Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா படுகொலை ; மேலும் ஒருவர் கைது : மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு

Featured Replies

வித்தியா படுகொலை ; மேலும் ஒருவர் கைது : மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு
 
வித்தியா படுகொலை ; மேலும் ஒருவர் கைது : மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் வித்தியாவின் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 10ஆவது சந்தேக நபரான 26 வயதுடைய ஜெயவர்த்தன ராஜ்குமார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். வித்தியாவின் சகோதரனினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள 10ஆவது சந்தேக நபரிடமிருந்து கையடக்கத் தொலைபேசியில் மற்றுமொரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் புகைப்படம் மற்றும் அவரின் தொலைபேசி இலக்கங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
 
இவ்வாறானதொரு நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் 10 சந்தேக நபர்களும் முன்னலைப்படுத்தப்பட்டதாகவும் இதன்போது 10ஆவது சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டதரணி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
குறித்த சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே அவர் வித்தியா வீட்டிற்கு அருகில் சென்றிருக்கலாம் எனவும் சட்டதரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். மேலும் குறித்த 10ஆவது சந்தேக நபர் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் கடந்த 1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் போது தொலைந்து போயுள்ளதாகவும் நீதிமன்றத்திடம் 10ஆவது சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
 
எனினும், அவரது கோரிக்கையினை நிராகரித்த நீதிபதி எஸ். லெனின் குமார் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டhர்.
 
மேலும், ஐந்தாவது சந்தேக நபரான தில்லைநாதன் சந்திரகாசன், ஆறாவது சந்தேக நபரான சிவநேசன் துசான் மற்றும் 10ஆவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் ஆகியோரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குறித்த மூவரையும் கொழும்பிலுள்ள மகசpன் சிறைச்சாலையில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
 
இதேவேளை குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.