Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம்

Featured Replies

யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம்

 

4

ஆசிரியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடரில் 25 தொடக்கம் 30 வயது பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணம் சார்பாக யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போன்றவற்றில் தங்கப் பதக்கத்தையும் 4× வீராங்கனைகள் பங்குபற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6284&cat=3

  • தொடங்கியவர்

வடமாகாணத்துக்கு மற்றும் ஒரு வெண்கலம்

 

3

ஆசிரியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடரில் 35 தொடக்கம் 40வயதுப் பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணம் சார்பக கலந்துகொண்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த எஸ். செல்வச்சந்திரன் தட்டெறில், குண்டு போடுதல் போன்றவற்றில் வெள்ளி பதக்கங்களையும் ஈட்டி எறிதல், 4× வீரர்கள் பங்குபற்றும் 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6281&cat=3

  • தொடங்கியவர்

தேசியமட்ட வலைப்பந்தாட்டத் தொடர் வடக்குக்கு தங்கம்

December 21, 2015

ஆசிரியர்களுக்கான தேசியமட்ட வலைப்பந்தாட்டத் தொடரில் வடமாகாண பெண்கள் அணி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.  நுவரேலியா நகரசபை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் வடமாகாண அணியை எதிர்த்து வயம்ப மாகாண அணி மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் வடமாகாணத்தின் ஆதிக்கம் கணிசமான அளவு நிலைபெற்றிருந்தது. வயம்புவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

p

இதனால் முதல் செற்றை 7:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது வடமாகாணம்.  இடைவேளையின் பின்னர் வயம்ப அணியினர் ஆட்டத்தை வேகப்படுத்தினர். இதனால் சில நிமிடங்கள் வயம்ப அணியினர் பக்கம் ஆட்டம் சாய்ந்தது. அதன் பின்னர் வீறுகொண்ட வடமாகாண அணி தனது ஆட்டத்தை வேகப்படுத்தியது. இதனால் வடமாகாணத்தின் பக்கம் படிப்படியாக வெற்றி வந்துகொண்டிருந்தது. இரண்டாவது செற்றை 9:5 என்று கைப்பற்றிய வடக்கு முடிவில் 16:7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

http://www.onlineuthayan.com/sports/?p=6273&cat=3

வாழ்த்துக்கள் டீச்சர், 

என்னதான் இருந்தாலும் எங்கட காலத்தில் ஆசிரியை ஆக கடமையாற்றிய செல்வி செல்லத்துரை போல் துணிச்சலான பெண் ஆசிரியைகள் இனிவரமாட்டார்கள். 

உள்ளாடை அணியாத மாணவர்களை துவம்சம் செய்துவிடுவார். 

12391239_1067318726652768_71959411132203

தயாளன் சண்முகமும் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார்

All Island teachers meet 2015! 2Gold medals and a silver.over all champion of the age group

 
  • தொடங்கியவர்

தேசிய மட்ட ஆசிரியர்களுக்கான போட்டிகளில் பதக்கங்களை அள்ளியது கோப்பாய் கலாசாலை

December 22, 2015

தேசியமட்ட ஆசிரியர்களிற்கான மெய்வன்மைப் போட்டி கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை 11 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், 14 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தமாக 49 பதக்கங்களைக் கைப்பற்றியது.

 

3

25 வயது தொடக்கம் 30 வயதுப் பிரிவில் ரி.இந்துக்கான் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டங்களில் தங்கப் பதக்கங்களையும் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கத்தையும், எஸ்.பரீடா தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும், குண்டு போடுதலில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 400 மீற்றர், 100 மீற்றர் அஞ்சல் ஓட்டங்களில் பெண்கள் அணியினர் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்கள் அணி 100மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

31 வயது தொடக்கம் 36 வயதுப் பிரிவில் எஸ்.ஜமீனா 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், எஸ்.துஸாந்தினி தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும், 400 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 800 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், ஆர்.அனுசியா நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கத்தையும், உயரம் பாய்தல், முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தையும், எஸ்.சர்மிளா 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கத்தையும், வை.சுதாகர் 800 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், 400 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தையும், 100மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

36 வயது தொடக்கம் 40 வயதுப் பிரிவில் எஸ்.ஜெயராஜ் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும், 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். எஸ்.எழில்பாரதி ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும், குண்டு போடுதலில் வெண்கலப் பதக்கத்தையும், எஸ்.சுதேஸ்வரன் 800 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், மோகனா தட்டெறிதலில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் பெண்கள் அணி தங்கப் பதக்கத்தையும் 100மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

41 வயது தொடக்கம் 45 வயதுப் பிரிவில் ர்p.நாகேஸ்வரி நீளம் பாய்தல், தட்டெறிதல், குண்டு போடுதல் போன்றவற்றில் வெள்ளிப் பதக்கத்தையும், ஏ.அகஸ்;ரின் 400 மீற்றர் 800 மீற்றர் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 46 வயது தொடக்கம் 50 வயதுப் பிரிவில் எஸ்.புவனேஸ்வரி 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.  50 வயது தொடக்கம் 55 வயதுப் பிரிவில் எஸ்.ஜெயக்குமாரி ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6368&cat=3

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிகளில் பங்குபற்றிப் பரிசுகள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

  • தொடங்கியவர்

ஆசிரியகளுக்கான விளையாட்டுப்போட்டி சம்பியனான சண் தயாளன்

December 22, 2015

12391239_1067318726652768_7195941113220330194_n

2015 ம் ஆண்டுக்கான அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டி நுவரெலியாவில் நடைபெற்றது. இதில்  யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொண்ட  யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவனும்  உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளரரும் , துடுப்பாட்ட,  உதைப்பந்தாட்ட வீரரும் மற்றும் நடுவருமாகிய சண் தயாளன் அவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் அடங்களாக மூன்று பதக்கங்களை தன் வசப்படுத்தியதுடன் சம்பியன் பட்டத்தையும் தன் வசப்படுத்தியுள்ளார். இவர் பாடசாலை காலங்களில் மைதான நிகழ்வுகளில்  சாதனைகள் புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=6434

  • தொடங்கியவர்

100 , 200 மீற்றர் ஓட்டங்களில் வடமாகாணத்துக்கு தங்கம்

December 23, 2015

3

ஆரிசியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடர் அண்மையில் நடைபெற்றது. 46 வயது தொடக்கம் 50வயதுப் பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.திருமாறன் 100மீற்றர் 200 மீற்றர் ஓட்டங்களில் தங்க பதக்கங்களையும் முப்பாய்ச்சலில் வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6501&cat=3

பாய்தலில் வடமாகாணத்துக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம்

December 23, 2015

2

ஆரிசியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடர் அண்மையில் நுவரேலியாவில் நடைபெற்றது. இதில் 41 தொடக்கம் 46 வயது வரையான பிரிவில் வடமாகாணம் சார்பாக கலந்துகொண்ட கிளிநொச்சி கல்வி வலய சேவைக்கால உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ப.பார்த்தீபன் உயரம் பாய்தலில் தங்க பதக்கத்தையும், முப்பாய்ச்சலில் வெள்ளி பதக்கத்தையும், நீளம் பாய்தலில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6498&cat=3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.