Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றம் விசாரணை உள்ளகப் பொறிமுறை ஜனவரியில் ; நீதியமைச்சர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றம் விசாரணை உள்ளகப் பொறிமுறை ஜனவரியில் ; நீதியமைச்சர் தகவல்

[ Saturday,5 December 2015, 04:53:13 ]   
vije.jpg

மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் உள்ளகப் பொறிமுறையை ஆரம்பிப்பற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை நிறைவுக்கு வந்த பின்னர், உள்ளகப் பொறிமுறையை அமைத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு உள்ளிட்ட உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் ஆகியோர் அடுத்த வருடம் நடுப்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவர்களது விஜயங்களுக்கு முன்னரே உள்ளகப் பொறிமுறை விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்திற்கு அடுத்த பணியாக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என்று அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://ibctamil.com/news/index/14525

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.