Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக முரண்பாடுகள் வேண்டாம் - மாவை

Featured Replies

Mavai-Senathirajah.jpg

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை ஊட­கங்­களில் பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு­மென தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் பரஸ்­பரம் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அவற்றை நியா­யப்­ப­டுத்­தியும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு வெளியிட்டு வரும் கருத்­துக்­களால் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் குறித்து வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகி­ய­யோ­ருக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக ஊடங்­களில் இரு­வரும் பரஸ்­பரம் கருத்­துக்­களை வௌியிட்டு விவாதம் நடத்தி வரு­கின்­றார்கள்.

தற்­போதைய நிலையில் இவ்­வாறு ஊட­கங்­களில் பகி­ரங்க விவா­தங்­களை மேற்­கொள்­வது சாலப்­பொ­ருத்­த­மா­ன­தொன்­றல்ல. அவர்கள் தமக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி அதற்­கு­ரிய தீர்வைக் காண­வேண்டும்.

அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை கட்­சி­யினுள் அல்­லது அமை­தி­யான முறையில் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். எதிர்­வரும் நாட்­களில் இவர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்­பாக கட்­சியினுள் கலந்­து­ரை­யாடி தீர்­வினை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

மேலும் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ்­நி­லை­யில் நீண்­ட­கா­ல­மாக நீடித்து வரும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைப் பெற்­றுக்­கொள்ளல், பாதிக்­கப்­பட்ட தரப்­பா­கிய எமது மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுத்தல், உரி­மைகள்,அபி­லா­ஷை­களைப் பெற்று பாது­காப்­பான சமு­க­மாக எதிர்­கா­லத்தில் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்­கு­ரிய நிரந்த சூழலை ஏற்­ப­டுத்தல் போன்ற பல்­வேறு விட­யங்­களில் நாம் கவனம் செலுத்தி அதற்­கு­ரிய முன்­ன­கர்­வு­களைச் செய்­ய­வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் மேற்­ப­டி­யான உள்­ளக கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக மீண்டும் மீண்டும் விவா­திப்­பது சாலப்­பொ­ருத்­த­மற்­ற­தாகும்.

ஆகவே இவ்­வா­றான உள்­ளக முரண்­பா­டு­களை உரிய பேச்­சு­வார்த்தை ஊடாக தீர்ப்­ப­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். நாம் அதற்­கு­ரிய வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் நாட்­களில் எடுக்­க­வுள்ளோம் என்றார்.

வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கட்சி வரை­மு­றை­களை மீறி நடந்தார். ஆகவே அவரை கட்­யி­லி­ருந்து நீக்­கு­மாறு தலை­வ­ரி­டத்தில் கோரியுள்ளேன் உட்பட முதல்வர் குறித்த பல்வேறு கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று முன்தினம் விளக்கமளிக்கும் விரிவான ஊடக அறிக்கையொன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளி யிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/11/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

மாவையருக்கு இவ்வளவு நாளும் சுமந்திரன் கதைத்து கொண்டு திரியும்போது திரியல இப்ப விக்கிஜயா அறிக்கை விட்டவுடன் பொத்திக்கொண்டு வந்திட்டுபோல...........

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புலிக்குரல் said:

மாவையருக்கு இவ்வளவு நாளும் சுமந்திரன் கதைத்து கொண்டு திரியும்போது திரியல இப்ப விக்கிஜயா அறிக்கை விட்டவுடன் பொத்திக்கொண்டு வந்திட்டுபோல...........

 தங்கட குட்டுகளும் வெளியில வந்துவிடுமோ என்கின்ற பயந்தான்.

  • தொடங்கியவர்

இது வரையும் எங்கு இருந்தீர்களோ தெரியவில்லை , இப்போது வந்து அறிக்கை விடுகிறீர்கள் அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை சுமந்திரனுக்கான முதல்வரின் பதில் அறிக்கை தான் இதற்கெல்லாம் காரணம். 

முதல்வர் தன் மீது எழுப்பப்படும் சகல சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலைத் தந்து விடுவார் இது அவர் மீது சேறு அடித்து உங்கள் சுயநலங்களை நிறைவேற்றி, உங்கள் பணப்பையை நிரப்பி, உங்கள் குடும்பங்களை மட்டும் முன்னேற்றும் உங்கள் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆரம்பத்தில் உங்களைப் போன்ர அரசியல்வாதிகள் தான் மேடைக்கு மேடை பேச்சுக்கள் மூலம் இளையோரை உசுப்பேற்றி தமிழினத்தையே ஆயுத கலாச்சாரத்துக்குள் தள்ளினீர்கள், "இனி சிங்களவனின் இரத்தத்தில் தான் கொண்டை முடிவேன்" எனறெல்லாம் மேடைகளில் பேசி எனது அண்ணன் மாரை நீங்கள் அணைவரும்  உசுப்பேற்றி ஆயுதம் தூக்கச் செய்தீர்கள்.

ஆனால் எனக்கு இன்று எனது அண்ணன் மார்கள் இல்லை, ஆனால் நீங்கள் அணைவரும் பக்குவமாக இருக்கிண்றீர்கள், உங்கள் குடும்பம் இந்தியாவில் இன்னும் பக்குவம்...............

எம்மீது இராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்களை நினைத்து பாருங்கள்......................, எப்படி உங்களது எம்.பி ஒருவரால் "யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்திற்கு நன்றிகள்" என நாடாளுமன்றத்தில் பேச முடிகிறது? கிருசாந்தி எனும் அந்த பள்ளிச் சிறுமியை நினைத்துப் பாருஙள், 10 இற்கு மேற்பட்ட இராணுவ பிசாசுகளால்........................., திருமலையில் பெற்ற தந்தைமாரின் கண்களின் முன்ணாலேயே இராணுவ மிருகங்களினால் கொல்லப்பட்ட அந்ந ஆறு மாணவர்களை நினத்துப் பாருங்கள் , எப்படி உங்களால் இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரை கோட்டில் குத்தி பாரளுமன்றத்திற்குச் சென்று இராணுவத்தினரை கெளரவிக்க முடிகிறது................?

சாதரண தமிழ் மக்கள் ஆகிய  நாம்  இலங்கை படைகள் , தமிழ் இயக்கங்கள், IPKF எனும் இந்திய கொலைகார படைகளின் கட்டுப்பாடின் கீழ் தான் இதுவரை இருந்து வந்தோம், இருக்கின்றோம். இவர்கள் யாரிடமும் சாதரண மக்கள் ஆகிய நாம் எதுவும் கோரமுடியாது, குறைந்த பட்சம் எமது கருத்துக்களை யாவது சொல்ல முடியாது, ஏனெனில் அவர்கள் அணைவரிடமும் ஆயுதங்கள்  இருந்தன, அவை அணைத்தும் எம்மை நோக்கி மிகத் தாராளமாகவே பிரயோகிக்கப் பட்டன.........................


இப்படி யிருக்கையில் யாழிலிருந்து ஆயுதக்குழுவால் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதுக்கு நாம் ஏன் வெட்கித் தலை குனிய வேண்டும், யாழ் மாநகர சபையில் இருந்த இரண்டே இரண்டு முஸ்லிம் சகோதரர்களில் ஒருவரை சபை முதல்வராகவும், மற்றயவரை துணை முதல்வராகவும் அமர்த்தியவர்கள் அல்லாவா நாம். அப்படிப்பட்ட எம்மை முஸ்லிம் மக்கள் முன் ஏன் நீங்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிண்றீர்கள்?

மாவை அவர்களே நீங்கள் இரகசியமாக அரசாங்கத்திடம் பணம் வாங்கியதும் , அதனை முதல்வர் கண்டுபிடித்த்தும், உடனே பிளேட்டை மாற்றி அது முன்னய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப் ப்ட்ட பணம் அதனைத் தான் நாம் பெற்றுக் கொண்டோம் என ரீல் விட்டதும் நாம் மறக்கவில்லை. ஆனால் இன்று வரை அதை ஏன் இரகசியமாக வாங்கினீர்கள் என நீங்கள் சொல்லவேயில்லை 

ஒட்டுக் குழுவின் பிடியில் இருக்கும் தனது வீட்டினை மீட்டுத்தரும்படி உங்களது எம்.பி சரவணபவனை அனுகியவரிடம் அவர் அந்த வீட்டுக்காரரிடம் அந்த வீட்டுக்கு அரை விலை பேசி , அதை என்னிடம் விற்றுவிடுங்கள் நான் மீட்டுக் கொள்கிறேன் என்கிறார். இது சம்மந்தமாக ஊடகங்கலில் ஆதாரத்துடன் செய்தி வந்தபோது கூட உங்கள் எம்.பி அசரவில்லை , அந்த நபரின் கலர் என்ன என்றே எனக்குத் தெரியாது என்கிறார்........................ செத்த பிணத்திலேயே சில்லறை பொறுக்கும் கூட்டமையா நீங்கள்

11822540_960194764037077_721089927424159

உங்கள் எம்.பி மாரைப் பற்றிக் கூறுவதற்கு இந்தப் ப்டத்தினை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை, 
இவ்வளவு காலமும் சாதரண பாடசாலை அதிபராக இருந்த ஒருவருக்கு எம்.பி ஆனவுடன் தனது மக்களை சந்திக்கச் செல்லும் போது வெயிலுக்குக் குடை பிடிக்க ஒரு ஆள் தேவைப் படுகிறது.நீங்கள் எல்லாம் மக்களை உங்களுக்கு சேவை செய்யப் பண்ணுவீர்களே ஒழிய ஒரு போதும் மக்களுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போது வெயிலுக்குக் குடை பிடிக்க ஒரு ஆள் தேவைப் படுகிறது.நீங்கள் எல்லாம் மக்களை உங்களுக்கு சேவை செய்யப் பண்ணுவீர்களே ஒழிய ஒரு போதும் மக்களுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்.

ந‌ல்லா தமிழ்படம் பார்ப்பார் போல‌கிட‌க்கு.......நாட்டாமை என்றால் ஒரு ஆள் குடை பிடிக்கத்தானே வேணும்....

  • தொடங்கியவர்
13 hours ago, putthan said:

 

ந‌ல்லா தமிழ்படம் பார்ப்பார் போல‌கிட‌க்கு.......நாட்டாமை என்றால் ஒரு ஆள் குடை பிடிக்கத்தானே வேணும்....

இவர்கள் இன்னமும் மாறவில்லை புத்தன். பந்தா , பகட்டுகள் தான் இவர்களின் அடையாளம். அந்த இடத்தில் இவர் தான் குடை பிடித்துக்கொண்டு நிற்பதே அழகில்லை ஆனால் இவரோ இன்னொருவரை தனக்குக் குடை பிடிக்க வைக்கிறார், இப்படியானவர்கள் தான் எமது மக்களை மீட்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருமே வெள்ளைவேட்டி கள்ளர்!  தமிழ்மக்களின் அவலங்களில் அரசியல் செய்பவர்கள்.

எந்தவொரு தமிழ் அரசியல் வாதிகளினாலும் எமது மகளுக்கு ஒரு சுண்ணாம்பும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Surveyor said:

எந்தவொரு தமிழ் அரசியல் வாதிகளினாலும் எமது மகளுக்கு ஒரு சுண்ணாம்பும் கிடைக்காது.

6 hours ago, Surveyor said:

 

முஸ்லிம் அரசியல்வாதி சுமத்திரன் சில சமயம் எதாவது எடுத்து கொடுப்பார்

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.