Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஏப்ரல் 4: மார்டின் லூதர் கிங்; இணையற்ற போராளி கொல்லப்பட்ட தினம் இன்று - சிறப்பு பகிர்வு

12963941_1109102512481871_80492988324883

 

மார்டின் லூதர் கிங் இணையற்ற போராளி. வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின் ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள் தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்டின் லூதர் கிங் வந்தார்.

ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம் என்கிற எண்ணம், பலூன் கடைக்காரரின் நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியை
எழுப்ப பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.

அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர்.

எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும் எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர்.

அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின் கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை வேறென்ன இருக்க முடியும்?

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 04
 
 

article_1459745360-martin-luther-king-191581: உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1721: சேர் ரொபர்ட் வால்போல் பிரிட்டனின் முதலாவது பிரதமரானார்.

1814: நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.

1841: அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் ஹென்றி ஹரிசன், நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.

1818: 13 கோடுகளும் 20 நட்சத்திரங்களும் கொண்ட அமெரிக்க தேசிய கொடி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

1850: இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1865: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள், ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.

1866: ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தார்.

1905: இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1925: ஜேர்மனியில் எஸ்.எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.

1939: ஈராக்கில் இரண்டாம் பைஸால் மன்னரானார்.

1944: இரண்டாம் உலகப் போர் - ஆங்கிலோ-அமெரிகப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கலில் குறைந்தது 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1949 - பன்னிரண்டு நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.

1960: செனிகல் மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்ஸ் ஒப்புக் கொண்டது.

1968: அமெரக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார்.

1968: அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1969: டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

1973: உலக வர்த்தக மையம், நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.

1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.

1975: வியட்நாம் போர் - சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172பேர் கொல்லப்பட்டனர்.

1976: இளவரசர் நொரடோம் சீயனூக், கம்போடியாவின் அரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1979: பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1983: சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1984: அமெரிக்கத் தலைவர் ரொனல்ட் ரேகன், வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.

1999: பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.

2002: அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிம்ரன் இல்லாததாலதான், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா! - சிம்ரன் பிறந்தாள் பகிர்வு

 

சில ஆண்டுகளுக்கு முன் நண்பன் ஒருவனது அறைக்குச் சென்றதும் அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைப் பார்த்து வியந்துபோனேன். ஏனெனில், த்ரிஷா, நயன்தாராக்களைக் கடந்து சமந்தாக்களை தமிழ் சினிமா பன்னீர் ரோஜாப்பூக்களைத் தூவி வரவேற்றுக்கொண்டிருந்த காலம் அது. அந்த புகைப்படங்களில் காட்சியளித்தவர் சிம்ரன். நாங்கள் 'நான் ஈ - பிந்து'வை கனவுநாயகியாகக் கொண்டிருக்க அவன் மட்டும் 'துள்ளாத மனமும் துள்ளும்' 'ருக்கு'வை இன்னும் காதலித்துக் கொண்டிருந்தது வியப்புக்குரியது தான். 

சிம்ரன் காலத்தில் திரைப்படம் பார்க்கத் தொடங்கியவர்கள் நாங்கள். விவரம் தெரியாத வயதில் அவர் எங்களுக்கு சிம்ரனாக அறிமுகமாவதற்கு முன்பே ருக்குவாக, 'அவள் வருவாளா - திவ்யா'வாக, 'கண்ணெதிரே தோன்றினாள் - ப்ரியா'வாக, 'உன்னைக் கொடு என்னைத் தருவேன் - இந்து'வாக பழக்கப்பட்டவர். படத்தில், அந்தத் திரைப்படங்களின் நாயகர்கள் காதலைச் சொல்லும்முன்னே, திரையில் தோன்றும் சிம்ரனுக்கு காதலைச் சொன்னவர்கள் நாங்கள்.

collagesim.jpg

அதுவரை, சற்று பூசினாற்போன்று உடற்கட்டு கொண்ட கதாநாயகிகளையே கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் ஒல்லியான சிம்ரனைக் கொண்டாடினார்கள். தன் மயக்கும் விழிகளால் ரசிகர்களின் இதயங்களைச் சிறைப்பிடித்தார். சோகமான காட்சிகளாகட்டும், நகைச்சுவைக் காட்சிகளாகட்டும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் கண்களாலும், உடல்மொழியிலும் அசத்தும் நடிகை எனப் பெயர் பெற்றவர். 90 களின் இறுதியிலும், 2000 த்தின் தொடக்கங்களிலும் தன் வசீகர நடிப்பாலும் இடையழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை சிம்ரன். இப்போதும் கூட இடுப்பை ஆட்டி நடக்கும் பெண்களை "மனசுல சிம்ரன்னு நெனப்பு.." எனக் கேலி செய்வதைக் கேட்டிருப்போம். 

s2.jpg

இந்தி, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் அறிமுகமான வருடத்திலேயே, ஒன்ஸ்மோர், நேருக்குநேர், வி.ஐ.பி. படங்களின் நடித்த சிம்ரன் தென்னிந்தியாவின்  சிறந்த அறிமுக நடிகைக்கான ஃப்லிம்ஃபேர் விருதைத் தட்டிச்சென்றார். இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். வெற்றிகரமான நடிகையாக வாய்ப்புகள் குவிந்த சூழலிலும் 'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். ஃப்லிம்ஃபேர் விருதை 2002 ம் ஆண்டு 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெற்றார். இந்தத் திரைப்படத்தில் ஒன்பது வயது சிறுமியின் வளர்ப்புத் தாயாக 'இந்திரா' கதாபாத்திரத்தில் நடித்து பலரது மனதையும் கவர்ந்தார்.

 

'நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் ..' பாடலில்

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..

என ரம்மியமான இசையோடு இணைந்துவரும்  சின்மயியின் குரலுக்கு சிம்ரன் வாயசைத்திருப்பார். அது வெறும் முகபாவ நடிப்பு அல்ல என்பதை அடுத்த விநாடியில் சிறுமி கீர்த்தனா தன் தாயை நிமிர்ந்து பார்த்துவிட்டு மனதை இலேசாக்கிக் காற்றில் பறக்கும்போது நம்மால் உணரமுடியும். வானத்தின் நீலத்தைக் கொஞ்சம் ஒற்றியெடுத்தது போல சேலையை தரையில் படரவிட்டுத் மகளை மார்போடு அணைக்கும் தருணங்களில் சிம்ரன் தாய்மையை உணர்த்தியிருப்பார் நமக்குள்ளும்.

s1.jpg



'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் எதிர்பாராவிதமாக நாயகனின் மூலமாகவே கண்பார்வை பறிபோகும். அதனால் அவன்மீது வெறுப்பு ஏற்பட்டு பின்னாளில் பார்வை கிடைத்ததும் அவனை யாரென அறியாமல் அடித்துத் துரத்தும் கலெக்டர் கதாபாத்திரம். படம் முழுவதும் கண் தெரியாத இடங்களிலெல்லாம் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். உண்மையை அறிந்துகொண்டதும் மனம்வருந்தி அவர் பாடுவதாய் இறுதிக்காட்சி அமைந்திருக்கும்.

இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை..

இன்றுவரை அந்தக் காட்சிகளையும் 'ருக்கு'வையும் யாராலும் மறக்க முடியாது.

simranva1000.JPGகமல்ஹாசனோடு 'பம்மல் கே சம்பந்தம்' மற்றும் 'பஞ்ச தந்திரம்' இரண்டு படங்களிலும் நகைச்சுவையான கதாபாத்திரங்களிலும் சிம்ரன் கலக்கியிருப்பார். 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் டாக்டராக நடித்திருப்பார். ஒரு ஆப்பரேஷனில் கமலின் வயிற்றுக்குள் கடிகாரத்தை வைத்துத் தைத்துவிட்டு அது தெரிந்தபின்னர் அதை யாருக்கும் தெரியாமல் எடுக்கப் படாதபாடுபடும் காட்சிகள் அதகளம். அதேபோல, பஞ்சதந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் அவர் ஆடும் ‘வந்தேன் வந்தேன்’ பாடலில், முகபாவத்தில் கமலஹாசனை சந்தேகம், கோவம், ஏமாற்றம் எல்லாம் கலந்து கேள்வி கேட்டுக்கொண்டே ஆடவும் செய்து தூள் கிளப்பியிருப்பார். அரசு படத்தில் வடிவேலுவுடன், வசனத்துக்கு தகுந்து முகபாவத்தையும் காட்டி  (ஒன்ன யாரு சேர்த்திக்கச் சொன்னா.. ஒன்ன வெளில அனுப்பிட்டு இவாளை இங்க தங்கிகக்ச் சொன்னா) கலாய்க்கும் காட்சிகளாகட்டும், வாரணம் ஆயிரம் படத்தில் வெர்சடைல் நடிப்பாகட்டும்.. அவரது  திறமைக்குச் சான்றாக இன்னும் பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

2000 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய நாயகிகளில் அதிகபட்சமாக சிம்ரன் 75 லட்சங்களுக்கும் அதிகமாக சம்பளம் பெற்றவர் என்றும் கூறப்படுவதுண்டு. அவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாயின. எட்டுமுறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற பெருமைக்குரியவர். 1999 மற்றும் 2003 என இருமுறை தமிழக அரசின் 'கலைமாமணி' விருது கிடைக்கப் பெற்றார். சிம்ரன் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. இரண்டாவது திரையுலகப் பிரவேசத்தில் 'ஐந்தாம் படை' திரைப்படத்தில் நாட்டியக்கலைஞர் தேவசேனாவாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

தீபக் பாகாவுடனான திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகியிருந்த சிம்ரன் 'சேவல்' மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தின் மூலம் 2008-இல் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதற்குப் பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுகிறார். 'சிம்ரன் & சன்ஸ்' எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். சிம்ரனுக்கு ஆதீப் மற்றும் ஆதித் என இரு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தயாரிப்பில் 'கரையோரம்' என்னும் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.  

நண்பர்களோடு த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ பார்த்துக் கொண்டிருந்தோம். இடைவேளைக்குப் பிறகு இன்ப அதிர்ச்சியாய் திரையில் சிம்ரன். உடன் வந்த நண்பன் சொன்னான்:  ‘ஹும்.. இந்த சிம்ரன் கல்யாணமாகிப் போய்ட்டாங்க. அதுனாலதான் திரிஷா இல்லைன்னா நயன்தாரா-ன்னுட்டிருக்கீங்க. இவங்க இருந்திருந்தா இவங்களை மட்டும்தான் கொண்டாடிருப்பீங்க!’

நிஜம்தான்.   ஹேப்பி பர்த்டே சிம்ரன்!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்பவும் சில்க் இல்லைன்னா சிம்ரன் தான்....!  tw_blush:

  • தொடங்கியவர்
 

ஏப்ரல் 4: நடிப்புலகின் உச்சம் ஹீத் லெட்ஜெர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

 

12968093_1109103309148458_62451948253292

நடிப்புலகின் உச்சம் இவர் என்று உலகம் சொல்வதற்கான கணம் வருவதற்கு முன்பே மரணத்தின் உதடுகள் இருபத்தி எட்டு வயதில் பற்றிக்கொண்ட நாயகன் அவர்.

ஆஸ்திரலியாவில் பிறந்த லெட்ஜெருக்கு ஹீத் என்கிற பெயர் வுதரிங் ஹைட்ஸ் படத்தின் ஆண்டி-ஹீரோவின் நினைவாக வைக்கப்பட்டு இருந்தது. அவரின் வாழ்க்கையிலும் சோகம் விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அப்பொழுதே பெற்றோர் உணர்ந்திருந்தார்களோ என்னவோ ?

பத்து வயதை தொட்ட பொழுது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருந்தன. அவரின் அப்பாவும்,அம்மாவும் பிரிந்திருந்தார்கள். இரண்டு வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து அன்பின் சுவடுகள் அவருக்கு என்ன என்றே தெரியாமல் போயின. வகுப்பில் சமையல் அல்லது நடிப்பு ஆகிய இரண்டில் ஒன்றை பாடமாக தெரிவு செய்ய வேண்டும் ! சமையலில் இருந்து தப்பித்தால் போதும் என்று தான்
நாடகத்தின் பக்கம் வந்தார் அவர்.

செஸ் மற்றும் மோட்டார் விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருந்த லெட்ஜரை இரண்டாவது விஷயத்தில் ஈடுபடுத்தி பெரிய ஆள் ஆக்கலாம் என்று தந்தை விரும்பினார். விடுங்கள் என்னை என்று பதினாறு வயதில் பள்ளியை விட்டு நீங்கி நண்பனோடு நடிப்புலகில் தனக்கான இடத்தை தேடி சிட்னி நகருக்கு சில சென்ட்களோடு வந்து சேர்ந்தார்.

அங்கே டி.வி.சீரியல்களில் வேடங்கள் கிடைத்தன. "நன்றாக நடிக்கிறாய் நீ!" என்று சொன்னதோடு நில்லாமல் ஹாலிவுட் போய் பார் என்று உடனிருந்தவர்கள் ஊக்கப்படுத்த அமெரிக்காவுக்கு வந்தார். சில படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக கவனம் பெறாமல் போயின. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு முறை பண்ணிய வேடத்தின் சாயலில் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்திருந்தார் லெட்ஜெர்

“10 Things I Hate About You,” படத்தில் ரொமாண்டிக்கான ரோலில் பின்னியிருந்தார் அவர். அதே மாதிரி வேடங்கள் ஒருவருடம் முழுக்க வந்த பொழுது அவற்றை ஏற்க மறுத்தார் அவர். அமெரிக்காவின் விளம்பரப்படுத்தும் யுக்திகள் அவருக்கு கைவரவே இல்லை. வெறும் டாப் ரேமன் நூடுல்ஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றோடு பணமில்லாமல் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படத்துக்காக காத்திருந்தார் அவர். "பணம் உங்களுக்கு முக்கியமில்லையா ?" என்று கேட்கப்பட்ட பொழுது ,"என் ஊரில் இருந்து கிளம்பி வந்த பொழுது என்னிடம் பணம் எதுவும் இல்லை. இப்பொழுதும் பணம் எனக்கு முக்கியமாகப்படவில்லை. !" என்று அழுத்தமாக சொன்னார் அவர்.

தி லைப் ஆப் பை படமெடுத்து ஆங் லீ இரண்டு கௌபாய்களுக்கிடையே ஏற்படும் ஓரினச்சேர்க்கை உறவும் பிரிந்து மீண்டும் அவர்கள் சந்திக்கிற பொழுது உண்டாகும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்ட படத்தில் இவரை ஒரு கௌபாயாக நடிக்க வைத்தார். அந்த ப்ரோக்பாக் மவுண்டென் படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு அந்த சிறுகதையை எழுதியவர் ,"என் கதையை இப்படிக்கூட நடிப்பால் இன்னமும் ஒரு படி மேலே கொண்டு போய் விட முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை !" என்று சிலிர்த்துப்போய் சொன்னார். அந்த படத்துக்கு சிறந்த நடிகருக்கான அகாடமி விருது நூலிழையில் கிடைக்காமல் போனது.

ஓரிரு காதல்கள் உடைந்த பிறகு மிச்செல் உடன் காதல் கைகூடி இருந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அன்பெனும் அற்புதம் லெட்ஜரின் வாழ்க்கையில் வீச ஆரம்பித்தது. "ஆறு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறோம் நாங்கள் !" என்று பேட்டியெல்லாம் கொடுத்தார்கள். திடீரென்று ஒரு நாள் பிரிந்தார்கள். ஹெராயின் பழக்கம் தொற்றிக்கொண்டது.

நோலன் The Dark Knight படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடிக்க இவரை புக் செய்த பொழுது பலர் அதிர்ந்தது உண்மை. "இந்த வேடத்தில் லெட்ஜரை எல்லாம் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. படத்தை கண்டிப்பாக நான் பார்க்கப்போவதில்லை !" என்றொரு விமர்சகர் எழுதினார். நான்கு மாதங்கள் தனியாக ஒரு அறையை அமெரிக்காவில் எடுத்துக்கொண்டு தனிமையில் மூழ்கி,தூக்கம் தொலைத்து,டைரியில் ஜோக்கருக்கு பிடித்த விஷயங்களால் நிரப்பி அவர் தயாராகி இருந்தார்.

படத்தின் கதாப்பாத்திரத்தை இப்படி விவரித்தார் அவர் :"psychopathic, mass-murdering, schizophrenic clown with zero empathy." இரண்டே மணிநேரம் மட்டுமே தூங்கி,தன்னை வருத்திக்கொண்டு ஜோக்கராகவே மாறியிருந்தார் அவர். எப்பொழுதும் செட்டில் ஒவ்வொரு ஷாட்டிலும் தானே முழுமையாக இயக்கம் நோலன் இவரை சில காட்சிகளை இயக்க சொல்கிற அளவுக்கு அசத்திக்கொண்டு இருந்தார் ஹீத் லெட்ஜர். ஜோக்கர் கை தட்டுகிற காட்சி படத்தின் ஷூட்டிங்கின் பொழுது அந்த கணத்தில் இவரே தன்னிச்சையாக செய்தது. அதோடு ஹான்ஸ் ஜிம்மரின் இசை சேர்ந்து என்னவோ செய்தது ரசிகர்களை !

படத்தின் எடிட்டிங் நடந்து கொண்டிருந்த பொழுதே தன்னுடைய அறையில் அதீதமாக தூக்க மருந்தை எடுத்துக்கொண்டதால் உடலில் ஆடையின்றி இறந்து கிடந்தார் லெட்ஜர். படம் வந்த பிறகு அவருக்காகவே பல கோடி பேர் படத்தை பார்த்து கொண்டாடி கண்ணீர் விட்டார்கள். ஆஸ்கர்,கோல்டன் க்ளோப்,பாஃப்டா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை ஜோக்கர் வேடத்துக்காக வென்ற லெட்ஜர் மரணத்துக்கு முந்தைய தினம் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? தன்னுடைய இரண்டு வயது மகளோடு விளையாடிக்கொண்டிருந்தார் !!

vikatan

  • தொடங்கியவர்

12970762_1019213998127294_72185652204908

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின்னின் Steven Finn பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

வி(அ)ஞ்ஞானம்

p241.jpg

`உடம்பு சரியில்லை’ என டாக்டரிடம் போன அர்ச்சகரிடம், `நேரம் சரியில்லை’ என ஹோமம் நடத்த நாள் குறிக்கச் சொன்னார் டாக்டர்.

- பிரகாஷ் ஷர்மா

கிஃப்ட்

p242.jpg

வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் அடகுவைத்துக் கிடைத்த பணத்தை, அட்வான்ஸாகக் கொடுத்து பிளாட் புக் பண்ணியதற்கு, கிஃப்ட்டாக இரண்டு கிராம் கோல்டு காயின் கொடுத்தார்கள்.

 - கே.லக்‌ஷ்மணன்

ஆள் பாதி...

p243.jpg

10 கிலோ கத்திரிக்காயை கோணிப்பையில் கொண்டுவந்த பயணியிடம், ``லக்கேஜ் எடுத்தியா?’’ என எரிந்து விழுந்த கண்டக்டர், 20 கிலோ சூட்கேஸ்காரரிடம் ``சார்... டிக்கெட் ப்ளீஸ்!’’ என்றார்.

- பழனியா பிள்ளை


திருட்டுத்தனம்

p244.jpg

``கிளாஸ் டைம்ல நாலு தடவை வாட்ஸ்அப் பார்த்திருக்கீங்க. நான் உங்க லாஸ்ட் சீன் மெசேஜ் பார்த்தேன்’’ என்ற ஹெட்மாஸ்டரைப் பார்த்து, திருட்டு முழி முழித்தார் ஆறுமுகம் வாத்தியார்.

 - சாய்ராம்

காமராஜர் ஆட்சி

p245.jpg

`` `காமராஜர் ஆட்சி அமைப்போம்’னு நீங்க மேடையில சொன்னது உண்மைனு நம்பி நேர்காணலுக்கு வந்துட்டேன். என்கிட்ட அவ்ளோ பணம் இல்லை. வர்றேன் தலைவரே’’ என்றபடி எழுந்தார் லோகநாதன்.

 -  ச.ஜான் பிரிட்டோ

ஹோம்... வொர்க்!

p246.jpg

ஹோம்வொர்க் செய்யும் மகள் மான்யா, வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் கணவன் பிரகாஷ் இருவருக்கும் டின்னர் தயார்செய்துகொண்டிருந்தாள் ஹோம்மேக்கர் ஹேமா.

 - பர்வீன் யூனுஸ்

டியூட்டி டைம்

p247.jpg

தூங்குவதற்கு முன் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைத்துக்கொண்டிருந்தான், அந்த அப்பார்ட்மென்ட்டில் ‘நைட் டியூட்டி’ பார்க்கும் வாட்ச்மேன் கந்தசாமி.

 - நெய்வேலி தேன்ராஜா

பயம்

p248.jpg

நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டான் திருடன்!

 - பெ.பாண்டியன்

முதல் இடம்!

p249.jpg

டாப் 10–ல் எட்டாவது இடத்தில் இருந்த படம், சேனல் வாங்கிய மறுவாரமே முதல் இடத்தைப் பிடித்தது.

- அஜித்

காணாமல்போன விமானம்!

p2410.jpg

யாரும் இல்லாத இடத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை, தனியாகவும் ரகசியமாகவும் தேடிக்கொண்டிருக்கிறது அதை ஓசி வாங்கி விளையாடிய குழந்தை!

- கி.ரவிக்குமார்

vikatan

  • தொடங்கியவர்

12901115_1019189978129696_72119138885041

தமிழ்த்திரையுலகில் சொக்லட் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் தோல்விகளால் தடுமாறி, "புறம்போக்கு" திரைப்படம் இப்போது புதிய பாதையை காட்ட தலை நிமிர்ந்தவர்.
கன்னியர்களை கவர்ந்திழுக்கும் கட்டுமஸ்த்த கதாநாயன் ஷாமிற்கு இன்று பிறந்த நாள்.

  • தொடங்கியவர்

'கல்யாணம் எப்போ?' என்று கேட்பவர்களுக்கு..

 

  • தொடங்கியவர்
1960 : சே குவேராவின் புகழ்பெற்ற புகைப்படம் பிடிக்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று

ஏப்ரல் - 05

 

699varalru.jpg1496 : இங்­கி­லாந்து மன்னன் 7 ஆம் ஹென்றி, கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத புதிய நிலப்­ப­ரப்­பு­களை கண்­ட­றி­வ­தற்­கான உரி­மையை இத்­தா­லிய கட­லோடி ஜோன் காபோட்­டுக்கும் தனது மகன்­க­ளுக்கும் வழங்­கினார்.

 

1770 : அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் அமெ­ரிக்­கர்­க­ளுக்கும் பிரித்­தா­னியப் படை­யி­ன­ருக்கும் இடையில் கிளம்­பிய கல­வ­ரத்தை அடுத்து ஐந்து அமெ­ரிக்­கர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். 

 

1793 : பிரெஞ்சுப் படைகள் ஆஸ்­தி­ரி­யா­வினால் தோற்­க­டிக்­கப்­பட்­டன. 

 

1824 : பர்­மாவின் மீது பிரித்­தா­னியர் போர் தொடுத்­தனர். 

 

1912 : துருக்­கியின் மீது இத்­தா­லிய படை­யி­னரின்  விமா­னங்கள் பறந்­தன. இரா­ணுவ நட­வ­டிக்­கையில் விமா­னங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும்.

 

1931 : அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கும் உப்பை வறிய மக்கள் சுதந்­தி­ர­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்கும் அனு­ம­தி­ய­ளிக்கும் உடன்­ப­டிக்­கையில் இந்­தி­யா­வுக்­கான பிரித்­தா­னிய ஆளுநர் எட்வர்ட் பிரெட்ரிக் லின்ட்­லேயும் மகாத்மா காந்­தியும் கையெ­ழுத்­திட்­டனர்.

 

1933 : ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அடோல்வ் ஹிட்­லரின் நாஸி கட்சி 43.9 சத­வீத வாக்­குகளைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

 

1940 : சோவியத் உயர்­பீடம் 25,700 போலந்துப் பிர­ஜை­க­ளுக்கு மர­ண­ தண்­டனை விதிக்கும் உத்­த­ரவில்  கையொப்ப­மிட்­டது. 

 

1946 :  பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில் “இரும்புத் திரை” எனும் வார்த்­தையை முதல் தட­வை­யாக பயன்­ப­டுத்­தினார்.

 

1960 : மார்க்­ஸிஷ புரட்­சி­யாளர் சே குவே­ராவின் புகழ்­பெற்ற புகைப்­ப­ட­மொன்றை மரணச் சடங்­கொன்­றின்­போது கியூப புகைப்­ப­டக்­க­லைஞர் அல்பர்;ட்டோ கோர்டா பிடித்தார்.

 

1966 : ஜப்­பானில் இடம்­பெற்ற விமான விபத்தில் 124 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1970 : அணு­வா­யுத பரவல் தடை ஒப்­பந்தம் 43 நாடு­களால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு அமு­லுக்கு வந்­தது.

 

1982 : சோவியத் யூனியனின் வெனேரா 14 விண்­கலம் வெள்ளி கிர­கத்தில் தரை­யி­றங்­கி­யது.

 

2003 : இஸ்ரேலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

 

2010 : அமெரிக்காவின் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சமோசா விற்று, கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் சென்னைக்காரர்!

சமோசா... சக்சஸ்... கோடீஸ்வரர்!

 

15 ஆண்டுகளுக்குமுன்... ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.

“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே உள்ள வித்தியாசமே இங்குதான் தொடங்குகிறது” என்றபடி சென்னை, புதுப்பேட்டையில் சமோசா வியாபாரம் செய்ய தொடங்கியக் கதையைச் சொன்னார் ஹாஜா புன்யாமின். 

 

 

p20a.jpg

     

“இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, தங்கையுடன் பிறந்தேன். பெரிய குடும்பம், வறுமை எங்களைப் பிடித்து ஆட்டியது. மாநகராட்சி பள்ளியில் அரை நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் சமோசாவைத் தூக்கில் எடுத்துக் கொண்டு தெரு தெருவாக வியாபாரம் செய்தேன். பிறகு ஆறாவது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, முழுநேரமாக சமோசா விற்க ஆரம்பித்தேன். பிற்பாடு பல கடைகளில், பல இடங்களிலும் வேலை செய்தேன். 

வாழ்க்கையில் உயர வேண்டும் என்கிற முனைப்பு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. எனவே, நானும் என் நண்பனும் சேர்ந்து சிக்கன் பக்கோடா கடை வைத்தோம். அந்த சமயத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவி ஃபரிஷாவும் சேர்ந்து தனியாக ஒரு சமோசா கடை வைத்தோம். அப்போது மாத சம்பளம் 400 ரூபாய்க்கு ஒரு பையனை வேலைக்கு வைக்க நிறைய யோசித்தேன். காரணம்,  மாதம் 400 ரூபாய் சம்பளம் தர முடியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. 

அப்போது எனக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து மாதத்துக்கு ஒரு லட்சம் சமோசா பீஸ் ஆர்டர் கிடைத்தது. நான் செய்வதை எப்போதும் தரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் ரோட்டு கடையாக இருந்தாலும் நல்ல வியாபாரம் நடக்கவும், இப்போது எக்ஸ்போர்ட் ஆர்டர் வந்ததுக்கும் காரணம்.

ஆனால், அந்த ஆர்டரை எடுத்துச் செய்கிற அளவுக்கு என்னிடம் போதுமான இடமும் இல்லை. ஃப்ரீசரும், ஃபுல் ஏர் கண்டிஷனும் தேவைப்பட்டது. அந்த வசதிகளுடன் கிடைத்த இடத்துக்கு 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தர வேண்டியிருந்தது. அதை ஒரு லட்சமாகக் கேட்டு குறைத்தேன். ஆனாலும் அந்த ஒரு லட்சமும் கையில் இல்லை. எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை. எந்த வங்கியிலும் கடன் கிடைக்கவில்லை.

p22a.jpg

அந்த சமயத்தில்தான் பாரதிய யுவ சக்தி ட்ரஸ்ட் மூலமாக உதவி கிடைத்தது. ஆதித்தனார் சாலை இந்தியன் வங்கியில் ஜாமீனில் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். யாரும் எனக்கு செய்யாத உதவியை பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை எனக்கு செய்தது. அந்த உதவிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அந்த டிரஸ்ட் கடன் தந்ததோடு, ஒரு மென்டாரையும் (வழிகாட்டும் ஆலோசகர்) கொடுத்தார்கள். ஏனெனில் நம் அணுகுமுறையின்படி, நாம் செய்வதெல்லாமே நமக்கு  சரியாகத்தான் படும். அந்தத் துறையைப் பற்றி தெரிந்த ஒருவர் வெளியிருந்து பார்த்து சொல்லும் போதுதான் நம் தவறுகள் தெரியும். அதைப் பார்த்து, ‘இது தப்பு, இப்படி பண்ணாதீங்க, இத அப்படி மாத்தி பண்ணிங்கன்னா கண்டிப்பா ரிசல்ட் இருக்கும்’ என்பது போன்ற அறிவுரைகளை  உத்தரவாக இல்லாமல், ஆலோசனையாகச் சொல்வார்.

உதாரணமாக, மைதாவை சில்லரையாக  வாங்குவதற்கும், மொத்தமாக மில்லில் இருந்து வாங்குவதற்கும் இடையே உள்ள காஸ்டிங் வித்தியாசத்தை அவர் சொல்வார். அதன் மூலமே நான் மாதம் ரூ.6000 வரை சேமிக்கிறேன். என்னதான் நமக்கு லட்சியங்கள், கனவுகள் இருந்தாலும், நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல  யாராவது ஒருவர் வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு சமோசா ஆர்டர் தந்த அந்த எக்ஸ்போர்ட்  கம்பெனியே  எனக்கும் என் மனைவிக்கும் ஃபுட் ஃபுரோசன் பிராசஸிங் (Frozen processing) பற்றி பயிற்சி தந்தது. 

கடனாக வாங்கிய அந்த ஒரு லட்சத்தை வைத்து அந்த எக்ஸ்போர்ட் ஆர்டரை இரண்டு வருடம் நன்றாக செய்தேன். தீடீரென்று  2007-ல் அந்த எக்ஸ்போர்ட் ஆர்டர் அக்ரிமென்ட் முடிந்துவிட்ட தாகச் சொல்லிவிட்டார்கள். இந்த ஆர்டரை நம்பி ஏழு, எட்டு பேரை சம்பளத்துக்கு வேலைக்கு வைத்து, இடத்தை வாங்கி, அதற்காகவே எல்லாம் தயார் செய்து தொழிலைச் செய்து வந்்தேன். ஆர்டர் கேன்சல் ஆனதால், நான் திக்குமுக்காடிப் போனேன். ஆனாலும் விடாமல் முயற்சி செய்தேன்.

நான் கற்றுக்கொண்ட ஃபுட் பிராசஸிங் ட்ரெய்னிங், என் அன்றைய நிலைமை, வளர வேண்டும் என்கிற வேகம் எல்லாம் சேர்ந்துதான் என்னை துவண்டுபோகாமல் பார்த்துக் கொண்டது. எல்லோரையும் மாதிரி சமோசாவை சுட்டு விற்காமல், அந்த எக்ஸ்போர்ட் கம்பெனி தொடங்கி வைத்த, பதப்படுத்தி விற்பனை செய்கிற தொழிலையே பெரிய அளவில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். என்னிடம் வேலைக்கு இருந்த ஐந்து பேருடன், மீண்டும் தொழிலை ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ஹாஃபா ஃபுட்ஸ் அண்ட் ஃபுரோசன் புட்ஸ்.

ஆனால், எனக்கு என்ன பண்ணனும், எப்படி மார்க்கெட் பண்றது, யாரு இதை வாங்குவார்கள் என  எதுவுமே தெரியாது. ஏதோ ஒரு ஆர்வத்துல தொடங்கிவிட்டேன். ஆட்களை வேலைக்கும் வைத்துவிட்டேன், பொருளையும் செய்துவிட்டேன்.  ஆனா, யார்கிட்ட விக்கிறதுன்னு தெரியாம முழித்தேன். 

அந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு போன் வந்தது. அந்த ஒரு போன்கால் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. முன்பு எனக்கு ஆர்டர் கொடுத்த எக்ஸ்போர்ட் கம்பெனியிடம் இருந்து சமோசா வாங்கிய ஒருத்தர், ‘ஏன் சமோசா சப்ளை பண்ணலைன்னு’ தொந்தரவு செய்ய, அவருக்கு என் போன் நம்பரைத் தந்்திருக்கிறார்கள். அவர் எனக்கு போன் செய்தார். அவர் சமோசா கடை வைத்து நடத்துபவர். அவரை நேரில் போய் பார்த்தபோதுதான் என் கஸ்டமர் யார் என்று எனக்கு தெரிந்தது. அவர் கடை மாதிரியே சில கடைகளைப் புடிச்சேன். அப்பறம் காலேஜ் கேன்டீன்களில் பேசி ஆர்டர் பிடித்தேன். 

புதுப்புது ரெசிப்பிகளைச் செய்ய தொடங்கினேன். சமோசா மட்டுமே போட்ட நான், இப்போது கட்லட், பர்கர் பேட்டி, ஸ்பிரிங் ரோல், சீஸ் பால் என்று பல புராடக்ட்களைச் செய்தேன். எல்லாவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

என்னுடைய பொருளின் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்குரிய டெம்பரேச்சரில் வைத்திருந்தால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். எந்த கெமிக்கலையும், பிரிசர் வேட்டிவ் -யும் நான் பயன்படுத்துவதில்லை.

p23a.jpg

அதே மாதிரி, ஒவ்வொரு புது புராடக்ட்டை செய்யும்போதும், அது சரியாக வரும் வரை முயற்சி செய்துகொண்டே இருப்பேன். என் பொருள் எந்த வகையிலும் வீணாகக் கூடாது என்று நினைப்பேன்.  அதனால்தான் என் தயாரிப்புகள் மக்கள் விரும்பக்கூடிய வகையில் இருக்கிறது.

மார்க்கெட்டிங்கை பொறுத்த வரை, ஆரம்பத்தில் இருந்தே தனி ஆளாக மார்க்கெட்டிங் செய்தேன். நான் ஒரு சாலையில் பயணித்தால், என் பொருட்களை வாங்கக்கூடிய பத்து கடைகளை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்களிடம் பேசி என் பொருட்களுக்கான ஆர்டரை எடுக்கிறேன். மேலும், பல பேர் இந்த மாதிரி கடைகளில் சாப்பிட்டு, அதனுடைய தரமும் டேஸ்ட்டையும் பார்த்து என்னிடம் வருகிறார்கள். என்  வெப்சைட்டைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் எவ்வளவோ பேர். எந்தவொரு போன் காலையும் விடாமல் எடுத்து பொறுமையாக பதில் சொல்வதன் மூலமும் ஆர்டர்கள் அதிகரிக்கிறது.

அதே போல், கணக்குவழக்கு களில்  கச்சிதமாக இருப்பது அவசியம். என் மனைவியின் உதவியோடு அனைத்தையும் சரியாகச் செய்கிறேன். பத்து ரூபாயாக இருந்தாலும், என் கவனத்தை மீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.  

உணவுத் தொழிலில் நிலைத்து நிற்பது என்பது  கடினம். நான் என்னுடைய பிராண்ட் பிரபலமாக வேண்டும் என்று நினைக்காமல், என் பொருள் எல்லா இடத்தையும், மக்களையும் போய் சேர்ந்தாலே போதும் என்று நினைத்ததால்தான் வளர முடிந்தது. இன்று ‘சாட் அயிட்டம்ஸ்’ கடைகளில் இருந்து, மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் விமானங்கள் வரை எனது பொருள் சேர்ந்திருக் கிறது. இன்று மாதத்துக்கு ஐந்து லட்சம் பீஸ்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். இரண்டு பேரோடு தொடங்கிய இந்தத் தொழிலில் இப்போது 45-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர். வருடத்துக்கு ரூ.1.5 கோடி டேர்ன் ஓவர் கிடைக்கிறது. 

இப்போது இருக்கும் சிறிய உற்பத்தி இடத்தை வைத்து இந்த வருமானத்தை ஈட்டி வருகிறேன். மேலும் மேலும் ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த ஆர்டர்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமெனில், இந்த இடம் போதாது. அதனால் பெரிய இடம் ஒன்றுக்கு என்னுடைய பேக்டரியை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான நிதி கிடைக்கும்பட்சத்தில், என்னால் மேலும் இதனை விரிவுபடுத்தி வருடத்துக்கு ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் தொழிலாக என்னால் வளர்க்க முடியும்.

எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து நமக்கான வழியைத் தேடிக்கொண்டே இருந்ததால், நமக்கு சாதகமான சூழல் உருவாகும். நான் அந்த சாதகமான சூழலுக்கு நம்பிக்கை குறையாமல் தொடர்ந்து காத்திருந்ததால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்’’ என்று உற்சாகத்துடன் முடித்தார்.

சமோசாதானே என்று தன் தொழிலைக் குறைவாக நினைத்திருந்தால், அவரால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. எல்லா தொழிலிலும் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடித்தால் நிச்சயம் வளர்ச்சிதான்! 

vikatan

  • தொடங்கியவர்

12961413_1019537694761591_61503288216491

அழகு நடிகை பூனம் பஜ்வாவின் பிறந்தநாள்.
Happy Birthday Poonam Bajwa

  • தொடங்கியவர்

பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்: மொபைல் சேஃப்டி டிப்ஸ்

 

மொபைல்…இன்றைய தேதியில் எல்லோரோடும் இணைந்த உள்ளங்கை குழந்தை. மொபைல் வாங்குவதோடு மட்டும் நம் செலவு முடிந்து விடுவதில்லை. அதற்கான உபரி செலவுகளும், அதன் பராமரிப்பும் மொபைல் உள்ள காலம் வரை நம்மை துரத்தும். மொபைல் மற்றும் பேட்டரி சீக்கிரம் சேதமடையாமல் செலவுகளை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம்?

பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்:

மொபைலை பின் பாக்கெட்டில் வைப்பது நிறைய பேருக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் மொபைலுக்கு என்ன பிரச்னை என்கிறீர்களா? நீங்கள் மொபைலை பின் பாக்கெட்டில் வைத்து விட்டு மறந்து போய் எங்கேயாவது அமர்ந்தீர்கள் என்றால் மொபைல் வளையலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்னை வரலாம்.  இவ்வாறு வளைவதால் உங்கள் மொபைல் மற்றும் பேட்டரி சீக்கிரம் பாதிப்படையக் கூடும்.

mobilevc1.jpg

அதே போன்று எடை அதிகமுள்ள பொருட்களுக்கு கீழே, மொபைல் வைப்பதை தவிருங்கள். ஏனெனில், அதிக எடை உள்ள பொருட்கள் தரும் அழுத்தத்தால் பேட்டரி விரிவடைந்து, வெடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

அதிக வெப்பம் உள்ள இடங்களை தவிருங்கள்:

அதிகம் வெப்பமுள்ள இடங்களில் மொபைலை வைப்பதால்,  பேட்டரி அதிவிரைவில் சூடாகி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக வெப்பமுள்ள இடங்களைப் போலவே அதிகம் குளிரான அதாவது ஜீரோ டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவான வெப்பநிலை உள்ள  இடங்களும் கூட மொபைலின் பேட்டரியை பாதித்து, செல்போனுக்கும் பாதிப்பாக்கும் என்பதை மறக்காதீர்கள்.

மொபைலை எப்போதுமே வைத்திருக்கிறேன் பேர்வழி என எங்கேயும் எடுத்து செல்லாதீர்கள். குறிப்பாக சமையலைறைக்கு. கவனக்குறைவாக நீங்கள் அடுப்பருகிலேயோ அல்லது ஃப்ரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றின் அருகிலோ வைத்து விட்டு சென்றால் ஆபத்து உங்கள் ஃபோனுக்குதான். அதிகம் காற்றோட்டமில்லாத இடங்களிலும், உதாரணத்திற்கு தலையணைக்கு அடியில் போன்ற இடங்களில் வைக்காதீர்கள்.
 
பேட்டரியை பாதுகாக்க சில வழிகள்:

மொபைலில் மெமரி தான் இருக்கிறதே என்று தேவையில்லாத ஆப்ஸ்களை வைத்திருக்காதீர்கள். அது உங்கள் மொபைல் பேட்டரியை சூடாக்குவதுடன் சார்ஜையும் குறைக்கும். அதனால் தேவையான ஆப்ஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு தேவையில்லாததை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

மொபைல் சூடேறுவது தெரிந்தால் அதை உடனே சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.

உங்கள் மொபைலுக்கு என்று உள்ள சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். அதுவே பேட்டரியின் வாழ்வை நீட்டிக்க சிறந்த வழி. இன்னொரு முக்கியமான ஒன்று, மொபைல் சார்ஜ் ஏற்றும் போது அதில் பேசுவது, மெசேஜ் செய்வது போன்ற காரியங்களை தவிருங்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.
 
அதே போன்று பேட்டரி மாற்ற வேண்டிய அவசியம் வரும் பொழுது, ஒரிஜனலயே தேர்ந்தெடுங்கள். சீப்பான விலைக்கு கிடைக்கிறது என்று லைஃப் இல்லாத பேட்டரியை தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் ஒரிஜினல் பேட்டரி பல விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உத்திரவாதத்துடன் நம் கைக்கு கிடைக்கும். ஆனால் விலை மலிவான பேட்டரியில் அதை எதிர்பார்க்க முடியாது.

உங்கள் மொபைல் நீரில் விழுந்துவிட்டால் உடனே சர்வீஸ் சென்டரில் கொடுத்து செக் செய்யுங்கள். பொதுவாகவே நீரானது எலக்ட்ரானிக் ஐட்டங்களை சேதப்படுத்தக் கூடியது. எனவே கவனமாக இருங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

அஸ்வின் ட்வீட்டரிலும் கெத்துதான்!

 

விச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். களத்தில் பந்துவீசி எதிரணியினரைத் திணறவைப்பது போல, ட்விட்டரிலும் தம்மைக் கலாய்ப்பவர்களைத் திருப்பிக் கலாய்த்துத் திணறடிப்பார். சாம்பிளுக்கு..

p36a.jpg


red-dot6.jpg அத்னன் குர்ஷித் என்ற ட்வீட்டர், ‘அஸ்வின் பெளலிங் போடும் ஸ்டைல் சட்டவிரோதமானது. பி.சி.சி.ஐ எங்கேடா?’ எனக் கொந்தளிக்க, அஸ்வினோ கூலாக ‘துபாய்ல’ என ஒரே வார்த்தையில் க்ளீன் போல்டு ஆக்கினார்.

red-dot6.jpg இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியின் ரவுண்டு ஒன்றில் பங்களாதேஷ் அணியும் ஓமன் அணியும் மோத நேர்ந்தது. அப்போது அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘பங்களாதேஷ், ஓமன் மோதும் போட்டியைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். இந்தப் போட்டியில் வங்காளதேசம் வென்றால் அந்த நாடு மகிழ்ச்சியில் திளைக்கும். ஒருவேளை ஓமன் ஜெயித்தால் கிரிக்கெட்டே மகிழ்ச்சியில் திளைக்கும்’ எனத் தெறியாய் ட்வீட்டில் திரி கொளுத்திப் போட, பங்களாதேஷ் ரசிகர்கள் அஸ்வின் மீது கொலைவெறியில் திரிந்தனர்.

red-dot6.jpg இது சமீபத்தில் நடந்த சம்பவம். அனாஸ் ஷேக் எனும் பங்களாதேஷ் ரசிகர் ‘அஸ்வினே, டஸ்கின் அகமது அழகான பெளலிங் ஆக்‌ஷன் கொண்டவர். ஆனால், அவருக்கு ஐசிசி பந்துவீசத் தடை விதித்திருக்கிறது. ஆனால், உங்கள் பெளலிங் ஆக்‌ஷனோ கேவலமாக இருக்கிறது. ஆனாலும், இன்னும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ஏதோ சமாச்சாரம் இருக்கு...’ என ட்வீட்டினார். இதற்கு அஸ்வின் அளித்த பதிலுரை ‘ஆக்‌ஷன் கேவலமாக இருக்கிறதை முயற்சி செய்தும் என்னால் மாற்ற முடியலை. ஆக்‌ஷன் விதிமுறைக்குட்பட்டு இருக்காங்கிறதுதான் முக்கியம். அழகா இருக்கிறது முக்கியமில்லை’.

red-dot6.jpg நடந்து முடிந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து மேட்சை முடித்தார். அதைப் பார்த்த அஸ்வின் ‘நாம எல்லோரும் பஸ்ல போறதுக்குப் பதிலா, தோனி அடிச்ச பந்தில் உட்கார்ந்து போனால், ட்ராஃபிக் இல்லாமல் வீடு போய் சேர்ந்துடலாம்’ எனக் கூறியிருக்கிறார். இதைப் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது பேஜில் ட்வீட்டியிருந்தார்.

p36b.jpg

red-dot6.jpg ஆஸ்திரேலியர்கள் அவர்கள் நாட்டு மைதானத்தை அவர்களுக்கு அதாவது வேகப்பந்துக்கு சாதகமாகத் தயார்படுத்தி வைத்துக்கொண்டு, எதிரணியினரை வறுத்தெடுப்பார்கள். இதே வழியைப் பின்பற்றி, சென்ற ஆண்டு இறுதியில் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிகளில் மைதானங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அதாவது சுழல்பந்துக்கு சாதகமாகத் தயார்படுத்தப்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்க வீரர்கள் அஸ்வின், ஜடேஜா மற்றும் மிஸ்ரா சுழலில் சிக்கி சின்னாபின்னமானார்கள். இதைப்பார்த்து கடுப்பான ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராட்னி ஹாக், ‘அஸ்வின் கண்ணாடியில் உன்னைப்பார்த்து நீயே சொல்லிக்கொள். நீ எடுத்த விக்கெட்டுகள் உனக்கு சாதகமாகத் தயார் செய்யபட்ட மைதானத்தில் எடுத்தவையே’ என ட்வீட்டியிருந்தார்.

அதற்கு அஸ்வின், ‘கண்டிப்பா, ஆனால், நாம் இரண்டு பேரும் ஒரே கண்ணாடியைப் பகிர்ந்துக்கலாமா? இல்லை இரண்டு கண்ணாடிகள் வாங்கவா?’ என கிண்டலடிக்க, ராட்னி வாயடைத்துப் போனார்.

red-dot6.jpg இதேபோல் சாம் ரிச்சர்டு என்பவர் ‘அஸ்வின் உள்நாட்டில் நன்றாகப் பந்து வீசுகிறார். வெளிநாடுகளில் அவர் வேஸ்ட்’ என ட்வீட்ட, கடுப்பான அஸ்வின் ‘டேய், போய் புள்ளகுட்டியைப் படிக்க வையிடா... உன்னைக் கேட்டுதான் விளையாட வந்தேனா?’ என தமிங்கிலீஷில் ட்வீட்டி தெறிக்கவிட்டிருக்கிறார். ஆமாம் மக்களே, அஸ்வின் தமிழனேதான்...

vikatan

  • தொடங்கியவர்

பார்சிலோனாவைச் சேர்ந்த காகித கலைஞர் Raya Sader Bujana, ஒலிம்பிக் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர். ஒலிம்பிக் விளையாட்டுகலை நினைவுப்படுத்தும் விதமாக, இவர் பேப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்கள் இவை.

12932731_702886869813858_786863739716271

12495049_702886863147192_903851467770517

12963896_702886866480525_198920636369189

12938194_702886903147188_300072818535273

12928151_702886919813853_471417566203425

12963637_702886909813854_658124047987618

vikatan

  • தொடங்கியவர்

நான்கு கால் வீரருக்கு பரிசு
==========================
12 வயதான இந்த லூக்கா என்ற நாயார், அமெரிக்க இராணுவத்துடன் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளார்.

ஒரு குண்டு வெடிப்பில் லூக்கா தனது முன்னங்காலை இழந்துள்ளார்.

அவரது உழைப்பை பாராட்டி அவருக்கு லண்டனில் ஒரு பதக்கம் வழங்கப்படுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு என்ன ஹர்த்தாலா? திரி வெறிச்சோடிப் போய் இருக்குது. ஆளைக் காணோம்?

  • தொடங்கியவர்
1979 : உகண்டாவில் இடி அமீனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று....

ஏப்ரல் - 11

 

703varalaru.jpg1831 : உரு­கு­வேயின் சல்­சி­புதிஸ் என்ற இடத்தில் நூற்­றுக்­க­ணக்­கான “சருவா” இனத்­தவர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

1865 : ஆபி­ரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்­தினார்.

 

1899 : புவேர்ட்டோ ரிக்­கோவை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு  ஸ்பெயின் அளித்­தது.

 

1905 : பௌதீக விஞ்­ஞானி ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்­பாட்டை வெளி­யிட்டார்.

 

1921 : விளை­யாட்டு வர்­ணனை முதன் முறை­யாக வானொ­லியில் ஒலி­ப­ரப்­பா­னது.

 

1955 : ஹொங்­காங்கில் இருந்து புறப்­பட்ட எயார் இந்­தி­யாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்­டு­வெ­டிப்பின் கார­ண­மாக இந்­தோ­னே­ஷி­யாவில் கடலில் வீழ்ந்து மூழ்­கி­யது. பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் உட்­பட 16 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1957 : சிங்­கப்­பூரின் சுயாட்­சிக்கு பிரித்­தா­னியா சம்­ம­தித்­தது.

 

1965 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் ஆறு  மாநி­லங்­களில் ஏற்­பட்ட சூறா­வளி கார­ண­மாக 256 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1970 : சந்­தி­ரனில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக அப்­போலோ 13 விண்­கலம் ஏவப்­பட்­டது. (இவ்­விண்­கலம் சந்­தி­ரனில் தரை­யி­றங்க முடி­யாமல் 6 நாட்­களில் பூமிக்குத் திரும்­பி­யது)

 

1979 : தான்­சா­னியப் படைகள் உகண்­டாவின் தலை­ந­க­ரான கம்­பா­லாவை கைப்­பற்­றின. உகண்டா சர்­வா­தி­காரி இடி அமீன் தப்­பி­யோ­டினார்.

 

1981 : தெற்கு லண்­டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்­பெற்ற பெரும் கல­வ­ரத்தில் 300 காவல்து­றை­யி­னரும் 65 பொது­மக்­களும் காய­முற்­றனர்.

 

1987 : இஸ்­ரே­லுக்கும் ஜோர்­தா­னுக்கும் இடையே இர­க­சிய ஒப்­பந்தம் லண்­டனில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

2002 : வெனி­சூ­லாவில் ஜனா­தி­பதி ஹியூகோ சாவெ­ஸுக்கு எதி­ராக இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது.

 

2006 : ஈரான் வெற்­றி­க­ர­மாக யுரே­னி­யதை செறி­வாக்­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி மொஹம்மத் அஹ­ம­தி­நஜாட் அறி­வித்தார்.

 

2007 : அல்­ஜீ­ரி­யாவின் தலை­நகர் அல்­ஜியேர்ஸ் நகரில் இடம்­பெற்ற இரு குண்­டு ­வெ­டிப்­பு­களில் 33 பேர் கொல்­லப்­பட்டு 222 பேர் காய­முற்­றனர்.

 

2011 : பெலா­ரஸில் ரயில் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பினால் 15 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் 204 பேர் காயமடைந்தனர்.

 

2012 : இந்தோனேஷியாவில் சுமத்ரா கடற்பகுதியில் 8.7 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் இந்நிலநடுக்கம் ஓரளவு உணரப்பட்டது.

 
.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12977278_1023176777731016_62023714221790

கிரிக்கெட் ரசிகர்களின் ,மனங்கவர்ந்த நியூ சீலாந்தைச் சேர்ந்த நடுவர் பில்லி பவுடனின் பிறந்தநாள்
Happy Birthday Billy Bowden

  • தொடங்கியவர்
மும்பையில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம் - இளவரசி கேட்
 

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர்  வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.  

 

160491.jpg

 

இந்தியா மற்றும் பூட்டானுக்கான 8 நாள் சுற்றுலாவை ஆரம்பித்துள்ள இத் தம்பதியினர் மும்பை நகரை நேற்று சென்றடைந்தனர். 

 

இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், திலீப் வெங்சார்கர் ஆகியோர் சகிதம் இணைந்து மும்பை ஓவல் மெய்டன் மைதானத்தில் இவர்கள் கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டனர். 

 

1604938.jpg

 

2008 ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்களையும் இளவரசர் தம்பதியினர் சந்தித்தனர்.

 

இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோவிலில் இடம்பெற்ற விபத்தில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தமை குறித்து இத் தம்பதியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

 

1604936.jpg

 

இவ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோர் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர். 

 

ஆக்ரா நகரிலுள்ள தாஜ் மஹாலுக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர். 1992 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட, இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா தாஜ்மஹாலுக்கு முன்னால் அமர்ந்திருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்ற புகைப்படங்களில் ஒன்றாகியமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk/

12963610_1164783060209191_32861136387608

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

 டேவிட் பெக்காம், தன் குழந்தையின் பொம்மைக்கு துணி தைக்கும் போட்டோதான் கடந்த வார உலக வைரல். 20 ஆண்டுகள் கால்பந்து உலகைக் கலக்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். ‘கால்பந்து விளையாட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றுவிட்ட டேவிட், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்; பாசக்கார அப்பாவாக இருக்கிறார். நீங்களே பாருங்கள் 5 வயது மகள் ஹார்ப்பரின் பொம்மைகளுக்கு உடை தைத்துக்கொண்டிருக்கிறார்’ என மனைவியும் ஃபேஷன் டிசைனருமான விக்டோரியா, பெக்காமின் தையல் போட்டோவைப் போட, லைக்ஸ் பல மில்லியன்களைத் தாண்டுகிறது!

p20a.jpg

போலி வெடிகுண்டு பெல்ட்டை அணிந்துகொண்டு விமானத்துக்குள் ஏறி, உலகையே அலறவைத்த சைஃப் அதின் முஸ்தஃபா, கடந்த வாரத்தின் கெக்கேபிக்கே காமெடி. 80 பயணிகளுடன் கெய்ரோவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தை சைப்ரஸுக்கு திசைதிருப்பிய முஸ்தஃபா, விமானத்தைக் கடத்திய பிறகு என்ன கோரிக்கை வைப்பது என்றே தெரியாமல் முழிக்க, கிடைத்த கேப்பில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். `சண்டைபோட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியைக் காணவே விமானத்தைக் கடத்தினேன்’ என இறுதியில் சிரிப்பு வெடி வீசினார் சைஃப். இதற்கிடையே வெடிகுண்டு பெல்ட் என சைஃப் பயமுறுத்திக்கொண்டிருந்தபோது அவருடன் போட்டோ எடுத்துக்கொண்ட பிரிட்டிஷ் பயணி இன்னஸும் உலகப் பிரபலம் ஆகியிருக்கிறார். ‘இன்னும் சில விநாடிகளில் சாகப்போகிறோம். அதற்கு முன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமே என ஜாலியாக எடுத்தேன்’ எனச் சிரிக்கிறார் இன்னஸ்!

p20b.jpg

50 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவத்துக்கு சம்பந்தமே இல்லாத சாதாரண குடிமகன் மியான்மர் நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிபெற்றது. ஆனால், கணவரின் வெளிநாட்டுக் குடியுரிமையைக் காரணம் காட்டி சூகிக்கு அதிபர் பதவி கிடையாது எனச் சொல்லப்பட, தனது நீண்டநாள் விசுவாசி ஹிடின் கியாவை அதிபராக்கியிருக்கிறார் சூகி. அதிபராகத்தான் கூடாது, மந்திரியாகத் தடை இல்லை என்பதால், முக்கியத் துறைகள் அனைத்துக்கும் அமைச்சராகப் பதவியேற்க இருக்கிறார் சூகி!

p20c.jpg

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீனின் பயோபிக்கான `அஸார்' மே-13 ரிலீஸ். இம்ரான் ஹஷ்மி, அஸாராக நடித்திருக்கிறார். சங்கீதா பிஜ்லானியாக நர்கீஸ் ஃபக்ரி. அஸாருதீனுடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்ட பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவாக ஹூமா குரேஷி. அஸார் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை நிரூபிக்கப் போராடும் வக்கீலாக லாரா தத்தா. அஸாருதீனை எதிர்த்து ஆடிய ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சிங் சித்து கேரக்டர்கள்தான் படத்தில் வில்லன்களாம்!

p20d.jpg

p20e.jpg

சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என இரண்டு விருதுகள் வென்றிருக்கும் மெகா ஹிட் `பாகுபலி'க்கு இடையே சிறந்த தெலுங்கு மொழித் திரைப்படத்துக்கான விருது வென்றிருக்கிறது ‘கான்சே’. தெலுங்கில் `வேதம்', அதன் தமிழ் ரீமேக்கான `வானம்' படத்தை இயக்கிய க்ரிஷ்தான் இந்தப் படத்தின் இயக்குநர். `இரண்டாவது உலகப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு என்ன ஆனது என்பது, 70 சதவிகித ஆந்திர மக்களுக்குத் தெரியாது. அதை வெளிக்கொண்டுவந்தது எனக்குப் பெருமை. அதற்கு விருதும் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி’ என்று நெகிழ்கிறார் க்ரிஷ்!

vikatan

  • தொடங்கியவர்

12977068_1023177374397623_43865639536939

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் இயன் பெல்லின் பிறந்தநாள்
Happy Birthday Ian Bell

  • தொடங்கியவர்

அம்பானி பையன் 108 கிலோ எடையை குறைத்தது இப்படி தான்! டாப் 5 ஃபிட்னெஸ் ரகசியங்கள்!

'எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்' - விவேக்கோட தெறி டயலாக் எல்லாருக்குமே ஞாபகம்  இருக்கும். அவர் சொன்னத ஒருத்தர் செஞ்சே காட்டி இருக்காரு. ஆமாம்,  அம்பானி பையன் ஆனந்த் அம்பானி,  108 கிலோவிலிருந்து 60 கிலோவிற்கு 18 மாதங்களில் வந்திருக்கிறார். தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இதை சாதித்திருக்கிறார் இந்த மில்லியன் டாலர் பேபி!

எப்படி சாத்தியமானது இந்த எடைகுறைப்பு என்பதை சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இதோ...

Anant-Ambani1.jpg
 

1 - லோ கார்ப் டயட்!

ஆனந்த் பின்பற்றியது ''குறைவான கார்போஹைட்ரேட் உணவுகள், ஜீரோ சர்க்கரை, கெமிக்கல்கள் கலக்கப்பட்ட ப்ராசஸ்ட் உணவுகளை தவிர்ப்பது'' என ஒரு லோகார்ப் டயட். ரொட்டி, அரிசி உணவுகள், இனிப்புகள், கார்பனேடட் குளிர்பானங்கள் என எதையும் நினைப்பதற்கு கூட தடைதான். முழுக்க முழுக்க புரதச்சத்து மிகுந்த உணவுகளும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட பொருட்களும்தான் உண்ண வேண்டும்.

2 - 21 கிமீ நடைப்பயிற்சி!

ஒவ்வொரு நாளும் 21 கி.மீ வரைக்கும் நடையாய் நடந்துதான் அம்பானி பையன் தன்னுடைய எடையை முழுமையாக குறைத்திருக்கிறார். இது அத்தனை எளிதல்ல. 21 கி.மீ என்பது அரை மாரத்தான் நீளம். ஆமை வேகத்தில் நடந்தால் கூட மூன்றரை மணி நேரமாகும். ஒவ்வொருநாளும் இதை செய்வதற்கு,  உறுதியான உடலை விட செய்யமுடியும் என்கிற நம்பிக்கைதான் ரொம்பவே அவசியம். அது ஆனந்திடம் இருந்திருக்கிறது.

3 - யோகா!

எந்த ஒரு செயலையும் மிகச்சரியாக செய்ய உங்கள் மூச்சு ரொம்பவே முக்கியம். அதை மிகச்சரியாக பயன்படுத்த யோகா ஒரு நல்ல கருவி. கூடவே யோகா செய்யும்போது,  உடல் எடை குறைவதால் உண்டாகும் உடல் மற்றும் மன மாற்றங்களை சீராக்கி தேவையில்லாத பின்விளைவுகள் உண்டாவதை குறைக்கும். கூடவே எடை குறைப்புக்கான அடுத்தடுத்த விஷயங்களை செய்வதற்கான உத்வேகத்தையும் அது கொடுக்கும்.

 


ஆனந்தை வாழ்த்திய தோனி!

CfqxjweVIAAUATg.jpg

 

Wish u a very happy birthday Anant.u gave the best gift to urself by losing over 100kg.discipline and determination



4 - எடைப்பயிற்சி!

வெறும் நடையும் யோகாவும் மட்டுமே உடல் எடையை குறைத்துவிடாது. ஜிம்களில் இந்த வெயிட் ட்ரெயினிங்தான் இப்போது ட்ரெண்ட். இது உங்களுடைய தசைகளை வலுவாக்கும். கூடவே கொழுப்பை வேகமாக கரைக்கவும் உதவும்.
 
5 - ஃபங்கஷனல் ட்ரெயினிங்!

உங்களுடைய ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தி செய்யக்கூடிய தொடர்ச்சியான எளிய உடல்பயிற்சிகள். உதாரணத்திற்கு உட்கார்ந்து எழுந்திருக்கிற ஸ்குவாட் வகைகள், முன்னோக்கி நகர்ந்து அமரும் லஞ்சுகள், ஸ்டெரச்சிங் பயிற்சிகள் என பலதும் இதில் உண்டு. இதை முறையான பயிற்சியாளர் மூலம் கற்றுக்கொண்டு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தி மேக்முர்ரே (Cathy McMurray’) என்பவர் மரத் துண்டுகளில் வரைந்த ஓவியங்கள்!

12718192_704550562980822_797088921802531

12928121_704550566314155_298000469335331

12993579_704550572980821_682831272440810

12936617_704550602980818_600185611980207

12987064_704550616314150_361074483974350

12961710_704550622980816_931992426681975

vikatan

  • தொடங்கியவர்

12932641_1916724578553943_27843527904151

உங்க ஜீன்ஸ்ல இதை நோட் பண்ணிருக்கீங்களா?


உங்கள் ஜீன்ஸ் பேன்ட்டில் பாக்கெட்டுக்கு மேல் இன்னொரு சின்ன பாக்கெட் இருக்குமே. அது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? 1800களில் கவ்பாய்கள் தங்கள் பாக்கெட் வாட்ச்சை உடையில் மறைத்து வைக்க முடியாமல் தடுமாறினார்கள். இதை பார்த்த லெவிஸ் நிறுவனம் பிரத்யேகமாக ஒரு பாக்கெட்டை வடிவமைத்தது.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.