Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்!' - 'கால்கட்டு' டீம்!

 

யூ - டியூபில் கொட்டிக்கிடக்கும் வெப் சீரிஸ்களிலிருந்து கொஞ்சம் தனித்து நிற்கிறது 'கால்கட்டு' வெப்சீரிஸ். கணவன் - மனைவி என வெறும் இரண்டே கதாபாத்திரங்கள்தான். அவர்களுக்கு இடையேயான காதல், மோதல், ஊடல் என ஜென் இஸட் ஜெனரேஷனின் உறவை, காதலை எந்த வெளிப்பூச்சும் பூசாமல் அப்படியே பறிமாறுகின்றனர். மழைத்தூரல் நின்ற ஒரு வெயில் நாளில் அந்த வெப்சீரிஸின் நாயகன், நாயகி, இயக்குநரோடு நடந்த சந்திப்பு.

கால்கட்டு

 

“ஆரம்பத்துல 'கால்கட்டு' வெப்சீரீஸ் ஐடியாவை நண்பர்கள்கிட்ட சொன்னப்போ, 'ஏன் கணவன் மனைவி பத்தி பேசுறீங்க? வேற ட்ரை பண்ணலாமே'ன்னு சொன்னாங்க. ஆனா யோசிச்சுப்பார்த்தா இங்க பேச்சுலர் வாழ்க்கையை பதிவு பண்ணுன சீரிஸ்கள் நிறைய இருந்தது, இல்லைன்னா லிவிங் டுகெதர், ஆஃபீஸ் வாழ்க்கைன்னு காமிக்கிற சீரிஸ்கள் நிறைய இருந்தது. ஆனா கணவன் மனைவிக்கு இடையிலான உறவை, ஊடலை யாரும் பதிவு பண்ணுன மாதிரி தெரியல, அதனால இதையே பண்ணலாம்னு உறுதியா இருந்தேன். சீரிஸுக்கு கிடைச்ச வரவேற்பை பார்க்குறப்போ நாம சரியாத்தான் வந்துருக்கோம்னு ஒரு திருப்தி இருக்கு'' என ஆரம்பிக்கிறார் கால்கட்டு வெப்சீரிஸ் இயக்குநர் வெற்றி. 'ப்ளாக் பசங்க'ன்னு பேரு வச்சுட்டு வெள்ளையா ஹீரோயின் புடிக்கிறோமேன்னு விமர்சனம் வருமான்னு யோசிச்சேன். ஆனா, சத்யாவை யாரும் அப்படி பார்க்கலை!' என சத்யாவுக்கு லீட் கொடுக்க சத்யா தொடர்கிறார்.

''என் பேரு சத்யா. சொந்த ஊரு கரூர். இப்போ சென்னையில சாஃப்ட்வேர் இஞ்சினியரா வேலை பார்க்குறேன். எனக்கு டைரக்டர் வெற்றியை இந்த சீரிஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே தெரியும். அவரோட ஏற்கெனவே ஒரு குறும்படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். முதல் எபிசோடு வந்தப்போ, ஆபிஸ்ல எல்லாரும் 'நடிப்பே வரல உனக்கு''னு கிண்டல் பண்ணாங்க' என சத்யா சொல்ல,  'இதுவரை 12 எபிஸோட் முடிஞ்சுருச்சு இப்போ மட்டும் நடிப்பு வந்துருச்சா?' என நடுவே புகுந்து கலாய்க்கிறார் ஹீரோ பிரதீப்.

'ஷூட் பண்ற ஒவ்வொரு நாளுமே செம்ம காமெடியா இருக்கும். இயல்பிலே யாராவது என்னைத் திட்டுனாக் கூட சிரிச்சுக்கிட்டே நிக்கிற பொண்ணு நான். பாவம் இந்த கேரக்டர்ல பிரதீப்பை கோபத்தோட திட்டுறமாதிரி தான் பெரும்பாலும் இருக்கும். இந்த உலகத்துலேயே சிரிப்பை கன்ட்ரோல் பண்ணிகிட்டு கோபப்பட்ட ஒரே ஆள் நானாத்தான் இருக்கும்' என சொல்ல, 'என்ன இருந்தாலும் யூ-டியூப்ல வர்ற பெரும்பான்மையான கமென்ட்டுகள் சத்யாவைப் பத்திதான் இருக்கு' என இடைமறிக்கிறார் இயக்குநர் வெற்றி.

'சொல்லுங்க வெற்றி! உலகத்துல எவ்வளவோ நடிகர்கள் இருக்கும்போது நீங்க ஏன் பிரதீப்பை இந்த சீரிஸுக்கு ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?' என சத்யா வெற்றியை கேட்க... 'பிரதீப்பை நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த காலத்துல இருந்தே தெரியும். ஐடில வேலை, நல்ல சம்பளம்னு இருந்த பையன், சினிமாவுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட கனவுகள் நோக்கி ஓடிக்கிட்டு இருக்கார். சீக்கிரமே அவருக்கான இடத்தையும் பிடிப்பார்னு நம்புறேன்' என லைட்டாக சென்டிமென்ட் ஏரியாவுக்குச் செல்கிறார்.

'சரி ஜி ரொம்ப பீல் பண்ணாதீங்க' என அவரை கூல் செய்யும் பிரதீப் தன் கதையை சொல்லத் தொடங்குகிறார். 'நமக்கு சொந்த ஊரு மதுரை. கலை மீதுள்ள ஆர்வம் சின்ன வயசுல இருந்தே இருக்கிறதுதான். ஐடில வேலை. சென்னை வந்த பிறகு சினிமா வாய்ப்புக்காக ஓட ஆரம்பிச்சேன். வேலை, சினிமா ரெண்டையும் ஒரே நேரத்துல பேலன்ஸ் பண்ண கஷ்டமா இருந்துச்சு, வேலையை விட்டுட்டு கூத்துப்பட்டறையில சேர்ந்தேன். அங்கே இருந்து நிறைய  குறும்படங்கள் பண்ணேன். அப்படித்தான் வெற்றியோட அறிமுகமும் கிடைச்சது' என முடிக்கிறார்.

சரி, இயக்குநர்கிட்ட ஒரு கேள்வி! மொத்தமா இந்த வெப்சீரிஸ் அனுபவம் எப்படி இருந்தது?

டிஜிட்டல் மீடியாவைப் பொறுத்தவரை நம்ம கன்டென்ட் ஸ்ட்ராங்கா இருந்தாப் போதும். எங்க டீம்ல கேமராமேன், எடிட்டர் எல்லாரும் சிறந்த அவுட்புட் கொடுக்கணும்னு நினைக்கிற ஆளுங்க. அதனால ரிசல்ட்டும் சிறப்பா வந்திருக்கு. எங்க எல்லாருக்குமே சினிமாதா அல்டிமேட் இலக்கு. அதை நோக்கித்தான் ஓடிகிட்டு இருக்கோம். இந்த சீரிஸுக்கான கதையையே சினிமா ஸ்க்ரிப்ட்டா மாத்துற முயற்சில இருக்கேன் இப்போ! அது தவிர வேற ரெண்டு ஸ்க்ரிப்ட்டும் ரெடியா இருக்கு! அதுலயும் சத்யா, பிரதீப் இருப்பாங்க. ஏன்னா நாங்க எல்லாரும் ஒரே குடும்பமாச்சே!' என க்ரூப்பாக போஸ் தருகிறார் வெற்றி. 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி (Video)


மனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி (Video)
 

மனிதர்களைப் போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டுக் குளியலறையில் கண்ட விநோதமான இந்தக் காட்சியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்க்கும் சிலர் இது கிராஃபிக்ஸாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

வேறு சிலர் எலி தனது உடலில் உள்ள சோப்பு நீரைத் துடைக்க முயன்ற போது அது குளிப்பது போல் தெரிகின்றது என கூறுகின்றனர்

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம்!!!

 

 

அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தனது ஊழியர்கள் பணியாற்ற புதிய அலுவலகத்தை   சிறிய ‘அமேசான் காடு’ போன்ற அமைப்பில் உருவாக்கியுள்ளது.

online_New_Slide__3_.jpg

அமேசான் நிறுவனம்  நிறுவனம் தனது அலுவலகத்தில் சிறிய அமேசான் காட்டை  உருவாக்கியுள்ளது. உள்ளே நிறைய மரங்களை நட்டு இருக்கிறது.

Amazon-open-different-style-office-lates

Amazon-open-different-style-office-lates

இந்த அலுவலகத்தில் 3 குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும். ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் 800 பேர் வரை தங்க முடியும். இதற்குள் பெரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆங்காங்கே சிறு சிறு அருவிகளும் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் காட்டுக்குள் இருக்கும் உணர்வு ஏற்படும்.

Amazon-open-different-style-office-lates

Amazon-open-different-style-office-lates

Amazon-open-different-style-office-lates

இந்த பணிக்காக மொத்தம் 600 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து முக்கிய படங்களின் ஆர்ட் டைரக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 வருடங்களாக அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வடிவமைத்துள்ளனர்.

Amazon-open-different-style-office-lates

 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

 
 

        
தனக்கென ஒரு கனவு பைக் வாங்குவதே பெரும்பாலானோரின் லட்சியம். பைக் நமது என ஆகும்போதுதான் உண்மையான பிரச்னை தெரியும். யானையை வாங்கிவிடலாம். ஆனா அதுக்குத் தீனி போடறதுதான் கஷ்டம் என்பது போல பைக்கை வாங்கிட்டாலும் அதுக்கு பெட்ரோல் போடுவதுதான் மிகப் பெரிய கஷ்டம். இந்தப் பிரச்னைக்காகத் தீர்வு ஒன்றை யோசித்திருக்கிறார் பிரியதர்ஷினி.
ஒடிசாவைச் சேர்ந்த தேஜஸ்வானி பிரியதர்ஷினி, 14 வயது மாணவி. சமீபத்திய இவரின் புதுமையான கண்டுபிடிப்பு அனைத்து அறிவியலாளர்களையும் இவரின் பக்கம்  திருப்பியுள்ளது. காற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இரு சக்கர வண்டிதான் பிரியதர்ஷினியின் கண்டுபிடிப்பு.

ஆப்பிள் பூமியில் விழுந்ததைப் பார்த்து நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது போல, பிரியதர்ஷினி Air - gun உபயோகிக்கும் முறையைப் பார்த்த போது இக்கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒருநாள், சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் ஒரு சாதாரண Air - gun வைத்து சைக்கிள்களில் உள்ள முடிச்சுகளை அகற்ற எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறார். அப்படி என்றால் ஒரு Air - gun - னால், மிதிவண்டியை ஓட வைக்க முடியும் என்ற எண்ணம் மனதில் எழ தன் கருத்தை தந்தையிடம் கூறியிருக்கிறார் பிரியதர்ஷினி. இவரின் தந்தை நட்வர் கோசாயத் (Natwar Gocchayat) மகளின் எண்ணம் ஈடேறுவதற்காகவும் ,  ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு உறுதுணையாகவும்  இருந்துள்ளார். இருவரும் மிதிவண்டியை வைத்து பல ஆராய்ச்சிகளை வீட்டிலேயே  மேற்கொண்டுள்ளனர். முதலில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சி இவர்களுக்கு வெற்றியைத் தந்தது. 

 

சைக்கிள்

காற்று மிதிவண்டியின் அமைப்பு மற்றும் செயல்படும் முறை :

காற்றை நிரப்புவதற்கு ஏற்றவாறு சிலிண்டர் (Air tank) ஒன்று மிதிவண்டியின் பின்புறம் சைக்கிள் கேரியரில் அமைந்துள்ளது. இந்த சிலிண்டரில் ஒரு துவக்க குமிழ், அளவிடும் டயல் மற்றும் ஒரு பாதுகாப்பு வால்வும் உள்ளது. பாதுகாப்பு வால்வு அதிகப்படியான காற்றை சிலிண்டரிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கிறது. 

துவக்கக் குமிழி  திறக்கப்பட்ட உடன் சிலிண்டரில் இருக்கும் காற்றானது பெடலுக்குப் பக்கத்தில் உள்ள Air - gun க்குத் திருப்பிவிடப்படுகிறது. கியரானது இப்போது ஆறு வித்தியாசமான Blade களின் உதவியுடன் சுழல்கிறது. இந்தச் சுழற்சி வண்டியை இயக்கி நகர்த்துகிறது.
10 Kg  காற்றைக்கொண்டு மட்டுமே 60 கி.மீ தூரத்தை இந்த சைக்கிளால் கடக்க முடியும். இதே தொழில்நுட்ப உத்தியை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களிலும்  பயன்படுத்தலாம்.  

மோட்டார்  சைக்கிள்கள் மற்றும் கார்களில் இந்தக் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுமானால், இனி வாகனம் ஓட்டுவதற்கு பெட்ரோல் மற்றும்  டீசலின்  தேவை இருக்காது. அதிகப்படியான  பணத்தை பெட்ரோலுக்காக செலவு செய்ய வேண்டிய தேவையும் இருக்காது. 
"என்னுடைய முதன்மையான நோக்கம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உருவாக்குவதுதான்" என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.   

 

பிரியதர்ஷினியின் தந்தை இதுபற்றி கூறுகையில் ”பிரியதர்ஷினி பல விருதுகளை இந்தக் கண்டுபிடிப்பிற்காக வல்லுநர்களிடமிருந்து வென்றிருக்கிறாள். இந்த மிதிவண்டி மாற்றுத்திறனாளிகளும் உபயோகிக்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிகப்படியான புதைப்படிவ எரிப்பொருள்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க நினைக்கும் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த வண்டியை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிவப்பு நிறத்தில் மாறிவரும் நிலா- நாசாவின் நேரலை காட்சிகள்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பூச திருவிழா!

  • தொடங்கியவர்

இன்று நாகேஷ் நினைவு தினம்: நாகேஷ் 25!

Bild könnte enthalten: 10 Personen, Personen, die lachen

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

பள்ளி நாடகத்தில் நாகேஷ§க்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸ§க்கு இது ஒரு சாம்பிள்!

இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கௌரவிக்கவில்லை!

27072499_1823183594407089_85819817981955

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீருக்கடியில் நடக்கும் வியக்கத்தக்க கொலைகள்!

இரைகளுக்காக தனது ரகசிய ஆயுதங்களுடன் கடலுக்கடியில் காத்திருக்கும் வியக்கத்தக்க விலங்குகள் பற்றி தெரியுமா?

  • தொடங்கியவர்
‘முடிப்பேன்! செய்து முடிப்பேன்’
 

image_860b4ca7d2.jpgஎது சரியானது, எது தவறானது என்றும் அல்லது எந்தக் கருமத்தை முதல் செய்ய வேண்டும், எதைக் கைவிட வேண்டும்? என்றும் ஆராய்ந்து கொண்டே மனதில் சலனத்தை விதைப்பவர்கள் முடிவில் எதையுமே செய்யாமல் விட்டுவிடுவதுண்டு.  

பல திசைகளில் புலனைச் செலுத்தினால், எல்லாமே சரியாகவும் தோன்றும். அதே வினாடியில் எல்லாமே தவறு என்றும் மனம் பேதலிப்பதுண்டு. சந்தேகம் வாழ்க்கையில் ஏற்படுவது சகஜம்தான்.

ஆனால், சந்தேகமே வாழ்க்கையாகக் கொண்டால் முடிவை எப்போது காண்பது ஐயா?

விருப்பத்துடன் முயற்சி செய்வேன் என்று சங்கல்பம் எடுப்பவர்களுக்கு வீணான மனப்பிரம்மை தோன்றவே மாட்டாது. சலன புத்திக்காரர்கள் சஞ்சலத்துக்குள் அகப்பட்டுக் கொள்கின்றனர். முடிப்பேன்! செய்து முடிப்பேன் என உறுதிபூணுங்கள். 

 

 

  • தொடங்கியவர்

2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 251 பேர் சன நெரி­சலில் உயி­ரி­ழப்பு

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 01

 

1662 :  ஒன்­பது மாத முற்­று­கையின் பின்னர் சீனாவின் இரா­ணுவத் தள­பதி கொக்­சிங்கா, தாய்வான் தீவைக் கைப்­பற்­றினார்.

varalru-2004-haj-copy.jpg1788 :  ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்­லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீரா­விப்­ப­ட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்­றனர்.

1793 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் நெதர்­லாந்­துக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1814 : பிலிப்­பைன்ஸில் மயோன் எரி­மலை வெடித்­ததில் 1,200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1832 : ஆசி­யாவின் முத­லா­வது தபால் வண்டி சேவை (mail–coach) கொழும்பு கண்டி நக­ரங்­க­ளுக்கு இடையில் ஆரம்­ப­மா­கி­யது.

1880 : யாழ்ப்­பா­ணத்­திற்கும் பருத்­தித்­ துறைக்கும் இடை­யி­லான தபால் வண்டி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1884 : ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்­கில அக­ரா­தியின் முதற் பதிப்பு வெளி­யா­னது.

1893 : தோமஸ் எடிசன் தனது முத­லா­வது அசையும் படத்­துக்­கான ஸ்டூடி­யோவை நியூ ஜேர்­சியில் கட்டி முடித்தார்.

varalaru-01-02-2017-copy.jpg1908 : போர்த்­துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவ­னது மகன், இள­வ­ரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்­லப்­பட்­டனர்.

1913 : உலகின் மிகப்­பெ­ரிய ரயில் நிலையம் நியூயோர்க் நகரில் திறக்­கப்­பட்­டது.

1918 : ரஷ்யா ஜூலியன் நாட்­காட்டியில் இருந்து கிற­கோ­ரியன் நாட்­காட்­டிக்கு மாறி­யது.

1924 : சோவியத் ஒன்­றி­யத்தை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.

1946 : நோர்­வேயின் ட்றிகிவா லீ, ஐக்­கிய நாடுகள் சபையின் முத­லா­வது செய­லாளர் நாய­க­மாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

1958 : எகிப்து மற்றும் சிரியா ஆகி­யன இணைந்து 1961 வரையில் ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசு என ஒரு நாடாக இயங்­கின.

1974 : பிரே­ஸிலில் 25 மாடிக் கட்­டடம் ஒன்றில் தீப்­பற்­றி­யதில் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1979 : 15 ஆண்­டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயத்­துல்லா கொமெய்னி ஈரா­னுக்குத்  திரும்­பினார்.

varalaru-1832-post-copy.jpg2003 : நாசாவின் கொலம்­பி­யா­விண்­ணோடம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து பூமிக்குத் திரும்­பி­ய­போது வெடித்துச் சித­றி­யதில் இந்­திய விண்­வெளி வீராங்­கனை கல்­பனா சாவ்லா உட்­பட ஏழு பேர் கொல்­லப்­பட்­டனர்.

2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது சன நெரி­சலில் சிக்கி 251 பேர் உயி­ரிழந்­தனர்.

2005 : நேபாள மன்னர் ஞானேந்திரா நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்தார்.

2005 : கனடா, ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடா னது.

2012 : எகிப்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது ரசிகர்களுக்கிடையிலான மோதல்களில் 72 பேர் உயரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒரு ஷிபாஸாகுரா மலர்த் தோட்டம்... காதலின் அழுத்தமான அடையாளமாக மலர்ந்த கதை! #FeelGoodStory

 
 

கதை

ண்மையான காதல் கதைகள் ஒருபோதும் முற்றுப்பெறுவதில்லை’ என்று சொல்லியிருக்கிறார் பல `பெஸ்ட் செல்லர்’ எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ரிச்சர்டு பாக் (Richard Bach). பூமியில் வாழவே வகையில்லாமல், மனிதன் வேற்று கிரகத்துக்குக் குடிபோகிற சூழ்நிலை வந்தாலுமேகூட காதல் இருக்கும்; காதல் கதைகள் இருக்கும். அந்த நேசம், அளவிட முடியாத பெரும் கருணை... எந்தப் பலனையும் எதிர்பாராமல் தன்னையே தன் காதல் இணைக்காக அர்ப்பணிக்கத் துணிகிற தியாகம். தாஜ்மகால் தொடங்கி உலகெங்கும் எத்தனையோ காதல் சின்னங்கள் இருக்கின்றன. ஜப்பானில் தன் பிரிய மனைவிக்காக ஒருவர் உருவாக்கிய சின்னம் கொஞ்சம் வித்தியாசமானது. அன்பின் மகத்துவத்தைச் சொல்வது. அந்தக் கதை என்ன... பார்க்கலாமா?

 

அது ஜப்பானிலிருக்கும் ஷின்டோமி (Shintomi) என்கிற சிறு நகரம். அந்த நகரத்தில் வசித்துவந்தார் குரோகி (Kuroki). தன் மனைவியின் மேல் அவருக்கு அப்படி ஒரு காதல். ஒரு சிறு பண்ணை. தினமும் அதைப் பராமரிப்பதும், அக்கம்பக்கத்து வீட்டார்களுடையதையும் சேர்த்து 60 பசுக்களை வளர்ப்பதும் குரோகி மற்றும் அவர் மனைவியின் வேலை. இரு குழந்தைகள்... மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை. குரோகிக்குத் திருமணம் முடிந்து 30 வருடங்கள் ஆனபோது அவர் ஒரு முடிவெடுத்தார்... `இது போதும். இனியும் வேலை வேலை என்று ஓட வேண்டாம். ஓய்வெடுக்கலாம்.’

குரோகி தன் மனைவியுடன்

(PC : Youtube)

இந்த முடிவைச் சொன்னதும் அவர் மனைவிக்கு அப்படி ஒரு சந்தோஷம். ``ஓய்வெடுக்குறதுனு முடிவு செஞ்சாச்சு... இத்தனை வருஷம் இங்கேயே அடைஞ்சு கிடந்துட்டோம். இனியும் வேணாமே... நீங்களும் நானும் மட்டும் எங்கேயாவது டூர் போலாமே...’’ யோசனை சொன்னார் மனைவி. குரோகியும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். ஒருநாள் இருவரும் தங்கள் பண்ணையிலிருந்து கிளம்பினார்கள். ஜப்பானில் சில இடங்களைப் பார்த்தேதீருவது என்று சில இடங்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்துவைத்திருந்தார்கள். உற்சாகமாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

நாம் ஒரு கணக்குப் போட்டால், இயற்கை வேறொரு கணக்குப் போட்டுவைத்திருக்கும். அது, குரோகி விஷயத்திலும் நடந்தது. ஒரே ஒரு வாரம்தான் பயணம் செய்திருப்பார்கள். அவர் மனைவிக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்தது. அதன் தீவிரம் அதிகமாகி பார்வையை பாதித்தது. ``ஐயோ கண் தெரியலையே’’ என்று அலறினார் குரோகியின் மனைவி. அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பயனில்லை. திடீரென்று நன்றாகத் தெரிந்துகொண்டிருந்த காட்சிகள் தெரியாமல் போனால் எப்படியிருக்கும்? மனமொடிந்துபோனார் திருமதி குரோகி. மனைவியின் வேதனை குரோகிக்கு சகிக்க முடியாததாக இருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை இருவருமே உணர்ந்தார்கள். வீடு திரும்பினார்கள்.

வீட்டுக்கு வந்ததும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் குரோகியின் மனைவி. தன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்கிற மாதிரி மாறிப்போனார். பிள்ளைகளிடம் பேசுவதே இல்லை; கணவர் ஏதாவது கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில். எப்போதும் கலகலவென்றிருக்கும் மனைவி இப்படி ஒரு தனித்தீவுபோல ஆகிப்போனது குரோகிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். தன் மனைவியின் முகத்தில் ஒரே ஒரு புன்னகை மலர்ந்தால்கூடப் போதும் என்று நினைத்தார். அதற்காகவே என்னென்னவோ செய்து பார்த்தார். தினமும் யாரையாவது வீட்டுக்கு அழைத்தார். ஒவ்வொருநாளும் குறைந்தது இரண்டு பேராவது வந்து தன் மனைவியிடம் பேசினால், அவர் மனநிலையில் மாற்றம் வரும் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. வீடு தேடி வருபவர்களிடம் பேசுவதையே தவிர்த்தார் அவர் மனைவி.

காதல்

ஜப்பானில் பூக்கும் பிரத்யேகமான ஒரு பூ உண்டு. அதற்கு `ஷிபாஸாகுரா’ (shibazakura) என்று பெயர். ஒரு சீஸனில் மட்டுமே மலரும் பூ. அந்தப் பூவை தன் தோட்டத்தில் வளர்த்தால் என்ன என்று குரோகிக்குத் தோன்றியது. அது பார்வைக்கு மட்டும் அழகாகத் தெரிவதில்லை; அதன் மணம் ஊரையே கூட்டிவிடும். அந்தப் பூக்களை வளர்த்தால், அவற்றின் மணம் தன் மனைவியை நிச்சயம் மயக்கும்; ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தும், திரும்ப அவரிடம் சிரிப்பு மலரும் என்று நம்பினார் குரோகி.

ஷிபாஸாகுரா மலர்களை வளர்க்கத் தன் தோட்டத்தைத் தயார் செய்தார். தேவையற்ற மரங்களை, செடி, கொடிகளை அகற்றினார். மண்ணை பூக்கள் மலர்வதற்குத் தோதாகப் பதப்படுத்தினார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உழைத்து ஒரு பெரும் பூந்தோட்டத்தையே உருவாக்கினார். பிங்க் நிறத்தில் ஒரு பிரமாண்டமான போர்வையை விரித்ததுபோல மலர்ந்தன பூக்கள். பிங்க் நிறக் கடலாகக் காட்சியளித்தது தோட்டம். பூக்களின் வாசம் அக்கம்பக்கத்துப் பண்ணைகள் வரை அடித்தது.

குரோகியின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் மனைவிக்கு, அந்தப் பூக்களின் மணம் ஏதோ ஒரு பரவசத்தைக் கொடுத்தது. தன் கணவர் தனக்காகத்தான், தனக்குப் பிடித்த ஷிபாஸாகுரா பூக்களை வளர்த்திருக்கிறார் என்பதும் புரிந்தது. தன் கணவருக்குத் தன் மீதிருந்த காதல், தனக்குத் தானே அவர் போட்டுக்கொண்ட சிறையை உடைத்தெறிந்தது. ஒரு நாள் கணவரின் கையைப் பிடித்துக்கொண்டு தேம்பினார்... ``எனக்காகவா இந்தப் பூக்களையெல்லாம் வளர்த்தீங்க?’’

``ஆமா டார்லிங்...’’

ஷிபாஸாகுரா

அதுதான் குரோகியின் மனைவி அழுத கடைசி அழுகை. அதற்குப் பிறகு வாழ்நாளெல்லாம் அவர் முகத்தில் மலர்ந்திருந்தது சிரிப்புதான். சீஸன் முழுக்க, கணவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, பழைய இனிய நாள்களை, மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்ந்தபடி பூந்தோட்டம் முழுக்க நாளெல்லாம் அலைவதுதான் அவரின் முக்கிய வேலையாக இருந்தது. இப்போது குரோகியின் தோட்டம் ஒரு சுற்றுலாதலம். ஷிபாஸாகுரா பூக்கள் பூக்கும் சீஸனில் அந்தத் தோட்டத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 7,000 பேர் பார்வையிட வருகிறார்கள். அங்கே அவர்கள் பார்ப்பது வெறும் பிங்க் நிறப் பூக்களை அல்ல... குரோகிக்கும் அவர் மனைவிக்கும் இடையே இருந்த காதலின் அடையாளத்தை!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘யுடர்ன்’ தமிழில் ரீ மேக்காகிறது. நாயகியை மையப்படுத்தும் படம் என்பதால்  நித்யா மேனனில் தொடங்கி கடைசியாக நயன்தாராவை வைத்துப் படம் தொடங்கப்போகிறது எனப் பேசிக்கொண்டிருந்த நிலையில், இப்போது படத்தில் நடிக்கவிருப்பவர் சமந்தா. பெங்களூரில் படம் பார்த்த சமந்தா உடனே பரபர டிஸ்கஷனில் இறங்கி, படவேலைகளைத் தொடங்கிவிட்டார். கன்னடத்தில் இயக்கிய பவன்குமார்தான் தமிழிலும் இயக்குநர். சமத்துப் பொண்ணு!

p56a_1517377333.jpg


ரே நேரத்தில் தமிழின் இரண்டு டாப் ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சாய் பல்லவி. தனுஷின் மாரி-2ல் அவர்தான் ஹீரோயின். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு படங்களையும் முடிக்கும்வரை வேறு படங்களில் கமிட் ஆகக்கூடாது என்பது சாய் பல்லவியின் சபதமாம்! மலரே நின்னே...

p56b_1517377356.jpg


ஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல்கள் வெளியாகிவிட்டன. கூடவே ஏகப்பட்ட சர்ச்சைகளும்தான். `வொண்டர் உமன்’ படம் எந்தப்பிரிவிலும் நாமினேட் ஆகவில்லை என்பதுதான் சர்ச்சைக்கான ஆரம்பப்புள்ளி. அதிலும் அதிகமும் எதிர்பார்க்கப்பட்டது வொண்டர் உமனின் நாயகி கேல் கடாட்டுக்கான சிறந்த நடிகை விருது. நாமினேஷனிலேயே கேல் கடாட்  பெயர் இல்லை என்பதால் அவரது அகில உலக ரசிகர்கள் செம அப்செட். சும்மா இருப்பார்களா... இணையத்தையே சூறையாடிவிட்டார்கள். ஆஸ்கர் கமிட்டியைக் கிழிகிழியெனக் கிழித்துத்தொங்கவிட, நாயகி கேல்கடாட் களமிறங்கி ‘`உங்கள் அன்பே எனக்குப் பெரிய விருதுதான்’’ என சமாதானப்படுத்திய பிறகுதான் எதிர்ப்பலை ஓய்ந்திருக்கிறது. சில் சில் கூல் கூல்!

p56c_1517377389.jpg


ஹாலிவுட் ஹிட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் லேட்டஸ்ட் அதிரடியான ‘தி போஸ்ட்’ படம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஆக்‌ஷன் அதிரடி ஏதுமில்லாமல் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லரைத் தந்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். 1946-ல் அழிவின் விளிம்பில் இருந்த `வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கடைசியாக கேத்தரின் கிரஹாம் என்ற பெண்மணியின் கைக்கு வருகிறது. அவர் அமெரிக்க வரலாற்றின் கறுப்புப் பக்கங்களால் எழுதப்பட்ட வியட்நாம் போரின் நிஜ முகத்தையும், அமெரிக்க அதிகார மையத்தின் சில தில்லாலங்கடி வேலைகளையும் அம்பலப்படுத்தி விற்பனையில் தன் பத்திரிகையை உயர்த்தினார். உடனே போட்டி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஒருபடிமேலே போய் ராணுவ ரகசிய ஆவணங்களைச் சுட்டு  ‘பென்டகன் பேப்பர்ஸ்’ என்று பரபரப்பு கிளப்பியது. இது அமெரிக்க அரசியலையே புரட்டிப்போட்டது என்பது வரலாறு. இந்த மொத்தச் சம்பவங்களையும் ‘தி போஸ்ட்’ படத்தில் தத்ரூபமாகப் படமாக்கியிருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். எல்லா பால்லயும் சிக்ஸர்தான்!


சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன். `இன்று நேற்று நாளை’ இயக்குநர்
ஆர்.ரவிகுமாரின் அடுத்த படம், விக்னேஷ் சிவன் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடிக்கவிருக்கிறார் சிவா. ‘` `நானும் ரவுடிதான்’ படத்துக்கு முன்பே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லியிருக்கிறேன். ஆனால் அப்போது அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்தார். இப்போதுதான் நேரம் கூடிவந்திருக்கிறது’’ எனச் சொல்கிறார் விக்னேஷ் சிவன். படத்தின் நாயகி நயன்தாராவேதான்! குட் காம்பினேஷன்

p56d_1517377411.jpg


ன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் வரவு டாம் க்ரூஸ். சென்றவாரம்தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். என்ட்ரியே அதிரடியாக இருக்கவேண்டும் என்று `மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஆறாவது பாகத்திற்காகச் செய்த ஹெலிகாப்டர் ஸ்டன்ட் காட்சியோடு களமிறங்க, இன்ஸ்டாகிராம் முழுக்க டாமுக்குக் குவிகின்றன இதய லைக்குகள்! க்ரூஸ்னா சும்மாவா!


ந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிக்கு டாப் அணிகள் எல்லாம் ரெடி. அதிகமுறை உலகக்கோப்பையை வென்ற அணியான இத்தாலி இந்த ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதிபெறவில்லை. அதனால் இந்த முறை பிரேஸில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின் அணிகளுக்கு இடையேதான் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில்தான் கோப்பையை வெல்லும் என்பது கால்பந்து நிபுணர்களின் கணிப்பு! பாய்ஸ் ஆர் பேக்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகம் முழுவதிலும் எப்படி தோன்றியது அரிய சந்திர கிரகணம்

  • தொடங்கியவர்

உலகளாவிய ரீதியில் உணவகத்தாலும் சாதனை படைத்த சங்கக்காரா மற்றும் மஹேல

 

உலகளாவிய ரீதியில் உணவகத்தாலும் சாதனை படைத்த சங்கக்காரா மற்றும் மஹேல


உலகளாவிய ரீதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேல ஜெயவர்த்தனவின் உணவகம் சாதனை படைத்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேல ஜெயவர்த்தவின் உணவகம் உலகளாவிய ரீதியில் முதல் 50 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. மினிஷ்ரி ஒப் கிராப் என்னும் இவ் உணவகமே சாதனை படைத்த உணவகமாக காணப்படுகிறது.

இதனடிப்படையில் உலகம் முழுவதும் உணவகங்களை கொண்டு செல்லும் நோக்கத்தில் சங்கக்காரா மற்றும் மஹேல செயற்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில் தர்ஷன முனிதாஸ என்ற சமையல் கலைஞருடன் புதிய உணவகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனடிப்படையில் அமைக்கப்பட்ட உணவகத்தின் சாதனை விழாவை சில நாட்களுக்கு முன்பு கொண்டாடியுள்ளனர். மேலும் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதால் இந்தியாவின் மும்பையிலும் புதிய ஓர் உணவகத்தை அமைக்க சங்கக்காரா மற்றும் மஹேல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

35,000 அடி உயரத்தில்  பிரசவம்... நைஜீரிய பெண்ணின் நெகிழ்ச்சிக் கதை!

 
 

பிரசவம்

PC: Cleveland Clinic

 

டிசம்பர் 17, 2017... அந்த விமானப் பயணம் மிக சுவாரஸ்சியமாக இருக்கும் என நினைத்தார், 27 வயது டாக்டர் சிஜ் ஹிமல் (Sij Hemal). ஏனென்றால், முதன்முதலாக ‘ஃபர்ஸ்ட் கிளாஸில் பயணிக்கப்போகிறார். புது டெல்லியிலிருந்து பாரீஸ், பாரீஸிலிருந்து நியூயார்க் செல்லும் திட்டம். டெல்லியிலிருந்து பாரீஸ் சென்ற ஹிமல், நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறினார். அந்த விமானப் பயணத்தில் ஒரு கிளாஸ் ஷாம்பெயின் குடித்துவிட்டு, ஹாயாக திரைப்படம் பார்க்க நினைத்திருந்தார். ஆனால், சற்று நேரத்தில் ஓர் அசாதாரணமான விஷயத்தைச் செய்யப்போகிறோம் என்று நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார். 

அவருக்கு அருகில் டோய்ன் ஒகுண்டிபி (Toyin Ogundipe) என்ற நைஜீரியாவைச் சேர்ந்த 41 வயது கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. விமானத்தைத் தரையில் இறக்க வேண்டும் என்றால், அசோரீஸ் தீவுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அதிலும், தற்போது செல்லும் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றடையவோ நான்கு மணி நேரமாகும் என்கிற நிலை. அந்தப் பெண்ணைப் பரிசோதித்தார் சிஜ் ஹிமல். 

“அவர் சற்று நேரத்தில் குழந்தையைப் பெற்றுவிடுவார் என்று தெரிந்தது. அதனால், நானும் டாக்டர் சுசன் ஷெப்பர்டும் சேர்ந்து அவரை ஆசுவாசப்படுத்தி, சிகிச்சையை ஆரம்பித்தோம்'' என்கிறார் சிஜ் ஹிமல். 

டாக்டர் சுசன், அமெரிக்காவில் குழந்தை நல மருத்துவராகப் பணிபுரிபவர். தாகர் என்ற இடத்தில் நடந்த ஒரு கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு அதே விமானத்தில் அமெரிக்காவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். 

அந்தப் பெண்ணை விமானத்தின் முதல் வகுப்பில் இருக்கும் அறைக்கு மாற்றினார்கள். அவரின் நான்கு வயது மகள் ஏமி, விமானப் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலிக்கான அறிகுறிகள் அதிகரித்தன. ''ஒரு மணி நேரத்துக்குள் அந்தப் பெண்மணிக்கு விமானத்திலேயே குழந்தைப் பிறந்துவிடும் என்று தெரிந்தது” எனக் கூறுகிறார் ஹிமல். 

பெண்ணுக்கு பிரசவம்

அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு, ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் டோய்ன் ஒகுண்டிபி. ஒரு கத்தரிக்கோலால் தொப்புள்கொடியைப் பிரித்தார் ஹிமல். இவர், அடிப்படையில் சிறுநீரகச் சிகிச்சை நிபுணர். ஆனால், மருத்துவக் கல்லூரியில் பயிலும்போது, ஏழு பிரசவ சிகிச்சைகளைப் பார்த்திருக்கிறார். தற்போது, அமெரிக்காவிலும் இருக்கும் க்ளேவ்லாண்ட் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். “இதுபோன்ற சூழ்நிலையில், அமைதியாகவும் திறமையாகவும் சிந்திக்கக் கற்றுத்தந்திருக்கிறார்கள். அதைத்தான் இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தினேன். என்னவெல்லாம் தவறாக நடக்க வாய்ப்பிக்கிறது என்று ஒருமுறை சிந்தித்துப் பார்த்தேன். பிறகுதான், அதைத் தவிர்க்கும் விதமாகச் செயல்பட தொடங்கினேன்” என்கிறார் ஹிமல். 

 

விமானம் தரையிறங்கியதும் தாயையும் குழந்தையையும் விமான நிலையத்துக்கு அருகிலிருந்த ஜாமாய்க்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து, “ஆரம்பத்தில் எனக்குப் பதற்றமாக இருந்தது. ஆனால், பாதுகாப்பானவர்களிடம்தான் இருக்கிறேன் என்று உணர்ந்து அமைதியானேன். லேபர் அறையில் குழந்தையைப் பெற்றிருந்தாலும், இதைத்தான் செய்திருப்பார்கள். சொல்லப்போனால், அதைவிட நன்றாகவே என்னைப் பார்த்துக்கொண்டார்கள்” எனப் புன்னகைக்கும் டோய்ன் ஒகுண்டிபி, தன் குழந்தைக்கு ஜாகே (jake) என்று பெயர் சூட்டியுள்ளார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நீரில் மிதக்கும் மிதிவண்டி

நீந்திச் செல்லும் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், மிதக்கும் மிதிவண்டியை வடிவமைத்துள்ளார் கானாவைச் சேர்ந்த இளைஞர்.

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் தெரிந்த ‘சூப்பர் புளூ பிளெட் மூனின்‘ அரிய தோற்றம்

ஸ்பெயின் மாட்ரிட்டில் நில நிற நகர தோற்றத்தின் பின்னணியில் ஆரெஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் சந்திரன்

 

சூப்பர் புளூ பிளெட் மூன்‘ என்று அழைக்கப்படும் அரிய வகை சந்திர கிரகண நிகழ்வு வானவாள உயர்ந்த கட்டிடங்களுக்கு அருகில் சிறந்த கண்கவர் தோற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மெக்டி அமார் எடுத்த புகைப்படம் இது

இன்டியானாவிலுள்ள கேப்பிட்டல் கட்டடத்தில் உஷா வெங்கட் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

முழு சந்திரகிரகணம், சிவப்பு சந்திரன் மற்றும் சூப்பர் மூன் ஆகியவை ஒன்றாக நிகழ்ந்துள்ளன. இன்டியானாவிலுள்ள கேப்பிட்டல் கட்டடத்தில் உஷா வெங்கட் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் இந்த புகைப்படத்தை எடுத்த அப்துர் ரஹ்மான் யாசின் உட்பட உலகம் முழுவதும் இந்த நிகழ்வு பலராலும் பார்க்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த புகைப்படத்தை எடுத்த அப்துர் ரஹ்மான் யாசின் உட்பட உலகம் முழுவதும் இந்த நிகழ்வு பலராலும் பார்க்கப்பட்டுள்ளது

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் கோயில் ஒன்றுக்கு பின்னால் தெரியும் சந்திரன்

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் கோயில் ஒன்றுக்கு பின்னால் தெரியும் சந்திரன்

நேபிதாவ் வான்வெளியில் தோன்றிய சூப்பர் சிவப்பு சந்திர கிரகணம்.

ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு ஏற்படும்போது நீல நிற சந்திரன் ஏற்படுகிறது. சந்திரன் பூமிக்கு மிகவும் அருகில் இருக்கின்றபோது சூப்பர் மூன் ஏற்படுகிறது. இந்த புகைப்படம் மியான்மரில் எடுக்கப்பட்டது.

விடுதலை சிலைக்கு பக்கத்தில் சந்திர கிரகண தோற்றம்

நியூயார்க்கில் தோன்றியதைபோல, அதாவது 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தடவையாக மேற்கு அரைக்கோளத்தில் நிலா தோன்றியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்ட மறையும் சந்திரன்.

சான் பிரான்சிஸ்கோ நகசர்ப்புறத்தில் வானளாவிய கட்டடங்களுக்கு பின்னால் மறைகின்ற இந்த சந்திரனின் புகைப்படம், அமெரிக்க மேற்குக் கடற்கரையில் எடுக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் மிகவும் அருகிலான நிலவின் தோற்றம் ஜனவரி 31, 2018 படம்பிடிக்கப்பட்டது.

இந்தோனீஷியா ஜகார்தா நகரில் மிகவும் அருகிலான நிலவின் தோற்றம் படம்பிடிக்கப்பட்டது.

சிவப்பு சூரியன் கொடுக்கும் அதே விளைவுதான் இந்த சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது.

சிவப்பு சூரியன் கொடுக்கும் அதே விளைவுதான் இந்த சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது. பூமியின் வளமண்டலத்தில் சூரிய ஒளி குறைகிறது. நீல வெளிச்சம் வடிகட்டப்பட்டு சிவப்பு விளக்கு தெரியுமளவு வழங்கப்படுகிறது. கலிஃபோர்னியாவின் அனாஹெயிமில் எடுக்கப்பட்ட புகைப்படம்

சூப்பர் புளூ பிளெட் மூன் நார்வே சவால்பார்ட் என்ற இடத்திலும் எடுக்கப்பட்டது.

சூப்பர் புளூ பிளெட் மூன் நார்வே சவால்பார்ட் என்ற இடத்திலும் எடுக்கப்பட்டது.

லண்டனின் புனித பவுல் கத்தீட்ரலின் பின்னால் தோன்றுகின்ற சூப்பர் மூன் படம் பிடிக்கப்பட்டது.

லண்டனின் புனித பவுல் கத்தீட்ரலின் பின்னால் தோன்றுகின்ற சூப்பர் மூன் படம் பிடிக்கப்பட்டது

 

பிரிட்டனிலுள்ள ஹூலில், டான்னி லாசன் புகைப்படக் கலைஞரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

பிரிட்டனிலுள்ள ஹூலில், டான்னி லாசன் புகைப்படக் கலைஞரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ரஹ்மான் இசையமைத்த இந்த பாப் பாடல்களில் எதெல்லாம் உங்களுக்கும் பிடிக்கும்?

ரஹ்மான்

'மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, நடித்த மியூசிக் வீடியோக்களின் தொகுப்பு இது. உங்களில் பலர் இவற்றில் பல பாடல்களை கேட்டிருக்கவே மாட்டீங்க. 

 

மா துஜே சலாம் :

1997 ஆம் ஆண்டில் வெளியான 'வந்தே மாதரம்' ஆல்பம், 'தேசப்பற்று' என்றதும் நம் நினைவுக்கு வரும். பள்ளிக்கூட காலங்களில் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் தேசிய கொடியை அசைத்து பெர்ஃபாம் செய்தோமே, அந்த 'தாய் மண்ணே வணக்கம்' பாடலின் இந்தி வெர்ஷன் தான் 'மா துஜே சலாம்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, பாடி, நடித்த இந்த மியூசிக் வீடியோவை இயக்கியது 'மரியான்' படத்தின் இயக்குநர் பரத்பாலா. உலகிலேயே அதிக மொழிகளில் பாடப்பட்ட பாடல் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த பாடல் அடைந்ததுள்ளது. 

ப்ரே ஃபார் மீ ப்ரதர் :

இசைப்புயல் இசையமைத்து பாடிய முதல் ஆங்கிலப்பாடல். ஐக்கிய நாடுகளின் பத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் ஒன்றான தீவிர வறுமையை ஒழித்தலின் கீதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பாடலை இயக்கியதும் பரத்பாலா தான். ரஹ்மானோடு இணைந்து ராப் பாடகர் ப்ளாஸியும் இந்த பாடலை பாடியிருப்பார். மொபைல் சினிமாஸ்கோப் ஃபார்மெட்டில் படமாக்கபட்ட முதல் மியூசிக் வீடியோ இது தான். பாட்டையும் கொஞ்சம் பாருங்க ப்ரதர்...

ஒன் லவ் :

காதலின் சின்னமான தாஜ்மஹால் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டதை கொண்டாடும் மியூசிக் ஆல்பம். ஆல்பத்திலுள்ள ஆறு பாடல்களும் ஒரே மெட்டுத்தான். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காளி என ஆறு மொழிகளில் பாடப்பட்டிருக்கும். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'னு பாரதியே சொல்லிட்டதால தமிழ் வெர்ஷனையே இங்கே கொடுத்திருக்கோம்.

ஜியே ஸே ஜியா :

'வசனமாடா முக்கியமா, மியூஸிக்கை கேளுடா...' என்பவர்கள் தாராளமாக கேட்கலாம். 'உஜ்ஜரே... உஜ்ஜரே...' என ரஹ்மான் ஹைபிட்சில் ஆரம்பித்து வைக்க, முழுப்பாடலும் செம எனர்ஜிட்டிக்காக இருக்கும். ரஹ்மானின் நெருங்கிய நண்பர் டிரம்ஸ் சிவமணி டிரம்மில் விளையாடிருப்பார். சில விஷயங்களை சொல்றதை விட பார்க்குறது இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். நீங்க வீடியோவையே பார்த்துடுங்க...

ஜெய் ஹோ ( யூ ஆர் மை டெஸ்டினி ) :

ரஹ்மானுக்கு ஆஸ்கரை பெற்று தந்த 'ஜெய் ஹோ...' பாடலின் பாப் வெர்ஷன். இந்த பாடலை பிரபல அமெரிக்க பாப் இசை குழுவான தி புஸி கேட் டால்ஸ் மறு உருவாக்கம் செய்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என பலநாடுகளில் இந்தப்பாடல் மிகவும் பிரபலமடைந்தது. விமர்சகர்களிடமிருந்தும் பாஸிட்டிவான பாராட்டுகளை பெற்றது. ஜெய் ஹோ....

செம்மொழியான தமிழ் மொழியாம் : 

2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரப்பூர்வ பாடல். கர்நாடக இசை, கிராமிய இசை, ராக், ராப் என கலந்து கட்டி இசை விருந்து படைத்திருப்பார் ஏ.ஆர்.ஆர். டி.எம்.சௌந்தரராஜனில் ஆரம்பித்து ஸ்ருதி ஹாசன் வரை பல பிரபல பாடகர்களும், இசையமைப்பாளர்களும் இணைந்து பாடிய இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை இயக்கியது கௌதம் மேனன். இந்த பாடல் வெளியான சமயத்தில் அரசு பேருந்துகளிலுள்ள டிவிகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பபட்டு கொண்டே இருந்தது. அத்தனை முறையும் அசராமல் பார்த்தார்கள் ரஹ்மேனியாக்ஸ்.

சேஞ்சிங் சீஸன் :

'எனது முதல் சர்வதேச மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது' என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலின் டீசரை வெளியிட்டிருந்தார் ரஹ்மான். மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பாடலை, பின்னர் தனி மியூசிக் வீடியோவாக வெளியிட்டார். அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இந்தப் பாடலுக்கு பயன்படுத்தியிருப்பார் இதன் இயக்குநர் ஜான் வார்னர். இதன் தமிழ் வெர்ஷனை நீங்க கண்டிப்பா கேட்டுருப்பீங்க, மறுபடியும் ஒருமுறை கேட்டுப்பாருங்க...

இன்ஃபைன்ட் லவ் :

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்பதை இசையாலும், காட்சிகளாலும் விவரிக்கும் பாடல். குழந்தைகள் மனதில் உள்ள அன்பையும், அந்த அன்பு இந்த உலகையே எவ்வளவு மகிழ்ச்சியானதாக மாற்றும் என்பதையும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ரஹ்மானின் காஸ்ட்யூம் வேற லெவல்...

கிங்கா :

ஆஸ்கார் நாயகனுக்கு அடுத்த ஆஸ்கரை வாங்கித்தருமா? என எல்லோரையும் எதிர்பார்க்கவைத்திருக்கும் பாடல் இது தான். கால்பந்து விளையாட்டின் ஜாம்பாவன் பீலேவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் 'பீலே : பர்த் ஆஃப் லெஜண்ட்' படத்திற்காக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பா பார்த்துடுங்க...

 
  • தொடங்கியவர்

இலங்கையில் இப்படியொரு மனிதரா...?! சர்வதேச ஊடகம் பாராட்டு

இலங்கையில் மனிதாபிமானமிக்க நபர் ஒருவர் தொடர்பில் பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சமகாலத்தில் மனிதர்களை மனிதர்களே மதிக்காமல் நடந்து வரும் நிலையில், நாய்களுக்காக தனது வாழ்க்கை நபர் ஒருவர் தியாகம் செய்துள்ளார்.

பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தை சேர்ந்த நிஹால் டி சில்வா நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை பாராமரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமும் 120 - 150 நாய்களின் பசியை போக்குவதற்கான நடவடிக்கையை நிஹால் டி சில்வா மேற்கொண்டு வருகிறார்.

பெலவத்த, கொஸ்வத்தை, நாடாளுமன்ற மைதானம், பத்தரமுல்லை மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு அவர் உணவு வழங்கி வருகிறார்.

கடந்த 18 வருடங்களுக்காக அவர் இந்த சேவை ஆரம்பித்துள்ளார். இந்த காலப்பகுதி 6 சந்தர்ப்பங்களில் மாத்திரமே அவரால் உணவு வழங்க முடியாமல் போயுள்ளது.

அரிசி, கோழி இறைச்சி, மற்றும் மிருக உணவுகளை பயன்படுத்தி நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக தினமும் 6000 ரூபாய் செலவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் உணவு வழங்க ஆரம்பித்து விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது வாகனத்தின் சத்தம் கேட்டவுடன் நாய்கள் அனைத்து வந்து விடும். என்னால் முடிந்த வரை உணவுகளை வழங்குவேன். பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் உணவு வழங்க ஆரம்பித்து விடுவேன். இரவு 8 மணிவரை உணவு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிது காலம் வெளியநாடு சென்றுவிட்டு நாடு திரும்பியவர் இந்த சேவையை செய்து வருகின்றார் சர்வதேச ஊடகமான பிபிசி தெரிவித்துள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்
‘சோர்வுக்குச் சொந்தக் காரராக வேண்டாம்’
 

image_33aad542d0.jpgவிருப்பத்துடனும் சுறுசுறுப்புடனும் கருமமாற்றுபவர்களுக்குக் காலம், கவலையின்றிக் கழிவதாகவே தெரியும். சும்மா இருந்தால், ஒரு நொடியும் பல யுகங்கள்தான். 

கவலையுடன் வாழ்வதைவிடக் களிப்புடனும் வீச்சுடனும் காரியமாற்றினால் வெறுப்பு, அலுப்பு, சோகம் கரைந்தே போய்விடும்.  

கவலைப்படுவது சிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கின்றது. வேலை செய்யாதவர்களே, பொழுதை எப்படி வீணாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பார்கள். பொழுதை வீணாக இழப்பது, வாழ்க்கையைக் களையிழந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிடும்.

சோர்வுக்குச் சொந்தக் காரராக வேண்டாம்; உழைப்புக்கு உகந்தவராகச் செழித்து வாழ். 

  • தொடங்கியவர்

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933

 
அ-

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. * 1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். * 1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர்

 
ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933
 
ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. * 1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். * 1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. * 1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். * 1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது. * 1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன. * 1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது. * 1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

* 1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. * 1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு. * 1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. * 1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார். * 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜெர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். * 1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார். * 1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. * 1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. * 1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1998 - பிலிப்பைன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? - உண்மையை உணர்த்தும் கதை! #MotivationStory

 
 

unnai arinthal

மெரிக்க தொழிலதிபரும், பல சுய முன்னேற்ற நூல்களின் ஆசிரியருமான டயிள்யூ.கிளெமென்ட்  ஸ்டோன் (W. Clement Stone) இப்படிச் சொல்லியிருக்கிறார்...  `மனிதனின் மிகப்பெரும் சக்தி பிரார்த்தனை.’ அதிலும் ஒரு சின்ன நுணுக்கமுண்டு. உளமுருகி, மனதார, தனக்காக அல்லாமல் வேறு யாரோ ஒருவருக்காகச் செய்யும் பிரார்த்தனைக்குத்தான் அபார சக்தி. வேண்டுதலுக்கு மட்டுமல்ல... மற்றவரை நினைத்து, பிறருக்காகச் செய்யும் ஒரு சிறு செயலுக்குக்கூட பலன் கிடைக்கும். இதை உணர்த்தும் கதை ஒன்று உண்டு. இந்தக் கதை கற்பனையாக இருக்கலாம்; இப்படி ஒன்று நடக்கவே நடக்க முடியாத சம்பவமாகவும் தோன்றலாம். ஆனால், இந்தக் கதை உணர்த்தும் உண்மை யாராலும் மறுக்க முடியாதது. 

 

கதை - கடல் பயணம்


ஒரு பயணிகள் கப்பல் புயலில் மாட்டிக்கொண்டது. உடைந்து மூழ்கியும் போனது. அந்தக் கப்பலில் பயணம் செய்த இரண்டு பேர் மட்டும் எப்படியோ, கையில் கிடைத்த மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு தப்பித்து, ஓர் ஆளரவமற்ற தீவில் கரையொதுங்கினார்கள். இருவரும் நண்பர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்பது இருவருக்குமே தெரியவில்லை. அவர்களைக் காப்பாற்றக் கடவுளைத் தவிர வேறு துணை இப்போது இல்லை. எனவே, பரஸ்பரம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அந்தத் தீவின் ஒரு கரையில் ஒருவரும், அதற்கு நேர் எதிர்ப்புறத்தில் இன்னொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டியது... யாராவது ஒருவரின் வேண்டுதலுக்குக்கூடவா செவி சாய்க்காமல் போய்விடுவார் கடவுள்? உதவி வரும்... அப்போது இருவருமே இந்தத் தீவிலிருந்து தப்பித்து, தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிடலாம். உதவி ஏதும் கிடைக்காத, உதவிக்கு ஆள் யாரும் இல்லாத, எதிர்காலம் என்னவென்றே புரியாத சூழ்நிலையில் இந்த ஒப்பந்தம் இருவருக்குமே சரி என்று தோன்றியது.   

ஒப்பந்தப்படி இருவரும் பிரிந்து தீவின் எதிர் எதிர் திசைக்குப் போனார்கள். பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள். முதலாமவன் கடவுளை நினைத்து வேண்டுகோள் விடுத்தான்... ``கடவுளே... பசி... அகோரப்பசி... சாப்பிட ஏதாவது கொடு!’’ இரக்கமில்லாதவரா கடவுள்?! அவன் கண்ணைத் திறந்து பார்த்தபோது, சற்று தூரத்தில் ஒரு மரம் தெரிந்தது... பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன ஆப்பிள் பழங்கள். அவன் அவற்றைப் பறித்துப் பசியாறினான். அதே நேரத்தில், இரண்டாமவன் உணவுக்கு என்ன செய்வான் என்று அவன் யோசிக்கக்கூட இல்லை. 
முதலாமவனுக்கு உணவுப் பிரச்னை தீர்ந்தது. துணைக்கு ஆளிருந்தால் நல்லதே என்று தோன்றியது... அதிலும் நம் மனைவி உடனிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று நினைத்தான். கடவுளை நினைத்துப் பிரார்த்தித்தான். அடுத்த நாள், அவனிருந்த தீவுக்கருகே ஒரு கப்பல் விபத்துக்குள்ளானது. அந்தக் கப்பலில் அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்த மனைவியும் இருந்தாள். எப்படியோ தப்பிப் பிழைத்து,மிகச் சரியாகத் தன் கணவன் இருக்கும் தீவுக்கு, அவனிடமே வந்து சேர்ந்தாள். அவளை வாரியணைத்துக்கொண்டான் அவன். அவனுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். `நான் நினைப்பதெல்லாம் நடக்கிறதே... நிச்சயம் கடவுள் இருக்கிறார்... என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறார்...’ என்று யோசித்தான். 

கதை - தனித்து மாட்டிக்கொண்ட இருவர்

அடுத்த நாள், அவனுக்கும் அவன் மனைவிக்கும் உடைகள் வேண்டும், ஒரு வீடு வேண்டும், பிடித்த உணவு வேண்டும்... என்றெல்லாம் கடவுளிடம் பிரார்த்தித்தான். அந்தத் தீவு ஓர் அட்சய பாத்திரம்போல அவன் கேட்ட அனைத்தையும் தந்தது. அவன் மனம் நிறைந்துபோனான். அப்போதும் அவன் எதிர்த் திசையிலிருக்கும் தன் நண்பனைப் பற்றி யோசிக்கவேயில்லை. 

`எல்லாம் கிடைத்துவிட்டது... இனி வீடு திரும்பவேண்டியதுதான் பாக்கி. அதுவும் பிரார்த்தித்தால் கிடைக்காதா என்ன..?’ அவன் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தான். அது ஆச்சர்யமான சங்கதியல்ல... அற்புதம்! கடவுள் மனமிரங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த நாள் காலையில் அவனிருக்கும் கடற்கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றது. அவன், தன் மனைவியை அழைத்துக்கொண்டு கப்பலில் ஏறுவதற்காக விரைந்தான். அப்போதும் மற்றொரு திசையில் இருக்கும் தன் நண்பனைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை. கடவுள் தன் நண்பனின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை என்று நினைத்தான். 

அவன் கப்பலில் ஏறப்போகும் நேரத்தில், வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது... ``கொஞ்சம் பொறு... நீ ஏன் உன் நண்பனை விட்டுவிட்டுத் தனியாகக் கிளம்புகிறாய்?’’ 

கதை


``நான் என்னவெல்லாம் கேட்டு பிரார்த்தனை செய்தேனோ, அவையெல்லாம் எனக்குக் கிடைத்தன. அது என் பாக்கியம். ஆனால், என் நண்பனின் பிரார்த்தனை தகுதியில்லாதது. அதனால்தான் அவன் கேட்ட எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை...’’ 

அசரீரி சொன்னது... ``நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். அவன் ஒரே ஒரு பிரார்த்தனைதான் செய்தான். அதை நான் நிறைவேற்றித் தந்தேன். அது மட்டும் இல்லையென்றால், உன்னுடைய எந்த வேண்டுதலும் நிறைவேறியிருக்காது...’’ 

``அப்படியா கடவுளே... என் நண்பன் அப்படி என்னதான் பிரார்த்தனை செய்தான்?’’ 

``உன்னுடைய எல்லா கோரிக்கைகளும், வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்...’’ 

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எனக்காக பிரார்த்திக்க கூடியவர்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா.......! ஒரு நிமிஷம், அந்த இரண்டாவது பிரார்த்தனை அவ்வளவு முக்கியமில்லை. அவர்கள் பாவம் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும்....அப்படி அவசியம் என்றால் வேறு ஒரு அழகிய மாற்று வழியை யோசிக்கவும்.....!  tw_blush: 

  • தொடங்கியவர்

மனிதரைப்போல பேச்சொலி எழுப்பும் ‘கில்லர்‘ திமிங்கலம்

‘ஹலோ‘, ‘பை பை‘ என்று மனிதரைப் போல பேசும் திமிங்கலம்

"ஹலோ", "பைபை" என்று மனிதர் போல பேசுகின்ற இந்த 'கில்லர்' திமிங்கலம்தான் மனித சொற்களை பேசுகின்ற இந்த இனத்தை சேர்ந்த முதல் விலங்கு என்று நம்பப்படுகிறது.

'ஹலோ', 'பை பை' என்று மனிதரைபோல திமிங்கலம் பேசும் புதுமைபடத்தின் காப்புரிமைMARINELAND

பிரான்ஸிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில், பயிற்சி அளிப்பவர் பேசியதைபோல, சில சொற்களை இந்த கில்லர் பெண் திமிங்கலம் பேசியுள்ளது.

அமி என்ற பெயரையும், ஒன், ட்டூ, திரி என்று எண்ணுவதையும் இந்த திமிலங்கமும் சொல்லி ஆச்சரியமூட்டியுள்ளது. இதனால், வெறுப்பை வெளிப்படுத்தும் அதிருப்தி குரலையும் எழுப்ப முடியும்.

மனிதருக்கு அப்பாற்பட்டு மனித சொற்களை பேசுகின்ற சில உயிரினங்களில், கேட்பதை மட்டுமே வைத்து, புதிய ஒலியை உருவாக்க கற்றுக்கொள்ளும் கடல்வாழ் உயிரினமாக இந்த வகை திமிங்கலம் விளங்குகிறது.

"பாலூட்டிகளில் இது மிகவும் அரிது" என்று இந்த ஆய்வை நடத்திய இணை ஆய்வாளரான புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜோசப் கால் தெரிவித்துள்ளார்.

"மனிதர் இந்த திறமையில் மிகவும் சிறந்தவர்கள்...பாலூட்டும் விலங்குகளில் இதனை சிறப்பாக செய்யக்கூடியது கடல்வாழ் பாலூட்டிகள் என்பது சுவாரஸ்யமான விடயம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கில்லர் திமிங்கலங்கள்படத்தின் காப்புரிமைVALERY HACHE/AFP/GETTY IMAGES

பிறர் பேசுவதை கேட்டு, கொல்லும் திமிங்கலம் என்று அழைக்கப்படும் திமிங்கலங்களில் ஒரு வகையானது பேசுவதற்கு கற்றுக்கொள்ள முடியுமா? என்பதைக் கண்டறிய இந்த ஆய்வாளர்கள் விரும்பினர்.

இதற்காக பிரான்ஸில் அன்டிபஸிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில் வாழும் "விக்கி" என்ற பெயருடைய பெண் திமிங்கலத்தை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் மூச்சுவிடும் பகுதி வழியாக மனித சொற்களை பேசுவதற்கு அதற்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. கீச்சொலி, வலுவான விசில் சத்தம், வெறுப்பை குறிக்கும் கண்டன குரல்களும் ஹலோ, அமி என்ற சொற்களும், ஒன், ட்டூ, த்ரி எண்ணுவது போன்ற சொற்களும் ஒலிப்பதிவு மூலம் கேட்கும் விதத்தில் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

கில்லர் திமிங்கலத்தின் "மொழி வழக்கு"

தங்களுக்கே உரித்தான மொழி வழக்கோடு குழுக்களாக இந்த கில்லர் திமிங்கலங்கள் வாழ்ந்து வருகின்றன.

கடலில் அதனை போன்ற விலங்கின உறுப்பினர்களை போல இவற்றாலும் பேச முடியும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இதனை இன்னும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டியுள்ளது.

கில்லர் திமிங்கலங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"நாங்கள் ஆய்வு மேற்கொண்ட, கடல்வாழ் உயிரினப் பூங்காவில் வாழும் கில்லர் திமிங்கலங்கள் பிற கில்லர் திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியை கற்றுக்கொள்ளும் திறமையுடையது என்பதை அறிந்தோம்" என்று டாக்டர் கால் கூறினார்.

"எனவே, கடல்வாழ் உயிரினங்களில் பிற கில்லர் திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியை இந்த வகை கில்லர் திமிங்கலங்கள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றன என்பதற்கு முழுமையான விளக்கமான முடிவுகளையும், அவை எவ்வாறு அவற்றின் மொழி வழக்கை வளர்க்கின்றன என்பதையும் இந்த ஆய்வு முழுமையாக வழங்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சொல்வதை கேட்டு திரும்ப சொல்வது என்பது மனிதர் பேசும் மொழியின் முத்திரையாக உள்ளது. இருப்பினும், பிற விலங்குகள் இந்த திறமையை கொண்டிருப்பது மிகவும் அரிதானதாகும்.

பிற உயிரினங்கள் மற்றும் சக உயிரினங்களின் ஒலிகளை அப்படியே ஒலிக்க செய்யும் சில பாலூட்டிகளில் டால்பின்கள் மற்றும் பெலுகா திமிங்கலங்களும் (வெள்ளை திமிங்கலங்கள்) உள்ளன.

பயிற்சியாளர்படத்தின் காப்புரிமைVALERY HACHE/AFP/GETTY IMAGES

கிளிகளை போல சில பறவைகள் மனிதரின் சொற்களை சொல்லும் திறமை கொண்டவை. சில காக்கை குடும்ப பறவைகளுக்கும் இந்த திறமை உள்ளது.

"விக்கி என்கிற இந்த கில்லர் திமிங்கலத்தோடு அடிப்படை "உரையாடல்கள்" நிகழ்த்துவது ஒரு நாள் நனவாகலாம்" என்று இணை ஆய்வாளரான ஸ்பெயினின் மாட்ரிட்டிலுள்ள கம்புளுடென்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜோஸ் அப்ராம்சன் தெரிவித்துள்ளார்.

"ஆம், என்ன விஷயங்கள் என்று அடையாள குறிப்புக்கள், விளக்கங்கள் நீங்கள் வைத்திருந்தால் இது நடைபெறலாம்" என்று தெரிவிக்கும் அவர் "இந்தப் பொருளை எனக்கு கொண்டு வா, அல்லது இந்தப் பொருளை அதற்கு மேலேயோ, கீழேயே வை, போன்ற சொற்டொடர்களை அமெரிக்க சைகை மொழியை பயன்படுத்தி, சாம்பல் நிற கிளி மற்றும் டால்பின்களுக்கு கற்பிக்கும் ஆய்வு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இருப்பினும், விலங்குகளிடம் மனிதரின் கருத்துக்களை புகுத்துவது தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"விலங்குகளுக்கு மனித மொழியை கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு விலங்கும் அதனுடைய சுற்றுச்சூழலில் தொடர்பாடல் செய்யும் இயற்கையான வழியை புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் நாம் அதிகப் பயன் பெறலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்டையில் கெட்டிக்கார விலங்கு

தன்னுடைய மூச்சுவிடும் பகுதியை நீருக்கு மேலே காற்று வெளியில் வைத்துக் கொண்டு ஓரளவு தண்ணீரில் மூழ்கியபடி "விக்கி" என்கிற இந்த கில்லர் திமிங்கலம் ஒலிகளை எழுப்பியுள்ளது.

கில்லர் திமிங்கலங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தண்ணீருக்குள் இருந்தபோது எழுப்பிய ஒலி வித்தியாசமானதாக இருக்கலாம். இது வெறுமனே ஒரேயொரு திமிங்கலமாக இருப்பதால், கடல்வாழ் உயிரினங்களில் இது போன்று அதிக கில்லர் திமிங்கலங்கள் இந்த திறமையை கொண்டுள்ளனவா என்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறமுடியாமல் உள்ளனர்.

கில்லர் திமிங்கலங்கள் அல்லது அர்காஸ் எனப்படும் திமிங்கலங்கள், டால்பின்களில் மிகவும் பெரியவை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த வேட்டையாடும் உயிரினம் இதுவாகும்.

சீல்கள், கடல் சிங்கங்கள் போன்ற கடல்வாழ் பாலூட்டிகளையும், ஏன், திமிங்கலங்களையும் கூட இந்த கில்லர் திமிங்கலங்கள் சாப்பிடுகின்றன. பனிப் பகுதியில் இருக்கும் சீல்களை கூட பிடித்து கொள்ளும் திறமை கொண்டவையாக இவை அறியப்படுகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகள் "புரொசீடிங்ஸ் ஆப் த ராயல் சோசைட்டி ஆப் லண்டன் பி" என்கிற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

ஈழத்து நாடகக்கலை முன்னோடிகளில் ஒருவரான அமரர் நடிகமணி V.V.வைரமுத்துவின் பிறந்த தினம் இன்றாகும்

 

Bild könnte enthalten: 1 Person, machen Sport und im Freien

 

தனது பிறந்தநாளன்று டெஸ்ட் சதமடித்த முதலாவது இலங்கை வீரராக இன்று சாதனை படைத்த இளம் வீரர் குசல் மென்டிசுக்கு இன்று 23வது பிறந்தநாள்.
Happy Birthday 
Kusal Mendis


இன்னும் சதங்களும் சாதனைகளும் படைத்து வளரட்டும் குசல்.

இன்று 196 ஓட்டங்கள் எடுத்தார்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

ஹிந்தி நடிகை ஷமிதா ஷெட்டியின் பிறந்தநாள்.
Happy Birthday Shamita Shetty

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.