Jump to content

கோதுமை அல்வா: தீபாவளி ரெசிபி


Recommended Posts

கோதுமை அல்வா: தீபாவளி ரெசிபி
 
உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள்.
 
இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Atta Halwa: Diwali Special Recipe
 தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1/4 கப்
 
சர்க்கரை - 1/2 கப்
 
தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப்
 
நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன்
 
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
 
பாதாம் - 4 (நறுக்கியது)
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
 
பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/atta-halwa-diwali-special-recipe-tamil-009654.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்... தாங்ஸ்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளேட் ஒப் கொலஸ்ட்ரோல் அண்ட் டியாபெடிக் :grin:

Link to comment
Share on other sites

ம்ம்... பொதுவாக ரவையில் தானே அல்வா செய்வது, இது வித்தியாசமாய் இருக்கு... சுவி வீட்டில் தீபாவளிக்கு இந்த முறை கோதுமை அல்வா தானே... சொல்லுங்கோ சுவி எப்பிடி என்று. :)

 

பிளேட் ஒப் கொலஸ்ட்ரோல் அண்ட் டியாபெடிக் :grin:

தீபாவளிக்கு மட்டும் தானே சகோ முனி. ( ஒரு துண்டைச் சாப்பிடுங்கோ முழுவதையும் சாப்பிடாமல் :)) கனக்க சாப்பிட வேண்டுமானால் நெய்க்குப் பதிலாக மாஜரினையும் பாவிக்கலாம்.. சுவை கொஞ்சம் குறைவாக இருக்கும்... :)

 

இணைப்பு நன்றி சகோ நவீனன்!! :)

 

சகோக்கள்  பிரான்ஸ் போகேக்கை பெரியண்ணர் சுவி வீட்டை போகத் தவறாதீர்கள்.. தன் கையால் விதம் விதமாக மிகவும் சுவையாக சமைத்து பெரிய விருந்தளிப்பார்.... :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு மட்டும் தானே சகோ முனி. ( ஒரு துண்டைச் சாப்பிடுங்கோ முழுவதையும் சாப்பிடாமல் :)) கனக்க சாப்பிட வேண்டுமானால் நெய்க்குப் பதிலாக மாஜரினையும் பாவிக்கலாம்.. சுவை கொஞ்சம் குறைவாக இருக்கும்... :)

சமீபத்தில் ஸ்ரீ லங்கன் விமானத்தில் சென்றபோது, செரண்டிப் பத்திரிகை வாசித்தேன்.

அதன்படி சிலாபம், நீர்கொழும்பு பகுதியில் இந்த வகை அல்வா தயாரிப்பில் மிகவும் புகழ் மிக்கவை என்றும், அன்றைய அரபு, ஐரோப்பிய, இந்திய கடல் சார் வர்த்தகர்கள் இதை வாங்கி பழுதாகா வகையில்  பொதி செய்து எடுத்துப் போவார்களாம். 

இதற்கு மேலும் கீழும் கோதுமை மாவை பரப்பி விடுவதன் மூலமும், சிறு சிறு அளவான துண்டுகளாக வெட்டுவதன்   மூலமும், பார்க்கும் பொது உண்டாகும் ஒரு வித கலக்கம் இல்லாமல் போகும் என்று சொல்லி இருந்தார்கள்.

butter-musket-halwa.jpg

1b8a2dd0-2d4d-495e-8119-c60ca1fd2b8d.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் "மஸ்கட்" என்று தானே சொல்வார்கள். 

90 களில் Pettah வில் வந்த "பச்சையை" மாற்றிவிட்டு Kesar Street இல் Royal Sweet Mart இல் 2kg வை ஓடர் பண்ணிவிட்டு 2 பலூடாவும் இழுத்து முடித்து விடுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் "மஸ்கட்" என்று தானே சொல்வார்கள். 

90 களில் Pettah வில் வந்த "பச்சையை" மாற்றிவிட்டு Kesar Street இல் Royal Sweet Mart இல் 2kg வை ஓடர் பண்ணிவிட்டு 2 பலூடாவும் இழுத்து முடித்து விடுவோம். 

 

அதுவே தான்....

 Pettah ராயல் ஸ்வீட் மார்ட், பாகிஸ்தானிய சிந்தி காரர்களுடையது. அப்படி ஒரு தரம். அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.

மஸ்கட்லும் பரர்க்க, தொதல், அதுவும், அரிசிமா களுதொதல் தான் எனது தெரிவு: அப்படி ஒரு சுவை....

Maskat

Robert Binning (A Journal of Two years travel in Persia, Ceylon etc.1857) says that in Muscat is made a kind of sweetmeat composed of the starch of wheat, fine sugar, rasped almonds and clarified butter. He adds that this sweetmeat is made in large quantities and exported to different parts of India and Persia where it is greatly esteemed.Muscats in colourful variety

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.