Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, நவீனன் said:

அவதானம்..! உங்கள் அந்தரங்கள் வெளிச்சத்துக்கு வரும் அபாயம் 

உலகம் போற போக்கை பார்த்தால் கள்ளக்கமராவிலை எடுத்த படங்களை காட்டுறதுக்கும் ரீவி ஸ்டேசன் திறந்தாலும் திறப்பாங்கள் போலை கிடக்கு tw_grin:

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு பெண்களே ஓட்டிய விமானம்

முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு பெண்களே ஓட்டிய விமானம்

March 16, 2016  02:32 pm

Bookmark and Share
 
சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக பெண்கள் விமானம் ஓட்டிச் சென்றனர்.

அரபு நாடான சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை. அதை மீறி கார் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டது. அங்கு ஆண்கள் மட்டுமே கார் ஓட்டமுடியும். மீறி கார் ஓட்டும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதை எதிர்த்து சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் பெண்களே இயக்கிய விமானம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. ராயல் புருனே ஏர்லைன்சை சேர்ந்த 3 பெண் விமானிகள் சவுதி அரேபியா மண்ணில் தாங்கள் ஓட்டிய விமானத்தை பத்திரமாக தரை இறக்கி வரலாற்று சாதனை நிகழ்த்தினர்.

புருனேயின் தேசிய தினமான சுதந்திர தினநாளில் இம் மைல்கல் சாதனை நிகழ்த்தினர். ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமானம் புருனேயில் இருந்து ஜெட்டாவுக்கு இயக்கப்பட்டது.

அதை கேப்டன் ஷரிபா சரீனா தலைமையில் சரீனா நோர்டின், டிக் நாடியா பிக் கசீம் ஆகிய 3 பெண் பயணிகள் ஓட்டினர். இவர்களில் கேப்டன் ஷரீனா சரீனா 2013–ம் ஆண்டு இங்கிலாந்தில் விமானி பயிற்சி பெற்றார். இவரே புரூனே நாட்டின் முதல் பெண் விமானி ஆவார்.
tamil.adaderana
 
 
 
  • தொடங்கியவர்

அமெரிக்கா : தெருவில் வாழும் நபருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பரிசு

 

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் சிறையிலிருந்து தப்பித்த இரண்டு கைதிகளை பிடிக்க காவல் துறையினருக்கு உதவியதற்காக, தெருக்களில் வாழும் ஒருவருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

160316073421_california_homeless_man_624
 மேத்தியூ ஹே சாப்மான் என்ற வீடற்று தெருக்களில் வாழும் இவர் தப்பித்தக் கைதிகளை ஒரு திருடப்பட்ட வேனில் அடையாளம் கண்டுள்ளார்.

சிறையிலிருந்து தப்பித்திருந்த இந்த இரண்டு கைதிகளின் புகைப்படத்தை செய்திகளில் பார்த்த மேத்தியூ ஹே சாப்மான், அவர்களை ஒரு திருடப்பட்ட வேனில் அடையாளம் கண்டுள்ளார்.

ஆரஞ்சு உள்ளூராட்சி சிறையிலிருந்து ஆறு நாட்களுக்கு முன்பு தப்பித்த இவர்களை பிடிக்க மாகாண அளவில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்த பரிசு தொகை நான்கு பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டாலும், ஹே சாப்மானுக்கு தான் அதிக பங்கு தொகையை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

BBC

  • தொடங்கியவர்

கார்க்கி என்றால் கசப்பு!

 

karki01.jpgதாய்தான் அனைவரையும் படைப்பாள். மாக்ஸிம் கார்க்கி தாயைப் படைத்தவர். ஆம். தாய் நாவலைப் படைத்த மாக்ஸிம் கார்க்கி,  எதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவர முடியுமா? முடியும் என நிகழ்த்திக் காட்டியவர் கார்க்கி.

மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம் உண்டு. எதார்த்தவாத இலக்கியம் என்றால் அந்த 100 நாவல்களில் முதல் இடம் தாய்க்கு உண்டு.

அழகியல் உணர்வும், மேட்டுக்குடி மக்களின் மனப் போராட்டங்களுமே செவ்விலக்கியங்கள் எனப் போற்றப்பட்டு வந்தன. அரசர்கள், படித்தவர்கள் காதலில் மருகும் கதைகள் அன்றைய சிறந்த இலக்கியங்களாக இருந்தன. இன்னொரு பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் விதிகளை நொந்தபடி செல்லும் கண்ணீர் காவியங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தொழிலாளர்களின் பிரச்னைகளையும், அதற்கான போராட்ட ஆயத்தங்களையும் சொன்ன முதல் நாவல் இதுதான். ‘இழப்பதற்கு அடிமைத்தனத்தைத் தவிர வேறு ஏதும் அற்றவர்கள் நாம்’ என்கின்றன அதில் வரும் பாத்திரங்கள். ஆலைத் தொழிலாளியின் மகனான பாவெல்,  புரட்சிகரமான போராட்டத்தை வழிநடத்தும் கதைதான் தாய்  நாவலின் மையம்.

mother-tamil.jpgஇதிலே தாய் எங்கே வந்தாள்? தொழிற்சாலையில் அநீதி நடக்கிறது. தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்குக் கசக்கி எறியப்படுகிறார்கள். ஆனால், அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்காத ஒரு தாய் எப்படி அந்தப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செலுத்துகிறாள் என்பதுதான் நாவலின் முழு ஆதாரமாக இருக்கிறது. தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தன் மகன், தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவதையும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காகப் போராடுவதையும் அறிந்து, அவர்களுக்குத் தேநீர் பரிமாறுவதில் ஆரம்பிக்கிறது அவளுடைய பங்களிப்பு. தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து உபசரிக்கிறாள். ஒரு கட்டத்தில் தொழிலாளத் தோழர்கள் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களின் போராட்டத்தை ஏற்று நடத்தும் வேலைகளை அவரே செய்கிறார். ‘நான் சிறையில் இருந்தாலும் என் கரங்கள் வெளியே இருக்கின்றன’ எனத் தன் தாயைப் பற்றிச் சொல்கிறான் சிறையில் இருக்கும் பாவெல்.

உலகத் தொழிற்சங்கங்களின் பைபிளாக தாய் நாவல் இன்றும் பேசப்படுகிறது.

மனிதன் பிறந்தான், கிழவி இஸெர்கில், ஜிப்ஸி, வழித்துணைவன் போன்ற இவருடைய கதைகள் காலகட்டத்தைப் பிரதிபலித்தவை மட்டுமல்ல; காலம் கடந்தும் நிற்பவை.

ரயில்வே ஊழியர், செருப்பு தைப்பவர், விவசாயி என கார்க்கிக்கு பல முகங்கள் உண்டு. எழுத்தில் அந்த முகங்கள் ரத்தமும் சதையுமாகப் பிரதிபலித்தன.

mother.jpgஇவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத்தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்க்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.

அன்றைய ரஷ்ய மன்னர் ஜார். மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்க்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்க்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்க்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

பிறகு ரஷ்யப் புரட்சியை வழி நடத்திய லெனினைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டதுதான் தாய் நாவல். உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று உலகின் பல பல்கலைக்கழகங்களால் பரிந்துரைக்கப்படும் தாய் நாவலை எழுதிய கார்க்கி, பள்ளிக்கூடமே சென்றதில்லை.

1868 மார்ச் 16, அவருடைய பிறந்தநாள்.

vikatan

  • தொடங்கியவர்

கனடாவில் பனிப்பொழிவை தகர்த்து கொண்டு வெளிவரும் புகையிரதத்தின் அழகிய காட்சியை பாருங்கள் ...

  • தொடங்கியவர்

12819248_1002908406424520_10249152573442

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் வேகப்பந்துவீச்சாளருமான ஹெத் ஸ்ட்ரீக்கின்
பிறந்தநாள்.
Happy Birthday Heath Streak
இப்போது பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுகிறார்.

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 

Whatsapp: ரோட்டில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தும் பால்காரர்களின் போராட்டக் குணம், துளியும் நகைக்கடைக்காரர்களிடம் இல்லை!

facebook.com/murughes.cbe: ஒரே நாளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரிக்கான நேர்காணலை நடத்திய ஜெயலலிதா # `எந்திரன்’ சிட்டிக்கு அப்புறம் மம்மிதான்.

facebook.com/guru.shree.16: பாண்டிபஜாரில் ரோட்டில் செல்லும் ஆட்டோக்களைப் பார்த்துக்கொண்டே நடந்தால், ஒவ்வொரு ஆட்டோக்காரரும் `சவாரி வர்றியா சார்?’ எனக் கேட்பார். அவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று காயவிடலாம். அதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார் கேப்டன்!

p106a.jpg

facebook.com/pichaikaaran: நண்பனின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அவனைப் பார்க்க வந்த விசிட்டர், அவனுடன் பிசினஸ் பேசினார். நான், அவரது பையனுடன் (சுமார் 8 வயது) பேச ஆரம்பித்தேன். அவன் ஆசைகள், பள்ளிப்பாடங்கள், பறவைகள், விலங்குகள்... என சுவையான உரையாடல்...

இதற்குள் அவர்கள் பேச்சும் முடிந்தது.

`என்ன சார்... பையனுடன் டிஸ்கஷனா?’ என்றார் சிரித்தபடி.

`ஆமா சார், பையன் செம பிரில்லியன்ட்’ என்றேன்.

`இல்லை சார், இவனைவிட இவன் அக்கா செம பிரில்லியன்ட். இவனுக்கு ஒண்ணும் தெரியாது’ என்றார்.

`இல்லையே. என்ன கேட்டாலும் இவன் சூப்பரா பதில் சொல்றானே’ எனச் சொல்லிவிட்டு அவனிடம் கேட்டேன், `என்னப்பா... என்னிடம் சொன்னதை எல்லாம் அப்பாகிட்ட சொல்றது இல்லையா?’

`அப்பா இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட கேட்டது இல்லையே’ என்றான் அவன்!

p106b.jpg

twitter.com/shobin_m_stars: பா.ஜ.க-தான் மாற்று சக்தி - தமிழிசை # அப்படினா இனி பெட்ரோல் பயன்படுத்த வேணாமா?

twitter.com/Bullet_Ram: `வீட்ல விசேஷம்’னு சொல்லிட்டு, மண்டபத்துக்கு அழைக் கிறதுதான் நம்ம பண்பாடு!

twitter.com/prakashalto: வாழ்க்கையைப் புரிந்து கொண்டவர்கள், அதன் வலியைத் தெரிந்துகொண்ட வர்கள், `நல்லவனுக்கு நல்லதே நடக்கும்’ என்பது போன்ற கிறுக்கு வசனங்களை நம்புவது இல்லை!

twitter.com/prasanna_tweets: `அநியாயத்தைத் தட்டிக் கேட்கணும்; பொங்கி எழணும்’னு நினைக்கும்போது எல்லாம் பசிக்க ஆரம்பிச்சிருது!

twitter.com/nithil_an: சின்ன வயசுல பெத்தவங்ககிட்ட வலிக்கிற மாதிரி நடிச்சோம்... இப்ப வலிக்காத மாதிரி நடிக்கிறோம்!

twitter.com/indirajithguru: என் அம்மாவுக்கு என்னைவிட நன்றாகப் பொய் சொல்ல வரும் என்பது, எனக்குப் பெண் பார்க்கப் போகும் போதுதான் தெரியும்!

twitter.com/sudhansts: வியர்வை வரும் வரை விளையாடுறது எல்லாம் அந்தக் காலம், சார்ஜ்  தீரும் வரை விளையாடுவதுதான் இந்தக் காலம்!

p106c.jpg

twitter.com/kattathora: ஸ்கூல்ல இருந்து திரும்பும் மகள், `அப்பா... இன்னிக்கு என் உண்டியல்ல இருந்து காசு எடுத்தியா?’ எனக் கேட்கும் போது, கொஞ்சம் மானக் கேடாதான் இருக்கு!

twitter.com/teakkadai: சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஐம்பது வயதைத் தாண்டியவுடன் ஆண்களின் பெயருக்குப் பின்னே ஆட்டோ மேட்டிக்காக சாதி சேர்ந்துவிடுகிறது!

twitter.com/pshiva475: சண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்!

twitter.com/iKappal: நம்மூர்லதான்டா ஒன்வேயிலகூட ரெண்டு பக்கங்களும் பார்த்து கிராஸ் பண்ணவேண்டியிருக்கு.

twitter.com/YoursNeel: சிட்டி ரோபோ தன்னைத்தானே டிஸ்மேன்டில் பண்ற அதே பீலிங், சம்பளப் பணத்தை முதல் வாரக் கணக்குவழக்குகளுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணும்போது. ;-(

twitter.com/Arunvijith: முன்னர் எல்லாம் சண்டேனா குளிக்கிறதுதான் சாதனையா இருக்கும். இப்போ, பல் துலக்குறதே பெரிய சாதனையா இருக்கு!

p106d.jpg

twitter.com/aruntrich:  தான் லவ் பண்ணின பொண்ணை கல்யாணம் பண்ணினா... லவ் மேரேஜ். அடுத்தவன் லவ் பண்ணின பொண்ணை கல்யாணம் பண்ணினா... அரேஞ்சுடு மேரேஜ்.

twitter.com/thoatta: இந்த ஸ்டிக்கர், போஸ்டர், ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் எடுத்த பிறகு எங்க ஏரியாவைப் பார்த்தா, ஷேவிங் செஞ்ச டி.ராஜேந்தர் போலவே இருக்கு :-/

facebook.com/kirthikat: வெயிலுக்காக நிழலைத் தேடுபவர்களைவிட... செல்போன் பார்ப்பதற்காக நிழலைத் தேடுபவர்கள்தான் அதிகம்!

facebook.com/thiyagarajan.rk: ஹோட்டலில் ‘மினி டிபன்’ சாப்பிடும்போது எல்லாம், நாலு வீட்ல இருந்து வாங்கி சாப்பிடுற மாதிரியே ஒரு ஃபீலிங்!

facebook.com/ganesa.kumaran: இந்த உலகத்துல ஷாஜகான், மும்தாஜை எவ்ளோ லவ் பண்ணினாருனு மும்தாஜைத் தவிர எல்லாருக்கும் தெரியும்!

vikatan

 

  • தொடங்கியவர்

ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்?

  • தொடங்கியவர்
1996 : இலங்கை கிரிக்கெட் அணி உலக சம்பியனாகியது
 

வரலாற்றில் இன்று.....

மார்ச் - 17

 

687varalu.jpg1776 : அமெரிக்கப் புரட்சியின்போது, பிரித்தானியப் படைகள் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றன.

 

1805 : நெப்போலியன் தலைவராக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

 

1845 : இறப்பர் பட்டி (இறப்பர் பான்ட்) கண்டுபிடிக்கப்பட்டது.

 

1861 : இத்தாலியப் பேரரசு (1861- 1946) அமைக்கப்பட்டது.

 

1891 : பிரித்தானியாவின் எஸ்.எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.

 

1942 : மேற்கு யுக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

 

1950 : கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98 ஆவது மூலகத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

 

1958 : ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.

 

1959 : 14 ஆவது தலாய் லாமாவான டென்சின் கியாட்சோ,  திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவை சென்றடைந்தார். 

 

1966 : அல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.

 

1969: கோல்டா மேயர்  இஸ்ரேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

 

1970 : வியட்நாமில் மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.

 

1988 : கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

 

1988 : எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

 

1992 : ஆர்ஜென்டீனாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.

 

1992 : தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியை ஒழிப்பதற்கான சட்டமூலத்துக்கு 68.7 சதவீதமமானோர் ஆதரவாக வாக்களித்தனர்.

 

1996 : லாகூரில் நடந்த, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின்   இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இலங்கை கிரிக்கெட் அணி  தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது.

 

2000 : உகண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

 

2001 : கொசோவோவில் நடந்த வன்முறைகளால் 22 பேர் பலியானதுடன் சுமார் 200 பேர் காயமடைந்தனர். 

www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மார்ச் 17: சாய்னா நேவால் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

 

சாய்னா நேவால், மார்ச் 17, 1990-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸாரில் பிறந்தார். அப்பா, அம்மா இருவருமே இளம் வயதில் தேசிய அளவில் பாட்மின்டனில் ஜொலித்தவர்கள். பெண் குழந்தை பிறந்துவிட்டதே என சாய்னாவின் பாட்டிக்கு ஏகத்துக்கும் வருத்தம். அதனால் தன் மகளை ஆண் பிள்ளை போலத் தைரியமாக வளர்க்க எண்ணி முதலில் கராத்தே கற்றுக்கொள்ள அனுப்பினார் அம்மா உஷா ராணி.

கராத்தேவில் பிரவுன் பெல்ட் தகுதி பெற்ற சாய்னா, எட்டாவது வயதில் பாட்மின்டன் மட்டையைக் கையில் எடுத்தார். அப்பா ஹைதராபாத்துக்கு மாற்றல் ஆக, நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார் சாய்னா. தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லால் பகதூர் மைதானத்துக்கு தந்தையுடன் பயிற்சிக்காகச் செல்வார்.

march.jpg



14 வயதில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வாங்கி, அனைவரையும் அசத்தினார். ‘நான் திறமையுடன் பிறந்த ஆட்டக்காரி இல்லை. இன்னும் சொல்லப்போனால், கராத்தே பிடிக்காமல்தான் இங்கே வந்தேன். ஓயாமல் உழைத்தேன். ஆசிரியரை மதித்தேன். அதனால்தான் இவ்வளவு தூரம் உயர முடிந்தது’- சாம்பியன் ஆனதும் சாய்னா சொன்னது இது.

காமன்வெல்த் போட்டிகளில் குட்டியூண்டு பெண்ணாகக் கலந்துகொண்டு முழு அணியையும் ஊக்குவித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒற்றையர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். உலகின் மிகக் கடினமான மூன்று சூப்பர் சீரீஸ் பட்டங்களைத் தொடர்ந்து வென்றார். அப்போது இவரின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ‘ஒரு பேரனால்கூட இவ்வளவு பெருமை வந்து இருக்காது’ என இவரது பாட்டி சொன்னபோது கண் கலங்கியதாகச் சொல்வார் சாய்னா.

அமைதியாகப் பேசும் சாய்னா, ஆட்டத்தில் அசுரப் பாய்ச்சல் காட்டுவார். ”விளையாட்டில் மனம் சலனப்படாமல், எதிராளி யார் எனக் கவலைப்படாமல் இயல்பாக ஆடுவதே நான் தொடர்ந்து ஜெயிக்கக் காரணம்” என்று தனது வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார்.

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப்-ஐ எனக்கு ரொம்பப் பிடிக்கும். தோழிகள் எல்லோரும் ஸ்டெஃபி சாய்னா என்றே அழைப்பார்கள். பாட்மின்டனில் பெரிய அளவில் பெயர் பெற்றதும் அந்தப் பெயரில் கூப்பிடுவதை நிறுத்தச் சொல்லி தோழிகளுக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டார்.

sainaaa3.jpg



செல்போன்கள் மீது ஆர்வம் அதிகம். மரியா ஷரபோவா தோன்றிய மொபைல் விளம்பரத்தில் மனதைப் பறிக்கொடுத்து, அப்பாவிடம் அந்த மொபைல் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கினார். தற்போது ஐ போன் சாய்னாவின் ஃபேவரிட்.

நாளைக்கே இது மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவ்வளவு வெரைட்டிகளில் விதம் விதமாக போன்கள் இவரிடம் உண்டு.

இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பெறும் மிக உயரிய விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இவர் பெற்றபோது, வயது 19 மட்டுமே. உலக அளவில் இரண்டாவது ரேங்க் வரை உயர்ந்து இருக்கிறார். ”ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது கனவு, உலக அளவில் முதல் ரேங்க்கும் என் இலக்கு!’ என்று கூறியிருந்தார். அதன்படி உலக தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

பாட்மின்டனில் ஜொலிப்பதற்காக சாய்னா தியாகம் செய்தவை ஏராளம்.பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதாமல் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாகப் பெற்றோருடன் சினிமா, கடற்கரை, ஹோட்டல், சுற்றுலா என எங்கும் சென்றது இல்லை. ஓயாமல் பயிற்சி, போட்டி என எப்போதும் இலக்கை நோக்கி உழைப்புதான்.

இளம் வயதில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது சக ஆண் பிள்ளை கள் தங்களின் முஷ்டியை மடக்கிக் காண்பித்து சாய்னாவைப் பயமுறுத்து வார்கள். கோபமேபடாமல் அவர் களையும் விளையாடக் கூப்பிட்டு, குறைந்த நேரத்துக்குள் தோற்கடிப் பார். புன்னகை மாறாமல் கைகொடுத்து அனுப்பிவைப்பார். அதுதான் சாய்னா!

vikatan

  • தொடங்கியவர்

பெரிய ஜக்!

லண்டனில் 1902-ம் ஆண்டு, ஏழாம் எட்வர்ட் அரசராகப் பதவி ஏற்றார். அதற்கு, ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவுக்கு வரும் அரசர் மற்றும் விருந்தினர்கள் நீர் பருக வசதியாக, பிரமாண்டமான இரண்டு எவர்சில்வர் ஜாடிகள் உருவாக்கப்பட்டன. அந்த ஜாடிகள் ஒவ்வொன்றும் 16 மீட்டர் உயரம்கொண்டது. அதில், 8,182 லிட்டர் தண்ணீரை நிரப்பலாம். ஜாடிகளைத் தனது நினைவுப் பரிசாக, ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு ஏழாம் எட்வர்ட் அளித்தார். இப்போதும் ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்த ஜாடிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

12718384_1092374620821327_67379822721717

  • தொடங்கியவர்

10557713_1003549203027107_16921523389264

இந்திய - அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பிறந்தநாள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நவீனன் said:

10557713_1003549203027107_16921523389264

இந்திய - அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பிறந்தநாள்

வரலாறு ஒன்று,,,,.

வானில் கருகிப் போனது...!

சாதனை ஒன்று...,

வேதனையாய் விடிந்து போனது..!

பெண்ணினத்தை ஒளியேற்றிய தீபம்,

பேரண்டத்துடன் தன்னைப்.

பிணைத்துக் கொண்டது!

வரலாறு படைக்கப் போனவள்...,.

தானே வரலாறாகிப் போனாள்!

 

  • தொடங்கியவர்

ஒரு மாத குழந்தையாக வெள்ளையின தம்பதியினரால் இலங்கையில் தத்தெடுக்கப்பட்டவர்

160317111042_sri_lanka_512x288_bbc_nocre

 

 `எனக்கு பிறகு இன்னுமொரு தம்பியையும் எனது வளர்ப்பு பெற்றோர் தத்தெடுத்தனர்'

இலங்கையில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி மடம் ஒன்றிலிருந்து 33 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையின தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை, இப்போது வளர்ந்து ஆளாகி தனது அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தாம் குடும்பமாக அம்மா அப்பாவுடன் வெளியே செல்லும் போது, வெள்ளையின பெற்றோருடன் ஆசிய இனத்தை சேர்ந்த பிள்ளை என மற்றையவர்கள் வினோதமாக பார்ப்பார்கள் என்றார் ஜெனி ஸ்மித்.

அவர்களது பார்வையில் பல கேள்விகள் இருப்பதை காணமுடியும் இங்கு அப்படித்தான் நடக்கிறது என்றார் அவர்.

பெற்றோர்களுடனான தமது உறவு குறித்து சமுதாயத்தில் தப்பாக பேசுவதும் கூட மிக வேதனை அளிப்பதாக உள்ளது, அவ்வாறான சந்தர்ப்பங்களை பல தடவைகள் நான் எதிர் கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய சமுகத்தை சேர்ந்த பல நண்பர்களும் தனக்கு இருந்ததாக தெரிவித்த ஜெனி, அவர்கள் மத்தியில் தான் அடையாளத்தை தொலைத்த ஒருத்தியாகவே வளர்ந்ததாகவும் தெரிவித்தார்.

லண்டனிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரையோர நகரமான பிரைட்டனில் வளர்ந்த ஜெனி, தான் இனவாதம் மற்றும் அது பற்றிய அறியாமையையும் தானது வாழ் நாட்களில் அனுபவித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

''நான் நிறத்தை பார்ப்பதில்லை,உண்மையிலே அதைப்பற்றிக் கவலைப்பட்டதும் இல்லை,ஆனால் நான் எனது வளர்ப்பு பெற்றோருடன் இருக்கும் போது எங்களை பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றார் அவர்.

பல்லினக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு எதிரான மனப்பாங்கு மாற வேண்டும் என்பதுடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

BBC

  • தொடங்கியவர்

இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தை மட்டும் தனித்தனி: வியட்நாம் வினோதம்!

தான் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகப்போகிறோம் என்று தெரிந்தாலே மனம் துள்ளிக் குதிக்கும். அதுவும் இரட்டைக் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி இரட்டைக் குழந்தைகளை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த இருந்த வியட்நாம் நாட்டைச் சார்ந்த கணவன் மனைவிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

குழந்தை பிறந்த சில நாட்களில் இரண்டு குழந்தைகளுக்கும் வித்தியாசம் நிறைய இருப்பதாக உறவினர்கள் கூற,  DNA பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் குழந்தைகளின் தந்தை. ஒரு குழந்தைக்கு அடர்த்தியான சுருட்டை முடியும், இன்னொரு குழந்தைக்கு நீளமான மெலிதான முடியும்  இருந்த நிலையில், DNA பரிசோதனை முடிவில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு முடிவு காத்திருந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு வெவ்வேறு தந்தைகள் என முடிவு வந்தது.

முடிவை பார்த்த தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் இது அரிதிலும் அரிதான நிகழ்வு.

வியட்நாம் ஜெனடிக் அமைப்பின் தலைவர் லீ டின் லுவாங்க் (Lee Dinh Luong) கூறுகையில், "இது வியட்நாமிற்கு மட்டுமல்ல, உலகிற்கே புதிதான ஒரு நிகழ்வு. இரு குழந்தைகளும் ஒரே தினத்தில் பிறந்துள்ளன. மேலும் இரு குழந்தைகளும் ஒரே பாலினத்தைச் சார்ந்ததுதான். இதுபோல உலகெங்கும் 10 இரட்டையர்கள்தான் இருப்பார்கள்"  என்றார்.

ஒருவேளை மருத்துவமனை,  குழந்தையை மாற்றி இருக்குமோ என்ற சந்தேகத்தை தீர்க்க, அம்மாவின் மரபணு பரிசோதிக்கப்பட்டது. இரு குழந்தைக்கும் ஒரே அம்மாதான் என்று முடிவு வந்தது.

foot_vc1.jpg

மேலும், ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் நோயியல் பேராசிரியரான அல்லன் பாசி( Allan Pacey) கூறுகையில், "இந்த நிகழ்வுக்கு heteropaternal superfecundation என்று பெயர். இது நிகழ்வதற்கு பல விஷயங்கள் வரிசையாக நடைபெற வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒரு கருமுட்டைக்குப் பதிலாக இரு கருமுட்டைகள் ஒரே நேரத்தில் உருவாக வேண்டும். மேலும், அப்பெண் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் இரு வேறு ஆடவருடன் உடலுறவு கொள்ள வேண்டும். அதாவது ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள்".

இது போன்ற நிகழ்வு பறவை இனங்களிலும் மிருக இனங்களிலும் மிகவும் பொதுவானது. ஆனால், மனித இனத்தில் நிகழ்கிறது என்றால், உலகம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது என்ற கேள்வி மட்டுமே மனதில் எழுகிறது.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும் ஷூ அறிமுகம்!

திரைப்படத்தில்,  விக்ரம் காலை வேகமாக ஆட்டியவுடன் ஷூ லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும். ஆனால் நைக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காலணியை அணிந்த உடன் லேஸ்கள் தானாக இறுகிக்கொள்ளும்.

ஹைபர் அடாப்ட் 1.0 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள்,  இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக சந்தைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளனர்.

nikeshow_vc1jpg.jpg

1989-ம் ஆண்டு பேக் டு தி ஃபியூச்சர் திரைப்படத்தில் இது போன்றதொரு காலணியை காட்டியதாகவும்,  அதன் பிறகே இந்த மாடல் ஷூக்களை தயாரிக்க நைக் நிறுவனம் முயற்சித்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த தொழில் நுட்பம் சரியாக அமைவதற்காக பல ஆண்டுகள் உழைத்ததாகவும், பலகட்ட சோதனைகளுக்கு பின்தான் இந்த வடிவம் கிடைத்ததாகவும் நைக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அறிய வீடியோவைக் காண்க...


விகடன்

  • தொடங்கியவர்

76869_1003534016361959_11424470237280128

20 ஆண்டுகளுக்கு முன்.... 1996 மார்ச் 17 !!!
World Champions !!! Sri Lanka Cricket
இலங்கை உலக கிரிக்கெட் சாம்பியனாக மகுடம் சூடிய நாள் இதுவே.
20 ஆண்டுகளின் வெற்றிப் பூர்த்தி !!!
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலக சம்பியனாகியது.

 

  • தொடங்கியவர்

29811_546380002195186_891126557401945920

அபூர்வ செல்பிக்கு ஆசைப்பட்டவருக்கு கிடைத்த ஆச்சரிய செல்பி..
இப்படியொரு செல்பி பார்த்திருக்கவே முடியாது

  • தொடங்கியவர்

நீருக்கு அடியில் சென்று அதிரடியாக மீனை பிடித்து செல்லும் குழுகு . இந்த அதிர்ச்சி காணொளியை பாருங்கள் ...

  • தொடங்கியவர்

10580878_1003553626359998_79562801439171

 
 
தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும்,பின்னாளில் தலைமைத் விளங்கியவருமான அன்றூ ஹட்சனின் பிறந்தநாள்
Happy Birthday Andrew Hudson
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

dot1.jpg குழந்தை குட்டிகளுடன் லண்டனில் குடியேறிருக்கிறது பிராட் பிட் - ஏஞ்சலீனா ஜோடி. லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் விலைக்கு ஏதாவது வீடு கிடைக்குமா எனத் தேடி அலைந்து, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து பால் காய்ச்சியிருக்கிறார்கள். எட்டு பெட்ரூம்கள் கொண்ட அந்த வீட்டுக்கான மாத வாடகை, ஜஸ்ட் 14 லட்ச ரூபாய்தான். பிராட் பிட்டின் `வேர்ல்டு வார் Z2’ படத்தின் ஷூட்டிங் முடியும் வரை, லண்டன்தான் தாய்வீடு என்கிறார் ஏஞ்சலீனா! சென்னைக்கு வாங்க மக்களே!

dot1.jpg டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தப் போட்டியில் இந்தியா ஜெயித்தாலும் ஸ்டெம்ப்புகளை அள்ளிக்கொண்டு போவார் தோனி. `இதன் ரகசியம் என்ன?' எனப் பலமுறை கேட்டும் வாய் திறக்காதவர், `ஓய்வுக்குப் பிறகு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டுமே. அப்போது வீடியோக்களில் வெற்றிபெற்ற மேட்சுகளைப் பார்த்து `இந்த ஸ்டெம்ப் இந்த மேட்சில் இருந்து எடுத்தது' எனக் குறித்துக்கொள்வேன்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆனால், உண்மையில் `320 ஸ்டெம்ப்புகள் கொடு. அதை வைத்து நான் என் வீட்டின் சுற்றுச்சுவரை எழுப்ப வேண்டும்' என்று தன்னிடம் கேட்ட ஏழை பள்ளி நண்பனின் ஆசையை நிறைவேற்றத்தான் தோனி இப்படிச் செய்கிறார் என்கிறார்கள். நண்பேன்டா!

dot1.jpg பிரேசில் மீனவர் ஜோவோ பெரேரா டிசோசாவுக்கும், டின்டிம் என்ற பென்குயினுக்கும் இடையேயான நட்புதான் இணையத்தின் சென்டிமென்ட் சென்சேஷன். 2011-ம் ஆண்டு, அடிபட்டுக் காயமடைந்து பிரேசிலில் கரை ஒதுங்கிய பென்குயினை, ஜோவோ காப்பாற்றி தினமும் உணவு அளித்து வளர்த்தார். `டின்டிம்' எனப் பெயரும் மூன்று வேளை சோறும் வைத்துக் காப்பாற்றி, அதைக் கடலில் கொண்டுபோய் விட்டார் ஜோவோ. அப்போது சென்ற டின்டிம், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதமானால் 5,000 மைல்கள் பயணித்து ஜோவோவைத் தேடிவந்து பார்க்கிறது. எட்டு மாதங்கள் இவருடன் தங்கிவிட்டு, பின்னர் இனப்பெருக்கம் செய்வதற்காக பிப்ரவரியில் சென்றுவிடும். அதையும் தாண்டி புனிதமானது!

dot1.jpg இஸ்ரோவின் சமீபத்திய சாதனை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். அப்படீனா? இத்தனை நாட்கள் நாம் வழிகாட்டியாகப் பயன்படுத்திய ஜி.பி.எஸ்., அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பம், அதற்கு மாற்றாக இந்தியாவுக்கு என சொந்த நேவிகேஷன் சிஸ்டம் உருவாக்கும் பணியில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இஸ்ரோ. இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவ, ஏழு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த வேண்டும். கடந்த வாரம் 6-வது செயற்கைக் கோளையும் வெற்றிகரமாக நிலைநிறுத்திவிட்டனர். `இன்னும் ஒரே ஒரு செயற்கைக்கோள் மீதம் இருக்கிறது. அந்தப் பணியை அடுத்த மாதம் முடித்துவிடுவோம்’ என்கிறார் இஸ்ரோ தலைவர் கிரண்குமார்.  இதுதான் ரியல் மேக் இன் இந்தியா!

p58a.jpg

dot1.jpg விராட் கோஹ்லி கேட்ட ஸாரியில் நெகிழ்ந்துபோயிருக்கிறது கேர்ள்ஸ் வட்டாரம். மகளிர் தினத்துக்கு ஆளாளுக்கு கெத்துகாட்ட, கோஹ்லி சும்மா இருப்பாரா? தன் ட்விட்டர் பக்கத்தில், `விசில் அடிப்பவர்கள், பின்னால் தொடர்ந்து வந்து கேலிசெய்பவர்கள், முட்டாள்களுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். அவர்களால் நாம் நம் அமைதியை இழக்க வேண்டாம்’ என்கிற செய்தியோடு வாழ்த்துச் சொல்லி அசத்திவிட்டார்.  குட் பாய் கோஹ்லி!

dot1.jpg இந்த ஆண்டின் பெண்கள் தின சூப்பர் ஸ்டார் ‘ஹர்னம் கௌர்’. இவருக்கு ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், முகத்தில் மீசையும் தாடியும் அளவுக்கு அதிகமாக வளர்கிறது. ஒரு மாடலாக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவருக்கு அது மிகப் பெரிய பிரச்னையாக, ஏகப்பட்ட க்ரீம்களையும் மருந்துகளையும் முயற்சித்துத் தோற்றுள்ளார். கூடவே கிண்டல்களும் கேலிகளும் அவமானங்களும். இந்த நிலையில்தான் இனி எதுவும் செய்யப்போவது இல்லை `இனிமே இப்படித்தான்’ என ஆண் போல தாடியும் மீசையும் வளர்க்க ஆரம்பித்தார். பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு, சென்ற மாதம் அவருடைய கனவு நனவாகி லண்டனின் புகழ்பெற்ற ராயல் ஃபேஷன் டே-வில் மாடலாகக் கலந்துகொண்டு கலக்கியிருக்கிறார். `என்னை `அருவருப்பானவள், அசிங்கமானவள்' எனப் பேசிய அனைவருக்கும் என் நன்றி. உங்களுடைய ஒதுக்குதலில் இருந்துதான் நான் பிறந்தேன்’ என அவர் பேசியது செம ட்ரெண்டிங்! ரோல்மாடல் ஹர்னம்!

p58c.jpg

dot1.jpg 2016-ம் ஆண்டின் டாப் 10 பாடல்கள் லிஸ்ட்டில் இப்பவே துண்டு போட்ட பாடல் `ஏ... சண்டைக்காரா'. இந்த ஸ்லோ குத்தும் சோலோ வாய்ஸும் இளசுகள் மத்தியில் டாப் வைரல். சந்தோஷ் நாராயணனின் இசையில் அந்தப் பாடலைப் பாடியவர் அவரின் மகள்தான். தீக்‌ஷிதா என்கிற இந்த டீன் ஏஜ் பெண்ணின் பெயரை `தீ' எனச் சுருக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே `மெட்ராஸ்' படத்தில் `நான் நீ...' பாடலையும் பாடி இருக்கிறார் தீ. இவரின் அடுத்த பாடலுக்காக வெயிட்டிங்கில் இருக்கிறது ரசிகர் படை. நானும் `தீ'யின் தீவிர ரசிகன்தான்!

p58b.jpg

dot1.jpg  இயிற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நடிகராகியிருக்கிறார். `என்னை இயற்பியல் அறிஞனாகத்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால், எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. அது நடிகன். என் ஆசையை நிறைவேற்றிய ஜாக்குவாருக்கு நன்றி’ என, கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் குஷியாக ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார் ஹாக்கிங். அவர் ஸ்டேட்டஸ் வெளியான சில மணி நேரங்களில், ஜாக்குவார் கார் விளம்பரம் வெளியானது. இதில் வில்லனாக நடித்திருக்கும் ஹாக்கிங்குக்கு லைக்ஸ் ஏகத்துக்கும் குவிகிறது.  சூப்பரே!

p58d.jpg

dot1.jpg `மரியா ஷரபோவா ரொம்ப பாவம்பா!’ என உச்சுக்கொட்டுகிறது டென்னிஸ் ரசிகர் வட்டாரம். நீரிழிவுப் பிரச்னை மற்றும் மெக்னீசியம் குறை பாட்டுக்காக, கடந்த 10 வருடங்களாக எடுத்துக் கொண்ட ‘மெல்டோனியம்’ என்னும் மருந்து, ஷரபோவாவுக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தி யிருக்கிறது. `ஜனவரி மாதம் முதல் மெல்டோனியம் தடை செய்யப்பட்ட விஷயமே எனக்குத் தெரியாது’ என ஷரபோவா ஒப்புக்கொள்ள, `அவர் இந்தக் கடினமான சூழ்நிலையில் தவறை நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் மீண்டு வருவார்’ என உடனடியாக ஆறுதல் மெசேஜ் தட்டியிருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். மீண்டு(ம்) வா ஷரபோவா!

vikatan

  • தொடங்கியவர்

டி.ரெக்ஸ் டைனோசார்கள் பிரம்மாண்ட விலங்குகளாக உருவானதெப்படி?
-------------------------------------------------------------------------------------------------------------------------------

பூமியில் வாழ்ந்த மூர்க்கமான டைனோசார் டைரோனசோரஸ் ரெக்ஸ். சுருக்கமாக டி ரெக்ஸ் டைனோசார் என்று அழைக்கப்படுகிறது.

சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரம்மாண்ட விலங்குகள் இவை.

இவை எப்படி இவ்வளவு பிரம்மாண்டமான டைனோசார்களாகவும், மூர்க்கமானவையாகவும் உருவாயின என்பது இதுவரை புரியாத புதிராக இருந்தது.

ஆனால் தற்போது எடின்பரா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் டி ரெக்ஸ் டைனோசார்களின் சிறு வடிவ முன்னோர்களை கண்டுபிடித்து இந்த புதிருக்கு விடை கண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

BBC

  • தொடங்கியவர்
ஜேர்மனியின் மீது 1,250 விமானங்கள் குண்டுத் தாக்குதல்
 

வரலாற்றில் இன்று...

மார்ச் - 18

 

688varalru2.jpg1241 : போலந்தின் கிராக்கோவ் நகரம் மொங்கோலியர் களினால் சேதமாக்கப்பட்டது.

 

1438 : ஹாப்ஸ்பேர்க்கின் இரண்டாம் அல்பேர்ட் ஜேர்மனியின் மன்னனாக முடி சூடினார்.

 

1874 : வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

 

1913 : கிரேக்கத்தின் முதலாம் ஜோர்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டார்.

 

1915 : முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.

 

1922 : இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி 6 வருட சிறைத் தண்டனை பெற்றார். 

 

1925 : அமெரிக்காவின் இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் உயிரிழந்தனர்.

 

1937 : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நியூ லண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

 

1940 : இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டுச் சேர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

 

1945 :  இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பேர்லின் நகரைத் தாக்கின.

 

1953 :  மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

 

1962 : அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

 

1965 : சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் “வஸ்கோத் 2” விண் கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி, விண்வெளியில் நடந்த முதல் மனிதர் ஆனார்.

 

1970 : கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.

 

1971 : பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர்.

 

1980 : ரஷ்யாவில் வஸ்தோக் 2 எம் ஏவுகணை ஏவப்படுகையில் வெடித்ததில் 50 பேர் உயிரிழந்தனர். 

 

1989 : எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழைமையான பதனிடப்பட்ட உடல், பிரமிட் ஒன்றிலிருந்து  கண்டுபிடிக்கப்பட்டது.

 

1990 : கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக ஜனநாயக ரீதியான தேர்தல் இடம்பெற்றது.

 

2003 : ஐக்கிய அமெரிக்கா ஈராக்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

 

2014 : யுக்ரைனின் தென் பிராந்திய தீபகற்பமான கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக  ரஷ்யா மற்றும் கிரைமியாவின் நாடாளுமன்றங்களுக்கிடையில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எத்தனை பெண்கள்..? நெட்டிசன்களை குழப்பும் வைரல் புகைப்படம்!

 

சுவிட்சர்லாந்து: இணையவாசிகளை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கியிருக்கும் ஒரு புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

2.jpg

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு புகைப்படக்காரரான டிஸியானா வெர்கரி என்பவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த புகைப்படத்தில் சில பெண்களின் உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், நெட்டிசன்களுக்கான குழப்பம் பெண்கள் மீதானது அல்ல. அந்த புகைப்படத்தில் எத்தனை பெண்கள் உள்ளனர் என்பது தான் குழப்பமே.

இணையத்தில், அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது 2 பெண்கள் என்று ஒருசிலர் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ, அதில் 3 என்றும், 4 என்றும் குழப்பமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில், கண்ணாடி பிம்பங்களால் தொடர்ச்சியாக தெரியும் பெண்களின் தோற்றம், பார்வையாளர்களை கொஞ்சம் குழப்பத்தான் செய்கிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது எத்தனை உருவம் உண்மை; எத்தனை உருவம் பிம்பம் என்பதற்கான விடையை, அந்த புகைப்படக்காரர் தான் வெளியிட வேண்டும்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

இருவர் மட்டும்தான்....!

விரும்பினால் அந்த இடத்துக்கு என்னைக் கூட்டிப் போகவும். அந்த இருவரை மட்டும் அழைத்து வரவும் ,நான் படமெடுத்துக் காட்டுகின்றேன்....!  tw_blush:

சுவிஸையும் பார்த்திட்டு வருவம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.