Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p20a.jpg

dot1.jpg அப்பாவாகியிருக்கிறார் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். கடந்த இரண்டு ஆண்டுகளாக கெய்லுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தாஷாவுக்கு தெறி பேபி பிறந்திருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஐபிஎல்-க்கு பிரேக்விட்டு ஜமைக்கா பறந்தார் கெய்ல். ஆனால், `என்னுடைய அழகான மகள் `பிளஷ்'ஐ இந்த உலகுக்கு வரவேற் கிறேன்' என ஸ்டேட்டஸ் தட்டி, மீண்டும் பழைய கதையைக் கிளறியிருக்கிறார் கெய்ல். பிக்பேஷ் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய டி.வி வர்ணனையாளரை `மேட்ச் முடிந்ததும் பார்ட்டிக்குப் போகலாமா... டோன்ட் பிளஷ்(வெட்கம்) பேபி' என கெய்ல் சொன்னது மிகப் பெரிய பிரச்னை ஆனது. அப்படிச் சொன்னதற்காக கெய்ல் பிறகு மன்னிப்பும் கேட்டார். இப்போது மீண்டும் மகளுக்கு `பிளஷ்' என அவர் பெயரிட்டிருப்பதாகச் சொல்லியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

p20b.jpg

dot1.jpg செஞ்சுரி அடிக்கப்போகிறார் பாலகிருஷ்ணா.  இவரது 100-வது படத்தை இயக்கப்போவது தமிழில் `வானம்' படத்தை இயக்கிய கிரிஷ். `கௌதமபுத்ர சட்டக்கர்னி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், கி.மு-வில் ஆந்திராவை ஆண்ட சட்டக்கர்னி ராஜா பற்றியது. படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி நயன்தாரா. அம்மாவாக ஹேமமாலினி நடிக்கிறார். `இது ஆஸ்கர் விருதுக்குத் தகுதிபெறும் படமாக இருக்கும்' என சீரியஸ் முகம் காட்டுகிறார் பாலகிருஷ்ணா!

p20c.jpg

dot1.jpg `காதல் கிரிக்கெட்டு... விழுந்துடுச்சு விக்கெட்டு' என ஒரே ரொமான்ஸில் இருக்கிறது மிட்செல் ஸ்டார்க் - அலீஸா ஹீலி ஜோடி. ஆஸ்திரேலியாவின் வேகப்புயலான மிட்செல் ஸ்டார்க்குக்கும், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலீஸா ஹீலிக்கும் காதல் திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது. ஸ்டார்க்கும் அலீஸாவும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்; ஒரே அணியில் கிரிக்கெட் விளையாடியவர்கள். ‘கிரிக்கெட்தான் எங்களை இணைத்தது. இருவருமே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்பதால், எங்களுக்குள் நல்ல புரிதல்' என்கிறார் அலீஸா ஹீலி. அலீஸா, ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலியின் அண்ணன் மகள்!

p20e.jpg

dot1.jpg `உத்தா பஞ்சாப்' படத்தின் ட்ரெய்லர்தான் கடந்தவார சோஷியல் மீடியா வைரல். அபிஷேக் சவ்பே இயக்கத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர், அலியா பட் என பெரிய ஸ்டார் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம், போதைமருந்து கடத்தல் பற்றியது. போதைக்கு அடிமையான ராக் இசைக் கலைஞனாக ஷாஹித் கபூரும், போதை கடத்தல் கும்பலிடம் சிக்கும் இளம் பெண்ணாக அலியா பட்டும், மருத்துவராக கரீனா கபூரும் நடித்திருக் கிறார்கள். எல்லா படங்களிலுமே அழகுப் பெண்ணாக வரும் அலியா பட், இதில் அழுக்குப் பெண்ணாக நடித்திருக்கிறார். `என் சினிமா வாழ்க்கையைத் திருப்பி அமைக்கும் படமாக இது இருக்கும்' என்று நெகிழ்கிறார்!

p20f.jpg

dot1.jpg பிரதமர் மோடியின் மெழுகுச்சிலை ரெடி. மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைப்பதற்காகச் செய்யப்பட்ட நரேந்திர மோடியின் சிலைக்கு ரியலைவிட கலரும் இளமையும் அதிகம். `பிரம்மா செய்த வேலையை இப்போது இந்தக் கலைஞர்கள் செய்கிறார்கள். என்னை நானே பார்ப்பதுபோல் அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது’ என்று தன் மெழுகுச்சிலையைப் பார்த்து வியந்திருக்கிறார் மோடி. மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் காந்தி, ஒபாமா, சர்ச்சில், கேமரூன் ஆகிய உலகத் தலைவர்களின் சிலைகளுக்கு அருகே வைக்கப்பட இருக்கிறது மோடியின் சிலை!

p20g.jpg

dot1.jpgத்ரிஷா இப்போ சூப்பர் சிங்கர். `நாயகி' படத்தில் டெரர் பேயாக நடித்துவரும் த்ரிஷா, இந்தப் படத்துக்காக பாடகியாகவும் அறிமுகமாகிறார். ஆங்கிலத்தில் ஆரம்பித்து தமிழுக்குத் தாவும் இந்தப் பாடலின் தமிழ் வரிகளையும் ஆங்கில உச்சரிப்பிலேயே த்ரிஷா பாட `ஆசம்... ஆசம்’ என யுடியூபில் வியூஸ் குவிகின்றன.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13119807_1033988579983169_48201808910786

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராகப் பிரகாசித்து வரும் ஜேம்ஸ் ஃபோல்க்னரின் பிறந்தநாள்
Happy Birthday James Faulkner

  • தொடங்கியவர்

13062096_1186237514720311_78742248198107

  • தொடங்கியவர்

13096096_1033977666650927_50025085951718

 
 
டென்னிஸ் உலகின் முன்னைய சூப்பர் ஸ்டார் அன்ட்ரே அகாசியின் பிறந்த நாள் இன்று.

அமெரிக்க டென்னிஸ் வீரரான அகாசி, 8 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 1996 இல் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டிக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.
  • தொடங்கியவர்

ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது

  • தொடங்கியவர்

பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

 

tian-tan-buddha.jpg

புத்தர் ஒருமுறை ஜப்பானில் உள்ள ஒரு ஆலயத்துக்குப் போயிருந்தார். அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் மேலாடை கிழிந்திருந்தது. அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர், அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார் அந்த புத்த பிக்கு.

சில மாதங்கள் கழித்து, மீண்டும் புத்தர் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்த போது, அந்த புத்த பிக்குவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, முன்பு அணிந்திருந்த மேலாடையை என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்த புத்த பிக்கு, ‘என் மெத்தைக்கு விரிப்பாக இருக்கிறது’ என்றார்.

முன்பிருந்த மெத்தை விரிப்பு?
‘என் தலையணைக்கு உறையாக இருக்கிறது’

அப்போது முன்பிருந்த தலையணை உறை?
’என் வாசல் மிதியாக இருக்கிறது’

முன்பிருந்த வாசல் மிதி?
’என் விளக்குக்குத் திரியாக இருக்கிறது’ என்றார்

புத்தர், அந்த புத்த பிக்குவின் பதில்களைக் கேட்டு வியந்து போனார்.

பொருட்களை ரெட்யூஸ் (Reduce) , ரீயூஸ் (Reuse), ரீசைக்கிள் (Recycle) ஆகிய மூன்று வகையிலும் பயன்படுத்திய பிறகே, நாம் அதைக் குப்பையாகக் கருத வேண்டும். இப்படியான வாழ்க்கை முறையை வாழ்வது சரியான வழிமுறை. நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் குப்பையல்ல. குப்பை என்ற நினைக்கப்படும் ஒரு பொருள், அழகு பொருளாக மாற்றப்பட்டு நம் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும்.

இன்றைக்கு நமக்கு சவாலாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை எப்படி குறைப்பது? மறுசுழற்சி செய்வது? என தெரிந்து கொள்ளலாம்.

 3bb107d3ce7a4b967239fcdeb973d2f5.jpg

 9fd126a5a5edae9b6718586b4873c1b8.jpg

 

 

 

 

 

 

 

 16-amazing-plastic-bottle-reuse-apieceof

 

 

 

 

 

 

 

 

bottles-2.jpg279f681485e0e46d10038e90af096099.jpg

maxresdefault1.jpgBeer-Planters-550x504.jpg

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 30: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்கிற உலக சாதனையை தன்வசம் வைத்திருக்கும் ரோஹித் சர்மாவின் பிறந்த தினம் இன்று.. 

13138760_1126062407452548_21969046767242

 

‪#‎HappyBirthdayRohit‬

13131415_1034656359916391_11892666507953

இந்திய அணியின்
துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா
இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காலம் சொல்லும் போர்க் கதை!

முதல் உலகப் போர், நம் கண் முன்பு நடந்தால் எப்படி இருக்கும்? நியூஸிலாந்தின் தலைநகர், வெலிங்டன் மாகாணத்தில் இருக்கும் ‘டெ பாபா’ (Te papa) மியூசியத்தில், இதைக் காணலாம்.

முதலாம் உலகப் போரின்போது, துருக்கியின் ‘கலிப்பொலி’ என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் ஜனவரி 9, 1916 வரை நடைபெற்ற போர்க் காட்சிகளை, இந்த மியூசியத்தில் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

p52a.jpg

ஆஸ்திரேலியா–நியூசிலாந்து நாட்டுப் படைகளின் கூட்டாக, 1915-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு படையின் பெயர், அன்ஸாக். இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு, ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ம் தேதி, அன்ஸாக் தினம்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், டிவி நிகழ்ச்சிகளில் செய்தி வாசிப்பவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் சிவப்பு நிற ‘பாப்பி’ என்ற பூவை, சட்டையிலோ, தொப்பியிலோ குத்திக்கொண்டு வருவார்கள். இதன் இன்னொரு வடிவமே, இந்த மியூசியம்.

புகழ்பெற்ற ‘தி லார்ட் ஆஃப் த ரிங்ஸ்  படத்தின் இயக்குநர் பீட்டர் ஜாக்சன், உலகின் தலைசிறந்த ஹாலிவுட் மேக்-அப் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட் கம்பெனியான விடா வொர்க் ஷாப் கலை இயக்குநர், ரிச்சர்டு  டெய்லர் கூட்டணியில் உருவான இந்த மியூசியம், வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.

இந்த ஆண்டு, கலிப்பொலி யுத்தத்தின் நூற்றாண்டு நிறைவுக்காக, பிரத்யேக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்தவர், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்.

இந்த மியூசியத்தில் நுழைந்ததும், போர் அறிவிப்புப் பிரசார போஸ்டர்கள் சூழ,  பெல்ஜியத்தில் ஒரு கிராமத்தின் போர்ப் பகுதிக்கு நுழையும் உணர்வு உண்டாகும். அங்கே ஆரம்பிக்கிறது, முதல் உலகப் போரின் பயணம். கொல்லப்பட்ட வீரர்கள், அழிக்கப்பட்ட ஆயுதங்கள், பயன்படுத்தப் பட்ட கருவிகள்... என அனைத்தையும் தத்ரூபமாகக் காணலாம்.

p53a.jpg

போரின் பிரமாண்டத்தைக் குறிக்கவே, போர்க் காட்சிகளை மிகப் பெரிய சிலைகளாக வடித்து இருக்கிறார்கள். இவை, 3D பிரிண்டிங், சிலிகான் காஸ்டிங் முறையில் செய்யப்பட்டவை. ஹாலிவுட் படங்களில், ஸ்பெஷல் எஃபெக்ட் ஒப்பனைக்காக உபயோகப்படுத்தும் முறையே இது.

இதன் மேக்கிங் மற்றும் சிறப்பு அம்சங்களை விவரிக்கும் வீடியோக்களும் உள்ளன.

முதல் உலகப் போர், அவசியம் இல்லாத ஒன்று. அதனால், எவ்வளவு உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் உண்டானது என்பதைப் பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாகப் பதியவைக்கிறது.

இதன் உருவாக்கத்தில் பங்காற்றிய பீட்டர் ஜாக்சன், ‘‘இந்தப் போர் மட்டும் அல்ல, உலகில் இன்று வரை நடக்கும் பல்வேறு போர்களும், தேவையில்லாத போர்களே. இதனால், சாதிக்கப்போவது எதுவும் இல்லை. அன்பு மட்டுமே மனித வாழ்வை மேம்படுத்தும். எனவே, கோபம், வெறுப்பு, ஆணவம் ஆகிய குணங்களை விட்டு, அன்பு செலுத்துங்கள். இந்த மியூசியத்துக்கு ஒரு முறை வருபவர்கள், இதை நன்கு புரிந்துகொள்வார்கள்” என்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

13086660_1034650923250268_88001882946951

இந்திரா (1995) திரைப்படத்தில் "நிலா காய்கிறது" பாடல் மூலம்
இசையுலகில் இணைந்த பாடகி ஹரிணிக்கு இன்று பிறந்த நாள்

தமிழ் சினிமாவை அப்போது பல அண்டுகளாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்த மலையாள, ஹிந்தி பாடகிகளுக்கிடையில் சத்தில்லாமல் தமிழ் சினிமாவில் தன் இனிய குரலினால் பாடி பட்டொலி வீசி தமிழுக்கு பெருமை சேர்த்தவர்.

தமிழ் , தெலுங்கு கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடி நிரந்தர இடத்தைப்பிடித்தவர்.

6 hours ago, நவீனன் said:

புத்தர் ஒருமுறை ஜப்பானில் உள்ள ஒரு ஆலயத்துக்குப் போயிருந்தார். அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் மேலாடை கிழிந்திருந்தது. அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர், அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார் அந்த புத்த பிக்கு.

சொல்ல வந்த விடயம் நன்று. ஆனால் என்னிடம் இரு கேள்விகள் 

1: புத்தர் ஜப்பானுக்கு போனாரா?
2: அப்படி போயிருந்தாலும் அங்கு பிக்குகள் இருந்திருப்பார்களா?

scratching head smiley

 

1 hour ago, நவீனன் said:

இந்திரா (1995) திரைப்படத்தில் "நிலா காய்கிறது" பாடல் மூலம்
இசையுலகில் இணைந்த பாடகி ஹரிணிக்கு இன்று பிறந்த நாள்

 

  • தொடங்கியவர்

ஏப்ரல் 30: இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே பிறந்த தின சிறப்பு பகிர்வு..

 

தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார் . பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.

மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார் . படங்கள் பெரும்பாலும் மவுனம் தான் ;இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது .

dadasakip3.jpg

சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின் ,இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார் ; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார். இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை . படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள் . மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது .பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள் . இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார் .

இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது ; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள் .ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார் . ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான் . நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார் .

பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார் ;பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும். எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார் . தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர் ;பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார் .

இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார் .அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார் .கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார் . பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன ;வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார் .வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார் .அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம் .அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது .அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது .

சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் இவ்விருதை தமிழகத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்ட அவரின் பிறந்த தினம் இன்று.

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

p36a.jpg

dot11.jpg  ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பிரசாரங்களில் எல்லோரும் இயங்க... வாட்ஸ்அப் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க-வின் வானதி ஸ்ரீனிவாசன். ‘காபி வித் வானதி’, `சாட் வித் வானதி’, `உங்களுடன் வானதி’ என ஆன்லைன், ஆஃப்லைன் பிரசாரங்களின் அனைத்து புகைப்படங்களையும் செய்தியாளர்களுக்கும் சோஷியல் மீடியா பிரபலங்களுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்புகிறார் வானதி! இவங்க பா.ஜ.க-வின் அன்புச் சகோதரி!

p36b.jpg

dot11.jpg சூரியன் சுட்டெரிப்பதால் ஒரு மாவட்டத்துக்கு ஏழு, எட்டு இடங்களில் பேசவேண்டி இருந்தால், ஒவ்வொரு இடத்திலும் 15 நிமிடங்களில் பேச்சை முடித்துவிடுகிறார் ஸ்டாலின். இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார் எனத் தொண்டர்கள் உட்காரு வதற்குள், `நன்றி... வணக்கம்’ என்று ஸ்டாலின் சொல்லி விடுவதால் உடன்பிறப்புகளுக்கு செம குஷி. ஸ்டாலின் வாகனத்தைத் தொடர்ந்துவரும் அவரது மனைவி துர்கா, ஜூஸ், இளநீர், சாப்பாடு என அவ்வப்போது பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறார் கணவரை. சிம்ப்ளி பப்ளி!

p36c.jpg

dot11.jpg  குன்னம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆளூர் ஷாநவாஸ். ‘அ.தி.மு.க., தி.மு.க வேட்பாளர்கள் போல நான் வசதியானவன் கிடையாது. அதனால் தேர்தல் செலவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் பாணியில் மக்களிடமே உண்டியல் ஏந்தினேன். இரண்டே நாட்களில் 3 லட்ச ரூபாய் சேர்ந்திருக்கிறது. என்னைப் போன்ற எளிய வேட்பாளர்களை மக்கள் தங்களில் ஒருவனாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்’ எனப் பூரிக்கிறார். நீங்கதான் பாஸ் `மக்கள்' வேட்பாளர்!

p36d.jpg

dot11.jpg  தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மருத்துவர்களைச் சந்தித்தார் அன்புமணி. கூட்டத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததோடு, தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவெளி இல்லாமல் பேசியதில் மருத்துவர்கள் பலர் அப்செட். பேச்சின் இடையிடையே ஹார்வார்டு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழங்களில் தான் பேசியது பற்றியெல்லாம் அன்புமணி சொல்லிக்கொண்டே போக, மூன்று முறை அன்புமணியின் பி.ஏ குறிக்கிட்டு, நேரம் அதிகமாவதைச் சொன்னார். ஒரு கட்டத்தில் பி.ஏ-விடம் கடுப்பான அன்புமணி, ‘நேரம் ஆனா நீங்க போய்ச் சாப்பிடுங்க. நான் பேசுறதைக் கேட்க இங்கே எல்லோரும் ஆர்வமா இருக்காங்க' எனச் சொல்ல, கூட்டத்தில் சைலன்ட் மோடில் சிரிப்பலைகள். நானெல்லாம் எங்கே... எப்படி இருக்கவேண்டியவன் தெரியுமா?

p36e.jpg

dot11.jpg  `உலகின் ஒப்புயர்வற்ற இரும்புப் பெண்மணியாக, சிறந்த தலைவியாகத் திகழும் தங்களின் தலைமையில் நானும் இணைய விரும்புகிறேன்' என மார்ச் இறுதியிலேயே முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் அனுப்பினார் நடிகை நமீதா. ஆனால், எதிர்த்தரப்பில் சிக்னல் இல்லை. இப்போது பிரசாரக் கூட்டங்களில் போதுமான ரெஸ்பான்ஸ் இல்லை என உளவுத்துறை ரிப்போர்ட் வர, நமீதாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து, திருச்சி கூட்டத்தில் வைத்து கட்சியில் சேர்த்துக்கொண்டார் ஜெ.  `சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்து என்னை வாழவைக்கிறது தமிழ்நாடு. நம்மை வாழவைக்கிற ஊருக்கு, நானும் ஏதாவது செய்யணும் இல்லையா?' என்கிறார் அரசியல்வாதி நமீதா. .தி.மு.க மச்சான்ஸுக்கு செம குஷிதான்!

p36f.jpg

dot11.jpg  85 சதவிகித வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்திருக்கிறது அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 67 சதவிகித வாக்குகளே பதிவான நிலையில் இந்த முறை 18 சதவிகிதம் கூடியிருக்கிறது.   `இது எங்களுக்குத்தான் சாதகம்' என பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே சொல்லிக்கொள்கின்றன.  அசாமில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் 90 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குப்பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. `மக்கள் சக்தி'னா சும்மாவா?

p36g.jpg

dot11.jpg  மு.க.ஸ்டாலின் மாநிலத்தைச் சுற்றிவர, மு.க.அழகிரி முறுக்குக்கம்பிப் பேட்டிகளைத் தட்ட... தந்தையின் வெற்றிக்காக திருவாரூர் தொகுதியை வலம்வருகிறார் மு.க.தமிழரசு. நடந்தும் மாட்டு வண்டியிலும் இவர் செய்யும் பிரசாரத்தில் அவ்வப்போது தமிழரசுவின் மகனும் நடிகருமான அருள்நிதியும் கலந்துகொள்கிறார். நல்லதோர் குடும்பம்!

p36h.jpg

dot11.jpg  காங்கிரஸ், தனது இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தி.மு.க தலைவர் கருணாநிதியை வீட்டுக்குச் சென்று சந்தித்தார் குஷ்பு. தி.மு.க-வைவிட்டு விலகிய பிறகு கருணாநிதியின் கோபாலபுர இல்லத்துக்கு குஷ்புவின் முதல் விசிட் இது. 30 நிமிட சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த குஷ்பு, வழக்கம்போல `மரியாதை நிமித்தமான சந்திப்பு' எனச் சொன்னார். டெல்லி காங்கிரஸ் தலைமை, `தேர்தலில் போட்டியிட வேண்டாம்’ எனச் சொன்னதில் குஷ்பு அப்செட்டாம். அதனால்தான் இந்தச் சந்திப்பாம். கூடையில் என்ன பூ பல்பு!

p36j.jpg

dot11.jpg  பிரசாரக் கூட்டங்களில் ஏதாவது எடக்குமடக்காகப் பேசி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் வைகோ. `பா.ஜ.க மந்திரிகள் பலமுறை அழைத்தும் அவர்களுடன் விஜயகாந்த் போகவில்லை. அவர் யோக்கியவாதி. கொள்ளை அடிக்கும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை. `கூட்டங்களில் விஜயகாந்த் ஒழுங்காகப் பேசுவது கிடையாது’ எனச் சொல்கிறார்கள். விஜயகாந்த் மனதில்பட்டதை பட்டிக்காட்டான் மாதிரி பேசி, முரட்டு அடி அடிக்கிறார்' என வைகோ சொல்ல, இதற்கு கைதட்டலாமா, வேண்டாமா எனக் குழப்பத்தில் நின்றிருக்கிறது கூட்டம்! இவர் குழம்புறாரா... குழப்புறாரா?

p36k.jpg

dot11.jpg `ஸ்டாலின் எங்கள் கட்சிக்காரர்களுடன் பேசும் அனைத்து விவரங்களையும், கட்சியினர் எங்களுக்கு உடனுக்குடன் தெரிவித்துவருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால், விஜயகாந்த் வீட்டு வாசலில் ஸ்டாலின் நிற்கவேண்டி வரலாம். அதனால் மலிவான அரசியல் தேவையில்லை. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இரும்புக்கோட்டை தே.மு.தி.க' என பிரசாரத்தின்போது பிரேமலதா சொல்ல, `ஜெயிக்க மாட்டோம் என இவரே சொல்கிறாரே' என மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அப்செட். அட்டகாச கேப்டன்... அதிரடி அண்ணி!

vikatan

  • தொடங்கியவர்
6 hours ago, ஜீவன் சிவா said:

சொல்ல வந்த விடயம் நன்று. ஆனால் என்னிடம் இரு கேள்விகள் 

1: புத்தர் ஜப்பானுக்கு போனாரா?
2: அப்படி போயிருந்தாலும் அங்கு பிக்குகள் இருந்திருப்பார்களா?

scratching head smiley

 

 

நாங்கள் நோர்வே, ஜெர்மனி என்று வந்த மாதிரி புத்தரும் ஜப்பான் போனாரோ யாருக்கு தெரியும்..tw_tounge:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் காலத்தில் ஜப்பானுக்கு என்ன பெயர் இருந்ததோ தெரியாது....! அங்கு ஜென் என்றுதான் அழைப்பார்கள், அதுதான் அவர்கள் தலை வணங்குமளவு  மேன் லியாக  இருக்கின்றார்கள். பிக்குகள் ஊக்குகளாக இருந்தால் ஒரே குத்தலும் குடைச்சலும்தான்....!! tw_blush:

  • தொடங்கியவர்
5 minutes ago, suvy said:

புத்தர் காலத்தில் ஜப்பானுக்கு என்ன பெயர் இருந்ததோ தெரியாது....! அங்கு ஜென் என்றுதான் அழைப்பார்கள், அதுதான் அவர்கள் தலை வணங்குமளவு  மேன் லியாக  இருக்கின்றார்கள். பிக்குகள் ஊக்குகளாக இருந்தால் ஒரே குத்தலும் குடைச்சலும்தான்....!! tw_blush:

சரி சுவி அண்ணா எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கிறீர்கள்...tw_blush: அங்கால ஒரு திரியில் இந்துமதத்தில் ஏதோ வழி இருக்கு என்று புங்கையர் சொல்லி இருக்கிறார். நீங்கள் இன்னும் அதை காணவில்லையா..:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு நவீனன், நான் இன்னும் காணவில்லை ....!

3 minutes ago, நவீனன் said:

சரி சுவி அண்ணா எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கிறீர்கள்...tw_blush: அங்கால ஒரு திரியில் இந்துமதத்தில் ஏதோ வழி இருக்கு என்று புங்கையர் சொல்லி இருக்கிறார். நீங்கள் இன்னும் அதை காணவில்லையா..:grin:

 

 

  • தொடங்கியவர்
2 minutes ago, suvy said:

எங்கு நவீனன், நான் இன்னும் காணவில்லை ....!

:grin:

 

ஜீவன் வேற தனக்கு முன்பே தெரியாது என்று கவலை...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

:grin:

 

ஜீவன் வேற தனக்கு முன்பே தெரியாது என்று கவலை...:grin:

நான் இதை முன்பே பார்த்தேன். ஆனாலும் இந்த விளையாட்டு வேண்டாம் என்றுதான் எழுதவில்லை. கவனாவத்தைக்கு  மூன்டு வயதிலேயே சின்னையாவின் தோளில் ஏறி இருந்து போனது இப்பவும் நல்ல ஞாபகம்...! 

  • தொடங்கியவர்

ஏன் 13ம் திகதி வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமில்லாத நாளாகக் கருதப்படுகிறது?

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 01
 
 

article_1430458062-Premadasa1.jpg1707: இங்கிலாந்தையும் ஸ்கொட்லாந்தையும் இணைத்து பெரிய பிரித்தானிய ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டது.

1884: அமெரிக்காவில் 8 மணித்தியால வேலை நாள் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

1886: அமெரிக்காவில் 8 மணித்தியால வேலை நாள் கோரி, பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

1940: இரண்டாவது உலக யுத்தம் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்துச் செய்யப்பட்டது.

1945: ஜேர்மன் அதிபர் அடோல்வ் ஹிட்லர் இறந்தமை குறித்து ஜேர்மன் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

1948: கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) உருவாக்கப்பட்டது.

1956: போலிய தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டது.

1961: கியூப பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ தேர்தல்களை ரத்துச்செய்வதாக அறிவித்தார்.

1993: இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ, கொழும்பில் மே தின ஊர்வலத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.

1994: 3 தடவை போர்மியூலா வன் உலக சம்பியன் பட்டம் வென்ற பிரேஸில் வீரர் அயர்ட்டன் சென்னா இத்தாலியில் நடைபெற்ற போட்டியொன்றின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

2003: ஈராக்கில் பாரிய இராணுவ தாக்குதல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்தார்.

2009: சுவீடனில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2011: அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13061920_713900995379112_284738887855328

13095929_10154577300589578_5262316848023

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13131294_1035214229860604_95081146108783

நடிப்பிற்கு அப்பாற்ப்பட்ட உழைப்பினாலும் தன்னுடைய தீராத தன்னம்பிக்கையினாலும்
வெகுஜன மக்களை மட்டுமல்லாது திரையுலக கலைஞர்களையும் ரசிகர்களாக மாற்றியவர்.

அஜித்!
ஒரு நடிகர் என்றதை கடந்து
தன்னுடைய தனிமனித அந்தஸ்தையும் மீறி ஒரு நல்ல குடிமகன் என்ற பெயரைப் பெற்றவர்.
தன்னுடைய தொழில் அடையாளமாக கிடைத்துள்ள இரசிகர்களை சுயநலமாக பயன்படுத்தாமல் முன்னேறிச் செல்லும் பெருமைக்குரியவர்
தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இளைஞர்களுக்கு உந்துதலா இருக்கும் ஒரு வெற்றி நாயகன். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உதாரணமாக தன்னைத்தானே செதுக்கி கொண்டவர்.

 

13095963_1187215021289227_18915010471616

 

 

Happy Birthday தல
 

தமிழ் திரை­யு­லகின் முக்­கி­ய­மா­ன­வர்கள் பட்­டி­யலில் இருப்­பவர் அஜித். பஸ்ஸில் கண்­டக்­ட­ராக இருந்து  நடி­க­ரான ரஜி­னியை அடுத்து தனது சொந்த முயற்­சியில் வெற்­றியும் தோல்­வி­க­ளையும் ஒரு சேர பார்த்­தவர் அஜித்குமார். ‘எனது விருப்­ப­த்திற்­காக எனது ரசி­கர்­களை பயன்­ப­டுத்த மாட்டேன்’ என தனது நற்­பணி மன்­றங்­களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்­பவர் தல அஜித்.

 

16335billa-600.jpg


இன்று மே முதலாம் திகதி தனது 45 ஆவது பிறந்­த­நாளை கொண்­டா­டு­கிறார் அஜித். அவரின் சினிமா பயணம் பற்­றிய ஒரு பார்வை இது:


 2013 ஆம் ஆண்டு ‘ஆரம்பம்’  ரிலீஸ். அதி­காலைக் காட்சி முடிந்து ஆர­வா­ர­மாக ரசி­கர்கள் வெளி­வ­ரு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு இடையே அந்த பிர­ப­ல­மான தயா­ரிப்­பா­ளரும்  இருந்தார். வெளியே வந்­தவர் தியேட்டர் முன்­பாக வைக்­கப்­பட்­டி­ருந்த வானு­யர  கட்­அ­வுட்­டுக்கு சல்யூட் வைத்தார். உணர்ச்­சி­வ­சப்­பட்டு சத்­த­மா­கவே சொன்னார்.


“நீ வெறும் நடிகன் இல்­லேய்யா. இண்­டஸ்ட்­ரி­யோட ெபாடிகார்ட். காணாமப் போன  தயா­ரிப்­பா­ளனைக் கண்­டு­பி­டிச்சி, மறு­ப­டியும் லைஃப் கொடுத்தே பாரு. நீதான்யா  ரியல் மாஸ்.அஜித்தின் மாஸ் இமேஜ் என்­பது வெறு­மனே திரையில் அவர்  காட்டும் திற­மையில் மட்­டு­மல்ல. திரைக்கு வெளி­யே­யான அவ­ரது நட­வ­டிக்­கை­க­ளிலும்  உரு­வா­னது.


பத்­தொன்­பது வயதில் ‘என் வீடு என் கணவர்’  திரைப்­ப­டத்தில் பள்ளி மாண­வ­ராக அட்­மாஸ்ஃ­பி­ய­ருக்கு வந்து போன­போது, அவரே  நினைத்­தி­ருக்க மாட்டார், மிகப்­பெ­ரிய இடத்தை இதே தமிழ் சினி­மாவில் தான்  பெறப்­போ­வதை.பள்­ளிப்­ப­டிப்பை பாதியில் விட்ட அஜித்­கு­மா­ருக்கு மோட்டார்  பைக்கின் ‘விர்ரூம் விர்ரூம்’ சப்தம் மீது அத்­தனை ஈர்ப்பு. ஆரம்­பத்தில்  மெக்­கானிக், பிறகு தொழில்­முறை பைக் பந்­த­யக்­காரர் என்று தன் இலட்­சி­யத்தை  நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென சினிமா குறுக்­கிட்­டது.

 

16335Ajith-in-Mankatha.jpg


எம்.ஜி.ஆர், அமிதாப், ரஜினி, கமல் என்று அவ­ரது ஆதர்­ச­மான ஹீரோக்­களின் துறை­யி­லேயே  பணி­பு­ரிய வாய்ப்பு என்­கி­ற­போது, அதை மறுக்க மன­மில்லை. துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக அவர்  ஹீரோ­வாக ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டி­ருந்த தெலுங்குப் படத்தின் இயக்­குநர் திடீ­ரென கால­மாக, அஜித்தின் திரைப்­பி­ர­வேசம் தள்ளிப் போனது. தொடர்ச்­சி­யாக  விளம்­ப­ரங்­களில் ெமாட­லாகப் பணி­பு­ரிந்து கொண்­டி­ருந்த நிலையில் 1992 இல் தன்­னு­டைய  21ஆவது வயதில் ‘பிரேம புஸ்­தகம்’ என்­கிற தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.


16335ajith-400.jpgஅஜித், முதலும் கடை­சி­யு­மாக நடித்த தெலுங்­குப்­படம் அது மட்­டுமே. ஆனால், அவர் இரண்­டா­வ­தாக நடித்த தமிழ்ப்­ப­ட­மான ‘அம­ரா­வ­தி’தான் முதலில் வெளி­யா­னது ஆனது. இப்­ப­டத்தில் அவர் சொந்­தக்­கு­ரலில் பேச­வில்லை. அவ­ருக்கு குரல்  கொடுத்­தவர் விக்ரம்.


அடுத்­த­டுத்து ‘பாச­ம­லர்கள்’, ‘பவித்ரா’ என்று அவர்  படங்கள் நடிக்கத் தொடங்­கி­னாலும், திடீர் பைக் விபத்தின் கார­ண­மாக அவை தாம­த­மா­கின.

 

கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்கள், முதுகில் ஏற்­பட்ட காயத்தின்  கார­ண­மாக படுக்­கை­யி­லேயே இருக்க வேண்­டி­யி­ருந்­தது. மீண்டும் மும்­மு­ர­மாக  படப்­பி­டிப்­புக்கு வந்­தவர் ஏற்­றுக்­கொண்ட படங்­களை மட­ம­ட­வென்று நடித்துக்  கொடுத்தார். விஜய் ஹீரோ­வாக நடித்த ‘ராஜாவின் பார்­வை­யிலே’ படத்தில்  சிறு­வே­டத்தை ஏற்று நடித்தார். சில ஆண்­டு­க­ளுக்குப் பிறகு விஜய்­யோடு மீண்டும்  ‘நேருக்கு நேர்’ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்­த­போது, சில  கார­ணங்­களால் அது நிறை­வே­றாமல் போனது.


1995 ஆம் ஆண்டு வசந்த் இயக்­கத்தில்  வெளி­வந்து மாபெரும் வெற்றி கண்ட ‘ஆசை’தான் அஜித்­துக்கு நட்­சத்­திர அந்­தஸ்தைப்  பெற்றுக் கொடுத்­தது. “இன்னும் எத்­தனை நாட்­க­ளுக்­குத்தான் ஹீரோ­யினை ஃபாலோ  செய்து, லவ் புரபோஸ் செய்­து­கொண்­டி­ருக்கப் போகி­றீர்கள்?” என்று அப்­போது  கேட்­கப்­பட்ட கேள்­விக்கு அஜித் சொன்ன பதில், அவ­ரு­டைய தன்­னம்­பிக்­கையை  வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது.


“இப்போ, நான் மத்­த­வங்க கிட்டே சான்ஸ்  கேட்­கிற நிலை­மையில் இருக்கேன். அத­னாலே அவங்க சொல்ற கெரக்­ட­ரில்தான் நடிக்க வேண்­டி­யி­ருக்கு. ஒரு காலம் வரும். அப்போ, அஜித்தான் நம்ம படத்­துலே  நடிக்­க­ணும்னு கேட்டு வரு­வாங்க. அப்போ, நான் விரும்­பற கெரக்­டர்­களில்  நடிப்பேன்.


அந்தக் காலம் அடுத்த ஆண்டே வந்­தது. அகத்­தி­யனின் ‘காதல்  கோட்டை’, அஜித்­துக்கு மட்­டு­மல்ல, தமிழ் சினி­மா­வுக்கே பெரும் ஏற்­ற­மாக  அமைந்­தது. அமி­தாப்­பச்சன் தமிழில் படம் தயா­ரிக்க முன்­வந்­த­போது, அஜித்­தைத்தான்  நடிக்க வைக்க விரும்­பினார். அந்தப் படம் ‘உல்­லாசம்’. இந்தப் படத்­தில்தான்  முதன்­மு­த­லாக அஜித்­து­டைய சம்­பளம் பத்து இலட்­சத்தைத் தொட்­டது.
இதன்­பி­றகு வணிக வெற்றி தோல்விகள் மேடும் பள்­ள­மு­மாக  மாற்றி மாற்றி அஜித், ஸ்டெடி­யாக முன்­னேறிக் கொண்­டி­ருந்தார். ‘காதல்  மன்னன்’, ‘அவள் வரு­வாளா’, ‘வாலி’, ‘அமர்க்­களம்’ என்று ஹீரோக்­களின் ஹிட் லிஸ்ட்டில் தவிர்க்க முடி­யாத இடத்தை எட்­டினார்.


இரண்­டா­யி­ரங்­களின் ஆரம்­பத்தில் அஜித்தின்  திரை­வாழ்வில் ஏற்­பட்ட சரி­வு­களை ‘தீனா’ சரிக்­கட்­டி­யது. அது­வரை அல்­டிமேட்  ஸ்டாரா­கவும், ஆண­ழகன் அஜித்­கு­மா­ரா­கவும் இருந்­த­வரை ‘தல’ ஆக்­கி­யது. அடுத்து ‘வில்லன்’, ‘வர­லாறு’ படங்கள் மூல­மாக தன்­னு­டைய நடிப்­புத்­தி­ற­மை­யையும்  அழுத்­த­மாகப் பதி­ய­வைத்தார்.  ‘மங்­காத்தா’ அவரை சிக­ரத்­துக்கு கொண்டு சென்­றி­ருக்­கி­றது. அவரை ஓப்­பனிங் கிங் என்று வர்­ணிக்­கி­றார்கள்.


மங்­காத்­தா­வுக்கு பின்னர் பில்லா 2 அதுவும் பெரிய வெற்­றிப்­ப­ட­மாக அமைந்­தது. 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் பெரிய திருப்­பத்தை தந்­தது. அதி­லும் மங்­க­ாத்­தாவில் நடித்­தது போன்று சோல்ட் என்ட் பெப்­­பர் லுக்­கிலே நடித்தார்.
2014 இயக்­குநர் சிவாவின் இயக்­கத்தில் வீரம் படத்­தில்நடித்தார். அதில் வேட்டி சட்­டையிலும் தல மாஸாக கலக்­கி­யி­ருந்­தார்.

 

16335Thala-ajith--Happy-birthday.jpg
தொடர்ந்து கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’, வேதாளம் திரைப்படங்களும் மிகப்­பெ­ரிய வெற்­றியைப் பெற்­றன.


மங்காத்­தா­வுக்கு பின்னர் அஜித் நடித்த எல்லா படங்­க­ளும் வெற்றி படங்­க­ளா­கின. அஜித்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலகமே கொண்டாடுகிறது. காரணம், அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக இருக்கிறார். அஜித்துக்கு  எமது வாழ்த்துக்கள்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13103475_10154579347699578_4394133174437

HAPPY LAUGHTER DAY

என்ன தான் நடிகர்கள் சண்டைபோட்டு நடிச்சாலும், கொடுரமா மேக்கப் போட்டு நடிச்சாலும், அவங்க லேடி கெட்டப்ல நடிச்சது தான் இன்னைக்கு வரை, கம் போட்டு ஒட்ன மாதிரி ஆம்பளைங்க மனசுல அசையாம இருக்கு....

 

 

  • தொடங்கியவர்

13139290_10154577302064578_4605810965208

13119754_1035221386526555_24668531594110

ஹிந்தி திரையுலகின் முன்னனி நாயகி
அனுஷ்கா சர்மாவுக்கு இன்று பிறந்த நாள்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

p16a1.jpg

facebook.com/spine.brain.surgeon:

தமிழனின் உடைகளாக வேட்டி, துண்டு ஏன் வந்தது என்பதையும், கோவணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது ‪#வெயில்‬

facebook.com/altappu.vinoth:

`ஜாக்பாட்'ல இருந்து குஷ்பு தி.மு.க-வுக்குப் போனதும், `மானாட மயிலாட'ல இருந்து நமீதா அ.தி.மு.க-வுக்குப் போனதும்... இரு கட்சிகளிடையேயான நல்லிணக்கத்தைக் காண்பிக்கிறது. அவ்வ்!

facebook.com/varavanaiyaan:

காலையிலேயே நண்பனிடம் இருந்து போன்.

நான்: என்னாடா, எலெக்‌ஷன் பிஸியில் எனக்கெல்லாம் போனடிக்க நேரம் இருக்கா?

ஜேஜே: (தாழ்ந்த குரலில்) அந்தக் கொடுமையை ஏன்டா கேக்குற, வீட்டு முன்னாடி அஞ்சாறு பொம்பளைங்க நிற்கிறாங்க. நேத்து `அவிய்ங்க' தலைக்கு 200 அடிச்சிவிட்டுட்டாய்ங்க. `இவய்ங்களே 200 ரூபா கொடுத்தா, உங்காளுக 500 ரூபால கொடுத்திருப்பாங்க, எங்கே அந்தக் காசு?'னு காலையில டீக்கடையில் ஆம்பளைக ஆரம்பிச்சானுங்க. இப்ப காசு கேட்டு பொம்பளையாளுக வீட்டுக்கே வந்துட்டாங்க. இன்னும் அஞ்சாறு மாசத்துக்கு புதுச் சட்டை போட முடியாது, வண்டியை சர்வீஸுக்கு விட்டு பளபளப்பா ஓட்ட முடியாது. அவ்வளவு ஏன்... மூஞ்சைக் கழுவி பவுடர்கூட அடிக்க முடியாது. `பூரா ஆட்டையப் போட்ட காசு'னு கழுவிக் கழுவி ஊத்துவாங்க. இந்தக் கட்சியில இருக்கிறது எம்புட்டு இம்சைனு இருந்து பார்த்தாத்தான் தெரியும். நானாச்சும் பரவாயில்லை, பக்கத்து ஊர்ல ஒரு அக்கா மாவட்டப் பொறுப்புல இருக்கு... அது புருஷனே, `என்னடி... இன்னும் உங்க கட்சியில இருந்து காசு வரலை?'னு தூக்கிப் போட்டு மிதிச்சிருக்கான் காலையில. ஈஸியா ஃபேஸ்புக்ல கலாய்ச்சிப்புடுறீக. இங்கே கத்தி மேல நடக்குற மாதிரி இருக்கு.'

twitter.com/sudhansts:  ஞாயிற்றுக்கிழமை மதியம் தயிர்சாதம் சாப்பிடும்போதுதான், செஞ்ச பாவம் எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுது!

p16b.jpg

twitter.com/mekalapugazh: கள்ள ஓட்டு என்பது, காசுக்கு ஓட்டானதுதான் தமிழகத் தேர்தல் பரிணாம வளர்ச்சி.

twitter.com/chevazhagan1: இந்தத் தலைமுறைக்கு பெற்றோர்கள் சொல்லும் ஒரே அறிவுரை... `போன நோண்டாம பேசாமப் படுடா!' என்பதே! # என்னைக்கு நாம பெத்தவங்க பேச்ச மதிச்சிருக்கோம்?

twitter.com/nithya_shre: ‘கூட்டிட்டு வாங்க... தூக்கிட்டுப் போங்க’ சீஸன் - 3. இன்று திருச்சியில்... தமிழகத்தின் செல்ல சாவுக்கான தேடல்.

twitter.com/SriramMADRAS: `தினமும் ரெண்டு பேரைப் பலிகொடுத்தா, திரும்பவும் ஆட்சிக்கு வந்துடலாம்'னு ஜோசியக்காரன் எவனோ இந்தம்மாட்ட சொல்லிட்டான் போலிருக்கு!

twitter.com/RazKoLu: சம்மர் வந்தா வெயிலுக்குப் பயப்படுறோமோ இல்லியோ... சென்னை அமிர்தா விளம்பரத்துக்கு ரொம்பவே பயப்படவேண்டியதா இருக்கு. #இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல!

twitter.com/SaravananStalin: ரோட்ல ராங்கா க்ராஸ் பண்ணினதுக்கு லாரி டிரைவர் ட்ரெண்டா திட்றாரு, `டேய்...சாவுறதுன்னா பிரசாரத்துக்குப் போய் சாவுடா... துட்டாவது கிடைக்கும்.'

twitter.com/santhozn: கடவுளாக இருப்பது உண்மையிலயே சுவாரஸ்யமான விஷயம்தான்போல... ரெண்டாவது மாடியில இருந்து வேடிக்கை பார்க்கும்போதே இவ்வளவு ஜாலியா இருக்குன்னா...

twitter.com/arattaigirl: சிரிக்கும்போது அழகாய் இருப்பவர்கள் பெண்கள்; அழும்போதும் அழகாய் இருப்பவர்கள் குழந்தைகள்!

twitter.com/mekalapugazh: திருமணம் காணாத காதலைவிட...  காதலைக் காணாத திருமணங்களே அதிகம்!

twitter.com/varunvoice:  விவசாயத்துக்கு தனி பட்ஜெட். - பா.ஜ.க #நீங்கதானே அந்த விவசாய நிலம் கையகப்படுத்துற சட்டம் போட்டது? அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.

twitter.com/thalabathe:  கடைசிப் பெண் உயிரோடு இருக்கும் வரைக்கும் ‘என்னை எவ்வளவு பிடிக்கும்?’ என்ற கேள்வி நம்ம காதுல கேட்டுட்டே இருக்கும்.

p16c.jpg

twitter.com/kumarfaculty:  தன் கனவில் வந்தவர்களுக்கும் அந்தக் கனவு வந்திருக்கும் என குழந்தைகள் நினைக்கிறார்கள்.

twitter.com/karunaiimaLar:  ஃப்ளிப்கார்ட்ல ஒரு பொருளைப் பார்த்து நல்லா இருக்குமானு யோசிச்சு ஆர்டர் பண்றதுக்கே பதறுது. மேட்ரிமோனி வெப்சைட்ல எல்லாம் எப்படித்தான்... :-(

twitter.com/udanpirappe: நீ மட்டும் என் காதலை ஏத்துக்கலைனா, அ.தி.மு.க பொதுக்கூட்டத்துக்குப் போய் செத்துருவேன் பார்த்துக்கோ!

twitter.com/Iam_SuMu: சற்றே பெரிய அப்பளம், கூடுதலாக ஓர் இனிப்பு என அடுத்து வரும் விலையேற்றத்தை சென்னை ஹோட்டல்கள் முன்கூட்டியே சிம்பாலிக்காக உணர்த்தும் அழகே தனி!

twitter.com/David_EXIM: நாட்ல என்ன நடந்தாலும் டி.டி பொதிகை சேனல்ல, `எவனோ விசிலடிக்கிறான்’ற ரேஞ்சுக்கு அவம்பாட்டுக்கு  ஏதாச்சும் ஒரு புரோகிராம்  போட்டுட்டிருக்கான்.

twitter.com/sThivagaran: எடைக்குப் போடும்போதுதான் தெரிகிறது, பத்திரிகைகளில் படிக்காமல்விட்ட பயனுள்ள பக்கங்கள்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.