Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது - எம்.எஸ்.சுபைர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
subair-a-630x300.jpg

subair-aவடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் ஸாறா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சுபைர் 1988ம் ஆண்டு .இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் படி இரவோடு இரவாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன அவர்களினால் வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தத்தினால் இந்த இரண்டு மாகாணங்களும் இணைப்பட்டது.

இந்த இணைப்பினால் கிழக்கு மாகாணத்தில் 33 வீதமாக இருந்த முஸ்லிம் சமூகம் வடக்கு கிழக்கு இணைபபின் மூலம் 17 வீதமாக முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தைப்பற்றி எந்த வித கேள்விகளும் கேட்காமல் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்களை பற்றி பேசாமல் இரவோடு இரவாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது.

இந்த இணைப்பானது கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அன்றிலிருந்து வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படல் வேண்டும் என பல சந்தாப்பங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விட்டனர். குறிப்பாக தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்துக்கு அப்போது வலியுறுத்தி வந்தார்.

அன்று மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்த இன்றைய கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருக்கும் இயந்த என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் 2006ம் ஆண்டு வடக்கு கிழக்கும் பிரிக்கப்படல் வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்;ற தீர்ப்பு வந்தது.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனமான போக்கை சில அரசியல் கட்சிகள் சாதகமாக பயன்படுத்தி வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அறியவருகின்றது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் முதுகில் ஏறிச் சென்றுதான் வடகிழக்கு இணைப்பை செய்ய முடியுமே தவிர வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு ஒரு போதும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

இந்த வடக்கு கிழக்கு இணைப்புக்கு அரசியல் அதிகாரங்கள் பாவிக்கப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

எதிர் வரும் காலங்களில் கிழக்கு மாகாண சபையில் வடக்கும் கிழக்கும் பிரிந்துதான் இருக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையைக் கொண்டு சென்று அதன் மூலம் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்போம்

எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சய ரூபங்களையும் இந்த விடயத்தில் காணக் கூடியதாக இருக்கும்.

வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதன் மூலமே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் தமது இனரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

http://www.supeedsam.com/?p=24800

நல்ல தெளிவோடதான் இருக்கிறாங்கள்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.