Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
மகிழ்ச்சிகளைக் கோட்டை விடலாமா?
 
 

article_1492593054-jghk.jpgகாலநிலை மாற்றங்கள் தங்களுக்கு ஒத்துவராவிட்டால் மேலைத்தேச மக்களில் பலர், ஓய்வு எடுக்கும் பொருட்டும், புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டும், உடனே வெளிநாடுகளுக்கோ அல்லது தங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கோ சென்று, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். 

ஆனால், நம்மவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அசைவதேயில்லை. உழைக்கும் பணத்தை செலவு செய்யவும் பிரியப்படுவதில்லை. சிக்கனமாக வாழவேண்டும் என்பதற்காக புது அனுபவங்கள் மகிழ்ச்சிகளைக் கோட்டை விடலாமா?

நியாயபூர்வமான களிப்பினை உருவாக்கினால் எமது ஆன்மாவும் புளகாங்கிதம் அடைகின்றது. பறவைகள், விலங்குகள் கூட தங்களுக்கு ஏற்றால்போல்

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808

மூன்றாம் நெப்போலியன் (Napoleon III), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoleon Bonaparte, ஏப்ரல் 20, 1808 - ஜனவரி 9, 1873) என்பவர் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவர். மூன்றாம் நெப்போலியன், முதலாம் நெப்போலியன் என்ற நெப்போலியன் பொனபார்ட் பேரரசனின் சகோதரனான லூயி பொனபார்ட்டின்

 
 
மூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808
 
மூன்றாம் நெப்போலியன் (Napoleon III), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoleon Bonaparte, ஏப்ரல் 20, 1808 - ஜனவரி 9, 1873) என்பவர் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவர்.

மூன்றாம் நெப்போலியன், முதலாம் நெப்போலியன் என்ற நெப்போலியன் பொனபார்ட் பேரரசனின் சகோதரனான லூயி பொனபார்ட்டின் மகனாவார். முதலாம் நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் லூயி நெப்போலியனின் தந்தை பிரான்சின் ஒரு பகுதிக்கு அரசனாக்கப்பட்டார். 1815-ல் முதலாம் நெப்போலியனின் கடைசித் தோல்வியை அடுத்து நெப்போலியன் குடும்பம் முழுவது நாடு கடத்தப்பட்டனர். சிறுவனான லூயி நெப்போலியன் சுவிட்சர்லாந்தில் அவனது தாயாரால் வளர்க்கப்பட்டு பின்னர் ஜெர்மனி கல்விகற்க அனுப்பப்பட்டார். இளம் வயதில் இத்தாலிக்கு அவனது தமையன் நெப்போலியன் லூயியுடன் வசித்தார். அங்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்திருந்த ஆஸ்திரியாவை எதிர்த்த இயக்கத்தில் இணைந்து போராடினார்.

அக்டோபர் 1836-ல் பிரான்சுக்கு ரகசியமாகத் திரும்பி அரசுக்கெதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கினார். ஆனாலும் அவனது முயற்சி தோல்வியடையவே அவன் ரகசியமாக ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு 4 ஆண்டுகள் நியூயார்க்கில் வசித்தார். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 1840-ல் சில கூலிப் படைகளுடன் நாடு திரும்பினார். இம்முறை அவன் கைது செய்யப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1846-ல் அவன் சிறையிலிருந்து தப்பி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகருக்கு குடியேறினார். அங்கு கட்டிடத் தொழிலாளி போல வேடமணிந்து வாழ்ந்தார். ஒரு மாதத்தின் பின்னர் அவனது தந்தை இறக்கவே பிரான்சின் முடிக்கு நேரடி வாரிசானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1859 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
 
* 1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
 
* 1902 - பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
 
* 1914 - ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
 
* 1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
 
* 1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
 
* 1967 - சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1968 - தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆப்பிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
 
* 1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.

* 1998 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு ராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
 
* 1999 - கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 2007 - டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

 
  • 1 கப் டீ தயாரிக்க 27 லிட்டர் தண்ணீர் தேவை என்பது தெரியுமா? #VikatanPhotoCards
  • தொடங்கியவர்

விமர்சனம் பழகு, வெட்கம் தவிர்.... பெண்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் 10 குணங்கள்!

 
 

பெண்


பொதுவாகவே பெண்கள் பூவைப்போல ரொம்ப மென்மையானவர்கள் என்கிற கருத்து வெகு நாட்களாகவே உலவிவருகிறது. பெண்களின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில பெண்கள், தங்களை வெளிப்படுத்த தயக்கங்களோடும் பயத்தோடும்தான் இருப்பதை மறுக்கமுடியாது. எனவே பெண்களுக்கு மிகவும் தேவையான குணங்களில் ஒன்று “மனவலிமை”. எப்போதும் எந்த ரூபத்திலும் பெண்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடிய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே பெண்கள் வீட்டிலும் வெளியிலும் சாதிக்க மனவலிமையோடு இருப்பது அவசியம். அதற்கு அடிப்படையான 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?

1. எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், எதிர்விதமான விமர்சனங்கள் எழுவது இயல்பு அதிலும் பெண்கள் என்றால் அவை இரட்டிப்பாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் மீதான விமர்சனங்களை கடந்து வரவேண்டும். உங்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயம் முன்வைக்கப்பட்டால் துணிவோடு விமர்சனம் செய்யவும் தயங்கக்கூடாது. அதே போல் நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையுமே பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வதில் தான் உங்களின் மனவலிமை அடங்கி உள்ளது.

2. உங்களிடம் உள்ள திறமைகளை யாருக்காகவும் எவருக்காகவும் வெட்கப்பட்டு மறைக்கவோ, ஒடுக்கவோ செய்யாதீர். நம் திறமைகளை முதலில் அங்கீகரிக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. வெட்கம் எனும் தேவையற்ற சுமையைத் தூர எறியுங்கள்.

3. இலக்கை அடைவதற்கு தெளிவான சிந்தனை மற்றும் சோர்வில்லாத செயலும் மிகவும் முக்கியமானது. இவை சரியாக இருப்பதில் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனவே, பழகும் நபர்களைப் பற்றி நேர்மறையாகவோ எதிர்மறையாகவே முடிவெடுக்காதீர்கள். அவர்களின் செயல்களை ஊன்றிக் கவனித்து, தெளிவாக புரிந்துகொண்டுப் பழகுங்கள்.

4 .உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பிறரிடம் பேசும்போதும், அது எவ்வளவு கொடுமையானதாகவோ, கவலைத் தரக்கூடியதாக இருந்தாலும் உண்மையை மட்டுமே பதிவு செய்யுங்கள். ஏனெனில், இந்த உண்மைதான் உங்களின் மனவலிமையையும், தைரியத்தையும் அதிகரிக்கும்.

5. உங்களின் உள்ளுணர்விற்கு மதிப்பு கொடுங்கள். ஏனெனில், பெரும்பாலான சமயங்களில் அவை மிகச் சரியாகவே அமையும். ஒருவேளை உங்களின் உள்ளுணர்வும் நடப்பவையும் ஒரு சேர சரியாக அமைந்தால் உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அது நாம் எடுக்கும் முடிவுகள் சரிதான் என்ற மன தைரியத்தைக் கொடுக்கும்.

CrQE2fUVIAA_nO3_19047.jpg

6. மனவலிமையோடு வாழ்வதென்பது, பிறரிடமிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதல்ல. பலரின் மத்தியிலும் நானும் ஒரு தனி இடத்தை பிடித்து காட்டுவேன் என்பதுதான். எனவே ஒரு உதவி தேவைப்படும் நேரத்தில் ஒரு நண்பனிடமோ சகோதரனிடமோ உதவிகள் கேட்பதோ தவறல்ல.

7. முதலில் உங்களை நேசிக்க பழகுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதற்கு எதிரான பழக்கங்களை விட்டொழியுங்கள். உடல் ஆரோக்கியமாக இருப்பது நம் கனவுகளை நாம் அடையவதற்கு முக்கியமாக உதவும். உடல் வலிமை என்பது மன வலிமை சிறக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

8. நீங்கள் உங்களின் கருத்துகளை எங்கே பதிவு செய்தாலும், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்த முடியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி அதில் ஏதேனும் குறை கூறினால், அந்தக் குறை நியாயமானதாக இருப்பின் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாதீர்.

9. தனிமையில் பயணம் செய்யும் போது, உங்களைச் சுற்றி ஆண்கள் மட்டுமே இருந்தால் பயமோ, மிரட்சியோ கொள்ள வேண்டாம். அவர் ஓர் ஆண்' எதிர்பாலினம் மட்டுமே. அவருக்கு எந்த வகையிலும் நான் குறைந்தவள் அல்ல என்ற எண்ணத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.

10. கணவன், குழந்தைகள் என எல்லாவற்றையும் தாண்டி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென மட்டுமே சில ஆசைகள் இருக்கக்கூடும். அதை நிறைவேற்றிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில்தான் உங்களின் மனவலிமை ஒளிந்து கொண்டிருக்கிறது.

எவரும் பிறக்கும்போதே மனவலிமையோடும் தைரியத்தோடும் பிறப்பதில்லை. பிறந்து, வளர்ந்து, வாழும் வாழ்கைச் சூழல்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றது. இது, ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். எனவே தன்னம்பிக்கையும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்வது நம்முடைய பயிற்சிகளும் முயற்சிகளும்தான் என உணருங்கள். துணிச்சலோடு செயல்பட்டால் வெற்றி உங்களின் மிக அருகில்தான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிலம்பத்தில் கலக்கும் சமந்தா! வைரல் வீடியோ

 

நடிகை சமந்தா, சிலம்பாட்டம் ஆடும் வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஒரு மில்லியன் லைக்குகளையும் தாண்டி ஹிட் அடித்துவருகிறது இந்த வீடியோ.

சமந்தா

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர், நடிகை சமந்தா. புதுப்புது விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது சமந்தாவின் வழக்கம். தற்போது, சிலம்பத்தில் கால் பதித்துள்ளார்.

பாரம்பர்ய தற்காப்புக் கலையான சிலம்பத்தில், சமந்தா ஈடுபட்டுவருகிறார். தனக்கு சவால்கள் பிடிக்கும் என்பதால், சிலம்பத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். 'இந்தப் புதிய விளையாட்டுப் பயிற்சியில், எப்போது முழுதாகத் தேறுவேனோ' என்றும் நடிகை சமந்தா தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பளு தூக்குதலில் ஈடுபட்டு 100 கிலோ எடையைத் தூக்கிய வீடியோ, சில நாள்களுக்கு முன்னர் சமந்தாவால் வெளியிடப்பட்டது.

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் மிக அழகான பெண் யார் தெரியுமா?

 
 

Peop_1_02194.jpg

2017-ம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக, ஹாலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸை தேர்வுசெய்துள்ளது, பீப்பிள் பத்திரிகை (People magazine). இதற்குமுன், பீப்பிள் பத்திரிகையால் ஜுலியா ராபர்ட்ஸ், ஐந்து முறை 'உலகின் மிக அழகான பெண்ணாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் 1991, 2000, 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளிலும், 'உலகின் மிக அழகான பெண்ணாக' ராபர்ட்ஸ் தேர்வுசெய்யப்பட்டார்.

இதுகுறித்து, 49 வயதாகும் ராபர்ட்ஸிடம் கேட்டபோது, 'இது மிகவும் பெருமையளிக்கிறது. இன்னும் வருகின்ற ஆண்டுகளிலும் இந்தப் பட்டத்தைப் பெறுவேன் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வயிற்றில் கரு.. செரீனா வில்லியம்ஸ் என்ன செய்தார் தெரியுமா?

 
 

Serena Williams

ஸ்னாப்சாட் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இம்முறை அதற்குக் காரணம் அதன் அதிபரல்ல, அதில் வெளியான பிரபல டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸின் புகைப்பட போஸ்ட். கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப்போட்டியில் தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸை வென்று 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதுவரை 22 கிராண்ட்ஸ்லாம்களை வென்று ஸ்டெப்பி கிராஃபின் சாதனையுடன் சமன் செய்திருந்தார் செரீனா. இந்த வெற்றியின் மூலம் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் என்கிற பெயரையும் பெற்றார். 6-4,6-4 என்கிற நேர்செட்களில் வீனஸை தோற்கடித்தாலும் அது ஒரு கடுமையான மேட்ச் என்றே சொல்லலாம்.

செரீனா நேற்று இரவு வெளியிட்ட ஸ்னாப்சாட் படத்தில் ”20 வாரங்கள்” என்று கேப்ஷன் இட்டிருந்தார். பிரபல ’ரெட்டிட்’ இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்ஸ் ஒஹானியனுடன் கடந்த டிசம்பர் மாதம் செரீனாவுக்கு நிச்சயம் ஆகியுள்ளது. இந்நிலையில் “20 வாரங்கள்” என மேடிட்ட வயிற்றுடன் போஸ் கொடுத்துள்ளதின் மூலம் அவர் கர்ப்பம் என உறுதியாகிவிட்டது. இந்த விஷயம் அவரது ரசிகர்களிடையே செம வைரலாகப் பரவியது. அந்தப் படத்தில் ஆளுயரக் கண்ணாடியின் முன்னாள் நிற்கும் செரீனா மஞ்சள் நிற சிங்கிள் பீஸ் பிகினி அணிந்திருக்கிறார். வழக்கமாக கட்டுடலாக இருக்கும் அவர் இப்படத்தில் கர்ப்பமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் படத்தை சிறிது நேரத்தில் அவர் அகற்றிவிட்டார். இது வழக்கமாக எல்லா செலிபிரட்டியும் செய்யும் வேலைதான் என்றாலும் விஷயம் மீடீயா- சோசியல் மீடியா என அனைத்திலும் பரவி விட்டது.

இப்போது இன்னொரு அதிசயத்தகவலும் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தான் 20 வாரக் கர்ப்பம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் செரீனா. செரீனா வில்லியம்ஸ்அப்படியென்றால் இந்த வாரத்துடன் அந்தப் போட்டிகள் முடிந்து 11 வாரங்கள் ஆகின்றது. ”வாவ்..9 வாரக் கருவை சுமந்துகொண்டு ஆஸ்திரேலியன் ஓபன் கோப்பையை வென்றுள்ளார்” என “மெடிக்கல் மிராக்கிள்” டைப் ஆச்சர்யங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அந்தத் தொடர் நடந்த 20 நாட்களிலும் அவர் கர்ப்பமாகத்தான் இருந்துள்ளார். கர்ப்பத்துடனே அத்தனைப் போட்டிகளிலும் கலந்து வென்றுள்ளார் என நினைத்தாலே ஆச்சரியமளிக்க கூடியதாக உள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள ஸ்போர்ட்ஸ் செலிப்பிரட்டிகள் தொடங்கி,பெண்ணியவாதிகள்,ரசிகர்கள், அமெரிக்க சினிமா செலிபிரட்டிகள் என வகைதொகை இல்லாமல் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் செரீனாவுக்கு போட்டியாளராக இருந்த மரியா ஷரபோவா பிறந்தநாளான நேற்று அறிவித்து இருப்பது தங்களை டீஸ் பண்ணத்தான் என ஷரபோவா ரசிகர்கள் கண்ணை கசக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. காரணம், ஊக்க மருந்து தடைக்கு பிறகு ஷரபோவா தற்போதுதான் விளையாட வந்திருக்கிறார்.

அதே போல் அந்தப் படம் அகற்றப்பட்ட பிறகு  அதிகாரப்பூர்வமாக செரீனா தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை எனவே இது 'சும்மா லுலுலாயி' என்று ஒரு குரூப் சொல்லித்திரிந்தது. உலக டென்னிஸ் சங்கமும் தமது டிவிட்டர் அக்கௌண்டில் தெரிவித்த வாழ்த்தை நீக்கியது. இவற்றையெல்லாம் சொன்னாலும் செரீனாவின் அந்தப் படம் ஸ்கீரின்ஷாட் எடுக்கப்பட்டு வெளியாகிவிட்டது. ஒட்டு மொத்த அமெரிக்காவும் பிரபல பாடகி பியான்ஸின் சோசியல் மீடியாவை ரெப்ரஷ் செய்தபடியே இருந்தனர். காரணம் அவர்தான் செரீனாவின் திக்கெஸ்ட் தோழி.  இன்னொரு விஷயம்.. பியான்ஸும் தற்போது கர்ப்பமாக உள்ளார். பின்னர் ஒரு வழியாக செரீனா செய்தித்தொடர்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பூனம் பாண்டே ஆப்... தடை செய்த கூகுள்... காரணம் என்ன?

 

பூனம் பாண்டே

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள். இவர் செஞ்சுரி அடிக்காமல், ஹெலிகாப்டர் ஷாட் ஆடாமல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆம் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் அவர். இந்தியா உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சபதமிட்டார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இந்த சர்ச்சை நாயகி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருகிறார்.

ஏப்ரல் 19ம் தேதி போல்ட் (Bold) எனும் தன்னை பற்றிய அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் தளத்தில் வெளியிட்டார். பூனம் பாண்டேவின் அப்ளிகேஷனுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்த ஆப்பிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கூகுள் நிறுவனம் ரிவியூ செய்த பின் இந்த ஆப்-ஐ ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டவுடன் பூனம் பாண்டே தனது இணையதளத்தில் இந்த ஆப்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று ட்விட் செய்ய பற்றிக்கொண்டது ஆப். 

Google has suspended the App..but the Android users can directly download #ThePoonamPandeyApp from my website http://www.poonampandey.in/download 

ஆப்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்த பலரும் ஆப்-ல் உள்ள சிறப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆப்- ல் முகப்பு திரையில் இந்த ஆப்பில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை விளக்கும் வீடியோ உள்ளது. மேலும் பூனம் பாண்டேவின் வாழ்க்கை, அவரது புகைப்படங்கள், வீடியோக்கள், ஷூட்டிங் தவிர அவரது புகைப்படங்கள், அவரது சுற்றுப்பயணங்கள், 360 டிகிரி வீடியோக்கள், நிகழ்ச்சிகள் குறித்த அப்டேட், லைவ், மற்றும் ஸ்டோர் வசதியும் உள்ளது. இதில் டாப் ரசிகர் யார் என்ற விஷயத்தையும் சேர்த்துள்ளனர்.

இந்த ஆப்-ல் 3 வழி நேவிகேஷன் அமைப்பு உள்ளது. மேலே ஸ்வைப் செய்தால் எந்த பிரிவில் இருக்கிறோம் அதன் மற்ற தகவல்களும், பக்கவாட்டின் இரண்டு புறமும் பிரிவுகளை மாற்றும் வசதியோடும் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெனுக்கள் மூலமாகவும் இந்த ஆப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

App

 ஹெச்.டி தரத்தில் வீடியோக்களும், புகைப்படங்களும் அவரது ரசிகர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 9.4 எம்.பி அளவில் உள்ளது இந்த ஆப். இந்த ஆப் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூகுள் வழங்கவில்லை. ஆனால் பூனம் பாண்டே இது குறித்து கூறும் போது '' கூகுள் ப்ளே ஸ்டோரில் பல ஆபாச  படங்களையும், வீடியோக்களையும் கொடுக்கும் ஆப்களை பார்த்திருக்கிறேன். கூகுள் தளத்தில் இலவச ஆப்கள் மில்லியன் கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு என் ஆப்-ஐ எதற்கு தடை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. இதனை எனது இணையதளத்தில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.

கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கப்படுவதற்கு முன்பு 15 நிமிடத்தில் 15000க்கும் அதிகமான நபர்கள் இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துள்ளனர், கூகுள் ப்ளே ஸ்டோரின் நிபந்தனைகளை போல்டு ஆப் மீறியதால் நீக்கப்பட்டிருக்கிறது. ஆப் குறித்த விவரங்களும், தகவல்களும், பதிவிறக்க லின்க்குகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன, 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

டாப் ஹீரோக்கள் தவறவிட்ட ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா?

 
 

சினிமாவில் மிக சிரமமானதே எந்தக் கதை ஹிட்டாகும், எது ஃப்ளாப் ஆகும் எனக் கணிப்பதுதான். நமக்குப் பொருத்தமாக இருக்குமா என்பது உட்பட   பல காரணங்களுக்காக ஒரு ஹீரோ சில படங்களை மிஸ் செய்வதும், அதை வேறு ஒரு ஹீரோ நடித்து ஹிட்டாவதும் இங்கு இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்தெந்த ஹீரோ என்னென்ன படங்களை மிஸ் செய்தார்கள் என்கிற சின்னச் சின்ன தவல்கள் இங்கே...

ரஜினி: 

ஹீரோ

'முதல்வன்' படத்தின் கதையையே ரஜினியை மனதில் வைத்துதான் எழுதியிருந்தார் ஷங்கர். அதே போல் 'ரமணா' படத்தின் கதையைக் கூட ரஜினியை மனதில் வைத்தே உருவாக்கியிருந்தார் முருகதாஸ்.

 

 

 

ஆனால் அந்த க்ளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் வந்த பின் அவரை அணுகாமலே விட்டுவிட்டார். இதன் பின் மலையாளத்தில் மோகன் லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்திற்காக ரஜினியை அணுக, முதலில் அவரும் ஆர்வமாக தயாரானார், பின் சில சீன்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற யோசனை எழவே தவிர்த்துவிட்டார்.

 

கமல்:

கமல்

ரஜினி நோ சொல்ல, 'முதல்வன்' படத்தில் நடிக்க கமலும் அணுகப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தச் சமயத்தில் கமல் தனது 'ஹேராம்' படத்துக்கான வேலைகளில் இருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை. 'முதல்வன்' படத்தின் இந்தி ரீமேக் 'நாயக்' படத்தை முடித்ததும் கமல்ஹாசன் - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் 'ரோபாட்' படத்தை இயக்குவதாக இருந்தார் ஷங்கர். கதை 2200 அல்லது 3000மாவது ஆண்டில் நடப்பதாக இருக்கும் என சொல்லப்பட்டது. சில காரணங்களால் படம் கைவிடப்பட்டு பின்னர் ரஜினி நடிப்பில் 'எந்திரன்' ஆக 2010ல் வெளியானது.

 

விஜய்:

விஜய்

ரஜினி கமல் இருவரும் நோ சொல்வதற்கு இடையில் 'முதல்வன்' படம் விஜய்யிடமும் சென்று வந்தது, அவர் ஆர்வம் காட்டாததால் அர்ஜுனை நடிக்க வைத்தார் ஷங்கர். 'அனேகன்' படத்தில் நடிக்கவும் விஜயிடம் கேட்கப்பட்டிருக்கிறது, மற்ற படங்களின் வேலைகளில் இருந்ததால் அனேகனில் விஜயால் நடிக்க முடியாமல் போனது. முருகதாஸின் 'தீனா', அமீரின் 'பருத்திவீரன்' படங்களும் விஜயிடம் சென்று வந்தவை தான்.

 

அஜித்:

அஜித்

அஜித் நிராகரித்த நிறைய படங்கள் மற்ற ஹீரோகளால் நடிக்கப்பட்டு ஹிட் ரேட்டிங்கும் வாங்கியிருக்கிறது. 'நேருக்கு நேர்' படத்தில் சூர்யா நடித்த ரோல் முன்பு அஜித் நடிக்க வேண்டியிருந்தது, சில நாள் ஷூட்டிங் போனது வரை அனைவரும் அறிந்ததே. மாதவன் நடித்த 'ரன்' முதலில் அஜித்துக்கு சொல்லப்பட்ட கதை தான். ஷங்கர் இயக்கிய 'ஜீன்ஸ்', விஜய் நடித்த 'லவ் டுடே', 'கில்லி', சூர்யா நடித்த 'நந்தா', 'கஜினி' (மிரட்டல் எனத் துவங்கப்பட்டது), 'காக்க காக்க', விக்ரம் நடித்த 'ஜெமினி', 'தூள்', 'சாமி', ஆர்யா நடித்த  'நான் கடவுள்' ஆகிய படங்களை அஜித் நிராகரிக்க, பின்பு அது மற்ற ஹீரோக்கள் நடித்து பெரிய ஹிட்டானது.

 

சூர்யா:

சூர்யா

'ஆசை' படம் மூலம் சூர்யாவின் என்ட்ரி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குநர் வசந்த் சூர்யாவை அணுகியிருக்கிறார். ஆனால், சூர்யாவிற்கு நடிப்பில் பெரிய ஆர்வம் இல்லாததால் அஜித்துக்கு அந்த வாய்ப்பு சென்றது. பிறகு வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படம் மூலமே அவர் அறிமுகம் நிகழ்ந்தது. (ஆனால் நேருக்கு நேரில் முதலில் நடிக்க இருந்தது அஜித்). '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நண்பன்' படத்தில் லீட் ரோலில் நடிக்க முதலில் சூர்யாவைக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவரது கமிட்மென்ட்கள் வேறு மாதிரி அமைய ஷங்கர் பட வாய்ப்பை மிஸ் செய்தார் சூர்யா. 'துருவ நட்சத்திரம்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா. அதற்கான பட துவக்கவிழா எல்லாம் நடக்க பின் பல கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது. இப்போது அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.

 

விக்ரம்:

விக்ரம்

'பம்பாய்' படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விக்ரம். அந்தச் சமயத்தில் விக்ரமனின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த 'புதிய மன்னர்கள்' பாதிக்கப்படும் என்பதால் விக்ரமால் 'பம்பாய்' படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால், பிறகு 'ராவணன்' படம் மூலம் மணிரத்னத்துடன் இணைந்தார். கௌதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்திற்காக விக்ரமை அணுகினார். அந்தச் சமயத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த 'சாமி' படமும் போலீஸ் கதை என்பதால் நடிக்க முடியாமல் போனது. தற்போது 'துருவ நட்சத்திரம்' மூலம் மீண்டும் இணைகிறது இந்த காம்போ. 'யாவரும் நலம்' படத்திற்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கத்தில் விக்ரம் '24' படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல காரணங்களால் அது கைவிடப்பட்டு மகேஷ் பாபுவிடம் சென்றது. கதை கேட்ட மகேஷ், அப்போது மறுத்துவிட்டார். பின்னர் சூர்யா நடித்து படம் வெளிவந்த பின், படம் பார்த்துவிட்டு சூர்யாவால் செய்ய முடிந்த அளவுக்கு என்னால் சிறப்பாக செய்ய முடிந்திருக்காது எனக் கூறினார்.

 

சிம்பு: 

சிம்பு

 
 

சிம்பு நடிப்பதாக எல்லாம் முடிவு செய்யப்பட்ட நிலையில், சில காரணங்களால் 'கோ' படம் ஜீவாவிற்கு சென்றது. அதே போல் லிங்குசாமி இயக்கத்தில் உருவான 'வேட்டை' படத்தில் ஆர்யா ரோலில் நடிக்க இருந்தது சிம்பு. அதிலிருந்தும் விலகினார் சிம்பு. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மெய்மறக்க வைக்கும் மேம்படுத்தப்பட்ட கூகுள் எர்த்

புதிய வடிவம்; பிரமிப்பூட்டும் அழகு; உலக அதிசயங்களை உள்ளங்கைக்குள் முப்பரிமாணத்தோற்றத்தில் காட்டும் புதிய முயற்சி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

 

 
  • உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards
  • தொடங்கியவர்

திமிங்கிலத்தின் முதுகில் கேமெரா

  • தொடங்கியவர்

நன்றி தலைவா : ரஜினி ரசிகர்களை நெகிழ வைத்த சச்சின் டெண்டுல்கர்

 

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர் ஷேவாக் நடித்து அடுத்த மாதம் வெளிவரவுள்ள `சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்` என்ற திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு சச்சின் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி தலைவா : ரஜினி ரசிகர்களை நெகிழ வைத்த சச்சின் டெண்டுல்கர்படத்தின் காப்புரிமைTWITTER

ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் அடுத்த மாதம் 26 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கரின் `சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்` என்ற திரைப்படம் இந்தியா முழுக்க வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தி, மராத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணம் மற்றும் ரசிகர்கள் யாரும் அறிந்திராத தனிப்பட்ட வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்களை கொண்ட ஆவணப்படமாக தயாராகியுள்ளது.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் திரைப்படம் வெற்றிப்பெற அனைவரும் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்` திரைப்படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

நன்றி தலைவா : ரஜினி ரசிகர்களை நெகிழ வைத்த சச்சின் டெண்டுல்கர்படத்தின் காப்புரிமைTWITTER

ரஜினியின் ட்விட்டுக்கு நன்றி கூறி பதில் ட்வீட் போட்ட சச்சின், 'நன்றி தலைவா. இந்த படத்தை தமிழில் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

எப்படி வந்தது தொப்பி?

 
hatter_3155771f.jpg
 
 
 

கொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லவே எல்லோருக்கும் பயம் வந்துவிடும். ஆனாலும், கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவதில் சிறுவர்களுக்கு ரொம்ப பிரியம்தான். அப்படி வெயிலில் விளையாடும்போது தலையில் தொப்பி அணியவும் அவர்கள் மறக்க மாட்டார்கள். வெயிலிலிருந்து காக்க உதவும் தொப்பி எப்படி உருவானது?

காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதன் வெயில், பனி, குளிரிலிலிருந்து காத்துக்கொள்ளத் தலையையும் கழுத்தையும் மறைத்துக்கொண்டான். இதற்காக, அகன்ற தாவர இலைகள், தழைகளோடு கூடிய சிறு கிளைகளைக் கட்டிக்கொண்டான். பிற்கு மரப்பட்டைகளைப் பயன் படுத்தினான். கொஞ்சம் நாகரிகம் வளர்ந்த பிறகு காட்டு விலங்குகளை வேட்டையாடி, மாமிசத்தைச் சாப்பிட்ட ஆதி மனிதர்கள், அவற்றின் தோலைத் தலையில் அணிந்து வெயில், குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

hats_3155772a.jpg

இப்படி உருவான தோல் அணிகலன்தான் தொப்பி உருவாக அடிப்படையாக அமைந்தது. காலப் போக்கில் மனிதர்களின் நாகரிக வளர்ச்சியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எகிப்து, கிரேக்கம், ரோம் மக்கள்தான் கம்பளித் தொப்பிகள் பயன்படுத்தக் காரணமாக இருந்தார்கள். 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கரடுமுரடான பருத்தி நூல்கள், துணி, பட்டுத் துணியாலான விதவிதமான தொப்பிகள் செய்யப்பட்டன. இது பல நாடுகளுக்கும் பரவியது.

கிபி 1300 முதல் தொப்பி களில் கண்கவர் அலங்காரம் வழக்க மாகியது. மத அடையாளமாகவும் பலவகைத் தொப்பிகள் உருவாகின. கி.பி 1350 முதல் 1400 வரை மேற்கு ஐரோப்பியப் பெண்கள் டர்பன் போன்ற தொப்பிகளை அணிந்தார்கள். கி.பி 1600-ம் ஆண்டில் மேற்கு ஆசியாவில் மக்கள் விளிம்பில்லாத சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தார்கள். அரேபியர்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஏற்பத் தொப்பிகளில் உயர்ந்த நகைகளை பதித்துக்கொண்டார்கள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொப்பிகள் உருவாயின. இன்று மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும் தொப்பிகளுக்கெல்லாம் இந்தத் தொப்பிகள்தான் முன்னோடிகள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஒவ்வொரு வருடமும்‌ நிலங்களைப் பிரசவிக்கும் கடல்... பின்லாந்தில் ஆச்சர்யம்!

 
 

உலக வெப்பமயமாதல், அதிகப்படியான இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்களால் நாளுக்கு நாள், பல இடங்களில் கடல் மட்டம் உயர்ந்து வர... அதற்கு நேர்மாறாக ஒரு ஆச்சர்ய நிகழ்வு பின்லாந்தில் நடந்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் கடலிலிருந்து நிலம் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

பின்லாந்திற்கும், ஸ்வீடனுக்கும் இடையே இருக்கும் பொத்னியா வளைகுடா பகுதியில் இருக்கிறது குவார்கன் தீவுகள் (Kvarkan Islands). இதில் அதிக எண்ணிக்கையிலான தீவுக் கூட்டம் பின்லாந்து பக்கமும், சில தீவுகள் ஸ்வீடன் பக்கமும் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 10மிமீ அளவிற்கான நிலப்பகுதி கடலில் இருந்து வெளிப்படுகிறது. உலகில் வேறெங்கும் நடந்திராத ஓர் ஆச்சர்யம் இது. 

கடல் பிரவித்த தீவுகள்

என்ன நடக்கிறது... ஏன் வெளிவருகிறது நிலம் ?:

அறிவியல் ரீதியாக இதை "Rapid Glacio - Isostatic Uplift" என்று சொல்கிறார்கள். அதாவது, கடைசியாக முடிந்த "பனிக் காலத்தில் " (Ice Age) ஒரு மைல் உயரத்திற்கான பனி மலைகள் இருந்த பகுதி இது. அந்தப் பனி மலைகளின் அதிகப்படியான எடையைத் தாங்க முடியாத நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கிக் கிடந்தது. தோராயமாக, 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பனி மலைகள் அத்தனையும் உருகத் தொடங்கின. பனிமலைகள் உருகி எடை குறையவே, மூழ்கிய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. 
வருடத்திற்கு 1 சதுர கிமீ பரப்பளவிற்கான நிலம் வெளிவருகிறது. அதாவது, கிட்டத்தட்ட 150 கால்பந்து மைதானங்களுக்கு இணையான பரப்பளவு. ஒவ்வொரு வருடமும் இந்தத் தீவுக் கூட்டங்களில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதியின் வரைபடத்தில் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கிறது. 

கடல் பிரசவிக்கும் தீவுகள்

இந்தத் தீவில் 2500 பேர் வரை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்த இயற்கையின் அதிசயத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்னர் படகில் கடந்த பகுதியை, இப்போது நடந்துக் கடக்கிறார்கள். நீச்சலடித்து விளையாடிய இடத்தில் இப்போது கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கடலிலிருந்து வெளிப்படும் நிலப்பரப்பானது வெறும் மண் கொண்டதாக மட்டுமே இருக்கும். வெளிவந்து சில தினங்களில் புற்கள் முளைக்கத் தொடங்கும். பின்பு, செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து சில வருடங்களிலேயே ஒரு காடாக உருவாகிவிடுகிறது. 

பின்லாந்து தீவுகளைப் பிரசவிக்கும் கடல்

நிலங்களைப் பிரசவிக்கும் கடல் !!! :

சில நூறாண்டுகளுக்கு முன்னர் வரைக் கூட பனிக் காலங்களில், இந்தக் கடல் பகுதி முழுவதும் உறைந்துப் போய்விடும். பின்லாந்திலிருந்து, ஸ்வீடனுக்கு அந்த வழியே நடந்துப் போனதாகக் கூட குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அதன் பின்னர் பல பருவநிலை மாற்றங்களின் காரணமாகவும், தொடர் கப்பல் போக்குவரத்தின் காரணமாகவும் கடல் உறைந்து போவது நின்றுவிட்டது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட தீவிலிருந்து, மற்றொரு தீவிற்கு படகில் போய்க்கொண்டிருந்த மக்கள் இன்று அதற்கு நடந்தே போகிறார்கள். காரணம் இரண்டிற்கும் இடையே நிலம் தோன்றி தீவுகளை ஒன்றிணைத்துவிட்டது. இப்படியாக பல தீவுகள் ஒன்றிணையத் தொடங்கியிருக்கின்றன. இதே போன்ற நிலைத் தொடர்ந்தால், இன்னும் 2500 ஆண்டுகளுக்குள் கடலுக்கு நடுவே பெரிய இயற்கைப் பாலமாக அந்தத் தீவுகள் உருவாகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

பின்லாந்து தீவுகளைப் பிரசவிக்கும் கடல்

இந்தத் தீவுக் கூட்டங்களில் மொத்தமே 2500 பேர் தான் வசிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கென தனித்துவமான ஒரு வாழ்க்கை முறை கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை இடத்திற்கும் ஒவ்வொரு வகையான படகுகளை இந்தத் தீவுவாசிகள் உபயோகிக்கிறார்கள். ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகளுக்கு ஒன்று, கடல் நாய் வேட்டைக்குப் போகும் போது ஒரு வகையான படகு, ஸ்வீடன் நாட்டிற்குப் போக ஒரு தனி வகையான படகு , மீன்களைப் பிடிக்க ஒரு வகையான படகு என நான்கு வகையான படகுகளை வைத்திருக்கிரார்கள். இந்தத் தீவுகளில் கோடை காலங்களில் நள்ளிரவு வரைக் கூட சூர்ய அஸ்தமனம் ஆகாமல் இருக்கும். எப்படியாக இருந்தாலும், இந்தக் கடலையும், தீவுகளையும் அவ்வளவு நேசிக்கிறார்கள் அந்த மக்கள். உலகமே இங்கு நடப்பதை அறிவியல் ஆச்சர்யமாகப் பார்த்தாலும் கூட அந்த மக்கள் இந்த நிகழ்வை,

" கடல் நிலங்களைப் பிரசவிக்கிறது" என்று அன்பான வார்த்தைகளை உதிர்க்கிறார்கள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலக எரிமலைகளை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள்கள்: உயிர்ப்பலி தவிர்க்கப்படுமா?

சில வாரங்களுக்கு முன் எட்னா எரிமலையை ஒட்டி படம்பிடிக்கச் சென்ற பிபிசி செய்தியாளர் குழுவினர் அதன் திடீர் வெடிப்பில் சிக்கிக்கொண்டனர்.


அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினார்கள்.


எரிமலையின் வெடிப்பை முன்கூட்டியே கணிக்கக்கூடிய புதிய வழி உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான செய்தி சேகரிப்பின் ஒரு பகுதியாகவே அவர்கள் அங்கே சென்றிருந்தனர் என்பது இதுவரை வெளியிடப்படாத செய்தி.


செயற்கைக்கோள்களை பயன்படுத்தி உலகில் இருக்கும் 1500 எரிமலைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எரிமலை வெடிப்புகளை முன்கூட்டியே கணிக்கும் புதிய முறை ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானிகல் உருவாக்கியுள்ளனர்.


இதுவரை கண்காணிக்கப்படாமல் இருக்கும் ஏழை நாட்டு எரிமலைகளை சுற்றி வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த புதிய முயற்சி மிகப்பெரும் நன்மை செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

  • தொடங்கியவர்

அஜித்தின் மாஸ் காட்டும் 'விவேகம்' புகைப்படம்!

 
 

Aj_1_23385.jpg

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது 'விவேகம்' திரைப்படம். இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இது அஜித் நடிக்கும் 57-வது திரைப்படமாகும். அஜித் - சிறுத்தை சிவா காம்போவில் 'வீரம்', 'வேதாளம்' என்ற வரிசையில் 'விவேகம்' ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என தொடர்ச்சியாக படம் குறித்த ஏதோ ஒரு விஷயம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், அஜித் ரசிகர்கள் மத்தியில், விவேகம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விவேகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு இருக்கும் ராணுவ தளத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். அந்த இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் பக்கத்தில் அஜித் நிற்க எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது, விவேகம் ஃபீவரை மேலும் கூட்டியுள்ளது. 

வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி விவேகம் வெள்ளித்திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

On 20.4.2017 at 1:19 AM, நவீனன் said:

குமாரசாமி கணக்கு

 

15 hours ago, நவீனன் said:

2017-ம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக, ஹாலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸை தேர்வுசெய்துள்ளது, பீப்பிள் பத்திரிகை (People magazine).

மறக்கக்கூடிய படமா இது 

 

  • தொடங்கியவர்

கொடுக்கும் கரங்கள் வற்றாது
 
 

article_1492682111-index.jpgகொடுக்கும் கரங்கள் வற்றாது, பிறர் பொருட்களை எடுக்கும் அல்லது வாங்கும் நபர்களுக்கு, மனம் சுரக்கும் எண்ணம் வராது. நான் அறிந்த தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர், நூற்றுக் கணக்கான சிறுவர், வயோதிபர்களைப் பராமரித்து வருகிறார். இவர், வவுனியாவில் இப்பணியை ஆற்றிவரும் அற்புதாமான ஆன்மா.

இவர் என்னிடம் ஒருமுறை சொன்னார் “சில சமயங்களில் எனக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. ஆனால், ஒரு வேளையும் மனம் சோர்வதுமில்லை. அடுத்த கணமே, யாரோ அன்பர்கள் வலிந்து வந்து, நிதியுதவிகளைச் செய்வது எனக்கும் பிரமிப்பைத் தரும்” என்றார். 

இறைவன் ஒருவரையும் கைவிடுவதே இல்லை. அவன், மனித வடிவில் தர்மவான்களை அனுப்பியபடியே இருப்பான். கொடை செய்தால் இடர்களையப்படும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே

 
 
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964
 
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினர் கல்லூரி தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளித்தன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்கு பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29-இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு இதே நாளில் இயற்கை மரணம் எய்தினார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
* 1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
* 1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
* 1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
* 1987 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
* 1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

3 ஹெலிகாப்டர் தளம், 168 கார் பார்க்கிங், ஸ்நோ ரூம்... முகேஷ் அம்பானியின் பிரமாண்ட இல்லம்! #Antilia

 
 

மும்பையில் ஒரு பிளாட் வாங்கி குடிபோறதுக்குல்லேயே பாதி உசிரு போயிடும். அதே மும்பையில ஒருவர் 27 மாடி கட்டி அதுல வாழ்க்கை நடத்துறாருனா அது... அம்பானியாகத்தானே இருக்க முடியும்?. ஆமா... நிச்சயமா அம்பானியேதான். தொழில் துறையில் தவிர்க்க முடியாத ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிதான் இந்த பங்களாவுக்கு சொந்தக்காரர். திருபாய் அம்பானியின் மூத்த மகன்.  நேற்று அவருக்கு 60வது பிறந்த நாள். இவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.

அம்பானியின் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள வீடு

குடியிருப்புகளில் விலை உயர்ந்ததாக லண்டனில் உள்ள 'பக்கிங்ஹாம் பேலஸ்' கருதப்படுகிறது. இது அரச குடும்பத்துக்கு சொந்தமானது. அதே வேளையில், தனி ஒருவருக்கு சொந்தமான பங்களாவாக உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது முகேஷ் அம்பானியின் Antilia. இதுதான் இந்த பங்களாவின் பெயர். அட்லாண்டிக் கடலில் மாயமான தீவு பகுதியான அன்டில்லாவை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

ஜன நெருக்கடி மிகுத்த மும்பையில் பிளாட் வாழ்க்கைதான் நடுத்தர வர்க்கத்தினருக்கு வாய்க்கும். நகரத்தில் இருந்து 50 கி.மீக்கு அப்புறம் வாங்கினாலே தாராளமாக 60 லட்சத்துக்கு குறைந்து வாங்க முடியாது. நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ள  நகரின் மத்தியில் வான் உயர அடுக்கு மாடிகள் நிறைந்த பகுதியில் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா தனியாக நிற்கிறது. சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனமான Perkins and Will  இந்த கட்டிடத்தை வடிவமைத்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Leighton Holdings நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. நிலத்தின் மதிப்போடு சேர்ந்து தற்போது இந்த பங்களாவின் மதிப்பு  சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி. 

உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ரெசிடென்சியல் பகுதியாக கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் இது அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாக கட்டப்பட்டுள்ளன. அதனால், இந்த பங்களா கிட்டத்தட்ட 40 மாடி கட்டிடத்துக்கு இணையான உயரம் கொண்டது. பங்களாவில் இல்லாத விஷயங்களே கிடையாது. மினி தியேட்டரில் 50 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம். 

ஆசைப்பட்டா... உடனே ஸ்விட்சர்லாந்துக்கு போய் பனியில நனைய முடியுமா... மெனக்கெட்டு பிளைட் பிடிச்சு போகனும். அதுக்கு லேட் ஆகும். அதனால் வீட்டுக்குள்ளேயே ‘Snow Room’  இருக்கிறது. இந்த ‘Snow Room’  ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனியை கொட்டிக் கொண்டே இருக்கும். 168 கார்களை நிறுத்திக் கொள்ள முடியும். இதுதவிர 3 ஹெலிகாப்டர் தளங்களும் இருக்கின்றன. வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அம்பானியை யார் தடுத்து நிறுத்த முடியும்? 

Antillaசிங்கிள் ஃபேமிலிதான் இந்த வீட்டுல வசிக்கிறார்கள். முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, மகள் இஷா, ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் அடங்கிய சின்ன குடும்பம்தான். 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஷிப்ட் முறையில் வீட்டில் பணியில் இருப்பார்கள். வீடு மட்டுமல்ல அம்பானி வைத்திருக்கும் ஒரு காரின் மதிப்பு மட்டும் ரூ. 8.5 கோடி. அந்த BMW 760Li ரக கார்தான் அம்பானிக்கு பிடித்த வாகனம். இதன் உண்மையான மதிப்பு ரூ. 1.9 கோடிதான். ஆனால், முகேஷ் அம்பானிக்காக இந்த காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

குட்டி ராக்கெட் லாஞ்சரை ஏவினாலும் கூட இந்த காரின் கண்ணாடி உடையாது. ஒவ்வொரு கண்ணாடியும் 150 கிலோ எடையுடன் 65 மி.மீட்டர் தடிமன் கொண்டது.சுமார் 17 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் வெடிக்கச் செய்தாலும் கார் அசைந்து கொடுக்காது. இதன் பெட்ரோல் டேங்க் self-sealing Kevlar பாதுகாப்பு செய்யப்பட்டவை.  அதனால், எளிதீல் தீ பிடிக்காது. இந்த காரைத் தவிர Maybach 62 and a Mercedes-Benz S Class ரக கார்களிலும் முகேஷ் அம்பானி பயணம் மேற்கொள்வார். 

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தற்போது முகேஷ் அம்பானியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. அண்மையில் டெலிகாம் துறையில் கால்பதித்து, 'ஜியோ' மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ‘முகேஷ் அம்பானி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது ரிஸ்க் எடுக்கும் தன்மையையும் திறமையும் யாருக்கு வரும்?’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 1966ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி தொடங்கினார். ஆனாலும் 1970ம் ஆண்டு வரை திருபாய் அம்பானி குடும்பம் மும்பையில் இரு அறைகள் கொண்ட பிளாட்டில்தான் வசித்து வந்தது. திட்டமிடலும் உழைப்பும் அம்பானி குடும்பத்தை 'அன்டில்லா' கட்டிடம் போல உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த ஓவியர்

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர்  அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

3F5B0A9900000578-4422450-image-a-14_1492

இதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். 12 தொன் எடையுள்ள சுண்ணாம்பு பாறைக்குள் ஒருவாரம் தங்கியிருந்தார்.

3F5B06F300000578-4422450-image-a-18_1492

201704211102485888_french-3._L_styvpf.gi

இந்த நிலையில் அவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். விஷேடமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி அடைக்காக்க தொடங்கினார்.

201704211102485888_french-4._L_styvpf.gi

இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் நேற்று முன்தினம் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன.

201704211102485888_french-2._L_styvpf.gi

இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.virakesari.lk/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லா வீணர்கள்....

எனினும்.... இவர் இருப்பதை பார்க்க வந்தவர்கள் பணம் கொடுத்து இருந்தால் ஒகே.

  • தொடங்கியவர்

குழந்தைகள் உலகில் மாயாஜாலம் நிகழ்த்திய வாண்டுமாமா! #HBDVaandumaama

 

''நிறையப் பேர் என்னைச் சிறந்த சிறுவர் எழுத்தாளர்னு சொல்றாங்க. ஆனால், என்னை ஒரு சமையல்காரனா நினைக்கிறேன். எல்லோரும்தான் சமைக்கிறாங்க. ஒரு சிலருக்கு சரியான கைப்பக்குவம் வந்துடும். அப்படி எனக்கு குழந்தைப் படைப்புகளுக்கான கைப்பக்குவம் வந்துடுச்சு அவ்வளவுதான்'’ 

மாயாஜால கதைகள், கலக்கலான காமிக்ஸ், அறிவியல் உண்மைகள், வரலாற்று நிகழ்வுகள், விளையாட்டுப் புதிர்கள் எனக் குழந்தைகளுக்கான அத்தனை தளங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, கிட்டதட்ட மூன்று தலைமுறை சிறார்களின் வாசிப்பு உலகைக் குதூகலப்படுத்திய ஒரு தமிழ்ச் சிறார் எழுத்தாளர் சொன்ன அடக்கமான வரிகள் இவை. அவர்தான், வாண்டுமாமா என்கிற வி.கிருஷ்ணமூர்த்தி. அவரது பிறந்தநாள் இன்று.

 

வாண்டுமாமா 

 

ஏப்ரல் 21, 1925-ம் ஆண்டு புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமழம் என்ற ஊரில் பிறந்தவர் வி.கிருஷ்ணமூர்த்தி. சின்ன வயதிலேயே ஓவியங்கள் வரைவதில் அவ்வளவு ஆர்வம். பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வியந்து பாராட்டும் வகையில் வரைந்து தள்ளுவார். பத்திரிகைகளில் வரும் கதைகளுக்கான ஓவியங்களைப் பார்த்து அதேபோல வரைவார். கதைகள் எழுதும் ஆர்வமும் ஏற்பட, பேனாவைப் பிடித்தார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, கல்லூரிக்குச் செல்லும் வசதி இல்லை. திருச்சியில் இருந்தவாறு விளம்பர ஓவியங்கள், அட்டைப் படங்கள் வரைந்துகொண்டிருந்தார். பத்திரிகை துறையில் சேர்ந்து, பெரிய ஓவியராகிவிட வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம். 

அப்போது, ஆனந்த விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்த மாலி அவர்களைத் தெரிந்தவர் மூலம் சந்தித்தார். விகடனில் லெட்டரிங் ஆர்ட்டிஸ்டாக சிறிது காலம் பணியாற்றியவர், மீண்டும் திருச்சிக்குச் சென்றார். அங்கே இருந்து வெளியான 'சிவாஜி' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். கெளசிகன் என்கிற பெயரில் பெரியவர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தவரை, சிறுவர்களுக்காக எழுதத் தூண்டியதுடன், 'வாண்டுமாமா' என்ற பெயரையும் வைத்தார், ஓவியர் மாலி. அதன் பிறகு 'வானவில்', 'கிண்கிணி', 'கோகுலம்' என இவரது வாழ்க்கைப் பாதை, சிறுவர் பத்திரிகைகளில் பயணிக்க ஆரம்பித்தது. தனது மந்திர எழுத்துகளால் தமிழ்ச் சிறார்களை கட்டிப்போட்டார் வாண்டுமாமா. 

சில வருடங்களுக்கு முன்பு, 'ஹாரி பாட்டர்' புத்தகம் வெளியாகும் நாட்களில் புத்தகக் கடைகளில் மிகப் பெரிய வரிசை நிற்பதை வியப்போடு பார்த்திருக்கிறோம். ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் அத்தகைய அதிசயத்தை நிகழ்த்தியவர் வாண்டுமாமா. அவர் பொறுப்பேற்று இருந்த 'வானவில்' சிறுவர் பத்திரிகையை வாங்குவதற்காக, வெளியாகும் நாளில் திருச்சியில் இருக்கும் அந்தப் பத்திரிகை அச்சகத்துக்கே விடியற்காலையில் சென்று சிறுவர்கள் வரிசை கட்டுவார்கள்.

 

வாண்டுமாமா புத்தகங்கள் 

 

தமிழில் 'காமிக்ஸ்' என்கிற விஷயத்தில், புதுமைகளைப் புகுத்தி ஹிட்டாக்கியவர் இவர்தான். இன்றைய சோட்டா பீம், பென் 10 போன்றவற்றுக்கெல்லாம் முன்னோடிகளைத் தந்தவர் வாண்டுமாமா. பலே பாலு, குஷிவாலி ஹரிஷ், அண்ணாசாமி, சமத்து சாரு எனப் பல ஜாலி கேரக்டர்களை உருவாக்கி, 'நச்' என ஒன்று, இரண்டுப் பக்கங்களில் நகைச்சுவை படக் கதைகளை உருவாக்கியவர். ஓநாய் கோட்டை, மர்ம மனிதன், பவழத் தீவு, சிலையைத் தேடி, திகில் தோட்டம், வீர விஜயன் என ஓவியர் செல்லம் அவர்களுடன் இணைந்து இவர் படைத்த காமிக்ஸ் கதைகளை இன்றைய ஆன்ட்ராய்டு தலைமுறை குழந்தைகளும் ஆர்வத்துடன் படிக்கும் வகையில் இருக்கும். 

திருக்குறளுக்குப் பொருள் அறிவதற்கும் இன்று கூகுளில் தேடுகிறோம். எல்லாவற்றையும் விரல்களால் தட்டி நிமிடங்களில் தெரிந்துகொள்கிறோம். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே, 'மருத்துவம் பிறந்த கதை', 'உலகத்தின் கதை', 'விஞ்ஞான வித்தைகள்' 'அறிவியல் சோதனைகள்' எனப் பல்வேறு தலைப்புகளில் சிறார்களுக்காக எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் எழுதியவர் வாண்டுமாமா. இதற்கான தகவல்களை எல்லாம் திரட்டியதில் கடுமையான உழைப்பு இருந்தது. எந்த அளவுக்கு எழுதினாரோ, அதற்குப் பல மடங்கு படித்தவர் அவர். 'பூந்தளிர்' என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அலுவலகத்தில் இரண்டு பீரோக்கள் நிறையப் புத்தகங்களை வைத்திருந்தார். எல்லாமே அறிவியல், பொது அறிவு சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள். தேடித் தேடி வாங்கி, தமிழ் சிறுவர் உலகுக்கு அளித்தார். 

மொத்தமாக 160 புத்தகங்கள் அவற்றில் 100 புத்தகங்கள் வரை சிறார்களுக்கானது. (இவற்றில் பெரும்பாலானவற்றை 'வானதி பதிப்பகம்' வெளியிட்டுள்ளது). தனது 90-வது வயதில் இறக்கும் வரையில் (ஜூன் 12, 2015), குழந்தைகளுக்காகவே சிந்தித்தவரை நினைத்துப் பார்ப்பதும், அவரது புத்தகங்களை இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதும் அவரது பிறந்தநாளுக்குச் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாம்போடு செல்ஃபீ!
11a.jpg\
ஜோத்பூரில் நடந்த செல்ஃபீதான் ஒருவரின் லைஃபுக்கு வைத்திருக்கிறது ஃபுல்ஸ்டாப்.  பாம்புப்பிடாரன் பாம்பை வளைத்து வித்தை காட்ட, அதோடு ஜாலி செல்ஃபீ எடுத்த பாபுராம் ஜாக்கரை திடீரென பாம்பு கொத்த, உடனே சோலி முடிந்தது. பிடாரனை அரஸ்ட் செய்த போலீஸ், பாம்புக்கு செக்யூரிட்டி தந்துள்ளது!

பிரான்சின் மானம் கால்களில்!

பாங்காக்கிலிருந்து சுகோதாய் செல்லும் பஸ்ஸில்தான் இந்த பஞ்சாயத்து. தாவோபன்யா என்ற இளைஞரின் பின் சீட்டில் பிரெஞ்சு லேடி அமர்ந்திருக்கிறார். கொஞ்சமும் டீசன்சி இல்லாமல் துவைக்காத சாக்ஸோடு தன் கால்களைத் தூக்கி இளைஞரின் சீட்டருகே தலைக்கு மேல் வைத்திருக்கிறார். தாவோபன்யா எதுவும் சொல்லவில்லை. மாறாக அதை வீடியோவாக எடுத்து முகநூலில் ஏற்றிவிட்டார்! பிரெஞ்சு மானம் வைரலாகிறது!

காருக்கு கான்க்ரீட்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம். அங்குள்ள ஒரு கடையின் பார்க்கிங்கில் நின்றிருந்த ஒரு காரை சிமெண்ட் கொட்டி சமாதி செய்ய ஒருவர் முயன்றிருக்கிறார். அவரை சிமெண்ட்டும் கையுமாகப் பிடித்த போலீஸ், விஷயம் அறிந்ததும் திகைத்தது. ஏனெனில் அவர் சமாதி கட்ட முயன்ற கார் அவரது மனைவிக்குச் சொந்தமானதாம்! தன் பெயரை நீக்கிவிட்டு, வெனி என்ற சூப்பர் மார்க்கெட் பெயரின் மூலம் 1200 டாலர்களை அவர் மனைவி சம்பாதித்தாராம். அந்தக்கோபம் இப்படி வெளிப்பட்டிருக்கிறதாம்!

நெகிழ வைத்த தத்து!

நான்கு மனிதர்கள் சேர்ந்திருப்பதே கஷ்டம். இதில் நாய், பூனை, எலி ஃப்ரெண்ட்ஷிப் சாத்தியமா? விஸ்கான்சினிலுள்ள ஆஸ்கோஸ் விலங்கு காப்பகத்தில்தான் இந்த நெகிழ்ச்சி. சாஷா என்ற நாயும், ட்வீக்ஸ் என்ற எலியும், ஜாக் என்ற பூனையும்தான் புதிய கூட்டணி. ட்வீக்ஸை மட்டும் தத்தெடுக்க நினைத்த ஒருவர், இவர்களின் பாசத்தில் நெகிழ்ந்து மூவரையும் தத்தெடுத்துவிட்டார்.

kungumam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.