Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலியெடுக்கும் யாழ்.தேவி! கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பலியெடுக்கும் யாழ்.தேவி! கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி!
 
train_accident_001.jpg
கிளிநொச்சியில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஏ- 9 பாதையிலிருந்து கிளிநொச்சி உதயநகர் மேற்கிற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இச் சம்பவத்தில் பலியான வயோதிபர் உதயநகர் கிழக்கைச்சேர்ந்த 76 வயதான ராமசாமி பழனியாண்டி எனவும் வடக்கின் ரயில் பாதைகளில் இடம்பெற்ற 19 வது பலி எனவும் தெரிய வருகிறது.

குறித்த சடலத்தை பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல தொடர்பு கொண்ட பொது கிளிநொச்சி வைத்திய சாலையை ஊழியர்களின் அசமந்த போக்கால் இறந்தவரின் உடல் மணிக்கணக்கில் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது எனவும் தெரியவருகிறது.

கிளிநொச்சி நகரத்திலும் வடக்கின் ரயில் மார்க்கத்திலும் பாதுகாப்பற்ற கடவையின்றி ரயில்மோதி பலர் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தவிர கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற பல ரயில் கடவைகள் இன்னமும் பாதுகாப்பு கடவைகள் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

accident_in_kilinochchi_001.JPG

accident_in_kilinochchi_002.JPG

accident_in_kilinochchi_004.JPG

accident_in_kilinochchi_005.JPG

accident_in_kilinochchi_006.JPG

 

தமிழ்வின்.காம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.