Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வித்துடலுக்கு மலர் தூவி வணங்குவோம் வாருங்கள்

Featured Replies

மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள்

தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன.

அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும்.

வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்:

Alexandra Palace

Alexandra Palace Way

Wood Green

London N22 7AY

விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்தின் விடியலை தரிசனமாகக் கொண்ட தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வித்துடலுக்கு மலர் தூவி வணங்குவோம் வாருங்கள்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

ஐரோப்பா எங்கும் வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், திரண்டு ஒரு மாபெரும் மனிதனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய நேரம் இது.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டு வந்து, எங்கள் சுதந்திர வேட்கையை அகிலமெங்கும் பறைசாற்றுவோம். தனிப்பட்ட வேலைகள், பொருளாதாரத் தேடல்கள் என்று சாட்டுகள் சொல்லாமல், ஐரோப்பா எங்கும் வாழும் தமிழர்கள் திரண்டு வந்து அண்ணருக்கு அஞ்சலி செலுத்துவோம் புதன் அன்று.

அலெக்ஸான்ட்ரா மாளிகையை அதிர வைக்கும் வண்ணம் தமிழர் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று சேர்ந்து அண்ணருக்கு அஞ்சலி செலுத்துவோம் அன்று.

எங்கள் "தேசத்தின் குரல்" அடங்கவில்லை. ஒன்றாய், ஆயிரமாய், லட்சமாய் என்றும் ஒலித்திடும்! அடங்காத்தமிழர் நாம் என்று அகிலத்திற்கு எடுத்தியம்புவோம்!!!

ஒரு மாசேதுங் மரணித்த போது 10 கோடி சீனர்கள் திரண்டு வந்து அஞ்சலி செய்தனர். ஒரு லட்சியவாதிக்கு இறுதி அஞ்சலி செய்வதில் தமிழன் ஒன்றும் சீனருக்கு தாழ்ந்தவன் அல்ல என்று நிரூபிப்போம்.

புதன் அன்று நாங்கள் எழுப்பும் தேசத்தின் குரல் கண்டு அண்ணரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

அன்று எங்கள் விடுதலை ஓசை செவிடாய் போன சில வல்லரசுகளின் செவிப்பறையை கிழிக்கட்டும்.

இதுவே ஒரு மாவீரனுக்கு செய்யும் மகத்தான அஞ்சலி!

இவை என்ன தலைகளா கடல் அலைகளா என்று எண்ணும் வண்ணம் தமிழர் கூட்டம் திரள்வோம் அன்று!!!

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

தகவலுக் நன்றி

2005ம் ஆண்டு மாவீரர்தினம் நடை பெற்ற அரங்கில் கடைசி முறையாக மாவீரர்தின உரையை பாலா அண்ணா வழங்கிய இடத்தில், அவரின் இறுதி அஞ்சலி என்பது இன்னும் சோகத்தை கிழறுவதாய்த்தான் இருக்கு....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் இனத்தின் காவற்கோபுரம் இன்று சரிந்து கிடக்கிறது.

பேச்சு மேசையில் நீ எதிரிக்கு சிம்ம சொப்பனமாமே

உன்னுடன் வாதாட எதிரிக்கு எதிரிக்கு எத்தனை பயிற்சிப்பட்டறை

எச்சந்தர்ப்பத்திலும் எம்மின உரிமையை அமைதியாய் வென்றுவிட

உன்தனது உழைப்பு ஆனாலும் எதையும் தருவதாய் எதிரி இல்லை

அதனால் தானே மீண்டும் உரிமைப்போரென தம்பி முழங்கினான்.

உந்தன் கனவு நனவாய் மாற தலைவனுக்கு கைகொடுப்போம். நிம்மதியாய் நீ உறங்கு!!!!

இலண்டன் வாழ் தமிழீழமக்கள் பாலா அண்ணாவுக்கு 20ந்திகதி செலுத்த வேண்டிய கடைசி வரலாற்று தேசியக்கடமையை உணர்த்தும் வகையில் தமிழ் ஊடகங்கள் இன்னும் மக்களை தயார்படுத்த தொடங்கவில்லையே.........

  • கருத்துக்கள உறவுகள்

பாலாவின் பேரிழப்பால் ஆறாத்துயரில் தமிழ் மக்கள்

ஈழத் தமிழர் வாழும் இடங்களில் 3 தினங்கள் துக்கம் அனுஷ்டிக்க அழைப்பு.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவையொட்டி தமிழர்களின் தாயகப் பகுதிகளிலும் உலககெங்கும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் மூன்றுநாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இருதயக் கோளாறு, பழுதடைந்த இரு சிறுநீரகங்களுக்குப் பதிலாக போராளி ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற சிறு நீரகங்கள், 35 வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கம், நேற்று முன்தினம் வியாழக்கிழமை லண்டன் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் (இலங்கை நேரம் இரவு 7.15 மணி) புற்றுநோயால் மரணமானார்.

அன்னாரது மறைவுச் செய்தி வெளியானதும் தாயகத் தமிழர்களும் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் பெரும்சோகத்தில் மூழ்கினர்.

அன்னாரின் ஈடுசெய்ய முடியாத இழப்பையொட்டி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மனமுருகி தனது மிகப்பெரும் துயரத்தை வெளிப்படுத்தியதுடன் `தேசத்தின் குரல்' என்ற கௌரவப் பட்டத்தையும் சூட்டியிருந்தார்.

அத்துடன், கலாநிதி பாலசிங்கத்தின் மறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தமிழர்களின் தாயகப் பகுதியிலும் புலம்பெயர்ந்து ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் மூன்று நாட்கள் துக்கதினமாகவும் அறிவிக்கப்பட்டது.

பாலசிங்கத்தின் மறைவையொட்டி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி உட்பட தமிழகத் தலைவர் பலர் தங்கள் அஞ்சலிச் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.

கலாநிதி பாலசிங்கத்தின் மறைவு தமிழர் தாயகம், புலம்பெயர் நாடுகள் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செய்தி ஸ்தாபனங்களும் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்தும் அதனால், ஏற்பட்டுள்ள பெரும் வெற்றிடம் குறித்த செய்திகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.

உலக நாடுகள் எங்கும் வாழும் தமிழர்கள் பாலசிங்கத்தின் மறைவையொட்டி மூன்றுநாள் துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு உலகத் தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பாலசிங்கத்தின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை லண்டனிலுள்ள அலெக்ஸாண்ரா மண்டபத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படுமென இறுதிக் கிரியைக்கான ஏற்பாட்டுக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைமையோடும் பாலசிங்கத்தின் துணைவியாரோடும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்படி பாலசிங்கத்தின் பூதவுடல் 20 ஆம் திகதி காலை, லண்டன் நேரப்படி 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அலெக்ஸாண்ரா மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்

அதேநாளில் தாயக நேரம் மாலை 4 மணிக்கு தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அன்னாருக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் நடைபெறும் தினத்தன்று லண்டன் அலக்ஸாண்ரா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கூடுவரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இதேநேரம், பாலசிங்கத்தின் மறைவால் தமிழர் தாயகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எங்கும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும் கறுப்புக் கொடிகளும் சிவப்பு- மஞ்சள் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

முக்கிய சந்திகள், முக்கிய இடங்களிலெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் சோக கீதங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்ததுடன் பாலசிங்கம் முன்னர் ஆற்றிய உரைகளும் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

வீதிகள், முக்கிய சந்திகள், புலிகளின் அலுவலகங்கள், பொது இடங்களிலெல்லாம் பாலசிங்கத்தின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகிறது.

கிழக்கு மாகாணத்திலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. எங்கும் பெரும் சோகமயமாகக் காட்சியளிக்கிறது.

யாழ். குடாநாடு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளிலும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள், காரியாலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. வன்னியில் மிகப்பெரும் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

-தினக்குரல்,

மாறாக் கொள்கையுடனே, மறத்தமிழ் நெஞ்சுடனே

முப்பது ஆண்டுகளாய் எப்பொழுதும் உழைத்திட்டான்

தமிழா நமக்காக, நம் விடுதலை அதற்காக!

பறக்கட்டும் தமிழ் கொடி தான் தரணியிலே அதற்காக!

இரத்தமின்றி கத்தியின்றி பேச்சு மேசைகளிலே

பகைவர் சங்கறுத்த சிங்கம் அவன். பாலசிங்கம் அவன்!

யுத்தமின்றி வெற்றி கொள்ளும் வித்தையிலே வித்தகன்

ஈழத்தின் இராஜதந்திரி, எதிரிக்கோ எட்டாத முந்திரி

மரணப்படுக்கையிலும் மறக்காமல் தமிழா!

உன் விடுதலையை மட்டுமே நினைத்திட்ட மாவீரன்

வரலாற்றின் பக்கத்தில் அழியா மன்னன் அவன்

நம் "தேசத்தின் குரல்" என்றும் பாலா அண்ணன் அவன்

நீண்ட நெடிய 30 ஆண்டுகளாக இத்தனை தியாகங்களையும் தமிழ்தேசத்திற்காக செய்த பாலா அண்ணரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள வேண்டியது ஐரோப்பா வாழ் தமிழர்களின் கடமை. இல்லையென்றால் நாம் நன்றி கொன்றவர் ஆவோம்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்! உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"

என்பதே வள்ளுவன் வாக்கு

இறுதி அஞ்சலியில் கடல் என தமிழர் திரண்டு எங்கள் விடுதலை வேட்கையின் ஆழ அகலங்களயும், நியாய தர்மங்களையும் சர்வ தேசங்களிற்கும் உரத்துச் சொல்லுவோம்.

மடை திறந்த வெள்ளம் போல் மக்கள் கூட்டம் திரண்டால், தடை செய்த பல பேரின் தொடை கூட நடுங்கும். அடைபட்ட (A9, A15) பாதை திறக்க அழுத்தங்கள் பறக்கும்

லண்டன் மலர்ச்சாலையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புகழுடல்.

“தேசத்தின் குரல்” மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நேற்று லண்டனில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. பாலாவுக்கு மிகவும் விருப்பமான, வெள்ளைநிற வேட்டியும், வெள்ளை நிற சேட்டும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

பாலா தம்பதியினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மாத்திரமே குறித்த மலர்ச்சாலையில் நேற்று மதியுரைஞரின் உடலைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். திருமதி அடேல் பாலசிங்கம் மலர்ச்சாலையில் நின்று, தமக்கும் தமது கணவருக்கும் நெருங்கிய உறவுடையவர்கள், நண்பர்கள் சிலரைக் கூட்டிச் சென்று தமது கணவரின் உடலைக் காண்பித்தார்.

மரணித்த பிறகு அவரது உடற்பாகங்களிலோ, முகத்திலோ மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. அவரது வழமையான கம்பீரத் தோற்றத்துடன் மலர்ச்சாலையில் உடல் காட்சியளித்தது. நாளைமறுதினம் புதன்கிழமை காலைவரை அவரது உடல் அந்த மலர்ச்சாலையிலேயே இருக்கும். புதன்கிழமை லண்டன் நேரப்படி காலை 8.00மணி தொடக்கம் மாலை 3.00மணிவரை அவரது உடல் லண்டன் அலெக்ஸாண்டிரா மாளிகையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். அன்றையதினம் புலம்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழ் மக்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் திரண்டு "தேசத்தின் குரல்' பாலசிங்கத்துக்கு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் அலெக்ஸாண்டிரா மாளிகையிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு மயானத்தில் பாலாவின் உடல் தகனம் செய்யப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.