Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் யாப்பு: ஜெனீவா தீர்மானம், போர்க்குற்ற விசாரணைகளை இல்லாமல் செய்யும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் யாப்பு: ஜெனீவா தீர்மானம், போர்க்குற்ற விசாரணைகளை இல்லாமல் செய்யும்

[ Sunday,3 January 2016, 03:47:31 ]   
SL.jpg

புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான பேச்சுக்களும் தற்போது தீவிரமாக அடிபடுகின்றன. ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணை நடைபெறுமா அது சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என்ற பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளன. விசாரணை நடைபெறுமா என்பது கூட சந்தேகமாகவே இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதிய அரசியயல் யாப்பு என்று பேசப்படும்போது முக்கியமாக மூன்று விடயங்களை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் ஒன்று இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்களை பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரநிதிகளுடன் ஆரம்பிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.

இரண்டாவது வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்பதை அங்கீகரிப்பதற்கான மனநிலையை சகல சிங்கள அரசியல் கட்சிகளிடமும் உருவாக்க வேண்டும். 

மூன்றாவது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தன்டிக்கப்படுவர் என்பதும் தமிழ் மக்கள் மீதான இராணுவ செயற்பாடுகள் இல்லாமல் செய்யப்படும் என்ற விடயங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மூன்று விடயங்களையும் முன்நிறுத்தி புதிய அரசியல் யாப்புக்கான பேச்சுக்கள் அல்லது நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றும் வேலைத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதனை செய்வதற்கு அரசாங்கத்துக்கு தற்துணிவு இருக்கின்றதா என்பது கேள்விதான். சில வேளைகளில் விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதிக்கு அல்லது பிரதமருக்கு அவ்வாறு தற்துணிவு இருந்தாலும் அமைச்சர்கள் அனைவரும் ஏற்பார்களா என்பது சந்தேகமே. அவ்வாறு அமைச்சர்களை கட்டாயப்படுத்தி ஏற்க வைத்தாலும் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அதற்கு சம்மதிப்பார்களா என்பது மற்றுமொரு பிரச்சினை.

ஆகவே சிங்கள அரசியல் கட்சிகளை சாந்தப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை மாத்திரமே அரசாங்கத்தால் செய்யக்கூடிய நிலைமை பொதுவாகக் காணப்படுகின்றது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகளில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைப்பு மற்றும் தேசியம் பற்றிய பேச்சுக்களை இல்லாதொழிப்பதற்கான சரத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சமஉரிமை என்ற அடிப்படையிலும் ஒற்றையாட்சித் தன்மையின் இயல்புக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் இலங்கைத் தேசியம் என்பதை நிலைநாட்டக்கூடிய முறையிலும் ஏற்பாடுகள் புதிய யாப்பில் இருப்பதாக மூத்த சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டாலும் அது பொதுவான அடிப்படையில் அமையக்கூடிய வகையிலும் தனியே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் குற்றம் என்ற அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கக்கூடிய முறையில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் அந்த சட்டத்தரணி கூறியுள்ளார்.

ஆகவே புதிய அரசியல் யாப்பு என்று அரசாங்கம் அவசரப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதவாது போர்க்குற்ற விசாரணையை சமாளிப்பதும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை அப்படியே கைவிடுவதும் முதலாவது காரணம். 

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி தனியே தமிழர் தரப்புடன் மாத்திரம் பேச்சு நடத்துவதை தவிர்ப்பது இரண்டவது காரணம். இந்த இரு காரணங்களின் அடிப்படியில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னர் செயற்பட்டது. ஆனால் இந்திய அமெரிக்கா பேன்ற நாடுகள் அப்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. 

அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளை முன் நிறுத்தி மஹிந்த ராஜபக்ச செயற்படுகின்றார் என்பதனால் அப்போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்ட மேற்படி இரு காரணங்களின் அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது மைத்திபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அரசாங்கம் அமெரிக்க சார்ப்புத் தன்மையில் நின்று சிந்திப்பதால் மேற்படி இரு காரணங்களின் அடிப்படையில் செயற்படுவதை அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரரிப்பதாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர். 

ஆகவே ஜெனீவா தீர்மானத்திற்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை இலகுவாக புரிந்து கொள்ளமுடிகின்றது. இந்த இடத்தில்தான் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன. 

புதிய யாப்புக்கான வேலைத் திட்டங்களில் இரகசியமாக பங்கெடுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அவர்களும் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறினாலும் இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது அல்லது தமிழ் மக்களுக்கு ஏற்ற முறையில் அதாவது குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வையாவது வழங்கக்கூடிய முறையில் எவ்வாறு யோசனைகளை முன்வைப்பது என்பதில் சிக்கல் நிலை இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

http://ibctamil.com/news/index/16263

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழா

  • கருத்துக்கள உறவுகள்

IBC அந்த விமர்சகர்கள் யார் என்று சொல்லலாமே! அந்த விமர்ச்கர்களை அறிய தமிழர்களும் ஆவலாக இருக்கின்றனர். IBC தன்னுடைய ரேஞ்சுக்கு அய்நாவை எண்ணிவிட்டது போலிருக்கின்றது. புலம்பெயர் அன்பர்களுக்கு இனி ஒரு மாதத்துக்குப் புலம்பித் திரிய அடுத்த டாபிக் கொடுக்கப்பட்டாயிற்று!tw_blush:

2 hours ago, வாலி said:

IBC அந்த விமர்சகர்கள் யார் என்று சொல்லலாமே! அந்த விமர்ச்கர்களை அறிய தமிழர்களும் ஆவலாக இருக்கின்றனர். IBC தன்னுடைய ரேஞ்சுக்கு அய்நாவை எண்ணிவிட்டது போலிருக்கின்றது. புலம்பெயர் அன்பர்களுக்கு இனி ஒரு மாதத்துக்குப் புலம்பித் திரிய அடுத்த டாபிக் கொடுக்கப்பட்டாயிற்று!tw_blush:

என்ன செய்ய வாலி அண்ணே புலம்புறது. தமிழன் தலையெழுத்து. ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தவர்களுக்காக புலம்பவேண்டியது தான். உங்களுக்கு பிடித்த இரண்டு தடியன்களுக்காக நீங்க கொஞ்ச நாளாய் கொஞ்சம் ஓவராயே  புலம்புறீங்க பாருங்க அதைப்போல  அவங்க தனங்கு பிடித்தவர்களுக்காக புலம்புறாங்க. ஆக மொத்தம் தமிழன் பாடு அடுத்த தலைமுறைக்கும் புலம்பல் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.