Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?

மோடி போகாத ஊர்?

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிங்கபூர் லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல்  அலங்காரம்

sings%20.jpg

sing%203.jpg

sing1.jpg

 

  • தொடங்கியவர்

இசைக் கருவிகள் எதுவுமே இல்லாமல், தங்கள் குரலை மட்டுமே வைத்து, ரஹ்மானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பாடி அசத்தியிருக்கின்றனர் வோக்ட்ரானிகா குழுவினர்.

 

 

  • தொடங்கியவர்

ஜனவரி 9: ஈழத்து கவிஞர் துரைசாமி உருத்திரமூர்த்தி பிறந்த நாள் இன்று.

இவரது இயற்பெயர் - துரைசாமி உருத்திரமூர்த்தி

ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன்

இலங்கையின் தமிழ் வரலாற்றில் அற்புதப் படைப்புக்கள் இவருடையவை.

12510228_968154969899864_358030771505525

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

 

1. தோன்றும் போதெல்லாம் வலைதளங்களை அலசுதல்

நம்மில் பலருக்கும் இன்று விரல்நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால் கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு 'சர்ச்' செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும்.

இதை தவிர்க்க,  வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.

computer_vccc1.jpg



2. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது

இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2% மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.

computer_vccc2.jpg



3. மெசேஜ், ஈமெயில் ஏதும் வருகிறதா என ஓயாமல் கவனிப்பது

இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4. நமக்கு நாமே காரணம் தேடிக் கொள்ளுதல்

ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே பெரிய தடை.

computer_vccc3.jpg



5. அநாவசிய சந்திப்புகள்

ஆன்-லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் அட்வான்ஸ்டு டெக்னாலஜி காலத்தில், தேவையில்லா நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

6. ஒத்திவைத்தல்

அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்துவிடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கியப் பழக்கம்.



7.ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல் உட்கார்ந்திருப்பது

வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தை தேய்க்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலார நடப்பது,  கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

computer_vccc4.jpg



8. முக்கியத்துவம் அளித்தல்

நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

9. கண்விழித்த பிறகும் படுக்கையில் சுருண்டு கிடப்பது

படுக்கையில் 'இன்னும் 5 நிமிஷம்' என்று கேட்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம்,  கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனை என கேட்பதில் இருப்பதில்லை. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண்விழிப்பும் சிறந்ததொரு நாளைத் தரும்.

10. ஓவர் ப்ளானிங் உடம்புக்கு ஆகவே ஆகாது

லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாகப் ப்ளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கள் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.

computer_vccc5.jpg



11.திட்டமிடல் இல்லாமை

எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்றிவிட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாகிவிடும்.

computer_vccc6.jpg



12. செல்போனை கட்டி அழுதல்

LED ஸ்கிரின்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

13. மிஸ்டர்.பெர்ஃப்க்ட்

எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதைக்காட்டிலும் வேலையை  தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லாராலும் மிஸ்டர்.பெர்ஃப்க்ட் ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

computer_vccc7.jpg



மேலே உள்ள விஷயங்களை கடைபிடித்தால் உங்களது முன்னேற்றத்தை நீங்களே உணருவீர்கள்!

vikatan.com

  • தொடங்கியவர்

யேசுதாஸ் எனும் மகா கலைஞன்! - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

 

ஒரு மலையாள நடிகர் தன் பேட்டியில், முதன் முதலில் தன்னுடைய வாய்ஸ் டெஸ்ட்க்காக திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷன் சென்ற பொது அவர்களால் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர்களே இவரை இவர் இல்லத்தில் சென்று காணும் நிலை ஏற்பட்டது என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன இவர் கே,ஜே.யேசுதாஸ்.

yesu.jpg

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தவர். 2016 ஜனவரி 10 ஆம் தேதியோடு 76 வயதை நிறைவு செய்கிறார்.

முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். அந்தப்பாடலே வரவேற்புப் பெற்றதென்றாலும், எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் இவர் பாடிய விழியே கதை எழுது பாடல் இவருக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததென்று சொல்கிறார்கள்.

Image-1115.jpg

தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே உட்பட ஏராளமான இனியபாடல்களைப் பாடி தமிழ்மக்களின் வாழ்வில் பிரிக்கமுடியாதவராகவே மாறிப்போனார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் விரிகிறது.

eysu1.jpg

1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. 1965ல் இந்தியா - சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார். தமது திரை வாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.

Kaithapram%20Yesudas3_06-03-2014_16_0_2.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார். திரையிசையுடன்,கர்நாடக இசைக்கச்சேரிகள்பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்திருந்தாலும் 1977 இல் வெளியான அந்தமான் காதலி படத்தில், அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகிய இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர். இவற்றில் இரண்டாவது பாடலான நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.. திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ். இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ். சென்னையில் கடந்த 2015 ஜனவரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ். அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பைக் குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள்.

yesudas_vijay9.jpg

அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள். உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது. இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.

செயற்கரிய பல சாதனைகளுக்குப் பிறகும், தான் செய்தது பிழை என்பதை உணர்ந்து பொதுமேடையில் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தது, அவர் செய்த சாதனைகளிலேயே பெரிய சாதனை என்று பலராலும் பாராட்டுப் பெற்றார்.

vikatan.com/

  • தொடங்கியவர்

12507249_968518056530222_248822654374268


ஹிந்தி திரைப்படவுலகின் முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

உலகின் விலை உயர்ந்த கட்டிடங்கள்

 
Desktop_2689701f.jpg
 

உலகின் விலை உயர்ந்த பத்து கட்டிடங்களை அயர்லாந்தில் உள்ள கான்ட்ரல் & க்ரொவ்லி என்னும் கட்டுநர்களுக்கான அமைப்பு பட்டியலிட்டுள்ளது. கட்டுமானத்தின் நவீனத் தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது இந்தக் கட்டிடங்கள் 21 நூற்றாண்டின் கட்டுமானச் சாதனைகளுக்கான சாட்சியங்களாகவும் காட்சி தருகின்றன.

இஸ்லியர்களின் புனிதத் தலம் இருக்கும் சவுதி அரேபியாவின் அப்ரஜ் அல் பய்ட் என்னும் கட்டிடம்தான் உலகின் மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்ட கட்டிடம். 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012-ல் முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் 1,500 கோடி அமெரிக்க டாலர் செலவானது. சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் என்னும் கட்டிடம் இதற்கு அடுத்த இடம் வகிக்கிறது. இது 800 கோடி அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது. செப்டம்பர் 11 தாக்குதலில் அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிடம் இரட்டைக் கோபுரம் தரைமட்டமானது.

அமெரிக்கா மீண்டும் அதே இடத்தில் ஒற்றைக் கோபுரமாக வர்த்தக மையக் கட்டிடப் பணியில் 2006-ம் ஆண்டு தொடங்கி 2013-ல் முடித்தது. 2014-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்தக் கட்டிடம், 380 கோடி செலவில் கட்டப்பட்டது. இவை அல்லாது சீனா, லாஸ்வேகாஸ், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு கட்டிங்களும் இந்தப் படியலில் இடம் பிடித்துள்ளன.

one_world_2689705a.jpg

 

marina_2689706a.jpg

 

vegas_2689702a.jpg

 

sentosa_2689703a.jpg

 

parliament_2689704a.jpg

 

macau_2689707a.jpg

 

emirate_2689708a.jpg

 

dreams_2689709a.jpg

 

cosmo_2689711a.jpg

 

al_bayath_2689712a.jpg

thehindu.com
  • தொடங்கியவர்

1622046_1052504154808374_486108870566119


ஜனவரி 10: நடிப்பால் மிரட்டிய ஆர். எஸ். மனோகர் நினைவு தினம் இன்று

 
  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

விரல் பொருள் 

கட்டைவிரலை உயர்த்திக் காட்டி சவாலையும்

கீழ்நோக்கி கவிழ்த்துக் காட்டி தோல்வியையும்

காட்டுகிறான் ஒருவன்.

ஒற்றைவிரலொன்றையும் இரட்டை விரலையும் காட்டி

உபாதைகளைத் தெரிவிக்கிறான் சிறுவன் ஒருவன்.

ஆட்காட்டி விரலை எச்சரிக்கவும்

இருவிரல் காட்டி வெற்றியையும் காட்டுகிறான் ஒருவன்.

கட்டை விரலை காதுக்கும்

சுண்டு விரலை வாயருகிலும் வைத்து

தொலைபேசியில் பேசுவதை நினைவூட்டுகிறான் ஒருவன்.

நடுவிரலைக் காட்டி எதிரியைக் கோபமூட்டுகிறான் ஒருவன்.

ஐந்து விரல்களை இட வலமாக ஆட்டி

பிரிவையும் அன்பையும் தெரிவிக்கிறான் ஒருவன்.

வாயில் உள்ளங்கையை அழுத்தி

எல்லா விரல்களையும் எதிர்த்திசை நீட்டி

காற்றில் முத்தங்களைப் பறக்கவிடுகிறான் ஒருவன்.

விரல்களனைத்தையும் இறுக்கமாக மூடி

கையுயர்த்தி ஒற்றுமையை உணர்த்தச்சொல்கிறான் ஒருவன்.

அவற்றை உள்ளுக்குள் பேசி மகிழ்கிறான்...

பக்கத்தில் இருந்து பார்க்கும்

கரங்கள் இழந்த ஒருவன்.

vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

கே.ஜே ஜேசுதாசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.என் மனம் கனிந்த அபிமான பாடகர்.நீடுடி காலம் நோய்,நொடி இல்லாமல் வாழப் பிரார்த்திக்கிறேன்

  • தொடங்கியவர்

 

 

சிரிக்க வைப்பவர்கள் வாழ்வின் பின்னால் துன்பம் நிச்சயம் இருக்கும்!

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த உலகே இருக்குது தம்பி!
உன் எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும்!

  • தொடங்கியவர்

 

கோலிவுட் ஜாலி ஜல்லிக்கட்டு: தமிழர்களின் வீர விளையாட்டு... ஜல்லிக்கட்டு. திரையில் நாயகர்கள் பேசிய டயலாக்குகளுக்கு மிகவும் பொருத்தமான காளைகளைத் தேர்ந்தெடுத்து, இதோ உங்களுக்காக நகைச்சுவை விருந்து படைக்கிறது, சினிமா டயலாக் ஜல்லிக்கட்டு!

  • தொடங்கியவர்

50 டைனோசர்களை ரூ. 4 லட்சம் செலவு செய்து வாங்கிய சிறுவன்!

 
ப்ளே ஸ்டோரில்,  கேம்கள் ஏதாவது பணம் கட்டுங்கள் என்றால் அதனை விட்டுவிட்டு இலவச கேம்களை பர்சேஸ்  செய்பவர்கள் மத்தியில், இங்கிலாந்தின் சஸெக்ஸ் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன்,  தனது தந்தையின் ஆப்பிள் ஐபேடில்,  ஜூராஸிக் பார்க் கேமை அவருக்கு தெரியாமல் டவுன்லோட் செய்துள்ளான். அதற்காக 3911 பவுண்ட் செலவு செய்துள்ளான். 
 
Mohamed_Shugaa_3537832b.jpg
 
சிறுவனின் தந்தை முகமது ஸுஹா அலுவலகத்தில் இருக்கும் போது,  தனது வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளதாக வந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தனது கணக்கை செக் செய்த போது,  அதில் ஜூராஸிக் பார்க் கேமில் விதவிதமான டைனோசர்களை வாங்கியதாக கூறி,  அவரது கணக்கில் இருந்து  3911 பவுண்ட்,  இந்திய ரூபாயில் சுமார் 4 லட்ச ரூபாய், டெபிட் செய்யப்பட்டது தெரியவந்தது.
 
50 விதமான டைனோசர்களை வாங்கியுள்ள சிறுவனுக்கு,  தனது தந்தையின் பாஸ்வேர்டு தெரியும் என்பதால் ஈஸியாக அனைத்தையும் வாங்கியுள்ளான். அதில் மொத்தம் 6 லட்சம் ரூபாய் வரை வாங்க முடியுமாம். 'இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால்,  மொத்தமாக 6 லட்சம் ரூபாயையும் செலவழித்திருப்பான் எனது மகன்' என்று அலறுகிறார் தந்தை.
 
jurassic_3537834n.jpg
 
இது தொடர்பாக ஆப்பிளிடம் முறையிட்ட சிறுவனின் தந்தை,  ' நான் என் இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க போகிறேன். இதை ஏன் என் எனக்கு அறிவுறுத்தவில்லை?'  என்றதற்கு ஆப்பிள், 'உங்கள் போனில் பாதுகாப்பு வசதிகளை அளித்துள்ளோம். அதனை நீங்கள் பயன்படுத்தவில்லை' என கூலாக தெரிவித்துள்ளது.
 
இறுதியில் 4 லட்சம் ரூபாய் போனது தான் மிச்சம். இது போன்று குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது கட்டாயம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் இதோ....
 
1. பாஸ்வேர்டுகளை சேமித்தோ, உங்கள் குழந்தைகளுக்கு தெரியும்படியோ வைக்காதீர்கள்.
 
2. குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது ஏரோ ப்ளேன் மோட், கிட்ஸ் மோட் ஆகியவற்றில் கொடுங்கள்.
 
3. செல்போனில் பர்சேஸ் ஆப்ஷனை மறைத்து வையுங்கள்.
 
4. ஆப் லாக்கர்களை பயன்படுத்தி,  பணம் செலவழிக்கும் விஷயங்களுக்கு உங்கள் அனுமதி கேட்குமாறு செட் செய்து வைத்து கொள்ளுங்கள்.
 
5. குழந்தைகள் அடம்பிடித்தால் ஆஃப் லைன் கேம்களை விளையாட அனுமதியுங்கள்.
vikatan.com
  • தொடங்கியவர்

ஜாகிங் 10 பலன்கள்!

 

 

1%282%29.jpgமனநலம்

ஜாகிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.

உடல் எடை குறைகிறது2%282%29.jpg

ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, ஃபிட்டான தோற்றம் கிடைக்கிறது.

3%282%29.jpgநுரையீரல்

நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

சீரான ரத்த அழுத்தம்4%282%29.jpg

ஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்தக் குழாய்கள் ஃபிட்டாக இருக்கவும், ரத்த ஓட்டம் சீராகப் பாயவும் வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.

5%282%29.jpgவலிமையான நோய் எதிர்ப்பு மண்டலம்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.

p34a.jpg

எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது6%282%29.jpg

ஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

7%282%29.jpgஉடல் வலிமை  அதிகரிக்கிறது

கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் (லிகமென்ட்) வலிமை பெறுகின்றன.

வலுவான மூட்டுக்கள்8%282%29.jpg

எலும்புகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களை வலிமையாக்குகிறது. இதனால், சாதாரண விபத்துக்களினால் ஏற்படும் எலும்பு முறிதல், மூட்டுப் பிரச்னை போன்றவை தவிர்க்கப்படுகின்றன.

9%281%29.jpgஆளுமை அதிகரிக்கிறது

ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாகிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சர்க்கரை நோய்கான வாய்ப்புக் குறைகிறது10%281%29.jpg

ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.-

.vikatan.com

  • தொடங்கியவர்
‘நீங்கள் அழ­காக இருக்­கி­றீர்கள்’என்ற வாா்த்தையின் பிரதிபலிப்புகள்
 

140271.jpg‘நீங்கள் அழ­காக இருக்­கி­றீர்கள்’ என யாரா­வது உங்­க­ளிடம் கூறினால் உங்கள் பிர­தி­ப­லிப்பு எப்­ப­டி­யி­ருக்கும்? 

 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த  கலைத்­துறை மாண­வி­யொ­ருவர் இது தொடர்­பாக சமூக பரி­சோ­த­னை­யொன்றை நடத்­தி­யுள்ளார். 

 

18 வய­தான ஷியா குளோவர் எனும் இம்­மா­ணவி, தனது பாட­சா­லையின் சக மாணவ மாண­விகள், ஆசி­ரி­யர்­களை கெம­ரா­வுக்கு முன்னால் நிற்க வைத்து, படம்­பி­டிப்­ப­தற்குத் தயா­ரா­ன­போது “நான் கண்ட அழ­கான விட­யங்­களை படம்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்­கிறேன்” என அவர்­க­ளிடம் கூறினார்.

 

இந்த வார்த்­தை­களைக் கேட்ட பெரும்­பா­லானோர் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­வது அவர்­களின் முகத்தில் தெளி­வாகத் தெரிந்­தது. இக்­காட்­சி­களை ஷியா குளோவர் வீடி­யோவில் பதி­வு­செய்து இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

 

சிகாக்­கோவைச் சேர்ந்த ஷியா குளோவர் தனது வகுப்பின் ஒப்படைத் திட்டமொன்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

140272.jpg

 

 

 

.

 

 

 
 http://metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 11

 

641varalaru---bangladesh.jpg1055 : கிழக்கு ரோமானிய இராஜ்­ஜி­ய­மான பைசண்டைன் பேர­ர­சி­யாக தியோ­டோரா  முடி சூடினார்

 

1569 : இங்­கி­லாந்தில் முத­லா­வது லொத்தர் சீட்­டி­ழுப்பு பதி­வா­கி­யது.

 

1693 : சிசி­லியில் எட்னா எரி­மலை வெடித்­த­தை­ய­டுத்து இடம்­பெற்ற பாரிய பூகம்பம், சிசிலி மற்றும் மோல்ட்­டாவின் பல பகு­தி­களை அழித்­தது.

 

1779 : மணிப்­பூரின் மன்­ன­ராக சிங்-தாங் கோம்பா முடி­சூ­டினார்.

 

1782 : பிரித்­தா­னியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலை­மையில் திரு­கோ­ண­ம­லையைக் கைப்­பற்­றினர்.

 

1787 : யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்­கோள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

 

1851 : சீனாவில் குயிங் அர­சிற்­கெ­தி­ராக ஹொங் க்சியூகான் என்­பவர் தலை­மையில் தாய்பிங் என்ற இரா­ணுவக் குழு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அல­பாமா ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இருந்து வில­கி­யது.

 

1879 : ஆங்­கி­லோ – ­சூளு போர் ஆரம்­ப­மா­னது.

 

1878 : பால் முதற்­த­ட­வை­யாக போத்­தலில் அடைத்து விற்­கப்­பட்­டது.

 

1922 : நீரி­ழி­வுக்கு மருந்­தாக மனி­தரில் இன்­சுலின் முதன்­மு­தலில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் நெதர்­லாந்­துக்கு எதி­ராக ஜப்பான் போர் பிர­க­டனம் செய்­தது. 

 

1942 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலா­லம்­பூரைக் கைப்­பற்­றி­யது.

 

1943 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஐக்­கிய இராச்­சி­யமும் சீனாவின் மீதான நில உரி­மையை இழந்­தன.

 

1946 : என்வர் ஹோக்ஸா அல்­பே­னி­யாவின் சர்­வா­தி­கா­ரி­யாகத் தன்னை அறி­வித்து அதனைக் குடி­ய­ர­சாக்­கினார்.

 

1962 : பெருவில் இடம்­பெற்ற சூறா­வளி கார­ண­மாக 4,000 பேருக்கு மேல் இறந்­தனர்.

 

1972 : கிழக்கு பாகிஸ்தான் பங்­க­ளாதேஷ் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது.

 

1998 : அல்­ஜீ­ரி­யாவில் நூற்­றுக்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

2007 : செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவு­கணைச் சோத­னையை சீனா நடத்தியது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=641#sthash.Szn5Jwo2.dpuf
  • தொடங்கியவர்

 

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனி வேட்டி கட்டி சூப்பராக சென்னை டப்பாங்குத்து ஆட்டம் போட்டு கலக்குகிறார்.

அவருடன் இன்னொரு பிரபலமான நடிகர் பிரவு தேவாவும் டப்பாங்குத்து ஆட்டம் ஆடி கலக்குகின்றார்

  • தொடங்கியவர்

'நான் முயற்சிப்பதை நிறுத்தியதே இல்லை': டிராவிட் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

 

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்பட்ட டிராவிட் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே:

ஓய்வு பெற்ற பொழுது டிராவிட் பேசியது

கிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் விடை  கொடுக்கிறேன்! -

driavind_vc2.jpg



பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் டிராவிட் குறிப்பிட்டது:

சமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிகெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது... இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்...ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.

பிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு குறித்து:

அவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.

driavind_vc1.jpg



நாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு!

பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய 'காத்திருப்பு' பற்றிய உரை:

என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டுஎன்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,

driavind_vc4.jpg



“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டுஅது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

திலீப் சர்தேசாய் நினைவுச் சொற்பொழிவில் பேசியதன் சுருக்கம்:

என்னுடைய கிரிக்கெட் காதல் என் தந்தை என்னிடம் சொன்ன கிரிக்கெட் சாகசங்களில் இருந்தே துவங்கியது. சுனில் கவாஸ்கர் இருபத்தி ஒரு வயதில் தெளிவான ஆட்டம், கச்சிதமான நுட்பம், நேரான மட்டைப்பிடிப்பு ஆகியவற்றோடு தன்னுடைய முதல் தொடரிலேயே நான்கு சதங்கள், மூன்று அரைச் சதங்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்ததை அவர் கண்கள் மின்ன சொல்வார்.

எனக்கு ஒரு தாராப்பூர் கிடைத்ததைப் போலச் சச்சினுக்கு ராம்காந்த் அச்ரேகர் இருந்தார். சச்சினை தன்னுடைய பைக்கின் பின்புறம் வைத்துக்கொண்டு அவரை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஆடவைத்த கதை எல்லாம் எங்களுக்குள் சற்று பொறாமையை உண்டு செய்தன. இவர்கள் எல்லாம் எதையும் கைமாறாக எதிர்பார்க்கவில்லை என்பதே ஆச்சரியம் தருகிறது. பெங்களூரில் ஒட்டுமொத்த வலைப்பயிற்சியின் பொழுதும் நின்றுகொண்டு, ஓடிக்கொண்டு, கிரீசை தாண்டி காலை வைக்கும் பந்துவீச்சாளரின் தலைமுடியை பற்றும் பாசாக்கார துரைசாமியை காணலாம். அவருக்கு வயது அதிகமில்லை, எண்பது தான்! நாற்பது வருடங்களாக டெல்லியில் கிரிக்கெட்டை ஒரு தவமாகப் பயிற்றுவித்து வரும் தரக் சிங்கை நினைத்துப் பார்க்கிறேன்.

driavind_vc5.jpg



எங்கள் காலத்தில் வீரர்களிடையே இருந்த உறவை சொல்லியே ஆகவேண்டும். இருபத்தி இரண்டு மணிநேரம் கழிப்பறைக்கு அருகில் ரிசர்வ் செய்யப்படாத இருக்கைகளில் ரயில் பயணங்களை அணியினரோடு மேற்கொண்டு இருக்கிறேன். கர்நாடக ரஞ்சி அணி இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிப் பெட்டியில் பயணிக்கும். எங்களிடம் ஐபாட்கள், ப்ளே ஸ்டேஷன்கள், பிறரிடம் பேசாமல் இருக்கச் செய்யும் வாக்மேன்கள் இல்லை. சீட்டு விளையாட்டு, டம்ப்ஷாரட்ஸ், இன்றைக்கு நீங்கள் கேட்கத் தயாராக இல்லாத பாடல்களால் நிறைந்த பயணங்கள் அவை.

எண்ணற்ற மூத்தவர்களிடம் இப்படிப்பட்ட ரயில் பயணங்களில் நாங்கள் பல்வேறு பாடங்களைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு புது நுட்பமும், பாணியும் புரிந்திருக்கும். ..மும்பை ஆட்டக்காரர்களை 'khadoos' என்பார்கள். அதை எப்படி மொழிபெயர்ப்பது?அழுத்தமானவர்கள்? விடாக்கண்டர்கள்? தலைவணங்காதவர்கள்? சலிக்காதவர்கள்? அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல்? இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்?

driavind_vc6.jpg



இந்தச் சொல்லை மொழிபெயர்க்க முடியாதது போல, ஒரு பிள்ளை இந்தச் சொல் குறிப்பதைப் போல மாற நாம் பாடம் நடத்த முடியாது. அதை இதற்கு முன் ஆடிய அனைத்து மும்பை ஆட்டக்காரர்களின் 'khadoos' தன்மையைப் பற்றிப் பகிர்வதாலே சாத்தியம். இரு வகையான பந்து வீச்சாளர்களை இடது, வலது என்று மாறி மாறி பேட்டிங் செய்து எதிர்கொண்ட சுனில் கவாஸ்கரின் சாகசத்தைக் கட்டுரைகளும், ஸ்கோர்கார்டுகளும் சொல்லிவிடாது. பேட்டிங்கில் அளப்பரிய திறனை வாய்மொழி பாரம்பரியம் மூலம் ஒரு இளைஞன் கேட்டறியும் பொழுதே இதனைப் பெறமுடியும்.

வாசு ப்ரஞ்சாபே எனும் மும்பையின் கிரிக்கெட் கதைசொல்லி ஹனீப் முகமது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. பிராபோர்ன் மைதானத்தில் ஹனீப் மட்டையால் முன்னோக்கி வந்து செய்யும் தடுப்பின் அற்புதமான சப்தம் சர்ச்கேட் வரை எதிரொலிக்கும். அதைக் கேட்டதும் அப்படிப்பட்ட தடுப்புக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

சர்தேசாய் இறக்கின்ற நாள் அன்றுகூட லெக்ஸ்டெம்ப் நோக்கி வரும் ஷார்ட் பாலை எப்படி நான் எதிர்கொள்வது என்று சிசிர் ஹட்டங்காடியிடம்மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தார் என்று எண்ணுகிற பொழுது விதியோடு ஒரு போர் நடக்கிற பொழுதும் கிரிக்கெட் அவரின் ரத்தத்தை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது என்று சொல்லத்தோன்றுகிறது.

இந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன...இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது...அதை மேலும் வளப்படுத்துங்கள்.

vikatan.com

12487079_969059533142741_590255059740167

உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் கனவான் ஆட்டக்காரர்களில் ஒருவருமான 'இந்தியப் பெருஞ் சுவர்' ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

5476_1053248698067253_100125853474428601

ஜனவரி 11: இன்சுலின் முதல் முதலில் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922)

இன்று உலகம் முழுவதும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று தான்

  • தொடங்கியவர்

12360100_665490586886820_791488953876729

12507155_665490596886819_663760590127338

12523065_665490583553487_401733331427404

943933_665490620220150_70230821351863941

 

10649467_665490623553483_140125503849205

12417679_665490626886816_672924238108933

12510264_665490656886813_718528232845108

12418007_665490663553479_866344803142926

12512824_665490680220144_682515635729342

12410537_665490693553476_235125384245760

12549111_665490700220142_127245489255729

12552863_665490726886806_205121579881184

பெல்ஜியம் புகைப்படக் கலைஞர் எடுத்த இந்த படங்களுக்கு 'Land of Nothingness' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இந்தப் புகைப்படங்கள் எடுத்த இடம்
நமீபியா

vikatan.com

  • தொடங்கியவர்

 

12466143_969180606463967_531971515463078


ஜெமினியில் அறிமுகமாகி கவர்ச்சியால் கலக்கிய நடிகை கிரணின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

விவேகானந்தர் கேட்ட அரிய கேள்விகளும் - ராமகிருஷ்ண பரமஹம்சர் பதில்களும்

 

அசாதாரமன மனிதராக கருதப்படும் விவேகானந்தருக்கும் , சில சமையங்களில் அறிவுரைகள் தேவைபட்டது. விவேகானந்தரின் கேள்விகளும் , அதற்கு ராமகிருஷ்னரின் விளக்கங்களும் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. அதற்கு அவரின் பிறந்தநாளை விட சிறந்தநாள் ஒன்று கிடைக்காது.

வி: எனக்கு ஓய்வு நேரமே கிடைக்கவில்லை . வாழ்க்கை பரபரப்பாக மாறிவிட்டது.

ரா: செயல் உன்னை ஆக்கரமித்துக்கொள்ளும் . ஆக்கம் உன்னை விடுதலையாக்கும்.

வி: இப்போது ஏன் வாழ்க்கை சிக்கலானதாக மாறிவிட்டது?

ரா: வாழ்க்கையை ஆராய்வதை நிறுத்து. ஆராய்வது சிக்கலை ஏற்படுத்தும். அதை விட்டுவிடு.

வி: பிறகு ஏன் நாம் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்கிறோம்?

ரா:வருத்தப்படுவதே உனக்கு வேலையாகிவிட்டது. ஆகையால் மகிழ்ச்சியை இழக்கிறாய்.

வி: நல்ல மனிதர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்?

vivaka_sdf1.jpg



ரா: உரைக்காமல் வைரத்தை ஒளிரச்செய்ய முடியாது. எரிக்காமல் தங்கத்தை சுத்தப்படுத்தமுடியாது. மனிதர்கள் சோதிக்கப்படுகிறார்கள் ,வருத்தப்படுவதில்லை. அந்த சோதனை மூலம் வாழ்வை செம்மைப்படுத்திக்கொள்கிறார்கள்.

வி: சோதனைகள் உபயோகமானது என்கிறீர்களா?

ரா: ஆம். எல்லா செயல்களிலும், அனுபவமே சிறந்த ஆசான்.முதலில் தேர்வை வைத்து பின் பாடம் கற்பிக்கும்.

வி: பற்பல சோதனைகள் வந்தால் நாம் வழியறியாமல் நிற்போமே?

ரா: உனக்கு வெளியே பார்த்தால் ,எங்கு செல்கிறாய் என்று தெறியாது. உன்னுள் உற்று நோக்கு. கண்கள் ஒளியைக் காட்டும். இதையம் வழியைக் காட்டும்.

வி: சரியான பாதையில் செல்வதை விட தோல்வி தரும் பயமே அதிகாமாக கவலை கொள்ள வைக்கிறது.

ரா: வெற்றி தோல்வி என்பது அடுத்தவர் பார்வையை பொறுத்ததே. நீ பெறும் திருப்தியே உன்னுடன் நிலைக்கும்.

வி: கடினமான காலங்களில் எப்படி நான் உத்வேகத்துடன் செயல்படுவது?

ரா: எவ்வளவு தூரம் போக வேண்டும் என்ரு பார்க்காதே , எவ்வளவு தூரம் கடந்துவந்திருக்கிறாய் என்பதை எண்ணி பெருமைகொள். இருப்பதை ரசி , இல்லாததை எண்ணி கவலைக் கொள்ளாதே.

வி: மனிதர்களின் எந்த குணம் உன்களுக்கு ஆச்சர்யம் தருகிறது?

ரா: கஷ்டம் வரும்போது ," எனக்கு மட்டும் ஏன் இப்படி?" ,என்று புலம்பும் மனிதர்கள், சந்தோஷமும் செழிப்பும் வரும்போது அப்படி செய்வதில்லை.

வி: வாழ்க்கையின் முழுமையை நான் எவ்வாறு அடைவது?

ரா:  உன்னுடைய கடந்த காலத்தை வருந்தாமல் ஏற்றுக்கொள். உன்னுடைய நிகழ்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள். உன்னை வருங்காலதிற்காக வருந்தாமல் தயார்படுத்திக்கொள்.

வி: கடைசி கேள்வி. சில நேரங்களில் எனது பிரார்த்தனைகள் நிறைவேரவில்லை என்று தோன்றுகிறது.

ரா: நிறைவேராத பிரார்த்தனைகளே கிடையாது. பயத்தை எறித்து , நம்பிக்கையை விதை.வாழ்க்கை என்பது அறியப்படவேண்டியது , ஆராயப்படவேண்டியதல்ல. நம்பிக்கை கொள். வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை அற்புதமானது.
 
ஆம் . வாழ்க்கை அற்புதமானதுதானே..

vikatan.com

  • தொடங்கியவர்

 

கீழாடைக்கு விடைகொடுத்தது வியன்னா: உள்ளாடையில் ஒரு உல்லாச ஊர்வலம்
=======================
கீழாடை அணியாமல் உள்ளாடை ஊர்வலமாக சுரங்க ரயிலில் செல்லும் வருடாந்த நாளை வியன்னா வாசிகள் விமரிசையாகக் கொண்டாடினார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கில் தொடங்கிய வழக்கம் இது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12495182_1022294481162899_32898478966154

12507666_1022294474496233_80577752047715

ரெஜினா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.