Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
1995 : அமெரிக்காவின் ஒக்லஹோமா நகர குண்டுவெடிப்பில் 168 பேர் பலி!
 

வரலாற்றில் இன்று....

ஏப்ரல் - 19

 

706Oklahoma_City_Bombing---varalaru.jpg1770 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிழக்குக் கரை­யோ­ரத்தை பிரித்­தா­னிய கடற்­படை மாலுமி ஜேம்ஸ் குக் முதன்­மு­தலில் கண்­ட­றிந்தார். 

 

1775 : பிரிட்­ட­னுக்கு எதி­ரான அமெ­ரிக்கப் புரட்சிப் போர் ஆரம்­பித்­தது.

 

1982 : அமெ­ரிக்­காவை ஒரு சுதந்­திர நாடாக நெதர்­லாந்து குடி­ய­ரசு அங்­கீ­க­ரித்­தது. அமெ­ரிக்­காவின் முத­லா­வது தூத­ரகம் ஹேக் நகரில் திறக்­கப்­பட்­டது.

 

1810 : வெனி­சூ­லாவில் இரா­ணுவ ஆட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1902 : குவாத்­த­மா­லாவில் 7.5 ரிக்டர் நில­ந­டுக்கம் தாக்­கி­யதில் 2,000 பேர் இறந்­தனர்.

 

1904 : கன­டாவின் டொரொண்டோ நக­ரத்தின் பெரும் பகு­திகள் தீயினால் அழிந்­தன.

 

1936 : பலஸ்­தீ­னர்­களின் ஆங்­கி­லே­யர்­க­ளுக்­கெ­தி­ரான முத­லா­வது கிளர்ச்சி தொடங்­கப்­பட்­டது.

 

1954 : உருது மற்றும் வங்­காள மொழி ஆகி­யன பாகிஸ்­தானின் தேசிய மொழி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன.

 

1971 : முத­லா­வது விண்­வெளி ஆய்­வு­ கூ­ட­மான சோவியத் ஒன்­றி­யத்தின் சல்யூட் 1 விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது.

 

1975 : இந்­தி­யாவின் முத­லா­வது செய்­மதி ஆரி­ய­பட்டா விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.

 

1988 : அன்னை பூபதி மட்­டக்­க­ளப்பில்  உண்ணா நோன்­பி­ருந்து இறந்தார்.

 

1989 : அமெ­ரிக்­காவின் யூ.எஸ்.எஸ். அயோவா என்ற கப்­பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்­ததில் 47 கடற் ­ப­டை­யினர் கொல்­லப்­பட்­டனர்.

 

1993 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் டாவீ­டியன் என்ற மதக்­குழு ஒன்றின் கட்­டி­டத்தை 51 நாட்­க­ளாக சுற்றி வளைத்த அமெ­ரிக்க எவ்.பி.ஐ இன் முற்­றுகை கட்­டிடம் தீப்­பற்­றி­யதில் முடி­வுக்கு வந்­தது. மதக்­குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்­பட 87 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : அமெ­ரிக்­காவின் ஓக்­ல­ஹாமா நக­ரத்தில் அரசுக் கட்­டிடம் ஒன்று தீவி­ர­வா­தி­களின் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னாதில் 168 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­து­ட­னான - விடு­த­லைப்­பு­லிகள் பேச்­சு­வார்த்தை முறி­வ­டைந்­த­தாக விடு­தலைப் புலிகள் அறி­வித்­தனர். அதனை அடுத்து திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தில் இரண்டு பீரங்கிக் கப்­பல்கள் புலி­களால் மூழ்­க­டிக்­கப்­பட்­டன.

 

1999 : ஜேர்­ம­னியின் நாடா­ளு­மன்றம் பேர்லின் நக­ருக்கு மாற்­றப்­பட்­டது.

 

2006 : நேபா­ளத்தில் மன்­ன­ராட்­சியை எதிர்த்து பொது­மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்டனர்.

 

2011 : கியூப கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக் குழுவிலிருந்து பிடெல் கெஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். 

 

2013 : பொஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு சந்தேக நபரான தமேர்லன் சார்னேவ் பொலிஸாரினால் கொல்லப்பட்டர்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உளி செதுக்காத சிற்பங்கள்!

 

ளி, சுத்தியல் இல்லாமலேயே சிற்பங்களை உருவாக்கி ஆச்சர்யப்படுத்துகிறார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டோனி ஃப்ரெட்ரிக்சன் (Tony Frederickson).

p55a.jpgp55c%281%29.jpg

p55b.jpg

இவை எல்லாமே மரச் சிற்பங்கள்தான். ஆனால், தான் உருவாக்கும் சிற்பங்களுக்காக மரங்களை வெட்டுவது இல்லை. மரங்களில் இருந்து காய்ந்து விழும் குச்சிகள், பட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே சிற்பங்களை உருவாக்குகிறார். 2007-ஆம் ஆண்டிலிருந்து விலங்குகள், பறவைகள் என சுமார் 7,000  சிற்பங்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றைக் கண்காட்சியாக நடத்தியுள்ளார் டோனி ஃப்ரெட்ரிக்சன்.

vikatan

  • தொடங்கியவர்
நுவரெலியாவில் FASHON SHOW...

  article_1461043967-71.jpg

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா ரோயல் டர்ப் கழகத்தினால் (ROYAL TURF CLUB) ஏற்பாடு செய்யப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு நுவரெலியா குதிரை பந்தயத் திடலில் நேற்று(18) நடைபெற்றது. இவ் அணிவகுப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 

 

article_1461043950-74.jpg

article_1461043977-70.jpg

article_1461043986-72.jpg

article_1461043994-73.jpg

article_1461044004-75.jpg

article_1461044012-76.jpg

article_1461044023-79.jpg

article_1461044033-80.jpg

article_1461044059-81.jpg

article_1461044070-82.jpg

article_1461044080-83.jpg

article_1461044092-84.jpg

article_1461044105-85.jpg

article_1461044145-90.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 19: குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு

 

13000076_1118680334857422_42590953084397

 

உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை ,”இது தவறு !”என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது . சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து கொண்டிருந்தார்.

தட்டான்பூச்சி, மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என்று இவற்றை சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார் “உனக்கு படிக்கவே வரலை ; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது !”எனத்தன் மகனைப்பார்த்து சொன்னார் அந்த அப்பா .

அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின் அங்கே சிறுவன் ஒருவன் கதற கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார் . (அன்றைய காலத்தில் மயக்க மருந்து பயன்படுத்தப்படுகிற பழக்கமில்லை ). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது,தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம்
குறிப்புகள் எடுத்தார். அப்பாவின் ஆலோசனைப்படி இயற்கையியல் வல்லுநர் ஆனார்.

தென் அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகை சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களை கண்டார்;பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார் .அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன ;அவையே ,மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார் . என்றாலும் இவற்றை இணைத்து அவரால் உடனே பார்க்க முடியவில்லை.

அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களை திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளை கண்டார். ஒரு தீவில் கடலையை கொத்த பட்டையான மூக்கோடும், எலியை தின்ன கூர்மையான மூக்கு கொண்ட பின்ச் பறவைகள் இன்னொரு தீவிலும், புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கைக்கொண்ட பின்ச் பறவைகள் இன்னொரு தீவிலும் இருப்பதை கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என்று சொன்னார்.

பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளை அவர் பெற்றிருந்தாலும் வாயைத்திறக்கவே இல்ல டார்வின். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின் அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனை கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.

அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின்மூன்று முக்கிய
கூறுகளை அவர் விளக்கினார்

1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )

2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில் உண்டாகும் மாறுபாடுகள் )

பரிணாம கொள்கையை கேட்டு உலகமே ஸ்தம்பித்தது.பலர் ஏற்றுக்கொண்டனர்;இவரை குரங்கு என சித்தரித்தார்கள் பல மதவாதிகள் ; பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளை பேய் தினம் என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்

மதத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்ன அவர் ,கடவுளை பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை . அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். “உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”என சொன்னவர் டார்வின்.

அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார்‘நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக்கிடக்கத் தயார்’ என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது. (டார்வின் நினைவு தினம் இன்று )

vikatan

  • தொடங்கியவர்
57 வருடங்களாக ஒரு நாளும் லீவு எடுக்காமல் பணியாற்றி ஓய்வுபெற்ற பால்காரர்
 

16109m.jpgபிரிட்­டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்­ச­சி­யாக 57 வரு­டங்கள் பால் விநி­யோக ஊழி­ய­ராக பணி­யாற்றி அண்­மையில் ஓய்வு பெற்­றுள்ளார். இவர் ஒருநாள் தானும் வேலைக்கு வராமல் இருந்­த­தில்­லையாம். 

 

இங்­கி­லாந்தின் குளோ­செ­யஸ்­ட­ஷயர் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பிறையன் விலே என்­பவர், தனது 13 ஆவது வயதில் பால் விநி­யோக ஊழி­ய­ராக பணியை ஆரம்­பித்தார்.

 

தற்­போது அவ­ருக்கு 70 வய­தா­கு­கி­றது. கடந்த 57 வரு­டங்­க­ளாக இத்­தொ­ழிலை மேற்­கொண்­டமை பல­ருக்கு ஆச்­ச­ரி­ய­மில்­லாமல் இருக்­கலாம். ஆனால், ஒருநாள் கூட அவர் கட­மைக்கு சமு­க­ம­ளிக்கத் தவ­றி­ய­தில்லை என்­பது பெரும் ஆச்­ச­ரி­ய­மா­னது.

 

தனது இரு பிள்­ளைகள் பிறந்த தினங்­க­ளிலும் அவர் கட­மைக்குச் சென்­றி­ருந்­தாராம். “நான் எப்­போதும் எனது வேலையை செய்­வதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்” என பிறையன் கூறு­கிறார்.

 

“பல தலை­மு­றை­யி­ன­ருக்கு நான் பால் விநி­யோ­கித்­துள்ளேன். எனது வாடிக்­கை­யா­ளர்கள் சிறார்­க­ளாக இருந்­த­போது அவர்­க­ளுக்கு பால் விநி­யோ­கித்து, பின்னர் அவர்கள் வளர்ந்து பெரி­ய­வர்­க­ளாகி தமது பிள்­ளை­களுடன் இருக்­கும்­போதும் பால் விநி­யோ­கித்த அனு­பவம் எனக்­குள்­ளது” என அவர் தெரி­வித்­துள்ளார். 

 

சிறு வயதில் பகுதி நேர­மாக பால் விநி­யோகம் செய்ய ஆரம்­பித்த பிறையன் பின்னர் முழு நேர­மாக  இப்­ப­ணியை மேற்­கொண்டார். வாரத்தில் 7 நாட்­களும் அவர் வேலைக்குச் சென்றார்.

 

16109milk.jpg

 

1986 ஆம் ஆண்டில் சொந்­த­மாக பால் விநியோக வர்த்தகத்தை அவர் ஆரம்பித்தாராம். இறுதியாக கடந்த 2ஆம் திகதி அவர் பால் விநியோகத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தொப்பிக்காக புலி கூண்டிற்குள் குதித்த இளம் பெண்! - நடந்தது என்ன? (வீடியோ)

 

 

tigercanadawoman.jpg

கனடாவில் உள்ள விலங்குகள் பூங்காவில்,  புலி கூண்டிற்குள் தவறி விழுந்த தொப்பியை எடுக்க இளம் பெண் ஒருவர் உள்ளே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொரேன்டோவில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றிற்கு,  அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் சிலர் சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளனர். புலி அடைத்து வைக்கப்பட்டுள்ள கூண்டிற்குள் அருகில் அவர்கள் வந்தபோது, பெண் ஒருவரின் தொப்பி தவறி கூண்டிற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

புலி, கூண்டிற்குள் அருகிலேயே சுற்றி திரிவதை பார்த்த அந்த பெண், எவ்வித அச்சமும் இன்றி திடீரென கூண்டிற்குள் குதித்துள்ளார். தனது எல்லைக்குள் ஒருவர் நுழைந்துள்ளதை கண்ட அந்த புலி ஆவேசமாக அந்த பெண்ணை நோக்கி பாய்ந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணிற்கும் புலிக்கும் இடையே ஒரு மெலிதான இரும்புக் கம்பி வேலி இருந்ததால், புலி அவரை நெருங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்துள்ளது. தொப்பியை எடுத்துக்கொண்ட அந்த பெண் கூண்டை தாண்டி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் பூங்காவின் பாதுகாவலரான ஜெனிபர் என்பவர் கூறுகையில், ‘பெண்ணின் இந்த செயல் மிகவும் மோசமானது. ஆவேசம் அடைந்த அந்த புலி மெலிதான அந்த வேலியை தாக்கியிருந்தால், பெண்ணின் நிலைமை ஆபத்தில் முடிந்திருக்கும். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் பூங்கா ஊழியர்களிடம் பாதுகாப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.

vikatan

  • தொடங்கியவர்

தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஸ்டெயின்! (வீடியோ)

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், மும்பையில் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின், தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது மோசமான பார்மில் இருக்கும் ஸ்டெயின், மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஸ்டெயின், தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


Little bit of street cricket in Mumbai, my 1st wicket of the IPL என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மும்பையில் தெருவில் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறார் ஸ்டெயின்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vikatan

  • தொடங்கியவர்

சர்வதேச சைக்கிள் தினம்...

"கிளிங் !! கிளங் !! சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்தும் சைக்கிள் பயணம் மிக அவசியம்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல் 'வீட்டிற்கு ஒரு மிதி வண்டி அவசியம்'.

12986927_1118683408190448_15802727404982

  • தொடங்கியவர்

12986980_1118680571524065_15106694550394

ஏப்ரல் 19: உலக தடகள போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்தியத் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் பிறந்த தினம்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

The Queen turns 90 this year. Here is a look back at her life.

  • தொடங்கியவர்
உங்கள் ஐபோன்கள், ஐபேட்களுக்குள் தங்கம்! கடந்த வருடம் தனது பழைய உற்பத்திப் பொருட்களிலிருந்து 1,000 கிலோ தங்கத்தை மீளப் பெற்றதாக கூறுகிறது அப்பிள் நிறுவனம்
 

16111heres-the-evidence-that-apples-goldஐபோன் வைத்திருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்களிடம் தங்கமும் இருக்கிறது. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், கணினிகள், ஐபேட்களில் சிறிய அளவில் தங்கம் இருக்கிறதாம்.

 

கடந்த வருடம் பழைய ஐபோன்கள் மற்றும் கணினிகளிலிருந்து சுமார் 1,000 கிலோகிராம் எடையுடைய தங்கத்தை தான் மீளப்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தங்கத்தின் பெறுமதி 4 கோடி (சுமார் 568 கோடி ரூபா) டொலர் களாகும்.
2.3 கோடி இறாத்தல் இரும்பு 1.3 கோடி இறாத்தல் பிளாஸ்டிக், 1.2 கோடி இறாத்தல் கண்ணாடி.

 

தனது வருடாந்த சுற்றாடல் அறிக்கையில் இவ்விடயத்தை அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோனில் உள்ள தங்கமானது  உருக்கப்பட்டு ஆபரணங்களாக மாற்றப்படும் அளவுக்குப் போதுமானவை அல்ல. ஐ போனில் 0.034 கிராம் தங்கம் இருப்பதாக 2011 ஆம் ஆண்டில் சி.என்.என். தெரிவித்திருந்தது. 

 

தங்கமானது  சிறந்த மின் கடத்தியாக தொழிற்படுவதால் சில இலத்திரனியல் சாதனங்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி யும் சிறந்த கடத்தியதாக தொழிற்படுகின்ற போதிலும் அவை இலகுவாக துருப்பிடிக்கக் கூடியவை.

 

16111i.jpg

 

செப்பு மலிவான கடத்தி. ஆனால், அது கணினியின் சில வேலைகளைப் பொறுத்தவரை செப்பு மின்சாரத்தை மெதுவாக கடத்துகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இத்தகைய தேவைகளுக்கு தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

 

இந் நிலையில், மீள்சுழற்சியில் கவனம் செலுத்தும் அப்பிள் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட தனது பழைய உற்பத்திப் பொருட்களிலிருந்து மீளப்பயன்படுத்தக்கூடிய 61 மில்லியன் பொருட்களை சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இவற்றில் 2,205 இறாத்தல் (சுமார் 1000 கிலோகிராம்) தங்கம்,  6,612 இறாத்தல் வெள்ளி, 30 இலட்சம் இறாத்தல் செப்பு, 45 இலட்சம் இறாத்தல் அலுமினியம், 2.3 கோடி இறாத்தல் இரும்பு, 1.3 கோடி இறாத்தல் பிளாஸ்டிக், 1.2 கோடி இறாத்தல் கண்ணாடி 44,080 இறாத்தல் ஈயம் மற்றும் பல பொருட்கள் அடங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (வைரம் எதுவும் இல்லை).

 

இதேவேளை, வருடாந்தம் 1.2 மில்லியன்) (12 லட்சம்) தொலைபேசிகளின் பாகங்களை பிரித்தெடுக்கக்கூடிய லியாம் எனும் ரோபோக்களை அப்பிள் நிறுவனம் பரீட்சார்த்தமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

 

பழைய ஐபோன்களிலிருந்து அப்பிள் நிறுவனம் மீட்ட பொருட்கள் 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

p60a.jpg

dot11.jpg தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் டாப் இடம் பிடித்த காஜல் அகர்வால், சமீபகாலமாக சைலென்ட் மோடில் இருந்தார். `கப்பர் சிங்’ தெலுங்குப் படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தவருக்கு இனி ஆக்ட்டிவ் மோடுதான். தமிழில் ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கும் `கவலை வேண்டாம்’, தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் பிரம்மோத்சவம், இந்தியில் ‘தோ லவ்சான் கி கஹானி’ என காஜலின் கால்ஷீட் ரொம்ப பிஸி. 2016-ம் ஆண்டில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என ஆல் ஏரியாக்களிலும் காஜல் ஷோ உண்டாம். காஜல் 2.0

dot11.jpg 18 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ‘அக்னி நட்சத்திரம்’. பிரபு, கார்த்திக் இணைந்து மிரட்டிய அந்தப் படம், இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்தியில் `சைத்தான்', `வஸிர்', தமிழில் `டேவிட்' படங்கள் இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கப்போகிறார். `படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்பதை விரைவில் அறிப்பேன்' என்கிறார் பிஜோய். அமலா கேரக்டருக்கு அலியா பட்தான் சரி.

p60b.jpg

dot11.jpg `தேர்தல் சமயங் களில் பணப் புழக்கம் சாதாரணமாகவே அதிகரிக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை யூகிக்க முடியும். இருப் பினும் இந்த முறை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பணப்புழக்கம் அதிகரித் திருக்கிறது. ஏதோ நடக்கிறது… இதுபற்றி கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்’ என எச்சரித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன். ஆளுநரின் எச்சரிக்கைக்குப் பிறகு, இப்போது தேர்தல் கமிஷனின் சோதனையில் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிடிச்சு ஜெயில்ல போடுங்க ஆபீஸர்ஸ்!

dot11.jpg ஒரு நாற்காலி 2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. `ஹாரிபாட்டர்’ நாவலின் முதல் இரண்டு பாகங்களை இந்த நாற்காலியில் உட்கார்ந்து ஜே.கே.ரௌலிங் எழுதினார் என்பதுதான் ஸ்பெஷல். இந்த நாற்காலியை, 2002-ம் ஆண்டிலேயே ஓர் அறக்கட்டளைக்குக் கொடுத்துவிட்டார் ரெளலிங். அந்த அறக்கட்டளை நிதி திரட்டுவதற்காக சமீபத்தில் நடத்திய ஏலத்தில்தான் இவ்வளவு விலை. `நான்தான் வாங்கினேன் என யாருக்கும் தெரியக் கூடாது' என ஏலத்தில் எடுத்தவர் சொல்லிவிட்டதால், பார்ட்டி யார் என்பது சஸ்பென்ஸ். ஒரு நாற்காலியின் கதை!

p60c.jpg

dot11.jpg மீண்டும் கல்லூரிப் பேராசிரியராகிறார் நம் முன்னாள் பிரதமர்.  83 வயதாகும் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே பணியாற்றியவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த, பணியாற்றிய அதே பல்கலைக்கழகம் தற்போது அழைப்புவிடுத்திருக்கிறது. `மன்மோகனின் அனுபவமும் அறிவும் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்' என்கிற அழைப்புக்கு லைக் பட்டன் அழுத்திவிட்டார் சிங். நீ கலக்கு வாத்தியாரே!

dot11.jpg பீலேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் - `Pele-Birth of a Legend’ ஏப்ரல் 23-ம் தேதி ரிலீஸ். இசை
ஏ.ஆர்.ரஹ்மான்.  `இந்தியரான நீங்கள் பிரேசிலியன் டச்சோடு இசையமைத் திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான்' எனப் பாராட்டியிருக்கிறார் பீலே. ஃப்ரீ கிக்!

p60e.jpg

p60f.jpg

dot11.jpg ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்சய் தத்தாக நடிக்கவிருக்கிறார் ரன்பீர் கபூர். ` `பீகே' பட எடிட்டிங்கின்போது சஞ்சய் தத் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை விவரித்தார். அவர் சொன்ன பல விஷயங்கள் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. இதை ஒரு படமாக எடுக்க வேண்டும் என அப்போதே தீர்மானித்தேன். இது சஞ்சய் தத்துக்கு மட்டும் அல்ல ரன்பீர் கபூருக்குமே திருப்புமுனைப் படமாக இருக்கும்' என்கிறார் ஹிரானி. கேம் சேஞ்சர்!

p60d.jpg

dot11.jpg`ஓர் இளம்பெண் ஜாலியாக இருக்க நிறைய வழிகள் இருக்கின்றன. பார்ட்டிக்குப் போகலாம், நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கலாம். ஆனால் எனக்கு, கிரிக்கெட்டைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. எட்டு வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். பள்ளியில் என்னுடன் போட்டிபோட்டது ஆண்கள்தான். கேலி, கிண்டல்கள் கொஞ்ச நாட்கள் தான். திறமையை நிரூபித்த  பிறகு எல்லோரும் எனக்குப் பெரிய பலமாக மாறினார்கள். மேற்கு இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் ஆனேன். இப்போது உலகக்கோப்பையை வென்றும்விட்டேன். இதைவிட என் வாழ்க்கையில் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?' என்கிறார் வெஸ்ட் இண்டீஸின் கேப்டனும் இந்த உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரருமான ஸ்டெஃபானி டெய்லர். லவ் யூ!

p60g.jpg

dot11.jpg `ஒலிம்பிக்கை நடத்தி முடிக்க முடியுமா?' என்ற கவலையில் இருக்கிறது பிரேசில் அரசு. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், பாதி டிக்கெட்டுகள்கூட இன்னும் விற்கவில்லை. பொருளாதார வீழ்ச்சி, பாதுகாப்புக் குறைபாடுகள், அதிகரிக்கும் செலவினங்கள், ஸிகா வைரஸ் அச்சம் என எக்கச்சக்கப் பிரச்னைகள். பதற்றத்தில் இருக்கிறது பிரேசில் அரசு. சம்பா டான்ஸ் உண்டா?

vikatan

  • தொடங்கியவர்
2012 : பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் 127 பேர் பலி!
 

வரலாற்றில் இன்று....

ஏப்ரல் - 20

 

707varalru-20-04.jpg1534 :  பிரான்ஸை சேர்ந்த ஆய்­வா­ள­ரான ஜெக் கார்ட்டிர் தனது கடற்­ப­ய­ணத்தை ஆரம்­பித்தார். இப்­ப­ய­ணத்தின் போதே அவர் கன­டாவைக் கண்­டு­ பிடித்தார்.

 

1657 : அமெ­ரிக்­காவில் நியூ ஆம்ஸ்­டர்டாம் (தற்­போ­தைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடி­யேற்­றத்தில் யூதர்­க­ளுக்கு மதச் சுதந்­திரம் அளிக்­கப்­பட்­டது.

 

1792 : ஆஸ்­தி­ரியா மீது பிரான்ஸ் போரை அறி­வித்­தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்­பித்­தன.

 

1862 : லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகி­யோரின் பாஸ்ச்­ச­ரை­சேஷன் முறையை முதன் முத­லாக சோதித்­தனர்.

 

1902 : பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோ­ரட்டைத் தூய்­மைப்­ப­டுத்­தினர்.

 

1914 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் கொல­ரா­டோவில் நிலக்­கரிச் சுரங்கத் தொழி­லா­ளர்கள் வேலை நிறுத்­தத்தின் போது பொலிஸார் தாக்­கி­யதில் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 45 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1926 : திரைப்­ப­டத்­துக்கு ஒலியை இணைக்கும் வைட்­டாபோன் என்ற முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்க படைகள் ஜேர்­ம­னியின் லெயிப்சிக் நகரைக் கைப்­பற்­றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்­றி­யத்­துக்கு அளித்­தனர்.

 

1945 : ஜேர்­ம­னிய சர்­வா­தி­காரி அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தட­வை­யாக தனது சுரங்க பதுங்கு இருப்­ பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

 

1961 : கியூ­பாவில் பிடெல் கஸ்ட்­ரோவின் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­கான ஐக்கிய அமெ­ரிக்­காவின் ஏபிக்ஸ் விரி­குடாத் தாக்­குதல் தோல்­வியில் முடிந்­தது.

 

707varlaru-2008.jpg1967 : சைப்­பி­ரஸில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 126 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1968 : தென் ஆபி­ரிக்க விமானம் ஒன்று தென்­மேற்கு ஆபி­ரிக்­காவில் வீழ்ந்­ததில் 122 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1972 : அப்பலோ 16 விண்­கலம் சந்­தி­ரனில் இறங்­கி­யது.

 

1978 : தென் கொரியப் பய­ணிகள் விமானம் சோவியத் ஒன்­றி­யத்­தினால் சுடப்­பட்­டதில் இரு பய­ணிகள் கொல்­லப்­பட்­டனர். 107 பேர் தப்­பினர்.

 

1998 : கொலம்­பி­யாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்­றுடன் மோதி­யதில் 53 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1998 : 28 ஆண்­டுகள் இயங்­கிய ஜேர்­ம­னியின் சிவப்பு இரா­ணுவ அமைப்பு என்ற தீவி­ர­வாத அமைப்பு கலைக்­கப்­பட்­டது.

 

1999 : கொல­ரா­டோவில் உயர்­தரப் பள்ளி ஒன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்­லப்­பட்­டனர். துப்­பாக்­கி­தாரி பின்னர் தற்­கொலை செய்து கொண்டான்.

 

2007 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஹுஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்­வெளி ஆய்வு மையத்தின் பணி­யாளி ஒருவன் பணயக் கைதி ஒரு­வரைக் கொன்று தன்­னையும் சுட்டுக் கொன்றான்.

 

2008 : ஜப்­பானில் நடை­பெற்ற இண்டி ஜப்பான் 300 காரோட்டப் போட்­டியில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த டெனிக்கா பட்றிக் சம்­பி­ய­னானார். இப்­போட்­டியில் சம்­பி­ய­னான முத­லா­வது பெண் இவ­ராவார். 

 

2010 : மெக்­ஸிகோ வளை­கு­டாவில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் 11 ஊழி­யர்கள் உயி­ரி­ழந்­த­துடன் 6 மாத காலத்­துக்கு  எண்ணெய் கசிவு நீடித்­தது.

 

2012 : பாகிஸ்­தானின் இஸ்­லா­மாபாத் விமான நிலை­யத்­துக்கு அரு­கி­லுள்ள குடி­யி­ருப்புப் பகு­தி­யொன்றில் பாகிஸ்­தானின் போஜா எயார்­லைன்­ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று வீழ்ந்ததால் 127 பயணிகளும் 6 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். 

 

2013 : சீனாவின்  சிச்சுவான் மாகா ணத்தில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 150 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 20: அடால்ஃப் ஹிட்லர்... பிறந்த தின சிறப்பு பகிர்வு..

 

 

ஹிட்லர் பரபரப்பை உண்டு செய்யும் ஒரு பெயர் .தான் வாழ்ந்த காலத்தின் வரலாற்றை தன்னை சுற்றியே தவறான காரணங்களுக்காக சுழல வைத்தவர் இவர் .அடிப்படையில் ஆஸ்திரிய நாட்டில் பிறந்த இவரின் தாத்தா யூதர் என்பது சமீபத்தில் தான் தெரியும் .அப்பா பெல்ட்டால்,சிகரெட்டால் என எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அடித்து துவைத்தார் இவரை.வலிகளால் வாழ்க்கை நகர்ந்த பொழுது இருந்த ஒரே ஆறுதல் அம்மாவின் அரவணைப்பு மட்டுமே

அம்மாவும் இறந்து யாருமே இல்லாத நிலையில் நடுத்தெருவில் ஏழைகளுக்கு வழங்கும் சூப் குடிக்கும் கூட்டத்தில் இவர் நின்ற பொழுது அங்கே யூதர்களின் கூட்டம் இல்லாததை கண்டார் .யூதர்கள் செல்வந்தர்கள் என தெரியும் அவருக்கு ,தன் நாட்டை அவர்கள் கூறு போட்டு உண்கிறார்கள் என்கிற எண்ணம் அப்பொழுதே வலுப்பெற ஆரம்பித்தது.

hittleeer_0420_400_232.jpg



ஓவியக்கல்லூரிக்கு போனார் ;ஓவியம் வரைய வராது என அனுப்பி விட்டார்கள்.அன்றைக்கு கொஞ்சம் கனிவோடு மனிதரை உள்ளே விட்டிருந்தால் நாடுகளின் எல்லைகள் மாறாமல் இருந்திருக்க கூடும் .உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தேசங்களுக்கு இணையாக தானும் மாற ஜெர்மனி ஆவல் கொண்டது .அப்பொழுது இரு கொலைகள் புகைந்துகொண்டிருத்த குண்டை வெடிக்க வைத்தது .முதல் உலகப்போர் நடந்து முடிந்தது ;ஜெர்மனி தோல்வியை தழுவியது

எல்லா தப்புக்கும் ஜெர்மனி தான் காரணம் என வெர்சைல்ஸ் ஒப்பந்தம் சொன்னது.பல கோடிகளை இழப்பீடாக வாங்கிய வென்ற நாடுகள் ;இருந்த பல பகுதிகளை கூறு போட்டு தனிதனி நாடுகள் ஆக்கினார்கள் .ராணுவ பலத்தை குறைக்கவும் செய்தார்கள் .அவமானத்தால் ஜெர்மானியர்கள் வருந்தினார்கள் .கரன்சி மதிப்பு விழுந்தது ;நாடு முழுக்க பசி தாண்டவமாடியது

hittleeer_0420_400.jpgஹிட்லர் என்னென்னவோ பண்ணி பார்த்துவிட்டு அரசியல் பக்கம் வந்து சேர்ந்தார் ;ஒரு முறை ஆட்சியை கவிழ்கக புரட்சி செய்யப்போய் மது விடுதிலேயே கைது செய்யப்பட்டார் .சிறையில் இருந்த பொழுது மெயின் காம்ஃ ப் எழுதினார் .அப்படி ஒரு வசீகரமான நடை .நம்முடைய சிக்கல்களுக்கு மற்ற இனங்களின் ஆதிக்கமே காரணம் ;நாசி இனம் ஒங்க வேண்டும் .யூதர்கள் முதலிய தீயவர்கள் ஒழிய வேண்டும் என முழங்கினார்

தனி வாழ்க்கையில் சுத்த சைவம்,நோ சிகரெட்,நோ மது,ஓரிரு பெண்கள் தான் மொத்த வாழ்க்கையில் .அவர்கள் மீதும் பெரிய போதையெல்லாம் இல்லை .ஆனால் ஹிட்லர் போர்வெறியின் குழந்தை ;இனவெறியின் மகன் .ஏகாதிபத்திய நாடுகளின் வரிசையில் ஜெர்மனி இணைய முயன்ற பல்வேறு முன்னெடுப்புகள் கூட்டிச்சென்ற முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்பதற்கு யூதர்கள் காரணம் என இவர் திடமாக நம்பினார் .பேச்சால் இனவெறியால் மக்களை கட்டிப்போட்டார் .

வெளியே வந்ததும் தேர்தலில் நின்றார் ;ஓரளவுக்கு அதிகமான சீட்கள் கிடைத்து இருந்த நேரம் .சான்சலர் ஆக இருந்த நபர் கண்ணை மூடியது வசதியாக போனது .சர்வாதிகாரத்தை கையில் எடுத்தார் .பொருளாதாரத்தை மீட்டார் .

ஹிட்லரின் எழுத்திலும் பேச்சிலும் வசீகரம் தொனிக்கும் .பிரசார பாணி அலாதியானது .முதலில் ஒரு பொய்யை மீடியா சொல்லும் ;இன்னொரு புறம் மக்கள் கூடுகிற இடங்களில் எளிய மக்கள் போல வேடமிட்டு ஒற்றர்கள் சொல்வார்கள்; ஜோசியர்களும் சொல்வார்கள் .எங்கெங்கும் அந்த பொய் பரவும்.
யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள் ;விஷ வாயு சேம்பருக்குள் அனுப்பி மொத்தமாக க்ளோஸ் செய்வார்கள் ;துப்பாக்கியால் சுட்டு ,சித்திரவதை செய்து கொல்வார்கள் .எந்த அளவுக்கு நிலைமை மோசம் என்றால் இந்த அரும்பணியை செய்வதற்கு ஒரு தனி அமைச்சகமே இருந்தது .பெரும்பாலும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஹிட்லரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு லட்சகணக்கான யூத குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என சகலரும் கொல்லப்பட்டனர் பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் மிசின் என அவர் கருதினார் .

ராணுவத்தை நவீனப்படுத்தினார் .மற்ற நாடுகளின் மீது அங்கே நாஜிக்கள் இருக்கிறார்கள் இடத்தைக்கொடு என்றும் கேட்பார் ;பின்னர்,போய் ஜெயித்து வந்து விடுவார் இப்படியே போகிற பக்கமெல்லாம் நாடுகள் வீழ்ந்தன;ஸ்டாலினுடன் கூட்டு போட்டுக்கொண்டு உலகப்போரில் கலக்கினார்.திடீர் என்று இருவருக்குள்ளும் சிக்கல்கள் வந்தன ;அதற்குள் பிரான்ஸ் தொடங்கி பல்வேறு நாடுகள் ஜெர்மனி வசம் வந்திருந்தன .இப்பொழுது இரண்டு மலைகளும் மோதிக்கொண்டன .

விலகவே விலகாத செம்படைகளிடம் பல கால போராட்டத்துக்கு பின் இவரின் படைகள் வீழ ஆரம்பித்தன .ஒரே ஒரு நாள் பெத்தடின் கண்ணில் போட்டுக்கொண்டதும் நார்மண்டியில் புகுந்து விளையாடின எதிர் படைகள் .தோல்வி தெரிந்தது .இவா பிரவுனுக்கு கொஞ்சம் விஷம் ;தனக்கு தோட்டாக்கள் என முடித்துக்கொண்டார் அவர் .அதற்குள் சில கோடி மக்களும், பல லட்சம் யூதர்களும் கொல்லப்பட்டு இருந்தார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

சில தகவல்கள்

 

 

தி.மு.க.

கட்ந்த வாரம் முழுக்கத் தமிழக அரசியல் லைம்லைட்டில் இருந்தது தி.மு.க. அ.தி.மு.க-விற்கு எதிராக ஒரு பதிவு எழுதினால் 200 ரூபாய் தி.மு.க. தருவதாக ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட, #Takethe200Rupees என்ற டேக் ட்ரெண்ட் அடித்தது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வெளியிட்ட சில நிமிடங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது #தி.மு.க. தேர்தல்அறிக்கை. மறுநாளே, பா.ம.க-வின் ராமதாஸோ, இது எங்கள் அறிக்கை, தி.மு.க. காப்பியடித்து விட்டது எனச் சொல்ல #CopyPasteDmk என்பதும் ட்ரெண்ட் அடித்தது. அமாவாசை, ஜெயிப்பியா?

ரஜினிடா

p126a.jpg

ரஜினி இந்த முறை வாங்கியிருப்பது பத்மவிபூஷன் விருது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட விருதுகளை, ஏப்ரல் 12-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். ரஜினி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா எனப் பலர் விருதுகளை வாங்கினாலும், தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது  #PadmaVibhushanRajini ரஜினி மட்டுமே. ஆயிரம் அதிசயம் அமைந்தது ரஜினி ஜாதகம்!

அதிர்ச்சி ஓய்வு

p126b.jpg

விளையாட்டு, அரசியல் எனப் பல துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் பலரைத் திடீரென உடல் நலம் பாதித்துவிடும். இங்கிலாந்தில் இளம் ஹிட்டராக உருவாகிக்கொண்டு இருந்த ஜேம்ஸ் டெய்லர்தான் புதிதாகப் பாதிக்கப்பட்டவர். இருதயக் கோளாறு எனச் சொல்லி, 26 வயதிலேயே தன் கிரிக்கெட் வாழ்விற்கு @jamestaylor20 என ஓய்வை அறிவித்து இருக்கிறார் ஜேம்ஸ் டெய்லர். நலம் பெற பிரார்த்தனைகள்!

சன்னி லியோன்

p126c.jpg

ஏப்ரல் மாத இறுதியில் வெளியாக இருக்கும் பாலிவுட் திரைப்படம் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’. என்னடா இது பேரே ஒரு மாதிரி இருக்கிறதென ஷாக் ஆகாதீர்கள். படத்தின்  நாயகியும் ஷாக் ரகம் தான். சன்னி லியோன் நடிக்கும் இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளிவந்து ஏற்கெனவே ஹிட் அடித்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி இருக்கிறது. வெளியான ஒரு வாரத்திற்குள் 17 லட்சம் ஹிட்ஸ் அடித்து இருக்கிறது. #OneNightStand தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது. ஐ யம் வெயிட்டிங்!

கொல்லம் விபத்து

p126d.jpg

கேரள மாநில கொல்லத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த கோயில் விபத்து உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நடந்த வெடிவிபத்தில் 110-க்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள். இனிக் கோயில்களில் பட்டாசுகள் பயன்படுத்தக் கூடாது என்கிற நிலைக்கு இந்த விபத்து மக்களைக் கொண்டு சென்று இருக்கிறது. #KollamTempleBlast என்ற டேக்கில் நடந்த சம்பவங்கள் பற்றி ட்விட்டினர் நெட்டிசன்ஸ். விழித்திரு!

என்ன தப்புதான் செய்தார்?

p126f.jpg

இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் பலருக்கும் பிடித்தவர் ஹர்ஷா போக்லே. கிரிக்கெட் விளையாடி, ஒருகட்டத்தில் ஓய்வு பெற்று, பின் வர்ணனையாளரான நபர் அல்ல ஹர்ஷா போக்லே. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் வர்ணனையாளராக இருப்பவர். ஆனால், பி.சி.சி.ஐ நிறுவனத்திடம் யார் என்ன சொன்னார்களோ, அவரைத் திடீரென நீக்கிவிட்டார்கள். ஒரு வர்ணனையாளருக்காக இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் எல்லோரும் ட்ரெண்ட் அடித்தது இதுதான் முதல்முறை. #HarshaBhogle #BringBackHarsha போன்ற  டேக்குகளில் ஹர்ஷாவுக்கு ஆதரவாக ட்விட்டினர் நெட்டிசன்ஸ். உருப்படியா இருந்த ஒருத்தரையும் தூக்கியாச்சா?

காந்தக் கண்ணழகிகள்

p126e.jpg

சஞ்சய் தத், சானியா மிர்சா, அர்ஜுன் கபூர் எனப் பல நடுவர்கள் இணைந்து இந்த ஆண்டிற்கான மிஸ் இந்தியாவைத் தேர்வு செய்தனர். அஸ்ஸாம் பெண்ணான ப்ரியதர்ஷினி சாட்டர்ஜிதான் இந்த ஆண்டிற்கான மிஸ் இந்தியா. பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், வெற்றியாளர்களுக்கு கிரீடம் அணிவிக்க களை கட்டியது விழா.  #MissIndia2016-ஐ தேசிய அளவில் ட்ரெண்ட் அடிக்க வைத்து ஜொள்ளினர் நெட்டிசன்ஸ். எல்லோருமே அழகாத்தான் இருந்தாங்க!

பைக் இளவரசி

p126g.jpg

கன ரக டூ வீலர்களைப் பெரும்பாலும் பெண்கள் ஓட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு, ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளை பெண்கள் ஓட்டினாலே ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஜெய்ப்பூர் மாநிலத்தின் வீனு பலிவால் என்ற 44 வயதுப் பெண்தான் இந்தியாவின் டாப் பெண் டூ வீலர் இளவரசி. மத்தியப் பிரதேசத்தின் Gyaraspur கயராஸ்பூர் அருகே அவரது வண்டி தரையில் ஸ்கிட் அடிக்க, கடந்த 12-ம் தேதி இறந்து போனார். #veenupaliwal என்ற டேகில், தேசிய அளவில் அவருக்காக ட்விட்கள் இட்டனர் நெட்டிசன்ஸ். மிஸ் யூ வீனு!

vikatan

  • தொடங்கியவர்

கல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்?

 

playfulkisses2.jpg


வீட்டுல அம்மா அத்தை பாட்டி எல்லாரும் ஹால்ல ஒக்காந்து தெய்வ மகள், சரவணன் மீனாட்சி, வாணி ராணின்னு கண்ணீர் விட்டு கதறிக்கிட்டு இருக்க, காலேஜ் கண்மணீஸ் எல்லாரும் லேப்டாப் முன்னாடி இதே மாதிரிதான் சீரியல் பாத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா அவங்க பாக்கறதே வேற! எல்லாம் பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ், ப்லேஃபுல் கிஸ்ஸஸ், ஹீலர் அப்படி இப்படின்னு கொரியன் சீரியல்கள். ஒரு நாலு வருஷமாவே கொரியன் சீரியல்கள் மோகம் நம்ம தமிழ் பொண்ணுங்கள புடிச்சு வாட்டி எடுக்குது. நம்ம ஊர் சீரியல்ல இல்லாம அப்படி என்னதான் கொரியன் சீரியல்ல இருக்கு?

1. தமிழ்: பசங்க செக்க செவேல்னு கிளீன் ஷேவ் செஞ்சுருந்தா ஹீரோ. அதுவே மோசமொசன்னு தாடி வளர்த்து இருந்தா வில்லன்

கொரியன்  - ஹீரோ ஆகட்டும் வில்லன் ஆகட்டும்...மொழு மொழு முகம், முன்னாடி வந்து விழற முடின்னு அசத்தறாங்க கொரியன் பசங்க. நம்புங்க இவங்கள சைட் அடிக்கறதுக்காகவே பாதி பேர் சீரியல் பாக்கறாங்க.
 
2. தமிழ் - 3 வயசுலேர்ந்து 9௦ வயசு வரைக்கும் வஞ்சனையே இல்லாம நடிக்கறது தமிழ் சீரியல்

கொரியன் - ஸ்கூல், காலேஜ் கதைகளை மட்டுமே மையமா வெச்சு எடுக்கறது கொரியன் சீரியல். காலேஜ் பசங்க விரும்பி பாக்கறதுக்கு இதுவே மூல காரணம்.

foolslove.jpg


3.  தமிழ் - குடும்பம், அழுகை, பாசம், பணம் இதெல்லாம் மெயின் டிராக்லையும் காதல், ஆக்சன், காமெடி எல்லாம் சைடு டிராக்லையும் ஓட்டுறது தமிழ் சீரியல்.

கொரியன் - காதல், ஆக்சன், காமெடி தான் இங்க மெயின் டிஷ். மீதி எல்லாமே ஊறுகாய்தான். கிளிசரினுக்கு வேலையே இல்லாததால இது யூத்துக்கு ஆல் டயம் பேவரிட் ஆகிடுச்சு.


 

4. தமிழ் - லோ பிச்சுல பேசினா கிசுகிசு, ஹை பிச்சுல பேசி பில்டிங்க அதிர வெச்சா ரவுடி மிரட்டல், அழுதுக்கிட்டே கத்துனா மாமியார் மருமகள் சண்டை. இதெல்லாம் போர் அடிச்சு போச்சு பாஸ்!

கொரியன் -  அழுகை, சிரிப்பு, மிரட்டல், சண்டை, சந்தொஷம் எல்லாமே ஒரே டோன்லதான். மூக்கால பேசற கொரியன் குரல் என்னவோ ரொம்ப புடிக்குது நம்ம கேர்ல்ஸ்க்கு. அதனாலதான் பாஷையே புரியலைனாலும் சப் டைட்டில் போட்டு பார்த்து ரசிக்கிறாங்க.

boysoverflowers3.jpg


5. தமிழ் – சீரியல் முடியும்போது ஹீரோயினோட அப்பாவோ ஹீரோவோட அம்மாவோ முக்கிய நல்ல கேரக்டரோ அல்லது கெட்ட கேரக்டரே ஆனாலும் ஏதோ ஒரு டெத் இருக்கும். யாரோட உயிரையாவது எடுத்துதான் பல சீரியல்கள் முடியுது இங்க. இவங்களுக்கு என்ன ஆகிடுமோ அவங்களுக்கு என்ன ஆகிடுமோன்னு ஒரு பயம் சோகத்துக்கு மக்களை கொண்டு போகறாங்க.

கொரியன் – எவ்வளவுதான் நடுவுல சோகம் வந்தாலும் க்ளைமாக்ஸ்ல குமுதா ஹேப்பி அண்ணாச்சிதான்.நேரம் செலவு பண்ணி சீரியல் பார்த்தா திருப்தி கிடைக்கும். அது மட்டும் இல்லாம அதுல தப்பு பண்ணறவங்க கடேசில சரண்டர் ஆகிடுவாங்க இல்லேன திருந்தி குட் பீபிள் ஆகிடுவாங்க.இதனால  பாக்கறவங்களும் ஹேப்பி அண்ணாச்சி!

6.       தமிழ் - இங்க எடுக்கறது மெகாகாகாகாகாகா சீரியல். அரை மணி நேரம் ஒரு எபிசொட். சீரியல் முடிக்க 2௦௦௦ எபிசொட். தூக்கம் வருது எழுப்பி விடுங்கன்னு சொல்லற வரைக்கும் (சொன்னதுக்கு அப்புறமும்) டான்டாண்டான் டடடடான் மியுசிக்கோட தொடரும் போட்டு இழுப்பாங்க.

கொரியன் - இங்க ஒரு மணி நேரம் ஒரு எபிசொட். மொத்த சீரியலுமே அதிகபட்சம் 25 எபிசோடுல  முடிஞ்சுடும். டிட் பிட்ஸ் படிக்கறா மாதிரி மூனே நாள்ல முடிச்சுட்டு போயிடலாம். யூத் டிரென்ட்டிங்கா இருக்க இதுவே காரணம்!

vikatan

  • தொடங்கியவர்

தன் துணையுடன் உடலுறவு கொள்வது யார்.? உங்கள் கைபேசி சொல்லும்.!

521288266.jpg

தாம் வீட்டில் இல்லாத போது தமது கணவரோ அன்றி மனைவியோ முறையற்ற காதல் தொடர்பைப் பேணி தமக்கு துரோகம் செய்கிறார்களா என்பதை கண்டறிய அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கு உதவும் உயர் தொழில்நுட்ப கட்டில் மெத்தையொன்றை ஸ்பெயினைச் சேர்ந்த படுக்கை தயாரிப்பு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.

embed1-smartress.jpg

டர்மெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'ஸ்மார்ட்' மெத்தையில் கணவன் அல்லது மனைவி துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் போது, அந்த மெத்தை தொலைபேசி மென்பொருளை பயன்படுத்தி வாழ்க்கைத் துணைகளுக்கு எச்சரிக்கை செய்கிறது.

மேற்படி மெத்தையின் மீது இடம்பெறும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளை இனங்கண்டறியும் வகையில் அதில் 14 அல்ட்ராசோனிக் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

PAY-Two-people-pose-on-the-Smarttress-ma

அந்த உணர்கருவிகள் மெத்தை மேல் இடம்பெறும் செயற்பாடுகளை முப்பரிமாணக் காட்சியாக வாழ்க்கைத் துணையின் கையடக்கத்தொலைபேசியில் காட்சிப்படுத்தி அவரை எச்சரிக்கை செய்கிறது.

வழமையான கட்டில் மெத்தை போன்று காணப்படும் இந்த மெத்தையின் விலை 1,200 ஸ்ரேலிங் பவுணாகும்.

ஐரோப்பாவிலேயே தமது வாழ்க்கைத் துணைகளுக்கு துரோகம் செய்பவர்களை அதிகளவில் கொண்ட நாடாக ஸ்பெயின் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 

virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இது கனவன் மனைவிக்கு உதவுகிறதோ இல்லையோ, கனவன் மனைவி உறவையே கம்பனிக்கு விருந்தாக்காது என்று என்ன நிச்சயம்...!  :cool:

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

கோடை விடுமுறை... 

கோடை வெயிலை அடித்துப் பிழிந்து

தலைகீழாய்த் தொங்கவிட்டுவிடுகிறார்கள்

விடுமுறையில் பிள்ளைகள்.

மதியவேளைகளில் அம்மா கண்ணசருகையில்

ரகசியப் பூனையென உருட்டுகின்றனர் அடுக்களையை.

தொலைக்காட்சி அலைபேசிகளை

விருப்பம்போல் தன்வசப்படுத்துகிறார்கள்.

இரவு நேர மொட்டைமாடி உறக்கத்தில்

வெகுநேரம் நட்சத்திரங்களை எண்ணுகிறார்கள்.

செல்லப்பிராணிகளோடு

முன்னிலும் நெருக்கமாகிவிடுகிறார்கள்.

p30a.jpg

மறந்திருந்த விளையாட்டுக்களைத் தூசிதட்டி

துடைத்தெடுக்கிறார்கள்.

காகிதப் பட்டங்களின் வால் பிடித்தபடியே

நூல்கண்டுகளோடு காற்றுக்கு அலைகிறார்கள்.

உண்ணும் உறங்கும் நேரங்களைக் கலைத்துப்போட்டு

வெகுநேரம் கழித்துத் தேடி அடுக்குகிறார்கள்.

விருப்பம்போல சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.

விருப்பம்போல கூடிக்கொள்கிறார்கள்.

பள்ளி திறப்பதற்கு முதல் நாளில்

கோடை விடுமுறையை புன்னகையோடு

வழியனுப்பிக் கையசைக்கிறார்கள்.

 - ந.கன்னியக்குமார்

 ரயில்...

கேட் மூடப்பட்டுவிட்டது

ரயில் தூரத்தே வரும்

ஓசையையும் அதிர்வையும் உணரமுடிகிறது.

வாகன ஓட்டிகளுக்கும்

எதிரெதிரே காத்திருப்பவர்களுக்கும்

ரயில் பார்க்கும் ஆசை துளியுமில்லை.

தடதடத்துக் கடக்குமதன் வால் மறைவதற்குள்

புகை கக்கியபடி உறுமுகின்றன டூவீலர்கள்

பாய்ந்து பரபரத்து அந்தக் கணத்தைக்

கடந்துவிடத் துடிப்பவர்கள்போல.

மதத்தைக் கடந்துவிட

சாதியைக் கடந்துவிட

காதலைக் கடந்துவிட

சமதளத் தண்டவாளங்களில் பாய்ந்து

உடல்கள் துண்டங்களாகிச் சிதறக் கடக்கும்

ரயிலின் கண்ணீர் ஆவியாகி

ஒலிப்பானின் சத்தம்

நூற்றாண்டுக் கதறலைப்போல

காற்றைக் கிழித்துக்கொண்டு

மரண ஓலத்தோடு

ஊருக்குள் நுழைகிறது தலைதெறிக்க.

 - சூ.சிவராமன் 

தாயம் கேட்கும் தலைமுறை...

சோழியைக் குலுக்கிப் போட

பன்னிரண்டு விழுந்ததைப் போல

பிள்ளைகள் பெற்றாளாம் அப்பத்தா.

நோவுக்கு நான்கு சாவுக்கு மூன்று

தின்னக் கொடுத்த பின் மிஞ்சியது

அப்பாவும் அத்தைகளுமென ஐந்து உருப்படிகள்.

அத்தைகளைப் பொறுப்பாய்க் கரைசேர்த்து

நாற்பதில் திருமணம் முடித்த அப்பாவுக்கு

சோழியில் விழுந்தது நான்கு

ஐம்பதை நெருங்கும்போது

வெட்கத்தோடே தம்பியைப் பெற்றாளாம் அம்மா.

மென்பொருள் துறையொன்றில்

மனிதவளப் பிரிவில் பணிபுரியும் நான்

ஒன்பது வருடங்களாகக் காத்திருப்பதோ

ஒரே ஒரு தாயத்துக்குத்தான்.

 - சச்சின் 

vikatan

  • தொடங்கியவர்

பேஷ்... பேஷ்... ஃபேஷன் கேர்ள்ஸ்!

 

`செம கிளியர்’ ஹன்னா!

p116.jpg

ஃபேஷன் ஷோக்களில் பூனை நடை நடக்கும் அழகிகளைப் பார்த்து, அவர்கள் போட்டிருக்கும்  டிரெஸ் எல்லாம் எங்கு கிடைக்கும், என்ன விலை இருக்கும்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? யார்கிட்ட  கேட்டு தெரிஞ்சிக்கிறதுனு குழப்பமா இருந்தா, ஷாம்பெயின் லைஃப் ஸ்டைல் (www.cham pagnelifestyleblog.com) என்கிற வலைதளத்துக்குப் போகலாம். குறைந்த  விலையில காலத்துக்கு ஏற்ற மாதிரி ஃபேஷன் ஆடைகள், நகைகள், மேட்சிங் கைப்பை, ஷூ வரைக்கும் ஐடியாஸ் அள்ளித் தெளித்திருக்கிறார் இந்த பிளாக்கின் உரிமையாளர் ஹன்னா. பிளாக் வாசகர்கள்  கேட்கும் கேள்விகளுக்கும் சூப்பரான டிப்ஸ் கொடுக்கும் ஹன்னாவின் பின்னூட்டங்கள் செம கிளியர். அப்புறம் என்ன...  பட்ஜெட்டுக்கு ஏத்த டிரெஸ்ஸை செலக்ட் பண்ணலாமே!

மாடல்களை ஏங்க வைக்கும் கிறிஸ்டினா!

p116a.jpg

`ஃபேஷன் உலகுக்கு  கிறிஸ்டினா  ஒரு பெஞ்ச் மார்க்’ என்று  சிலிர்க்கிறார்கள் மாடல் உலகத்தினர். யார் இந்த கிறிஸ்டினா என்று கேட்டால் இவர்தான் அந்த மாடல்களுக் கெல்லாம் டிரெஸ் டிசைனர். சர்வதேச விருதைகளை எல்லாம்  அலேக்காக தட்டிச் செல்லும் கிறிஸ்டினாவின் ஆடைகள் ஃபியூஷன் வகையைச் சேர்ந்தவை. கிளாசிக் பகல் நேர ஆடைகளுடன் இரவு நேர ஆடைகளை இணைத்து வடிவமைப்பதே கிறிஸ்டினாவின் ஸ்டைல். ஒரு போட்டின்னு வந்துட்டா அங்க கிறிஸ்டினா டிசைனரானு தெரிஞ்சுட்டு போறது நல்லதுதானே மாடல்ஸ்?!

நம்பிக்கை நாயகி நடாலியா!

p116b.jpg

று வயதில் நடந்த விபத்து ஒன்றில் கீழே விழுந்த நடாலியா சியாமின் இளமைப் பருவம் அவரை வீல்சேருக்கு கடத்தியது. அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நடாலியாவை ஓவர் வெயிட் என ரிஜக்ட் செய்ய, மீண்டும் மனம் தளராமல் போராடி மாடலுக்கான இடத்தை தற்போது தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஃபீனிக்ஸ் பெண்மணி.  ஆஸ்திரேலியாவின் டாப் மாடல்கள் லிஸ்ட்டில் இருக்கும் இவர் `ஃபாரெவர் 21’ (FOREVER 21) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடர். இவங்க வயசு ஒண்ணும் ரொம்ப அதிகமெல்லாம் இல்ல. ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒன்லி!

ஹேருக்கு கேர்!

p116c1.jpg

ல்லி ஹெர்ஷ்பர்கர்... லாஸ் ஏஞ்சல்ஸ் கொடுத்த டாப் ஹேர் ஸ்டைலிஸ்ட்! ஹாலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் மாடல்கள், ஹீரோயின்கள், டைரக்டர்கள் அனைவருக்கும் சல்லிதான் ஹேர் ஸ்டைலிஸ்ட் சாய்ஸ். `24கே’ எனப்படும் தனது சிகை அலங்கார நிறுவனத்தால் தொழிலில் பல மைல்கற்களை எட்டியிருக்கும் சல்லி, தான் தயாரிக்கும் அனைத்து முடி சார்ந்த பொருட்களையும் பெர்சனலாக சோதனை செய்து பார்த்துவிட்டுதான் விற்பனைக்கு அனுப்புகிறாராம். ‘கேரிங் நல்லது’னு புரியவெச்சுட்டீங்களே சல்லி!

  • தொடங்கியவர்
“பறக்கும் நூடில்ஸ் பேருருவத்தை” கடவுளாக வணங்குபவர்களின் முதலாவது திருமண வைபவம்
 

“பறக்கும் நூடில்ஸ் பேருருவத்தை கட­வு­ளாக வணங்­கு­ப­வர்­களின் முத­லா­வது திரு­மண வைபவம் நியூஸிலாந்தில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. 

 

16143nz2.jpg

 

கண்ணால் பார்க்க முடி­யாத  பறக்கும் நூடில்ஸ் பேருருவம் (Flying Spaghetti Monster (FSM) அதிக மது போதையில் இருந்­த­போது அந்த பேருருவினால் இந்த பிர­பஞ்சம் படைக்­கப்­பட்­ட­தாக இந்த விநோத சம­யத்தை சார்ந்­த­வர்கள் கூறு­கின்­றனர். 

 

இச்­ச­ம­யத்­த­வர்கள் ஃபாஸ்­டா­பே­ரியன் (Pastafarian) என அழைக்­கப்­ப­டு­கின்­றனர். கடந்த வருட முற்­ப­கு­தியில் வெளிக்­கி­ளம்­பிய சமயம் இது.

 

16143nz1.jpg

 

போலந்து,  நெதர்­லாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடு­களில் “பாஸ்­டா­பே­ரியன்” ஒரு மத­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

 

இந்­நி­லையில் இச்­ச­ம­யத்தைத் தழு­வி­ய­வர்­களின் முத­லா­வது திரு­மணம் நியூஸிலாந்தில் நடை­பெற்­றுள்­ளது. கரென் மார்ட்டின் (35) எனும் ஆணும் மரி­யானா ஃபென் (33) எனும் பெண்ணும் இவ்­வாறு திரு­மணம் செய்­து­கொண்­டனர். 

 

அகாரோ துறை­மு­கத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த படகு ஒன்றில் நடை­பெற்ற இத்­தி­ரு­மண வைப­வத்தில் மண­மக்கள் புரா­தன கடற்­கொள்­ளை­யர்­களைப் போன்று ஆடை­ய­ணிந்­தி­ருந்­தனர். 

 

16143ad_203227655.jpg

 

நூடில்­ஸினால் உரு­வாக்­கப்­பட்ட திரு­மண மோதி­ரத்தை இவர்கள் பரி­மாறிக் கொண்­டனர். “பாஸ்­டாவை அவிப்­ப­தற்கு முன்னர் எப்­போதும் உப்பு சேர்த்­துக்­கொள்­வ­தாக” மண­மகன் கரென் மார்ட்டின் உறு­தி­மொழி கூறினார். 

 

16143flying_spaghetti_monster_cropped.jp

 

ஃபாஸ்­டா­பே­ரியன் சமய முறை­யி­லான உலகின் முத­லா­வது திரு­மணத்தை நடத்­து­வ­தற்கு தயா­ரா­கு­வ­தாக தாம் அறிந்ததையடுத்து அவர்களுக்கு முன்னதாக தாம் திருமணம் செய்து கொள்வதற்கு தீர்மானித்ததாக கரென் மார்ட்டினும் மரியானா ஃபென்னும் தெரி-வித்துள்ளனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Happy Birthday to Her Majesty: 2 ஆம் எலிஸபெத் அரசிக்கு இன்று 90 ஆவது பிறந்த தினம்
 
 

1615048.jpgபிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத் இன்று தனது 90 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

 

எனினும், உத்தியோகபூர்வ பிறந்த தின வைபவங்கள் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

 

 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி பிறந்தவர் எலிஸபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. தனது தந்தையான 5 ஆம் ஜோர்ஜ் மன்னர் 1952 பெப்ரவரி 6 ஆம் திகதி காலமானபின், 2 ஆம் எலிஸபெத் அரசி எனும் பெயருடன் அவர் ஆட்சி புரிந்து வருகிறார்.   1953 ஜூன் 2 ஆம் திகதி அவருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.

 

அவர் அரசியாக பதவியேற்றபோது பிரிட்டனுக்கு மாத்திரமல்லாமல் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு அவர் அரசியாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. 

 

தற்போதும் பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜமைக்கா, பார்படோஸ், பப்புவான நியூகினி, செயின்ற் வின்சென்ட், கிரனடா, பெலிஸ், அன்டிகுவா, பார்புடா, செயின்ற் கிட்ஸ் அன்ட் நேவிஸ், டுவாலு, சொலமன் தீவுகள் ஆகியவற்றின் அரசியாகவும் பொதுநலவாய அமைப்பின் தலைவியாகவும் அவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

1615046.jpg

தற்போது உலக நாடுகளை ஆளும் அரசர், அரசிகளில் மிக வயதானவர் இவர்தான். 63 வருடங்களாக பிரித்தானிய அரசியாக விளங்கும் 2 ஆம் எலிஸபெத், அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்டகாலம் ஆட்சி புரிந்தவர் என்ற சாதனைக்கும் உரியவர். 

 

ஏப்ரல் 21 ஆம் திகதி அவர் பிறந்த போதிலும் ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக பிறந்த தின கொண்டாட்டங்களை நடத்துவதற்கு வரலாற்று ரீதியான காரணம் உள்ளது.

 

1901 முதல் 1910 வரை பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி புரிந்த 7 ஆம் எட்வர்ட் மன்னர் 1841 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்தவர்.

 

ஆனால், நவம்பர் மாதம் பிரிட்டனில் கடும் குளிர்காலம் என்பதால் அவர் கோடைக்காலத்தில் உத்தியோகபூர்வ பிறந்த தின கொண்டாட்டங்களை நடத்தினார்.

 

 

அதன்பின் பிரித்தானிய ஆட்சியாளர்கள் வருடாந்தம் இரு பிறந்த தினங்களைக் கொண்டாடுவது வழக்கமாகவுள்ளது.

 

கிரேக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் பிலிப்பை 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தவர் அரசி 2 ஆம் எலிஸபெத். இத்தம்பதிக்கு முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட 4 பிள்ளைகள் உள்ளனர். 

 

4 வயதில் தனது தந்தையிடமிருந்து குதிரையொன்றை பரிசாகப் பெற்ற 2 ஆம் எலிஸபெத் அரசி இப்போதும் குதிரையோட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார். 

 

1615043.jpg

 

117 நாடுகளுக்கு விஜயம் மேற் கொண்டவர் அரசி 2 ஆம் எலிஸபெத். லண்டனிலுள்ள அவரின் பக்கிங்ஹாம் அரண்மனையை காண்பதற்கு வருடாந்தம் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். 

 

தனது ஆடையின் நிறத்திலேயே தொப்பி, குடைகளை தயாரித்து நேர்த்தியாக ஆடையணிபவர் 2 ஆம் எலிஸபெத் அரசி. எனினும், அவர் தலையில் ஸ்கார்வ் அணிந்திருந்த நிலையில் அவரை அடையாளம் காணத் தவறியவர்களும் உள்ளனர். 

 

பிரித்தானிய அரச குடும்பத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான ரிச்சர்ட் கிறிபின் எழுதியுள்ள நூலில் இது தொடர்பாக சுவாரஷ்ய விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 

 

1615045.jpg

ஒரு தடவை ஸ்கொட்லாந் தின் பல்மோரல் அரண் மனைக்கு அருகில் 2ஆம் எலிஸபெத் அரசியார் நடந்து சென்றபோது அவரை அடையாளம் காணத் தவறிய சுற்றுலா பயணியொருவர், 'நீங்கள் இங்கு அருகிலா வசிக்கிறீர்கள்' என அரசியிடம் கேட்டாராம். 'எனக்கு அருகில் வீடொன்று உள்ளது' என அரசி பதிலளித்தார்.

 

16150_47.jpgஅதன்பின், 'நீங்கள் எப்போதாவது அரசியை சந்தித்துள்ளீர்களா?' என அச்சுற்றுலா பயணி கேட்டார். 

 

அப்போது, தனது சிரிப்பை மறைத்துக்கொண்டு, 'இல்லை, நான் சந்தித்ததில்லை.

 

ஆனால், இவர் சந்தித்துள்ளார்' எனக் கூறி தனக்கு அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினாராம் 2 ஆம் எலிஸபெத் அரசியார். 

 

உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக, தமது உணவை பரிசோதிப்பதற்கு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளனர்.

 

ஆனால், 2 ஆம் எலிஸபெத் அரசியார் தனது நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கவரும் படையினரின் நலன்களில் அதிக அக்கறை செலுத்துபவர் எனவும்  அப்படையினருக்கு சிறந்த உணவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி அவர்களின் உணவை அரசியார் சுவை பார்ப்பார் எனவும் ரிச்சர்ட் கிறிபின் தெரிவித்துள்ளார்.

 

உணவு சிறந்ததாக இல்லையெனில் அவற்றை திருப்பி அனுப்ப உத்தரவிடுவார் எனவும் கிறிபின் தெரிவித்துள்ளார். 

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 21: 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' தந்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று....

13051732_1120017704723685_55937185269006

5 minutes ago, நவீனன் said:

ஏப்ரல் 21: 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' தந்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று....

13051732_1120017704723685_55937185269006

மாந்தோப்பில் மணம் 

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக்
கோமளவல்லியைக் கண்டு விட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள்
தூய்மை படைத்த உடம்பினையும் - பசுந் 
தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு
காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன்
காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.

முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு
முழுமதி போல, நனைத்திருக்கும் - தன் 
துகிலினைப்பற்றித் துறைக்கு வந்தாள்! - குப்பன்
சோர்ந்துவிட்டா னந்தக் காம னம்பால்! - நாம்
புகழ்வதுண்டோ குப்பன் உள்ளநிலை! - துகில்
பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன்
'சகலமும் நீயடி மாதரசி - என் 
சாக்காட்டை நீக்கிடவேண்டும்' என்றான்.

கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன்
கட்டுடல் மீதிலும் தோளினும் - சென்று
மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த
விண்ணப்பம் ஒப்பினள் - புன்னகையால் 

சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள்
சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம்
முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள்
முன்பு நடந்திடப் பின் தொடர்ந்தான் - பின்பு
சிற்றிட வாய்திறந்தாள் அதான் - இன்பத் 
தேனின் பெருக்கன்று; செந்தமிழே?
'சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என்
தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.

காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச் 
சோலையி லேஇளமா மரங்கள் - அடர்
தோப்பினை நோக்கி வருக!' என்றாள்.

நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை
நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த 
மொய்குழல் 'யாதுன்றன் எண்ண' மென்றாள்.

'உன்னை எனக்குக் கொடுத்துவிடு! - நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை' - இந்தக்
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்; 
'சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ்
சீ மான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில்
அன்னது நான் செய்த குற்றமன்று! - நான்
அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!

'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' - என்று 
வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன்! - தன்னை
இணங்கென்று சொன்னது - காதலுள்ளம் - 'தள்'
என்றனமூட வழக்க மெலாம் - தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்விட்டான்! - பின் 
கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே - சில
கண்ணற்ற மூட உறவினரும்

வீதியிற் பற்பல வீணர்களும் வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன் 
தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! - நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம்
கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்! 

கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் - !
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர் 
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

காதல் அடைதல் உயிரியற்கை! - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி 
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை
நீட்டடி! சத்தியம்! நான் மணப்பேன்! - அடி
கோதை தொடங்கடி! என்று சொன்னான் - இன்பம்
கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!

 

http://keetru.com/rebel/bharathithasan/mandhopil_manam.php

  • தொடங்கியவர்

 

உயிர் பிழைத்த திமிங்கலங்கள்
===============================
கிழக்கு ரஷ்ய கடற்கரையில் பனிக் கட்டிகளுக்கு இடையே திமிங்கலங்கள் சிக்கின.

கயிறுகளையும் கம்புகளையும் பயன்படுத்திய நிபுணர்கள் திமிங்கலங்களை விடுவித்தனர்.

உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், மீட்பு குழுவினர் நீரில் இறங்கியுள்ளனர்.

படம்: ரஷ்யா அவசரநிலை அமைச்சகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.