Jump to content

பெண்கள் பிரா பற்றி அறிய வேண்டிய தகவல்கள்...!(கண்டிப்பாக பெண்களுக்கு மட்டும்!)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

- இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...

டி-சர்ட் பிரா

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.


இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு. 

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்...

மினி மைஸர்

இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

பேடட் பிரா

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

கியூட் வெட்டிங் பிரா

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.

மெசக்டமி பிரா

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...


கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்: நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.

கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா..?

பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா..?

பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா..?

பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

http://chennaidaynews.blogspot.com/2014/02/blog-post_9221.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல இணைப்பு கொழும்பான். நிறையப் பேர் பிழையகத்தான் அணிகிறார்கள்.

கனடாவில்  La Senza  என்ற கடைக்கு போனால் அங்கு வேலைசெய்யும் பெண்கள் சரியான தெரிவுக்கு உதவிபுரிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13.12.2015 at 1:59 PM, colomban said:

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா..?

பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

விசர்க்கேள்வியும்.......கடுப்பேத்துற பதிலும் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பான கணவன் அமைந்த பெண்கள் இரவில் பிரா அணியத்தேவையில்லை!<_<

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவில் உள்ள பலர் இலங்கைக்கு போக விரும்புவதில்லை, மாறாக இந்திய குடியுரிமை பெற விரும்புகிறார்கள், இந்திய குடியுரிமை இல்லாமல் அகதிகளாக இருப்பது சிரமம், அதனால் இந்தியாவில் அகதிகளாக இருப்பதனை விட இலங்கைக்கு போகலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் முதலாவது தெரிவாக உள்ளது.   மிக நியாயமான  கருத்து.
    • நீங்கள்  இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள்.  🙏 அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை  அர்சசுனா  பட்டியல் இடடுள்ளார்.  அந்தந்த துறையில் உள்ளவர்களால்  சொல்ல முடியவில்லை  அதுமட்டுமல்ல   பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும்  இங்கே ஒவ்வொரு துறையிலும்  எப்படி செலவு செய்கிறீர்கள்??  என்பதை  கேட்க மக்கள்  பிரதிநிதிகளுக்கு  உரிமை உண்டு  என்று அர்ச்சுனா கூறியுள்ளார்  இதை  அமைச்சர் சந்திரசேகரன்  எற்றுக்கொண்டு  இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார்   இதன் மூலம்  அர்ச்சுனா  வைத்தியசாலையில் உள்ளிட்டது  தவறு இல்லை என்று உறுதியானது  இந்த முறை தான்  மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம்  ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது  என்று பலரும் கூறுகிறார்கள்  குறிப்பு,...அர்ச்சுனா  தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது  ஊழல்வாதிகளுக்கு  துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை  அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள்   நீங்கள் இருந்து பாருங்கள்  அர்ச்சுனா பலரின் ஊழல்களை  தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள்  இன்று பலருக்கு வேர்த்து உள்ளது    🤣
    • மேலே பொத்தாம் பொதுவாக கடஞ்சா புலிகள் குடும்பங்களை  கைது செய்து பின்னர் விடுவித்தார்கள் என்று சொல்லியிருந்தார், நீங்கள் தெள்ள தெளிவாக அவர்களை வடக்கு கிழக்கைவிட்டு வெளியே அனுப்பினார்கள் என்று சொல்கிறீர்கள்,  ஆக கடஞ்சாவைவிட புலிகளால் வெளியே அனுப்பப்பட்ட  மாற்று இயக்க போராளி  சில குடும்பங்கள் , அவர்களின் விபரங்களாவது நீங்கள் துல்லியமாக தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. அதில் ஒன்றிரண்டையாவது சொல்வீர்களா? இது உங்கள் கருத்தின்மேல் சந்தேகமோ அல்லது உண்மை தன்மையை பரிசோதிக்கும் முயற்சியோ அல்ல, மாறாக ஒரு விடயத்தை ஐயம் திரிபுற அறிந்தவர்களிடம் தகவல் பெற்றுக்கொள்ளும் முயற்சி மட்டுமே. அவர்கள் விபரங்களில் ஒன்றிரண்டை வெளியிடுவதால் அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் பாதுகாப்பு பிரச்சனையும் வந்துவிடபோவதில்லை, ஏனென்றால் இன்று புலிகளும் இயங்கு நிலையில் இல்லை, மாற்று  இயக்கங்களும் இலங்கை அரசு சாசனத்தையும் சார்பையும் ஏற்றுக்கொண்டு எவ்வளவோ காலமாச்சு.
    • 🤣................... கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣. ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.