Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12697044_980811305300897_859284789728188

 
 

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் நட்சத்திரம் மார்லன் சாமுவேல்ஸின் பிறந்தநாள்.
Happy Birthday Marlon Samuels
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

dot1.jpg  `ட்விட்டரில் 1 கோடி ஃபாலோயர்களைத் தொட்ட முதல் தமிழர், முதல் தென் இந்தியர்’ என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கெனவே ஃபேஸ்புக்கிலும் 1 கோடி ரசிகர்களைத் தாண்டியவர் என்கிற சாதனையும் ரஹ்மான் வசமே. ட்விட்டரில் 27 லட்சம் ஃபாலோயர்களுடன் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் இருக்க, மூன்றாவது இடத்துக்கு தனுஷ், த்ரிஷாவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. த்ரிஷாவைவிட 40 ஆயிரம் ஃபாலோயர்ஸ் தனுஷுக்கு அதிகம்! இசைத்தமிழன் ராக்ஸ்!

p36a.jpg

dot1.jpg  சச்சின், அமிதாப், ஐஸ்வர்யா ராய் என நம்ம ஊர் பிரபலங்கள் முதல் உலகப் பிரபலங்கள் பலரும் மெழுகுச்சிலைகளாக நிற்கும் இடம் லண்டன் `மேடம் டுசாட்ஸ்' மியூசியம். உலகின் பல இடங்களில் கிளைகளை அமைத்துவரும் மியூசிய நிர்வாகம், அடுத்து டிக் அடித்திருப்பது டெல்லியை. அடுத்த வருடம் முதல் பொதுமக்களின் பார்வைக்கு வரவிருக்கும் இந்த மியூசியத்தின் முதல் மாடலாக போஸ் தர இருப்பவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அம்மாவுக்கு ஒரு சிலை பார்சல்ல்ல்!

dot1.jpg   கோலிவுட் டைம்லைனுக்கு ஏற்ப பேய் கதையுடன் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் செல்வராகவன். கெளதம் மேனன் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை இயக்குகிறார் செல்வா. ரெஜினா, நந்திதா என இரண்டு ஹீரோயின்கள். மூன்று இயக்குநர்கள் இணையும் படம் என்பதால், எதிர்பார்ப்பு எகிறுகிறது. இது ஃபேன்டசி பேய்!
 

dot1.jpg   ஹ்ரித்திக் ரோஷன் - கங்கனா ரனாவத் சண்டைதான் பாலிவுட்டின் சமீபத்திய சென்சேஷன். `ஹ்ரித்திக் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்குக் காரணம் கங்கனாதான்' எனச் செய்திகள் முளைத்தபோது, இருவருமே அதை மறுக்கவில்லை. இப்போது திடீரென கங்கனா, ஹ்ரித்திக்கை தனது முன்னாள் காதலன் என மறைமுகமாகச் சொல்ல, பற்றிக்கொண்டது பரபரப்பு. ` `ஆஷிக் 3' படத்தில் இருந்து உங்களை நீக்கியதற்கு, ஹ்ரித்திக் ரோஷனுடனான சண்டைதான் காரணமா?' எனக் கேட்டதற்கு, `மீடியாவின் கவனம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக, என் `எக்ஸ்' இதுபோன்ற அறிவற்ற விஷயங்களைப் பரப்புகிறார்' என கங்கனா சொல்ல, ‘யாருடன் வேண்டுமானாலும் எனக்குக் காதல் வரும். ஆனால், நீங்கள் சொல்லும் நபருடன் எப்பவுமே வராது' என ஹ்ரித்திக் ட்விட்டரில் கொந்தளிக்க, டைம்லைன் முழுக்கப் பரபரா! காதலுக்குப் பின் மோதல்!

dot1.jpg   `வருடத்துக்கு, சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்டிக்குகள் கடலுக்குள் வந்துசேர்கின்றன. இதே அளவு தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் கடலுக்குள் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்' என எச்சரிக்கிறது உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு. கடலுக்குள் பிளாஸ்டிக்குகளைக் கொட்டும் நாடுகளில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகள்தான் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. `விரைவில் இந்தியாவும் இந்த டாப் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும்’ என்கிறார்கள். பிளாஸ்டிக் எமன்!

VIKATAN

  • தொடங்கியவர்

12633697_980811801967514_874159692770651

இந்தியக் கிரிக்கெட் அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் புவனேஷ் குமாரின் பிறந்தநாள்
Happy Birthday Bhuvaneshwar Kumar

12657421_980808128634548_510364290757768

ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் இன்று..
அமிதாப்பின் புதல்வர், ஐஸ்வர்யா ராயின் கணவர் என்பது அபிஷேக்கின் மேலும் சிறப்பான அடையாளங்கள்.

வாழ்த்துக்கள் அபிஷேக்.
Happy Birthday Abhishek Bachchan

  • தொடங்கியவர்

12644943_1035793329813014_26241002339882

"செம க்யூட் டாடி விஜய்யைப் பார்த்தீங்களா!"

  • தொடங்கியவர்

காதலர் தினம் கொண்டாட ஏற்ற நகரம் : உலகிலேயே' ரொமான்டிக் சிட்டி' பாரீஸ்!

 

காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் உலகின் ரொமான்டிக் நகரமாக பாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்தாலும் இந்த பிரெஞ்சு தலைநகருக்கு உலக மக்களிடையே சற்றும் மவுசு குறையவில்லை. காதலர் தினம் கொண்டாட ஏற்ற முதல் 10 நகரங்கள் பட்டியலில் பாரீஸ் நகரமே சிறந்தது என  69 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

paris%20.jpg

இந்த பட்டியலில் 2வது இடம் இத்தாலி தலைநகர் ரோமுக்கு கிடைத்துள்ளது. இந்த நகருக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தையும் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரம் பெறுகிறது.  இந்த நகரம் 43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நியூயார்க் 26 சதவீதமும் பார்சிலோனா 24 சதவீதமும் ரியோடி ஜெனிரோ 23 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.அடுத்த நான்கு இடங்களை சான்பிரான்ஸிஸ்கோ, கான்கன், லண்டன், வியன்னா நகரங்கள் பெற்றுள்ளன.

டேட்டிங் செல்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் 'ஹாலிவுட் புகழ்' லாஸ் ஏஞ்சல்ஸ் முதலிடம் பிடிக்கிறது. இந்த நகருக்கு 41 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தில் நியூயார்க் வருகிறது. தொடர்ந்து மியாமி, பாரீஸ், ரோம், ரியோடி ஜெனிரோ, லாஸ் வேகாஸ், சான்பிரான்சிஸ்கோ, ஃப்ளோரன்ஸ், பார்சிலோனா ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வருகின்றன.

உலகிலேயே 'செக்ஸியஸ்ட்' சிட்டி வரிசையில் பாரீஸ் 61 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தை பெறுகிறது. அடுத்த இடத்தை பெற்றுள்ள பிரேசிலின் ரியோடி ஜெனிரோவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. ஃப்ளேரன்ஸ், மியாமி, லாஸ்வோகாஸ் ஆகியவை பிற செக்ஸியஸ்ட் நகரங்கள்.

ஜெர்மனியை சேர்ந்த ஜி.எப்.கே என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

VIKATAN

  • தொடங்கியவர்

12688190_10154294563119578_4310476902395

  • தொடங்கியவர்

 ரவீந்திர ஜடேஜா - ரிவாபா நிச்சயதார்த்தம்

 
RAVINDRA_JADEJA_EN_2725133f.jpg
 

இந்திய அணியின் நட்சத்திர ஆல -ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ரிவாபா சோலாங்கி என்னும் இயந்திரவியல் பொறியாளரை மணக்க உள்ளார். அவர்களின் நிச்சயதார்த்தம், சொந்த ஊரான ராஜ்காட்டில் நடைபெற்றது.

RAVINDRA_JADEJA_EN_2725134a.jpg

பொறியியல் படிப்பை முடித்த ரிவாபா, டெல்லியில் யூபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சிப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

RAVINDRA_JADEJA_EN_2725132a.jpg

jageja_2725105g_2725137a.jpg

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன், ஜடேஜா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்

RAVINDRA_JADEJA__2_2725135a.jpg

ஜடேஜாவின் ஜட்டூ உணவகத்தில், நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.

RAVINDRA_JADEJA_EN_2725131a.jpg

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 
 

10 செகண்ட் கதை

'இன்றைக்காவது மகன் கேட்ட 'லவ் பேர்ட்ஸ்’ வாங்கிவிட வேண்டும்’ என யோசித்துக்கொண்டே அலுவலக லிஃப்ட்டில் ஏறிய நான், பவர் ஷட் டௌன் ஆகி உள்ளே சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு, பின் வெளியே வந்த அந்த நிமிடம்... பறவைகள் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்!

VIKATAN

  • தொடங்கியவர்

கிச்சன் கேபினட் : " ஜக்கமா சொல்றா..! ”

 

  • தொடங்கியவர்

நாங்கள் ஏன் நகங்களைக் கடிக்கின்றோம்?

  • தொடங்கியவர்

பிப்ரவரி 6: பாப் மார்லி எனும் இசைப்போராளி பிறந்த தின சிறப்பு பகிர்வு!
 

12670198_1067831959942260_34530018842729

பாப் மார்லி எனும் இசைப்போராளி பிறந்த தினம் பிப்ரவரி ஆறு. அப்பா ஆங்கிலேயர் அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்ரிக்கர் .உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர் . அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார் ; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார் .

அம்மா எவ்வளவோ கடினப்பட்டு படிக்க வைத்தார் .இவரின் நாட்டமோ இசைமீது போனது . ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது ; ரப்பர் தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கப்பட்டார்கள் . மார்லி தெருவோரம்,கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார் ,தன் இசையால் பிரபலம் ஆனார் ;ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார் ;ஒழுங்காக பணம் வர ஆரம்பித்தது .

அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது ;ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார் ;எளிய மக்களின் இசையாக பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்க பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு
வழங்கியது.

நாடு முழுக்க வன்முறை சூழல் நிறைந்திருந்த பொழுது அன்பு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வதாக இவரின் பாடல்கள் இருந்தன. 'அன்பினால் ஒரே உலகம் செய்வோம் !' என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன . "கோபம் குறை ! போர்களில் வலிமை பெறு !" என்று அவரின் கீதங்கள் அறிவுறுத்தின.

இவர் அமெரிக்கா போன பொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள் . காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து
நாடுவந்து சேர்ந்தார் .

பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர் ; பலநாள் தன் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் என பூரிப்பார் . இறப்பதற்கு முன்னர் தன் மகனிடம் ,"பணத்தால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது !" என்று சொன்னார். அவரின் மறைவுக்குப்பின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது ; அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மில்லினியத்தின் சிறந்த இசைக்கொர்வைகளாக வெள்ளையர்களின் பத்திரிக்கைகளால் கொண்டாடப்படுகின்றன .

போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது .விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர் ;பாடினார் . .80,000 பேர் திரண்டார்கள் ...

ஸ்மைல் ஜமைக்கா இசைநிகழ்வின் பொழுது "நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா ?"எனக்கட்டுகளோடு வந்த இவரை கேட்ட பொழுது "உலகத்துக்கு தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும் ?"எனக்கேட்டார். அதுதான் மார்லி

vikatan

  • தொடங்கியவர்

பெண்களுக்கு எதிராக இப்படியும் ஒரு சடங்கு :இனிமேலும் அரங்கேறலாமா?

 

பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. அதில் பெண்கள் பிறப்புறுப்பை சிதைக்கும் சடங்கும் ஒன்று. என்ன ஏதுவென்று அறியாத வயதில் கிட்டத்தட்ட 6 மற்றும் 7வது வயதிலேயே ஆப்ரிக்க நாடுகளில் இது போன்று பெண்கள் பிறப்புறுப்பை சிதைக்கும் சடங்கினை நடத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் மத நம்பிக்கை காரணமாக இத்தகைய கொடூர செயல்களில அவர்களது குடும்பத்தினரே ஈடுபடுகின்றனர்.

wom.jpg

அந்த குடும்பத்தில் உள்ள மூத்த பெண் உறுப்பினர் ஒருவரே பிளேடு, கத்தி போன்றவற்றால் துடிக்க துடிக்க இத்தகைய கொடூர காரியத்தை அரங்கேற்றுகின்றனர். அதாவது இந்த வயதில் சிறுமிகளின் பிறப்புறுப்புகளின் இருக்கும் சதை பகுதிகளை வெட்டி எடுத்து விடுகின்றனர். பின்னர் சிறுநீர் கழிக்க, மாதவிடாய் கழிவுகள் மட்டும் வெளியேற சிறு துவாரம் மட்டும் இருக்கும்.

அத்துடன் பாதுகாப்பற்ற  முறையாயில் செய்யப்படும் இந்த வெட்டி எடுக்கும் முறையால் அந்த சிறுமிகள் படும் பாட்டினை சொல்ல முடியாது. பல சிறுமிகள் தொற்று நோய் ஏற்பட்டு, இறப்பதும் உண்டு. ஆனால் அதனையெல்லாம் யாரும் சட்டை செய்வதித்லை. அதுமட்டுமல்ல, உடல் உறவின் போதும், குழந்தை பேற்றின் போதும் இந்த  பெண்கள் அனுபவிக்கும் கொடுமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் 7 கோடி சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது. உலகம் முழுக்க 20 கோடி பெண்களுக்கு இது போன்று பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைய நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் எந்த பயனும் இல்லையென்றே தெரிய வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது. 'யுனிசெப் ' அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் எகிப்து, இந்தோனேஷியா, எத்தியோப்பியா நாடுகளில் உள்ளனர். அதுபோல் வறுமையில் உழலும் சோமாலியாவில் பெண்கள் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்தியாவிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தில் ஒரு மதப்பிரிவினர் ரகசியமாக இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இந்த பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் இது தொடர்பாக தான் சார்ந்த மதத் தலைவருக்கு கடிதம் எழுதியது இணையங்களில் வெளியானது. அப்போதுதான் இந்தியாவிலும் இந்த கொடுமை அரங்கேறுவது வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இன்று பிப்ரவரி 6- பெண்கள் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாள்!

vikatan

  • தொடங்கியவர்

amma%20sticker%20one%20.jpg

amma%20sticker%20marraige.jpg

மணமக்கள் நெற்றியிலும் 'அம்மா ஸ்டிக்கர்'... அதிமுகவினர் நடத்திய அடடே திருமணம்!

  • தொடங்கியவர்

குளியலறை கண்ணாடியிலும் இனி 'கூகுள்' பண்ணலாம்... அமெரிக்கரின் அசத்தல் ஆன்ட்ராய்ட்!

 

max%20bravun%20one%281%29.jpgநியூயார்க்: சினிமாக்களில் வருவது போல குளியலறை கண்ணாடியிலும் ஆன்ராய்ட் தொழில் நுட்பத்தை உருவாக்கி  கூகுள் என்ஜினியர் ஒருவர் அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளார்.   

இந்த சாதனை குறித்து டெக்டைம்ஸ்  என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், " கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் மேக்ஸ் பிரவுன் என்பவர்,  பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, குளியலறை கண்ணாடியில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை பதிவேற்றி இயக்கி, வெற்றி பெற்றுள்ளார்.

இதில், சாதாரண கண்ணாடியை ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்ற,  டூ வே மிரர் என்ற கண்ணாடியை பயன்படுத்தியிருக்கிறார் பிரவுன்.

அதுதவிர, கன்ட்ரோலர் போர்டு, டிஸ்பிளே பேனல், எலக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள், அலங்கார பொருட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், வானிலை குறித்த அப்டேட்கள், குரல் மூலமாக கூகுள் இணையதளத்தில் தேடும் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில், இன்னும் பல நவீன வசதிகளை இணைக்கவும் பிரவுன் முடிவு செய்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்மார்ட் தொழில் நுட்பம் என்பதால்,  அனைவரையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

12672029_981455228569838_466665560664022

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி துடுப்பாட்ட வீரர் டரன் பிராவோவின் பிறந்தநாள்.
Happy Birthday Darren Bravo

  • தொடங்கியவர்

முதல் நாளிலேயே வேதாளம் சாதனையை முறியடித்த தெறி

 

தெறி படத்தின் டீசர், வெளியான 24 மணி நேரத்தில் 20 லட்சம் ஹிட் அடித்த நிலையில், தற்போது  31 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஓரிரு முறை தள்ளிப்போடப்பட்டு நேற்று வெளியான தெறி படத்தின் டீசருக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல வரவேற்பு. சில மணி நேரங்களில் பத்து லட்சம் பேர் பார்த்திருந்தனர்.

Theri%20.jpg

டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே 20 லட்சம் பேர் அதனைப் பார்க்க, இதுவரை தமிழ் படங்களில் யூடியுபில் அதிக ஹிட் அடித்த ரஜினியின் கோச்சாடையான் விக்ரம் நடித்த 'ஐ' ஆகிய படங்களைத் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.   

அதேபோல பதினான்கு இலட்சம் லைக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தது அஜித்தின் வேதாளம்  டீசர். அந்தச் சாதனையை தெறி முதல்நாளிலேயே முறியடித்துவிட்டது. முப்பது மணி நேரத்தில் பதினேழு இலட்சம் லைக்குகள் பெற்றிருக்கிறது தெறி டீசர்.

VIKATAN

  • தொடங்கியவர்

12525353_981452698570091_308609141923787

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள்நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும், தலைவரும் விக்கெட் காப்பாளருமாக விளங்கிய பிரெண்டன் டெய்லரின் பிறந்தநாள்

Happy Birthday Brendan Taylor

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்

2_2725350a.jpg

1_2725351f.jpg

  • தொடங்கியவர்

டைட்டஸ் (Titus)... இந்த அமெரிக்கச் சுட்டியின் வயது நான்கு. இரண்டு வயதில் இருந்தே, கூடைப் பந்தைக் குறி  பார்த்து வீசுவதில் கில்லி. அதுவும் எப்படி? நகரும் குட்டிக் காரில் அமர்ந்தபடியே வீசுகிறான். இரண்டு கைகளிலும் இரண்டு பந்துகளை எடுத்து, இரண்டு வலைகளில் ஒரே சமயத்தில் வீசுகிறான். ஐந்தாம் மாடியில்  கட்டடத்தின் உச்சியில் இருந்து வீசுகிறான். பந்தை சுவற்றில் லாகவமாக அடிக்க, திரும்பி வரும் பந்து, வலையில் விழுகிறது. டைட்டஸ் பந்தை எப்படி போட்டாலும், ரொம்ப சமர்த்தாக வலைக்குள் மிஸ் ஆகாமல் விழுவதைப் பார்க்கப் பார்க்க, நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள்.

 

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

ந்து, கிறிஸ்தவம்... இரு முறைகளிலும் மகள் சாயாவின் திருமணத்தை நடத்திய மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவீனா டாண்டன். தனது திருமணத்துக்கு முன்னரே 1990-ம் ஆண்டு பூஜா, சாயா என இரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவந்தார் ரவீனா. சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மகள் பூஜாவுக்குத் திருமணம் முடித்து, ஏற்கெனவே பாட்டியும் ஆகிவிட்டார் ரவீனா!

p24a.jpg

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார் த்ரிஷா. `அரண்மனை-2’ படத்தில் பேய் வேடத்தில் பயமுறுத்தி இருக்கும் த்ரிஷா, அடுத்ததாக தனுஷுடன் நடிக்கும் `கொடி' படத்தில் வில்லியாக நடிக்கிறார். `நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணன் போல, த்ரிஷாவுக்கு இந்த ரோல் இருக்குமாம்!

p24b.jpg

vikatan

  • தொடங்கியவர்

12642838_1684797071788848_81048438283510

அழகிய சூரிய அஸ்தமனம்

  • தொடங்கியவர்

உலகை அச்சுறுத்திய 20 நோய்கள்

 

 
disease_2726506f.jpg
 

மனிதக் குல வரலாறு முழுவதும் போரால் கொல்லப்படுபவர்களைவிடவும் நோயால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம். சாதி, மதம், இனம், நிறம் என எந்த வேற்றுமையையும் நோய்கள் பார்ப்பதில்லை. பண்டைக் காலம் முதல் தற்போதுவரை உலகை ஆட்டிப்படைத்த 20 ஆட்கொல்லி நோய்கள்:

இதயக் கோளாறு

இன்றைய தேதிக்கு இதயக் கோளாறுதான் உலகில் மிக அதிக எண்ணிக்கையில் இறப்புக்கான காரணியாக இருக்கிறது. 2012-ல் 1.75 கோடி பேர் பலியாகியுள்ளனர். உலகில் நிகழும் 10 இறப்புகளில் மூன்றுக்கு இதய நோய்களே காரணம். இதயக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம் ஏழை, நடுத்தர வருமானமுள்ள நாடுகளிலேயே நிகழ்கின்றன.

காச நோய்

ஒவ்வொரு நொடியும் ஒருவர் காச நோய் தொற்றுக்கு ஆளாகிறார். 2012-ல் மட்டும் 13 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். காச நோய் பாக்டீரியா நுரையீரலையே அதிகம் தாக்கும் என்றாலும், மூளை, தண்டுவடம், சிறுநீரகம் போன்றவற்றையும் தாக்கலாம்.

நுரையீரல் புற்றுநோய்

உலகில் அதிகமானோர் இறப்பதற்குக் காரண மாக இருக்கும் புற்றுநோய் வகைகளுள் ஒன்று. ஆண்டுக்கு 13.8 லட்சம் பேர் பலியாகின்றனர். இந்த நோய் தாக்குவதற்கு 70 சதவீதக் காரணம் புகை பிடிப்பதுதான் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

ஹெச்.ஐ.வி.

நோயை எதிர்த்து உடல் போராடுவதற்கு உதவியாக இருக்கும் ரத்த வெள்ளையணுக்களை ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குகிறது. இந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதேநேரம் இந்த நோய்த்தொற்றின் இறுதி நிலையான எய்ட்ஸுக்கு இதுவரை 3.9 கோடி பேர் பலியாகியுள்ளனர்.

தட்டம்மை (Measles)

காற்று மூலம் மிக எளிதில் தொற்றக்கூடிய நோய் இது. தடுப்பூசி மூலம் வெற்றிகரமாகப் பல பகுதிகளில் தடுக்கப்பட்டு விட்டாலும், ஆப்பிரிக்கா, ஆசியா, கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இன்னமும் இந்த நோய் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 22 பேர் பலியாகி வருகின்றனர்.

காலரா

கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, ஒரு சில மணி நேரத்தில் இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடியது காலரா. சுத்தமான தண்ணீர் கிடைக்காத நாடுகளில் இந்த நோய் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் முதல் 50 லட்சம் பேர் காலராவால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தொழு நோய்

தொழுநோய் குணப்படுத்தக் கூடியது என்றாலும் வரலாற்று ரீதியிலும் இப்போதும் பல நாடுகளில் தொழுநோயாளிகள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப் பட்டே வருகின்றனர். மெதுவாகப் பாதிப்புகளை வெளிக்காட்டத் தொடங்கும் இந்த நோய் தோலையும் நரம்புகளையும் பாதிக்கும். 2012-ம் ஆண்டு மட்டும் 2.5 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளைக்காய்ச்சல் (Meningitis)

Meningococcal meningitis என்ற பாக்டீரியா மூளை, தண்டுவடத்தைச் சூழ்ந்துள்ள சவ்வுகளில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக ஒரு வயது முதல் 30 வயதுள்ளவர்களையே இது அதிகம் தாக்கும். ஆரம்பகட்டத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தாலும்கூட, 5 முதல் 10 சதவீதமானவர்கள் இதற்குப் பலியாகி விடுகிறார்கள்.

கக்குவான் இருமல்

2008-ம் ஆண்டில் 1.6 கோடி பேர் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டார்கள். இதில் 95 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் 1.95 லட்சம் பேர் குழந்தைகள்.

சிபிலிஸ் (Syphilis)

எளிதாகச் சிகிச்சை அளிக்கக்கூடிய இந்த நோய், உடலுறவால் எளிதில் பரவக்கூடியது. இறப்பு அல்லது மூளை, இதயப் பாதிப்புகளை இந்த நோய் உருவாக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் 1.2 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர்.

எபோலா

காங்கோவில் எபோலா நதி அருகே 1976-ல் இந்த நோய் முதலில் தோன்றியதால் இந்தப் பெயர் வந்தது. உடல் திரவங்கள் மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு நேரடியாகக் கடத்தப்படும் வைரஸால் இந்த நோய் தொற்றுகிறது. தசை வலி, பலவீனம், கடும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள். இந்த நோய்த்தொற்றால் இறப்பதற்கு உள்ள வாய்ப்பு 90 சதவீதம்.

பன்றிக் காய்ச்சல் (Influenza A-H1N1)

பன்றி காய்ச்சல் 2009-ம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகச் சுகாதார நிறுவனக் கணிப்புகளின்படி 18,550 பேர் இறந்துள்ளனர். அதேநேரம், இந்தக் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம்.

மலேரியா

கொசு கடியால் தொற்றும் நோய், கடுமையான காய்ச்சலுக்கான அறிகுறிகளையே காட்டும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இறப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 90 சதவீத இறப்பு ஆப்பிரிக்காவின் சஹாராவை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் குழந்தைகளிடையே நிகழ்கிறது.

மஞ்சள் காய்ச்சல் (Yellow fever)

கொசு கடிப்பதால் பரவும் நோய்களுள் இதுவும் ஒன்று. தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் மஞ்சள் காய்ச்சல் அதிகம் தாக்குகிறது. இந்த நோயால் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் கணிப்பு.

நாள்பட்ட நுரையீரல் நோய் (Chronic lung disease)

மூச்சுக்குழாய் அலர்ஜி, காற்றறைகள் சிதைந்து போதல் (emphysema) ஆகிய இரண்டு நாள்பட்ட நுரையீரல் நோய்களும் உலகெங்கும் மூன்றாவது மிகப் பெரிய இறப்புக் காரணியாக 2030-ல் இருக்கும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

பெரியம்மை

பண்டைக் காலத்தில் பெரிதும் அச்சுறுத்திய நோய் பெரியம்மை. இந்த நோய் தாக்கினால் இறப்பதற்கு உள்ள வாய்ப்பு 30 சதவீதம்தான். ஆனால், மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியது. உலகச் சுகாதார நிறுவனத்தின் தொடர்ச்சியான தடுப்பூசிகள் மூலம் 1977-ல் இந்த வைரஸ் மொத்தமாக ஒழிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே 50 கோடி பேரைப் பலி கொண்டது.

பிளேக் (Bubonic plague)

வரலாற்றின் மத்தியக் காலத்தில் மிகப் பெரிய பீதியைக் கிளப்பிய பிளேக் நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2.5 கோடி. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பரவிய இந்த நோய் காரணமாக, ஐரோப்பாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் பலியாகினர்.

ஸ்பானிய காய்ச்சல் (Spanish Flu)

உலகின் மோசமான தொற்றுநோய்களுள் ஒன்று ஸ்பானிய காய்ச்சல். 1918-1919-ம் ஆண்டுகளில் உலகில் 3 கோடி முதல் 5 கோடி பேர் வரை இதற்குப் பலியாகியுள்ளனர்.

சார்ஸ் (SARS)

தெற்கு சீனாவில் 2002-2003-ல் உருவான சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome - SARS) கடுமையான சுவாசக் கோளாறை உருவாக்கக்கூடிய ஒரு வைரஸ். கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே 37 நாடுகளில் பரவிப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியது. 8,000 பேர் பாதிக்கப்பட்டு, 774 பேர் பலியாகினர்.

பறவை காய்ச்சல்

சார்ஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தலாகப் பரவிய மற்றொரு வகை காய்ச்சல் இது. 2003-ல் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவிய பிறகு 421 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 257 பேர் பலியாகினர்.

tamil.thehindu.

38 minutes ago, நவீனன் said:

அழகிய சூரிய அஸ்தமனம்

மட்டக்களப்பில் ஒரு அழகான சூரிய அஸ்தமனம்.

ஆனால் இந்த மரமண்டைக்கு ஒரு விடயம் புரியவே மாட்டேங்குது - எப்படி கிழக்கு கரையோரத்தில் சூரிய அஸ்தமனம். மேற்கு கரையோரத்தில் (காலி முகத்திடலில்) எப்படி சூரிய உதயம். இந்த திரியைக் குழப்பாமல் யாராவது பதில் தாங்களேன்.

2e64o3r.jpg

  • தொடங்கியவர்

12694955_675631312539414_284579349393286

12657818_675631315872747_615886751842548

12643010_675631309206081_566185657506033

12654526_675631409206071_476627637683837

12695057_675631365872742_681333681600196

12592458_675631395872739_116394998714004

தரை விரிப்புகள்...

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 

 

facebook.com/nelsonxavier08: மூன்று மாணவிகள் தற்கொலை செய்து இறந்துபோனதாகச் செய்திகள் சொல்லும் கள்ளகுறிச்சி அருகே உள்ள சர்ச்சைக்குரிய சித்த மருத்துவக் கல்லூரியின் அனுமதியை ரத்து செய்து எட்டு ஆண்டுகள் ஆகிறதாம். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இதை இப்போதுதான் சொல்கிறது!

எட்டு ஆண்டுகளில், இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. பலமுறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். உயர் கல்வித் துறைச் செயலர், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வி நிலையம் என்ற அடிப்படையில் சலுகை மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே அரசுக்கு வரிகள் செலுத்தப்பட்டிருக்கும். தீயணைப்பு, குடிநீர், வருவாய், பொதுப்பணி என இன்னும் நூற்றுக்கணக்கான அரசுத் துறைகளும், ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளும் அந்தக் கல்வி நிறுவனத்தோடு தொடர்பில் இருந்திருப்பார்கள்.

மூன்று பெண்களின் மரணம் தொடர்பாக, ஆயிரக்கணக் கானவர்களின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. SVS கல்லூரி முதல்வரை மட்டும் கைதுசெய்ததன் மூலம் இந்தப் பிரச்னையை மொத்தமாகக் கைகழுவிவிட்டிருக்கிறது அரசு.

p99c.jpg

facebook.com/venkatesh.arumugam1: காந்தி இறந்த அன்று, `அவரைக் கொன்றவர் ஒரு முஸ்லிம்’ என வதந்தி எழுந்ததாம். ஆனால், நேருவும் படேலும்தான் அந்தத் தகவல் பரவாதபடி விரைந்து தடுத்தார்களாம்! # (என் மைண்ட்வாய்ஸ்) `நல்லவேளை... அப்ப ஃபேஸ்புக் இல்லை!’

facebook.com/VijendranRavi: `சும்மாதானே இருக்க... போய் மிளகாய், மல்லி அரைச்சிட்டு வா.’ # நாட்டுல எத்தனையோ படிப்பு இருந்தும் நான் ஏன் சார் இந்த Engineering படிப்பைப் படிச்சேன்?

facebook.com/Muthuraa: `கரு.பழனியப்பனை கட்சியில் இருந்து தூக்காம, பழ.கருப்பையாவைத் தூக்குனதுக்கே ஒரு கட்-அவுட் வைக்கலாம்’ என்கிறார் குமார்!

facebook.com/gkarlmax: கால் சென்டர்ல `நாம சொன்ன வேலை சீக்கிரம் நடக்குதா?'னுதான் உலகம் முழுக்க செக் பண்ணுவான். `கால் சென்டரே நடக்குதா?'னு செக் பண்ணிப் பார்த்து பெருமைப்படுற சம்முவம் நாமதான்!

facebook.com/VijendranRavi: `எதுவுமே நிரந்தரம் இல்லை’ என்ற வரிசையில் பரோட்டா மாஸ்டரும் கார் டிரைவரும் இணைகின்றனர். எவ்வளவு பண்ணாலும் தக்காளி பிச்சிக்கிட்டுப் போய்டுறானுங்க!

p99a.jpg

twitter.com/g4gunaa : வர்றவன் பூராம் லெக்பீஸாவே கேட்டா, `பூரான் பிரியாணி’ தான்டா செய்யணும்!

twitter.com/sundartsp:  பாஸ்போர்ட் வாங்குறதைச் சுலபமாக்கிட்டு, ரயில் டிக்கெட் வாங்குறதைச் சிரமமாக்கிட்டாங்க!

twitter.com/tamilhumourjoke: அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார்!

twitter.com/mekalapugazh:  `முடியை ஒட்ட வெட்டுப்பா' என்பதும், `சட்டையப் பெருசா தைப்பா' என்பதும் அந்தக் காலப் பொருளாதாரச் சிந்தனைகள்!

twitter.com/dineshsmc: நாட்டுக்கு நல்ல நேரம் மிக விரைவில் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின் # கடைசியில் கிளி ஜோசியம் பார்க்கிற அளவுக்கு போயிட்டீங்களே தளபதி!

twitter.com/Writer_Samy: அப்பளத்தை உடைச்சித்தான் சாப்பி டறோம். ஆனால் யாரும் உடைந்த அப்பளத்தை வாங்குவது இல்லை!

twitter.com/deebanece: தேடலில்  கொடுமையானது... பஸ் ஸீட்டுக்கு அடியில் செருப்பைத் தேடுவது. # சார் கொஞ்சம் காலை நகர்த்துங்க!

twitter.com/chevazhagan1: போனை எடுத்தா `ஹலோ’னுதானே சொல்லணும்... அதுதானேய்யா ஒலக வழக்கம்? எம் பொண்டாட்டி ஒருவாட்டிகூட `ஹலோ’ சொன்னதே இல்ல. எப்பப் பாரு `எங்க இருக்கீங்க?’னு கேட்குறா!

p99b.jpg

twitter.com/maninilats : தனித்துப் போட்டியிடவும் தயார் - சரத்குமார்  # ஒரே ஒரு குருக்கள் வர்றார்... வழிவிடுங்கோ!

twitter.com/thoatta : இயேசுநாதருக்குப் பிறகு கைய ரொம்ப நேரம் விரிச்சுவெச்சிருந்தது, இந்த பாண்டியா பய ஓவர் போடுறப்ப நின்ன அம்பயர்தான் # எத்தனை வைடு!

twitter.com/Itzmejaanu: எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குற துக்குள்ள பூசாரியைவிட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்!

twitter.com/Disisvki:  இன்னமும் முட்டாய்தானா? ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை வளர்த்துவிடுங்கடா!

twitter.com/_blanktexts: `கரம் சிரம் புறம் நீட்டாதீர்’லாம்கூட திருக்குறள்தான்னு நம்பிட்டிருந்தேன்!

twitter.com/Thiru_navu: நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள்... இவர்களையே சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!

p99d.jpg

twitter.com/sheik_twitts: பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும் தர மாட்டேங்குது. வாட்ஸ்அப் நம்பர் கேட்டாலும் தர மாட்டேங்குது.    # இப்டி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்!

twitter.com/MrMarmaYogi:  சும்மாவே ஊர் சுத்திட்டு இருக்கோமேன்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிய பெருமை திரு ஸ்டாலின், திரு மோடி இருவரை மட்டுமே சேரும்!

twitter.com/urs_priya :  நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம் தெரிந்துகொள்ள ஓர் எளிய வழி... அவர்களிடம் ஓர் உதவி கேட்பது!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.