Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆபிரகாம் லிங்கன் 10

 

 
lincoln_2734074f.jpg
 

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்

அடிமைத்தனத்தையும் இனவெறிக் கொடுமையையும் தனது நேர்மையான செயல்பாடுகளாலும் நெஞ்சுரத்தாலும் ஒழித்துக்கட்டிய வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின் என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் (1809). தந்தை செருப்பு தைத்தல், தச்சுத் தொழில், உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

# சிறிய வயதில் இந்தச் சிறுவன் புத்தகங்களை சத்தமாக வாசிப்பதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிசயப்படுவார்கள். பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் யாரிடமாவது ஏதாவது புத்தகம் இருந்தால், எப்படியாவது கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து படித்து முடித்துவிடுவான், சிறுவன்.

# ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்றார். அந்த ஆசிரியர் தேர்வு நாளன்று ஒரு புத்தகத்தைக் கொடுத்து சில பக்கங்களை வாசிக்கச் சொன்னார். இந்தச் சிறுவனைவிட வயதில் மூத்த பையன்கள் வாசிக்க முடியாமல் திணறினார்கள். ஆபிரகாமோ மேடையில் சொற்பொழிவாற்றுவது போல கட கடவென வாசித்துக் காட்டினான்.

# கரித்துண்டால் சுவரிலும் தரையிலும் எழுதிப் பழகினான். கட்டுரைகள் எழுதினான். குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்தான். 14 வயதில் ஒரு விவசாயியிடமிருந்த ‘தி லைஃப் ஆஃப் வாஷிங்டன்’ என்ற ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வாங்குவதற்காக 12 மைல் தூரம் நடந்து சென்றான். இந்த நூலை திரும்பத் திரும்ப படித்தான்.

# நேர்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுதல் ஆகிய குணாம்சங்களைக் கொண்டிருந்தான். நியு ஆர்லியன்சில் இவர்கள் வசித்தபோது, கறுப்பினத்தவர் விலைக்கு வாங்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும், சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு மனவேதனை அடைந்தார்.

# இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டபோது இவருக்கு வயது 15. தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது.

# அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அரசியலின் முதல் அஸ்திரமான பேச்சாற்றல் இவருக்கு கைவந்த கலை. ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்த பல தோல்விகளை அடுத்து, 25-வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

# அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். இது மற்றவர்களிட மிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது. 1860-ல் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863-ல் வெளியிட்டார்.

# இதை எதிர்த்தும் ஆதரித்தும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. 4 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசியது ‘கெஸ்டிஸ்பர்க் உரை’ என்று உலகப்புகழ் பெற்றுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 1864-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

# 1865-ம் ஆண்டு புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் பார்க்கச் சென்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள், ஏப்ரல் 15-ல் மரணமடைந்தார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், மனித குல வரலாற்றில் ஈடிணையற்ற சகாப்தமாக விளங்கிய லிங்கன் உயிரிழந்தபோது அவருக்கு வயது 56.

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
On 11.2.2016 at 8:56 PM, ஜீவன் சிவா said:

இது எனக்கில்லை.

யாருக்கு தொப்பி அளவோ அவர்கள் போட்டு கொள்ள வேண்டியதுதான்.:)

யார் என்றாலும் இந்த பழக்கத்தை பழகாமல் விடுவதே நல்லது..:)

  • தொடங்கியவர்

'டெக் வாலன்டைன்!'

 

youth_2734148f.jpg
 

> காதலர் தினத்தை முன்னிட்டு அன்பின் வலிமையை உணர்த்தும் பொன்னான மேற்கோள்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். எனில் 'பிரைனி கோட்' இணையதளம் உங்களுக்கு ஏற்றது. பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தகவல் சுரங்கமாக அறியப்படும் இந்த இணையதளத்தில் காதலர் தினம் தொடர்பான மேற்கோள்கள் தனிப்பக்கத்தில் பட்டியிடப்பட்டுள்ளன‌- http://www.brainyquote.com/quotes/topics/topic_valentinesday.html

site_2734150a.jpg

கவிஞர் மாயா ஏஞ்சலோவில் தொட‌ங்கி, ஷேக்ஸ்பிர்யர், பைரன் உள்ளிட்ட பலரது உருக வைக்கும் மேற்கோள்களை இதில் பார்க்கலாம்.

videos_2734149a.jpg

> காதலர் தினம் இப்போது அநேகமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலர் தினம் எங்கிருந்து, எப்படி உருவானது எனத் தெரியுமா? வரலாற்றுத் தகவல்களுக்குப் பெயர் பெற்ற 'ஹிஸ்டரி.காம்' இணையதளம் இதற்கான விவரங்களை வீடியோ விளக்கமாக அளிக்கிறது: http://www.history.com/topics/valentines-day/history-of-valentines-day/videos/bet-you-didnt-know-valentines-day#

தொடர்புடைய வீடீயோக்களாக சாக்லெட்டின் வரலாற்றையும், முத்தத்தின் விஞ்ஞானத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

game_2734152a.jpg

> காதலர் தினம் என்றால் சாக்லெட்டும், கொண்டாட்டமும் தானா? கொஞ்சம் விளையாட்டும் இருந்தால் சுவையாக இருக்கும் என நினைத்தால், 'சுடோகுவாலன்டைன்' இணையதளம் (http://www.sudokuvalentine.com/) காதலர் தின சுடோகு புதிர்களை அளிக்கிறது.

 

> வாழ்த்து அட்டைகள் இல்லாமல் காதலர் தினமா? அதற்கேற்ப, விதவிதமாக வாழ்த்து அட்டைகளை உருவாக்கித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன. 'திங்க்ஃபுல்' இணையதளம் கொஞ்சம் வித்தியாசமாக நீங்களே மின்னணு வாழ்த்து அட்டையை உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது. 'எச்.டி.எம்.எல்' உதவியுடன் வாழ்த்துத் தளமாகவும் தோன்றும் வாழ்த்து அட்டையை வடிவமைத்துக்கொள்ளலாம் என்கிறது இந்தத் தளம்:

https://www.thinkful.com/learn/valentines-day-ecard

 

app_2734153a.jpg

> ஸ்மார்ட்போன் காலத்தில் காதலர் தினம் தொடர்பான தகவல்களை உள்ளங்கையில் அளிக்கிறது 'வாலன்டைன்ஸ் டே' எனும் சிறப்புச் செயலி. காதலர் தின வரலாற்றில் தொட‌ங்கி, காதலர் தின கவிதைகள், காதல் ஜாதகம், காதல் மீட்டர் எனப் பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆண்ட்ராய்டு செயலி: https://play.google.com/store/apps/details?id=com.medoli.valentinesday

site_2_2734151a.jpg

> காதலர் தினத்தைக் கொண்டாடுவது எல்லாம் இருக்கட்டும். இந்த தினம் பற்றிய விவரங்களைப் பாடமாக நடத்தி மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? 'ஸ்டோரிபோர்ட்தட்' இணையதளம் இதற்கான வழிகாட்டி பாடத்தை அளிக்கிறது: http://www.storyboardthat.com/teacher-guide/valentines-day-activities

 

ஹேப்பி 'டெக் வாலன்டைன்ஸ் டே!'

tamil.thehindu

20 minutes ago, நவீனன் said:

'டெக் வாலன்டைன்!'

நாங்களெல்லாம் அப்பரின்ட பெல்டுக்கு பயந்து, அம்மாவின்ரை அகப்பைக் காம்புக்கு பயந்து, பெட்டையின்ர செருப்புக்கு பயந்து, பெட்டையின்ர அப்பனுக்கு பயந்து .....

என்ஜாய் குஞ்சுகளே.

  • தொடங்கியவர்

ஹாவ் பாவ் வில்லா என்கிற பெயர் பலருக்குக் கேள்விப்படாத பெயராக இருக்கலாம்.

ஆனால் பலதலைமுறை சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தப் பெயர் மிகவும் பிரசித்தமானது.

சீனத்தின் கிராமிய மற்றும் புராணக்கதைகளை சித்தரிக்கும் அச்சமூட்டக்கூடிய சிலைகள் இங்கே இருக்கின்றன.

தன் 13 வயதில் இதன் பராமரிப்பாளராக பணியில் சேர்ந்த தியோ வியோ செங், கடந்த 68 ஆண்டுகளாக இதை பராமரிப்பாளராக இருந்து வருகிறார்.

சிங்கப்பூரின் வித்தியாசமான பொழுதுபோக்கு பூங்காவுக்கும் தனக்குமான அரைநூறாண்டு காலத்துக்கும் அதிகமாக தொடரும் வித்தியாசமான பந்தம் குறித்த கதையை அவரே இங்கே விவரிக்கிறார்.

  • தொடங்கியவர்

பிப்ரவரி 13: உலக வானொலி நாள் இன்று.

12728849_1071925239532932_14003494075187

 

இந்நாளில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது...

vikatan

  • தொடங்கியவர்

12662432_10154317834929578_1793943685507

  • தொடங்கியவர்

மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றி சிகிச்சை அளிக்கும் மருத்துவர் 

 

பிரித்தானியாவின் மருத்துவர் ஒருவர் சேவை செய்யும் பொருட்டு தமது மிதிவண்டியில்  73 நாடுகளை சுற்றிவந்து சிகிச்சை அளித்து வருவது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

பிரித்தானியா மருத்துவரான ஸ்டீவென் ஃபெய்ப்ஸ்  சாகச பயணத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டதால் தனது வாழ்க்கையை எளிமைப்படுத்தவும் உலகை மிக நெருக்கமாக தெரிந்து கொள்ளவும்  தனது பணியை பிறருக்கு வழங்கவும் ஆசைப்பட்டதால் இந்த பயணத்தை ஆரம்பித்ததாகவும் இந்த பயணத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்தி இதுவரை ஐரோப்பா, மத்திய கிழக்கு பகுதி வழியாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

cycled_doctor_002.jpg

இந்த பயணங்களின் வாயிலாக பிரித்தானியா மருத்துவமனைகளில் பணிபுரியும்போது கிட்டாத பல அனுபவங்களை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தீவிர வறுமை, ஊட்டச்சத்தின்மை, எயிட்ஸ் போன்ற பாதிப்புகளால் சமூக்கத்தில் இருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ள மக்கள் என பலதரப்பினரை நேரிடையாக காண முடிந்தது ,கடந்த ஆறு ஆண்டுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் பல சம்பவங்களும் தாம் எதிர்கொண்டதாக தாம் தங்கியிருந்த கூடாரத்தின் வெளியே பல முறை நச்சுப்பாம்புகளும் சிங்கங்களும் உலாவுவதை கண்டதாகவும்,மலேசியாவில் தங்கியிருந்த போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், மற்றும் எகிப்தில் ஒரு கூட்டம் சிறுவர்களால் கடுமையாக தாக்கபட்டதாகவும் தெரிவித்தார்.

cycled_doctor_003.jpg

cycled_doctor_004.jpg

virakesari

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

நாங்களெல்லாம் அப்பரின்ட பெல்டுக்கு பயந்து, அம்மாவின்ரை அகப்பைக் காம்புக்கு பயந்து, பெட்டையின்ர செருப்புக்கு பயந்து, பெட்டையின்ர அப்பனுக்கு பயந்து .....

என்ஜாய் குஞ்சுகளே.

அப்பனுக்கு பயந்து.....  எதையும் செய்யாமல் விடவில்லையே, அத்தனையும் செய்திட்டோமே ஹா... ஹா. யார் சதுரர் கொலோ.....!

  • தொடங்கியவர்

ஒரு ஆணை எப்போதெல்லாம் பெண்களுக்குப் பிடிக்கும்? - 10 பாயிண்ட் லவ் செக் லிஸ்ட்!

 

ஹேண்ட்ஸமா, உயரமா, அம்சமா, வெயிட் வாலட் பார்ட்டிதான் பெண்களுக்குப் பிடிச்ச ஹீரோ மெட்டீரியல்னு நெனச்சீங்கன்னா, கண்டிப்பா நீங்க இன்னும் டைனோசர் காலத்துலயே இருக்கீங்கனு அர்த்தம். இப்போ பொண்ணுங்களாம் ரொம்ப தெளிவு. அவங்களை இன்ஸ்பையர் பண்ண,  நச்சுனு நாலு நல்ல கேரக்டர் இருந்தாலே போதும். அது உங்ககிட்ட இருக்கா? செக் பண்ணிப் பார்த்துக்கங்க...

wpid-luv.jpg

1. "மேடம் நீங்கதான அன்னிக்கு..."னு பாக்குற எல்லா பொண்ணுகிட்டயும் விழுந்தடிச்சு பேச நினைக்கும் ஆண்களைவிட,  அவசியத்திற்காக மட்டுமே பேச ஆரம்பித்து, அதன் பிறகு அது நட்புரீதியாக வளரும் ரிலேஷன்ஷிப்பை மட்டுமே இப்போ பொண்ணுங்க ரசிக்கிறாங்க...அனுமதிக்கிறாங்க.

2. ஒரு பொண்ணு அவளோட பர்சனல் பக்கங்களை உங்களுக்குப் படிச்சுக் காட்ட ஆரம்பிக்குற அளவுக்கு அவளுக்கு உண்மையாவும் நம்பிக்கையாவும் இருக்குற ஆளா நீங்க ? அப்ப உங்களுக்கு பாஸ் மார்க்!

cofee.jpg



3. ஒரு பக்கம் துறுதுறு பையனா இருந்தாலும்,  தன்னோட எதிர்காலத்துக்கான பக்கா பிளான் வைச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ரசிச்சு வாழுற ஸ்மார்ட் பையனுக்கு டிமாண்ட் ஜாஸ்தி.

4. "எங்க இருக்க இப்ப நீ?", "என்ன பண்ற?"னுலாம் அடிக்கடி விசாரிச்சு உங்க ஸ்டேட்டசை தெரிஞ்சுக்கறதுக்குள்ள பொண்னுங்க டயர்டாகிடுவாங்க. அதனால, உங்க காதலி/மனைவி  கேட்குமுன்பே  வாட்ஸ்அப்ல உங்க ஸ்டேடஸ் தட்டி விட்டீங்கன்னா, அவங்களோட எவர்க்ரீன் ஹீரோ நீங்கதான்.


5. "நீ செம்ம அழகு டீ", "உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்ல"ன்னு சின்னச் சின்னதா பொய் சொல்லிட்டே இருந்தாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு, எப்பவோ பிளாக் அண்ட் ஒயிட் படத்துல கேட்ட வசனத்தை இன்னமும் ஃபாலோ பண்ற பாய்ஸைவிட,  "நீதான்டி எனக்கேத்த அழகி"னு நிதர்சனம் பேசுற பசங்கதான் பொண்ணுங்க சாய்ஸ்.

6. ஹீரோ மாதிரி ட்ரெஸ், சூப்பர் பைக்னு சுத்திட்டிருக்கும் ஷோ-ஆஃப் பசங்களைவிட கொஞ்சம் நீட்டா, கேஸுவல் லுக்ல உலாத்துற பசங்கதான் பெண்களின் 'சைட்டு'!

tinh_yeu.jpeg


7. "நான் இப்படி.. அப்படி" என வெத்து கெத்து காட்டுவதைவிட  அமைதியாக தன்  வேலைகளை கவனித்து அதன் மூலம் அதிகமா பேசப்படும் ஆண்கள்தான் பெண்களின் ஃபேவரிட்.

8. வீக் எண்ட் அவுட்டிங் அல்லது மீட்டிங் ஸ்பாட்டை நீங்களே முடிவு செய்யாம, உங்க பார்ட்னரிடம் கேட்டோ அல்லது கலந்தாலோசித்தோ முடிவெடுத்தால், உங்க அவுட்டிங் 'அவுட்' ஆகாம இருக்கும்.

How-to-love.jpg

 
9. "என்ன பண்ற? எதுக்கு பண்ற? எங்க போற? எதுக்கு போற?"னு எல்லா விஷயத்துலயும் குறுக்கிட்டு, "நான் ஆண்.. நீ பொம்பளை"னு  கேள்வி கேட்டு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தா, இந்தக் கால பொண்ணுங்க அவங்களை சும்மா வெச்சு செஞ்சிடுவாங்க... பீ கேர்ஃபுல்!

10. சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் சல்மான், துல்கரைத் தாண்டி பொறுப்பான குடும்பத் தலைவராக இருக்கும் 'தல' அஜித்துக்குதான் பெண் ரசிகர்கள் அதிகம் பாஸ். ஸோ... ஹோம்லியா இருக்குற பையன்தான் செலெக்டட்... 'ஹோம்லி பொண்ணுதான் வேணும்னு சொல்ற பையன்லாம் ரிஜெக்டட்!

http://www.vikatan.com/news/miscellaneous/58951-10-things-girl-expects-from-her-boyfriend.art

 

Edited by நவீனன்

1 hour ago, suvy said:

யார் சதுரர் கொலோ.....!

புரியவில்லை.

  • தொடங்கியவர்

பிப்ரவரி 13: இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தின சிறப்பு பகிர்வு

 

சரோஜினி நாயுடு எனும் இந்தியாவின் கவிக்குயில் பிறந்த தினம் இன்று . ஆந்திராவில் வாசித்த வங்காள குடும்பத்தில் பிறந்தார் இவர்.இவரின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார் . இவரை ஒரு அறிவியல் மேதையாக்க அவர் விரும்பினார் . இவரின் உள்ளமோ கவிபாடுதலில் திளைத்தது .

மிகச்சிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ஏரியின் அழகி எனும் கவிதையை இயற்றினார் அதை படித்து பார்த்து பிரமித்த ஹைதராபாத் நிஜாம் இவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினார் . இங்கிலாந்திற்கு கணிதம் படிக்க போனவர் அங்கேயிருந்த இயற்கையின் வனப்பு இவரை ஆட்கொள்ள அற்புதமான் கவிதைகள் எழுதினார் ; அதைப்படித்து பார்த்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட் கோஸ் முதலிய ஆங்கிலேய எழுத்தாளர்கள் வியந்தார்கள் . ஆங்கில மொழி தாய்மொழியாக இல்லாத அவரின் கவித்துவம் அவர்களை பிரமிக்க வைத்தது .

saro0213.jpg

உடல்நிலை சரியில்லாமல் போக கணிதத்தை கைகழுவி நாடு திரும்பினார் . ஏற்கனவே வேறு சாதியை சேர்ந்த கோவிந்தசாமி நாயுடுவுடன் காதல் அரும்பி இருந்தது இவருக்கு ;வீட்டின் எதிர்ப்பை சமாளித்து அவரை கரம் பிடித்தார் . இவரின் கவிதைகளை பார்த்து அரசு கெய்சரி ஹிந்த் எனும் பட்டத்தை தந்தது . கோகலேவின் அழைப்பை ஏற்று விடுதலைப்போரில் பங்கு கொண்டார் . ஜாலியன்வாலா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன் பட்டத்தை திரும்ப தந்தார்

1925 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார் . இந்திய பெண் ஒருவர் காங்கிரசின் தலைவரானது அதுவே முதல் முறை . அவரை காந்தி இந்தியாவின் கவிக்குயில் என அழைத்தார் . நேரு இந்திய தேசியத்தின் உதயத்தாரகை என புகழ்ந்தார் .

ஆங்கிலேய அரசை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களில் பங்குகொண்டு சிறைசென்றார் . கவிதைகள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார் . "கவிஞர் என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர் அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால் தீப்பந்தத்துடன் அநீதியை அழிக்க அவன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது" என சொன்னவர் அவர் .

இலையுதிர்கால கீதம்

இதயத்தில் இன்பம் தேங்குதலைப்போல
மேகங்களைப் பற்றித் தொங்கி ஆடுகிறது அஸ்தமனம்
பொற்புயல் போல மேகக்குஞ்சங்கள் மினுங்க,
உருகிய அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
மேகத்தை காற்று வன்மையாக உலுக்குகிறது
உற்றுக் கேட்ட இதயத்துக்குப் புரிகிறது
காற்றின் மென்குரலின் நாதம்
என் இதயம் கனவுகளால் களைப்பால் கவலையால் தனிமையால் படபடத்து உதிர்கிறது இலைகளாய்
எதற்காகக் கடந்ததை எண்ணித் துயருற வேண்டும் நான்?

vikatan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

புரியவில்லை.

மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் கேட்கிறார்.

கொண்டது என்னை தந்தது உன்னை யார் சதுரர் (கெட்டிக்காரர்) கொலோ (சொல்) என்கிறார்.

பொருள் : நீ அப்பழுக்கில்லாதவன் , நானோ அத்தனை நன்மை தீமைகளுடன் வசிப்பவன். என்னை ஆட்கொள்வதால் உனக்கென்ன பிரயோசனம். ஆனால் எனக்கோ பெருஞ்செல்வமான உன்னையே தந்துவிட்டாய், இப்ப யார் கெட்டிக்காரர் சொல்லு...!

நீதி: நீங்கள் பகிரங்கமாய்ச் செய்யும் காதலை நாங்கள் பக்குவமாய்ச் செய்து விட்டோம்.

பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் வாதவூரரின் பாதம் பற்றி மன்னிப்பு கேட்கவேனும்...!

  • தொடங்கியவர்

பிப்ரவரி 13: மூன்றாம் பிறை,மூடுபனி, வீடு
நீங்கள் கேட்டவை போன்ற திரைக்காவியங்களை இயக்கிய பாலு மகேந்திரா நினைவு தினம் இன்று..

12698169_678183192284226_754405483551523

  • தொடங்கியவர்
டைட்டானிக் ஆந்தை!
 
டைட்டானிக் ஆந்தை!
டைட்டானிக் படத்தில் வரும் காதல் காட்சி போன்று வானத்தில் பறந்த நிலையில் 'ரொமான்ஸ்' செய்யும் இரு ஆந்தைகளின் படம் இணையங்களில் இப்போது பிரபல்யமாகி உள்ளது. 
 
1997 இல் வெளிவந்த 'டைட்டானிக்' படத்தில் கப்பலின் முகப்பில் ரோஸ் கைகளை விரித்த நிலையில் நிற்க அவளின் பின்னால் இருந்து ஜாக் அணைப்பது போன்ற காட்சி பிரபல்யமானது. 
 
இதேபோன்ற நிலையில் ஆந்தை இறக்கைகளை விரித்துப் பறந்த நிலையில் அதன் இணை பின்னால் பறந்தபடி தென்னாபிரிக்காவின் ஜொகன்னர்ஸ் பேர்க்கில் மார்க் ட்ரைஸ்டாலேவால் எடுக்கப்பட்ட இந்தப் படமும் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. 
 
                                                 owl.jpg
 
                                                      1455362744_image_handle.jpg
uthayan
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

சானியா, சாய்னா, தீபிகா பல்லிக்கல் யாரையும் இழுக்க முடியாத சினிமா இப்போது பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இழுத்துவிட்டது. அசாருதீனுடன் இணைத்து பரபரக்கப்பட்ட இந்த அழகுப் புயல், ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ''ஒரு பாட்டுக்கு மட்டும்தான் p37.jpgஆடி இருக்கிறேன். அதுவும் கதாநாயகன் நிதின் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவன் கேட்டதால்  ஆடினேன். பேட்மிட்டன்தான் என் முதல் காதலன்!'' என்று சொல்கிறார் ஜுவாலா. காதலனை மாத்திராதீங்க!

கேரளாவைச் சேர்ந்த மதுசூதனுக்கு இப்போது வயது 56. கட்டட வேலைக்காக 1977-ம் வருடம் மஸ்கட்டுக்குச் சென்றவர், தன்னுடைய பாஸ்போர்ட் முதலான அடையாள ஆவணங்களை ஒரு வழிப்பறிக் கொள்ளை யில் பறிகொடுத்துவிட்டார். ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மஸ்கட் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மதுசூதன், பிறகு விடுவிக் கப்பட்டு இருக்கிறார். அவர் இந்தியப் பிரஜை என்பதை நிரூபிக்கும் ஆவணம் சமர்ப்பிக்கப் பட்டால்தான் மஸ்கட்டை விட்டுக் கிளம்ப முடியும் என்ற நிலை. ஆனால், அந்த ஆவணம் வழங்குவதில் ஏக தாமதம். நாடோடி கணக்காகத் தங்க இடம் இல்லாமல், சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக்கொண்டு சுற்றியிருக்கிறார் மதுசூதன். கடந்த வாரம் சாலையில் படுத்துத் தூங்கியபோது குளிர் தாங்காமல் இறந்துவிட்டார். அவர் உயிரிழந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, 'அவர் ஓர் இந்தியர்’ என்பதற்கான நேட்டிவிட்டி சான்றிதழ் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு இருக்கிறது. எதுக்கு... அவர் சடலத்தை இந்தியா கொண்டுவரவா?

சிம்புவுக்குப் போட்டியாக விரல் வித்தை காட்டி ஒருவர் பாடிய பாடல் யூடியூபில் செம ஹிட். அவர் ஹர்பஜன் சிங். சினிமா படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் ஹர்பஜன், அதற்கு விளம்பரம் கொடுப்பதுபோல, ஒரு பாட்டு பாடி அதை யூடியூபில் வெளியிட்டு இருக்கிறார். பாடல் செம காமெடியாகவும், அதைப் பாடும் ஹர்பஜன் பாடல் வரிகளுக்கு ஏற்ப விரல் அசைப்பது அதைவிடப் பெரிய காமெடியாகவும் இருப்பதால், ஹிட்டுகள் அள்ளுகின்றன. இனிமே தூஸ்ரா கிடையாதா?

பிப்ரவரி 16-ம் தேதி வான்வெளியில் ஒரு பெரிய பாறை பூமிக்கு அருகில் கடந்து செல்லஇருக்கிறதாம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் எடை உடைய அந்தப் பாறைக்கு டி.ஏ 14 எனப் பெயர். பூமிக்கு அருகில் கடந்து சென்றா லும், உரசும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். செல்போன் சிக்னல் பாதிக்காமப் பார்த்துக்கங்கப்பா!

p38.jpg

 ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் முன்ன ணியில் இருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அமெரிக்கா வின் முன்னாள் அதிபரான ஆபிரஹாம் லிங்கனின் கதையை மையமாக வைத்து இவர் இயக்கிய, 'லிங்கன்’ படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 40 சதவிகிதம் பேர் ஸ்பீல்பெர்க்குக்கு ஆஸ்கர் விருது அளிக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஏற்கெனவே, ஏழு முறை பரிந்துரைக்கப்பட்டு, இரண்டு முறை ஆஸ்கர் அள்ளியவர் ஸ்பீல்பெர்க். கண்ணா, மூணாவது லட்டு தின்ன ஆசையா?

'மழை வருமா... இல்லையா?’ என்று இனிமேல் ரமணன் சொல்லும் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம். நத்தையைக் கவனித்தால் போதுமாம். ஆம், மழையைக் கணிப்பதில் நத்தை கில்லாடியாம். அருகில் இருக்கும் தாவரம் அல்லது கம்பத்தை நோக்கி நத்தை நகர்கிறது என்றால், மழை வரப்போகிறது என்று அர்த்தமாம். அத்தைகிட்ட சொல்லி ரெண்டு நத்தை வளர்க்கலாமே!

p38a.jpg

 உண்ணாவிரதம், பாத யாத்திரை என எப்போதுமே எதையாவது செய்துகொண்டே இருப்பது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஸ்டைல். நாடே பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிக்கொண்டு இருக்க, சந்திரபாபு நாயுடு தன் தெலுங்கு தேசம் கட்சியில் இளைஞர்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்து இருக்கிறார். கல்லூரி விழா ஒன்றில் பேசிய சந்திரபாபு, 'இளைஞர்கள் வந்தால்தான் நாட்டில் லஞ்சம், ஊழல் குறையும், கல்வியின் தரம் உயரும் எனப் பேசி நடையைக் கட்டி இருக்கிறார். வெல்கம் சார்!

பிரபலங்கள் பெர்ஃப்யூம் விளம்பரங்களில் நடிப்பார்கள். ஆனால், டோனி ஒரு பெர்ஃப்யூம் நிறுவனமே தொடங்கிவிட்டார். தான் பிறந்த 7-ம் தேதி சென்டிமென்ட்டில், '7 பை எம்.எஸ்.டோனி’ என்று நான்குவிதமான நறுமணங்களில் பாடி ஸ்ப்ரேக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கமகம கேப்டன்!

p39.jpg

 

போர்ஃப்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலின் முதல் இரண்டு இடங்கள் ஷாரூக் மற்றும் சல்மான் கானுக்கு. பட்டியலில் விஜய்க்கு 28, சூர்யாவுக்கு 43, அஜித்துக்கு 61, விக்ரமுக்கு 67-வது இடங்கள். விஜய் காட்டுல மழை!

தனுஷுக்குக் கிடைத்த லக், ஷாரூக் கானுக்குக் கிடைக்கவில்லை. 'எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷ§டன் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸிய நயன்தாரா, அதே போல ஷாரூக் குடன் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். ஷாரூக் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படம் தமிழகத்தை மையம்கொண்டு இருக்கும் கதை என்பதால், தமிழின் பிரபல நடிகையை நடனமாட வைக்கலாம் என்ப தாலேயே நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார் கள். ஆனால், அவர் 'நோ’ சொல்லிவிட்டார். 'ஒரு பாடலில் மட்டும் தொடர்ந்து ஆடும் அளவுக்கு நான் ஃப்ரீயாக இல்லை. ஆறு படங்களில் பிஸி பிஸி!’ என்பது நயனின் பதில். தில் பதில்!

vikatan

  • தொடங்கியவர்

உலகின் மிகச் சிறந்த காதல் வரி இதுதானோ..!?

 

"நான் நேசித்ததும் உன்னையல்ல...
மணக்கப் போவதும் உன்னையல்ல...
 உன் உள்ளத்தை..!"


இந்த மூன்று வரிகளுக்குப் பின்னால் உலகப் பிரசித்திப் பெற்ற ஒரு காதல் குறுங்கதை மறைந்திருக்கிறது. மாவீரன் டியூக் வெலிங்டன் பிரபு காதரின் என்ற பெண்ணை உயிருக்குயிராக நேசிக்கிறான். அவன் காதரினுக்கு எழுதியதுதான் இந்த மூன்று வரிகள்...

ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

வரலாற்றின் முக்கியப் பக்கமாக இன்றளவும் அனைவர் நினைவுகளிலும் வந்து போகிற போர்முனை "வாட்டர் லூ". நெப்போலியனின் கடைசி யுத்தம். தனக்குள் இருக்கும் ஆன்மிக சக்திதான் உலகத்தையே வெற்றி கொள்ள வைக்கிறது என்ற கொள்கையில் உறுதியாய் இருந்த நெப்போலியனை எதிர்முனையில், கூட்டுப் படையை வழிநடத்தும் தளபதியாக எதிர் கொள்கிறான் வெலிங்டன்பிரபு.

waterloo%20600%281%29.jpg

1லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள், 35 ஆயிரம் போர்க் குதிரைகள், 500 பிரமாண்ட பீரங்கிகள் அணிவகுத்து நின்ற இந்தப் போர் 1812-ல் நெப்போலியனுக்கு ஒவ்வாத குளிர் மாதத்தில் நடந்தது. காலை தொடங்கிய போர் இரவு 11 மணிக்கு முடிவுக்கு வருகிறது. மாவீரன் என்ற அடையாளத்துடன் இருந்த  ஃப்ரெஞ்ச் தேசத் தளபதி நெப்போலியன் தோல்வியை சந்திக்கிறான். போர்க் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செயின்ட் ஹெலீனா தீவில் அடைக்கப்படுகிறான்.

போர்முனைக்கு வந்த வெலிங்டன் பிரபு, அதற்கான வெற்றிக் கனியை ருசிப்பதற்கு முன்னர் கொஞ்ச காலம் velingtan%20prabu%20200%282%29.jpg'திட்டமிடல்' பணிக்காக இந்தியாவில் தங்கிட வேண்டிய சூழல். அந்த சிறு இடைவெளியில்தான் அவனுக்கு ஓர் கடிதம் வருகிறது...

அந்தக் கடிதத்தை எழுதியிருந்தது வெலிங்டன் பிரபுவின் காதலியான காத்ரின்....

"எனக்கு அம்மை நோய் கண்டு விட்டது. அதன் பாதிப்பு என் முகத்தை விகாரமாக்கி விட்டது. அன்று நீங்கள் நேசித்து, நாளெல்லாம் வர்ணித்து மகிழ்ந்த அந்த வட்ட நிலா ஒளி முகம் இப்போது என்னிடத்தில் இல்லை. அழகிழந்த குரூபியாக உங்கள் காதரின் இருக்கிறேன். தயவு செய்து இனியும் என்னைப் பார்க்க வரவேண்டாம். நீங்கள் வேறு அழகான பெண்ணைப் பார்த்து மணம் புரிந்து கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் காதலி காதரைன்.

நெப்போலியனையே மண் கவ்வ வைத்த அந்த வீர இளைஞன் வெலிங்டன் பிரபு, காதரினுக்கு எழுதிய அந்தப் பதில் கடிதத்தில் இருந்தது... மேலே குறிப்பிட்ட அந்த மூன்றே வரிகள்தான்.

அந்த வரிகளை மீண்டும் வாசியுங்களேன்....உங்கள் காதலை நீங்கள் நேசிப்பீர்கள்..!

vikatan
 

  • தொடங்கியவர்

404694_184095388364553_771943891_n.jpg?o

நிலவோடு விளையாடு.

  • தொடங்கியவர்

அனுஷ்காவை உதைத்த கோலி, பரவும் புகைப்படம்

 

வீராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இடையேயான காதல் முறிவை வைத்து இணையவாசிகள் உருவாக்கியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வீராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நகமும் சதையுமாக இருந்து வந்தனர்.

virat_anus_002

வெளிநாடுகளுக்கு சென்றால் ஒன்றாக ஊர் சுத்துவது, நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வது என்று மகிழ்ச்சியுடன் இவர்களது காதல் வாழ்க்கை சென்றது. கோலியும் ஆட்டத்தில் சதமடித்தால் அனுஷ்காவுக்கு பறக்கும் முத்தம் கொடுப்பது, அவரை பற்றிய விமர்சனங்கள் வந்தால் பொங்கியெழுவது என்று உண்மையாக தான் இருந்தார்.

maxresdefault

யார் கண் பட்டதோ தெரியவில்லை இப்போது இருவருக்குள்ளும் விரிசல். இன்ஸ்டாகிராமில் இருந்து அனுஷ்காவின் தொடர்பையும் கோலி நீக்கியுள்ளார். இந்நிலையில் இணையவாசிகள் இவர்களின் காதல் பிரிவை வைத்து கிண்டல் செய்வது, மீம்ஸ் தயார் செய்வது என பிரித்து மேய்கின்றனர்.

22-1437570138-unseen-candid-pics-virat-kohli-anushka-sharma-on-their-date-night

தற்போது இருவரின் புகைப்படத்தையும் வைத்து போட்டோஷாப் செய்யப்பட்டுள்ள புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு 2014ஆம் ஆண்டு அனுஷ்கா சர்மா கொடுத்த புகைப்பட காட்சியையும், வீராட் கோஹ்லியின் வேறு ஒரு விளம்பரப் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து அந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அனுஷ்காவை வீராட்கோலி தனது கால்களால் உதைத்துத் தள்ளுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

onlineuthayan

1 hour ago, நவீனன் said:

ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் முன்ன ணியில் இருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அமெரிக்கா வின் முன்னாள் அதிபரான ஆபிரஹாம் லிங்கனின் கதையை மையமாக வைத்து இவர் இயக்கிய, 'லிங்கன்’ படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

எங்கேயோ தப்பு இருக்கு.

லின்கன் படம் வந்தது 2012இல் - இப்படத்தில் டைனியல் டே லூவிஸிற்கு சிறந்த நடிகரிற்கான ஒஸ்கார் பரிசும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சென்ற வருடம்தான் Bridge of spies வந்தது. 

பார்க்க முடியவில்லை. இங்கு இன்னமும் வெளிவரவில்லை.

10 minutes ago, ஜீவன் சிவா said:

எங்கேயோ தப்பு இருக்கு.

லின்கன் படம் வந்தது 2012இல் - இப்படத்தில் டைனியல் டே லூவிஸிற்கு சிறந்த நடிகரிற்கான ஒஸ்கார் பரிசும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சென்ற வருடம்தான் Bridge of spies வந்தது. 

பார்க்க முடியவில்லை. இங்கு இன்னமும் வெளிவரவில்லை.

எல்லாம் ஒரு வரிவிடாமல் வாசிப்பீர்கள் போலிருக்கு ?

நீங்கள் சொல்வது சரி ,

யாழில் கடந்தவருடம் பார்த்த நல்ல படங்கள் லிஸ்டில் Bridge of spies எழுதியிருந்தேன் .உண்மை கதை என்பதால் நன்றாக இருந்தது .Russian spy யின் நடிப்புத்தான்  பிரமாதம் 

58 minutes ago, arjun said:

எல்லாம் ஒரு வரிவிடாமல் வாசிப்பீர்கள் போலிருக்கு ?

ஜீவன் சிவா

  • Advanced Member
  •  
  • ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
  •  329
  • 1,249 posts
  • Gender:Male
  • Location:இலங்கை
  • Interests:வாசித்தல்

 

  • தொடங்கியவர்
1 hour ago, ஜீவன் சிவா said:

எங்கேயோ தப்பு இருக்கு.

லின்கன் படம் வந்தது 2012இல் - இப்படத்தில் டைனியல் டே லூவிஸிற்கு சிறந்த நடிகரிற்கான ஒஸ்கார் பரிசும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சென்ற வருடம்தான் Bridge of spies வந்தது. 

பார்க்க முடியவில்லை. இங்கு இன்னமும் வெளிவரவில்லை.

நன்றி ஜீவன் உங்கள் தகவலுக்கு..:)

1 hour ago, arjun said:

எல்லாம் ஒரு வரிவிடாமல் வாசிப்பீர்கள் போலிருக்கு ?

நீங்கள் சொல்வது சரி ,

யாழில் கடந்தவருடம் பார்த்த நல்ல படங்கள் லிஸ்டில் Bridge of spies எழுதியிருந்தேன் .உண்மை கதை என்பதால் நன்றாக இருந்தது .Russian spy யின் நடிப்புத்தான்  பிரமாதம் 

நன்றி அர்ஜுன் மேலதிக விளக்கத்திற்கும்.:)

உண்மையில் நானும் இது கவனித்த விடயம் ஜீவனில்..:) ஒரு வரிவிடாமல் வாசிப்பது.  அதைவிட சிறந்த விடயம் அந்த பிழைகளை சுட்டி காட்டுவது.:)

  • தொடங்கியவர்

பிரசவத்திற்கு விடுமுறை மறுப்பு... பதவியை தூக்கி எறிந்த எம்பி

 

முதன் முறையாக குழந்தை பெற்ற மனைவியை கவனித்துக்கொள்ள ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுத்ததால்,  ப்பான்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜப்பான் நாட்டில் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த கென்சுகி மியாசுகி (34) என்பவர்,  நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவரும்,  இதே கட்சியில் உறுப்பினராக உள்ள பெண் அரசியல்வாதியான மிகுமி கனிகோ என்பவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் – மனைவி போல் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

Japan%20MP.jpg

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மனைவி கர்ப்பம் ஆகியுள்ளார். மனைவிக்கு முதல் குழந்தை பிறக்கபோவதால், அதற்கு பிறகு அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என எம்.பி முடிவு செய்துள்ளார். ஜப்பான் நாட்டு சட்டப்படி, மனைவிக்கு பிரசவம் ஆனால், அவரை கவனித்துக்கொள்ள கணவருக்கு 60 சதவிகித ஊதியத்துடன் 52 வாரங்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி எம்.பி.யின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து, தனக்கு ஊதியத்துடன் கூடிய 52 வாரங்கள் விடுமுறை வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், எம்.பி.யின் இந்த கோரிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்படுத்தியது. இதனால் வேதனை அடைந்த கென்சுகி மியாசுகி,  தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இதற்காக தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிரசவ கால விடுமுறையை அளிக்க மறுத்ததால், எம்பி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

டைட்டானிக் மீண்டும் வருகிறது!

 

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் என்ற ஒரு பிரிட்டிஷ் பயணிகள் கப்பல், 1912-ம் ஆண்டு தன் முதல் பயணத்தை சவுத் ஹேம்டனில் இருந்து தொடங்கி, வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தபோது துரதிர்ஷ்ட வசமாக, பனிப்பாறையின் மீது மோதி, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிப் போனது. உலகை உலுக்கிய இந்நிகழ்வில் 1500 பயணிகள் இறந்து போனார்கள்.

inside%20of%20taitanic.jpg

காலப்போக்கில் இச்சம்பவம்  மக்கள் மனதில் இருந்து மறைய தொடங்கினாலும், ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி 1997ல் வெளியான "டைட்டானிக்" படம் மூலம் அச்சம்பவம் மீண்டும் எல்லோர் மனத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டது. அதற்கு முக்கிய காரணம், அந்தக் கப்பல் பயணித்திருந்த கடலுக்கு நிகராக, கதையில் அவர் புகுத்தியிருந்த காதலின் ஆழம்.

ஆம். நம்மூர் "தாஜ்மஹாலுக்கு" அடுத்து அதிக காதல் கலாய்ப்பு வார்த்தையாக கல்லூரி  வட்டாரப் புழக்கத்தில் இருந்த டைட்டானிக் நிஜத்தில் மீண்டு(ம்) வருகிறது. இதனை வடிவமைக்கும் "ப்ளூ ஸ்டார்" நிறுவனம், 1912ன் அசல் டைட்டானிக்கின், அசாத்தியமான அதே நுணுக்கங்களுடன் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனுடைய முதல் பயணப் பாதை சீனாவின் ஜியாங்சூ'விலிருந்து துபாய் வரை என  வரையப் பட்டுள்ளது. இதில், சிறிய உள்ளடக்கிய நீச்சல் குளங்கள், டர்கிஷ் குளியல்கள், ஸ்குவாஷ் அரங்குகள் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.

taitanic%20sinde.jpg



என்னதான் இன்று இருக்கும் கனரகக் கப்பல்களில் ரோபோட் பார்-டென்டர் வரை தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் உச்சகட்டத்திற்கு பயன்படுத்தப் பட்டாலும்,  டைட்டானிக் 1912கை போன்றே எந்த வித மாற்றமும் இல்லாமல் இந்த கப்பல் இருக்கும் என்பதில் இதன் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

885 அடி நீளமும், 174 அடி உயரமும் கொண்ட இக்கப்பலில்  ஒரே நேரத்தில் 2435 பேர் பயணிக்கலாம். ஒன்பது தளங்களைக் கொண்ட இதில்,  900 பணியாளர்கள் இருப்பார்கள். மணிக்கு 44.5 கி.மீ. வேகத்தில் செல்லத் தக்கது.

இதன் மூலக் கூறாகவும், மூலதனமாகவும் விளங்கும், "ப்ளூ ஸ்டார்" நிறுவனத்தை நடத்தி வரும் ஆஸ்திரேலிய தொழிலதிபர் க்ளைவ் பால்மர், இதனை வெகு விரைவில், உலக மக்களுக்கு கொண்டு சேர்த்து, அவர்கள் நினைவுகளுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளார். 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.