Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோலையாக மாறிவிட்ட வளவுகள்:

Featured Replies

யாழ்பாணத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டுவளவுகளும் சோலையாக இருந்தது……..நிலம் கண்ட இடமெல்லாம் மரங்களும், பூமரங்களும் கண்டமேனிக்கு செழித்து வளர்ந்திருந்தன…….முன்பெல்லாம் ஒரு பூச்செடியை நட்டுவிட்டு அடிக்கடி தண்ணீர் ஊற்றி...ஊற்றி...அதிக கவனம் எடுத்து வளர்த்தாலும் வளராத பூமரங்கள்…….நன்றாக செழித்து வளர்ந்திருந்தன……...மல்லிகை, அடுக்கு மல்லி, முல்லை, பாரிஜாதம், மந்தாரை (இந்த பூவை இம்முறை தான் முதல் தடவை கண்ணால் பார்த்தேன்), மயிர் கொன்றை சிவப்பு,றோஸ் வர்ணங்களில், முசண்டாஸ், பாதிரிப்பு மஞ்சள், பிங்க், வெள்ளை...எக்சோறாவில்...சிகப்பு., றோஸ், மஞ்சள் நிறங்களில்…..நீலபூக்கொடி, கறுத்தபூக்கொடி (இது violet color), மஞ்சள், வெள்ளை நந்தியாவட்டை, திருவாத்தி…..(இதன் மஞ்சள்..வெள்ளை பூக்களை பார்த்தால் கிறிஸ்துமஸ்க்கு மரத்தில் குட்டி குட்டி பல்ப் பூட்டியது போன்றிருக்கும்…….பிச்சிபூ (இந்த பூவையும் முதன் முதலாக பார்த்தேன் பிடித்த பாட்டுவேறு...ஞாபகம்...வந்தது..."உச்சி வகிடெடுத்து பிச்சிபூ வைத்த கிளி"…), மணிவாழை, பலவர்ணங்களில் குரோட்டன்ஸ், பொன்னுச்சி,….போகன்வில்லா …..சீனியாஸ், அலரி, செவ்வந்தி…..மஞ்சவனப்பதி கோவில் மதிலுடன் பெருமரமாக வளர்ந்திருக்கும் நாகலிங்க மரம்…….பூவை பிடுங்கினால் பாம்பு கொத்திவிடும்...என்று சிறுவயதில் சொல்லக்கேட்டிருக்கிறேன் ….ஆனாலும் பிடுங்கி கையில் கொண்டுவரும்போது இருதடவைகள் விழுந்துவிட்டது …...இரண்டாயிரத்துபத்தில் …….அம்மாவுடன்…..கோவிலுக்கு சென்று வரும்போது இரண்டு பூக்களை பறித்து அம்மாவிடம் கொடுக்க அவர் அதை பத்திரமாக சாமிக்குமுன் வைத்து கும்பிட்டார்…...பின் ஒரு கிழமையில்…..நெஞ்சுவலி வந்து இறந்துபோனார்…….அதனால்….. நாகலிங்க பூ கிழேவிழுந்தபோது அதை எடுக்கமனம் வரவில்லை…...எதோ என் உள்மனம் அதை கொண்டுபோகதே என்ற மாதிரி இருந்தது…….மேலும் பெயர்...தெரியாத…...மறந்த பூச்செடிகள் ……..

இதைவிட…...வாழை, எலுமிச்சை, ஆடாதோடை, செவ்விளநீர், லாவுழு, ரம்பை, விளாத்தி, வேம்பு, வாதநாரணி,, வல்லாரை, நெல்லி, சண்டி, பப்பா, ஜம்புநாவல், மா, பலா இன்னும் பெயர் தெரியாத பல மரங்கள்…….இதிலும் போகன்விலா மரங்கள் தான் என்னை கவர்ந்தது…..நாங்கள் யாழ்ப்பாணம் போய் இறங்கியதும்…….பக்கத்துவீட்டில்……..நிறைய பூச்சாடிகளுக்குள் பலவர்ணங்களில் போகன்விலா வைத்திருந்தார்கள்……..அத்தனையும் கண்ணை பறிக்கும் எலெக்ட்ரிக் கலர்ஸ் !(மெல்லிய சிவப்பு, வெள்ளை றோஸ், மஞ்சள் வெள்ளை கலந்தவை)…..போதாதற்கு கடும் நிறங்களில் (கத்தரிப்பு சிவப்பு, மஞ்சள், வெள்ளை)..பெருமரங்களாகவும் வளர்த்து வைத்திருக்கிறார்கள் அழகோ...அழகு….அப்படியே அள்ளிக்கொண்டு வந்தாலென்ன…..எனத்தோன்றியது……..ஆனால் ஆசைக்கு ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை…….காரணம்…..அவர்கள் வீட்டில் ஒரு இறப்பு நடந்துவிட்டிருந்தது ……..அத்துடன்…..அவர்கள் வீட்டில் இருந்த நாய் வேறு…...பொல்லாதது…….

முக்கியமாக……..தாவடி. இணுவில். கோண்டாவில்., மருதனாமடம், உரும்பிராய். மானிப்பாய், அச்சுவேலி போன்ற இடங்களால் பயணம் செய்யும்போது ஒரே சோலையாக இருந்தது…...இதற்கு முக்கியகாரணம்….நீண்டகால மக்களின் இடம்பெயர்வும்…….கவனிப்பாரற்று இருக்கும் காணிகளுமே என்கிறார்கள் சிலர்.

நான் யாழ்பாணம் போக ஆயத்தபடுத்தும் போது எனது நண்பி…...இவர் ஒரு பூச்செடி பிரியை ….தனக்கு கருத்தப்பூக்கொடி, மஞ்சள் பூக்கொடி, எக்ஸ்சோறா, அகத்தி, வேப்பம், முருங்கை……... விதைகளை கொண்டுவந்து தரும்படி...(கூகுளில் போய் பிரிண்ட் பண்ணி வேறு தந்திருந்தார்)…..கேட்டுக்கொண்டார்…….நானோ….எமனின் கோட்டைக்குள்ளால் (அமெரிக்காவினுடாக ) பயணம் செய்யவேண்டிய நிலைமை…….நான் எப்படியும் கொண்டுவருவேன்…..ஆனால் பிடிபட்டால் bail எடுக்க ஆயத்தமாக இருக்கவேண்டும்…..கூறிவிட்டேன்…..அதற்கும் அவர் சம்மதம் என்றார்…...யாழ்பாணம் சென்று இருகிழமைகளின் பின்தான் விதைகளை தேடத்தொடங்கினேன்……..கறுத்தப்பூக்கொடி, மஞ்சள்பூக்கொடி போன்ற பூக்கன்றுவிதைகள் …...எந்த கடைகளிலுமே அகப்படவில்லை…….ஆனால்…..பூக்கன்றுகளாக……..வாங்கலாம்…...முக்கியமாக…….அகத்தி, வேப்பம் விதை தேடி…..தின்னவேலி சந்தியில் இருந்து…….இணுவில், மருதனாமடம், உரும்பிராய் வரை ….உள்ள கடைகள், Farms... என எல்லா இடங்களிலும் ஏறி இறங்கியும்…. ஒருகடையிலும்…..அகத்தி, வேப்பம் விதைகள் கிடைக்கவில்லை…….

இந்தியன் முருங்கை விதை மாத்திரமே கிடைத்தது…..வீடு வந்து சேர்ந்து ஆட்டோவிற்கு எவ்வளவு ஐயா என்று கேட்டால் ஆயிரத்து நூறு ரூபாய் என்றார்……..திடுக்கிட்டு ஒருகணம்…...யோசித்துவிட்டு…..உண்மையாகவா என்றதற்கு…...அந்த வயோதிபர்…...கண்ணைமூடி…..மீண்டும்….அதையே கூறினார்……..என்ன….ஐயா...நாங்கள் ஒரு கடையிலுமே அதிகநேரம் செலவழிக்கவில்லையே …...சும்மா ஓடித்தானே திரிந்தோம்….பின் ஏன்…..இப்படி சொல்கிறீர்கள் என்றதற்கு…….அவர்…..”பிள்ளை…...ஒரு இடத்திற்கு போய் அந்த இடத்தில் எவ்வளவு நேரம் நின்றாலும்…..பெட்ரோல்...முடியாது…...ஆனால்...நீங்கள் யாழ்பாணம் முழுக்க…..சவாரி…….போனால் இப்படிதான் காசு வரும் என்றார்…….அப்பத்தான் எனக்கும் அது சரியென்று புரிந்தது.(ஆட்டோ பெட்ரோலில்தான் ஓடுகிறது என்ற நினைப்பு அப்போதான் வந்தது ).

ஒருமாதிரி இந்தியன் முருங்கை seeds வாங்கியாச்சு……..வேம்பு season இல்லை…..கறுத்தபூக்கொடி, எக்ஸ்சோரா. மந்தாரை….என ஓரளவு பக்கத்துவீடுகளில்…...விசாரித்து ...seeds சேர்த்துவிட்டேன்……..ஆனால் இந்த அகத்தி மட்டும் சிக்கவில்லை……..ஒருமுறை வீட்டுக்கு வந்த ஒருவரிடம் அகத்தி பற்றி விசாரித்தேன்…….அதற்கு அவர் கூறியகாரணம்…….தனது வீட்டிலும் அகத்திமரங்கள் இருந்ததாகவும்…….அகத்தி மரங்கள் இருந்தால்…..வீட்டில் கல்யாணமாகாத…..பெண்களுக்கு திருமணம் நடக்காது என்று யாரோ கூறியதால்…...அத்தனை மரங்களையும் வெட்டி எறிந்துவிட்டாரம் …...ஆனால் தோட்டங்களில் வளர்க்கலாம் என்றார் …….(அகத்தி...ஆயிரம்காய்...காய்த்தாலும்...புறத்தி...புறத்தியே"...பழமொழிக்கும்...திருமணத்திற்கும்...
ஏதாவது சம்பந்தம் இருக்குமோ)


யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வரும் வழியில் சிங்கள பகுதிக்குள் நுழைந்தவுடனே பார்த்தால் எங்கும் பச்சைப்பசேல் என கண்ணிற்கு குளிர்மையாகவும், மனதிற்கு ரம்மியமாகவும் இருந்தது……தெருவின் இருமருங்கிலும்…….பாலை…..அரசு...வேம்பு….முதிரை….ஆலமரம்….யுகலிப்ப்டஸ் , ஈரப்பலா, மூங்கில் …..என ஓராயிரம் மரங்கள்…..அதைவிட….பெயர் தெரியாத பூமரங்கள்…….நாங்கள் திரும்பிவரும் நாட்களில் மழையும் கொட்டதொடங்கிவிட்டது …..அதனால்…..அதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் ...தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த மக்கள்…..தம் குடியிருப்புகளை விட்டு வெளியேறி…..தெருவோரம்….உடைகளை காயபோட்டு வைத்திருந்தார்கள்..


அப்பா வெளி இடங்களில் வேலை பார்த்துவந்தபோது பாடசாலை லீவுநாட்களில் அவருடைய Quartersஇல் போய் தங்கி நிற்பது வழக்கம்…...யாழ்தேவியில் எப்பவுமே யன்னல் கரையில்தான்…….இருப்பேன்…….பரந்தன்….கிளிநொச்சி…...வவுனியா...தாண்டியவுடனேயே….குளிர் காற்று மெதுவாக வீசத்தொடங்கிவிடும்…….அனுராதபுரம்….வரும்போதே மூங்கில் தோட்டங்களும்…..பச்சை வயல் வெளிகள்…...தூரத்தில் தெரியும் சின்ன சின்ன மலைகளில் விகாரைகள்…….வெளிகளில் நிற்பவர்களுக்கு…...கை….அசைத்துக் கொண்டே போவோம்...அது ஒரு…….கனாக்காலம்…….அப்பாவின் இடத்திற்கு சென்று……..எமது இஷ்டப்படி வெளிக்கிட்டு அந்த இடங்களை சுற்றி பார்ப்போம்…….எங்கு பார்த்தாலும் அநியாயத்திற்கு பச்சை மரங்களாகத்தான் இருக்கும்!…...ஆனால் யாழ்பாணம் ஏன் அந்தளவிற்கு இல்லை…. வெயிலும், வரண்ட..கல்சியம் படிந்த …..மண்ணும்….ஏன் எமது மூதாதையர் பச்சை இடம் தேடி குடியேறவில்லை…..அந்தநாளிலிருந்தே சிங்கள மக்களின் ஏரியா மீது ஒரு எரிச்சல்…..அது இம்முறையும்….எனக்குள் எழுந்தது…..

முருங்கை விதை ஊறப்போட்டு…...கொஞ்சம்….வேர் விட்டிருக்கிறது!!…. 
………….தொடரும்…………பஸ் பயணம்…...

535140_10153326852863354_482177307797893

1380545_10153326853153354_17189806424805

10410698_10153326853128354_4271152468797

934044_10153326853243354_453698206969806

934154_10153326854188354_493593635670549

10406760_10153326854248354_7871963456034

7497_10153326855898354_16826415863085947

1653913_10153326855878354_33101786393100

12410582_10153326855983354_5800919333696

6189_10153326856168354_49214973415395563

10481618_10153326856683354_4315332082550

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே இதமாய் இருக்கு அர்ஜுன், படங்களும் சுப்பர்...!  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காயப் போட்டு இருக்கின்ற உடுப்பையும் படம் எடுத்தவ

நல்ல பதிவு, படங்களும் நல்லாய் இருக்கு....நன்றி அர்ஜுன் அண்ணா...

21 hours ago, ரதி said:

ஏன் காயப் போட்டு இருக்கின்ற உடுப்பையும் படம் எடுத்தவ

இதென்ன கேள்வி ரதி?:cool:

Edited by மீனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.