.jpg

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு முதலிடம் கொடுத்து படங்களை இயக்கும் ஸ்டார் இயக்குனரான சுந்தர்.சியின் சீக்வல் படம். பெரிதாக எந்த லாஜிக்கும் பார்க்க அவசியம் இல்லை, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் திகில் வைத்தால் ஹிட் தான் என அரண்மனை முதல் பாகம் கொடுத்த தைரியத்தில் எடுத்திருந்தார் இயக்குநர் சுந்தர் சி. இதிலும், மூன்று ஹீரோயின்கள். முதல் பாகத்தில் பேயாக நடித்த ஹன்சிகாதான் இதிலும் பேய்ய்ய்... கூடவே த்ரிஷா, கேரளத்துப் பெண்ணாக பூனம் பாஜ்வா. காமெடிக்கு சூரி, மனோபாலா, கோவை சரளா என்று நட்சத்திரப் பட்டாளம். அவரது படத்தில் அவர் இல்லாமலா? எஸ்...சுந்தர்.சியும் உண்டு பாஸ். வசூலிலும் பட்டையைக் கிளப்பிய அரண்மனை பார்ட் 2, 2016ன் ராயல் பேய்ப்படம்.

ஸீரோ: 

zero_600_14457.jpg

ஹீரோயினுக்கு ஒரு அமானுஷ்யப் பிரச்னை அதிலிருந்து அவளைக் காப்பாற்ற போராடும் ஹீரோ. நேரடியாக இதற்குக் காரணம் பேய் எனப் பழி போடாமல் பைபிள் கதையை உள்ளே நுழைத்து பயமுறுத்த முயற்சி செய்திருந்தார் இயக்குநர் ஷிவ் மோகா. முயற்சி முழுமையானதாக இல்லை என்றாலும், வழக்கத்துக்கு மாறான திரையாக்கம் வரவேற்கப்பட வேண்டியது. ஹீரோயின் ஷிவதா, ஹீரோ அஷ்வின் இருவரின் நடிப்பும் முழுமையாக இருந்தது. நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும், பின்னணி இசையும் கச்சிதம்.

சவுகார் பேட்டை:

socar_600_14076.jpg

பயங்கரமான முகத்துடன் மோகன் நடித்த ‘உருவம்’ படத்திற்குப் பிறகு உறைய வைக்கும் பேய் தரிசனம் என்று விருது கொடுத்தால் இந்தப் படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்துக்கும், ஹீரோயின் லட்சுமி ராய்க்கும் தான் அந்த கிரெடிட்ஸ் சென்று சேரும். சிங்கம் டயலாக் மாடலில் டரியல் கொடுத்து ஸ்ரீகாந்த் பேசிய பஞ்ச், பார்க்கவே பயத்தைத் தாண்டி பயமுறுத்திய பேய் எஃபெக்ட், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்தை பேக் அடிக்க வைத்தது. ஒரு வீட்டு மேல் ஆசை வைத்த சேட்டு நாலு பேருக்கு வைக்கிறாரு வேட்டு. அந்த நான்கு பேர் தான் ஸ்ரீகாந்த், லட்சுமி ராய், தலைவாசல் விஜய், அவரது மனைவி. இந்த நாலு பேரும் ஆவியாகி அந்த சேட்டைப் பழிவாங்குவது தான் கதை. நல்லா தான இருக்குன்னு தோணுதா? இதில் ஒரு ஸ்ரீகாந்த் இல்ல... ரெண்டு ஸ்ரீகாந்த். ஆனா, அவர பத்தி சொல்ல முடியாது அப்பிடி ஒரு கேரக்டர். இவ்ளோ பிரச்னைகளுக்கு நடுவில், ஒரிஜினல் சவுகார்பேட்டையின் மொத்த சுற்றளவு அளவிற்காவது படம் ஓடியதென்னவோ உண்மை. 

டார்லிங் 2:

Darling-2_600_14243.jpg

’டார்லிங்’ படத்தின் முதல் பாகம் கொடுத்த எனர்ஜி பூஸ்ட்டில் உதயமான ஐடியாதான் ‘டார்லிங் 2’. ஜி.வி.பிக்கு டபுள் ஸ்ட்ராங் என்ட்ரி கொடுத்த டார்லிங் முதல் பாகம், பேய் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியதென்றால், டார்லிங் 2 அந்த வகையில் கொஞ்சம் பின்னடைவு தான். நான்கு நண்பர்கள் விடுமுறைக்காக வால்பாறையில் ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய் நான்கு பேரில் ஒருவரைக் கொல்லப்போகிறேன் என சொல்கிறது. அது யார்? ஏன்? என்பது மீதிப் படம். 

ஹலோ நான் பேய் பேசறேன்:

hello_600_14553.jpg

ஒருபக்கம் சுந்தர்.சி இயக்கி நடித்த படம் ‘அரண்மனை 2’ என்றால், அவரது தயாரிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் ‘ஹலோ நான் பேய் பேசறேன்’. வைபவ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், ஓவியா ஆகியோரின் அட்டகாச காம்பினேஷன் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. மொபைலுக்குள் பேய் அது தான் படத்தின் கான்செப்ட். விபத்து ஒன்றில் இறந்து போகும் ஓவியாவின் ஆவி மொபைலுக்குள் புகுந்து கொள்கிறது (செம கான்செப்ட்ல) அந்த மொபைலை, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து வீட்டுக்கு தூக்கிவருகிறார். அதன் பின் நடக்கும் அமானுஷ்யமும், ஓவியா எதற்காக மொபைலில் புகுந்தார் என்பதும் ஷ்ஷ்ஷ்யப்பா ரகம்.

ஜித்தன் 2:

jithan_600_14124.jpg

ஜித்தன் எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அதிலிருந்த கொஞ்ச சுவாரஸ்யம் கூட இல்லாமல் இருந்ததாலேயே தோற்றது ஜித்தன் 2. தந்தையின் ஆசையை நிறைவேற்ற சொந்த வீடு வாங்குகிறார் ஹீரோ, அந்த வீட்டில் இருக்கும் பேய் அவரைத் துரத்த நினைக்கிறது. ஏன்? என்ன நடந்தது என்பது கதை. மோசமான மேக்கிங், அரதப்பழைய காட்சிகள் என ஆடியன்ஸைக் கடுப்பாக்கியது படம்.

ஜாக்சன் துரை:

Jackson-Durai_600_14451.jpg

கோலிவுட்டின் பேய் ஃபீவர் சிபிராஜூக்கும் தொற்றிக் கொண்டதால் உருவான திரைப்படம்தான் ‘ஜாக்சன் துரை’.  சிபிராஜூக்கு எப்போதும் தோளோடு தோள் கொடுக்கும் ஃப்ரெண்ட்லி தந்தையான சத்யராஜ்தான் இதில் ‘படுபயங்கர’ ஜாக்சன் பேய். சிபிக்கு ஜோடியாக க்யூட் பிந்து மாதவி. அன்னாள் சுதந்திரப் போராட்டத்தையும், இன்னாள் காதல் போராட்டத்தையும் கொத்து பரோட்டா போட்டு வெளிவந்த ஒரு பேய்ப்படம். திரைக்கதையில் இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சலிப்பூட்டினாலும், வசூலில் ஏமாற்றாத திரைப்படமாகவே ரசிகர்களிடம் பெயர் பெற்றது ‘ஜாக்சன் துரை’.
 
தில்லுக்கு துட்டு:

dhilluku-dhuddu3_600_14288.jpg

சகலகலா காமெடியன் என்று பெயரெடுத்த சந்தானத்தின் ஹீரோ அவதாரக் களத்தில் இரண்டாவது திரைப்படம்தான் ’தில்லுக்கு துட்டு’. கெட்டப்ப மாத்தி, செட்டப்ப மாத்தி ‘ஸ்லிம் ஃபிட்’ சந்தானமாக அவர் அடிக்கும் லூட்டிகள் பக்கா மாஸ். பேயுடன் சண்டை, பேயையே கலாய்ப்பது என்று சந்தானத்திற்கு 2016ம் ஆண்டில் செம பிக்கப் கொடுத்த கோஸ்ட் ஃபிலிம்தான் ‘தில்லுக்கு துட்டு’. 

நாயகி:

naya_600_14460.jpg

த்ரிஷா ‘நாயகி’யாக அதாங்க ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க பிள்ளையார் சுழி போட்டது ‘நாயகி’ திரைப்படம்தான். ’நாயகி அக்கா வந்துகிட்டுருக்காங்க’ என்று ட்ரெய்லரில் மாஸ் பில்டப் கொடுத்தாலும், தியேட்டர்களில் ‘நாயகி அக்கா எப்போ கிளம்புவாங்க?’ என்று கேட்குமளவிற்கு நிறைய போரடித்து. த்ரிஷாவை வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது கேமிரா வழியாகப் பார்த்தால் தெரியும் என்பதும், அதற்கு சொல்லும் காரணமும்.... முடியல சாமி என தியேட்டரில் அலறினார்கள் ஆடியன்ஸ்.

தேவி:

devi_600_14282.jpg

ஹன்சிகா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று மேலே சொல்லப்பட்ட அத்தனை அழகான பேய்களையும் சாரி...சாரி ஹீரோயின்களின் நடிப்பையும் தூக்கிச் சாப்பிட்டார் தமன்னா ‘தேவி’ திரைப்படம் மூலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபுல் ஜோஷுடன் பிரபுதேவா ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தினார் என்றால், பாந்தமான மனைவி, பயங்காட்டும் ஹீரோயின் பேய் என்று பிரபுதேவா நடிப்பையே ‘கொஞ்சம் ஓரமா நில்லுப்பா’ என்று சொல்ல வைத்தார் ‘தேவி’ தமன்னா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், மூன்று மொழிகளில் தயாரான ’தேவி’ கலக்கல் காக்டெய்ல். சாதரண கதை தான் என்றாலும், ஏ.எல்.விஜயின் மேக்கிங் மூலம் தரமான பேய்ப்படமாக இருந்தது ’தேவி’. 

காஷ்மோரா:

kash_600_14542.jpg

’ஓயா ஓயா’ என ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த சந்தோஷ் நாராயணனின் இசையும், படத்தின் சரித்திர கால ட்ரெய்லரும், கார்த்தியின் மொட்டை கெட்டப்பும், நயனின் பொன் தூறல் சிரிப்பும் காஷ்மோரா படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டிருந்தது. கூடவே, ப்ளாக் மேஜிக் திரைக்கதை, ராஜா-ராணி பேய் ஆகிய எக்ஸ்ட்ரா பிட்டுகளும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்தன. ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு ‘காஷ்மோரா’ பேய் கண்மணிகளைக் கவரவில்லை. இருந்தபோதும், 2016ம் ஆண்டில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் வந்த திரைப்படம் என்பது இந்த படத்திற்கு பேய்ப்பட ரசிகர்களிடையே வரவேற்பைதான் கொடுத்தது.

இவை தவிர குறிப்பிடத் தகுந்த இரண்டு படங்களான களம், சைத்தான் என இரண்டுமே பேய் பட பாணியிலேயே நகர்ந்து பின்பாதியில் வேறு ஒரு ஜானருக்குள் சென்றது. இது தவிர மோ, மியாவ் என இரண்டு படங்கள் வருடத்தின் கடைசி பேய்ப்படமாக வெளியாகியிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இருக்கும் படங்கள் தவிர பயம் ஒரு பயணம், விடாயுதம், 54321,  போன்ற பேய்ப்படங்களும் 2016ல் ‘பேய் ட்ரெண்ட்’ என்னும் இலக்கில் பயணம் செய்திருந்தபோதும், எண்ணிய தூரத்தை எட்டவில்லை.

எனினும், தொட்டுத் தொடரும் பாரம்பரியமாய் தமிழ் சினிமாவில் இனிவரும் ஆண்டுகளிலும் பேய்களின் துரத்தல் தொடரும் என்பதாய் முடிந்துள்ளது இந்த பேய்...பிசாசு...பூதம் சினிமாக்களின் வரவு...!

vikatan

  • தொடங்கியவர்

Silvester-Illumination In der taiwanesischen Hauptstadt Taipeh. (Quelle: dpa)

தாய்வான்

(Quelle: dpa)

பெர்லின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்

(Quelle: Reuters)

cologne பாதுகாப்புக்கு மத்தியில்

(Quelle: dpa)

சிட்னி

(Quelle: AP/dpa/New Zealand Herald)

நியூசீலாந்து

(Quelle: Reuters)

இந்தியா

(Quelle: Reuters)

சிங்கப்பூர்

(Quelle: dpa)

 

In the Plaza del Sol of the Spanish capital Madrid, people are already around noon on New Year's Eve and eat a grape with every stroke of the clock. This tradition is usually celebrated at midnight. The twelve grapes are to help fortune in the new year.

(Quelle: AP/dpa)

Round fruits are very popular on New Year's Eve in the Philippines, as here in the capital Manila. According to the custom, Filipinos have at least 12 different varieties on the table during the Silvesternacht. The round shape of the fruit symbolizes money - and promises prosperity for the future.

  • தொடங்கியவர்

புதிதாய் பிறப்போம்... புத்தாண்டுக்கான 10 விதிகள்! #FeelFreshThisNewYear

 

 

 

வ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம்மில் பலரும் தவறாமல் செய்கிற விஷயம் ஒன்று உண்டு. புதுப் புது விஷயங்களைச் செய்யப் போவதாகத் திட்டமிடுவோம்; அதற்காக உறுதிமொழி எடுப்போம் அல்லது கெட்ட (நம் உடலையும் மனதையும் பாதிக்கிற) விஷயங்களை விடப் போவதாகத் திட்டமிடுவோம். ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடித்தாலும், பலருக்கும் அது நிறைவேற்ற முடியாத செயல். பெரும்பாலானவர்களால், ஜனவரியில் சுறுசுறுப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிற அந்த விஷயங்கள், மாதத்தின் பாதியிலே நின்று போகும். என்னதான் செய்யலாம்? இந்த ஆண்டாவது நாம் ஏற்கும் உறுதிமொழிகளுக்கு உயிர் கொடுப்போம் எனப் புத்தாண்டுக்கான உறுதியெடுப்போம். சரி, இந்தப் புத்தாண்டை அற்புதமாக மாற்றச் சில வழிகள் இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி ஏற்போமா?

                  புத்தாண்டுக்கான

எடை குறைக்கப்போறேன்!

உள்ளுக்குள் ஒரு நக்கல் சிரிப்போடு தொடங்கும் உறுதிமொழி இது. பலருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால், செய்து முடிப்பதோ கடினம். புத்தாண்டு டின்னரிலேயே இந்த உறுதிமொழியைக் காணாமல் போகச் செய்யக் கூடாது என்பதை முதல் உறுதிமொழியாக எடுத்துவிட்டு, அடுத்த உறுதிமொழிக்குச் செல்லுங்கள். `ஜனவரியில் 1 அல்லது 2 கிலோ எடை குறைப்பேன்’ என முடிவுசெய்து, அதை அப்படியே டிசம்பர் வரை நீட்டிச் செல்லுங்கள். நீங்கள் 10-12 கிலோவாவது எடை குறைத்திருத்தால், அந்த ஆண்டுக்கான வெற்றியை முழுமையாகக் கொண்டாடுங்கள். 

    p76b_12138.jpg

டிராவல் ப்ளான் பண்ணுங்க!

திட்டமிடாமல் செய்தால், எந்த வேலையும் சொதப்பும். பிளான் பண்ணிச் செய்தால் வொர்க்அவுட் ஆகிற விஷயம் இது. மாதத்துக்கு ஒருமுறையாவது இயற்கையை ரசிக்க காடோ, மலையோ ஏறி இறங்குங்கள். ஸ்ட்ரெஸ்ஸை மறந்து, கவலைகளை கழற்றிவிட்டு வர வாய்ப்பாக அமையட்டும். சில சமயங்களில் திட்டமிடாமல், சூழலே அமைத்துத் தரும் பயணத்தையும் முழுமையாக வரவேற்றுப் புறப்படுங்கள். உங்களைப் புத்துணர்வாக்க பயணம் முக்கியம்.

ஸ்டீம் இன்ஜின் உடலுக்கும் கேடு... சூழலுக்கும் கேடு!

பிரேக் என்றால் ஜூஸ், சமோசா, வடை எனச் சாப்பிடுவதுகூட ஓ.கேதான். ஆனால், புகை மட்டும் வேண்டாம் பாஸ். அடிக்கடி புகைவிட்டுக் கொண்டே இருக்க, நீங்கள் என்ன ஸ்டீம் இன்ஜினா? மகள், மகன் மீது சத்தியம் வைப்பதெல்லாம் பழைய கதை. உங்கள் குடும்பத்தைப் பார்க்க நீங்கள் இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றியடைய முடியும். புகை நமக்கு எப்போதுமே பகைதான்.

                                p90%281%29_13311.jpg

தள்ளிப்போடாதே... எதையும்!

வேலையில் கெட்ட பெயர் வாங்குவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அதேபோல் உறவுகளில் சிக்கல் ஏற்படுவதும் இதனால்தான். மார்க் ட்வெயின் சொன்ன பொன்மொழி இது.
`உயிருடன் இருக்கும் தவளையை காலையிலே கடித்துச் சாப்பிட்டுவிடுங்கள். இல்லையெனில், அது நாள் முழுதும் பக்கத்திலேயே நின்றுகொண்டு உங்களின் அருவருப்பு உணர்வை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கும்.’ இது நாம் செய்யவேண்டிய வேலைகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். வேலையைத் தள்ளிப் போடாமல், அப்போதே செய்து முடிப்பது நல்லது.

ஸ்மார்ட் வொர்க்கராக மாறலாமே!

எல்லா விஷயங்களையும் நாம் மட்டுமே தெரிந்துவைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. யார் யாருக்கு என்னென்ன தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டாலே போதும், அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதுவும் ஸ்மார்ட் வொர்க்தான்.

                     p26b_13136.jpg

ஹார்டு வொர்க்கராக இவ்வளவே போதும்!

ஒவ்வொரு நாளும் பத்துப் பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளவர், ஒருநாளைக்குக் கூடுதலாக நான்கு பக்கம் படித்தாலுமே அவர் ஹார்டு வொர்க்கர்தான். ஆனால், நாம் பெரும்பாலும் `மாங்கு மாங்கு’ என்று வேலை செய்பவனையே ஹார்டு வொர்க்கர் என நினைத்துக் கொள்கிறோம். இனி... ஹார்டு வொர்க்கராக மாறுங்கள். இதற்கு, கொஞ்சம் மெனக்கெடுதலும் நிறைய முயற்சி இருந்தாலே போதுமானது. கொஞ்சம் மாற்றமே ஹார்டு வொர்க்கராக மாற்றும்.

மனம் பேசும்... உடல் கெஞ்சும்... சமாளிப்பது எப்படி?

`காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும்’ என மனம் கூச்சல்போடும். `நிறைய வேலை இருக்கு’ என்று ரீமைண்டர் அடித்துக்கொண்டே இருக்கும். மீறியும் உடலானது, `நைட்டு லேட்டாத்தானே படுத்தோம்... கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாமே’ எனக் கெஞ்சும். இந்த இரண்டின் மொழியையும் புரிந்து, தெளிந்து செயல்படுவதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயணமும் தொடக்கமும். மனதையும் உடலையும் கட்டுக்குள் வையுங்கள். இரண்டும் உடன்படுகிற வாழ்வியலை மேற்கொள்ளுங்கள்.

கற்கவேண்டிய 'லைஃப் ஸ்கில்'!

ஆண், பெண் இருவருக்கும் கைகொடுக்கும் திறன் இது. `யார் சமையலில் சூப்பர்?’ எனப் போட்டி போடவேண்டிய விஷயமும் இதுதான். நூடுல்ஸைத் தாண்டி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. பிரியாணி செய்ய முயன்று, அது தக்காளி சாதமாக மாறினாலும் சரி... டோன்ட் கிவ் அப். அடுத்த முறை அது பிரியாணியாக மாறும் வரை முயல்வோம். சமையலை நேசிப்போம். அதிலுள்ள சிரமங்கள் புரிந்தால் ஃபுட் வேஸ்ட் தடுக்கப்படும்.

                           p99_13417.jpg

அதிகமாகக் கவனி... அளவுடன் பேசு!

ஒருவரைப் பார்க்கும்போது இவர் நமக்கு சரியாக வருவாரா, மாட்டாரா என யூகிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், ஒருவர் பேசுவதை வைத்து, அதை நிச்சயம் யூகிக்க முடியும். முடிந்த வரை அதிகமாகக் கவனிப்போம். கவனிப்பது ஒரு தியானம். `மங்க்கி மைண்டு’ என்று சொல்வார்கள். பத்து சிந்தனையில் பதினொன்றாவதாக ஓர் எண்ணம் தோன்றும். இது அனைத்தையும் கவனிப்போம். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். இதற்கு நேரமோ, இடமோ தேவைப்படாது. வாழ்க்கையின் அங்கம்தான் கவனித்தல். அது உங்களுடன் தொடர்ந்துகொண்டே இருக்கும். கவனித்தலைப் பழகினாலே பேச்சு அளவானதாக மாறிவிடும். தேவையில்லாத இடங்களில் பேசுவதை நிறுத்தினாலே, பெரும்பாலான உறவுச் சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

உன்னை மாற்றும் சுவாசமே!

இந்தக் கேள்விக்கு பலருக்கும் விடை தெரிவது கஷ்டம்தான். எதிர்பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத மாற்றங்களைத் தந்து, நம் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க ஓர் எளிய பயிற்சியால் முடியும். அதுதான் மூச்சுப் பயிற்சி. மூச்சைக் கவனிக்கும்போது, கவனிக்கும் திறன் ஓங்கும். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது உடல்நலத்துடன் உணர்வுகளின் நலமும் கூடும். உங்களை நீங்கள் ஆள முடியும். பிரச்னையை எதிர்கொள்ளும் திறன் கிடைக்கும். சின்னச் சின்ன பிரச்னைகள் தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ள தியானத்துக்கும் மூச்சுப் பயிற்சிக்கும் சரி சமமான பங்கு உண்டு. உங்களை மாற்றும் சுவாசத்தை சீர் செய்வோம். அதற்கு உதவும் தியானமும் மூச்சுப் பயிற்சியும் வாழ்க்கையின் வழிமுறைகள்.

vikatan

  • தொடங்கியவர்

happy new year gif with fireworks e card greetings

 

animated new year clock count down to midnight gif

 

happy new year big firework animated gif

happy new year gif e card greetings

 

happy new year couple fireworks animation

பெர்லின்

Party am Brandenburger Tor

Besucher stehen am 31.12.2016 in Berlin vor der Bühne am Brandenburger Tor (Quelle: dpa/Jens Kalaene)

Mit einem Feuerwerk wird am 01.01.2017 in Berlin das neue Jahr am Brandenburger Tor begrüßt (Quelle: dpa/Britta Pedersen)

Mit einem Feuerwerk wird am 01.01.2017 in Berlin das neue Jahr am Brandenburger Tor begrüßt (Quelle: dpa/Britta Pedersen)

Zwei Frauen aus Kasachstan fotografieren sich am 31.12.2016 in Berlin auf der Festmeile vor dem Brandenburger Tor (Quelle: dpa/Britta Pedersen)

Polizisten sichern am 31.12.2016 in Berlin die Festivalmeile vor dem Brandenburger Tor (Quelle: dpa/Jens Kalaene)

கள உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 01
 
 

250%2815%29.jpgகி.மு. 45:  ஜூலியன் கலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1600: ஸ்கொட்லாந்தில் வருடம் ஆரம்பிக்கும் தினம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.

1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.

1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.

1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.

1808: அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது.

1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.

1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்திற்குப் பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.

1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.

1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.

1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.

1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.

2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.

2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.

2008: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.

2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நெட்டிசன்களிடம் தங்களின் அன்பானவர்களை விட்டுத் தராத வி.ஐ.பிகள்!

 

ர் ஆணுக்கு அழகு, எங்கும், எப்போதும் தன்னவளுக்கான மரியாதையைப் பெற்றுத் தருவது. இந்த வருடத்தில், தங்கள் இணையை பொதுவெளியில் கொண்டாடிய, அவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டபோது அதற்கு எதிர்வினை புரிந்த இந்த நட்சத்திர ஆண்களுக்கு சல்யூட்!

விராட் கோலி:

விராட் கோலி, அனுஷ்கா சர்மா காதல் அனைவரும் அறிந்த விஷயம். கடந்த வருடம், மார்ச் மாதம் நடந்த T20 போட்டியில் விராட்டின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்காதான் காரணம் என நெட்டிசன்கள் விடாமல் தட்ட, தன் ட்வீட்டால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோலி.

'அனுஷ்காவை கிண்டல் செய்பவர்கள் வெட்கப்படவேண்டும். அவர் எப்போதும் எனக்கு பாஸிட்டிவ் எனர்ஜியே தந்திருக்கிறார். உங்கள் சகோதிரியோ, காதலியோ, மனைவியோ இப்படி பொதுவெளியில் அவமானப்படுத்தப்படும் சூழலை யோசித்துப் பாருங்கள்' என்று விராட் செய்த ட்வீட்தான், 2016-ம் ஆண்டின் கோல்டன் டிவீட். வைரல், தலைப்பு செய்தி, 39,000 ரீட்வீட்கள், ஒரு லட்சம் லைக்குகள் என வரவேற்பு பெற்றது. இந்த ஆண்டு தங்களின் ஹைலைட் தருணங்களாக ட்விட்டர் வெளியிட்டுள்ள பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது, விராட்டின் இந்த ட்வீட் என்பது சிறப்பு!

நெட்டிசன்

முகமது ஷமி:

சமீபத்தில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது சமூக வலைதளத்தில் தன் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, 'அழகான தருணங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் மனைவியின் ஆடை பற்றி சிலர் விமர்சனம் செய்ததுடன், இதை ஷமி அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர். 'என் குழந்தையும், மனைவியும் என் வாழ்க்கைப் பங்காளர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும்' என்று கண்டிப்புடன் ட்வீட் செய்து, பலரிடமும் லைக்ஸ் பெற்றார் ஷமி! 

mohammed_shami_3_14827469_18410.jpg 

இர்ஃபான் பதான்:
கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவரஜ் சிங் தங்களது காதலியை மணந்தனர். அந்த வரிசையில் இர்ஃபான் பதானும் சேர்ந்துள்ளார். 31 வயதான இர்ஃபான் பதானுக்கும், சவுதியின் ஜீட்டா நகரைச் சேர்ந்த 21 வயதான மாடல் அழகிக்கும் மெக்காவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. தனது திருமண புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இர்ஃபான், தனது வாழ்க்கையில் மிக அழகான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, புது மணப்பெண்ணுக்கு வார்ம் வெல்கம் சொன்னார்!

Pathan_18568.jpg

நாக சைதன்ய:

தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா - சமந்தா இருவரும் நெருங்கிய நட்புடன் பழகியவர்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் 'மனம்' படங்களில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரின் திருமணமும் ஆன் தி வே என்கின்றன சினிமா வட்டாரங்கள். இந்நிலையில், சமந்தா 'பிரதியுஷா' என்ற சமூக சேவை நிறுவனம் மூலம் பலருக்கு உதவி செய்துவருவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'மனதுக்குப் பிடித்தவர் நல்ல விஷயங்களைச் செய்யும்போது பாராட்டும் குணம், காதலில் உள்ளவர்களுக்கு அதிகமாகவே வரும்' என்று நாக சைதன்யா தன் அன்பை சொல்லிய விதம், அழகு!

nagachaitangy_18119.png

தனுஷ்:

இயக்குநர், தயாரிப்பாளர், பரதநாட்டிய கலைஞர் என பன்முகம் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், தனது சுயசரிதையை 'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்(Standing on an Apple Box)' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். புத்தகத்தைப் படித்த பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யாவை பாராட்டி வந்த நிலையில், தனுஷ் சைலன்ட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க, தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், 'புத்தகம் வெளியிட்டுள்ளதற்கு பாராட்டுக்கள். 'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்'  மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்' என்று தன் அன்பு மனைவிக்கு வாழ்த்து தெரிவித்தார்!

Dhanush_18356.jpg

ஒபாமா:
அமெரிக்க அதிபர் ஒபாமா, காதலர் தினத்தை முன்னிட்டு தான் சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டபோது, தனது மனைவி மிச்சேல் குறித்து தெரிவித்த வார்த்தைகள், ஆஸம் அன்பு. 'அதிபராக பல உயர்ந்த முடிவுகளை எடுத்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு, மிச்சேலை எனது வாழ்க்கை துணையாகத் தேர்வு செய்ததுதான்' என்று தன் மனைவிக்கு மகுடம் சூட்டினார் ஒபாமா!

o1_18193.jpg


அஸ்வின்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், '2016-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்' விருதுகளை, நம் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கியது. இந்த விருதுக்கு விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்ட சிலருக்கு அஸ்வின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்ய, அதில் தோனியின் பெயர் விடுபட்டிருந்ததால் ஏமாற்றமடைந்த சில கிரிக்கெட் ரசிகர்கள், தங்கள் 'ட்ரால்' வேலையை காட்ட ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சிலர், இரண்டு சகோதரர்கள் இடையே காழ்ப்புணர்ச்சி உருவாக்கும் நோக்கில் செயல்பட்டுவருகிறார்கள்' என்று வருந்தியதுடன், 'உங்களின் கேலி போஸ்ட்களில் தயவு செய்து என் மனைவியை டாக் செய்யாதீர்கள். அவருக்கு உருப்படியான வேலைகள் இருக்கின்றன' என்று குறிப்பிட்டார்!

Aswin_18352.jpg

 சச்சின்:
'நான் கேப்டனாக இருந்த சமயம், இந்திய அணி படுமோசமாக தோல்வி அடைந்தபோது, கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விலகிவிடலாமா என்று நினைத்தேன். மிகவும் கவலையுடன் இருந்த அந்த நேரத்தில் எனது மனைவி அஞ்சலிதான் எனக்கு ஆறுதலாக இருந்து தொடர்ந்து விளையாட ஊக்கமளித்தார்' - சச்சின் டெண்டுல்கர், 'ப்ளேயிங் இட் மை வே(Playing It My Way)' என்ற தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் இவை!

sachin_18508.jpg

பெண்களை மதிப்பது தான் பேராண்மை!

vikatan

  • தொடங்கியவர்

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!

 

நியூ இயர் தீர்மானங்கள்

நாடு இருக்குற நிலைமையில, நாலா பக்கம் பிரச்னையிலயும், நம்மாளுங்க நியூ இயர் தீர்மானங்கள் எடுக்காம இருக்குறது இல்ல. வழக்கமா புத்தாண்டுல என்ன மாதிரி சபதங்கள் எடுப்பாங்க, அது எப்படி   முடியும்-னு பாப்போமா.

1. பட்ஜெட் :

பொதுவா இந்த மாதிரி நியூ இயர் தீர்மானங்கள புது குடும்பஸ்தர்கள் தான் எடுப்பாங்க.  'மச்சான், இன்னையிலேர்ந்து, நான் செலவு பண்ற ஒவ்வொரு ரூபாயும் கணக்குல வெச்சிருக்க போறேன். 50 பைசாவுக்கு பாக்கு வாங்குனா கூட என்னோட கணக்கு நோட்டுல அத எழுதி வைக்கப் போறேன்’னு இன்னைக்கு பாக்கு 15 பாக்கெட், 15*0.50 = 7.50 ரூபாய்ன்னு கணக்கு எழுத ஆரம்பிச்சிருப்பாங்க. அப்படியே பொங்கல் லீவுக்கு ஊருக்கு போயிட்டு வர்றப்ப தாத்தா பாட்டி கிட்ட வாங்குன காச கணக்குல கொண்டு வர மாட்டாங்க.... இப்படியே வரவு எழுதுறதுல கோட்ட விடுவாங்க. அடுத்து 50 பைசா தேன் மிட்டாய், பாக்கு எல்லாம் எழுதுறதுல பிரச்னையா இருக்கு. இனிமே  5 ரூபாய்க்கு மேல செய்யுற செலவு எழுதுனா போதும்னு ஆரம்பிச்சு பட்ஜெட் நோட், ஒரு மாசத்துல எங்க இருக்குன்னு  எழுதுவனுக்கே தெரியாது. என்னோட பட்ஜெட் நோட் எங்கடான்னு நம்மகிட்டயே வந்து கேட்டு சீன் வேற போடுவாங்க பாருங்க.

2. தம்முக்கு தம் கட்டு :

இப்படி ஒரு நியூ இயர் தீர்மானம் இல்லாத,  நியூ இயரே கிடையாதுதானே? இனிமே ஒரு நாளைக்கு 3 சிகரெட்டுக்கு மேல பிடிக்க மாட்டேன்-னு சபதம். கேட்டா ஜாஸ்தி செலவாகுதுடான்னு வருத்தம். சரி இப்ப ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறேன்னு கேட்டா ஒரு பாக்கெட்ம்பாங்க. இந்த மூணு சிகரெட்ட எப்ப எல்லாம் பிடிக்கணும்னு ஒரு நோட்டு போட்டு, நாலு மணி நேர டீம் டிஸ்கஷன் வேற நடக்கும். மூணாவது நாளே நாலாவது சிகரெட்டுக்கு போய் இருப்பான். கேட்டா, அது என் காசுல இல்ல மச்சின்னு தன்னிலை விளக்கம் வேற வரும். அதோட அகில உலக குழப்பமும் வரும். நாம நம்ம காசுல 3 சிகரெட்டுன்னு சபதம் எடுத்தோமா இல்ல, ஒரு நாளக்கு  3 சிகரெட்டுன்னு எடுத்தோமான்னு யோசிப்பாங்க.

சரி இன்னையிலேர்ந்து நம்ம காசுல 3 சிகரெட்டுன்னு கணக்கு வெச்சிப்பானுங்க. ஆனா ஒவ்வொரு குரூப்லயும், தம்ம மட்டும் பாக்கெட் பாக்கெட்டா சப்ளை பண்றதுக்குன்னே ஒருத்தன் பொறந்து வருவான். அவனுக்கு  சோப் வாங்கிக் குடுக்குறதுல ஆரம்பிச்சு, துணி துவச்சு கொடுக்குறது வரைக்கும், இவன் செய்வான்.  இதுவும் ஒரு வாரத்துக்கு தான். அப்புறம் போடா என்னோட சபதத்தை அடுத்த வருஷத்துக்கு தள்ளி வைக்கறேன்னு ஒரு மறு அறிக்கை வெளியாகும். இல்ல வழக்கம் போல 42 பல்லையும் காட்டுவான்.   

 

 நியூ இயர் தீர்மானங்கள்

3. நானே சமைச்சி சாப்டு காச மிச்சப்படுத்துறேன்:

தமிழ்நாட்டுல அப்பா, அம்மாவ விட்டு தனியா வாழ்க்கை  நடத்துற பெரும்பாலான பேச்சுலர் அழகிகள் மற்றும் அழகன்களின் ஆஸ்தான பிரச்னை "நல்ல சோறு". இனிமே இந்த பாய்கடையில வேக வெச்ச முட்டைய 10 ரூபாய்க்கு ஒண்ணு வாங்காம , நானே சமைச்சு சாப்பிடப் போறேன்னு ஒரு சபதம் எடுப்பானுங்க பாருங்க. அப்ப ஆம்பள கண்ணகியவே நேர்ல பாக்குற மாதிரி இருக்கும். சட்டசபையக் கூட்டி, தீர்மானம் போட்டு, ஆளுக்கு ஆயிரக் கணக்குல இன்வெஸ்ட் எல்லாம் பண்ணி, அடுப்ப பத்த வெச்சதுக்கப்பறம்தான் தெரியும்.. சமைக்கத் தெரியும்னு சவடால் விட்டவனுக்கு, சாம்பார் கூட வெக்கத் தெரியாதுன்னு. பசங்க தான் இந்த கதின்னா, பொண்ணுங்க அதுக்கும் மேல. என்னடி சாம்பார்ல, சாத்துக்குடி எல்லாம் பிழியறன்னு கத்துற சத்தம் எல்லாம் கேட்கும். இந்த லட்சணத்துல சமைச்சு.. சாப்டு..   காச மிச்சப்படுத்தி.... 

4. நானும்  ஜிம்முக்கு போறேன்  ஜிம்முக்குப் போறேன்..: 

யாரோ ஒருத்தன் "என்னடா உடம்ப இப்படி வெச்சிருக்கே. உனக்கு என்ன வயசாகுது..  உன் வயசுல என்னோட ஃபோட்டோவ பாரு’ன்னு அவன் அஞ்சரைப் பேக்ல இருக்கற ஒரு ஃபோட்டோவை காட்டுவான். பார்த்துவிட்டு, பொங்கி எழு மனோகரா கணக்காக "நானும் 19 கிலோ வெயிட்டை கொறச்சி, ஃபிட்டாக போறேன்’னு இவன் ஜிம்முக்கு போவான். அங்க போனா, மாத கட்டணம்  ரூ.1,000, வருட கட்டணம் ரூ.10,500 மட்டுமேன்னு போர்ட் இருக்கும். எப்படியாச்சும் காச மொத்தமா கட்டுனாலாவது டெய்லி ஜிம்முக்கு போவோம்னு, வீட்டு வாடகை கூட கொடுக்காம மொத்தத்தையும் கட்டிடுவாங்க. அதுக்கு அப்புறம் தான கூத்தே இருக்கு. அடுத்த மாசம் ஆஃபீஸ்ல, கரெக்ட்டா நைட் ஷிப்ட் போடுவாங்க. ஒரு மாசம் பூரா போச்சா. அதுக்கு அடுத்த மாசம் நமக்கே பழகிடும்.  இதுக்கு எல்லாம் நடுவுல அவன் ஜிம்முக்கு போக, கம்பெனிக்கு ஒரு அடிமைய பிடிப்பான், அவனையும் ஜிம் ஃபீஸ் எல்லாம் கட்டவெப்பான்.  அந்த அடிமை "என்னடா 10,500 ரூபாய் கட்டி வீணாக்கிட்டியே’ன்னு கேட்டா..., ‘அடிக்கடி ஜிம்முக்கு போனா என்னாகும் தெரியுமா?’னு அவன் காதுல ரகசியம் சொல்லி   அவனையே பயமுறுத்துவான்.  இந்த மேட்டர்ல ஜிம்முக்கு பதிலா ஸ்போக்கன் இங்கிலீஷ் / ஹிந்தி / டாலி / சைக்கிளிங் / மராத்தான் /கீபோர்ட்  க்ளாஸ்னு எதை வேணா போட்டுக்கோங்க!  

5. நான் வெஜ் :

இந்த வருஷத்தோட, இந்த அசைவத்த விடப் போறேன்னு ஜனவரி 01-ம் தேதி இதுக்குன்னே சபரிமலைக்கு மால போடுவாய்ங்க. ஏன்டா, விடுறேன்னு கேட்டா, வழக்கம் போல காசு, ரெண்டாவது ஹெல்த்-ன்னு க்ளிஷே டயலாக் வரும். சரி பய திருந்துறான்னு சீண்டாம இருப்போம். அவனும் மலைக்குப் போய்ட்டு வந்து ஒரு ரெண்டு வாரம் சத்தம் காட்டாம, சரணம் ஐயப்பான்னுகிட்டு இருப்பான். ஒருநாள், ஒரு நல்ல ரெஸ்டாரண்டுல அசைவத்தை டேஸ்ட் பண்ண முடியாதுன்னு நெனைக்கறப்பதான், சபதம் சலனத்துக்கு உள்ளாகும். சரி சாப்பிடுறதுன்னு முடிவு பண்ணிட்டு " அறிந்தும் அறியாமலும், தெரிந்தும்......" சொல்லிட்டு வேட்டிய மடிச்சி கட்டிட்டு ராஜ்கிரண்  தம்பியா மாறி வருவான் பாருங்க..... அதுக்கப்புறம் என்ன, வழக்கம் போல டெய்லி ராத்திரி 11.30 மணிக்கு கூட சில்லி பீஃப் ரெண்ட பார்சல் வாங்கி ரூமுக்கு வந்தாச்சும் சாப்டுட்டு தான் படுப்பாரு. டெய்லி பில்லுல 120 ரூபாய் எகிறும்.

நியூ இயர் தீர்மானங்கள்

6. சரக்கு, உன் மேல கிறுக்கு :

‘யப்போவ்வ்வ்... இன்னையோட இந்தக் குடிய விட்டுடணும்’-ன்னு மாசத்துல ஒருநாளாவாது சொல்லாத குடிகாரனுகளே இருக்க முடியாது. அப்படி இருக்குற குடிகாரனுங்க, ஏதோ ஒரு வேகத்துல இனி குடிக்க மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு, டிசம்பர் 31-ம் தேதி ராத்திரிய கடக்குற அழக பாக்கணுமே. என்ன படம் பாக்குறோம்ன்னே தெரியாம டிவி முன்னாடி உட்கார்ந்திருப்பாய்ங்க. என்ன சாப்பிடுறோம்னு தெரியாம, கெடைக்கிறத எல்லாம் உள்ள தள்ளுவாய்ங்க.

இப்டி பல கட்ட மனப் போராட்டத்துக்கு அப்புறம், ஒருத்தன் மச்சி " ஃபுல்லோட உனக்காக வெயிட் பண்றோம் வாடான்னு ஒரு வாட்ஸ் அப், உடனே நெட்டை ஆஃப் பண்ணிடுவான். அடுத்தவன் ஃபோனே பண்ணிடுவான். என்ன பிராண்ட் சரக்கு, என்ன சைட் டிஷ் இருக்கு,  எத்தன பேருன்னு டீட்டெயில் வாசிப்பான். டேய் நான் குடிக்கிறத விட்றேன்டான்னு நியூ இயர் தீர்மானங்கள்-னு சொல்லுவோம்.

அப்ப தான் அந்த லா பாயிண்ட நம்ம ஃப்ரெண்ட் சொல்லுவான். "டேய் இன்னக்கி டிசம்பர் 31, அடுத்த வருஷத்துல இருந்துதானேடா நீ குடிக்க மாட்ட.  இப்ப வா, உன் வாழ்கையோட லாஸ்ட் குடியா இது இருக்கட்டும் "-னு ஒரு பொறி தட்டுவான். என்ன கருமமோ இந்தக் குடிகாரனுங்க வாழ்க்கைல அந்த லாஸ்ட் குடிய மட்டும், யாராலயும்  நிர்ணயிக்க முடியல. 

7. எடுடா டைரிய எழுதுடா கதைய!

இந்த வருஷத்துல இருந்து ஒழுங்கா டைரி எழுதணும். பின்னால நாம படிச்சுப் பார்க்கறப்ப நல்லா இருக்கும்னு தோணும். ஒரு நல்ல டிசைன் டைரி, பார்த்து பார்த்து ஒரு புது பேனா வாங்கிட்டு வந்து வெப்பாங்க. டைரி மேல பேனாவை க்ராஸா வெச்சு ஒரு ஃபோட்டோ எடுத்து ட்விட்டர்லயோ, இன்ஸ்டாலயோ போட்டுக்குவாங்க. மொத நாள் எழுத்துல கொண்டாட்டம் இருக்கும். ரெண்டாவது நாள் கொஞ்சம் கம்மியாகி பாதிதான் எழுதுவோம். அப்பறமா ‘எல்லாத்தையும் எழுதணுமா? ப்ச்.. எதுக்கு?’னு தோணி, ‘Gone office. Hectic Day. Target Kills'ன்னு குட்டி நோட்ஸோட முடியும் .பத்து நாள் ஒரு மாதிரி எழுதி அதுக்கப்பறம் அக்கா பொண்ணோ, அண்ணன் பையனோ எடுத்து கிறுக்கத்தான் அந்த டைரி யூஸ் ஆகும்! இதையெல்லாம் எப்பயோ சொல்லிட்டார்ல  நம்ம சுஜாதா!

 

சரி.. சரி.. வேற எதாவது  நியூ இயர் ரெசல்யூஷன் - எடுக்கறத்துக்கு முன்னாடி இதை படிச்சுடுங்க!

vikatan

  • தொடங்கியவர்

தொழில்நுட்ப உலகம்: சுவடுகளும் புதிய போக்குகளும்!

 

Desktop_3110679f.jpg
 
 
 

2016- ல் தொழில்நுட்ப உலகைத் திரும்பி பார்க்கும்போது, சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சினைகள், தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தின. பாட்கள் (Bots) எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணையச் சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட் போன் பிரியர்களைப் பித்துப்பிடித்து அலையவைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ போலப் பிரபலமாகி வரும் ‘மேனிக்வன் சேலஞ்ச்’ போன்ற போக்குகளும் முக்கியமாகத் திகழ்கின்றன. விடைபெறும் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:

‘ஃபிரீ பேசிக்’சிற்குத் தடை

இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது எனத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்த தடையாணை இணையச் சமநிலைக்கு ஆதரவான உத்தரவாக அமைந்தது. இந்த உத்தரவை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது சர்ச்சைக்குரிய ‘ஃபிரீ பேசிக்ஸ்’ (Free Basics) திட்டத்தை இந்தியாவில் விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இணையதளங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்வதாக பேஸ்புக் கூறினாலும், ஒரு பகுதி இணையத்தை மட்டுமே அணுக வழி செய்வதால் இந்தத் திட்டம் இணையச் சமநிலைக்கு எதிரானது எனக் கடும் விமர்சனத்திற்கு இலக்கானது.

‘வாட்ஸ் அப் என்கிரிப்ஷன்’

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணைய உலகில் என்கிரிப்ஷன் தொடர்பான முக்கியத்துவத்தையும் உண்டாக்கியது. தரவுகள் பரிமாற்றத்தை சங்கேத குறியீடுகள் மூலம் பாதுகாக்கும் இந்த முறையால் அனுப்புகிறவர், பெறுபவர் மட்டுமே உரிய செய்தியை வாசிக்க முடியும்.

அத்துடன், வாட்ஸ் அப் தன்னுடைய தனியுரிமைக் கொள்கையை மாற்றி அமைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்படி, பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களைத் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

போக்கேமான் கோ மோகம்

ஸ்மார்ட் போன்களில் அறிமுகமான போக்கேமான் கோ விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்று புதிய மோகமாக உருவெடுத்தது. ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, போக்கேமான் ஜீவராசிகளைத் தேடிப் பிடிப்பதற்காக ஸ்மார்ட் போன் பிரியர்களை வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் அலைய வைத்தது. இந்த விளையாட்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வரவேற்பைப் பெற்றது.

பொய்ச்செய்தி பிரச்சினை

சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மூலம் பகிரப்படும் பொய்ச் செய்தி பிரச்சினை கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யாவை மையமாகக் கொண்ட போலி இணையதளங்கள் சார்பில் உலாவவிடப்பட்ட பொய்ச் செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தின. பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக பேஸ்புக்கும் கூகுளும் அறிவித்தன.

சைபர் தாக்குதல்

2016-ல் ஏதேனும் ஒரு வகையில் சைபர் தாக்குதல்கள் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றுக்கொண்டே இருந்தன. யாஹு நிறுவனம், தனது லட்சக்கணக்கான பயனாளிகளின் தகவல்கள் தாக்காளர்கள் கைவரிசைக்கு இலக்கானதாகத் தெரிவித்தது அதிர்ச்சியை உருவாக்கியது. அமெரிக்கத் தேர்தல் செயல்முறையைப் பலவீனப்படுத்தும் வகையிலான செயலில் ரஷ்யவைச் சேர்ந்த தாக்காளர்கள் குழு ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஜனநாயகக் கட்சியின் பிரச்சார வலைப்பின்னலும் தாக்குதலுக்கு இலக்கானது.

ராகுலும் தப்பவில்லை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்கானார்கள். இந்தியாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கமும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கமும் தாக்குதலுக்கு இலக்காயின.

பாட்களின் எழுச்சி

பாட்கள் (Bots) எனக் குறிப்பிடப்படும் தானியங்கி மென்பொருள்கள் தொடர்பான செய்திகள் பெருமளவு கவனத்தை ஈர்த்தன. அரட்டைக்கான பாட்கள், வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் பாட்கள் உள்ளிட்டவை வருங்காலத்தில் புதிய போக்காக அமையும் என வல்லுநர்கள் தெரிவித்தனர். வங்கிச் சேவை உள்ளிட்டவற்றில் இந்த வகை மென்பொருள்களே வழிகாட்டும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போலவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகளும் தீவிரமாகியுள்ளன. தானியங்கிமயமாக்கலின் விளைவாக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் பற்றியும் ஆய்வுகள் வெளியாகின.

யு.பி.ஐ. செயலி அறிமுகம்

தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய யு.பி.ஐ. செயலி அறிமுகமானது. ஸ்மார்ட் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் அனுப்ப, பெற உதவும் இந்தச் செயலியை முன்னணி வங்கிகள் அறிமுகம் செய்தன. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விவாதமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், யு.பி.ஐ. கவனத்தை ஈர்க்கிறது.

‘கபாலி தி பாஸ்’

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம் இணையத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியானபோது இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் கபாலிடா எனும் பதம் டிரெண்டானது. முன்னோட்ட காணொளி யூடியூப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான போதும் டிவிட்டரில் ரஜினியின் செல்வாக்கை வெளிப்படுத்தும் குறும்பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

சுஷ்மாவின் சுறுசுறுப்பு

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார். டிவிட்டர் பயன்பாட்டில் முன்னுதாரணமாகத் திகழும் ஸ்வராஜ், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையும் டிவிட்டர் மூலமே பகிர்ந்துகொண்டார். இணையவாசிகள் அவர் நலம்பெற விரும்பிக் குறும்பதிவுகளை வெளியிட்டனர்.

கலைநயமான செயலி

ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்காக எண்ணற்ற செயலிகள் அறிமுகமானாலும், பிரிஸ்மா செயலி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. பயனாளிகள் தங்கள் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போல மாற்றிக்கொள்ள வழி செய்யும் இந்தச் செயலி வாயிலாகப் பகிரப்பட்ட படங்கள் அவற்றின் கலைநயமான தோற்றத்திற்காக வரவேற்பைப் பெற்றன.

‘கூகுள் பிக்சல்’ போன்

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பிக்சல் ஸ்மார்ட் போன்கள் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் அறிமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கூகுள் நிறுவனத்தால் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் எனும் அந்தஸ்து, இதன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் பரவலாகப் பேசப்பட்டன. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இது அறிமுகமானது. ஐபோன் 7பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 7, மோட்டோ இசட், ஜியோமி ரெட்மி 3எஸ் பிரைம், எச்டிசி 10 உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க ஸ்மார்ட் போன்களாக அமைந்தன. இவற்றில் கேலக்ஸி 7 போன்கள் தீப்பிடித்துக்கொள்ளும் தன்மைக்காகச் சர்ச்சைக்கு இலக்காயின.

‘ஸ்னேப்சேட்’ கண்ணாடி

தானாக மறையும் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும் ஸ்னேப்சேட் நிறுவனம், புதிய மூக்குக் கண்ணாடியை அறிமுகம் செய்தது. ஸ்னேப்சேட் ஸ்பெக்டகல் எனும் இந்தச் சாதனம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவிவருகிறது. இது அணிகணிணி உலகில் புதிய போக்காக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சாய்வாலா’ புகழ்

இணையம் மூலம் பல படங்களும், வீடியோக்களும் வைரலாகப் பரவிப் புகழ் பெற்றன என்றாலும், பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் பணியாற்றிய வாலிபர் ஒரு ஒளிப்படத்தால் ஒரே நாளில் இணையம் முழுவதும் பிரபலமானார். அர்ஷ்த் கான் எனும் அந்த வாலிபர் டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் காட்சியை ஒளிப்படக் கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். அந்த வாலிபரின் அழகான தோற்றமும், பச்சை நிறக் கண்களும் இணையவாசிகள் அனைவரையும் கவர்ந்திழுத்தன. அவரது ஒளிப்படத்தை லட்சக்கணக்கானோர் பகிர்ந்தனர். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தது இந்தியர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. இணையப் புகழ் காரணமாக இந்த வாலிபருக்கு விளம்பரப் பட வாய்ப்பும் தேடி வந்தது. இதே போல அமெரிக்காவில் டேம் டேனியல் எனும் வாலிபர் தனது அழகான தோற்றத்திற்காக இணையப் புகழ் பெற்றார்.

இணைய மயக்கம்

பெண்மணி ஒருவரின் கால்களின் தோற்றமும் இணையத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்தப் படத்தில் உள்ள கால்களின் தோற்றம் பளபளப்பாக இருக்கிறதா, அல்லது அவற்றின் மீது வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டிருக்கிறதா, எனும் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல முடியாததே இந்தப் படத்தை பற்றிப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது. இணையம் இதற்குப் பதில் அளிப்பதில் சரி பாதியாகப் பிரிந்து நின்றது. அதே போலப் பள்ளி மாணவர்களுக்கான குதிரைப் படங்களைக் கொண்ட அல்ஜீப்ரா புதிரும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

வைரல் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்ந்த நீரை மேலே கொட்டிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் வீடியோ வைரலானது போல 2016 இறுதியில் சிலையாக நிற்கும் ‘மானிக்குவன் சேலஞ்ச்’ வைரலானது. பின்னணியில் இசை ஒலிக்க, ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்போதே இடையே சிலையாக நிற்பது போலக் காட்சி தரும் வகையிலான வீடியோவைப் பகிர்வது புதிய போக்காக உருவாகி இருக்கிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஆஸ்கர் முதல் கோல்டன் க்ளோப் வரை..!

 

priyanka_13182.jpg

2017 கோல்டன் க்ளோப் விருது வழங்குபவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் உயரிய விருதான கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில் ப்ரியங்கா சோப்ரா விருந்தினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ப்ரியங்கா பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
'ஸ்மார்ட்போன்' ஊடாக நிஜமான முத்த பரிமாற்ற உணர்வு
 

 

ஸ்மார்ட் கைப்­பே­சி­களின் ஊடாக, நிஜத்தில் முத்­த­மொன்று கொடுக்கும் போது உண்­டாகும் உணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் முத்­தங்­களை பரி­மா­றக்­கூ­டிய புதிய கைத்­தொ­லை­பேசி துணை உப­க­ரணம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

 

21531Kissenger-%281%29.jpg

 

இது முற்­றிலும் உண்­மை­யா­னதும் நம்­ப­மு­டி­யா­த­து­மான கண்­டு­பி­டிப்­பாகும். லண்­ட­னி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் கல்வி கற்­று­வரும் எமா யென் சென் என்ற மாணவி ஒரு­வ­ரினால் இவ்­வ­கை­யான முத்தப் பரி­மாற்ற உப­க­ரணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உப­க­ர­ணத்­துக்கு ‘KISSENGER’    என அவர் பெய­ரிட்­டுள்ளார்.

 

தற்­போது இந்த கண்­டு­பி­டிப்பு பரீட்­சார்த்த மட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற போதிலும் மிகவும் விரை­வாக இதனை முழு­மைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக சென் தெரி­வித்­துள்ளார். 

 

21531Kissenger-%282%29.jpgகிஸெஞ்சர் எனப்­படும் இந்த உப­க­ர­ணத்தை ஸ்மார்ட் கைப்­பே­சி­களில் பொருத்­தி­யதன் பின்னர்  அதன்­மூலம் முத்­த­மிட முடியும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

 

தற்­போதை கால­கட்­டத்தில் காத­லர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைப்­பே­சி­களின் மூலம் முத்­தத்­தினை பரி­மாற்­றிக்­கொண்­டாலும் அது வெறும் ஒலி வடி­வத்­தி­லேயே காணப்­படும் எனவும் இந்த உப­க­ர­ணத்தில் காணப்­படும் உணரி அதா­வது சென்ஸர் மூலம் உணர்ச்­சி­க­ர­மா­ன­தான முத்­தப்­ப­ரி­மாற்­றத்­தினை மேற்­கொள்­ள­ மு­டி­யு­மெ­னவும் அதன்­போது நிஜத்தில் முத்­தத்தை பெறு­வ­தனை போன்று உண­ர ­மு­டி­யு­மெ­னவும் சென் தெரி­வித்­துள்ளார்.

 

எனினும் இந்த உப­க­ர­ணத்தின் குறைப்­பா­டொன்­றாக கரு­தப்­ப­டு­வது, இது ஐபோன் கைப்­பே­சி­க­ளுடன் மாத்­தி­ரமே உப­யோ­கிக்க கூடி­ய­வா­றாக வடி­வ­மைக்கப் பட்டுள்ளமையாகும்.

 

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் பயனடையும் விதத்தில் இதனை மாற்றியமைப் பதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

 

 

p32a.jpg

`வீக் எண்ட் கொண்டாட் டத்துக்கு தியேட்டருக்குப் போலாமா, பார்ட்டிக்குப் போலாமா, கேர்ள் ஃப்ரெண்ட்டோடு டேட்டிங் போலாமா?' என்றெல்லாம் பிளான் பண்ணுவோம். `அதெல்லாம் எதுக்கு? வாங்க போட்டோ எடுக்கலாம்’ எனக் கூப்பிடு கின்றனர் `சென்னை வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்'.

“போட்டோ எடுக்கணும்னு ஆர்வம் இருக்குற யாரு வேண்டுமானாலும் இதில் கலந்துக்கலாம். வயது வரம்பு கிடையாது. காசு பணமும் கிடையாது!’' எனச் சொல்லும் வீக் எண்ட் கிளிக்கர்ஸ் குரூப் இப்போது ஏழாவது வருட புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறார்கள்.

‘`ஜாக்சன், மணிமாறன், துரைசாமினு மூணு பேரு ஆரம்பிச்ச குரூப் இது. இப்போ ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு இடம் தெரியுதுன்னா, அதை குரூப்ல போடலாம். இந்தவாரம் இங்கே போட்டோஸ் எடுக்கலாம்னு அதுல ஆர்வமா இருக்கிறவுங்க அந்த வாரத்தை அந்த ஏரியாவுல க்ளிக் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. சென்னையிலேயே நிறைய போட்டோ வாக்கர்ஸ் குரூப் இருக்காங்க. ஆனாலும் நாங்க இதை ஏழு வருடமா பண்ணிட்டு இருக்கோம். முதல் நாலு வருடத்துல குரூப்ல உள்ளவங்க எடுத்த போட்டோஸ்ல பெஸ்ட் போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து, வருடக்கடைசியில கண்காட்சி நடத்தினோம். அஞ்சாவது வருடத்துல வெளிமாநிலங்கள்ல இருந்து வர்ற போட்டோக்களையும் போட்டிக்குத் தேர்ந்தெடுக்குறோம்!’’ - இது குரூப் வாய்ஸ்.

p32b.jpg

‘`நான் கிராமத்துல இருந்து வந்த பையன். எனக்குப் போட்டோ எடுக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, மேற்கொண்டு எதுவும் தெரியாது. 2009-ல சென்னை வந்தப்போ இங்க இப்படி ஒரு குரூப் இருக்குன்னு கேள்விப்பட்டு சேர்ந்தேன். ஆரம்பத்துல கேமரா எதுவும் இல்லாம இவங்க என்ன பண்றாங்கனு தெரிஞ்சுக்கிறதுக்காகப் போனேன்.  போட்டோகிராஃபி பத்தின விஷயங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிக்கிட்டாங்க. இதன்மூலமா எனக்கும் கொஞ்சம் ஐடியா கிடைச்சது’’ என்கிறர் ‘வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்’ல் ஒருவரான நவீன் கெளதம்.

p32c.jpg

‘`நான் கிராஃபிக் டிசைனராக இருக்கேன். மூணு வருடத்துக்கு முன்னால என் ஃப்ரெண்ட் மூலமா இந்த குரூப்ல சேர்ந்தேன். சென்னை மட்டுமில்லாம, வெளி மாநிலங்களுக்கு `டிராவல் வாக்' போவோம். ஒரு தடவை கூடுவாஞ்சேரி பக்கத்துல உள்ள கிராமத்துக்குப் பத்து பேரா போயிருந்தோம். எல்லோரும் போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டோம். கொஞ்ச நேரத்துல ஒருத்தர் வீட்டுல இருந்து காபி போட்டு கொண்டு வந்தாங்க. `மதிய சாப்பாடு சாப்பிட்டுத்தான் போகணும்'னு இன்னொரு வீட்டுல இருந்து அழைப்பு. எங்களை அவங்க வீட்டு விருந்தாளியாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க!’’ என்கிறார் மற்றொரு போட்டோகிராஃபர் வில்வேஷ்.

p32d.jpg

‘`மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிக்கிட்டு இருக்கேன். இளங்கலை பண்ணும்போது இந்த குரூப் மெம்பர் அல்லாதோருக்கான ஒரு போட்டோகிராஃபி போட்டி நடத்தினாங்க. அதுல என்னோட போட்டோ செலக்ட் ஆகிருந்துச்சு. அப்புறம் நான் இந்த குரூப்புக்குள்ள வந்துட்டேன். வாராவாரம் கூட்டம் அதிகமா இருந்தாலும், ஹோலி பண்டிகை அப்போ இன்னும் அதிகமாகிடும். போன வருடம் ஹோலிக்கு செளகார்பேட்டை போயிருந்தப்போ, போட்டோ எடுத்த கொஞ்ச நேரத்துல ஹோலி கொண்டாட ஆரம்பிச்சிட்டோம். நிறைய புது மனிதர்கள், புதிய அனுபவம்னு ரொம்ப ஜாலியா இருந்துச்சு!’’ என்கிறார் பிரசாந்த்.

`எங்க குரூப்ல நீங்களும் கலந்துக்கணுமா? எந்த ஏரியாவுக்கு நாங்க போட்டோ எடுக்கப் போறோம்னு ஃபிளிக்கர் தளத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்' என்றனர். லின்க் இதோ : https://www.flickr.com/groups/c-w-c/

அப்புறமென்ன? கிளம்புங்க பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்

இதுவரை மனித கண்கள் பார்த்திருக்காத அசாதாரண காட்சிகளை ஆளில்லா விமானங்கள் அபாரமாக எடுத்துள்ளன.

Man hangs from a cliff

 உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல் படம் பிடித்துள்ளார்.

Basilica of Saint Francis of Assisi at sunset immersed in fog

பனிமூட்ட கூட்டத்தில் சிக்கியிருக்கும், இத்தாலியின் அம்பிரியாவில் உள்ள அசிசி புனித பிரான்சிஸ் தேவாலயம். தேவாலயத்தின் கோபுரங்களை அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் குளிப்பாட்டும் கண்கொள்ள காட்சி.

Lots of white sheep against green grass

வெள்ளை ஆட்டு மந்தை கூட்டம் ருமேனியவின் வயல்வெளிகளில் சிதறி காணப்படும் காட்சி.

 

A line of camels walk through the desert

மேற்கு ஆஸ்திரேலியாவில், அந்தி சாயும் நேரத்தின் போது, கேபிள் கடற்கரையோரம் நடந்து செல்லும் ஒட்டகங்களின் நீண்ட நிழல்கள் கேரவனை போல தோற்றம் அளிக்கும் காட்சி.

An impressive aerial view above an erupting volcano on Reunion Island

ரியூனியன் தீவில் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் ஆச்சரியவான்வழிக் காட்சி

 

Summer camp in Gran Canaria on the finest playa de Amadores.

கிரான் கேனாரியாவில் உள்ள பிளேயா டி அமடோரெஸ்ஸின் கோடை காலத்தில் தாள முறைப்படி அமைந்திருப்பதை போல தோன்று குடைகள் மற்றும் படுக்கைகள்.

A couple hold hands surrounded by palm trees

பிரெஞ்சு பாலிநேஷியாவில் உள்ள ஹுஹைன் தீவில் நகரும் பனை மரங்கள் சூழப்பட்டு இருக்க ஒரு இளஞ்ஜோடி ஒன்றாக படுத்திருக்கும் காட்சி.

Ushiku Daibutsu statue

ஜப்பானில் இபராக்கி தலைமையகங்களை பசுமையான இயற்கை பகுதியை பார்த்தபடி காட்சி தரும் உஷிகு டைபுட்சுவின் பிரம்மாண்ட வெண்கல சிலை.

A bird flies over an island

பிரெஞ்சு பாலிநேஷியன் கடற்கரைகளின் சொர்க்கமாக கருதப்படும் பகுதியில் தற்செயலாக நடுவானில் பறந்து கொண்டிருந்த பறவையை படம் பிடித்துள்ள ஓர் ஆளில்லா விமானம்.

An aerial shot of a winding road and autumnal trees

டிரான்சில்வேனியாவில் உள்ள ஷிகிஸோயெரா தான் டிராக்குலா என அறியப்படும் விளாட் தி இம்பேலெரின் பிறப்பிடம். இந்த புகைப்படம், அவர் தன்னுடைய இரவு நேர பயணங்களின் போது எதை பார்த்திருப்பார் என்பதை என்று நினைக்க தோன்றுகிறது.

Patterned pavements contrast with green palm trees

ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் அமைந்துள்ள அற்புதமான கிராபிக் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல அதற்கு பொருத்தமாக பனைமரங்கள் அமைந்துள்ளன.

 

An aerial view of a beach

போலந்து கடற்கரையில் மணல் முகடுகள் முழுவதும் நீண்ட நிழல்களையும், ஈர்க்கக்கூடிய வடிவங்களையும் அடிவானத்திலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள சூரியன் உருவாக்கிய காட்சி.

 

Niagara Falls

நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஆர்ப்பரிக்கும் நீர் கீழ் நோக்கி செல்ல அதனை ஆளில்லா விமானம் பதிவு செய்த அற்புதம்.

A famer bends over in a field of chillies

இந்தியாவின் குண்டூரில் கடல் போல சிதறிக்கிடக்கும் மிளகாயில் தனி ஒரு வெள்ளை புள்ளியாக விவசாயி மட்டும்

A triangle of skiers from above

ரஷ்யாவில் அட்ஸிகார்டக் மலைப்பகுதி மீதான ஓர் உறைந்த இடத்தில் பனிச்சறுக்கு வீரர்களின் சாகச பயணம்.

Sunset in Vernazaa

வெர்னாஸ்ஸா என்ற இத்தாலிய கடற்கரை நகரில் பிரகாசமாக காட்சியளிக்கும் கட்டடங்களின் அழகிய காட்சி.

BBC

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.