Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 23
 
 

article_1456204394-gitmo.jpg1861: அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆப்ரஹாம்; லிங்கன் மேரிலாண்டில் கொலைமுயற்சியொன்றிலிருந்து தப்பியபின் இரகசியமாக வாசிங்டன் நகருக்கு வந்து சேர்ந்தார்.

1887: பிரான்ஸில் ஏற்பட்ட பூகம்பமொன்றினால் சுமார் 2000 பேர் பலியாகினர்

1903: குவாண்டனாமோ குடாவை அமெரிக்காவுக்கு கியூபா குத்தகைக்கு வழங்கியது.

1941: கலாநிதி கிளென் ரி. சீபோர்க் என்பவரால் முதல்தடவையாக புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது.

1945: ஜேர்மனியின் ப்போர்ஹெய்ம் நகரம் 379 பிரித்தானிய விமானங்களால் குண்டுவீசி அழிக்கப்பட்டது.

1991:  வளைகுடாவில் ஈராக்கிற்கு எதிரான நேசநாடுகளின் தரையுத்தம் ஆரம்பமாகியது.

1997: ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

1998: மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42பேர் கொல்லப்பட்டனர்.

2007: இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டு 22பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
காலியில் டுக் டுக் போலோ 2016
 

முச்சக்கர வானங்களில் பயணித்தவாறு பந்தை அடித்து விளையாடும் டுக் டுக் போலோ 2016 சுற்றுப்போட்டி காலியில்  நடைபெற்றது.

 

1509010291699_757939067673241_6643845998

 

டுக் டுக் போலோ 2016 (Tuk Tuk Polo 2016) சுற்­றுப்­போட்டி காலியில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்­றது.

 

வழக்­க­மான போலோ விளை­யாட்டில் குதி­ரை­களில் அமர்ந்­த­வாறு போட்­டி­யா­ளர்கள் பந்தை அடிப்பர். டுக் டுக் போலோவில் குதி­ரை­க­ளுக்குப் பதி­லாக முச்­சக்­கர வாக­னங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

 

உலகில் முதல் தட­வை­யாக டுக் டுக் போலோ 2013 ஆம் ஆண்டு  காலி­யில் நடை­பெற்­றது. உல்­லாசப் பய­ணிகள் உட்­பட வெளி­நாட்­ட­வர்­களும் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

இம்­முறை நடை­பெற்ற போட்­டி­களில் காலி, களுத்­துறை. மாத்­தறை, அக்­கு­ரஸ்ஸ கோல்பேஸ், தப்­ரபேன், கென்­டலோப்,  கொமோ­ரெபி,  ஆகிய அணிகள் பங்குபற்றின. 

15090MED220216-PG06-R3.jpg

- See more at: http://www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12783625_989986117716749_633462078277181

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் எல்வேர்தியின் பிறந்தநாள்.
Happy Birthday Steve Elworthy

  • தொடங்கியவர்

Galaxy S7 மற்றும் S7 Edge அறிமுகப்படுத்தப்பட்டன! (காணொளி)

  • தொடங்கியவர்
Dubai Miracle Garden
 
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

சீனியர் ஹீரோயின்களையே பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு, சின்ன பிரேக் தந்திருக்கிறார்கள் `கடவுள் தேசத்துத் தேவதைகள்'. கீர்த்தி சுரேஷ், மடோனா செபாஸ்டியன், மஞ்சிமா மோகன் மூவரும் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் நாயகிகள். விஜய்யின் 60-வது படத்தில் ரொமான்ஸ் செய்யப்போவது கீர்த்தி சுரேஷ். தனுஷின் ‘கொடி’ படத்தில் மடோனா செபாஸ்டியன். மஞ்சிமா கையில் மூன்று படங்கள் வெயிட்டிங்! க்யூட்டி பியூட்டீஸ்!

p36a.jpg

த்தீஸ்கரில், ஆடு ஒன்றைக் கைதுசெய்து சிரிப்புக் காட்டியிருக்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டில், ஆடு ஒன்று தொடர்ந்து அத்துமீறி மேய்ந்து வந்தது. அந்த ஆட்டை, அத்துமீறி நுழைதல், உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் ஆட்டின் உரிமையாளருடன் சேர்த்து கைதுசெய்துள்ளனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பிறகு ஜாமீனில் வந்திருக்கின்றனர். `ஆட்டின் உரிமையாளரிடம் பல முறை எச்சரித்தும் அவர் ஆடு மேய்வதைத் தடுக்கவில்லை. எனவேதான் வழக்குப்பதிவு செய்தோம்’ என்கிறது போலீஸ். ஆடு, `விசாரணை'க்குப் போயிருந்தா...பிரியாணிதான்!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புலம்பல்தான் கடந்த வார வைரல். ஃபேஸ்புக்கின் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ சேவைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க,  தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுபோன்ற சேவைகளுக்குத் தடைவிதித்தது. `இந்தியாவை முழுமையாக இணையத்தில் இணைக்கவே முயற்சிசெய்தோம். ஆனால், ட்ராய் தடைவிதித்துள்ளது’ என, மார்க் தன் ஆதங்கத்தைக் கொட்ட, ஃபேஸ்புக்கின் இயக்குநர்களில் ஒருவரான மார்க் ஆண்ட்ரீசன் `இந்தியா, காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும்' என போஸ்ட்டில் சீற, பிரச்னை பஞ்சாயத்தானது.  அடுத்த நாளே மார்க் `இந்தக் கருத்து நிச்சயம் வருந்தத்தக்கது. இந்தியா, எனக்கும் ஃபேஸ்புக்குக்கும் மிகவும் முக்கியமானது’ என வருத்தம் தெரிவித்தார். ட்ராய் ராக்ஸ்!

p37a.jpg

`அணியில் இருந்து ஒரு வீரரை நீக்குவது கடினமான விஷயம்தான். ஆனால், ஒரு கேப்டனாக இருந்து இதைச் செய்துதான் ஆக வேண்டும். அணியின் நலனுக்காகக் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியது கேப்டனின் பொறுப்பு. கேப்டன் தைரியமாக ஒரு சீனியர் வீரரை நீக்கும்போது, அவர்கள் கேப்டனை விரும்ப மாட்டார்கள். அதைப் பெரிதாகக் பொருட்படுத்தவேண்டிய அவசியம் இல்லை’ என ஷேன் வார்னேவின் `மோசமான சுயநலவாதி' குற்றச்சாட்டுக்கு கூலாகப் பதில் சொல்லியிருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்! நீங்க சொன்னா சரிதான்!

`சூப்பர்மேன்’, `ஸ்பைடர்மேன்’, `ஹல்க்’ வரிசையில் சூப்பர் ஹீரோவான `தோர்' ஹீரோ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் இந்தியா விசிட்தான் லேட்டஸ்ட் ஆன்லைன் பரபரப்பு. மனைவியுடன் கோவா வந்த கிறிஸ், கோவாவில் இருந்து இமயமலைக்கு ட்ரிப் அடித்தார். கோவா, இமயமலையைச் சுற்றிவர அவர் தேர்ந்தெடுத்தது பட்... பட்... புல்லட் பைக். இன்ஸ்டாகிராமில் மனைவி பைக் ஓட்டுவதுபோல கிறிஸ் போட்டோ வெளியிட `புல்லட் ராஜா, புல்லட் ராணி’ என தோருக்கு பேர் வைத்துவிட்டது இந்திய ரசிகர்படை. கலக்குங்க!

p38a.jpg

`நானும் லியோவும் டைட்டானிக் மூலம்தான் உலகப் பிரபலம் ஆனோம். நான் ஆஸ்கர் வாங்கிவிட்டேன். ஆனால், அவருக்கு ஒவ்வொரு முறையும் மிஸ் ஆகுது. இந்தமுறை என் நண்பன் லியோ நிச்சயம் அவார்டு அடிப்பான். அதை நான் நேரில் பார்த்தே ஆகணும்' என எமோஷன் ஆகியிருக்கிறார் கேட் வின்ஸ்லெட். பழைய பாசம்!

2098-ம் ஆண்டில் மும்பை எப்படி இருக்கும் என ஒரு கிராஃபிக் சீரிஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சிங்கப்பூர் இந்தியரான குஷால் டிகல். ஒரு பேரழிவுக்குப் பிறகான காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுகிற இந்த டிஜிட்டல் ஓவியங்களுக்கு இணையத்தில் செம வரவேற்பு. உள்நாட்டுப் போர், பட்டினிச்சாவுகள், வித்தியாசமான மாட்டுவண்டிகள் செல்லும் சாலைகள், பறக்கும் கார்கள், மிதக்கும் கப்பல்கள், இப்போதைய விஷயங்களின் மிச்சங்கள் எனப் பார்க்கும்போதே அதிரவைக்கிறது இந்த ஓவியங்கள். சென்னை எப்படி இருக்கும் ப்ரோ?

p39a.jpg

`நான் நிறைய விஷயங்களில் மாறியிருக்கிறேன். பல விஷயங்களில் தெளிவாக உணர்கிறேன். நான் குழப்பமாக இருந்த சமயங்களில் எல்லாம், அவள்தான் என்னை வழிநடத்தினாள். அவள் எப்போதும் என்னைச் சுற்றியிருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி. எல்லாவற்றுக்கும் நன்றி நஸ்ரியா’ என, காதலர் தினம் அன்று தன் காதல் மனைவி நஸ்ரியாவைப் புகழ்ந்திருக்கிறார் பஹத் ஃபாசில். நீ கலக்கு ப்ரோ!

vikatan

  • தொடங்கியவர்

12747894_989984294383598_180302410926325

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஹெர்ஷெல் கிப்ஸின் பிறந்தநாள்.
Happy Birthday Hershelle Gibbs
 
  • தொடங்கியவர்

சு(க)வரொட்டி: '2016 லீஃப் ஆண்டு!'      அம்மா:grin:

சென்னை பெருங்குடியில் 1000 அடியில் வைக்கப்பட்ட அதிமுக பேனர். | படம்: எல்.சீனிவாசன்

சென்னை பெருங்குடியில் 1000 அடியில் வைக்கப்பட்ட அதிமுக பேனர். | படம்: எல்.சீனிவாசன்

சென்னை பெருங்குடியில் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்... சற்றே கூடுதல் கவனம் ஈர்த்த போஸ்டர்களில் சில...

12077206_101539673_2748305a.jpg

12665662_101539673_2748307a.jpg

12696197_101539673_2748308a.jpg

12721838_101539673_2748309a.jpg

12746080_101539673_2748310a.jpg

12746110_101539673_2748311a.jpg

12767214_101539673_2748313a.jpg

12767305_101539673_2748315a.jpg

12769356_101539673_2748316a.jpg

12769646_101539673_2748317a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

உலகின் பிரம்மாண்ட வெங்காயம்!

ONION_2740226f.jpg

சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் பற்றியெல்லாம் நமக்குத் தெரியும், மெகா சைஸ் வெங்காயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உலகிலேயே மிகப் பெரிய வெங்காயம் இங்கிலாந்தில் 2012-ம் ஆண்டில் விளைந்தது. இந்த வெங்காயத்தை விளைவித்த விவசாயி பீட்டர் கிலேஸ்ப்ரூக்.

இவர் விளைவித்த வெங்காயத்தின் எடை எவ்வளவு தெரியுமா? 8 கிலோ 190 கிராம். 2011-ம் ஆண்டிலும் 8 கிலோ 150 கிராம் அளவில் ஒரு வெங்காயத்தை விளைவித்து பீட்டர் சாதனை புரிந்தார். இந்தச் சாதனையை அவரே 2012-ல் முறியடித்தார். இத்தனக்கும் இவர் பரம்பரை விவசாயி கிடையாது. அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த 28 ஆண்டுகளாக விவசாயம் பார்த்து வருகிறார். பிரம்மாண்டமான காய்கறிகளை உருவாக்குவதுதான் பீட்டரின் ஒரே ஆசை, லட்சியம் எல்லாம். பெரிய காய்களை விளைவித்து இதுவரை ஆறு கின்னஸ் சாதனைகளைப் புரிந்துள்ளார். உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு, அதிக எடையுள்ள பீட்ரூட், மிக நீளமான டர்னிப் கிழங்கு எனப் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

தலைகீழாகக் கட்டப்பட்ட வீடு

  • தொடங்கியவர்

தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!

 

ஃபிட்னெஸ்

 

 

திருமணம் வரை சரியான நேரத்துக்குச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக, ஃபிட்டாக வைத்துக்கொள்ளும் பெண்கள்,  திருமணத்துக்குப் பிறகு, குறிப்பாக  குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை அதிகரித்துவிடுகின்றனர். ஃபிட்டாக இருக்க வேண்டும், தொப்பையைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக, காலையில் பிரேக்ஃபாஸ்ட் தவிர்ப்பது, குறைவாக உணவு உட்கொள்வது என உடல் எடை குறைக்க ஏதேதோ தவறான வழிமுறைகளைப் பின்பற்றித் தோல்வியடைகின்றனர். கர்ப்ப காலத்தில், உடல் தசைகள் தளர்வடைந்து விடுகின்றன. கர்ப்பப்பையும் வயிறும் விரிவடைவதால், வயிற்றில் உள்ள தசைகள் பிரியும். இதனால், பெண்களின் உடல் அமைப்பு மாறுபடும். இவர்கள் சரியான டயட் உடன், சில உடற்பயிற்சிகளைச் செய்தாலே போதும், ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறலாம்.

ஆப்ளிக்ஸ் வித் டம்பெல்ஸ் (Obliques with dumbbells)

தரையில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். காலை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி 45 டிகிரியில் பின்புறமாகச் சாய வேண்டும். கைகளால் டம்பெல்லைப் பிடித்து, மார்புக்கு நேராக வைக்க வேண்டும். இப்போது, டம்பெல்லுடன் கைகள் மற்றும் மேல் உடலை இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும். இதனை 15 முறை என 2 செட்டாக செய்யலாம். 

p16a.jpg

பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிய தசையான ஆப்ளிக்ஸை வலுவாக்கும்.

சுவிஸ் பால் அப்ஸ் (Swiss ball abs)

சுவிஸ் பந்து மீது கால்களை அகட்டி உட்கார வேண்டும்.முதுகெலும்பு முழுவதும் பந்தில் இருக்கும்படி சாய்ந்துகொள்ள வேண்டும். கைகளை மடக்கி, தலைக்குப் பின்பக்கத்தில் வைக்க வேண்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்து, வெளியேவிட்டபடி, தலையை உயர்த்தி முன் வர வேண்டும். மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். பயிற்சியின்போது கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இதை, 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்ய வேண்டும். 

p17a.jpg

பலன்கள்: மேல் வயிறு, அடி வயிறு, முதுகுப் பகுதி வலுப்பெறும்.

சுவிஸ் பால் வித் லெக் ரெய்ஸ் (Swiss ball with leg raise)

தரையில் மல்லாந்து படுத்து,  கைகளை இடுப்புக்குப் பின் வைத்து, அழுத்திக்கொள்ள வேண்டும். கால்களை நன்கு அகட்டி, சுவிஸ் பந்தை கால்களுக்கு இடையில் வைக்க வேண்டும். இப்போது, கால்களை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இது போல் 15 முறை 2 செட்டாகச் செய்ய வேண்டும். 

p17b.jpg

பலன்கள்: வயிற்றின் மையத்தில் உள்ள ரெக்டஸ் அப்டாமினிஸ் (Rectus abdominis) தசையை வலிமையாக்கும்.  தொப்பையைக் குறைத்து, நல்ல உடல் அமைப்பைத் தரும்.

அப்பர் கிரென்ச்சஸ் (Upper crunches)

தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது கால்களை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், கைகளை  ஒன்றன் மேல் ஒன்று வைத்து மேலே உயர்த்தி கால்களைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர், வந்த நிலையிலேயே பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். இதுபோல், 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்யலாம். 

p18a.jpg

பலன்கள்: மேல் வயிற்றுக்கு நல்ல பயிற்சி. கொழுப்பைக் கரைத்து, ஃபிட்டான தோற்றத்தைத் தரும்.

சைடு பிளாங்க் (Side plank)

பக்கவாட்டில் படுத்து, இடது கையால் உடலைத் தாங்க வேண்டும். வலது கையை இடுப்பின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, இடுப்பை உயர்த்தி ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், வலது புறத்துக்கும் செய்ய வேண்டும். இதை 5 முதல் 10 முறை செய்யலாம்.

p18b.jpg

பலன்கள்: இது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், முழு உடலுக்குமான பயிற்சி இது.

மெடிசின் பால் வித் க்ரன்ச்சஸ் (Medicine ball with crunches)

நேராகப் படுத்து, மெடிசின் பந்தை மூட்டின் அடியேவைத்து, கால்களை மடக்கி, பாதங்களை ஊன்ற வேண்டும். பந்தை ஒரு கையால் பிடித்தவாறு 45 டிகிரியில் எழுந்து, இடது காலுக்குப் பின்புறம் கொண்டுசென்று, வலது கையால் பற்றிய படி படுத்துக்கொள்ள வேண்டும். திரும்பவும் எழுந்து வலது காலுக்குப் பின்புறம் பந்தைக் கொண்டுசென்று, இரு கைகளால் பிடித்தபடி பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 12 முதல் 15 முறை செய்யலாம்.

 p18c.jpg

பலன்கள்: வயிற்றில் உள்ள தசைகள் உறுதியாகும்.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 24

 

671varalaru---Fidel_Castro.jpg1387 : நேப்பில்ஸ் மற்றும் ஹங்­கேரி மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கொல்­லப்­பட்டான்.

 

1582 : கிற­கோ­ரியின் நாட்­காட்டி பாப்­ப­ரசர் 13ஆவது கிற­கே­ரி­யினால் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1739 : இந்­தி­யாவின் முக­லாய மன்னன் முஹ­மது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறி­ய­டித்­தது.

 

1826 : பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்கும் பர்மா மன்னன் ஆவா­வுக்கும் இடையில் ஏற்­பட்ட உடன்­பாட்­டினை அடுத்து முதலாம் பர்­மியப் போர் முடி­வுக்கு வந்­தது.

 

1875 : அவுஸ்­தி­ரே­லியக் கிழக்குக் கரையில் எஸ்.எஸ் கோத்­தன்பேர்க் என்ற கப்பல் மூழ்­கி­யதில் 102 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1868 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி அன்ட்ரூ ஜோன்­ஸ­னுக்கு எதி­ராக நாடா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையில் குற்­ற­வியல் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1881 : சீனா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

 

1918 : எஸ்­தோ­னியா சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

 

1920 : ஜேர்­ம­னியில் நாஸிக் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1942 : வொயிஸ் ஒஃப் அமெ­ரிக்கா ஒலி­ப­ரப்புச் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1945 : எகிப்­தியப் பிர­தமர் அஹ­மது மாஹிர் பாஷா நாடா­ளு­மன்­றத்தில் வைத்துக் கொல்­லப்­பட்டார்.

 

1969 : மரைனர் 6 விண்­கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்­பட்­டது.

 

1981 : கிரேக்­கத்தில் ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த 6.7 ரிச்டர் பூகம்­பத்­தினால் 16 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : சாத்­தானின் வச­னங்கள் எனும் நூலை எழு­திய சல்மான் ருஷ்­டியை கொல்­ப­வர்­க­ளுக்கு 30 லட்சம் அமெ­ரிக்க டொலர் சன்­மானம் வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

 

1999 : கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 61 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2006 : பிலிப்­பைன்ஸில் இரா­ணுவப் புரட்சி முயற்­சியின் கார­ண­மாக அவ­ச­ரகால­ நிலையை ஜனா­தி­பதி குளோ­றியோ அரோயோ பிர­க­ட­னப்­ப­டுத்­தினார்.

 

2007 : ஜப்பான் தனது 4 ஆவது உளவு செய்­ம­தியை விண்­வெ­ளிக்கு ஏவி­யது.

 

2008 : சுமார் 50 வரு­டங்கள் கியூபாவை ஆட்சி செய்த பிடெல் கெஸ்ட்ரோ, ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்றார்.

 

2011 : டிஸ்கவரி விண்வெளி ஓடம் கடைசி தடவையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

 

2012 : மகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கு ம் இடையிலான மோதலில் 31 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=671#sthash.OjxdIKE1.dpuf
  • தொடங்கியவர்

12371235_990496400999054_654349749037846

கணினித் துறையில் வியந்து போற்றப்படும் தொழிநுட்பப் பிதாமகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தநாள் இன்று.

அப்பிள் தயாரிப்புக்களான Macintosh, iPhone, iPad, iPod என்பவை இவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்புக்கள்.

அப்பிள் நிறுவனத்தை ஸ்தாபித்த ஸ்டீவ் ஜொப்ஸ், கணினி வல்லுநர், புதுமை விரும்பி, புதிய சிந்தனைகளின் சிற்பி மட்டுமல்ல, அருமையான பேச்சாளரும் கூட.

அடிக்கடி அவர் சொல்கின்ற ஒரு வாசகம்.."Stay Hungry, Stay Foolish"

"அறிவுப் பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'.

Happy Birthday Late Steve Jobs

  • தொடங்கியவர்

அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி! (வீடியோ)

 

பிரிட்டிஷில் ப்ரிஸ்டல் மிருகக் காட்சி சாலையில் கடந்த 12-ம் தேதி ஒரு பெண் கொரில்லா குட்டி பிறந்துள்ளது. மிக இக்கட்டான சூழலில் அறுவை சிகிச்சை செய்து இக்குட்டியைக் காப்பாற்றியுள்ளனர். இன்றளவும் பெயர் சூட்டப்படாத அக்குட்டி வெறும் 1 கிலோ எடையே உள்ளது. பிறந்ததும் மருத்துவர்களின் உதவியோடுதான் இக்குட்டி மூச்சு விட்டிருக்கிறது. தற்போது 24 மணிநேரமும் மருத்துவர்கள் பாதுகாப்பில் குட்டி உள்ளது.

Korilla%20baby01.jpg

அதனுடைய தாய் கேரா இன்னும் பூரணமாக குணமடையவில்லை. அதுவும் மருத்துவர்கள் கண்காப்பில்தான் உள்ளது. பூங்காவில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் கொரில்லா குட்டி இதுவே. இதுபோன்று வெகுசில அறுவை சிகிச்சைகளே உலகம் முழுக்க நடந்துள்ளன.

ப்ரிஸ்டலின் மூத்த பொறுப்பாளர் ஜான் பாட்ரிட்ஜ், ''குட்டியின் தந்தை கொமேல் இன்னும் பொதுமக்களுக்கு காட்டப்படவில்லை. ஒரு கொரில்லாவின் பிறப்பே மிகவும் உரசாகமான ஒரு விஷயம். அதுவும் அறுவை சிகிச்சை மூலம் பிறப்பது இன்னும் படபடப்பாக இருந்தது. இந்த முடிவை நாங்கள் அவ்வளவு எளிதாக எடுக்கவில்லை. கேராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்தது. தாயையும் சேயையும் காப்பாற்ற நாங்கள் விரைந்து செயல்பட வேண்டி இருந்தது" எனக் கூறியுள்ளார்.


ப்ரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டேவிட் கஹில் இந்த அறுவை சிகிச்சையை நடத்தினார். தற்போது, தாயும் சேயும் உடல் நலத்துடன் இருக்கிறார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

12748036_990497774332250_756398217440020

தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இப்போது இருப்பவருமான ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் இன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண் குழந்தைக்கு பால் குடுக்கின்ற மாதிரியே கொரில்லா குட்டிக்கும் பால் குடுக்கின்றார்.

  • தொடங்கியவர்

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில

 

இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம்

கவல் தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் பிப்ரவரி 24, 1955ல் பிறந்தவர். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நம் வாழ்க்கையை வளமாக்கும் அவரின் சில சிந்தனைகள் உங்களுக்காக...

steve%20jobs.jpg


ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகள்:

1. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நீங்கள் செய்கிற வேலைதான் நிரப்புகிறது. அந்த வேலையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தியடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி... நீங்கள் செய்கிற வேலையை மனதார நேசித்து செய்வதுதான். உங்களின் நேசத்துக்கு உரிய வேலையை கண்டடையும் வரை தேடிக் கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாதீர்கள்.

2. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரையறுக்கப்பட்டது. மற்றொருவரின் எண்ணங்களில் கருத்துக்களில் வாழாமல் உங்களின் உள்ளுணர்வை பின்பற்றிச் செல்லுங்கள்.

3. கல்லறையில் ஒரு பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கப் போகும் போது நாம் இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் எனக்கு பெரிய விஷயமாகும்.

4. எனக்கு 17 வயதாக இருக்கும் போது சில வார்த்தைகள்  என்னை மிகவும் கவர்ந்தது. " உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து வாழ்ந்தால், நிச்சயமாக ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது "இன்று தான் என் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எனக்கு நானே  சொல்லிக்கொண்டு என் வேலைகளை ஆரம்பிப்பேன்.

5. சில நேரங்களில் இந்த வாழ்க்கை உங்கள் தலையை செங்கல் கொண்டு அடித்து நொறுக்கும். எந்த நேரத்திலும்  நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

6. வாழ்க்கை என்பது வரையறுக்கப்பட்டது. அன்பு மட்டுமே பல மைல்கள் கடந்து பயணிக்கும்.

7. பொருட்களை, செல்வங்களை தொலைத்து விட்டால் திரும்ப கண்டுபிடித்து விடலாம். ஒன்றே ஒன்றை மட்டும் தொலைத்து விட்டால் மீண்டும் அதை கண்டுபிடிக்கவே முடியாது அந்த ஒன்று தான் வாழ்க்கை.

vikatan

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்! - சிறப்பு பகிர்வு

 

ப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக...

apple_vc1.jpg



முதல் கதை

நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள்தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர் 'டைப்போகிராபி' (அச்சுக் கலை) கொண்டது.

2-வது கதை

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின்,  2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 'நெக்ஸ்ட்' மற்றும் 'பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போதுதான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.

apple_vc2.jpg



மூன்றாவது கதை

சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். "உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள்.

"பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்". இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.

  • தொடங்கியவர்

11665442_682728918496320_581317109514015

12742289_682728925162986_269149155303105

12745666_682728931829652_427892857397260

பிப்ரவரி 24, 1786
தேவதைக் கதைகளை நமக்குத் தொகுத்து அளித்த க்ரிம் சகோதரர்களில் ஒருவரான 'வில்லியம் க்ரிம்' பிறந்த நாள் இன்று.

ஹான்ஸல் & க்ரெட்டல், ஸ்னோ வொயிட், ஸ்லீப்பிங் ப்யூட்டி என்று நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான தேவதைக் கதைகள் ஆகியவை க்ரிம்ஸ் சகோதரர்கள் தொகுத்தவை தான்.

  • தொடங்கியவர்

12783789_990500310998663_285172344389485

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமர கபுகெதரவின் பிறந்தநாள்.
Happy Birthday Chamara Kapugedara

  • தொடங்கியவர்

12772096_1182246668461094_58352677169699

12778710_1182433985109029_72678017817681

12764905_1182467231772371_67516172524032

12748138_1182350221784072_19559014684950

Brendon McCullum

  • தொடங்கியவர்

உலகின் மிக நீ......ண்ட பரிசோதனை!

 

 
flower_2749332f.jpg
 

அறிவியலில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த நீண்ட காலம் ஆகலாம். ஆனால், 1879-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு பரிசோதனை, 2100-ம் ஆண்டில்தான் முடியப்போகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! தற்போது இந்தப் பரிசோதனையின் வயது 137 ஆண்டுகள். இன்னும் 84 ஆண்டுகள் கழித்துதான் பரிசோதனையின் முடிவு தெரியவரும். அப்படி இது என்ன பரிசோதனை? இதை ஆரம்பித்து வைத்தது யார்?

அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் பீல், மிச்சிகன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து விதை முளைப்புப் பரிசோதனையைச் செய்தார். இந்தப் பரிசோதனைக்குக் காரணம் விவசாயிகள். விளைநிலங்களில் பறிக்க பறிக்க முளைக்கும் களைகளுக்கு ஏதாவது தீர்வு காண முடியாதா என்ற அவர்களின் கேள்வி, வில்லியம் ஜேம்ஸை யோசிக்க வைத்தது. இதற்காக விதைகளைப் பரிசோதித்து, விடை கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

ஒரு விதை எவ்வளவு காலத்துக்கு உயிரோடு இருக்கும் என்பதுதான் இந்த பரிசோதனையின் நோக்கம். 23 விதமான செடிகளில் இருந்து விதைகளைச் சேகரித்தார். 20 பாட்டில்களை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு செடியிலிருந்தும் 50 விதைகளை பாட்டிலில் போட்டு வைத்தார். ஈர மண்ணால் பாட்டில்களை நிரப்பினார். பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் ரகசியமாக பாட்டில்களை, தலைகீழாகப் புதைத்து வைத்துவிட்டார். இப்படிப் பாட்டில்களை வைக்கும்போது தண்ணீர் உள்ளே செல்ல முடியாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பாட்டிலை வெளியே எடுத்து, அதில் உள்ள விதைகளை விதைத்து, முளைக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.

வில்லியம் ஜேம்ஸ் தன்னுடைய ஆயுள் காலத்தில் 6 பாட்டில்களைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்தார். பிறகு தன்னுடைய சக இளம் ஆராய்ச்சியாளரிடம் இந்தப் பரிசோதனையை ஒப்படைத்தார். 137 ஆண்டுகள் பலருடைய கைகளுக்கு மாறி, இன்று ஃபிரான்க் டெலிவ்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளரிடம் அந்தப் பரிசோதனை வந்து சேர்ந்திருக்கிறது.

100 ஆண்டுகளில் இந்தப் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிட வேண்டும் என்பதுதான் வில்லியம் ஜேம்ஸின் திட்டம். 1920-ம் ஆண்டு ஜேம்ஸுக்குப் பின்னால் வந்தவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் பெரிதாக மாற்றம் இல்லாததால், அதாவது விதைகள் முளைத்துக்கொண்டே இருந்ததால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டில்களை எடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

2000-ம் ஆண்டில் ஃபிரான்க் டெலிவ்ஸ்கி ஒரு பாட்டிலைத் தோண்டி எடுத்தார். இந்த முறை 2 விதமான செடிகளில் இருந்து 23 விதைகள் வெற்றிகரமாக முளைத்தன. அதாவது 50 விதைகளில் 23 விதைகள்தான் முளைத்திருக்கின்றன. இது குறிப்பிடத்தகுந்த விஷயம் என்கிறார் டெலிவ்ஸ்கி. இதுவரை 15 பாட்டில்கள் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 5 பாட்டில்களை எடுப்பதற்கு 2100-ம் வருடம் ஆகிவிடும்!

இன்றும் வயல்களில் களைகளைக் கைகளால் பிடுங்குகின்றனர். அல்லது களைக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். 137 ஆண்டுகளில் அறிவியல் எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டுவிட்டது. நிறைய களைகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இந்த பாட்டிலில் உறங்கும் விதைகள், அழிந்துபோன தாவரங்களை மீண்டும் மண்ணில் துளிர்க்க வைக்க வாய்ப்புகளை வழங்கலாம் என்கிறார் டெலிவ்ஸ்கி.

137 ஆண்டுகளுக்குப் பிறகும் பாட்டில் விதைகளிலிருந்து வெற்றிகரமாக முளைவிடும் 2 தாவரங்கள், அமெரிக்காவில் சர்வசாதாரணமாக வளரும் வெர்பஸ்கம் பிளட்டாரியாவும் மால்வா ரோடன்டிஃபோலியாவும்தான்! இன்னும் 84 ஆண்டுகளுக்குப் பிறகும் இவை தாக்குப்பிடிக்குமா என்பதை உங்களைப் போன்ற வருங்காலத் தலைமுறையினரால்தான் பார்க்க முடியும்!

tamil.thehindu.

  • தொடங்கியவர்

12697248_682683601834185_451393985426944

பிப்ரவரி 24: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதன்முதலாக 200 ரன்களை எட்டி சாதனை படைத்த தினம் இன்று (2010)

அன்று முதல் முதலாக இந்த சாதனையை சச்சின் நிகழ்த்திய போது உங்கள் நினைவுகளை பகிர்க...

 

2010: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது இரட்டைச் சதம் குவித்த வீரர் எனும் பெருமையை இந்தியாவின் சச்சின் டெண்டுகல்கர் பெற்றார். இந்தியாவின் குவாலியர் நகரில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றார்.  இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2962  ஆவது  போட்டியாகும்.

  • தொடங்கியவர்

இன்று முதல் புதிய 'லைக்' பட்டன்கள்

 

இன்று முதல் புதிய 'லைக்' பட்டன்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். நம் உணர்வை ஆறு விதமான 'இமோஜி'க்களில் வெளிப்படுத்தலாம். அப்ளிகேஷனில் 'லைக்' பட்டனை தொடர்ந்து அழுத்தினால், இமோஜிக்களை பார்க்கலாம். டெஸ்க்டாப்பில் லைக் பட்டன் மீது மவுசை கொண்டு போனால் இமோஜிக்களை பார்க்கலாம்!

 

 
  http://i.giphy.com/3o6gb6NYfpau02g6Ag.gif
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஸ்டைலிஷ் தமிழச்சி:grin:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12697273_990754260973268_853640909517088

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் விட்னியின் பிறந்தநாள்
Happy Birthday Mike Whitney

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.