Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்பு இல்லை: டக்ளஸ்

Featured Replies

article_1446547814-aa.jpg

 

பழைய பிரச்சினைகளை கிளறி மக்களைக் குழப்பி அரசியல் சுயலாபம் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

முஸ்லீம் மக்களை யாழிலிருந்து வெளியேற்றியமை இனச்சுத்திரிகரிப்பு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது சரியானதா என்பது தொடர்பில் அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'சுமந்திரன் கூறுவது தவறானது. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அதற்கு இனச்சுத்திகரிப்பு என்று பயன்படுத்தக்கூடாது. தற்போது இன ஐக்கியத்தை ஏற்படுத்த அனைவரும் சேர்ந்து செயற்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, பழைய பிரச்சினைகளைக் கிளறி மக்களைக் குழப்பக்கூடாது. உள்நோக்கங்களுக்காக அவ்வாறான கருத்துக்களை முன்வைக்கக்கூடாது. முஸ்லீம் மக்களும் அவ்வாறானதொரு பதத்தைக் கோரவில்லை' என்றார்.

'அனைத்துத் தரப்பிலும் தவறுகள் கடந்தகாலங்களில் நடைபெற்றுள்ளன. தவறுகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் தான் ஐக்கியமாக வாழலாம். முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட போது, அவர்களுக்காக குரல்கொடுத்தவர்கள் நாங்களே.

அவர்களுக்காக புத்தளத்தில் நகர் ஒன்றையும் உருவாக்கியிருந்தோம்' எனவும் டக்ளஸ் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/158250/ம-ஸ-ல-ம-கள-ன-வ-ள-ய-ற-றம-இனச-ச-த-த-கர-ப-ப-இல-ல-டக-ளஸ-#sthash.Td4j1Pk6.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

:)

முதல் முறையாக, டக்கி அங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னபடியால் ஏற்றுக் கொள்ளேல்ல அங்கிள். இதையே.. அவருக்கு வேண்டியவை சொல்லி இருந்தா அங்கிள் அதற்கு ஆமாப் போட்டிருப்பார். எல்லாம் யார் யார் எப்பெப்ப என்னென்ன சொல்லினம் என்றதிலான் இருக்குது. சுமந்திரனுக்கு வாயில சனி என்பது வேறு விடயம்.tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வசிஸ்டர் வாயால் பிரம்மரிஸி பட்டம் பெற்றதுபோல் சிறீலங்காவின் தேசியத்தலைவர் என ரணிலால் போற்றப்பட்டிருக்கும் சம்பந்தன் ஐயா என்ன சொல்லுகிறார்.

இனிமேல் டக்ளஸ் அண்ணர் கருணா பிள்ளையான் போன்றோர் இப்படித்தான் அரசியல் செய்யவேண்டும், காரணம் சுமந்திரன் அண்ணர், சம்பந்தர் ஐயா ஆகியோர் கடந்தகாலங்களில் இவர்கள் செய்ததைவிட ஆயிரம்மடங்கு சிங்களத்துக்கு விசுவாசமாக இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

வசிஸ்டர் வாயால் பிரம்மரிஸி பட்டம் பெற்றதுபோல் சிறீலங்காவின் தேசியத்தலைவர் என ரணிலால் போற்றப்பட்டிருக்கும் சம்பந்தன் ஐயா என்ன சொல்லுகிறார்.

இனிமேல் டக்ளஸ் அண்ணர் கருணா பிள்ளையான் போன்றோர் இப்படித்தான் அரசியல் செய்யவேண்டும், காரணம் சுமந்திரன் அண்ணர், சம்பந்தர் ஐயா ஆகியோர் கடந்தகாலங்களில் இவர்கள் செய்ததைவிட ஆயிரம்மடங்கு சிங்களத்துக்கு விசுவாசமாக இருக்கினம்.

கழுவுற போட்டியில் ..... சம்மந்தரும் சுமந்திரனும் முதல் இடம் அடிப்பார்கள் என்று இவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

இது நாங்கள் எதிர்பார்த்த விடயம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கவேற மருதங்கேணி, கூடிய சீக்கிரம் சம்பந்தன் ஐயாவுக்கு "லங்கரத்தினா" உயர்விருது கொடுப்பார்கள் இருந்துபாருங்கள்.

 

இப்பவே, எங்களது கவிஞர் ஜெயபாலன் ஐயா, சம்பந்தர் ஐயா எதிர்க்கட்சித்தலைவர் ஆவதற்குமுன்பு வாழ்த்தியதுபோல், நானும் வாழ்த்துகிறேன்,

 

ஜனநாயக சோசலிசக் குடியரசுநாடான சிறீலங்காவின் அதியுயர் விருதாம் லன்கரத்தினா விருதினை முதல்முதலில் பெற்றுக்கொள்ளப்போகும் எங்கள் சிறீலங்காவின் தேசியத்தலைவர் சம்பந்தன் ஐஜாவுக்கு எனது பணிவான வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.