Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

WR_20170215162432.jpeg

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

வெறுப்பால் வளரும் காதல்

எல்லாவிதமானவர்களுக்கும் துணையை தேட உதவும் டேட்டிங்(ஆப்) செயலிகள் செயல்படுகின்றன.

  • தொடங்கியவர்

காதலிச்சா இப்படி காதலிக்கணும்! செம்ம கெத்து விராட்

லவ் பண்ற பொண்ணைத்  திட்டினா கோபம் வரணும். அதே பொண்ணுகூட கிசுகிசு வந்தா அதை சமாளிக்கணும். அதேமாதிரி அந்தப் பொண்ணும் லவ் பண்ற பையனைப் பத்தி வதந்தி வந்தா, அதை கெத்தா சமாளிக்கணும். ஊரே இவங்க எங்கயாவது ஒளிஞ்சு மறைஞ்சு லவ் பண்ணிட்டு இருப்பாங்கனு சொல்லும்போது, செம மாஸா பப்ளிக்கா செல்ஃபி போட்டு வாழ்த்துச் சொல்லணும். ‛இப்படிப் பண்றதெல்லாம் சரி. லவ் பண்ணிக்கிட்டே இருந்தா வேலையை யாரு பாக்கிறது'னு கேட்கிறவங்களுக்குப் பதிலடி தர்ற மாதிரி, அவங்க அவங்க ஏரியால கில்லியா இருக்கணும். இதுக்கு அந்த ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவா இருக்கணும். விராட் கோஹ்லி - அனுஷ்கா ஷர்மா

ஆமா பாஸ்! இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை மற்றும் தயாரிப்பாளரான அனுஷ்கா ஷர்மாவுக்கும் காதல் என்பது ஆல் டைம் ட்ரெண்டிங்கான செய்தி. 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் மோசமாக, அனுஷ்கா ஷர்மாதான் காரணம் என விமர்சித்தனர். 2015-ல் உலகக் கோப்பையின் அரையிறுதியில் விராட் சொற்ப ரன்னில் அவுட் ஆனதற்கும் அனுஷ்காவைத் திட்டித் தீர்த்தனர்.

#ஓரளவுக்கு_தான்_பொறுமைனு இதுக்கெல்லாம் பதிலடி தர நேரம் தேடிட்டு இருந்தார் விராட். 2016  டி- 20 உலகக் கோப்பையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனுஷ்காவைக் கிண்டல் செய்தவர்களுக்கு ''ஷேம்'' என ட்வீட் செய்து உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‛கேலி செய்பவர்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு எல்லாமே அனுஷ்காதான்’ என பதில் தந்தார். அதுதான் இந்தியாவின் ‛ட்வீட் ஆஃப் தி இயர்’ என ட்விட்டரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity pic.twitter.com/OBIMA2EZKu

— Virat Kohli (@imVkohli) March 28, 2016

அடுத்ததாக, ஜனவரி 1, 2017-ல் அனுஷ்காவுக்கும் கோலிக்கும் நிச்சயதார்த்தம் என வதந்தி பரவியது. ‛வதந்திகளை நம்பாதீர்கள். எனக்குத் திருமணம் என்றால் நானே அறிவிப்பேன்’ என்றார் விராட். அனுஷ்காவுக்கும் இதே பிரச்னைதான். அவர் தயாரிக்கும் பாலிவுட் படமான ‛பில்ஹூரி’ படத்தை மறைமுகமாகத் தயாரிப்பது விராட்தான் என்பதற்கு, கோபப்பட்டு விளக்கமளித்தார் அனுஷ்கா.

Putting to rest some rumours that have been doing the rounds for some days now pic.twitter.com/bqS498U1tC

— Anushka Sharma (@AnushkaSharma) February 10, 2017

24*7 சர்ச்சைகளைச் சுற்றியே வாழும் இந்த ஜோடி. காதலர் தினத்தில் எல்லோருடைய கணிப்புக்கும் டாட் சொல்லும் விதமாக காதலர் தினம் கொண்டாடிய செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளனர். லட்சம் லைக்ஸ் தாண்டி ஹிட் அடிக்கிறது பதிவு.

 

இந்தப் பதிவில் ‛அனுஷ்கா விருப்பப்பட்டால் 365 நாளுமே காதலர் தினம்தான்’ என்று கூறியுள்ளார் விராட். என்னதான் பிரேக் அப், கிண்டல் மீம்ஸ் என கோலி - அனுஷ்கா சுற்றி வளைக்கப்பட்டாலும் கிரிக்கெட்டில் கெத்தான பேட்ஸ்மேனாக கோலியும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக அனுஷ்காவும் தொடர்கிறார்கள். காதல் எந்தவிதத்திலும் கேரியரைப் பாதிக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகிறார்கள்.

அனுஷ்கா - கோலி காதல், இன்றைய தலைமுறையின் ட்ரெண்டிங் காதல் வரிசையில் இடம்பிடித்துள்ளது. எந்த இடத்திலும் காதலையும், தன் ஜோடியையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதே கெத்து. 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சத்தம் அதிகமா இருக்கு #OneMinuteSketch

ஓவியம்: கோ.ராமமூர்த்தி

sasifffff_17484.jpg

 

 

 

 

 

  • தொடங்கியவர்

C4mtrKFUoAAYtOa.jpg

நீதிபதிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்..ஆகவே இந்த தீர்ப்பு திமுகவின் திட்டமிட்ட சதி.

C4r_S-hWcAQB99I.jpg

ஜெயா சமாதியில சபதம்கிற பேருல அடிக்கிறத பாத்தா அடியே நீ செத்தும் என்ன டார்ச்சர் பண்றியேங்கிற மாதிரில இருக்கு..!

 

மூடிகிட்டு இருந்துருந்தா… டெய்லியும் நாலு கோன கையெழுத்த போட்டமா பால்கனில டாட்டா காட்னமானு இருந்துருக்கலாம். விதி வலியது ?

 
 
C4q-ZJgWMAUp5Jd.jpg
 
அந்த அம்மா உயிரோட இருந்த அப்போவாது அமைச்சரை தான் மாத்தி மாத்தி விளையாடும் இவங்க என்னடானா முதலமைச்சர் பதவியேவே மாத்தி மாத்தி விளையாடுறாங்க
 
 
C4sOiYeWQAEBOwO.jpg
ஜெ. நினைவிடத்தில் வி.கே. சசிகலா 3 முறை ஆவேச சபதம்! இதெல்லாம் வசந்த மாளிகைலே பாத்த்தாச்சு.. தண்ணிய குடி தண்ணிய குடி.. ???
 
 
 
எவன்டா அது சின்னமா ஜெயிலுக்கு போறத ராக்கெட் விட்டு கொண்டாடுறது* ???? *ISRO* #வாட்சப் பாறைகள்
 
 
C4rQditWIAA9wpN.jpg
 
இந்த லெச்சணத்த தான் சனிகலா தமிழ்நாட்டுக்கு அர்ப்பணிக்க துடிக்குது... மக்களே உஷார்...
 
 
C4stPIMVUAMT5vz.jpg
தென்பாண்டிச் சீமையில, தேரோடும் வீதியில, மான்போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரொ...??டொட்டடொட்டடொட்டொடைங்..???
 
 
 
 
 
 
 
 

 

  • தொடங்கியவர்

இன்னுமா அந்த பட்டாசு வெடிக்கல...? #2YearsOfMaukaMauka

மோக்கா...மோக்கா...இந்த வார்த்தையப் படிக்கும் போதே பல விஷயங்கள் மனசுல வந்து போகும். கொஞ்ச நஞ்சமாவாடா பேசுன பேச்சுனு வடிவேலு டயலாக் மைண்ட் வாய்ஸ்ல கேக்குதுனா நீங்க இத படிச்சே ஆகணும். 

கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறும். அதிலும், உலகக்கோப்பை என்றால் போட்டியை எதிர்பார்த்து நகம் கடிக்கத் தொடங்கிவிடுவார்கள் ரசிகர்கள். இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் வீழ்த்தியதில்லை என்பது வரலாறு. பொதுவாக உலகக்கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது தொலைக்காட்சியில் மேட்ச் பார்ப்போர் எண்ணிக்கை பல கோடிகளைத் தொடும். 2011-ம் ஆண்டு இந்த இரு அணிகளும் அரை இறுதிப் போட்டியில் மோதியபோது, அந்த மேட்சை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 98.8 கோடி என்கிறது புள்ளி விவரம்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - மோக்கா மோக்கா விளம்பரம்

2015-ம் ஆண்டு இதே நாளான பிப்ரவரி, 15-ம் தேதி உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களின் முதல் போட்டியிலேயே மோதிக் கொண்டன. முதலில் பேட் செய்த இந்திய அணி, விராட் கோலியின் அசத்தல் சதத்தால் 300 ரன்களை ஸ்கோர் செய்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 224 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. இதெல்லாம் வழக்கமா நடக்கற விஷயம் தான். ஆனா இந்த விஷயம் அதுக்கும் மேல ரகம்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் வாங்கியிருந்தது. லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்வதாக இருந்தது. எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கும் இந்தப் போட்டியை விளம்பரப்படுத்த 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ தான் 'மோக்கா மோக்கா'. அந்த ஆண்டின் வைரல் விளம்பரம் இதுதான் என்ற பெருமையைப் பெற்றது. மோக்கா என்றால் இந்தி மற்றும் உருது மொழியில் 'வாய்ப்பு' எனப்பொருள். 'உலகக்கோப்பையில் இந்தியாவை இந்த முறையாவது பாகிஸ்தான் தோற்கடிக்குமா?' என பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இருபது வருடங்களுக்கும் மேலாக பட்டாசுகளுடன் காத்திருப்பது தான் விளம்பரத்தின் கான்சப்ட். 'பபுள்ராப்' நிறுவனத்தை நடத்திவந்த கேட்டகி என்கிற பெண்ணின் ஐடியாவின் அடிப்படையில், இந்த விளம்பரத்தை இயக்கியவர் சுரேஷ் திரிவேணி. போட்டிக்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த விளம்பரத்தை வெளியிட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இந்த விளம்பரம் ஹிட் அடிச்சு 2 வருஷம் ஆகிடுச்சு. தாத்தா காலத்து வெடிய லாஜிக்கே இல்லாம பாத்தாலும் பேரன் காலத்துலயும் வெடிக்க முடியாதது சோகம் தானே பாஸ்.

உலகக்கோப்பையில் இதுவரை இந்த இரு அணிகளும் மோதிய போட்டி முடிவுகளின் அடிப்படையாக வைத்து உருவான இந்த விளம்பரம் 12 மணி நேரத்தில், யூடியூப்பில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்தது. தற்போது வரை இந்த விளம்பரம் யூடியூப்பில் 39.82 லட்சம் பார்வைகளையும், சுமார் 22 ஆயிரம் லைக்குகளையும் பெற்றிருக்கிறது. இதை 27,850 பேர் யூடியூப்பில் ஷேர் செய்திருக்கிறார்கள். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் குவிந்திருக்கின்றன. இதுவரை 1,19,940 பேர் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஷேர் செய்திருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் அந்த ஆண்டின் 'வைரல்' நாயகன் இந்த விளம்பரம் தான்.

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் இந்த விளம்பரத்தைக் கொண்டாடினார்கள். கிரிக்கெட் வரலாறு அறிந்த பாகிஸ்தான் அணி ரசிகர்களும் இந்த விளம்பரத்தை ஏற்றுக்கொண்டு ரசித்தனர். ஆனால் கடுப்பாகிப் போன சில ரசிகர்கள் போட்டிக்காக, பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவிய மேட்ச்களின் சரித்திரத்தை தூசி தட்டியெடுத்து தும்மல் ஏற்படுத்தினர்.

இந்த விளம்பரம் தந்த ஊக்கத்தால், தென்னாப்பிரிக்கா, ஐக்கிர அரபு எமிரேட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய லீக் போட்டிகளுக்கும் 'மோக்கா மோக்கா' கான்சப்ட்டை வைத்து விளம்பரங்களை வெளியிட்டு அசத்தியது 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம். இதற்கு பதிலடி தரும் விதமாக பல நாடுகளிலிருந்தும் போட்டி வீடியோக்களும் வெளியாகின. ஆனால் அதனை தகர்த்தெறியும் விதமாக இந்தியா அத்தனை லீக் போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.  சோகம் என்னன்னா டி20 உலகக் கோப்பைலயும் இது தொடருது. கடைசி வரைக்கும் பாகிஸ்தான காப்பத்தவே முடியலங்குறது தான். 

மறுபடியும் பட்டாச தூசு தட்ட வேண்டிய நேரம் வந்திருக்கு. 2017 சாம்பியன் டிராபி, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடக்கவிருக்கிறது. கோலியின் தலைமையில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்திய ரசிகர்கள்கிட்ட இப்பயாவது பட்டாசு வெடிக்குமானு கேட்டா? அந்த பட்டாச பரண் மேல பத்திரமா எடுத்து வைங்க பாஸ்னு தான் பதில் வருது. 'மோக்கா மோக்கா'.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும்: வாட்சப் கேலிகளும்

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்புக்கு பிறகு வாட்சப்பில் வலம் வந்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை செய்திகளின் தொகுப்பு.

வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப் வாட்சப் அப்

பிபிசி தமிழ் :

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme und Text

மீரா ஜாஸ்மினின் பிறந்ததினம் இன்று ...

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மகளுடன் ஆனந்த யாழை மீட்டும் தோனி... வைரல் வீடியோ!

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, தற்போது ஜாலியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். எந்நேரமும் க்ளவுஸ் மாட்டி பயிற்சி செய்துகொண்டும், பஞ்சாயத்துகளை சமாளித்து பிஸியாகவும் இருந்த தோனி தற்போது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து  விலகுவதாக அறிவித்தார் தோனி. இதையடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியடைந்தது. ‛கேப்டன் பதவியை விட்டுத் தந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் அணியில் தொடர தயார்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து  கடந்த பத்து வருடங்களில் முதன்முறையாக இன்னொரு கேப்டன் தலைமையின் கீழ் இந்திய அணியின் ஜெர்ஸியில் விளையாடினார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி-20 இரண்டையும் வென்றது இந்திய அணி. இரண்டு ஃபார்மெட்டிலும் அசத்தினார் தோனி. கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்க வில்லை என்பதும், டி-20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாயின. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து, டி-20 போட்டியில் அரை சதம் எடுத்து அசத்தினார்.

ஜிவா தோனி

இங்கிலாந்து தொடருக்கு அடுத்தபடியாக வரும் ஜூன் மாதம்தான், ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது இந்திய அணி. எனவே இந்திய அணிக்குள் தோனியைப் பார்க்க வேண்டுமெனில் இன்னும் சுமார் நான்கு மாதங்கள்  வரை பொறுத்திருக்க வேண்டும். அதேசமயம் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் தோனி கலந்து கொள்வார் என்பதால், அங்கே அவரது பேட்டிங்கைக் காணலாம். ஐ.பி.எல்லில் புனே அணிக்காக அவர் விளையாடுகிறார்.

கடந்தமுறை புனே அணி ஐ.பி.எல்லில் சொதப்பித் தள்ளியது. இந்நிலையில் இந்திய அணியில் கேப்டன் பதவியைத் துறந்த பிறகு, புனே அணிக்குக் கேப்டனாகக் களமிறங்கப் போகிறார் மஹி. ஐ.பி.எல்லில் அவரது கேப்டன்சியைப் பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக தோனியைச் சுற்றியே இருந்த இந்திய கிரிக்கெட், தற்போது மெல்ல விலகத் தொடங்கியிருக்கிறது. தோனியும் அதைப் புரிந்து, தன் குடும்பத்துக்கு கூடுதலாக நேரம் ஒதுக்க ஆரம்பித்திருக்கிறார். வெகு காலமாக சமூக வலைத்தளங்களில் பெரியளவில் ஆக்டிவாக இல்லாதவர், தற்போது செயல்படத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் ஷேவாக்குடன் ஒரு பள்ளிக்கு விருந்தினராக சென்றதையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த பதிவுக்கு ‛லைக்ஸ்’ குவித்தார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் தன் மகள் ஜிவாவுடன்  (ZIVA) தவழ்ந்து விளையாடும் ஒரு வீடியாவைப் பகிர்ந்திருந்தார். புல் தரையில் ஜிவா தவழ்ந்து செல்ல, அவருக்குப் பின்னாலேயே தோனியும் தவழ்ந்தபடி செல்கிறார். இந்த வீடியோ செம வைரலாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிந்து, அதை ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எல்லாவற்றிலும் செம ஹிட் அடித்திருக்கிறது வீடியோ. வெறும் 11 செகண்ட் மட்டும் ஓடும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லோருமே ஜிவாவும் க்யூட், தோனியும் க்யூட் என கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். செம க்யூட்ல ...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text und im Freien

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இரட்டை வீரர்கள் மார்ஷல் சகோதரர்களின் பிறந்தநாள்.
ஹமிஷ் & ஜேம்ஸ் மார்ஷல் சொற்ப காலம் கலக்கி இருந்தார்கள்
Happy Birthday Hamish Marshall & James Marshall

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text und Nahaufnahme

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், தலைவர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் பிறந்த நாள் இன்று.

அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளங்கிய ஹெய்ன்ஸ், அண்மைக்காலம் வரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரராக விளங்கியவர்.
Happy Birthday Desmond Haynes.

  • தொடங்கியவர்

சசிகலா மட்டுமில்ல... இவங்களும் சிங்கம் பன்ச் பேசிருக்காங்க மக்களே!

ஒருபக்கம், பார்த்ததை எல்லாம் திங்குற ஓநாய் இல்ல பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்னு  கத்திக்கிட்டு இருக்குறாரு சூர்யா. இன்னொரு பக்கம், நாங்க அம்புட்டுப்பேருமே சிங்கம்தான்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க சசிகலா. இவுங்க மட்டும்தான் காது கிழியக் கத்தி டயலாக் பேசுவாங்களா.. நம்ம தமிழ் சினிமாவுல இதுமாதிரி பலபேர் சிங்கமாகவே மாறி சிலிர்க்க(!) வச்சிருக்காங்கப்பு.. அதையும் லைட்டா ஒரு பார்வை பார்த்துட்டு போங்க....

சிங்கம்

து 'சிங்கம் தனியாதான்டா வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்'னு 'கிரி' படத்துல அர்ஜூன் சொன்ன டயலாக். இது ஃபேமஸ் ஆச்சா இல்லையான்னு தெரியலை. ஆனா, இதே டயலாக்ல கொஞ்சம் இங்க்லீஸைப் பிச்சுப்போட்டு பஞ்ச் டயலாக்காக ஸ்கெட்ச் போட்டு ப் பேசி 'சிவாஜி' படத்துல ஸ்கோர் பண்ணிட்டுபோயிருப்பார் ரஜினி. 

 

  சிங்கப்பெருமாளோட புள்ளை புலி.. புலி.. புலிடா..ன்னுதான் ஒரு சீன்ல சொல்லுவாரு விஜய். ஆனா அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை. காடுனா... நான் சிங்கம். கடல்னா... நான் (பீப் ). காத்துனா... நான் சூறாவளின்னுலாம் டயலாக் பேசிருப்பார். இத்தனை பேசியும் அவருக்கு அந்தப் படத்துல கேரக்டர் என்னவோ குருவிதான். வசனம் போச்சே...!

 

சிங்கம் என்றால் என் தந்தைதான். செல்லம் என்றால் என் தந்தைதான்'னு 'அசல்'ல சீனியர் அஜித்தை சொல்லிருக்காரு ஜூனியர் அஜித். அவரு அப்பா சிங்கம்னா அவரோட பிள்ளை இவரும் சிங்கக்குட்டிதானேங்கிறதுக்காக இவரையும் லிஸ்ட்டுல சேர்த்தாச்சு மக்களே..

 

துதான் அந்த சிவாஜி படத்துல வந்த சிலிர்ப்பனுபவ சிங்கம் டயலாக். நிஜ சிங்கம்கூட அட் அ டைம்ல இவ்வளவுபேரை சிரிச்சிக்கிட்டே சமாளிக்குமான்னுதான் சத்தியமா தெரியலை. ஆமா, ஒரு டவுட். நிஜமாவே சிங்கம் சிங்கிளாதான் வருமா பாஸ்?

தானே... ஹீரோக்கள் மட்டும்தான் சிங்கமாகணுமா என்ன? இவரும் ரவுடிதான். இவரும் ஜெயிலுக்குப்போனவர்தான்  மக்களே.. அந்த சினம்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்ச, இந்த மொமென்டையும் பாத்துட்டுப்போங்க.. பாத்துட்டுப்போங்க.. பாத்துட்டுப்போங்க..

டி தூள்',  'சின்னத்திரையில் வெள்ளித்திரை'யின்னு ராதா கமெண்ட் சொல்லுறதுக்கு முன்னாடியே வெள்ளித்திரையில் வந்த 'தூள்' படத்து பாட்டு இது. படம் முழுக்க காலுல கட்டோடுதான் வருவார் விக்ரம்.  ஆனா அவரை ஏன் சிங்கம்போல நடந்துவாரான்னு அந்த பரவை முனியம்மா பாடுனாங்கன்னுதான் தெரியவே தெரியலை மக்களே.. என்னவா இருக்கும்..?!?!

நாட் பட் நாட் லீஸ்ட். இது 'அருணாச்சலம்' படத்துல வந்த சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாட்டு. கரண்ட் அரசியல் அட்ராசிட்டியோட ரொம்ப கனெக்ட் ஆகுற பாட்டு.  பாட்டெல்லாம் நல்லாத்தான் ஆரம்பிக்கும். ஆனா பாட்டு முடிஞ்சதும் கட்சியையே கலைச்சுட்டுபோயிடுவாரு ரஜினிகாந்த். ஹ்ம்ம்ம். இதெல்லாம் என்ன மாதிரியான குறியீடுன்னு தான் தெரியலை. ஆனாலும் அந்த வாயில்லா ஜீவனை வச்சு இன்னும் எத்தனைபேருதான் எவ்வளவு நாளுக்குத்தான் பாடாப்படுத்துவாங்களோன்னுதான் தெரியலை மக்களே... அவ்வ்வ்வ்.

 

 

48 minutes ago, நவீனன் said:

சசிகலா மட்டுமில்ல... இவங்களும் சிங்கம் பன்ச் பேசிருக்காங்க மக்களே!

இதுக்கு பதில் கொடுத்தே ஆகணும் 

கீழுள்ள வீடியோவை 1 நிமிடத்தில் இருந்து பாக்கவும் - விடை கிடைக்கலாம் 

 

  • தொடங்கியவர்

 

பொம்மை புலியை தாயாக நினைத்து விளையாடும் இந்திய புலிக்குட்டிகள்

வனவிலங்கு பூங்கா ஒன்றில் தாய் புலி இறந்து விட்ட நிலையில், புலி பொம்மையை வைத்து மூன்று புலிக்குட்டிகள் இந்தியாவில் பராமரிக்கப்படுகின்றன.

  • தொடங்கியவர்

இந்தியாவில் பிறந்ததற்காகப் பெருமைப்படச் செய்யும் பெருமிதம் இது!

இந்தியாவுல  வந்து ஏன்டா பொறந்தோம்னு  நினைக்கிறீங்களா? இப்படிப்பட்ட எண்ணம் நம்மில் சிலருக்கு அவ்வப்போது வந்து போவது இயல்பு. அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இந்த கருத்துக்கோவை.இந்தியாவில் பிறந்ததற்காகப் பெருமைப்படச் செய்யும் தருணம் இது!


இந்தியாவைப் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக.... படித்துப் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள்.

இந்தியா

 


உலகில் தோன்றிய நாகரிகங்களான கிரேக்க நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம் முதலிய நாகரிகங்கள் எல்லாம் இன்றைக்கு உதிர்ந்து விட்டன. அவற்றின் சுவடுகளை நாம் அருங்காட்சியகங்களிலோ, பாடப்புத்தகங்களிலோ மட்டுமே காணலாம். ஆனால், இந்திய நாகரிகங்களான பஃறுளி ஆற்று நாகரிகம் (குமரிகண்டம்) மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் இன்றைக்கும் இந்தியாவில் தமிழர் பண்பாடு மற்றும் இந்து தர்மம் என்ற பெயரில் ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அதன் அழியாத உண்மைத் தன்மையும், விஞ்ஞான, மெய்ஞ்ஞான அடித்தளமுமே ஆகும்.                                            

                                                                                           மேக்ஸ் முல்லர்வில் டொரண்ட்
ஜெர்மனியைச் சேர்ந்த உலக வரலாற்றாசிரியர் மேக்ஸ்முல்லர் இந்தியாவைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள்...

''எந்த நாடு  புராதன காலத்திலிருந்தே கல்வியறிவிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கியிருந்தது என்று என்னைக் கேட்டால், நான் இந்தியாவைத்தான் காட்டுவேன். 
நான் உலகம் முழுவதும் சுற்றி வந்து பார்த்ததில், உலகிலேயே சிறந்த செல்வமும், சக்தியும், அழகும், இயற்கையால் வழங்கப்பட்ட இடம் எதுவென்றால், அது இந்தியா தான்.

 


வானத்துக்குக் கீழ் முழு வளர்ச்சியடைந்த மனித மனமும், வாழ்க்கையின் மிக முக்கிய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகளைக் கொண்டதாகவும் திகழும் ஓர் இடம் எது என்று என்னைக் கேட்டால், நான் உடனே இந்தியாவைக் காட்டுவேன். எந்த ஒரு இலக்கியம், மிகவும் சரியானதும், நம்முடைய அக வாழ்க்கைக்குத் தேவையானதும், மிகவும் பரந்த அனுபவங்களைக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் தகுதியானதும், உண்மையில் மனித வாழ்க்கையின் சரியான இலக்கியமானதும் எது என்று கேட்டால் மறுமுறையும் நான் இந்தியாவையே காட்டுவேன்.  அதற்கு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே சான்று.

கங்கை

நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்துதான் ஆகவேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால், என்னை இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில், ஒரு இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும்."

- மேக்ஸ்முல்லர்

     ஹிமாலயாஸ்

'இந்தியா எங்கள் மூதாதையர்களின் தாய்நாடு. சமஸ்கிருதம் எங்களுடைய ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. மேலும், அவள் (இந்தியா) எங்கள் தத்துவங்களுக்கெல்லாம் தாய். கணித சாஸ்திரத்தின் மூலம் அவளே அரேபியர்களின் தாய். புத்தனை உருவாக்கியவள். கிராமப் பஞ்சாயத்து, சுயநிர்வாகம், மக்களாட்சி தத்துவத்துக்கும் தாயாவாள். பாரதத் தாய் பல வழிகளிலும் எங்களுக்குத் தாயாகிறாள்.

-வில் டொரண்ட், அமெரிக்க தத்துவஞானி.

'ஜப்பானிய எண்ணங்களையும், தத்துவங்களையும் படிப்பது, இந்தியத் தத்துவத்தைப் படிப்பதற்கு ஒப்பாகும்'.

-டாக்டர் டி.சுசுகி, ஜப்பானிய மேதை.

'இந்தியா தன்னுடைய கலாசாரத்தின் மூலம் ஜப்பானின் தாயாகிறாள். பல நூற்றாண்டுகளாக அவள் தன்னுடைய சொந்தக் கருத்துகள், தத்துவங்கள் மூலமாக ஜப்பானின் எண்ணத்திலும் கலாசாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறாள்.'
-எச்.நாக்கமூரா, ஜப்பானியப் பேராசிரியர்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள மனிதர்கள், தங்களுடைய ஆடையற்ற உடலில் பல வண்ணங்களைத் தீட்டிக் கொண்டு, காட்டுமிராண்டிகளாக காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோது, கீழை நாட்டிலுள்ள இந்தியர்கள் உயர்ந்த லட்சியங்களுடன் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றார்கள்.
-லார்டு மெக்காலே, இங்கிலாந்து அறிஞர்

இந்தியா தன்னுடைய மதம், கற்பனை, காவியங்கள் மூலம் சீனாவுக்கு குருவாகத் திகழ்ந்திருக்கிறது. மேலும், உலகத்துக்கே குருவாக, திரிகோண சமன்பாடு (Trigonometry) நாற்கோண சமன்பாடு, இலக்கணம், உச்சரிப்புக் கலை, சாஸ்திரம் ஆகியவற்றை வழங்கி இருக்கிறது.
 லின் யூடாங், சீனப் பேரறிஞர், தன்னுடைய 'Wisdom of India' என்ற நூலில் இந்தியா ஒரு சிப்பாயைக்கூட  தன் எல்லைக் கோட்டைத் தாண்டி அனுப்பாமலேயே சீனாவை 20 நூற்றாண்டுகளாக தன்னுடைய கலாசாரத்தின் மூலம் வென்றது. இந்த கலாசாரத் தாக்குதல் இந்தியாவில் தன்னுடைய அண்டை, அயல்நாட்டின் மீது ஏவப்பட்டதல்ல. எல்லாம் சுயமாக ஆராயப்பட்டு, சுயமாகக் கற்று, சுயமாக புனிதப் பயணம் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்டு, சீனாவின் எல்லா பகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-ஹூஷி, சீனத் தத்துவ அறிஞர் மற்றும் ஆசிரியர்

கலை

இந்திய வேதங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் ஆராயும்போது எத்தனையோ விந்தையான வியக்கத்தக்க பறக்கும் இயந்திரங்களும் (விமானம்) அதிபயங்கரமான ஆயுதங்களும், அதை பிரயோகிக்கும் வழிமுறைகளும் காணப்படுகின்றன. 
-எரிக்வன் டெனிகன், அமெரிக்க தத்துவஞானி

'மேற்கத்திய விஞ்ஞானிகளைவிட இந்திய விஞ்ஞானிகள் முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாத மேற்கத்திய அறிவியலைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியல் மற்றும் ஞானத்தில் ஊறிப்போனவர்கள் இந்தியர்கள். மகாபாரதம், கீதை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானத் தத்துவங்களை இப்போதைய உலகிற்குப் பயன்படும் வகையில் நீங்கள் அறிவியலாக மாற்ற வேண்டும்.
-ரிச்சர்ட் எர்னெஸ்ட் , நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 

'வருகின்ற காலத்தில் உலகை வியக்க வைத்து வழிநடத்திச் செல்லும் வல்லரசாக சீனா திகழும் என்கிறார்கள். இல்லை அது இந்தியா என்பதே எனது மதிப்பீடு"
-டாக்டர்.தாமஸ் கிளெஸ்டிஸ், ஆஸ்திரிய நாட்டு அதிபர்

மெக்காலேபில் கிளின்டன்வருகின்ற சில ஆண்டுகளில் இந்தியாவின்முகமே மாறிவிடும். கிராமத்து மக்கள் கூட, கூட்டமாக, கூட்டுறவு சொஸைட்டிகளின் மூலமாக எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இந்தியா ஓர் உதாரணமாகத் திகழும்.
- அமெரிக்க  முன்னாள் அதிபர் பில் கிளின்டன்,

(ராஜஸ்தானிலுள்ள நயோலா கிராமத்துக்கு விஜயம் செய்தபோது கூறியவை).

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பிறப்பும் இறப்பும் மாற்ற முடியாதது
 
 

article_1487134440-ld3015.jpgமானுட ஜனனம் என்றாலே பெரும் அவஸ்தைதான். அவனியில் பிறந்தவர்கள் இன்ப, துன்ப வலைக்குள் அகப்படாமல் இருக்க முடியாது.  

எனவே, அவன் பிறந்தால்த்தானே இறப்பு எனும் துன்பகரமான நிகழ்வு ஏற்படுகின்றது. இந்தக் கடவுள் ஏன்தான் இப்படிச் செய்கின்றானோ எனச் சொல்லி வருந்துபவர்கள் ஏராளம். 

சரி, இனிமேல் பூமியில் புதிதாக உயிர்கள் பிறப்பெடுக்க மாட்டா என வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன நடக்கும்? முதியவர் தொகை மட்டும் இருக்கும். 

மனித ஆயுள் நூறு வருடங்கள் என்றால், கால ஓட்டத்தில் மக்களே இருக்க மாட்டார்கள். மக்கள் குறையக் குறைய இருக்கும் முதியோரின் நிலை என்ன? 

உணவு, சுகாதாரம், பராமரிப்பு, புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாகம் எனப்பவற்றில் இளையவர்கள் பங்களிப்பு இன்றி உலகம் இயங்குமா? பூமி கால ஓட்டத்தில் ஸ்தம்பிதமாகி விடும் அல்லவா? 

எனவே, காரணத்துடனேயே காரியங்கள் நடக்கின்றன. பிறப்பும் இறப்பும் மாற்றமுடியாதது.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! #MotivationStory

'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு. ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம் மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில் வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன், அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.

ஜென் கதைகள் 

ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  

“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள். ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம் வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது. அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால், 'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்' என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை. இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம் 


அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள். 

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது. ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த நண்பன்.
ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்...

'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்' என்று.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில் சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.

அறை வாங்கிய நண்பன் சொன்னான்: ''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' என்றான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 16

 

1646 : இங்­கி­லாந்தின் முத­லா­வது உள்­நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்­பெற்­றது.

 

1796 : ஆங்­கி­லேயர் கொழும்பை டச்­சுக்­க­ளிடம் இருந்து கைப்­பற்­றினர்.

 

1838 : தென் ஆபி­ரிக்­காவில் நாட்டல் என்­னு­மி­டத்தில் சுலு இனத்­த­வரால் வூட்­ரெக்­கர்கள் எனப்­படும் பிரித்­தா­னிய குடி­யே­றிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்­தைகள் உட்­பட) படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

903vijaya-kumaratunga-05.jpg1918 :  ரஷ்­யா­விடம் இருந்து பிரி­வ­தாக லித்­து­வே­னியா  பிர­க­டனம் செய்­தது.

 

1934 : ஆஸ்­தி­ரி­யாவில் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது.

 

1937 : வொலஸ் கரோத்தேர்ஸ், நைலோ­னுக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படைகள் பிலிப்­பைன்ஸின் கொரெ­கிடோர் தீவில் தரை­யி­றங்­கின.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: முதல் தட­வை­யாக அமெ­ரிக்கப் போர் விமானம் ஜப்­பானின் டோக்­கி­யோவைத் தாக்­கி­யது.

 

1945 : அமெ­ரிக்கப் படைகள் பிலிப்­பைன்ஸின் பட்டான் குடாவை மீளக் கைப்­பற்­றினர்.

 

1947 : 80 ஆண்­டு­க­ளாக பிரித்­தா­னி­யர்­க­ளாக இருந்த கனே­டி­யர்கள் முதற்­த­ட­வை­யாக கனே­டிய குடி­யு­ரி­மையைப் பெற்­றனர். பிர­தமர் வில்­லியம் லியோன் மக்­கென்சி முத­லா­வது குடி­யு­ரி­மையைப் பெற்றார்.

 

1959 : ஜன­வரி 1 இல் புல்­ஜென்­சியோ படிஸ்­டாவை ஜனா­தி­பதி பத­வியில் இருந்து அகற்­றிய பிடல் கெஸ்ட்ரோ, கியூ­பாவின் புதிய பிர­த­ம­ரானார்.

 

1961 : எக்ஸ்­பு­ளோரர் 9 செய்­மதி விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

 

1962 : மேற்கு ஜேர்­ம­னியில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால் 315 பேர் உயி­ரிந்­தனர்.

 

1983 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரியா மற்றும் தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநி­லங்­களில் ஏற்­பட்ட காட்­டுத்­தீயில் சிக்கி 75 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1985 : மத்­திய கிழக்கில் ஹெஸ்­புல்லா இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1986 : சோவியத் கப்­ப­லான மிகைல் லெர்­மொண்டொவ் நியூ­ஸி­லாந்தில் மூழ்­கி­யது.

 

1988 : பிர­பல சிங்­களத் திரைப்­பட நடி­கரும் இலங்கை மக்கள் கட்­சியின் தலை­வரும், 1994 இல் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வான சந்­தி­ரி­காவின் கண­வ­ரு­மான விஜய குமா­ர­ண­துங்க கொழும்பில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

 

1998 : தாய்­வானில் இடம்­பெற்ற விமான விபத்தில் 196 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2005 : கால­நிலை மாற்றம் தொடர்­பான கியோட்டோ சர்­வ­தேச உடன்­ப­டிக்கை அமு­லுக்கு வந்­தது.

 

2007 : தமி­ழ­கத்தில் 2000 ஆம் ஆண்டில் தர்­ம­புரி பஸ் தீவைப்பு சம்­ப­வத்தில் மூன்று மாண­வி­களை உயி­ருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவ­ருக்குத் தூக்­குத்­தண்­ட­னயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

2013 : பாகிஸ்தானின் குவேட்டா நகரில் சந்தையொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் சுமார் 80 பேர் உயிரிழந்ததுடன் 190 பேர் காயமடைந்தனர். 

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

7 வயது சிறுமிக்கு சுந்தர் பிச்சையின் ஆச்சர்யப் பரிசு!

லகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் சுந்தர் பிச்சை. உலகில் பணியாளர்கள் உற்சாகமாக பணிபுரியும் நிறுவனமாக கூகுள்தான் திகழ்கிறது. 'கூகுளில் வேலை கிடைத்துவிடாதா?' என ஏங்காத டெக்கிகளே இல்லை எனலாம். ஆயிரக்கணக்கானோர் அந்நிறுவனத்தில் வேலைக்குச்சேர முயற்சி செய்துகொண்டிருக்க, இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி அனுப்பிய அப்ளிகேஷனுக்கு கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் கடிதம்தான் இணையத்தில் தற்போது டாப் 'வைரல்'.

தந்தையுடன் க்ளோயி!

க்ளோயி ப்ரிட்ஜ்வாட்டர் (பேர் தாங்க!) என்ற அந்த சிறுமி எழுதிய கடிதம் இதுதான்.

"என் பெயர் க்ளோயி. நான் பெரியவளானதும் கூகுள்ல வேலை செய்ய விரும்புறேன். எனக்கு சாக்லேட் ஃபேக்டரில வேலை செய்யவும், ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் கூட விருப்பம். கூகுள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உட்கார்ந்து சறுக்கி விளையாடலாம்ன்னு என் அப்பா சொல்றாரு. எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும். என்கிட்ட டேப்லட்டும் இருக்கு. நான் அதுல கேம்ஸ் விளையாட்றேன். என் அப்பா தந்த ஒரு கேம்ல ரோபோவ கட்டத்துக்கு மேலயும் கீழயும் நகர்த்தனும். இந்த கேம் விளையாடினா கம்ப்யூட்டர பத்தி அதிகம் தெரிஞ்சுக்கலாம்ன்னு என் அப்பா சொல்றாரு" என்றெல்லாம் அந்தக் கடிதம் போகிறது.

அந்தக் கடிதத்தில் இறுதியாக 'கூகுள்ல வேலை கிடைக்கனும்ன்னா உங்களுக்கு அப்ளிகேசன் அனுப்பனும்னு என் அப்பா சொன்னார். எனக்கு எப்படி அப்ளிகேசன் அனுப்பறதுன்னு தெரியல. ஆனா லெட்டர் எழுதுனா போதும்ன்னு என் அப்பா சொன்னார். என் லெட்டர படிச்சதுக்கு நன்றி. நான் இதைத்தவிர இன்னும் ஒரேயொரு லெட்டர் மட்டும் தான் இதுவரைக்கும் எழுதிருக்கேன். அதுவும் கிறிஸ்துமஸ்க்காக என் அப்பாவுக்கு எழுதியது. Good Bye"

என க்யூட்டாக எழுதி அனுப்பியிருக்கிறாள் க்ளோயி.

ஓய்வே இல்லாமல் உலகைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தக் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். 'டியர் க்ளோயி, உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி. உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி. தொழில்நுட்பம் குறித்து நீ படிப்பைத் தொடருவாய் என நம்புகிறேன். நீ கடினமாக உழைத்து உன் கனவுகளைப் பின்தொடர்ந்தால், கூகுளில் வேலை கிடைப்பதிலிருந்து ஒலிம்பிக்கில் நீச்சல் செய்வது வரை உனது அனைத்து எண்ணங்களும் நிறைவேறும்.  உன் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு உன் அப்ளிகேஷனைப் பரிசீலிக்கிறேன்' எனக் கடிதம் எழுதி இறுதியில் ஸ்மைலியோடு முடித்திருக்கிறார். பாசிட்டிவ் சிந்தனைகளால் அனைவரிடத்திலும் தன்னம்பிக்கையை விதைக்கும் சுந்தர் பிச்சையின் இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் கடிதம்

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்தச் சிறுமியின் தந்தை கூகுளில் வேலை செய்ய மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 'என் மகள் விளையாட்டாக எழுதிய கடிதத்துக்கு, கூகுளில் இருந்து இப்படியொரு பதில் வரும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை' என சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார் க்ளோயின் தந்தை.

என்ன பாஸ் நீங்களும் கூகுள்ல வேலைக்குச்சேர சுந்தர் பிச்சைக்கு அப்ளிகேசன் அனுப்பப் போறீங்களா? ஆல் த பெஸ்ட்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா படித்த பள்ளி இப்போது எப்படி இருக்கிறது?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, தற்போது சிறையில். அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, அவருக்கு அறிமுகமானவர் சசிகலா. வீடியோ கடை வைத்திருந்த சசிகலா,  ஜெயலலிதா பேசும் பொதுக் கூட்டங்களை வீடியோவாகப் பதிவு செய்து அதை ஜெயலலிதாவுக்கு வழங்கி வந்தார். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். 

சசிகலா

எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அப்போது சிலர், ஜெயலலிதாவை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அந்தச் சம்பவம் காரணமாக, ஜெயலலிதா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு சசிகலா ஆறுதல் கூறித் தேற்றினார். இதனால் இருவருக்குள்ளும் நட்பு பலப்பட்டது. காலப் போக்கில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். 

ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா, வேதா இல்லத்தில் இருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களை வெளியேற்றினார். பல கட்ட முயற்சிகளுக்குப் பின் ஜெயலலிதா மீண்டும் சசிகலாவைச் சேர்த்துக் கொண்டார். அப்போது சசிகலா விடுத்த அறிக்கை மிக முக்கியமானது. ''எனக்கு எந்தப் பதவி ஆசையும் இல்லை. எனது மீதிக் காலத்தில் அக்காவுக்குச் சேவை செய்து எனது வாழ்க்கையைக் கழிப்பேன். எந்தக் காலத்திலும் கட்சிப் பதவிக்கோ, வேறு எந்தப் பதவிக்கோ ஆசைப்படமாட்டேன்'' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது முதல்வர் பதவியில் அமரும் முயற்சியில் ஈடுபட்டு, நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அதற்கும் வழியின்றி சிறை சென்றுவிட்டார் சசி. 

சரி, சசிகலா என்ன படித்திருக்கிறார் என்று ஆராய்ந்தால், 10-ம் வகுப்பு  பாஸ் செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.  திருத்துறைப்பூண்டியில் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி பிறந்த சசிகலா ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை அங்குள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் படித்துள்ளார். 1959, ஜுன் 7-ம் தேதி பள்ளியில், அதாவது முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா. பின்னர் 1965-ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி  6-ம் வகுப்பில் இணைந்துள்ளார். ஆனால் 10-ம் வகுப்பு படிக்கும்போது படிப்பை நிறுத்தியுள்ளார். ஆனால் சர்டிஃபிகேட்டை 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிதான் வாங்கிச் சென்றுள்ளார். 

சசிகலா படித்த பள்ளி

இந்தப் பள்ளி தமிழகத்தின் முக்கியப் பிரபலங்களை உருவாக்கியுள்ளது. முன்னாள் டிஜிபி ஏ.எக்ஸ்.அலெக்ஸாண்டர், ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜரத்தினம், இளங்கோவன் போன்றவர்கள்  இங்குதான் படித்துள்ளனர். சசிகலா படிக்கும்போது இந்தப் பள்ளியில் 2,500 பேர் படித்து வந்துள்ளனர். இப்போது 280 ஆகக் குறைந்து விட்டதாம். 6-ம் வகுப்பில் தற்போது 6 பேர்தான் படிக்கின்றனர். 7-ம் வகுப்பில் 7 பேர், 8-ம் வகுப்பில் 5 பேர்தான் படித்து வருகின்றனராம். இப்படியே போனால் பிற்காலத்தில் பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டு விடும் என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

சசிகலா படித்த பள்ளி

பெரும்பாலும் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களே இங்கு படிக்கின்றனர். அதனாலேயே அரசியல்வாதிகளும் இந்தப் பள்ளியைக் கண்டு கொள்வதே இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றனர் அந்தப் பகுதிவாசிகள். 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் முறையான கழிவறை வசதி கிடையாது, குழந்தைகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. இது குறித்து, பள்ளி மாணவிகள் புகார் அளித்தாலும் யாரும் கண்டு கொள்வதுமில்லை.

தாய்மொழியான தமிழுக்குக்கூட இங்கு ஆசிரியர் இல்லை. கணக்கு , வரலாறு, வணிகவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கும்கூட ஆசிரியர்கள் கிடையாது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற பாடங்களுக்கு லேப் வசதியும் இல்லை.  பல ஆண்டுகளாக இதே நிலைதான். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர்தான் தகுதியான இளம் ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் இல்லாத பாடங்களுக்குப் பாடம் எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் சம்பளமும் கொடுக்கின்றனர். 

இதனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து போயிருக்கிறது. 12-ம் வகுப்பில் 41 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 57 சதவீதம் பேருமே பாஸ் ஆகியுள்ளனர். இத்தனை ஆண்டு காலம் முதல்வர் ஜெயலலிதாவுடன்தான் சசிகலா இருந்தார். அப்போது, தான் படித்த பள்ளிக்கு ஏதும் செய்ய வேண்டுமென்று  அவருக்குத் தோன்றவில்லை. இப்பொழுது சிறைக்கு வேறு சென்றுவிட்டார்...  இனி எங்கே செய்யப் போகிறார்? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோபத்தைத் தீர்க்க வேண்டுமா? இங்கே வந்து வெளுத்து வாங்குங்கள்!

 

 

பெருகிவரும் அதீத மன அழுத்ததுக்கு புதிய தீர்வொன்றைத் தருகிறது டெல்லியில் திறந்து வைக்கப்பட்டுள்ள ‘த பிரேக் ரூம்’!

வேலைச் சுமை மற்றும் நாளாந்தம் ஏற்படும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் பலரும் தடுமாறிவருகின்றனர். இதனால், நாளடைவில் உள, உடல் ரீதியான நோய்களுக்கும் ஆளாகிறார்கள். இதைத் தடுக்கும் வகையில், டெல்லியில் த பிரேக் ரூம் என்ற பெயரில் ஒரு வித்தியாசமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

7_The_Break_Room.jpg

கோபத்தை வெளிப்படுத்த எண்ணுபவர்கள், தமக்கான பணத்தைச் செலுத்திவிட்டு இந்த நிறுவனத்தின் உட்புற அறைக்குச் செல்கின்றனர். அங்கு, தொலைக்காட்சி, கண்ணாடி, தேனீர் குவளைகள் உள்ளிட்ட அனேக வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

அறையின் வாயிலில் கிரிக்கெட் மட்டை மற்றும் எல்லே மட்டை வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குப் பிடித்த மட்டையை எடுத்துக்கொண்டு போய், நீங்கள் விரும்பும் பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கலாம். தொலைக்காட்சி, கணினிகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் கூட உங்கள் ஆத்திரம் தீரும்வரை அடித்து நொறுக்கலாம். ஒவ்வொருவருக்கும் பதினைந்து நிமிடங்கள் வீதம் ஒதுக்கித் தரப்படுகிறது. மேலும், பொருட்களை உடைக்கும்போது உங்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான உடைகளும் தரப்படுகின்றன.

‘‘இங்கு வந்து எனது கோபத்தையெல்லாம் கொட்டிவிட்டுப் போவதால், மன இறுக்கம் குறைகிறது. இதனால், கோபம் எல்லாம் வடிந்து இயல்பான மன நிலையுடன் வீடுதிரும்ப முடிகிறது’’ என்கிறார் ஒருவர்!

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

அமெரிக்காவில், கைக்குழந்தையைப் பராமரிக்கத் திணறும் தந்தையர்க்கான நடன வகுப்பு (காணொளி)

 

 

கைக்குழந்தைகளைப் பராமரிப்பது தாய்மாருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், தந்தையர்க்கு அது ஒரு சோதனைதான். புதிதாகத் தந்தையாவோர் அவ்வப்போது இந்தச் சோதனைக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது சகஜமே!

 

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமெரிக்காவின் நடனப் பாடசாலையொன்று புதிய நடன வகையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

‘க்ரூவாரூ’ என்ற இந்த நடனப் பாடசாலை, தந்தையரும், அவர்களது கைக்குழந்தைகளும் இணைந்து ஆடக்கூடிய ஒரு நடனத்தைப் பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நடனப் பயிற்சி குறித்த காணொளியொன்று ஃபேஸ்புக்கில் பரபரப்பாகப் பரிமாறப்பட்டு வருகிறது.

அதில், குழந்தைகளைத் தாங்கும் உறைகளை அணிந்துகொண்டு, அதில் தம் குழந்தைகளை வைத்தபடி தந்தையர்கள் சிலர் சில நடன அசைவுகளைச் செய்கின்றனர். குழந்தைகளை அரவணைத்தபடியும் ஆடக்கூடிய இந்த ஆட்டத்தின்போது, குழந்தை அழுகையை நிறுத்திவிடும் என்பதோடு, குழந்தையைத் தனியாகப் பராமரிப்பதில் தந்தையர் முகங்கொடுக்கும் அசௌகரியங்களும் களையப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்த நடன முறைக்கு ஆதரவு எழுந்திருப்பதோடு, ஃபேஸ்புக்கில் மட்டும் இதுவரை நான்கரைக் கோடிப் பேர் இந்த நடனக் காட்சியைக் கண்டுகளித்துள்ளனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

நாஸ்டர்டாமஸ், இல்லுமினாட்டி... இன்னும் எவ்ளோதான் கதை விடுவீங்க...?

ஆதாம் ஏவாள் காலத்துல இருந்து இந்த ஆண்ட்ராய்ட் காலம் வரைக்கும் மாறாத ஒரே விஷயம்னா அது கண்டிப்பா வதந்தி பரப்புவதா தான் இருக்கும். அந்த அளவுக்கு நம்ம ஊர்ல சில பேர் வதந்தி பரப்புவதையே வாடிக்கையா வெச்சு சுத்திக்கிட்டு இருக்காங்க. எல்லாமே அப்டேட் ஆகிட்டாலும் வதந்தி பரப்புவது மட்டும் கொஞ்சம்கூட இன்னும் அப்டேட் ஆகவே இல்ல. சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆனதுல இருந்து இப்போ ஜெயிலுக்குப் போனவரைக்கும் வந்த சில கலகல லக லக  வதந்திகளின் ஸ்மால் தொகுப்பு இதோ...

நாஸ்டர்டாமஸ் வதந்தி : 

சசிகலா பொதுச் செயலாளரா ஆகிறதுக்கு முன்னாடியே இந்த வதந்தியைப் பரப்ப ஆரம்பிச்சிட்டாங்க. கிரேக்கத்துல முன்னொரு காலத்துல வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் சொன்னது படி ஜெயலலிதாவோட நெருங்கிய தோழி சசிகலாதான் அடுத்த முதல்வர் ஆவாங்க. அதுக்கு மோடியும் துணையா இருப்பார். அது மட்டும் இல்லாம அவங்க ஆட்சியில தமிழ்நாடே நல்ல நிலைமைக்கு வந்து இந்தியா வல்லரசு நாடா மாறி எல்லாரும் `ஜக ஜக ஜிக ஜிகா'ன்னு இருப்பாங்க, வேணும்னா கூகுள் டிரான்ஸ்லேட்டர்ல நீங்களே போட்டு செக் பண்ணிக்குங்கனு பெருசா நாலு பக்கத்துக்கு எல்லா குரூப்லையும் மெசேஜ் அனுப்பி இருந்தாங்க. அந்த மெசேஜ் படிக்கிற பச்சைக் குழந்தைகூட அதை வதந்தினு ஈசியா சொல்லிடும். எப்பவோ வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் ஏன் பாஸ் நம்ம சசிகலா பத்தி அப்பவே போஸ்ட் போடணும். அந்த அளவுக்குத் திறமை உள்ள மனுசன் இந்த சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு எப்படி வரும்னும் சொல்லி இருக்கலாம்ல. சரி அதெல்லாம் இருக்கட்டும் டைரக்டர் ஹரி இன்னும் எத்தனை சிங்கம் எடுப்பார்னு நீங்களே அவர் எழுதினதை வெச்சு எப்படியாவது கண்டுபிடிச்சு சொல்லுங்க பாஸ்....முடியல.

வாட்ஸ் அப் வதந்தி

வலம்புரி ஜான் வதந்தி :

 இந்தச் சமயத்துல பரவுன வதந்தியில் அதிக ட்ரெண்ட் ஆன வதந்தின்னா அது கண்டிப்பா வலம்புரி ஜான் சொன்னதா வெளி வந்த வதந்தியாதான் இருக்கும். ஜெயலலிதா முதல் தடவை முதல்வர் ஆனப்போ எல்லோரும் அவரை எதிர்த்தாங்க. அப்போ வலம்புரி ஜான் `இப்போ எல்லோரும் ஜெயலலிதா முதல்வர் ஆகிறதை எதிர்க்கிறீங்க, எதிர்காலத்துல ஜெயலலிதாவோட தோழி சசிகலா முதல்வர் ஆவாங்க'ன்னு சொல்லி இருந்ததா  நியூஸ் வந்தது. அதையும் எல்லோரும் நம்பி ஃபேஸ்புக்ல போஸ்ட்டா போட்டு `கிளு கிளு குளு குளு` ஆனாங்க. சொல்லப்போனா இதை சசிகாலாவே நம்பி இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா உண்மையில் நடந்தது அது இல்லையே பாஸ். சசிகலா போய், ஓ.பி.எஸ் போய், தீபா போய் இப்ப எடப்பாடி பழனிச்சாமினு ஓடிக்கிட்டு இருக்கு. இன்னும் வந்து சசிகலாதான் முதல்வர்ன்னு அதே வாட்ஸ்அப் ஃபார்வேட் அனுப்பிக்கிட்டு இருக்கீங்களே...இது நியாயமாரேரேரே....

வாட்ஸ் அப் வதந்தி

அஜித்-சசிகலா சந்திப்பு வதந்தி : 

அரசியல்ல எந்த மாற்றம் நடந்தாலும் உடனே அஜித்தை வெச்சு வதந்தி பரப்புவதுதான் நிறையப் பேரோட வாடிக்கையான வேலை. யார் என்ன அரசியல் முடிவு எடுத்தாலும் உடனே `அரசியலுக்கு வருகிறார் அஜித்'னு கொளுத்திப் போடுவாங்க. அந்த மாதிரி சசிகலா பொதுச் செயலாளர் ஆனதும் ஒரு வதந்தி பரப்பினாங்க. அஜித்தை சந்திக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஆகிறார் அஜித்னு பயங்கரமா ஃபார்வேட் மெசேஜ் அனுப்புனாங்க. அந்த நியூஸும் ஊர் உலகம் எல்லாம் ட்ரெண்ட் ஆகி மற்ற ஸ்டேட்ல எல்லாம் ஃபிளாஷ் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வழியா அது வதந்தினு அப்புறம்தான் தெரிஞ்சது. வதந்தி பரப்புறவங்களுக்கு அஜித் மேல என்ன அக்கறையோ தவறாம அவரை வெச்சு மாசம் ஒரு ஃபார்வேட் மெசெஜ் அனுப்பிடுறாங்க. போதும் பாஸ் போதும். தலையோட தலைல கை வெச்சது போதும். பேசாம இந்த மாதிரி ஃபார்வேட் மெசேஜுக்கு கமலை வெச்சு ட்ரை பண்ணலாமே....அவர் பேசுற அரசியலுக்கு கரைக்டா இருக்கும்.

வாட்ஸ் அப் வதந்தி

இல்லுமினாட்டி வதந்தி : 

வதந்தி பரப்புவதிலே உலகத்தரமான வதந்தி பரப்பும் குரூப் ஒண்னு இருக்கு. ஏதாவது ஒரு `பிரேக்கிங் நியூஸ்` விஷயம் நடந்தா உடனே இதுக்குப் பின்னாடி இல்லுமினாட்டி இருக்காங்க. அவங்கதான் இதெல்லாம் நடக்கக் காரணம் அப்படின்னு சொல்லிடுவாங்க. 2012-ல உலகம் அழிஞ்சிடும் அதுக்குப் பின்னாடி இல்லுமினாட்டி இருக்காங்க, அவங்க எல்லாம் பத்திரமா தப்பிச்சுடுவாங்கன்னு முதல்ல வதந்தி பரப்பினாங்க. அப்புறம் அந்த வதந்தி பயத்தை உண்டாக்கினதே இல்லுமினாட்டித்தான்னு வதந்தி பரப்பினாங்க. அதே மாதிரி சசிகலாவுக்குப் பின்னாடி இல்லுமினாட்டி இருக்காங்க, சசிகலாவே இல்லுமினாட்டிதான்னு கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம கலர்கலரா ரீல் விட்டாங்க. எல்லாத்துக்கும் பின்னாடி இல்லுமினாட்டி இருக்காங்கனா இந்த 'சுறா', 'ஏகன்' மாதிரி கொடூரங்களுக்குப் பின்னாடியும் இல்லுமினாட்டிகள்தான் இருக்காங்களா...? அதெல்லாம் சரி இல்லுமினாட்டிகளுக்குப் பின்னாடி யார் இருக்கா...?

வாட்ஸ் அப் வதந்தி

மெரினா போராட்டம் வதந்தி : 

போன மாசம் மெரினாவில் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து போராட்டம் செய்ததில் இருந்து புதுசா ஒரு வதந்தி பரப்பும் ட்ரெண்ட் ஆரம்பிச்சு இருக்கு. தமிழ்நாட்டுல எந்தப் பிரச்னை நடந்தாலும் உடனே மெரினாவில் மாணவர்கள் மீண்டும் கூடப் போகிறார்கள். மீண்டும் இன்னொரு புரட்சிப் போராட்டம் ஆரம்பிக்கப் போகிறதுன்னு வகைதொகை இல்லாம ஃபார்வேட் மெசெஜ் அனுப்பிக்கிட்டு இருக்காங்க. ஓ.பி.எஸ் தியானம் பண்ண மறுநாளும் இதே மாதிரி மாணவர் போராட்டம் வெடிக்கப் போகிறதுன்னு மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சாங்க. ஆனா மறுநாள் மெரினாவில் எப்பவும் வரும் புறாகூடக் கூட்டமா வரலை. அந்த அளவுக்குத்தான் நம்ம பசங்க வதந்தி பரப்புறாங்க. இனித் தமிழ்நாட்டுல எந்தப் பிரச்னை வந்தாலும் இதே மாதிரி வதந்தி பரப்பி மக்களைக் கண்டிப்பா காலி பண்ணாம இருக்க மாட்டாங்க நம்ம வதந்தி பாய்ஸ்.

வாட்ஸ் அப் வதந்தி

போதும்....நிறுத்திப்போம். இத்தோட வதந்தி எல்லாத்தையும் நிறுத்திப்போம். டாட்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பஸ்­ஸுக்­குள்ளும் பெஷன் ஷோ
 

"நியூயோர்க் பெஷன் வீக் 2017 கண்­காட்சி "

 

நியூயோர்க் பெஷன் வீக் 2017 கண்­காட்சி கடந்த 9 ஆம் திகதி முதல் நியூ யோர்க் நகரில் நடைபெறுகிறது.

 

1791.jpg

 

1792.jpg

 

1793.jpg

 

இதன் ஒரு பகு­தி­யாக பஸ் ஒன்றிலும் பெஷன் ஷோ நடை­பெற்­றமை குறிப்பிடத்தக்­கது.

 

179994947-01-02-copy.jpg

 

179994950-01-02-copy.jpg

 

 

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
5,000 ரூபா கடன் தொகை செலுத்தப்படாததால் சவப்பெட்டியிலிருந்து சடலத்தை எடுத்துச் சென்ற நிறுவனத்தினர்
 

உயி­ரி­ழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்­யப்­ப­ட­வி­ருந்த வேளையில், இறு­திக்­ கி­ரியை நடத்தும் நிறு­வ­ன­மொன்றின் ஊழி­யர்­களால் சவப்­பெட்­டி­யி­லி­ருந்து அந் ­ந­பரின் சடலம் பல­வந்­த­மாக அகற்­றப்­பட்ட சம்­பவம் ஆபி­ரிக்க நாடான கானாவில் இடம்­பெற்­றுள்­ளது.

 

அந் ­ந­பரின் குடும்­பத்­தினர் குறித்த மலர்­சாலை நிறு­வ­னத்­துக்கு சுமார் 5,000 ரூபா கடன் பாக்கி செலுத்த வேண்­டி­யி­ருந்­த­மையே இதற்­கான கார­ணமாம்.

 

22356_Untitled-1.jpg

 

கடந்த சனிக்­கி­ழமை இறு­திக்­கி­ரி­யை­யின்­போது, சவக்­கு­ழிக்குள் சட­லத்தை இறக்­கு­வ­தற்குத் குடும்­பத்­தினர் தயா­ரான வேளையில், இறு­திக்­கி­ரியை ஏற்­பாட்டு நிறு­வன ஊழி­யர்கள் சவப்­பெட்­டியை பல­வந்­த­மாக திறந்து சட­லத்தை வெளியே எடுத்­தனர்.

 

இதனால் இறந்த நபரின் குடும்­பத்­தி­னரும் உற­வி­னர்­களும் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். உயி­ரி­ழந்த நபரின் உற­வி­னர்­களால் தமக்கு வழங்­கப்­பட வேண்­டிய பணம் கிடைக்கும் வரை சட­லத்தை பாது­காப்­பாக வைத்­துக்­கொள்­ளப்­போ­வ­தாக உள்ளூர் ஊட­கங்­க­ளிடம் மேற்­படி நபர்கள் தெரி­வித்­தனர்.

 

சட­லத்­துக்கு ஆடை அணி­வித்து தயார்­ப­டுத்­தி­யமை முத­லான வேலை­க­ளுக்­கான கட்­ட­ணத்தில் 150 கானா சேடி பணம் (சுமார் 5000 இலங்கை ரூபா) வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாக மேற்­படி ஊழி­யர்கள் கூறி­ய­தாக இறுதிச் சடங்கில் கலந்­து­கொண்ட ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

 

பின்னர் மேற்­படி சடலம் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக மேற்­படி நிறு­வ­னத்தைச் சேர்ந்த ஒருவர் கூறு­கையில், “அனு­தாபம் கொண்ட சிலர் இவ் ­வி­ட­யத்தில் தலை­யிட்டு எமக்கு 100 கானா சேடி பணத்தை வழங்­கினர். நாம் இப்­ ப­ணத்தை ஏற்­றுக்­கொண்டு சட­லத்தை ஒப்­ப­டைத்தோம்” என்றார்.

 

எமது சேவை­க­ளுக்­காக செலுத்­தப்­பட வேண்டிய பணத்தை கொடுக்காமல், இறுதிக்கிரியை முடிந்தவுடன் நழுவிச் செல்ல முயற்சிப்பவர்களை எச்சரிப்பதற்காகவே இந் நடவடிக்யை நாம் மேற்கொண்டோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வைரலான ’மான் வேட்டை’ புகைப்படம்: கடுப்பான பெண் புகைப்படக்காரர்

 

பெண் புகைப்படக்காரர் எடுத்த படம்நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அலிசன் புட்டிகியக் (Alison Buttigieg) என்ற ஒரு பெண் புகைப்படக்காரர், சிறுத்தைகள் சேர்ந்து ஒரு மானை வேட்டையாடுகின்ற புகைப்படம் ஒன்றை எடுத்தார். தற்போது வைரலாகி உள்ளது. தன்னுடைய புகைப்படம் வைரலானதைவிட, அந்த புகைப்படத்துக்கான காரணத்தை கேட்டப்பிறகு உச்ச கடுப்பில் இருக்கிறார் அலிசன்.

விஷயம் இதுதான்! அவர் எடுத்த அந்த புகைப்படங்களில், மான் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிக உருக்கமாகவும், சிறுத்தைகள் அந்த வேட்டையை  கொண்டாடும் விதமாகவும் இருந்தன. மேலும், அந்த தாய் மான், தனது குட்டிகளை சிறுத்தைகளிடமிருந்து காப்பற்றுவதற்காக மிக அமைதியாக நின்று தன் உயிரை தியாகம் செய்ததாக அந்த புகைப்படத்துடன் யாரோ பதிய, அவை வைரலானது. இந்தி நடிகர் சாகித் கபூர் தன் டிவிட்டர் பக்கத்தில் அவற்றை பதிய ஹிட் லட்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, ‘இந்த புகைப்படங்களை எடுத்தபின், புகைப்படக்காரர் மனஅழுத்ததிற்கு ஆளானதாக யாரோ புரளியைக் கிளப்பிவிட, அது சமூகவலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவியது.

இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது, என முடிவு செய்து அலிசன், தனது வலைத்தளத்தில், அவர் எந்த சூழலில் இத்தகைய புகைப்படங்களை எடுத்தார் என விளக்கியுள்ளார்.

”கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கென்யாவில் உள்ள ’மசாய் மாரா’ என்ற வனத்தில், நான் இந்த மான் வேட்டை புகைப்படங்களை எடுத்தேன்.

இதில், ஒரு மானை எப்படி வேட்டையாட முடியும் என தாய் சிறுத்தையான நரஷா, தனது குட்டிகளுக்கு கற்பித்துக்கொண்டு இருந்தது. ஆனால், குட்டிகளோ அந்த கொம்பில்லாத மானை வேட்டையாடுவதற்கு பதில், அதை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தன. நான் எடுத்த எல்லா படங்களிலும், தாய் சிறுத்தைதான் அந்த மானின் கழுத்தை கடித்தவாறே இருந்திருக்கிறது. சிறுத்தை குட்டிகள் அந்த மானை தடுக்கவும், அதன் மீது பாயவும் கற்று, பயிற்சி செய்ததே தவிர, அதனை எப்படி தாக்கி கொல்வது என அவர்களுக்கு தெரியவில்லை.

இந்த சோதனையான காட்சியில், அந்த மான் சலனமற்று இருந்ததே, இயல்புக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. ஒருவேளை, அது மிகுந்த அதிர்ச்சியின் காரணமாக, செயலற்று போயிருக்கலாம். ஒவ்வொரு புகைப்படத்திலும், அந்த மானை பார்ப்பதற்கு தர்மசங்கடமாக இருந்தது. அதுவும், இந்த புகைப்படத்தில் (அலிசன் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்த புகைப்படம்) தனது இறுதி நிமிடங்கள் வரை, பெருமிதமாகவும்  அமைதியாகவும் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருப்பது போல தெரிந்தது. தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு, அந்த மானின் கண்களில் துளியும் இல்லை. இத்தகைய விஷயங்களே, இந்த புகைப்படங்களை எடுக்க தூண்டுதலாக அமைந்தது. இந்த புகைப்படங்களை பார்க்கிறவர்கள், அந்த மானை நினைத்து பரிதாபப்படவேண்டும் என்று நினைத்தேன். அதே சமயத்தில், ஒரு விலங்கிற்கு மற்றொரு விலங்கு வழக்கத்திற்கு மாறாக இரையாவது பற்றியும் சிந்தக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இறுதியில், அந்த தாய் சிறுத்தை... மானை வேட்டையாட, குட்டிகளுக்கு அன்று நல்ல உணவு கிடைத்தது; ஒருவேளை இதுதான் இயற்கையின் நியதிப்போல!” -பெண் புகைப்படக்காரர் என அலிசன் விவரித்திருந்தார்.
 
மேலும், அலிசன் தனது முகநூல் பக்கத்தில்,  “எனது கெரியரில் மிக முக்கியமாக விளங்கிய புகைப்படம், இப்போது ஒரு கெட்ட கனவுப்போல் ஆகிவிட்டது. என் புகைப்படத்தை என் அனுமதியின்றி பகிர்ந்தது மட்டுமல்லாமல், தங்களது பக்கத்திற்கு அதிக லைக்குகள் குவிக்கவேண்டும் என்று முழுக்க முழுக்க பொய்யான கதையை சமூகவலைத்தளத்தில் சிலர் பரப்புகிறார்கள். ‘நீங்களா அந்த மன அழுத்ததிற்கு ஆளான புகைப்படக்காரர்?’ என்று நூற்றுக்கணக்கான பேர் என்னை கேட்கிறார்கள். கிறுக்குத்தனமான ஒரு பொய்யான விஷயத்தை, எவ்வளவு பேர் பரப்புகிறார்கள்? எத்தனை கீழ்த்தரமான உலகத்தில் நாம் வாழ்கிறோம்?”, என்று ஆவேசமாக புலம்பித்தள்ளியிருக்கிறார்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.