Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன விடுதலைப்புலிகளின் தளபதிகள் குறித்து உறவுகள் சாட்சியம்

Featured Replies

காணாமல் போன விடுதலைப்புலிகளின் தளபதிகள் குறித்து உறவுகள் சாட்சியம்

காணாமல் போன விடுதலைப்புலிகளின் தளபதிகள் குறித்து உறவுகள் சாட்சியம்- குளோபல் தமிழ் செய்தியாளர் :-

 இறுதி யுத்தத்தின் போது பாதிரியார் தலைமையில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகள் தொடர்பில் ஜானதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

யாழில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் போனரை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்றைய தினம் (திங்கட்கிழமை) பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அச் சாட்சியமர்வுகளின் போது விடுதலை புலிகளின் முக்கிய போராளிகளின் உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடற்புலிகளின் முக்கிய போராளி நரேன்.

விடுதலைப்புலிகளின் கடற்புலியை சேர்ந்த நரேன் எனப்படும் திருஞானசுந்தரம் ஜனார்த்தன் என்பவர் 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்தவர்களுடன் ஒருவராக இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.என அவரின் பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில்,

இவருடைய மணைவி (போராளி) அவரும் இவர்களுடன் இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு சென்ற போதிலும் அங்கிருந்த மூன்று பஸ் களில் இடமில்லை என திருப்பி அனுப்பப்பட்டு இருந்தார்.

பின்னர் மனைவி ஓமந்தை பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று தற்போது சமூகத்துடன் இணைக்கப்பட்டு் உள்ளார்.

பாதிரியார் தலைமையில் சரணடைந்த முக்கிய போராளிகள் அனைவரும் மூன்று பஸ்களில் ஏற்றி செல்லப்பட்டனர். அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என பெற்றோர் தமது சாட்சியத்தின் போது கூறினார்கள்.

கடற்புலி நிதித்துறை சுமன்

கடற்புலிகளின் நிதி பிரிவில் இருந்த சுமன் என்றழைக்கப்படும் வைரமுத்து ரதீஸ்வரன் என்பவர் 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த போராளிகளில் ஒருவராக சரணடைந்தார் என அவரது மனைவி ரதீஸ்வரன் சபீதா சாட்சியம் அளித்துள்ளார்.

தனது சாட்சியத்தில் மேலும் கூறுகையில்,

எனது கணவர் இறுதி யுத்தத்தின் போது 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

கணவரை அங்கிருந்த மூன்று பஸ்களில் நடுவில் நின்ற பஸ்ஸில் ஏற்றினார்கள் நான் பஸ்சுக்கு 10 மீற்றர் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.

அவர் பஸ் ஜன்னலுக்கால் எட்டிப்பார்த்து நீங்கள் ஓமந்தை செல்லுங்கள் நாங்கள் வருவோம் என கூறி சென்றார். அதன் போது என் கணவருடன் எழிலன் , நரேன் விமல் மாஸ்டர் என விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகள் இருந்தனர்.

அந்த மூன்று பஸ்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அறிமுகம் ஆனாவர்கள். அவர்களில் எவரையும் மே18ம் திகதிக்கு பின்னர் நான் எங்கேயும் காணவில்லை என சாட்சியத்தில் தெரிவித்தார்.

காவற்துறை மாதவன் மாஸ்டர்.

விடுதலைப்புலிகளின் காவற்துறையை சேர்ந்த மாதவன் மாஸ்டர் என்று அழைக்கப்படும். சிவசிதம்பரம் என்பவர் 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த போராளிகளில் ஒருவராக சரணடைந்தார் என அவரது மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

எனது கணவர் 20 வருட காலமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார். இறுதி யுத்தத்தின் போது 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

அதன் பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் கூறினார்.

பாதிரியார் தலைமையில் சரணடைந்தவரை காணவில்லை

விடுதலை புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக இருந்த கதிர்காமத்தம்பி தர்மலிங்கம் எனும் எமது மகன் 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த பின்னர் மகனை பற்றிய எந்த தகவல் இல்லை . என அவரது பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

மேலும் தமது சாட்சியத்தில் தெரிவிக்கையில்

2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த எமது மகன் பற்றிய எந்த தகவலும் அன்றைய தினத்திற்கு பின்னர் கிடைக்கவில்லை.எமது மகனுடன் 40 க்கும் அதிகமானவர்கள் சரணடைந்து இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் அங்கிருந்த மூன்று பஸ்களில் ஏற்றி சென்று இருந்தனர். அதன் பின்னர் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு எமது வீட்டுக்கு வந்த சிலர் எமது மகன் பற்றிய தகவல்களை எம்மிடம் கெட்டு பெற்று கொண்டு சென்றனர். என தமது சாட்சியத்தி கூறினார்கள்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126887/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.