Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு
 

article_1450183974-tamilmisssou-treNz.jpநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட குழாமில், பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் டிம் சௌத்தி, மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குழாமுக்கு திரும்பவுள்ளார். இவருக்குப் பதிலாக முதலிரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இன்னுமோர் வேகப்பந்துவீச்சாளரான மற் ஹென்றி பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முதற்தடவையாக துடுப்பாட்ட வீரர் ஹென்றி நிக்கொல்ஸ் இடம்பெற்றுள்ளார். 2014-15 பருவகாலத்திற்கான போர்ட் கிண்ணத்தில் 75.66 என்ற சராசரியில் 454 ஓட்டங்களைக் குவித்து, இத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களில் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

இந்நிலையில், தற்போதும் காயத்திலிருந்து குணமடைந்து வரும் சகலதுறை வீரர்களான கொரி அண்டர்சன், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட் எலியட் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை. எனினும் முதுகுப்பகுதியில் உள்ள பிரச்சினை காரணமாக,  அண்மையில் இடம்பெற்ற நியூசிலாந்து உள்ளூர் இருபது-20 போட்டிகளில் துடுப்பாட்ட வீரராக மட்டும் பங்கேற்ற கொரி அண்டர்சன், இருபது-20 போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர எலியட், இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்தப் பருவகால முடிவில் சர்வதேசப் போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நதன் மக்கெலம் குழாமில் இடம்பெறவில்லை. சுழற்பந்துவீச்சாளராக இஷ் சோதி இடம்பெற்றுள்ளார்.

குழாம்-பிரெண்டன் மக்கலம் (தலைவர்), டவ் பிரேஸ்வெல், மார்ட்டின் கப்தில், மிட்செல் மக்கெலெனகான், அடம் மிலின், ஹென்றி நிக்கொல்ஸ், லுக் ரோங்கி, மிட்செல் சந்தர், இஷ் சோதி, ரொஸ் டெய்லர், கேன் வில்லியம்ஸன், ஜோர்ஜ் வேக்கர், மற் ஹென்றி (முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும்), டிம் சௌதி (மூன்றாவது போட்டிக்கு மட்டும்)  

- See more at: http://www.tamilmirror.lk/161600#sthash.ZNN3ebpg.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குலசேகரா

December 19, 2015

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இலங்கை அணியில் நுவான் குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

Nuwan-Kulasekara-of-Sri-Lanka-celebrates-dismissing-Ian-Bell-of-England-during-the-2nd-Royal-London-One-Day-International-m

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி முடிந்தவுடன் ஒருநாள் தொடர் 26ம் திகதி தொடங்குகிறது. முன்னதாக நடந்த நியூசிலாந்து போர்டு பிரெசிடென்ட் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிங்க பிரசாத்க்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகினார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக புதுமுக வீரர் விஷ்வா பெர்னாண்டோ டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஒருநாள் தொடரில் அனுபவ வீரர் வேண்டும் என்பதால் நுவான் குலசேகராவை இலங்கை அணி தெரிவு செய்துள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6126

  • தொடங்கியவர்
நியூசிலாந்துக்கெதிராக மலிங்க இல்லை?
 

article_1450952480-TamilnimaliknoLEAD-Boநியூசிலாந்துக்கெதிரான  ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கையணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டிகளின்போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மலிங்க குணமடையத் தவறியமையை அடுத்தே, அவர் நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர் இந்தத் தொடரின் மிகுதி போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிங்கவுக்கு பதிலாக இலங்கைக் குழாமில் சகலதுறை வீரர் திஸார பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் இடம்பெறவுள் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கும் இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகள் இடம்பெறுகின்ற காலத்திலையோ காயத்திலிருந்து குணமடையும் பட்சத்தில் மலிங்க போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/162340/%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.AtHxcP4B.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நியூசீலாந்து, இலங்கை ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்
 
 
 
 
 
 
நியூசீலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகளைக் கொண்ட சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் முதலாவது போட்டி நாளை கிரைஸ்சேர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் கேன் வில்லியம்சன் காயமடைந்துள்ள நிலையில், நாளைய முதலாவது போட்டியில் பங்குகொள்வார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையினால் முதல் தர துடுப்பாட்டக்காரர் என தரப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்சன், ஹமில்டனில் நடைபெற்ற இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நாளைய போட்டியில் பங்குகொள்ளாமல், ஒய்வு எடுத்து பின்னர் இரண்டாவது போட்டியில் பங்குகொள்வார் என விளையாட்டு விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் சர்வதேச கிரிக்கட் சபையினால் நடாத்தப்படவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டியின் வெற்றிக்கிண்ண போட்டிகளில் இரு அணிகளும் தெரிவு செய்வதற்கான சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் நான்கிற்கு ஒன்று அல்லது அதற்கும் மேலான புள்ளிகளைப் பெறும் அணி இந்த வாய்ப்பினை பெறும்.
  • தொடங்கியவர்

முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 188 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக சிறிவர்தன 66 ஓட்டங்களையும், குலசேகர 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 49 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 21 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பாக கப்டில்79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் சிறிவர்தன 45 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
 
  • தொடங்கியவர்

மெக்கல்லம், கப்திலின் கருணையற்ற அதிரடி: நியூஸிலாந்திடம் இலங்கை தவிடுபொடி

  • அதிரடி மூடில் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி.
    அதிரடி மூடில் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி.
  • ஆட்ட நாயகன். நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி. | படம்: ஏ.எஃப்.பி.
    ஆட்ட நாயகன். நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி. | படம்: ஏ.எஃப்.பி.

கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தி்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஹென்றியின் அபார தொடக்க ஓவர்களில் 27/5 என்று சரிந்து பிறகு சிறீவதனா (66), குலசேகரா (58) ஆகியோரின் இன்னிங்ஸ்களினால் 47 ஓவர்களில் 188 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் மெக்கல்லம், கப்தில் தொடக்க ஜோடியினர் முதல் 10 ஓவர்களில் கருணையற்ற அதிரடியில் 108 ரன்களைச் சேர்க்க 21 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இலங்கையை தவிடுபொடியாக்கியது.

ஒருநாள் போட்டியை டி20 போட்டியாகக் கருதி விளையாடியிருப்பார் போலும் மெக்கல்லம்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் பேட் செய்ய முடிவெடுத்தார். குணதிலக, தில்ஷன் களமிறங்கினர். 8 ரன்கள் எடுத்த குணதிலக அதிவேக பவுலர் மில்னவின் பந்துவீச்சில் லூக் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக 9 ரன்கள் எடுத்த தில்ஷன், ஹென்றியின் அருமையான ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார், டாப் எட்ஜ் எடுத்து மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது.

சண்டிமால், திரிமானே சேர்ந்தனர், ஆனால் மில்ன மணிக்கு 150 கிமீ வேகத்தை அடிக்கடி தொட்டார். ஹென்றியையும் அடிக்க முடியவில்லை இதனால் 19 பந்துகளைச் சந்தித்த திரிமானே ஹென்றியிடம் எல்.பி.ஆனார். அது ஒரு இன்கட்டர் பந்தாகும். அடுத்த பந்திலேயே கேப்டன் மேத்யூஸ் ஃபுல் பந்தை எட்ஜ் செய்ய பந்தை ஸ்லிப்பில் இடது புறம் டைவ் அடித்துப்பிடித்தார் லேதம். ஹேட்ரிக் பந்தை சிறீவதனா நேர் பேட்டில் தடுத்தாடி முறியடித்தார். பிறகு 5 ரன்களுக்கு 16 பந்துகள் ஆடிய சண்டிமாலும் ஹென்றியின் அவுட்ஸ்விங்கருக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10-வது ஓவர் முடிவில் இலங்கை 29/5 என்று நிலைதடுமாற்றத்தில் இருந்தது. ஹென்றி முதல் 7 ஓவர்களில் 1 மெய்டன் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.

சிறீவதனாவும் 10 ரன்களில் காலியாகியிருப்பார் ஆனால் மெக்லினாகன் பந்தில் மிட்விக்கெட்டில் நிகோல்ஸ் கேட்சைக் கோட்டைவிட்டதால் 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். கபுகேதரா இடையில் 8 ரன்களுக்கு பிரேஸ்வெல் பந்தில் அவுட் ஆக இலங்கை 65/6 என்று ஆனது. ஆனால் சிறீவதனா, நுவன் குலசேகரா ஜோடி இணைந்து 21 ஓவர்களில் 98 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சிறீவதனா 66 ரன்களில் பிரேஸ்வெல்லிடம் வீழ்ந்தார்.

குலசேகரா தொடக்கம் முதலே பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார். மில்னவின் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிக்சர் விளாசினார். ஸ்லாக் ஸ்வீப், கவர் டிரைவ் என்று நியூஸிலாந்தை வெறுப்பேற்றினார். 73 பந்துகள் சந்தித்த குலசேகரா 2 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து மெக்லினாகன்னிடம் வீழ்ந்தார். இலங்கை 47-வது ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹென்றி 4 விக்கெட்டுகளையும், பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மெக்கல்லம், கப்திலின் அனாயாச அதிரடி:

மெக்கல்லம் தனது வழக்கமான ஒதுங்கிக் கொண்டு ஆடும் ஷாட்களையும், ஷார்ட் ஆர்ம் புல்களையும் வெளுத்து வாங்க, மார்டின் கப்தில் தனது டைமிங்கினால் அடித்து ஆடினார். இந்த பவுலர், இந்த லெந்த் என்றெல்லாம் கணக்கில்லை, எங்கு போட்டாலும் அடி என்ற ரீதியில் 4-வது ஓவரிலிருந்து 9-வது ஓவர் வரை 80 ரன்களை விளாசினர். இதில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும். இதனால் 9.1 ஓவரில் 100 ரன்களை எட்டியது நியூஸிலாந்து.

மைதானத்தில் இந்த இடத்தில் பவுண்டரி வரவில்லை என்று கூறமுடியாத அளவுக்கு அனைத்து இடங்களிலும் பந்துகள் பறந்து கொண்டிருந்தன. குலசேகரா 3 ஓவர்கள் 27 ரன்கள், லக்மல் 3 ஓவர்கள் 24 ரன்கள், மேத்யூஸ் ஒரு ஓவர் 17 ரன்கள், மேத்யூஸ் வந்தவுடன் மிகப்பெரிய சிக்சர் அடித்த மெக்கல்லம், அஜந்தா மெண்டிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் என்று 23 பந்தில் அரைசதம் கண்டார்.

கப்திலும் திடீரென ஆக்ரோஷம் காண்பித்தார் சிறீவதனாவின் ஓரே ஓவரில் மேலேறி வந்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார் மார்டின் கப்தில். மெக்கல்லம் 25 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து சிறீவதனாவிடம் அவுட் ஆக நியூஸிலாந்து 10.1 ஓவர்களில் 108/1.

லேதம் 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து தில்ஷனிடம் பவுல்டு ஆனார். நிகோல்ஸ் 21 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மார்டின் கப்தில் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்து சிறீவதனாவிடம் அவுட் ஆனார். டெய்லர் 5 ரன்கள் நாட் அவுட். 21 ஓவர்களில் 191 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/article8031754.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து

 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி  க்றைஸ்ட் சேர்ச்சிலுள்ள (Christchurch) ஹக்லே ஓவல் (Hagley Oval)  மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

229939.jpg

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் நாணயசுழச்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மாணித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் 20க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தமையால் 27.4 ஓவர்களுக்கு 117 ஓட்டங்களுக்கு சரிந்தது.

229957.3.jpg

இந்த போட்டியில் 118 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 8.2 ஓவர்களில் 118 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் கப்டில் 30 பந்துகளில் 93 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இவர் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.

229735.jpg

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி 4 விக்கெட்டுக்களையும் மெக்கிலங்கஹென் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாள கப்டில் தேர்வானார்.

229949.jpg

http://www.virakesari.lk/article/1401

  • தொடங்கியவர்

30 பந்துகளில் 93 நாட் அவுட்; கப்தில் காட்டடியில் உடைந்து நொறுங்கிய இலங்கை

 

 
  • 30 பந்துகளில் 93 ரன்கள் விளாசிய மார்டின் கப்தில். ஷாட் ஆடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
    30 பந்துகளில் 93 ரன்கள் விளாசிய மார்டின் கப்தில். ஷாட் ஆடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
  • ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸர் விளாசும் கப்தில். | படம்: ஏ.எஃப்.பி.
    ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸர் விளாசும் கப்தில். | படம்: ஏ.எஃப்.பி.

கிறைஸ்ட் சர்ச்சில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, நியூஸிலாந்து 118 ரன்கள் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி 8.2 ஓவர்களில் விளாசி இலங்கை அணியை நொறுக்கியது.

உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆட்டம் முடிந்தது. மொத்தமே 36 ஓவர்களில் ஆட்டம் முடிந்தது. மார்டின் கப்திலின் 30 பந்துகள் 93 ரன்களில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 310.

கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டுவெண்டி 20 போட்டி போல் மெக்கல்லமும், கப்திலும் ஆட, இது டி10 கிரிக்கெட் போல் தாறுமாறு அடிதடி ரன் வேட்டை போட்டியாக அமைந்தது. இலங்கை இன்னும் கொஞ்சம் ஸ்கோரை எடுத்திருந்தால் டிவில்லியர்ஸின் 31 பந்து உலக சாதனை சதம் இன்று மார்டின் கப்திலினால் முறியடிக்கப்பட்டிருக்கும். இன்று மெக்கல்லம் தொடக்க வீரராகக் களமிறங்கவில்லை என்பது இலங்கைக்கு ஒரே ஆறுதல்.

டாஸ் வென்று இலங்கை முதலில் பேட் செய்ய முடிவெடுக்க மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, மெக்லினாகன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 27.4 ஓவர்களில் இலங்கை 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூஸிலாந்து பந்துவீச்சில் பெரிய அச்சுறுத்தல் இல்லை. ஆனால் பெரிய அளவுக்கு கட்டுக்கோப்பு இருந்தது. இலங்கை அணியின் பேட்டிங் படுமோசமாக அமைந்தது. நியூஸிலாந்து அணியின் பீல்டிங் அதன் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் மீறிய ஒரு அதி அபாரமான, நம்பமுடியாத பீல்டிங்காக இருந்தது.

குறிப்பாக மிட்செல் சாண்ட்னர் கவரில் பிடித்த கேட்ச், கல்லி திசையில் மார்டின் கப்தில் டைவ் அடித்து பந்தைத் தடுத்து ரன் அவுட் செய்த விதம் என்று நியூஸிலாந்து பீல்டிங் உச்சத்தில் இருந்தது.

ஹென்றி பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பிறகு ஷாட்டை செக் செய்தார் தில்ஷன் இதனால் பந்து மட்டையில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 7 ரன்களில் அவர் வெளியேறினார். 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த தனுசிகா குணதிலக, ஹென்றியின் பந்தை பளார் என்று அடித்தார் பந்து கவர் திசையில் சாண்ட்னருக்கு வலப்புறம் செல்ல அருமையான டைவிங் கேட்ச் ஒன்றைப் பிடித்தார் அவர். மெக்லினாகன் பந்தை திரிமானே தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து 2-வது முறையாக இந்தத் தொடரில் 1 ரன்னில் அவுட் ஆனார்.

தினேஷ் சந்திமால் 9 ரன்களுக்கு டக் பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.ஆனார். மேத்யூஸ் தனது 17 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் அவரை லெக் திசையில் ஷார்ட் பிட்ச் பந்து வீசியே மடக்கி வருகின்றனர் நியூஸிலாந்து பவுலர்கள். இந்நிலையில் அவர் மீண்டும் திணறி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இலங்கை 15 ஓவர்களில் 56/5 என்று ஆனது.

சிறீவதனா, கபுகேதரா இருவருமே 12 ரன்களுக்கு ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். கடைசியில் அன்று போல் மீண்டும் குலசேகரா தெளிவாக அடித்து ஆடி அதிகபட்ச ஸ்கோரான 19 ரன்களை எடுக்க ஒருவழியாக மூன்றிலக்க ஸ்கோரை எட்டி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை.

சற்றும் எதிர்பாராத மார்டின் கப்திலின் காட்டடி: நிலைகுலைந்த இலங்கை:

காட்டடி தர்பார் தொடங்கும் முன்னரே மார்டின் கப்திலுக்கு முதல் பந்திலேயே லெக் கல்லியில் சிறீவதனா கேட்சைக் கோட்டைவிட்டார். இதனையடுத்து அடுத்த குலசேகராவின் ஓவரில் ஆரம்பித்தார் கப்தில். நடந்து வந்து லாங் ஆனில் மிகப்பெரிய அலட்சியமான சிக்ஸர் ஒன்றை அடித்தார் கப்தில். அடுத்ததாக பாயிண்டில் ஒரு புல்லட் ஷாட் பவுண்டரி. அடுத்து தேர்ட்மேனில் ஒரு மிஸ்ஹிட் பவுண்டரி.

3-வது ஓவரில் சமீரா வந்தார், வாங்கிக் கட்டிக்கொண்டார். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து லெக் ஸ்டம்பில் வீசினால் கப்தில் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார்? லாங் ஆஃபில் பந்து சிக்ஸ். அடுத்து ஸ்பின்னரை தேர்ட்மேனில் ஒரு சிக்ஸ். தேர்ட்மேனில் ஸ்பின்னரை சிக்ஸ் அடிக்கும் ஒரே வீரராக கப்திலே இருப்பார் என்று தெரிகிறது. இடையில் ஒரு வைடு. அடுத்த ஷார்ட் பிட்ச் பந்து மைதானத்திலிருந்து மறைய, அதற்கு அடுத்த பந்து நேராக பவுண்டரி, அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு மிட் ஆனில் சாத்து சாத்தினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. கப்தில் 12 பந்துகளில் 46 ரன்கள். டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனையை வைத்துள்ளார். அவரது சாதனை நிச்சயம் முறியடிக்கப்படும் என்ற ஆவல் ரசிகர்களிடத்தில் எழுந்தது.

ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தை சமீரா அருமையாக வீச கப்திலால் ரன் எடுக்க முடியவில்லை. கப்திலே சமீராவை பாராட்டினார். சமீரா ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது. நியூஸிலாந்து 3 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள். இதில் லேதம் 5 ரன்கள்.

டிவில்லியர்ஸ் உலகசாதனையை முறியடிக்க முடியாமல் செய்தவர் குலசேகரா. இவர் இரண்டு அபாரமான யார்க்கர்களை கப்திலுக்கு வீசினார். இரண்டு பந்திலுமே ஒரு ரன்னே எடுக்க முடிந்தது. 15 பந்துகளில் 48 என்ற நிலையில் சேனநாயகேவும் தன் பந்தில் கப்திலுக்கு 1 ரன்னையே விட்டுக் கொடுத்தார். இதனால் 16 பந்துகளில் 49 ரன்களையே எடுத்திருந்தார் கப்தில், ஆனால் 17 பந்துகளில் அரைசதம் கண்டு புதிய நியூஸிலாந்து சாதனையை நிகழ்த்தினார்.

அடுத்து இலங்கையின் அறிமுக ஸ்பின்னர் வாண்டர்சே கப்திலிடம் சிக்கினார், அந்த ஓவரில் 4,6,6,4,0,6 26 ரன்களை விளாசினார் கப்தில். இதில் ஒரு சிக்சர் 107 மீட்டர்கள் தூரம் சென்ற அரக்க அடியாகும். 6 ஓவர்களில் 97/0. அடுத்து சேனநாயகேவின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிச்கர்களுடன் 85 ரன்களில் டிவில்லியர்ஸின் ஒருநாள் சத உலக சாதனை அச்சுறுத்தப்பட்டது. வாண்டர்சேயை மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் அவர் 29 பந்துகளில் 92 ரன்கள் என்று இருந்தார். நியூஸிலாந்து ஸ்கோர் 116 ரன்களை எட்டியிருந்தது. இந்நிலையில் 8.2 ஓவர்களில் நியூஸிலாந்து இலக்கை எட்ட கப்தில் 30 பந்துகளில் 93 நாட் அவுட். இலங்கை படுதோல்வி அடைந்தது. கப்திலின் ஸ்ட்ரைக் ரேட் 310 என்பது குறிப்பிடத்தக்கது. லேதம் 20 பந்துகளில் 17 நாட் அவுட். சமீரா 2 ஓவர்கள் 41 ரன்கள். வாண்டர்சே 2 ஓவர்கள் 34 ரன்கள்.

உண்மையில் இலங்கை வீரர்கள் தன்னம்பிக்கையை கடுமையாக நாசம் செய்த இன்னிங்ஸாகும் இது, முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கை தோல்வியடைந்த விதம் அந்த அணியை சிறிது காலம் எழும்பவிடாமல் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/30-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-93-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8037033.ece?homepage=true

  • தொடங்கியவர்
 
பெருத்த அவமானம்: பயிற்றுநர்
 
 

article_1451304654-Tamilbre10isLEAD-Box.நியூசிலாந்து அணிக்கெதிராகக் கிடைத்த தோல்வியை, அவமானந்தரும் தோல்வியெனத் தெரிவித்த இலங்கை அணியின் பயிற்றுநர், இவ்வாறானதொரு பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

'இன்று, மிகவும் அவமானந்தரும் தினமாகும். அது, சற்று ஏமாற்றத்தைத் தந்தது. இந்தளவிலான திறமை வெளிப்பாட்டை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. டெஸ்ட் தொடரிலாவது, அதைச் சமப்படுத்தும் நிலையில் காணப்பட்டோம், வெல்லும் நிலையிலும் காணப்பட்டோம். ஆனால், கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், அவமானந்தரும் பெறுபேறாக இது அமைந்தது" என, ஜெரோம் ஜயரத்ன தெரிவித்தார்.

முதலாவது போட்டியில் இலங்கை அணி 188 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் 10 ஓவர்களில், போட்டியின் போக்கை, இலங்கை இழப்பதாகத் தெரிவித்த ஜயரத்ன, அதன் பின்னர், இனிங்ஸைக் கட்டியெழுப்பும் நிலையே காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் ஓய்வின் பின்னர், அவ்விடங்களில் துடுப்பெடுத்தாட நியமிக்கப்பட்ட லஹிரு திரிமான்ன, டினேஸ் சந்திமால் ஆகியோர், சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாமை பற்றியும், தனது விமர்சனங்களை ஜயரத்ன வெளிப்படுத்தினார்.

- See more at: http://www.tamilmirror.lk/162521/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B0-#sthash.C6rIZ6ex.dpuf

Edited by நவீனன்

 

6 hours ago, நவீனன் said:

30 பந்துகளில் 93 ரன்கள் விளாசிய மார்டின் கப்தில்.

 

6 hours ago, நவீனன் said:

இலங்கை இன்னும் கொஞ்சம் ஸ்கோரை எடுத்திருந்தால் டிவில்லியர்ஸின் 31 பந்து உலக சாதனை சதம் இன்று மார்டின் கப்திலினால் முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு பந்தில் எப்படி 7 றன்கள். நடக்கலாம் ஆனால் சந்தர்ப்பம் மிக மிக அரிது.

நவீனன் 
உங்களிடம் ஒரு கேள்வி -No ball இங்கு கணக்கில் எடுப்பார்களா? அதாவது சந்தித்த பந்துகளின் எண்ணிக்கையில்.

பாவம்

Latham வெறும் 17
Extras 8

 

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
21 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஒரு பந்தில் எப்படி 7 றன்கள். நடக்கலாம் ஆனால் சந்தர்ப்பம் மிக மிக அரிது.

நவீனன் 
உங்களிடம் ஒரு கேள்வி -No ball இங்கு கணக்கில் எடுப்பார்களா? அதாவது சந்தித்த பந்துகளின் எண்ணிக்கையில்.

பாவம்

Latham வெறும் 17
Extras 8

 

 

 

ஜீவன் உண்மையில் எனக்கு பதில் தெரியாது. ஆனால் நான் நினைக்கிறேன் இல்லை என்றுதான்.

ஆனால் இந்த போட்டியில் எந்த நோபோலும் போடபடவில்லை. 6 வைட் போல் தான் போட்டு இருக்கிறார்கள் இலங்கை பந்து வீச்சாளர்கள்.

 

அடுத்தது 7 ஓட்டங்கள் எடுக்கலாம்,  அண்மையில் ஒரு மேற்கு இந்திய வீரர்க்கு அப்படி 7 ஓட்டங்கள் கிடைத்ததாக ஒரு செய்தி
   பதிந்த நினைவு.

http://sports.ndtv.com/cricket/news/235562-kraigg-brathwaite-sets-test-record-with-seven-runs-from-one-ball

  • தொடங்கியவர்
மலிங்கவுக்குப் பதில் சந்திமால்
 
 

article_1451408994-TamilMalingarechand.jநியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக, டினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணித்தலைவர் லசித் மலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கு அவரால் முடியாது என்பதாலேயே, தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில், அவரது முழங்காலில் ஏற்பட்ட ஏற்பட்ட காயத்தினாலேயே, அவரால் பங்குபற்ற முடியாமல் போயுள்ளதோடு, அவருக்குப் பதிலாக சுரங்க லக்மால் இணைக்கப்பட்டுள்ளார். மேலதிகமாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுக்கும், இத்தொடருக்கான இலங்கைக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/162646/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%B2-#sthash.G6iIor5U.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நாளை இலங்கை எதிர் நியூசிலாந்து போட்டி

article_1451392362-tamilpre3odns.jpgநியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி, நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இத்தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக, இப்போட்டி அமையவுள்ளது.

நெல்சனிலுள்ள சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி, படுமோசமான தோல்விகளைச் சந்தித்திருந்தது. குறிப்பாக 2ஆவது போட்டியில், 117 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி, 8.2 ஓவர்களில் அந்த ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தது. இந்தத் தோல்வியை, அவமானகரமானது என, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸூம் பயிற்றுநர் ஜெரோம் ஜயரத்னவும் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, இந்த அவமானத்திலிருந்து மீண்டு, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று, தொடரைத் தொடர்ந்தும் உயிர்ப்பில் வைத்திருக்கும் சவாலுடன், மூன்றாவது போட்டியில் இலங்கை களமிறங்குகிறது.

இலங்கை அணியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், எவ்வாறான மாற்றங்களென இதுவரை தெரியவரவில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/162627/%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.xfkm8SBM.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/results?search_query=guptil+30+ball+93

முதலாவது ஓவரிலேயே ஸ்லிப் இல்லாமல் ஒரு வேகப்பந்து விச்சாளர் பந்து வீசும் நிலைமை ஒரு சுழற்பந்து வீசசாளருக்கே ஒரு ஸ்லிப் போடும் மற்ற நாட்டு அணித்தலைவர்கள் ஆனால் மத்தியூஸின் பந்த் காப்பு வியூகம் எதிரணிக்கு எந்த பயமுமில்லாமல் பந்தை அடித்து நொறுக்கி பந்தை சுவிங் செய்வதை தடுக்க உதவுகிறது

  • தொடங்கியவர்
நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு
 

article_1451479448-Tamilbjjo8sfm.jpgநியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட இந்தக் குழாமுக்குத் தலைவராக கேன் வில்லியம்ஸன் பெயரிடப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் பிரெண்டன் மக்கலம் பங்கேற்கமாட்டேன் என அறிவித்திருந்ததையடுத்து, அவர் குழாமிலும் இடம்பெறவில்லை.

இதேவேளை, காயத்திலிருந்து குணமடைந்த கொரே அன்டர்சன், தனித்து துடுப்பாட்டவீரராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, கிராண்ட் எலியட்டும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும் காயத்திலிருந்து இன்னும் குணமடைந்து வரும் ஜேம்ஸ் நீஷம், நதன் மக்கலம் ஆகியோரும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட மற் ஹென்றியும் குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க தொடரில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குழாமில் சுரங்க லக்மாலும் தனுஷ்க குணதிலகவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையுடான இறுதி இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் ட்ரெண்ட் போல்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மற் ஹென்றியும் ஜோர்ஜ் வோக்கரும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இருபதுக்கு-20 குழாம்- கேன் வில்லியம்ஸன் (தலைவர்), கொரே அன்டர்சன், ட்ரெண்ட் போல்ட், கிரான்ட் எலியட், மார்ட்டின் கப்தில், மிட்செல் மக்லெனகன், அடம் மிலின், கொலின் முன்றோ, லுக் ரொங்கி, மிட்செல் சன்டர், இஷ் சோதி, டிம் சௌதி, ரொஸ் டெய்லர்

- See more at: http://www.tamilmirror.lk/162726/%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.b83AeRfo.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் ஆதிக்கத்திற்கு தடைபோட்டது இலங்கை 

 

நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று நியூசிலாந்தின்  ஆதிக்கத்திற்கு  தடைபோட்டது.

Milinda_Siriwardana.jpg

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

 

இத் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் முக்கியமானதுமான போட்டி நியூசிலாந்தின் நெல்சன் நகரில் இடம்பெற்றது.

Danushka_Gunathilaka.jpg

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.

 

நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் வில்லியம்ஸன் 59 ஓட்டங்களையும் லதெம் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Tillakaratne_Dilshan.jpg

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரதீப், சாமிர மற்றும் வெண்டர்ஷே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இந்நிலையில் 277 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின்  உதவியுடன் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

Dushmantha_Chameera.jpg

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டில்ஷான் 91 ஓட்டங்களையும் குணதிலக்க 65 ஓட்டங்களையும் திரிமன்னே ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும் சந்திமல் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

 

பந்து வீச்சில் நியூசிலாந்து  அணி சார்பாக மெக்லன்கன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

 

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து  அணி 2-1 என முன்னிலைபெற்றுள்ளது.

 

இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குணதிலக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை டில்சான் இன்றைய போட்டியின் போது படைத்துள்ளார்.

Tillakaratne_Dilshan_s.jpg

இதற்கு முன்னர் சனத் ஜயசூரியவினால் 2001 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1202 எனும் ஓட்டங்களே ஆரம்பத்துடுப்பாட்ட வீரரால் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாக காணப்பட்டது.

 

இன்றைய போட்டியில் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த டில்சான் 24 போட்டிகளில் பங்குபற்றி இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/1544

  • தொடங்கியவர்

தில்ஷன், திரிமானே, குணதிலக அபாரம்: இலங்கைக்கு பெரிய வெற்றி

111 ரன்கள் 2-வது விக்கெட் கூட்டணி அமைத்து வெற்றிக்கு வித்திட்ட இலங்கை வீரர்கள் தில்ஷன், திரிமானே. | படம்: ஏ.எஃப்.பி.
111 ரன்கள் 2-வது விக்கெட் கூட்டணி அமைத்து வெற்றிக்கு வித்திட்ட இலங்கை வீரர்கள் தில்ஷன், திரிமானே. | படம்: ஏ.எஃப்.பி.

நெல்சன், சாக்ஸ்டன் ஓவலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை 2-1 என்று உயிர்ப்புடன் வைத்துள்ளது.

நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து பெரிய வெற்றியை ஈட்டியது.

முதல் 2 போட்டிகளில் இலங்கையை ஆட்டிப்படைத்த ஹென்றியோ, தனது அபாரத் தலைமைத்துவ திறனாலும் அவ்வப்போதைய அதிரடியாலும் மிரட்டி வரும் மெக்கல்லமோ இந்த போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2 படுமோசமான தோல்விகளுக்குப் பிறகு இலங்கை அணி 3-வது போட்டியில் மீண்டெழுந்துள்ளது குறிப்பிடத்தகுந்த எழுச்சியாகும்.

277 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது தில்ஷனின் 91 ரன்கள், திரிமானேயின் 87 ரன்கள் ஆகியவை முக்கியமான பங்களிப்புகள் என்றாலும், விரட்டலுக்கான புத்துணர்வை அளித்தது குணதிலகவின் அதிரடி ஆட்டமே. இவர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து அடிப்படை அமைத்துக் கொடுத்தார். குணதிலக ஆஃப் திசையில் பாயிண்ட், கவர் பாயிண்ட் இடையே 5 பவுண்டரிகளை விளாசினார். 4 மிகப்பெரிய சிக்சர்களில் ஒன்று டக் பிரேஸ்வெல் பந்தை நேராக அடித்தது, 2 சிக்சர்கள் அற்புதமான ஹூக் ஷாட்களாகும். 6 ஓவர்களில் 50 ரன்களை இலங்கை எட்டியது.

13-வது ஓவரில் அவர் மெக்லினாகன் பந்தை திருப்பி விட முயன்று வைடு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த போதும் இலங்கை ஓவருக்கு 8 ரன்கள் பக்கம் எடுத்திருந்தது. திரிமானே இறங்கியவுடன் அவரது சாதக ஷாட்டை முடக்கினார் கேன் வில்லியம்சன், ஆஃப் திசையில் பீல்டர்களை நெருக்கி அவர் ஷாட்கள் தடுக்கப்பட்டன. அவர் இடைவெளிகளைக் கண்டுபிடிக்க நேரம் எடுத்துக் கொண்டார். அப்போதே அவரை வீழ்த்தியிருக்க வேண்டும், ஆனால் அவரை செட்டில் ஆகவிட்டனர்.

தில்ஷன் நிதானப்போக்கைக் கடைபிடித்தார், அவர் எந்த வித சிரமமுமின்றி ஆடினார் 9 பவுண்டரிகளும் லெக் திசையில் வந்தன. 92 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த அவர் ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் சிங்கிள் இருப்பதாக நினைத்து ஓட, திரிமானே அவரைத் திருப்பி அனுப்ப ரீச் செய்ய முடியாமல் ரன் அவுட் ஆனார். ஆனால் இலங்கை 33.5 ஓவர்களில் 209/2 என்று வலுவான நிலையில் இருந்தது.

கடைசியில் திரிமானே 103 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தும், தினேஷ் சந்திமால் 27 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலங்கை 277/2 என்று வெற்றி பெற்றது. மந்தமான பிட்சில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்சாக வீசினர், ஸ்பின் பந்து வீச்சிலும் தாக்கம் இல்லை. சாண்ட்னர் 10 ஓவர்களில் 59 ரன்களையும், பிரேஸ்வெல் 6.5 ஓவர்களில் 45 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். கேன் வில்லியம்சன் 8 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்தார். சவுதீ, மில்ன ஆகியோரும் தங்களுக்கிடையேயான 12 ஓவர்களில் 94 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

ஆட்ட நாயகனாக அதிரடி இன்னிங்ஸ் ஆடிய குணதிலக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக நியூஸிலாந்து அணியில் அதிரடி மன்னன் மார்டின் கப்தில் 30 ரன்களில் சமீரா பந்தில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேன் வில்லியம்சன் வழக்கம் போல் அனாயசமாக ஆடினார், ஆஞ்சேலோ மேத்யூஸ் ஓவரில் ஆஃப் திசையில் 3 தொடர் பவுண்டரிகள் வில்லியம்சனின் பேட்டிங் ஸ்டைலை நிரூபித்தது. அவர் அதிகபட்சமாக 73 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து சிறீவதானவிடம் வீழ்ந்தார். லேதம் அதிரடியாக 47 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 ரன்கள் விளாசி லெக் ஸ்பின்னர் வாண்டர்சேயிடம் வெளியேறினார். லேதம், மற்றும் டெய்லர் (0) ஆகியோரை வாண்டர்சே ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

லூக் ரோங்க்கி 7 ரன்களில் அவுட் ஆக, 191/6 என்ற நிலையில் சாண்ட்னர் (38), பிரேஸ்வெல் (30), மில்ன (17), சவுத்தி (18) ஆகியோர் பங்களிப்பினால் நியூஸிலாந்து 276/8 என்று முடிந்தது. இலங்கை தரப்பில் பிரதீப், சமீரா, வாண்டர்சே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சிறீவதனா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8050134.ece

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

4 வது ஒரு நாள் போட்டி மழையால்  இன்னும் ஆரம்பிக்கவில்லை

  • தொடங்கியவர்

இலங்கை - நியூஸிலாந்து 4வது போட்டி கைவிடப்பட்டது

 

இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது.

இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இடம்பெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இதன்படி 2-1 என நியூஸிலாந்து முன்னிலையில் இருக்க, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நெல்சன் சேக்டன் ஓவல் (Saxton Oval) மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டி மழை காரணமாக சில மணிநேரங்கள் தாமதித்தே ஆரம்பமாகிய நிலையில், 50 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்ட இந்த ஆட்டம் 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் நியூஸிலாந்தைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. எனினும் அந்த அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 9 ஓவர்களை எதிர்கொண்டு 75 ஓட்டங்களை பெற்ற நிலையில் நியூஸிலாந்து மூன்று விக்கெட்டுக்களை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=75670

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரும் நியூசிலாந்து வசம்

 

இலங்கை அணிக்கெதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது.

Matt_Henry.jpg

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முனைப்புடன் ஒருநாள் தொடரில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதனையும் 3-1 என கைப்பற்றியுள்ளது.

 

 

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

 

இத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

 

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், முக்கியமானது இறுதியுமான 5 ஆவது போட்டி இன்று இடம்பெற்றது.

 

 

 

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது.

 

நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் குப்தில் 102 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் மற்றும் டெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர 3 விக்கெட்டுகளையும்  பிரதீப் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இந்நிலையில் 295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு  ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்க இலங்கை அணி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

இறுதியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரை நியூசிலாந்திடம் 3-1 என பறிகொடுத்தது.

 

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியுஸ் 95 ஓட்டங்களையும் சந்திமல் 50 ஓட்டங்களையும்  பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்து வீச்சில் நியூசிலாந்து  அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டுகளையும் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-1 என கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/1678

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.