Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

5 hours ago, நவீனன் said:

இந்த மாதிரி வீடுகளில் வாழ்வது சொர்கத்தில்ம்  வாழ்வது போன்றது....

நானும் இப்படி ஒரு வீட்டில்தான் வாழ்ந்தேன் // 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா #VikatanExclusive

 
 

" இது 'மிர்ஸா குடும்ப விழா'... " . அந்த நிகழ்வை சிரித்துக் கொண்டே அப்படித் தான் குறிப்பிடுகிறார் இந்தியாவின் ஆகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.  சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸாவும், அவர் கணவர் அக்பர் ரஷீதும் இணைந்து " தி லேபிள் பஜார்" என்ற பெயரில் டிசைனர் ஆடைகளுக்கான கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் பிராண்ட் அம்பாசிடரான சானியா மிர்ஸா அந்த நிகழ்வுக்காக சென்னை வந்திருந்தார்...

சென்னைப் பிடிக்குமா?

" நான் சென்னைக்கு மிகக் குறைந்த அளவிலேயே வந்துள்ளேன். சென்னையைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும்கூட, தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். தெலுங்கானாவுக்குப் பக்கம் தானே... நாம் நண்பர்கள் தானே!!!" என்று சொல்லி சிரிக்கிறார். 
பச்சைப் பூ போட்டது, சிகப்பு நட்சத்திரம் வரைந்தது, மஞ்சள் பொம்மைப் போட்டது என பல மாடல்கள் அசரடிக்கும் உடைகளில் இருந்தாலும், கறுப்பு நிற கவுனில் வந்த சானியா மிர்ஸா அங்கிருந்த அத்தனை பேரையும் அசரடித்தார். கொஞ்சம் சுருள் செய்யப்பட்ட ப்ரி ஹேரில் " விண்ணைத் தாண்டி வருவாயா" ஜெஸ்ஸியை தோற்கடித்து , சானியா தனித்து தெரிந்தார். 

சென்னையில் சானியா மிர்ஸா

உங்களோட ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன?

" என்னைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய உடை நமக்கு செளகரியமானதாக இருக்க வேண்டும். அது தான் அழகு. அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக நமக்குப் பிடிக்காத, அசெளகரியமான உடைகளை அணிவது மிக மோசமான விஷயம். ஆனால், ஒரு பிரபலமாக இருப்பதால் சமயங்களில் நான் அப்படி செய்ய வேண்டி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி, உடைக்கும், பணத்துக்கும் பெரிய சம்பந்தமில்லை. இருப்பதை அழகாக உடுத்த வேண்டும் அவ்வளவு தான்..."

பேசிக்கொண்டே நகரலாம் என்றவர், கண்காட்சியின் அரங்குகளை சுற்றிப்பார்க்கத் தொடங்கினார். இந்தியாவின் பிரபல டிசைனர் பிராண்ட்களான குக்கூன், மசாலா சாய், ஆர்த்தி விஜய் குப்தா, ஷ்ரத்தா நிகம் ஆகிய அரங்குகளில் தனக்குப் பிடித்த ஆடைகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

சென்னையில் டிசைனர் ஆடைக் கண்காட்சியில் சானியா மிர்ஸா

உலகம் முழுக்கத் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறீர்கள். பெண்களுக்கான பாதுகாப்பான சமூகமாக இது இருக்கிறதா?

" இது போன்ற கேள்விகளே கேட்கப்படாத ஒரு உலகில் நான் வாழ வேண்டுமென ஆசைப்படுகிறேன். காந்தி சொன்னது மாதிரி... எத்தனை மணியானாலும் ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக எங்கும் சென்று வர முடியும் என்ற நிலைக்கு இந்த சமூகத்தை மாற்ற வேண்டும். ஒரு பிரபலமாக இருப்பது, குறிப்பாக ஒரு பெண் பிரபலமாக இருப்பது ரொம்பவே கஷ்டம் தான். எங்குப் போனாலும் பெருங்கூட்டம், அதில் சில வக்கிர மனம் படைத்தவர்கள் உடலை எப்படியாவது தொட்டுப் பார்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளைச் செய்வார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு இதுவரை மிக மோசமான அனுபவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாலும்கூட, செய்திகளைப் பார்க்கும்போது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கப்படுவதை அறியும்போதெல்லாம், அப்படி ஒரு ஆவேசம் எனக்குள் ஏற்படுகிறது..." என்று சொல்லவும், சானியாவின் தங்கை அனம் அவரை சமாதானப்படுத்துகிறார். 

" பாருங்க... ஒரு ஃபேஷன் ஷோவுக்கு வந்துவிட்டு, எவ்வளவு சீரியசான விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அது அவசியம் பேச வேண்டிய விஷயம் தான். என் தங்கையை சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் எவ்வளவு வளர்ந்தாலும், எனக்கு இன்னும் சின்னக் குழந்தையாகத் தான் தெரிகிறாள். அவளும், அவர் கணவரும் சேர்ந்து இந்தியாவின் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை , நாடெங்கும், ஒவ்வொரு நகரத்துக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் இந்த " லேபிள் பஜார்" கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். தொழில் ரீதியாக இருப்பதைக் காட்டிலும், ஒரு குடும்பமாக நாங்கள் இதை செய்வதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான நடிகை வரலட்சுமி சரத்குமார் வந்து சேர்ந்தார். 

தன் தங்கை மற்றும் வரலட்சுமியோடு சானியா மிர்ஸா

மேடை ஏறிய இருவரும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்புக் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார்கள். 
" பெண்கள் பயமின்மைக் கொண்டவர்களாக வளர வேண்டும். ஆண்கள் ஒன்றும் கடவுள் இல்லை. எப்போதும் அவர்களையே பாதுகாப்புக்கு நம்பிக் கொண்டிருப்பதை விடுத்து, தங்களுக்கான பாதுகாப்பு அரணாகப் தாங்களே உருவெடுக்க வேண்டும்" என்று சற்றே காட்டமாகச் சொன்னார் வரலட்சுமி. 

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் அவர்கள் உடுத்தும் உடைகளுக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாக சொல்லப்படுவதைப் ப....?

கேள்வியை கேட்டு முடிப்பதற்குள்ளாகவே காட்டமாக பதில் சொல்ல ஆரம்பித்தார் சானியா மிர்ஸா,

" இது மிகவும் ஆழமான கேள்வி. அதே சமயம் மிகவும் முட்டாள்தனமான பார்வையும் கூட. இதை நான் ஒருபோதும் ஆமோதிக்க மாட்டேன்... உடையைத் தாண்டி, ஒரு பெண்ணாக, இவ்வளவு உயரங்களை அடைந்த பின்னரும் கூட, இன்றளவும் பல இடங்களில் நான் புறக்கணிப்புகளை சந்திக்கிறேன். நிச்சயம் பெண்களுக்கு எதிரான இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும்" என்று சொல்லி முடித்து மேடையிலிருந்து கீழே இறங்கினார். அங்கிருந்த பல பெண்களும் சானியாவின் இந்தக் கருத்துக்கு பாராட்டுத் தெரிவித்தனர் .

சானியா மிர்ஸா

 சமீபத்தில் ட்விட்டரில், 'போட்டோவில் மட்டும் சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் எனச் சொல்வது மிகவும் அபத்தமான விஷயம்' என்று நீங்கள் சொன்னது சர்ச்சையைக் கிளப்பியதே?

" ஹா ஹா ஹா... அது மிகவும் விளையாட்டுத்தனமாக, கிண்டலோடு நான் சொன்னதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு சர்ச்சையாக்கிவிட்டார்கள். ஒரு சிலர் என்னிடமே,  ' உங்களை நேரில் பார்ப்பதைவிட போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்' என்று சொல்வார்கள். அதை எப்படி பாராட்டாக எடுத்துக் கொள்வதா? இல்லை நேரில் நீ அழகாயில்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவதா? என்ற பாணியில் காமெடியாகத் தான் அந்த ட்வீட்டை நான் போட்டிருந்தேன்..." என்று சொல்லி மீண்டும் சிரிக்கிறார். 

சானியா மிர்ஸா

கிளம்பும் நேரம், எல்லா அரங்குகளையும் சுற்றிப்பார்த்துவிட்டு " பரவாயில்லை பெரும்பாலான துணிகள் எல்லாமே காட்டனாக இருக்கின்றன. வெயிலுக்கு உகந்தவை. எனக்கு எப்போதுமே காட்டன் உடைகள் தான் ரொம்ப பிடிக்கும்..." என்று சொன்னவர் , அங்கிருந்த ஜன்னல் வழி சாலையில் சிக்னல்களில் நின்று கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்து " சென்னையில் கொஞ்சம் வெயில் அதிகம் தான் இல்ல?" என்று சொன்னபடியே நமக்கு விடைகொடுத்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிரிக்கெட் கேம் வெறியர்களுக்கு... WCC2 அப்ளிகேஷன் அப்டேட்ஸ் தெரியுமா?

ரிஜினல் போட்டிகளுக்கு மட்டுமல்ல, மொபைல் கேம்களிலும் கிரிக்கெட்டிற்கு என தனி வரவேற்பு உண்டு. ஸ்ட்ரீட் கிரிக்கெட், உலககோப்பை கிரிக்கெட், பீச் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்... என கிரிக்கெட் விளையாடுவதற்கான மொபைல் கேம்கள் அதிகம். குறிப்பாக, 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2' என்ற கேம் அப்ளிகேஷனுக்கு அவ்ளோ டிமாண்ட். 'அதுக்கு என்ன இப்போ?' என்கிறீர்களா... 'அதிக டவுன்லோடுகளைப் பெற்ற மொபைல் கேம்', 'அதிகம் விளையாடப்படும் மொபைல் கேம்' என மொபைல் அப்ளிகேஷன் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட, சிறந்த கிரிக்கெட் கேம் அப்ளிகேஷனுக்கான பல விருதுகளைப் பெற்ற இந்த 'WCC 2' பல கிரிக்கெட் கேம் வெறியர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு அதிரடி அப்டேட்டுகளுடன் களமிறங்கியிருக்கிறது. 

ஏற்கெனவே 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் இருந்த கிரிக்கெட் அப்ளிகேஷனின் இரண்டாம் பாகம் இது. சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோதே 3டி, துல்லியமான கிராஃபிக்ஸ், அனைத்து வகையான போட்டிகளும் அடங்கிய பேக்கேஜ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 'கொசுறு' அணிகளும் இடம்பெற்றது... என கிளாஸிக் வரிசையில் இருந்தது. இந்த மொபைல் கேம் விளையாடும் பல லட்சம் ரசிகர்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது இந்த, 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2' அப்ளிகேஷன்.

wcc2 கிரிக்கெட் கேம்

கிரிக்கெட் அணிகளுக்கான கலக்கல் ‘ஜெர்ஸி’ தேர்வில் இருந்து தொடங்குகிறது மாற்றம். ஏற்கெனவே இருந்த ஜெர்ஸிகளோடு, எட்டு புதிய மாடல் ஜெர்ஸிகள் இடம்பெற்றுள்ளது. ஆறு புதிய மைதானங்கள் இடம்பிடித்திருக்கிறது. பழைய வெர்ஷனில் வெயில், மேகமூட்டம் போன்ற சூழல்களில் விளையாடும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. புதிய அப்டேட்டில், இரவுப் போட்டியாக விளையாடும் வாய்ப்பும் சேர்ந்திருக்கிறது. இரவுப் போட்டியின் வித்தியாசத்தைக் காட்ட, ஸ்டெம்புகள் தெறிக்கும்போது, எல்.இ.டி பல்ப் எரிகிறது. 

wcc2 கிரிக்கெட் கேம்

ஸ்கூப், ஹெலிகாப்டர் ஷாட், அப்பர்கட் ஆகிய அதிரடி ஷாட்களுக்கு தேமேவென விளையாடிக்கொண்டிருந்த பேட்ஸ்மென்கள், புதுவெர்ஷனில் எகிறி, இறங்கி அடிக்கிறார்கள். ஆங்கில கமெண்டரியோடு, ஹிந்தியும் இப்போது இணைந்திருக்கிறது. ஒரிஜினல் கிரிக்கெட் போட்டிகளில் 'ஹைலைட்ஸ்' பார்ப்பதில் சுவாரஸ்யம் அதிகம். அதே சுவாரஸ்யத்தை இந்த அப்ளிகேஷனுக்கும் கடத்த, விளையாடும் போட்டிகளின் ஹைலைட்ஸ்களைப் பதிவேற்றி வைத்துக்கொள்ளும் வசதியும், நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்திருக்கிறார்கள்.

wcc2 கிரிக்கெட் கேம்

ஒவ்வொரு அணிக்கும் 11 பேர் கொண்ட வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். மொபைல் கேம்தான் என்றாலும், நமக்குப் பிடிக்காத வீரர்களோடு விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்டேட் வெர்ஷனில், ஒவ்வொரு அணிக்கும் 15 பேர் கொண்ட குழுவில் இருந்து நமக்குப் பிடித்த 11 பேரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆக மொத்தம், புது அப்டேட்களையும் சேர்த்து 150 வகையான அனிமேஷன்கள், 26 வகையான ஷாட்கள், டீம் செலிபிரேஷன், ஃபீல்டிங் ஆப்ஷனில் புதுமை, அம்பயரின் மேனரிஸங்களில் மாற்றம், ரன் அவுட்டில் 'டைரக்ட் ஹிட்' ஆச்சரியங்கள், ஓவர் த்ரோ சுவாரஸ்யம், 'கடின' நிலையில் இருந்து 'மிகக் கடின' நிலையில் விளையாடிக்கொள்ளும் வசதி... என ஒரிஜினல் கிரிக்கெட் போட்டி தரும் அத்தனை ஆச்சர்யங்களையும் தருகிறது 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2' அப்ளிகேஷன். 

இன்னும் எதிர்பார்க்கிறோம் பாஸ்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

குசும்பன் முதல் உத்தம பீன் வரை..! மிஸ்டர் பீனின் மிஸ் பண்ணக் கூடாத ஃபர்ஸ்ட் லுக்

  • தொடங்கியவர்

மலைக்கவைக்கும் மூளையின் செயல்பாடுகள்..! #BrainFacts

 
 

நான்கு கால்களை உடையதால் நமது மூளை அதை நாற்காலி என நமக்குப் பரிந்துரைத்தது. தக்காளி என்ற பெயர் காரணப்பெயரல்ல. ஆனால் அதையும் மூளைதான் பரிந்துரைத்தது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் இடுகுறிப்பெயரோ, காரணப்பெயரோ நமது இதன் மூலம்தான் பெயர் வைக்கப்படுகிறது. நமது சிந்தனை முழுவதும் இங்கிருந்துதான் தோன்றுகிறது. அப்படியென்றால் இதற்கு ‘மூளை’ என்ற பெயர் எப்படி வந்திருக்கும்? ஒருவரின் மூளைதான் இந்தப் பெயரை சிந்தித்திருக்கும். அப்படிப் பார்க்கும்போது தனக்குத்தானே பெயரிட்டுக்கொண்டது எனச் சொல்லலாம். ஆனால் இதைவிட ஆச்சர்யமான பல தன்மைகளைக் கொண்டுள்ளது என்கிறார் பொது நலமருத்துவர் தினகரன்.  மேலும் அவை என்னென்ன என்பது குறித்தும் விளக்குகிறார்...

 

 

மூளை 

 

ஓய்வு இல்லாத போதும் உழைக்கும்

சில மணி நேரங்கள் வேலை செய்தாலே நமது உடல் களைத்துவிடும். ஓய்வு தேவைப்படும்; தூங்கினால் நன்றாக இருக்கும் என தினகரன்நினைப்போம். ஆனால் நமது உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் இது மட்டும் தூங்காது. அதிலும் நாம் தூங்கும்போது இருப்பதைவிட விழித்திருக்கும்போது இதன் செயல்பாடு அதிகமாக இருக்கும்.

 

மறதி நல்லது!

புதிய செய்திகளைச் சேமிக்க, பழைய செய்திகளை மூளை தானாகவே அழித்துக்கொள்ளும். இதற்காக நாம் அதிகம் நினைக்காத, நமக்கு மேற்கொண்டு தேவைப்படாத தகவல்களை  தேர்ந்தெடுக்கும். பள்ளியில் கற்பிக்கப்பட்ட கணித சூத்திரங்களைப் பெரும்பாலும் மறந்திருப்பீர்கள். ஆனால் கணக்கு டீச்சரை மறந்திருக்கமாட்டீர்கள். அது இதனால்தான்.

 

வலிக்கவே வலிக்காது

இதற்கு வலி என்ற உணர்வு கிடையாது. உடலின் பிற பகுதிகளில் வலி ஏற்பட்டால் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுதான் மூளைக்குத் தெரியும். இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள், திசுக்களில் ஏற்படும் வலி இதில் ஏற்படும் வலி அல்ல.

ஆற்றலை அதிகம் பயன்படுத்தும்

உடல் எடையில் இதன் அளவு 2 சதவிகிதம்தான். ஆனால் நாம் சேமித்து வைத்திருக்கும் ஆற்றலில் 20 சதவிகிதத்தை இதுதான் பயன்படுத்தும். உடல் பாகங்களில் மிக அதிக ஆற்றலைப் பயன்படுத்துவது இதுதான். இதன் செல்கள் சிறப்பாகச் செயல்பட மூளை மிகவும் முக்கியமாகும். அதேபோல் இதன் எடையில் சராசரியாக 75 சதவிகிதம் தண்ணீர்தான் உள்ளது.

பாதுகாப்பு

 

விளக்கு எரியச் செய்யும்

நாம் விழித்திருக்கும்போது இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு குறைந்த வாட் விளக்கு (Light) எரிய வைக்க முடியும்.

பயிற்சி தேவை

நமது உடல் உறுப்புகளை வலுவாக்க பயிற்சிகள் செய்வதுபோல் இதை வலுவாக்கவும் பயிற்சிகள் செய்வது அவசியமாகும். இதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் நாம் செய்யக்கூடிய பிடித்த பாட்டுக்கு நடனமாடுதல், நன்றாக உறங்குதல், சரிவிகித உணவு உண்ணுதல், புதிய இடங்களுக்குச் செல்லுதல், பிடித்த விளையாட்டுகளை விளையாடுதல் ஆகியவை மூளைக்கான பயிற்சிகளாகும். இது மூளையைப் புத்துணர்வாக்கும்.

 வியர்த்தால் சுருங்கும்

Brain

90 நிமிடங்களுக்கு உடல் வியர்த்தால் மூளை தற்காலிகமாகச் சுருங்கிவிடும். காய்ச்சல் வந்தால் நமது உடல் அதிகமாக வியர்க்கும். அப்போது இது தற்காலிகமாக சுருங்குவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயது கூடும்போது, எவ்வளவு சுருங்குமோ அதற்கு ஒப்பானது.

ஒரு லட்சம் வேதிமாற்றங்கள்

ஒரு நொடியில் இதில் நடக்கும் வேதிமாற்றங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குமேல். அதேபோல் எல்லா மூளை செல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பத்தாயிரம் வகையான நியூரான்கள் இதில் உள்ளன.

 

ஐம்பதாயிரம் எண்ணங்கள்

ஒரு நாளைக்கு நமது மூளையில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை 50,000. ஆனால் இவற்றில் 70 சதவிகிதம் எதிர்மறையான சிந்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்ற விவேகானந்தரின் வாக்கு, மூளையைப் பொறுத்தவரை நூறு சதவீதம் உண்மை. நாம் ஒன்றை அடையவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கடுமையாக உழைத்தால் அதை அடைவதற்கான வழிகளைக் காட்டித்தரும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆனால் எதிர்மறை சிந்தனைகளை வளர்த்தால் தோல்விதான் மிஞ்சும். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை மனதில் வைத்து செயல்பட்டால் இது சிறப்பாக இயங்குவதோடு நம் வாழ்வும் சிறப்பாக இருக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

டென்னிஸ் விளையாடி உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் ‘ரிக்கி’ குரங்கு (Video)


டென்னிஸ் விளையாடி உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் ‘ரிக்கி’ குரங்கு (Video)
 

ஜப்பானைச் சேர்ந்த ‘ரிக்கி’ என பெயரிடப்பட்டுள்ள 6 வயதான குரங்கு மிக அழகாக டென்னிஸ் விளையாடுகின்றது.

டென்னிஸ் உடையணிந்து, இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, டென்னிஸ் மட்டையால் பந்தை அடித்து விளையாடுகிறது.

பந்து உயரமாகச் செல்லும்போது தரையிலிருந்து எம்பிக்குதித்து, பந்தை லாவகமாக அடிக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தி விடுகிறது.
விளையாடி முடித்த பிறகு, பயிற்சியாளர் பாராட்டியவுடன் அவரது தோள்களில் தட்டிக்கொடுக்கும்போது எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது ரிக்கி.

ரிக்கி டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் இலட்சக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

விருந்தளித்து துபாய் குருத்வாரா கின்னஸ் சாதனை!

 
 

இந்தியாவிலேயே பஞ்சாப் மக்கள்தான், நல்ல காரியங்களுக்காக நிதியை அள்ளி வழங்குவதில் முதலிடம் வகிப்பவர்கள்.  இந்தியாவில் நன்கொடையாக பெறப்படும் நிதியில் குறிப்பிட்ட சதவிகிதம் சீக்கிய மக்களிடம் இருந்தே பெறப்படுகிறது. 

DUBAI__22494.jpg

சீக்கியர்களின் குருத்வராக்களில் 24 மணி நேரமும் இடைவிடாமல் சமயலறைகள் இயங்கிக் கொண்டிருக்கும். அமிர்தரசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. அதுபோல், உலகம் முழுக்க உள்ள குருத்வாராக்கள் அன்னதான பணியை மேற்கொள்கின்றன. 

துபாயில் குருநானக் தர்பார் என்ற குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவில் நேற்று காலை உணவு சாப்பிட 101 நாடுகளைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்றனர். இது புதிய கின்னஸ் சாதனை ஆகும். உலகிலேயே பல நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒருங்கே அமர்ந்து உணவு உண்ட வகையில் கின்னஸ் புத்தகத்தில் இந்த குருத்வாரா இடம் பெறுகிறது. கடந்த 2015ம் ஆண்டு மிலன் நகரில் நடந்த உணவுத் திருவிழாவில் 55 நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒருங்கே அமர்ந்து உணவு உண்டது பழைய சாதனை.

 

 

 

 

இந்தியத் தெருக்களில் ராக்கும், வின் டீசலும் செய்த அட்டூழியங்கள்!

 

`ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' நாயகர்கள் ராக்கும், வின் டீசலும் இந்தியத் தெருக்களில் ரேஸ் நடத்தினால் எப்படியிருக்கும் என்ற வீடியோ தான் இன்றைய வைரல் ஹிட்.

jordindian

`ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படங்களின் அத்தனைப் பாகங்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்திரைப்படத்தின் நாயகர்களான ராக், வின் டீசல் இருவரும் இந்தியத் தெருக்களில் ஒருவர் ஆட்டோவிலும்  மற்றொருவர் மாருதி 800 வண்டியிலும் ரேஸ் செல்கின்றனர். இவர்கள் சந்திக்கும் தடைகளும், சோதனைகளும் தான் ’ஃபுல் பாஸ்ட் ஃபுல் ஃப்யூரியஸ்’. 3 நிமிடங்களுக்கும் குறைவான இந்த வீடியோ தான் டாப் வைரல்.

`ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'-ன் இந்தியப் பதிப்பாக வெளியாகியுள்ள இந்த வீடியோ 1மில்லியன் லைக்குகளையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா

சானியா மிர்ஸா

 

இப்பிடி பப்பிளிக்கிலை வந்து போஸ் நிக்கிறதின்ரை அர்த்தம் என்ன? :cool:

 

  • தொடங்கியவர்
கல்விக்கு வேலி இல்லை
 
 

article_1492242226-index.jpgஇளம்வயது மேதைகள் எப்படி உருவாகின்றார்கள் என்பதற்குப் பலகாரணங்கள் உண்டு. இது அவர்களின் பரம்பரை தொடர்பானது எனவும் ஒரு பிரதானமான கருத்துண்டு. ஆனால், இன்று கல்வியில் சமத்துவ நிலை காணப்படுவதால் கல்வி கற்காத பெற்றோரின் பிள்ளைகளும் அதீத மூளை வளர்ச்சியைப் பெற்று விடுகின்றனர். 

ஏழை மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசக்கல்வி, தாய் மொழிக் கல்வி, சாதாரண பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதால் மிகச் சிறப்பான பெறுபேறுகளைக் கிராமத்துப் பிள்ளைகளும் பெற்று விடுகின்றனர். ‘ஒட்டீசியம்’ எனும் நோய் சிறுவர்களைப் பாதிப்டைந்துவிடச் செய்கின்றன.இந்த நோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று, கல்வித்துறையில் வல்லுநர்களாக சாதனை படைத்திருக்கின்றார்கள்.  

உலகில் முதல்தர பணக்காரர் பில்கேட், ஹிந்திப்பட நடிகர் ஹிருத்திக்ரோன் போன்றொர் இந்நோயினால் பீடிக்கப்பட்டு மீண்டவர்கள்தான். 

கல்விக்கு வேலி இல்லை; எல்லையில்லாத சாதனைகளை எவரும் ஈட்ட முடியும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எவ்வ்வ்வ்வ்ளோ பெரிய்ய்ய்ய்யயய சைக்கிள்..!

 
 

ஒருவர் அந்த சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் "பெலிக்ஸ் ரமோன் குய்ரொலா செபிரோ". ஒவ்வொரு படியாக ஏற, ஏற நாமும் நம் பார்வையை ஏற்றிக் கொண்டே போனால் 19 அடியில் போய் நிற்கிறது. கீழே இருப்பவர் சைக்கிளை விட்டுவிட, அதன் பெடல்களை மிதித்து ஓட்டத் தொடங்குகிறார் பெலிக்ஸ். கியூபாவின் கடற்கரைப் பகுதிகளில் பெலிக்ஸ் அந்த சைக்கிளை ஓட்டி வரும்போது ஊரே வேடிக்கைப் பார்க்கிறது. காரில் போவரெல்லாம் நிறுத்தி போட்டோ எடுக்கிறார்கள். கியூபாவின் ஒரு மினி செலிபிரிட்டி பெலிக்ஸும்  அவரது சைக்கிளும். 

உயரமான சைக்கிள்

சமீபத்தில் இவரைப் பற்றி செய்தித் தாள்களில் படித்த அமெரிக்கரான ரிச்சி ட்ரெம்பிள், உடனடியாக ஃபிளைட் பிடித்து பெலிக்ஸைப் பார்க்க கியூபா வந்துவிட்டார். காரணம்... ரிச்சியும் ஒரு "பெரிய சைக்கிள்" காதலர். 20 அடி உயரத்துக்கு ஒரு சைக்கிளை செய்து ஓட்டி, கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்திருக்கிறார். யாருடா இது தனக்குப் போட்டியா? என்ற ஆவலோடு வந்தவர், பெலிக்ஸைப் பார்த்ததும் பாராட்டித் தள்ளிவிட்டார். 

உயரமான சைக்கிள் - கியூபர் பெலிக்ஸ்

ரிச்சி ஒரு அமெரிக்கப் பணக்காரர். பெலிக்ஸ் ஒரு கியூப ஏழை. தனக்குக் கிடைத்த பழைய டின்கள், பிளாஸ்டிக் பைப்புகள், இரும்புக் கம்பிகள் என எல்லாவற்றையும் கொண்டு தான் பெலிக்ஸ் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். மேலும், பெலிக்ஸிற்கு மட்டும் சரியான பொருளாதார வசதிகள் இருந்திருந்தால் ரிச்சியின் ரெக்கார்டை என்னைக்கோ உடைத்திருப்பார். தற்போது அவர் ஓட்டிக் கொண்டிருக்கும் சைக்கிளே 19 அடி, அதாவது ரிச்சியின் கின்னஸ் ரெக்கார்ட் சைக்கிளுக்கு ஒரு அடிதான் குறைவு. ஆனால், அடுத்து பெலிக்ஸ் தயார் செய்துக் கொண்டிருக்கும்  சைக்கிளின் உயரம் 30 அடிக்கும் மேல். அதை கிட்டத்தட்ட தயார் செய்துவிட்டார். கொஞ்சம் ஓட்டி மட்டும் பழக வேண்டும். பெரிய சைக்கிளை 100 மீட்டர் தூரத்திற்கு சரியாக ஓட்டினால் தான், கின்னஸில் அதை சாதனையாகப் பதிவார்கள். 

உயரமான சைக்கிள் - கியூபர் பெலிக்ஸ்

பெலிக்ஸிற்கு இப்போது 53 வயதாகிறது. தன்னுடைய 17வது வயதில், அவர் வீட்டருகில் இருந்த ஒரு வயசான மெக்கானிக், மூன்று பேர் ஒருசேர ஓட்டும் ஒரு சைக்கிளை உருவாக்கினார். அதைப் பார்த்ததும், தான் இந்த உலகிலேயே ஒரு பெரிய சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அந்தக் கனவை மிக விரைவில் நிறைவேற்றியும் விடுவார். ஆனால், இந்த உயரத்தை எட்டிப் பிடிக்க பல தடைகளைத் தாண்டி தான் வந்துள்ளார் பெலிக்ஸ்.

உயரமான சைக்கிள் - கியூபர் பெலிக்ஸ்

கியூபாவிலிருந்து பிழைப்புத் தேடி அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக இதுவரை நான்கு முறை முயற்சித்துள்ளார். அதில் கடைசி முரை முயற்சிக்கும் போது, மாட்டிக் கொண்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தும் கூட , வார்டனிடம் அனுமதி வாங்கி சைக்கிள் தயாரிக்கும் மற்றும் ஓட்டும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். பெலிக்ஸ் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வீட்டிலேயே சிறு மளிகைக் கடையொன்றை நடத்தி வருகிறார். இவருக்குப் பல ரசிகர்கள் இருப்பதை உணர்ந்து, கியூபாவின் பிரபல கூல்டிரிங்க்ஸ் நிறுவனம் " டைம் ஃப்ளைஸ்", தங்களின் பேனரை இவரின் சைக்கிளில் கட்டி விளம்பரம் செய்கின்றனர். 

உயரமான சைக்கிள் - கியூபர் பெலிக்ஸ்

இது போன்ற சைக்கிள்களைத் தயாரிப்பதைவிட, ஓட்டுவது ரொம்பவே கஷ்டம். எடை குறைவாக இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு எளிதாக ஓட்ட முடியும். ஆனால், பெலிக்ஸோ தனக்குக் கிடைக்கும் பழையப் பொருட்களைக் கொண்டு தான் இதை உருவாக்குகிறார். இதனால், இதன் எடை கூடுதலாக இருக்கும். உலகின் மிகப் பிரபலமான சைக்கிளிஸ்டுகள் கூட இந்த சைக்கிளை ஓட்ட முடியாது, மிகவும் கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தும், அடிப்படையில் குத்துச் சண்டை வீரரான பெலிக்ஸ் இது போன்ற சைக்கிளை ஓட்டுவது தனக்கு கஷ்டமாக இல்லை என்று சொல்கிறார். 

சரி... இது போன்ற உயரமான சைக்கிள்களை உருவாக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, "எனக்கு உயரம் என்றால் ரொம்ப பிடிக்கும்... அதான்" என்று சொல்லி சிரிக்கிறார் பெலிக்ஸ். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்ணீரைப் புன்னகையால் வென்ற அரை இன்ச் மீசைக்காரன்! #HBDCharlieChaplin

 
 

ரை இன்ச் மீசை... ஆம் இதை மட்டுமே அடையாளமாகக் கொண்ட இருவரில், ஒருவர் உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர். மற்றொருவர் இன்றைய தினத்தில் பிறந்த நகைச்சுவை உலகின் பிதாமகன் சார்லி சாப்ளின். ஹிட்லர் பத்தாண்டுகளில் மண்ணோடு மண்ணாக காணாமல் போய்விட்டதும் வரலாற்றில் களங்கமாய் வேறு மாதிரி நீங்காமல் பதிவானதையும் அறிவோம். சார்லி சாப்ளின் மட்டும்  காலங்களைக்கடந்து இன்றும் நம் எல்லோரின் புன்னகையில்  வாழ்கிறார். 

சார்லி சாப்ளின்

தரையில் இருந்து சிகரத்தைத் தொட்ட சாதாரண தன்னம்பிக்கைக்கான வாழ்க்கை அவருடையது இல்லை. பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகச வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அவர்! சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்பதுதான் சார்லி சாப்ளினின் முழுப்பெயர்! 1889-ம் ஆண்டு  இதே ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தவர். ஹாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர்.  நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று இவர் தொடாத திசைகளே இல்லை. காட்டாத முகங்கள் இல்லை. சாப்ளினின் புன்னகைக்குப் பின்னால் கண்ணீர்த்துளிகள் நிறைய உண்டு. லண்டனில் மிக மிக வறுமையான குடும்பத்தில்  பிறந்தவர். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து பெற்றோரது திருமண வாழ்க்கை முறிந்து போனது. தந்தைவிட்டுச் சென்றதும் தனது அன்னையின் கண்காணிப்பில் வறுமையில் வளர்ந்தார். ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் தன் சகோதரருடன் வளர்ந்த சாப்ளின், பசியில் அழாத நாட்கள் இல்லை. சாப்ளினின் தந்தையும் இவரது 12-வது வயதில் இறந்தும் போனார் . இதனால்  தாயார் நிரந்தரமாக மன நலம் பாதிக்கப்பட்டார்.  காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்ட்டு அனாதையானார் சாப்ளின். 

முதன் முதலில் 1894-ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் பணியாற்றிய தனது தாய்க்குப் பதிலாக ஒரு சிறிய வேடத்தில் மேடையில்  நடித்தார். கெட்டியாக நடிப்பைப் பிடித்துக் கொண்டார். சிறுவனாக பசியின் பிடியில் படுத்த படுக்கையாக இருந்தபொழுதுகளில், இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்குப் பத்து வயதாக இருந்த போது, ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை சீனியர் ஒருவர் வாங்கித் தந்தார்.

சார்லி சாப்ளின்

1903-ம் ஆண்டில் `ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்' நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு ஒரு நாடகக் கம்பெனியில் நிரந்தர வேலை கிடைத்தது. செர்லாக் ஹோம்ஸ் நிறுவனம் நடத்திய நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம இவர் பேர் சொன்னது. இதனைத் தொடர்ந்து பிரபல சர்க்கஸ் நடத்திய பல்சுவை நிகழ்ச்சியில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்காவின் குடியமர்வதற்கு ஓரளவு வசதியுடன் இருக்க வேண்டும். ஒரு அகதியாக  கார்னோ என்ற குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா வந்தடைந்தார்.

சாப்ளினின் திறமையைக் கவனித்து கீஸ்டோன் திரைப்பட நிறுவனம் சேர்த்துக் கொண்டது.  முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடம்தான். அந்த ஜானரில் கில்லி என பெயர் எடுத்தார். இவரைப் பார்த்தாலே பரிதாபமும் சிரிப்பும் ஒன்றாக வர ஆரம்பித்தது. அதையே தன் சக்சஸ் ஃபார்முலாவாக மாற்றிக் கொண்டார்.

1927-ம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930-ம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஆனாலும் நடிப்பு பேசியது.1952-ம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் டைட்டில் இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது `ஸ்மைல்'. இவரது முதல் டாக்கீஸ் 1940-ம் ஆண்டில் வெளியான `தி கிரேட் டிக்டேடர்'. இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் குதிப்பதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இன்றுவரை அப்படம் பேசும் அரசியல் மிகவும் தைரியமானது. எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா?

சார்லி சாப்ளின்

இப்படத்தில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இருமுறைப் பார்த்தார். கோபமும் படவில்லை. சாப்ளின தன் வாழ்க்கை முழுவதும் அழுகையால் மனம் நிரம்பி இருந்தாலும் மக்களுக்கு கண்ணீரைத் தராமல் புன்னகையைப் பரிசாகத் தந்தார். திரை முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். “நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதுதான் தெரியாது!” என்ற புகழ்பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார்.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை 4 முறை திருமணம் செய்திருக்கிறார். 28 வயதில் முதன்முறை 16 வயது மில்ட்ரெட் 'ஹாரிசை' மணந்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தும் போனது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. 35 வயதில் `தி கோல்ட் ரஷ்' திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த போது, 16 வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-ல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்டார் சாப்ளின். இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.

மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் 47-வது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-ல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது.

இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், சாப்ளினை பேரி துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். ரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் ரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 1943 -ல் தனது 54-வது வயதில் ஓ நீல் என்ற 17 வயதுப் பெண்ணை மணந்தார்.  இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர். 

ஆம். இந்த நாளில் நமக்கும் சிறகு முளைக்கட்டும்! உள்ளத்தில பலவிதமான காயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்து ஊருக்கு ஆனந்தம் கொடுப்பதற்காக தன்னை வருத்திக் கொண்ட அந்த நகைச்சுவை ஜாம்பவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன் புகழினை இனி எத்தனை தலைமுறை வந்தாலும் பேசும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிரியா விடுதலை நாள்: ஏப்ரல் 16- 1946

 

சிரியா அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம்

 
 
 
 
சிரியா விடுதலை நாள்: ஏப்ரல் 16- 1946
 
சிரியா அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த நிகழ்வுகள்:-

1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1876 - பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 - ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
1917 - நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.

1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
1925 - பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.

1947 - ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.
1947 - சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972 - நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
2007 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
19ஆம் நூற்றாண்டின் கடைசி பெண்மணி காலமானார்
 

article_1492323700-a.jpg

உலகின் வயதான பெண்மணியும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா, தனது 117ஆவது வயதில் காலமானார்.

உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ, தனது 117ஆவது பிறந்தநாளை, கடந்த டிசெம்பர் மாதம் கொண்டாடினார்.

1899ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி பிறந்த எம்மா, 19ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார். கடந்த பிறந்த நாளின் போது, தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:-

article_1492323715-b.jpg

“என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65ஆவது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன்.

“நான் 26 வயதாக இருந்த போது, ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.

“பின்னர் என்னுடைய கணவனை, நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன். இத்தாலியில் அதுவே முதல் சம்பவமாக இருந்தது.

“பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து கூட நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள்”  என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ள இவர், தன் வாழ்நாளில், இரண்டு உலகப் போர்களையும் பார்த்துள்ளார். இத்தாலியில், இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளது.

மொரனோ மரணத்தைத் தொடர்ந்து, 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யாரும் இல்லை என்று என்பது, கிட்டத் தட்ட உறுதியாகியுள்ளது.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

Bild könnte enthalten: 9 Personen, Personen, die lachen, Personen, die stehen, Hochzeit und Text

17952017_616511421888648_180649561823768

17883769_616324861907304_520937591455584

  • தொடங்கியவர்

விதியின் சதி.... இரட்டையர்கள் தம்பதிகள் ஆன சோகம்!

 
 

அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

Mississippi couple
 

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  

இந்த சம்பவம் குறித்து  Mississippi Herald என்னும் நாளிதழில் வெளியான செய்தியின் விவரங்கள் பின்வருமாறு..

மிசிசிப்பியில் 1984ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்துவிட்டார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரட்டை குழந்தைகள் விபத்தில் பிழைத்து கொண்டன. அந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையை ஒரு குடும்பமும், பெண் குழந்தையை  மற்றொரு குடும்பமும் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இருவருக்குமே தாங்கள் யார் என்பது தெரியாது. அப்படி இருக்க ஒரே கல்லூரியில் இருவரும் சேர்ந்து படிக்கும் சூழல் ஏற்படுகிறது. தாங்கள் இரட்டையர்கள், ஒரே பெற்றோருக்கு பிறந்தவர்கள் என்பது தெரியாமலேயே காதலிக்க தொடங்கிவிட்டனர். திருமணமும் முடிகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதால் ஜாக்சன் என்னும் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஜாக்சன் இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்த போது இருவரும் அவர்கள் இரட்டையர்கள் என்பது தெரிய வருகிறது. மருத்துவ முடிவை அந்த ஆண் தனது மனைவியிடம் கூறிய போது, அந்த பெண் அதனை நம்ப மறுத்துவிட்டார். இந்த வினோதமான சம்பவத்தை ஊடகங்களிடம் மருத்துவர் ஜாக்சன் தெரிவித்துள்ளார். அந்த தம்பதியின் பெயர்கள் மற்றும் புகைப்படத்தை குறிப்பிடாமல் இந்த சம்பவத்தை மட்டும் விவரித்துள்ளார் ஜாக்சன். தற்போது அந்த தம்பதியினர், இணைந்து வாழ்வதா பிரிவதா என்னும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தொடக்க கால விண்வெளிப் பயணம்

 
  • ஹாம் என்ற சிம்பன்சி குரங்குNASA

    விண்வெளிக்கு செல்கின்ற விண்கலனில் மனிதர்களை அனுப்புவதற்கு தயாராகுவதற்கு முன்னர், அமெரிக்கe மற்றும் சோவியத் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனங்கள் சிறிது காலமே நீடித்த விண்வெளிப் பயணத்திற்கு விலங்குகளை அனுப்பி வைத்தன. 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஃபுளோரிடாவின் கேப் கனாவெரால் என்ற இடத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் ஹாம் என்ற சிம்பன்சி குரங்கு பயணம் செய்தது. எந்த காயமும் இன்றி பூமிக்கு திரும்பிய அந்த சிம்பன்சி குரங்கு, மீண்டும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள குறைவான ஆர்வத்தையே வெளிப்படுத்தியது.

  • நாசாவின் ஏவுகணை வடிவமைப்பாளர் வெம்ஹெர் வோன் பிரவுன் (இடது) மற்றும் மெர்குரி 7 விண்வெளி வீரர் கோர்டன் கூப்பர் (வலது)NASA

    நாசாவின் ஏவுகணை வடிவமைப்பாளர் வெம்ஹெர் வோன் பிரவுன் (இடது) மற்றும் மெர்குரி 7 விண்வெளி வீரர் கோர்டன் கூப்பர் (வலது) அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் அலென் ஷெபர்டுடன் தொடர்பு கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். 1961 ஆம் ஆண்டு அலென் ஷெபர்டு பயணித்த விண்ணில் சீறி பாய்ந்த ஃபிரீடம் 7 விண்கலன் 15 நிமிடம் துணை சுற்றுப்பாதையில் பயணித்த பின்னர், அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது.

  • சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் (நடுவில்) விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணியான வலன்சியா டெரிஷக்கேஃபா (இடது) மற்றும் அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்து வரலாற்று பதிவை உருவாக்கிய வலெரி பைகேஃப்ஸ்கையுடன் (வலது)GETTY IMAGES

    சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் (நடுவில்) விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணியான வலன்சியா டெரிஷக்கேஃபா (இடது) மற்றும் அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்து வரலாற்று பதிவை உருவாக்கிய வலெரி பைகேஃப்ஸ்கையுடன் (வலது) கைகோர்த்துள்ளார். விண்வெளி திட்டத்தில் வெற்றியடைந்ததை பரப்புரை செய்வதின் மதிப்பை குருசேவ் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

  • விண்வெளி வீரர் ஜான் கிளென்NASA

    1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “ஃபிரன்ஷிப்” விண்கலத்தில் தன்னுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்திற்கு பிறகு யுஎஸ்எஸின் நோயவில் .இளைப்பாறும் விண்வெளி வீரர் ஜான் கிளென். சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த இந்த பயணத்தில், கிளென் நான்கு முறை உலகை சுற்றி வந்தார்.

  • அலெக்ஸி லியோநோஃப்.GETTY IMAGES

    1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சோவியத் ஒன்றியத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளியில் முதல்முறையாக நடந்த விண்வெளி வீரர் அலெக்ஸி லியோநோஃப். 12 நிமிடம் நீடித்த இந்த விண்வெளி நடையின்போது, யோநோஃபின் உடையில் காற்று அதிகரித்து பருமனாக தொடங்கியதும் அவரால் விண்கலத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு வால்வு மூலம் காற்றை வெளியேற்றி தன்னுடைய உயிரை அவர் காத்து கொண்டார்.

  • நாசா விண்வெளி வீரர் எட் ஒயிட்NASA

    1960களின் மத்தியில், அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் விண்வெளி போட்டி விளையாட்டு விளையாடி கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தைவிட சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு, நாசா விண்வெளி வீரர் எட் ஒயிட் 1965 ஆம் ஆண்டு விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கரானார். ஒயிட்டிடம் இருந்து விண்வெளியில் மிதந்த கையுறை விண்வெளியில் தொடக்கத்தில் விழுந்த குப்பையாகியது.

  • 1965 ஆம் ஆண்டு டெக்ஸாஸிலுள்ள எல்லிங்டன் விமான தளத்தில் பயிற்சிNASA

    விண்வெளி வீரர்கள் கஸ் கிரிஸ்சோம் (இடது) மற்றும் ஜான் யோங் (வலது) இருவரும் விண்வெளி பயணத்திற்கு பிறகு பெருங்கடலில் விழுந்த பின்னர், அதிலிருந்து வெளியேறுவது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு டெக்ஸாஸிலுள்ள எல்லிங்டன் விமான தளத்தில் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

  • 30 சென்டிமீட்டர் இடைவெளியில் இணைந்து பூமிக்கு திரும்பின.NASA

    விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சந்தித்து இரு கலன்களை ஒன்றாக இணைத்துக் கொள்வதற்காக கெமினி 6 மற்றும் 7 விண்கலன்கள் ஒரே நேரத்தில் விண்வெளியில் ஏவப்பட்டன. தாமஸ் ஸ்டாஃபோர்டு மற்றும் வால்டர் ஸ்சாய்ரியா அணியினர் பயணித்த இந்த விண்கலன்கள் 30 சென்டிமீட்டர் இடைவெளியில் இணைந்து பூமிக்கு திரும்பின.

  • “கோப முதலை” என்று பெயரிடப்பட்ட அந்த இணைப்புக் கருவிNASA

    ஜெமினி 9 விண்வெளி பயணத்தின்போது, யூஜின் சிமெனும், தாமஸ் ஷ்டாஃபோர்டும், இரு விண்கலன்களும் இணைகின்ற இலக்கு கருவியோடு தாங்களும் ஒத்துழைத்து இரு கலன்களை இணைந்து கொள்ள வேண்டும். ஆனால், “கோப முதலை” என்று பெயரிடப்பட்ட அந்த இணைப்புக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் இந்த அணியால் இதனை இந்த பணியை செய்து முடித்து சாதிக்க முடியவில்லை.

  • சந்திரனின் மேற்பரப்பு அய்வு வாகனம்NASA

    மெர்குரி மற்றும் ஜெமினி விண்வெளிப் பயணங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் நாசாவின் சந்திர ஆய்வு பயணத்திட்டம் வெற்றியடைய முக்கிய பங்காற்றியது. 1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சந்திரனில் தரையிறக்கும் ஆய்வு வாகனம் கலிஃபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத்தளத்தில் சோதனை செய்யப்படுவதை காட்டுகிறது,

 

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

 

கேட்கும் திறன் குறைவு: ஆனாலும் சாதனை படைக்கும்
எகிப்திய பெண் மருத்துவர்.

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person
 

அன்பு
*******

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.

இவ்வாறிருக்க
ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.

ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.

நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.

அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.

தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.

அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.

அதற்கு அவன்
நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்"
எனப் பதிலளித்தான்.

1f495.png?பிறரின் குறைகள் எங்கள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'துருவ நட்சத்திரம்' டீஸர்..! 'வெல்கம் பேக் சீயான்'

 
 

dhruva natchathiram

கௌதம் வாசுதேவ் மேனன் - விக்ரம் காம்போவில் 'துருவ நடசத்திரம்' திரைப்படம் உருவாகி வருகிறது. நாளை விக்ரமின் பிறந்த நாள். அதன் ஸ்பெஷலாக 'துருவ நடசத்திரம்' படத்தின் 2-வது டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போன் கால்.. ப்ளைட்.. பென்ஸ் கார்.. அந்த ஸ்டைலிஷ் நடை என கவர்கிறார் விக்ரம். படத்திற்கு ஹாரிஸ் இசை, ஐஷ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பிரித்விராஜ் நடிக்கிறார்கள். ரவிச்சந்திரன், சந்தான கிருஷ்ணனின் ஒளிப்பதிவு துல்லியம் டீஸரிலேயே தெரிகிறது.

 

  • தொடங்கியவர்

16425843_10155506042964578_8318034671267:grin::grin:

  • தொடங்கியவர்

காந்தியிடம் சாப்ளின் கேட்ட அந்தக் கேள்வி! #HBDChaplin

 
 

சாப்ளின்

ண்ணீரையும் கவலைகளையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் மக்களை சிரிக்கவைத்து அவர்களின் கவலைகளை மறக்கவைத்த மறக்கமுடியாத கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்ததினம் இன்று.

லண்டனில் புகழ்பெற்ற அந்த தெருவில் ஒருநாள் கசாப்புக்கடைக்கு வந்திறங்கின பல ஆடுகள். கடைக்காரன் எல்லாவற்றையும் வண்டியிலிருந்து இறக்கி கடைக்குள் அடைத்து விட்டான். ஆனால் இறுதியாக இறங்கிய குட்டிஆடு ஒன்று சாமர்த்தியமாக அவனிடமிருந்து தப்பி ஓடியது. அதைப்பின்தொடர்ந்து அவன் ஓடிய காட்சியை அதே  தெருவில் வசித்துவந்த ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ஆடு ஓட அதைத் துரத்தி துரத்தி விழுந்து எழுந்து கடைக்காரன் ஓடினான். இந்தக் காட்சியைக் கண்ட சிறுவன் உட்பட வீதியில் சென்ற அனைவரும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

சார்லி


ஆடு ஒருவழியாக கடைக்காரனிடம் சிக்கியது. பொதுமக்கள் அவரவர் தங்கள் வேலைகளைப் பார்க்க சென்றபின் சிறுவன் மட்டும் கடைக்காரரைப் பின்தொடர்ந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைக் கதறி அழவைத்தது. ஆம் அத்தனை நேரம் ஒரு வீதியைச் சிரிக்க வைத்த ஆடு, கசாப்புக் கடைக்காரனால் தலை துண்டிக்கப்பட்டு தரையில் துடிதுடித்துக் கிடந்தது. யதார்த்த்த்தை உணர்ந்து சிலையாக உறைந்து நின்றான் சிறுவன். வாழ்வின் யதார்த்த நிலை வேறு, அதன் வெளிப்பாடு என்பது வேறு என்பதைப் புரிந்துகொண்ட அந்த சிறுவன் பின்னாளில் வெற்றியடையக் காரணமானதும் இந்தச் சம்பவம்தான். பிற்காலத்தில் சாப்ளின் என உலக மக்களால் போற்றப்பட்ட சார்லி சாப்ளின்தான் அந்தச் சிறுவன். இன்னும் சிறிது நேரத்தில் வெட்டுண்டு இறக்கப்போகிற யதார்த்த்த்தை உணர்ந்து உயிர்தப்ப ஓடிய ஆட்டுக்குட்டியின் உயிர்ப்போராட்டம் மக்களைச் சிரிக்கவைத்த்துபோல் மனதில் உறைந்துகிடக்கும் வேதனை உணர்ச்சிகளை மறந்து மக்களைச் சிரிக்கவைத்த சாப்ளின் என்ற மேதை  உருவானது அந்தச் சம்பவத்தின் எதிரொலிதான்.
லண்டனில் வால்வொர்த்தில் உள்ள ஈஸ்ட் லேன் என்ற இடத்தில் இதே நாளில் பிறந்த சாப்ளினின், பெற்றோரும் நாடகக் கலைஞர்களே. துரதிர்ஷ்டவசமாக சாப்ளினுக்கு ஒரு வயதாகும்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.


கூடுதல் சம்பாத்தியத்துக்காக மதுபான விடுதிகளில் சாப்ளினின் தாய் பாடினார். ஒருநாள் மேடையில் பாடிக்கொண்டிருந்த சாப்ளினின் தாய்க்கு குரல் வரவில்லை. அவர் பாட முயற்சித்தபோது எழுந்த முக்கல் முனகல்களைப் பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாக ரசித்துச் சிரித்தனர். அவமானத்தால் தலை குணிந்துநின்ற அவரை உள்ளே அழைத்துக்கொண்ட நாடக மேலாளர், அந்த இடத்தில் சாப்ளினை கொண்டு போய் நிறுத்தி பையா உன்னால் என்ன முடிகிறதோ செய். கூட்டத்தை சமாளி என விட்டுவிட்டு வந்தார்.அம்மாவுடன் மேலாளரைச் சந்தித்த தருணங்களில் அவரை எதையாவது செய்து ஆச்சர்யப்படுத்துவான் சிறுவன் சாப்ளின். அந்த நம்பிக்கையில்தான் மேலாளர் இப்படிச் செய்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட சாப்ளின், தனக்குத்தெரிந்த ஜாக் ஜோன்ஸ் என்ற பாடலை சத்தம்போட்டுப் பாட ஆரம்பித்தான். அம்மா சரியாக பாடாததால் அம்மாவுக்கு வரவேண்டிய வருமானம் நின்றால் குடும்பம் பட்டினிதான். இதனால் பேசிய ஊதியத்தைப் பெற்றுவிடுவதற்காகவாவது ஓரு மணிநேரம் சமாளிக்கவேண்டும் என்ற எண்ணமே சாப்ளின் மனதில் ஓடிக்கொண்டிருந்த்து. ஆனால் அவ்வளவாக பாடல் எடுபடவில்லை என்றாலும் சிறுவன் என்பதால் மக்கள் உணர்ச்சியற்று பார்த்தபடி பரிதாபமாக அவன் மீது காசுகளை வீசினர். அப்போது திடீரென சாப்ளின் தன் பாட்டை நிறூத்தினான். கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் பொறுங்கள், சில்லறைகளைப் பொறுக்கிவிட்டுப் பாடலைத் தொடர்கிறேன் என்றபடி காசுகளைப் பொறுக்க ஆரம்பித்தான். சாப்ளினின் இந்தச் செய்கை லேசாக மக்களை சிரிக்கவைத்தது.  அப்போது சாப்ளினுக்காக காசுகளைப் பொறுக்க மேலாளர் மேடைக்கு வந்தார். பாடலைப் பாடியபடி அவர் காசுகளைப் பொறுக்க, தனக்கு வந்த சில்லறைகளை யாரோ எடுப்பதாகக் கருதி மேலாளரைப் பின்தொடர்ந்து ஓடிப்போய் அவரிமிருந்து காசுகளை வாங்கிக்கொண்டு பாட ஆரம்பித்தான் சாப்ளின். இந்தக் காட்சி பார்வையாளர்களைப் பயங்கரமாகச் சிரிக்கவைத்தது.


சாப்ளின் என்ற கலைஞனின் முதல் மேடை வெற்றிகரமாக அமைந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக சாப்ளினின் தாய்க்கு அதுவே இறுதி மேடையானது. ஆம் சில நாட்களில் சாப்ளினின் தாய் மன நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு, நாடகங்கள் என தன் இளமைப்பருவத்தைத்  தொட்ட சாப்ளின் நாடக வாழ்க்கையில் புகழடைந்த நேரம், அவருக்குப் படவாய்ப்புகள் வந்தன. கீஸ்டோன் என்ற நகைச்சுவைப்படங்கள் தயாரிக்கும் நிறுவனம் அவரை வைத்து படங்கள் தயாரித்தது. தொடர்ந்து தன் மேதைமையான நகைச்சுவையால் சாப்ளின் சில வருடங்களில் உலகப்புகழ்பெற்ற மனிதரானார்.
சாப்ளினின் மேதைமையை உலகமே பாராட்டிக் கொண்டாடிய வேளையில் சாப்ளின், உலகத்தலைவர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டார். அந்த வரிசையில் அவர் பார்க்க விரும்பிய இந்தியத் தலைவர் காந்தி. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் லண்டனில் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக காந்திஜி சென்றிருந்த சமயம் சாப்ளினும் கோடை விடுமுறைக்காக லண்டனில் பொழுதை கழிக்க வந்திருந்தார். அப்போதுவின்ஸ்டன் சர்ச்சிலுடன்  பேசிக்கொண்டிருந்தபோதுதான் காந்தி லண்டனில் இருக்கும் தகவல் சாப்ளினுக்கு தெரியவந்த்து. காந்தியைச் சந்திக்கும் தன் எண்ணத்தை சர்ச்சிலிடம் வெளிப்படுத்தினார் சாப்ளின்.
4 முழ வேட்டியை சரியாக உடுத்தாத இந்த மனிதர் எங்களுக்கு பெருந்தொல்லையாக இருக்கிறார். எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி எங்களை சங்கடப்படுத்துகிறார். சிறைவாசத்தில் அவது மனஉறுதியை குலைக்கவேண்டும்” என சர்ச்சில் சலித்துக்கொள்ள, நீங்கள் காந்தி என்ற மனிதரைத் தவறாக எடைபோட்டுவிட்டீர்கள். காந்தி என்பவர் இந்தியாவைப்பொறுத்தவரையில் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் இந்திய மக்களின் சுதந்திரவேட்கையின் ஒரு குறியீடு. நீங்கள் ஒரு காந்தியை சிறையிலடைத்தால் இந்தியாவிலிருந்து இன்னொரு காந்தி புறப்பட்டுவருவார். இந்தியர்கள் அவர்கள் கேட்கும் வரை காந்திகள் புறப்பட்டுவந்துகொண்டே இருப்பார்கள்.” என இந்திய மக்களின் மீதான தனது நிலைப்பாட்டை தெளிவாக சாப்ளின் சொன்னார். இந்தியாவைப்பற்றிய கணிப்பை அவர் சர்ச்சிலிடம் வெளிப்படையாகச் சொன்னதுதான் ஆச்சர்யத்திலும் உச்சபட்ச ஆச்சர்யமான விஷயமாகும்.
அன்றைய தினமே காந்தியை, அவர் தங்கியிருந்த ஈஸ்ட் இந்தியா டோக் சாலை என்ற இடத்தில் சாப்ளின் சந்தித்தார்.
காந்தி என்ற இந்தியாவின் அதிமுக்கியத்தவம் வாய்ந்த மனிதரை சந்திப்பதில் சாப்ளின் சற்று உணர்ச்சிவயப்பட்டிருந்தார். காந்தியின் சிறை அனுபவங்கள், இங்கிலாந்துக்காரர்களை எரிச்சலுட்டும் அவரது உண்ணாவிரதம், எந்திரங்களின் மீதான காந்தியின் எதிர்ப்புக்குரல், வெள்ளையர்களுக்கு எதிராக அவர் கையிலெடுத்த அஹிம்சை ஆயுதம் என இவற்றில் எதைப்பற்றி, காந்தியிடம் பேசுவது என்ற குழப்பத்தில் கிடந்தார் சாப்ளின். இதனால் அன்றைய சந்திப்புக்கு சில மணிநேரங்கள் முன்னதாகவே சந்திப்பு நேரம் குறித்த இடத்துக்கு வந்து காத்திருந்தார் சாப்ளின்.

சார்லி


திடீரென எழுந்த கூக்குரல் காந்தி காரில் வந்து இறங்கியதை உறுதிப்படுத்தியது. மக்களோடு மக்களாக சாப்ளின், காந்தி என்ற எளிய மனிதரின் புகழைக் கண்டு பிரமித்து நின்றார். கொஞ்சநேரத்தில் காந்தி சாப்ளினை மேலே வரச்சொல்லி கையசைக்க மக்களின் ஆரவாரத்துக்கிடையே இருவரும் இப்போது தனியறை நோக்கி நடக்கத்துவங்கினர். அறையில் காந்தி சில உதவியாளர்களுடன் அமர்ந்திருக்க காந்தியும் சாப்ளினும் ஒருவருக்கருவர் தங்கள் முகங்களை தரிசித்துக்கொண்டனர்.
இப்போது அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. சாப்ளின் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தார். இதுவரை செய்தித்தாள்களில் நண்பர்களின் பேச்சில் அறிமுகமாகிப் புரிந்துகொண்டிருந்த காந்தி என்ற மனிதர் தன் முன் நிற்கிறார். தனது படங்களை காந்தி பார்த்திருக்கிறாரா எனக் கேட்டு பேச்சைத் தொடங்கலாமா என ஒரு எண்ணம் சாப்ளினின் மனதில் ஒடியது. ஆனால்அடுத்த நொடி அந்த ஆசையை முறித்துப்போட்டார். உலகின் தலைசிறந்த போராட்டவாதியுடன் சில நொடிகளெ நீடிக்கப்போகிற இந்த அரிய சந்தர்ப்பத்தை அறிவான முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லையென்றால் தான் உலகின் மோசமான துரதிரஷ்டசாலி ஆகிவிடுவேன் என மனதில் நினைத்தபடி தொண்டையைச் செருமியபடி இப்படித் தொடங்கினார் சாப்ளின்,“இந்தியாவின் போராட்ட வழிமுறைகளை நன்கறிந்துள்ளேன். அது நியாயமானது என்றும் கருதுகிறென். ஆனால் எந்திரங்களின் மீதான தங்களின் வெறுப்பு எனக்குக் குழப்பத்தை தருகிறது…”


காந்தி சாப்ளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். இந்தப் பார்வை சாப்ளினுக்கு நம்பிக்கை தரவே, தம் பேச்சை தொடர்ந்தார். மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்பதுதான் உங்கள் சுதந்திர வேட்கையின் அடிப்படை…ஆனால் நீங்கள் மனிதனுக்கு மாற்றான எந்திரப்பயன்பாட்டை வெறுப்பது முரணாக இல்லையா…எந்திரத்தை பிறர்நலனுக்காக பயன்படுத்தினால் அது மனிதனை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும். மனிதனை விரிவுபடுத்தவும் அவனது கடுமையான வேலை நேரத்திலிருந்து விடுவிக்கவும் உதவும் இல்லையா. இதன்மூலம் அவன் வாழ்க்கையை அவன் முழுமையாக அனுபவிக்கலாம் அல்லவா” தன் மனதில் இருந்தவற்றைக் கொட்டிவிட்டு காந்தியின் பதிலுக்காகக் காத்திருந்தார். சில நொடி அமைதிக்குப்பின் காந்தி சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார். “ நிங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன் சாப்ளின். ஆனால் இந்தியா அந்த லட்சியத்தை அடைவதற்கு முன் அது முதலாவதாக ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும். அந்த சார்பிலிருந்து நாங்கள் தப்பிக்க ஒரே வழி எந்திரங்கள் உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணிப்பதுதான். அதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தானே நெய்த ஆடைகளை அணிவதை தேசபக்த ரீதியான கடமையாகக் கருதுகிறோம்.இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த ஒரு நாட்டை எதிர்ப்பதற்கு எங்களின் பாணி இதுதான் அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான பருவநிலை என்பது வேறுவேறு. இந்தியாவின் தேவைகளும் அதன் இயல்பும் வித்தியாசமானவை.இங்கிலாந்தின் குளிரான பருவநிலை கடுமையான தொழிலையும் கலவையான பொருளாதார நிலையையும் தேவையாக்குகிறது.
சாதாரணமாக உணவை உண்பதற்குக்கூட உங்களுக்கு சிறுசிறுகருவிகள் தேவைப்படுகிறது. ஆனால் கையால் உண்பது எங்கள் வழக்கம்.இப்படி சிறியதும் பெரியதுமான நிறைய வித்தியாசங்கள் உள்ளன.” காந்தி தன் பேச்சை நிறுத்திவிட்டு சாப்ளினின் முகத்தை உற்றுநோக்கினார்.


இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஆழமான கருத்தாக்கத்தை சாப்ளின் புரிந்துகொண்டதை அவர் முகம் காட்டிற்று. காந்தியின் கருத்துக்கள் மூலம் இந்தியாவின் ராஜதந்திர ரீதியான போராட்டவழிமுறைகளை உணர்ந்து பாராட்டினார். சுதந்திரப்போராட்டத்தில் வெற்றிபெற தன் வாழ்த்துக்களை காந்திக்கு தெரிவித்தார்.
அஹிம்சை பற்றி சாப்ளின் கேட்டபோது, “ அஹிம்சை நிரந்தரமான ஆயுதம். ஹிம்சை அதை பின்பற்றுபவர்களையே சிறுகச்சிறுக அழித்துவிடும் என ஒரேவரியில் சாப்ளினை வியப்பிலாழ்த்தினார்.
சந்திப்பு நேரம் முடிந்தபின் நீங்கள் விரும்பினால் எங்கள் பிரார்த்தனையைக் காணலாம் என்றார் காந்தி. தன் ஆசிரம நிர்வாகிகளுடன் காந்தி வழக்கமான தன் பிரார்த்தனைகளைத் தொடங்கினார். அந்த அகன்ற மாடி வீட்டின் தரையில் காந்தி தன் சிஷ்யர்களுடன் சம்மணமிட்டு  அமர்ந்து தன் பிரார்த்தனையைத் தொடங்கினார். ஒரு தலைவர் அதுவும் ஒடிசலான தேகத்துடன் எளிமையாக நான்கு முழுவேட்டியை சரியாகக் கூட அணியாமல் தன் முன்தன் தேசத்து மக்களின் நலனுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட காட்சியை சாப்ளின் மெய்சிலிர்த்துப்பார்த்தபடி நின்றிருந்தார்.  மேலைநாடுகளின் அத்தனை தலைவர்களையும் சந்தித்திருக்கிறார் சாப்ளின். சந்திப்புகள் பெரும்பாலும் பகலில் அவர்களுடன் விருந்து, இரவில் கேளிக்கை விடுதிகளில் உபசாரம், இத்யாதி சமாச்சாரங்களுடனதான் முடியும். ஆனால் முதன்முறையாக காந்தி யின் எளிமையான தோற்றமும் அவரது அணுகுமுறையும் சாப்ளினுக்கு ஆச்சர்யம் தந்தது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

5a.jpg
 

சுழலும் வீடுகள்!

எண்பது மாடிக் கட்டடம். 419 மீட்டர் உயரம். இது ஆட்டோமேட்டிக்காக சுழலுவதோடு, ஒவ்வொரு வீடும் தனித்தனியே சுற்றுமாம். எங்கே? துபாயில்! டேவிட் ஃபிஷ்ஷர் என்ற எஞ்சினியரின் கைவண்ணத்தில் 2020ல் இந்த பில்டிங்குக்கு ரிப்பன் வெட்டப் போகிறார்கள்!

பாம்புப் பெண்!

ஒருமுறை கடித்தாலே லைஃப் ஓவர். அப்படியிருக்க 34 முறை பாம்பு கடித்த பிறகும் பிழைக்க சான்ஸ் உண்டா? ‘இருக்கே..!’ என கையை உயர்த்துகிறார் 18 வயதான மனிஷா வர்மா. இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரை இதுவரை கடித்த பாம்புகள் அனைத்துமே விஷமில்லாதவை என்கிறார்கள். எப்படியோ... பாம்புக் கடியில் சாதனை புரியப் போகிறார்!

பலே கேஸ்!

பத்து ரூபாய்க்கு மின் வயரை திருடியிருக்கிறார் ஒருவர்! இச்சம்பவம் நடந்தது 1969ல், மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில். 48 வருடங்கள் தேடித் தேடி குற்றவாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ‘கைது’ செய்ய அவர் வீட்டுக்குச் சென்றபோதுதான் அந்த டுவிஸ்ட். குற்றவாளி காலமாகி 20 ஆண்டுகள் ஆகிறதாம்!

www.kungumam.co

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

twitter.com/twittornewton: மகனைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் ரெண்டு பேருக்கும் வேற வேற பிராண்ட் ஜட்டி வாங்க வேண்டும் என்பது.
 

நவீனன், ஏன் அம்மாக்களுக்கு இந்த பிரச்சனை வராதா? 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் – 17

 

1492 : வாசனைப் பொருட்­களை ஆசி­யாவில் கொள்­வ­னவு செய்யும் உரி­மையை கிறிஸ்­டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் அர­சிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.


1524 : இத்­தா­லிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெர­சானோ நியூயோர்க் துறை­மு­கத்தை அடைந்தார்.


1895 : சீன-­ ஜப்பான் போரை முடி­வுக்குக் கொண்டு வந்த ஒப்­பந்தம் சீனா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் செய்து கொள்­ளப்­பட்­டது.


1912:  சைபீ­ரி­யாவில் தங்கச் சுரங்­க­மொன்றில் பணி­யாற்­றிய ஊழி­யர்கள் வேலை நிறுத்தம் மேற்­கொண்­ட­போது ரஷ்ய படை­யினர் துப்­பாக்கிப் பிரயோகம் செய்­ததால் சுமார் 150 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1941 : இரண்டாம் உலகப் போரில் யூகோஸ்­லா­வியப் பேர­ரசு ஜேர்­ம­னி­யிடம் சர­ண­டைந்­தது.


varalru-copy1946: பிரான்­ஸி­ட­மி­ருந்து சிரியா சுதந்­திரம் பெற்­றது.


1961 : அமெ­ரிக்க உளவு நிறு­வ­ன­மான சிஐ­ஏ­யினால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட கியூபா அக­திகள் குழு­வொன்று பிடெல் கஸ்ட்­ரோவைப் பத­வியில் இருந்து அகற்றும் நோக்­குடன் கியூபாவின் பிக்ஸ் குடாவில் தரை­யி­றங்­கினர்.


1964 : விமா­னத்தில் தனி­யாக உலகைச் சுற்­றி­வந்த முதல் பெண் எனும் பெரு­மையை  அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஜெரி மொக் எனும் பெண் பெற்றார்.


1969 : செக்­கோஸ்­லே­வாக்­கி­யாவின் கம்­யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்­சாண்டர் டூப்செக் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1970 : சந்­தி­ரனை நோக்கிச் சென்ற அப்­போலோ 13 விண்­கலம் பழு­த­டைந்த நிலையில் தனது பய­ணத்தை இடை­நி­றுத்தி பூமிக்குத் திரும்­பி­யது.


1971 : ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலை­மையில் பங்­க­ளாதேஷ் மக்கள் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.


1975 : கம்­போ­டி­யாவில் கெமர் ரூச் படைகள் தலை­நகர் நாம் பென்னைக் கைப்­பற்­றினர். கம்­போ­டிய அரசு சர­ண­டைந்­தது.


1986 : 335 ஆண்­டுகள் போரை முடி­வுக்குக் கொண்டு வரும் ஒப்­பந்தம் நெதர்­லாந்­துக்கும் சில்லி தீவு­க­ளுக்கும் இடையில் கைச்­சாத்­தா­னது.


1986 :  லண்­ட­னி­லி­ருந்து இஸ்­ரேலின் டெல் அவீவ் நகரம் நோக்கிச் சென்ற விமா­னத்தை குண்­டு­வைத்து தகர்க்கும் முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது.


2004 : இந்­தியத் திரைப்­பட நடிகை சௌந்­தர்யா பெங்­க­ளூரில் விமான விபத்தில் இறந்தார்.


2013 : அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநி­லத்தில்  உர ஆலை­யொன்றில் ஏற்­பட்ட வெடிப்புச் சம்­ப­வத்தில் 15 பேர் பலி­யா­ன­துடன் 160 பேர் காய­ம­டைந்­தனர்.


2014 : உயி­ரி­னங்கள் வசிக்­கக்­கூ­டிய வல­யத்தில் மற்­றொரு நட்­சத்­தி­ரத்தை சுற்­றி­வரும் பூமி அளவிலான கிரகமொன்றை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்ததை நாசா உறுதிப்படுத்தியது.


2014 : ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த ஐ.தே.க. எம்பிகள் ஐவர், ஒரு குழுவினால் தாக்கப்பட்டனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

பவர் பாண்டியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பவர்ஃபுல் பாடங்கள்! #MondayMotivation

 

அறிவுரைகளை இன்னொருவரிடமிருந்து கேட்பதை விட,  நம்மைச் சுற்றி நடப்பதிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஏனோ தானோ என்று நாம் கடந்து போகிற விஷயங்களில், நமக்கான பாடம் இருக்கலாம். நாமே கொண்டாடித் தீர்க்கிற ஒரு விஷயத்தில் நமக்கான பாடம் இருக்கலாம். அவற்றை அடையாளம் கண்டு உணர்வதும், பின்பற்றுவதும்தான் சவால்.

பவர் பாண்டி

தனுஷ் இயக்கத்தில், ராஜ்கிரண் நடிக்க வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது பவர் பாண்டி.  நல்லா இருக்கு /  செயற்கையா இருக்கு / ராஜ்கிரண் சூப்பர் போன்ற விமர்சனங்களை விடுங்கள். அந்தப் படத்திலிருந்து சில பாடங்கள் இன்றைக்கு.

பலம் அறி

பவர் பாண்டி வேலைக்குப் போகப்போகிறேன் என்று கிளம்புவார். பழைய ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால், ஹீரோவுடன் நிற்கும் ஆட்களில் ஒருவராக நடிப்பார். அந்த ஹீரோவுக்கே இவர் ஒரு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் என்பது தெரியாது. இயக்குநர் ஒரு காட்சியில் பவர் பாண்டியை  வசனம் பேசச்சொல்ல, பேசமுடியாமல் தடுமாறுவார். இவரை மாற்றிவிடுவார்கள்.

அதே, வேறொரு நாள்.. சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதில் நடிக்க இவர் போகும்போது இருக்கிற ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லாரும் அத்தனை மரியாதை செலுத்துவார்கள். காட்சி பற்றி, படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்  விளக்க, இவர் ஒருமுறை கேட்டுக்கொண்டு ‘நேரா டேக் போலாமே’ என்று ஜஸ்ட் லைக் தட் செய்து முடிப்பார். கைதட்டல்களும், மனநிம்மதியும் கிடைக்கும் இவருக்கு!

உங்களுக்கு எது தெரியுமோ அதை.. எங்கே மரியாதை இருக்குமோ அங்கே செய்யுங்கள். சக்ஸஸ் சட்டைப்பாக்கெட்டுக்குள் இருக்கும்! 
 

பயம் அழி

மேலே சொன்ன காட்சியையே சொல்லலாம். இயக்குநர் கௌதம் மேனன்தான், பவர் பாண்டியை  அழைத்து ‘டயலாக் பேசறீங்களா?’ என்று கேட்பார். ‘முடியாது, தெரியாது’ என்று சொல்லவே மாட்டார் பவர் பாண்டி. தயங்கவும் மாட்டார். முயல்வார். சரியாக வராதபோது, அதற்காக முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரியவும் மாட்டார். வீட்டுக்கு வந்து பேரக்குழந்தைகளிடம் ‘நல்லா போச்சு’ என்று கதைகட்டுவார். தனக்கான நாள் வரும்போது இறங்கி அடிப்பார்!  அதே போல, தவறுகளைத் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டார். தேவைப்பட்டால் ‘அடிச்சுக்கூட’ கேட்பார்!


’இப்படி ஆகிடுச்சே..  இனி என்ன செய்யப்போகிறோம்’ என்ற வருத்தம் அவருக்கு இருக்கவே இருக்காது. அடுத்து.. அடுத்து என்று போய்க்கொண்டிருப்பார்.   

உங்களுக்குள் இருக்கும் பயத்தை.. பயங்காட்டி அனுப்புங்கள். என்ன நடந்துவிடப்போகிறது என்ற கெத்தும், நடந்தால் எதிர்கொள்கிற துணிவும் கூடயே இருக்கட்டும்!
 
 பழச மறக்காதே!

power paandi


ஒரு பழைய புல்லட்டை அடிக்கடி துடைத்து அதை சரிபார்த்துக்கொண்டே இருப்பார். அதுதான் அவருக்கு கடைசி வரை உதவியாக இருக்கும். ‘ரொம்ப பழசாச்சு’ என்று ஓரத்தில் ஒதுக்கி வைக்காமல்.. அதை சரிபார்த்துக் கொண்டே இருப்பார்.

அது போலவே, தன் உடலையும் பாதுகாப்பார். வாக்கிங், ஜிம் என்று உடலைப் பேணுவதற்கு என்னென்ன தேவையோ அதைச் செய்தபடியே இருப்பார்.

 
எது, எப்படி, எப்போது உதவும் என்று சொல்லவே முடியாது. நீங்கள் பீரோவின் மூலையில் போட்டு வைத்திருக்கும் ஒரு பழைய MP3 ப்ளேயர்கூட ஒருநாள் உங்கள் சோகத்தை ஆற்ற வல்லது.  

வலி ஒழி

படத்தின் காட்சிகளில் ரொம்பவும் சோகமாக தன்னைக் காட்டிக் கொள்ளவே மாட்டார் பவர் பாண்டி. மகனிடம் திட்டு வாங்கிக் கொண்டு மாடிப்படியில் நடக்கும்போது பேரக்குழந்தைகளிடம் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என்பதுபோல சைகை காட்டிவிட்டுச் செல்வார். வலி இருக்கும். ஆனால் அதை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். 

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதுவே உங்களை சரியான பாதைக்கு இட்டுச்செல்லும்.

காலத்தோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்

ஆங்கிலம் பேசுவார் பவர் பாண்டி.  உச்சரிப்புப் பிழை வரும் என்ற பயமெல்லாம் இருக்காது. ‘பேரப்பசங்க கத்துக் கொடுத்தாங்க’ என்பார். ஃபேஸ்புக் பற்றி நண்பர்கள் சொன்னதும் அதை அறிந்து கொண்டு... தேவைக்கேற்ப உபயோகிப்பார். ‘சால்ட் அண்ட் பெப்பர்தான் இப்ப டிரெண்டு’ என்பார். ராயல் எல்ஃபீல்டில் லேட்டஸ்ட் மாடல் ஹெல்மெட்டுடன் பறப்பார்.


கால மாற்றதுக்கேற்ப நம்மைச் சுற்றி இருப்பனவற்றை நாம் அறிந்து கொள்வது.. அவசியமானது!  

பேசு.. பழகு... பேசிப் பழகு!

பவர் பாண்டிக்கு 64 வயது. ஆனால் அனைத்து வயதினருடனும் நட்பு பாராட்டுவார். பேசுவார்.. பழகுவார். பேரக்குழந்தைகளுடன், அவர்களுக்கான உடல்மொழியில் பேசுவார். தன் வயதுக்கார நண்பர்களுடனும் பேசுவார். மகனுடன் அவருக்குத் தகுந்த மாதிரி. மகன் வயதும் அல்லாத, பேரன் வயதும் அல்லாத இடைப்பட்ட ஒரு ஜென் Z பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பவர் பாண்டிக்குமான நட்பு.. வாவ் ரகம். அவனுடன்தான் பகிர்தல் எல்லாமே.  யாரிடமும் சொல்லாத போதும், அவனை அழைத்து தன் நிலைகுறித்துப் பகிர்ந்து கொள்வார். 

பேச, பழக, நட்பு பாராட்ட  உங்கள் வயது முக்கியமல்ல. மனதுதான் முக்கியம்!

இதுவும் இன்னமும் கத்துக்குடுத்ததுக்கு.. தேங்க்ஸ் ப.பாண்டி!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.