Jump to content

Recommended Posts

Posted

சூப்பரான பலாச்சுளை இலை அடை

கேரளாவில் பலாப்பழம் வைத்து செய்யும் இலை அடை மிகவும் பிரபலம். இன்று இந்த பலாச்சுளை இலை அடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான பலாச்சுளை இலை அடை
 
தேவையான பொருட்கள் :

பலாச்சுளைகள் - 20,
வெல்லம் - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வாழை இலை - தேவைக்கு
நெய் - 5 டீஸ்பூன்.

FCA9C3BB-9D09-40C9-81A8-E4093D5D3C8F_L_s

செய்முறை :

* பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கி ஆறவைக்கவும்.

* மிக்சியில் வதக்கிய பலாச்சுளையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

B77C6214-13DA-4450-9748-720F71E4DB14_L_s

* வாழை இலைகளை பெரிய துண்டுகளாக வெட்டி அதில் நெய் தடவி, அதில் பிசைந்த மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து இலையை மூடி கைகளால் மாவை பரப்பி விடவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.

* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த அடைகைளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிடவும்.

* சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.

குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்
Posted

சுவையான காரசாரமான தக்காளி பூண்டு சாதம்

தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. அதிலும் காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ்.

 
 
சுவையான காரசாரமான தக்காளி பூண்டு சாதம்
 
தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3  
பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

A65F77BF-D809-4329-9FB1-44D5931B3D03_L_s

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

* பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!
Posted

சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முந்திரி சிக்கன் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று இந்த முந்திரி சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு :

முந்திரி - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1  துண்டு
கிராம்பு - 4 புதினா - சிறிது

8740451E-50C6-4196-B492-12947D517632_L_s

செய்முறை :

* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சிக்கன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

* பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

* சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!
Posted

கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ்

காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காராமணியை வைத்து எளிய முறையில் கர்நாடகா ஸ்டைலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ்
 
தேவையான பொருட்கள் :

அரிசி -  ஒரு கப்,
காராமணி பயறு - கால் கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 2,
பூண்டு - 10 பல்,
சீரகம் -  ஒரு டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6,
தனியா தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

BA1F7BB0-48CA-45F0-98A1-07503374C785_L_s

செய்முறை :

* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* பூண்டை தோல் நீக்கி ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* காராமணியை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும்.

* வறுத்த காராமணியில் பாதியளவு எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தனியா தூள், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு களைந்த அரிசி, உப்பு, அரைத்த வைத்திருக்கும் காராமணி, மிளகாய் பொடி, மீதமுள்ள காராமணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

* சூப்பரான கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ் ரெடி.
Posted

சத்து நிறைந்த சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்

 
 

சோயாபீன்சில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மாலையில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த சோயாபீன்ஸ் சுண்டல் செய்து கொடுத்து அசத்துங்கள்.

 
 
 
 
சத்து நிறைந்த சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்
 
தேவையான பொருட்கள் :

வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கப்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

5B75157B-4F8A-4CBE-BF41-33255E42FF08_L_s

செய்முறை:

* சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

* சோயாபீன்சில் மசாலா நன்கு கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!
Posted

சூப்பரான சைடு டிஷ் முருங்கைக்காய் இறால் தொக்கு

அனைவரும் இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முருங்கைக்காய் சேர்த்து சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான சைடு டிஷ் முருங்கைக்காய் இறால் தொக்கு
 
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1
இறால் - ½ கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

2D282403-0ED9-4120-84D3-D7F0C2657579_L_s

செய்முறை :

* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

* பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.

* சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.

* சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி.

* தேவையென்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ருசிக்கலாம்.
Posted

சூப்பரான இறால் - காய்கறி சூப்

இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான இறால் - காய்கறி சூப்
 
தேவையான பொருட்கள் :

விருப்பமான காய்கறிகள்  - 200 கிராம்
இறால் - 100 கிராம்
வெள்ளை வெங்காயம்  - 1
சோயா சாஸ்  - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார்  - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு

71A05DBF-F435-4312-BCF9-4B6BEB1C46AB_L_s

செய்முறை :

* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.

* கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

* வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.

* வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.

* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள்.

* சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.
Posted (edited)

சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி

மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி  - 1 1/4கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் + நெய்  - 4 டேபிள்ஸ்பூன்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம்
பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் -  2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

பொடிக்க :

இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5பல்
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1

7373A05E-26D2-4F25-94DF-BB3CCBFC83D8_L_s

செய்முறை :

* அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

* மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.

* பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

* வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

* சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி ரெடி.
Edited by நவீனன்
Posted

வீட்டிலேயே செய்யலாம் இறால் பக்கோடா!

சுவையான இறால் பக்கோடா

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'இறால் பக்கோடா' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
குடல் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட இறால் - கால் கிலோ
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு:
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் இக்கலவையுடன் எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் இக்கலவையுடன் சிறிதளவு நீர் தெளித்துக்கொள்ளலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் தயாராக வைத்திருக்கும் இறால் மற்றும் இதரப் பொருட்கள் சேர்ந்த கலவையைச் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சூடான சுவையான இறால் பக்கோடாவை, தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

Posted

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி
 
தேவையான பொருட்கள் :

ஃப்ரெஷ் பிரட் தூள் - 2 கப்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 கப்,
நெய் - 4 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
வெள்ளித் தாள் - சில,
கன்டென்ஸ்டு மில்க்  - 1/2 கப்,
உடைத்த நட்ஸ், விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் - 3/4 கப்,
திராட்சை, பொடித்த செர்ரி பழங்கள் - தேவைக்கு,
பால் - 1 கப்.

06E90016-699B-4B4E-AE48-D2B62E806EC3_L_s

செய்முறை :

* வெறும் கடாயில் நட்ஸ், உலர்ந்த பழங்கள், விதைகள் அனைத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்துக் கொள்ளலாம். 

* பாலில் பிரட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

* ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் நெய்யை விட்டு சூடாக்கி பிரட் விழுதை சேர்த்து கிளறவும்.

* நன்கு சுருண்டு வரும் போது தேவையானால் சிறிது நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கும்.

* அடுத்து அதில் சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும்.

* துருவிய தேங்காய், ரோஸ் எசென்ஸ் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.

* பர்ஃபி கலவை திக்கான பதம் வந்தவுடன் அதில் உலர்ந்த பழங்கள், நட்ஸ், விதைகள் சேர்க்கவும். கொஞ்சம் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும்.

* கடைசியாக ஏலக்காய் தூளை தூவி நன்றாக கலந்து இறக்கவும்.

* பர்ஃபி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும்.

* ஆறியதும் வெள்ளி சரிகையை அதில் இட்டு, மீதி உள்ள நட்ஸை தூவி துண்டுகள் போட்டு பரிமாறவும்.

* பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி ரெடி.

* இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
Posted

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

 
காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு
 
தேவையான பொருள்கள் :

பச்சை மிளகாய் - 15
குட மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
புளி - சிறிய உருண்டை
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

3EB65342-4742-4F18-8C45-5A1A58FD1852_L_s


* பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

* பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

* மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

* காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

* இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
Posted

பேலியோ டயட் ரெசிப்பி

 

27p1.jpg

 கீரை சூப்
 காலிஃப்ளவர் - பனீர் கட்லெட்
 மஷ்ரூம் - தேங்காய்ப்பால் சூப்
 பனீர் டோஸ்ட்
 முட்டை புர்ஜி
 முட்டை மாஸ்
 ஸ்டீம்டு மசாலா முட்டை

27p2.jpg

கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பதுதான் பேலியோ டயட்டின் அடிப்படை. அப்படியானால், வேறு எதைத்தான் சாப்பிடுவது? ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’, ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்வதுதானே வழக்கம். இவர்களோ, கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்? நம் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் பருமனுக்குக் காரணம். ஆனால், பேலியோ டயட்டில் கொழுப்பைத்தானே அதிக அளவில் சாப்பிடுகிறோம்... அது என்ன ஆகும்? `அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும்’ என்கிறார்கள் பேலியோ நிபுணர்கள். இதோ... கரூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் சமையல் கலைஞருமான சிவசக்தி கார்த்திகேயன் வழங்கும் சுவையான பேலியோ ரெசிப்பிகள்!

குறிப்பு: பேலியோ டயட்டைப் பின்பற்றுவதற்கு முன் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.

27p3.jpg

கீரை சூப்

தேவையானவை:

 கீரை - ஒரு கட்டு  (பொடியாக நறுக்கவும்)
 சின்ன வெங்காயம் - 7
 தேங்காய்ப்பால் - ஒரு கப்
 பூண்டு - 4 பல்
 சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை: சுத்தம் செய்த கீரை, பூண்டு, வெங்காயம், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றைக் குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர்விட்டு  மூடி, மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறிய பின் மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் கீரைக் கலவை, தேங்காய்ப்பால்,  தேங்காய் எண்ணெய் சேர்த்து  ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள் சேர்த்து  சூடாகப் பரிமாறவும்.

27p4.jpg

காலிஃப்ளவர் - பனீர் கட்லெட்

தேவையானவை:

 காலிஃப்ளவர், - ஒன்று  (சிறிய பூக்களாக நறுக்கவும்)
 பனீர்  துருவல் – ஒரு கப்
 சீஸ்  துருவல் - 25 கிராம்
 பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பூண்டுப் பல் - 4 (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
 சீரகத்தூள், மிளகாய்த்தூள் -  தலா ஒரு டீஸ்பூன்
 முட்டையின் வெள்ளைக்கரு - 3 டீஸ்பூன்
 நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு  ஒரு கொதிவிட்டு இறக்கவும். காலிஃப்ளவர் பூக்களைச் சூடான தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்துத்  தண்ணீரை  வடித்துத் தனியாக வைக்கவும்.  மிக்ஸி ஜாரில் காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (மாவாகிவிடக்கூடாது). ஒரு பாத்திரத்தில் அரைத்த காலிஃப்ளவர், பனீர் துருவல், சீஸ் துருவல், முட்டையின் வெள்ளைக்கரு, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் செய்யவும்.  தோசைக்கல்லை காயவிட்டு  உருட்டிய கட்லெட்டுகளை அடுக்கிச் சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும்  வேகவைத்து  எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

27p5.jpg

மஷ்ரூம் - தேங்காய்ப்பால் சூப்

தேவையானவை:

 பட்டன் காளான் – 10 (பொடியாக நறுக்கவும்)
 தேங்காய்பால் - ஒரு கப்
 பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)
 சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 உப்பு – தேவையான அளவு

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி  வெங்காயம், பூண்டு, காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.  இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக்  கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை  தூவி இறக்கினால்...  ‘மஷ்ரூம் சூப்’ ரெடி.

27p6.jpg

பனீர் டோஸ்ட்

தேவையானவை:

 பனீர் - 100 கிராம்
 நெய் - 4 டீஸ்பூன்

செய்முறை: பனீரை  மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி  ஒவ்வொரு பனீர் ஸ்லைஸாகப் போட்டு  இருபுறமும் டோஸ்ட் செய்து  எடுக்க... பனீர் டோஸ்ட் ரெடி..

குறிப்பு:

இந்த பனீர் டோஸ்ட்டை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால்  இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் கறி மசால் அல்லது வெஜ் கிரேவி வைத்தும் சாப்பிடலாம்.

27p7.jpg

முட்டை புர்ஜி

தேவையானவை:

 பனீர் துருவல் –  ஒரு கப்
 முட்டை - 3
 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா  2 (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழை – சிறிதளவு  (பொடியாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு  விழுது – ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன்
 வெண்ணெய் - 3 டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை: வாணலியில் வெண்ணெயை   உருக்கி  பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.  இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு  சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மற்றொரு வாணலியில்  முட்டையை உடைத்து ஊற்றி சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்.  இதனுடன் வதக்கிய மசால், பனீர் துருவல் சேர்த்துக் கிளறி  இறக்கி... கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

27p8.jpg

முட்டை மாஸ்

தேவையானவை:

 முட்டை - 4
 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2 (நறுக்கவும்)
 நெய் - 2 டீஸ்பூன்
 சிக்கன் குழம்பு - ஒரு கப்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு – தேவையான அளவு

செய்முறை: முட்டையை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக  நறுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் முட்டைத் துண்டுகள், சிக்கன் குழம்பு சேர்த்து கொதிக்கவிட்டு கலவை கெட்டியாக வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

27p9.jpg

ஸ்டீம்டு மசாலா முட்டை

தேவையானவை:

 முட்டை – 5 
 பெரிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய்  கேரட் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 இஞ்சி - பூண்டு  விழுது, மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 நெய் - 2 டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும்  வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.  இதனுடன்  கேரட், குடமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். இதுவே மசாலா. பச்சை முட்டையின் மேல் பாகத்தில்  சிறிய துளையிட்டு அந்த இடத்தில் உள்ள ஓட்டை எடுத்துவிடவும். முட்டையின் உள் இருக்கும் வெள்ளை கருவில்  சிறிதளவு வெளியே எடுத்து விட்டு, வதக்கிய மசாலாவை முட்டையின் உள்ளே தள்ளவும். சிறிய கிண்ணங்களில் முட்டையை வைத்து ஆவியில் வேகவிட்டு இறக்கவும் (படத்தில் காட்டியுள்ளபடி வைத்து வேகவிடவும்). வெந்ததும்  முட்டையின்  மேல் ஓட்டை  முழுவதுமாக நீக்கி விட்டு முட்டையை மட்டும் பிரித்தெடுக்க ‘ஸ்டீம்டு மசாலா முட்டை” ரெடி.

Posted

பசியைத் தூண்டும் சீரக துவையல்

 

இந்த சீரக துவையல் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
பசியைத் தூண்டும் சீரக துவையல்
 
தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சின்ன வெங்காயம் - 10,
புளி - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 5,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

D82035AF-E69E-41A1-B5F6-C362FD024569_L_s

செய்முறை :

* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வதக்கி ஆற விடவும்.

* ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

* விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.

* சூப்பரான சீரக துவையல் ரெடி.

* இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.
Posted

சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா

 

சப்பாத்தி, நாண், புலாவ், நெய் சாதத்திற்கு சூப்பரான ரைடு டிஷ் இந்த கார்ன் மஷ்ரூம் மசாலா. இப்போது இந்த கார்ன் மஷ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா
 
தேவையான பொருட்கள் :

உதிர்த்த சோளம் - 100 கிராம்
மஷ்ரூம் - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப்.

F1C62BF3-A2B1-4CFA-880F-1360AEB50422_L_s

செய்முறை :

* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.

* நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.
Posted

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.

 
மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்
 
தேவையான பொருட்கள் :

இடியாப்பம் - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
புதினா - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது

0178BADD-DC2F-4141-BD8B-BAC960A1A47D_L_s

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

* இறுதியில் அதில் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான மசாலா இடியாப்பம் ரெடி!!!
Posted

பார்சி ஸ்பெஷல் ரெசிப்பி

 

49p1.jpg

 சல்லி பொட்டி
 கோழி தன்சக்
 பார்சி கீமா பேட்டீஸ்
 பத்ராணி மச்சி
 லகன் நூ கஸ்டர்ட்
 பார்சி சேவ்
 குங்குமப்பூ புலாவ்
 கோழி பார்சா
 மோரி தார்
 கத்திரிக்காய் பட்டியோ

49p2.jpg

ண்டைய இரானிலிருந்து இடம்பெயர்ந்து, குஜராத் மற்றும் சிந்து சமவெளிப் பகுதிகளில் குடியேறிய மக்களே பார்சி சமூகத்தினர். இப்போது இந்தியாவில் குஜராத் உள்பட சில மாநிலங்களில் மொத்தம் 60 ஆயிரம் பார்சிகள் வசிக்கின்றனர். இரானின் புத்தாண்டான ‘நவ்ரஷ்’ என்பதையே இம்மக்களும் கொண்டாடுகின்றனர் (இந்த ஆண்டு: மார்ச் 21). பார்சி புத்தாண்டை முன்னிட்டு, பெர்ஷிய உணவுக் கலாசாரத்தில் வந்த பார்சி சிறப்பு உணவுகளை அறிமுகப்படுத்துகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது.

49p3.jpg

சல்லி பொட்டி (Salli boti)

தேவையானவை:

 ஆட்டு இறைச்சி (எலும்புடன்) - ஒரு கிலோ
 காய்ந்த மிளகாய் - 4
 பட்டை - அரை துண்டு
 சீரகம் - இரண்டரை டீஸ்பூன்
 ஏலக்காய் - 6
 கிராம்பு - 8
 இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு (துருவவும்)
 பூண்டுப் பல் - 4 (தட்டவும்)
 சர்க்கரை பாதாமி (Apricot) - 12 (நறுக்கவும்)
 தண்ணீர் - 500 மில்லி
 எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
 பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
 தக்காளி - 2 (நறுக்கவும்)
 வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - 25 கிராம்
 உருளைக்கிழங்கு - 3 (குச்சி சிப்ஸ் போன்று நறுக்கவும்)
 எண்ணெய், உப்பு  -   தேவையான அளவு

செய்முறை: பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன் பாதியளவு இஞ்சித் துருவல், தட்டிய பூண்டு கலந்து அதனோடு ஆட்டு இறைச்சியைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாதாமியுடன் 500 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

மீதமுள்ள இஞ்சித் துருவலையும், தட்டிய பூண்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன், ஊறிய ஆட்டு இறைச்சி, நறுக்கிய தக்காளி, உப்பு, வினிகர் மற்றும் சர்க்கரை பாதாமி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கிய பின், மூடியால் மூடி இறைச்சியை நன்றாக வேகவிட்டு, சர்க்கரை சேர்த்து இறக்கவும். பொரிப்பதற்கான எண்ணெயை நன்றாகச் சூடாக்கி, குச்சி சிப்ஸ் போன்று நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பொரித்துவைத்த உருளைக்கிழங்கு சிப்ஸை பரிமாறும் முன்பு ஆட்டு இறைச்சிக்கு மேல் அழகாக வைத்து சூடாகப் பரிமாறவும்.

பின்குறிப்பு:

இதே செயல்முறையில் சிக்கனைக் கொண்டும் செய்யலாம்.


49p4.jpg

கோழி தன்சக் (Chicken dhansak)

தேவையானவை:

 துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, மைசூர் பருப்பு - தலா கால் கப்
 தண்ணீர் - ஒரு லிட்டர்
 கோழி இறைச்சி - அரை கிலோ
 மிளகு - 10
 கிராம்பு - 8
 பட்டை - ஒரு இஞ்ச் துண்டு
 ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 ஜாதிக்காய்த்தோல் - ஒரு இன்ச்
 பிரியாணி இலை - 2
 நட்சத்திர சோம்பு - ஒன்று
 காய்ந்த மிளகாய் - 3
 சீரகம், மல்லி (தனியா) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 வெந்தயம் - அரை டீஸ்பூன்
 வெள்ளை எள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை, வெந்தயக்கீரை - தலா 150 கிராம்
 புதினா இலை - 75 கிராம்
 புளிக்கரைசல், பூண்டு விழுது, இஞ்சி விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை: நான்கு பருப்பு வகைகளையும் குக்கரில் சேர்த்து நன்றாக வேகவிடவும். வாணலியில் மிளகு, கிராம்பு, பட்டை, ஜாதிக்காய்த்தோல், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மல்லி (தனியா), வெந்தயம் வெள்ளை எள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்து ஆறவைத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். மஞ்சள்தூள் மற்றும் ஜாதிக்காய்த்தூளை அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வேகவைத்த பருப்பை கெட்டியான சூப் பக்குவத்துக்கு கடைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கொத்தமல்லித்தழை, வெந்தயக்கீரை மற்றும் புதினா சேர்த்து வேகும் வரை வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் மைபோல் அரைத்து எடுக்கவும்.

கடைந்த பருப்பு, இஞ்சி விழுது,  பூண்டு விழுது, புளிக்கரைசல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த கொத்தமல்லித்தழை - புதினா விழுது, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி, கோழி இறைச்சித் துண்டுகள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இடையே தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.
கோழி தன்சக் தயார்... சூடாகப் பரிமாறவும்!

குறிப்பு:

கோழிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு, சுரைக்காய், கத்திரிக்காய், சிவப்பு பூசணி, ஆட்டு இறைச்சி கொண்டும் இதை செய்யலாம்.


49p5.jpg

பார்சி கீமா பேட்டீஸ் (Parsi keema pattis)

தேவையானவை:

 கொத்துக்கறி (ஆட்டு இறைச்சி) - 500 கிராம்
 பிரெட் துண்டுகள் - 5
 இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
 புதினா, கொத்தமல்லித்தழை (நறுக்கியது) - தலா 2 டேபிள்ஸ்பூன்
 பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
 முட்டை - 4
 எண்ணெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கொத்துக்கறியைக் கழுவி தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து எடுக்கவும். பிரெட் துண்டுகளை தனித்தனியாக ஒரு கப் தண்ணீரில் 10 விநாடிகள் நனைத்துப் பிழிந்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் நனைத்துப் பிழிந்த பிரெட், கொத்துக்கறி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கலவையை 12 சரிசம உருண்டைகளாக உருட்டி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும்.

உருண்டைகளை கட்லெட் வடிவில் தட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். முட்டையுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெயைச் சூடாக்கவும். தட்டி வைத்தவற்றை, அடித்த முட்டைக் கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


49p6.jpg

பத்ராணி நி மச்சி (Patrani ni machi)

தேவையானவை:

 வாழை இலை - 4
 வெள்ளை வௌவால் மீன் அல்லது வஞ்சிரம் மீன் - ஒரு கிலோ (முழு மீனை சுத்தம் செய்து ஆங்காங்கே கீறவும்)
 எலுமிச்சைப்பழம் - ஒன்று
 உப்பு - தேவையான அளவு

சட்னிக்குத் தேவையானவை:

 தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
 பச்சை மிளகாய் - 6
 கொத்தமல்லித்தழை (தண்டுடன்) - 50 கிராம்
 புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகத்தூள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை: எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மீனை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

சட்னிக்குத் தேவையானவற்றை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த விழுதை மீனின் மீது தடவி வாழை இலையில் வைத்து பொட்டலங்களாக மடித்து எடுக்கவும். இட்லித் தட்டில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.


49p7.jpg

லகன் நூ கஸ்டர்ட் (Lagan nu custard)

தேவையானவை:

 பால் - 6 கப்
 பிரெட் - ஒரு துண்டு
 முட்டை - 3
 சர்க்கரை - ஒரு கப்
 வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
 சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை: ஆறு கப் பாலை அடுப்பில் வைத்து நான்கு கப் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, நன்றாக ஆறவைக்கவும். ஆறிய பாலுடன் சர்க்கரை, முட்டை, பிரெட் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும்.  பின்னர் அதை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, சாரைப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்த அவனில் 50 நிமிடங்கள், மேல்பாகம் பொன்னிறமாக மாறும் வரை, பேக் செய்து எடுக்கவும். ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
 
பின்குறிப்பு:

இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சாப்பிடலாம்.


49p8.jpg

பார்சி சேவ் (Parsi sev)

தேவையானவை:

 சேமியா - 100 கிராம்
 நெய் - 25 கிராம்
 சர்க்கரை - 100 கிராம்
 ரோஸ் வாட்டர் (பன்னீர்) - அரை டீஸ்பூன்
 பாதாம் பருப்பு (தோல் உரித்து, நறுக்கியது) - 25 கிராம்
 உலர்ந்த திராட்சை - 25 கிராம்
 ஜாதிக்காய்த்தூள் - ஒரு துளி
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 தண்ணீர் - ஒரு கப்

செய்முறை: பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கி, சேமியாவைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து ஒன்றானதும் சேமியாவைச் சேர்த்து வேகவிடவும். வேகவைத்த சேமியாவுடன் ஜாதிக்காய்த்தூள் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்து, தூவி அலங்கரித்துப் பரிமாறலாம்.


49p9.jpg

குங்குமப்பூ புலாவ் (Saffron pulav)

தேவையானவை:

 பாஸ்மதி அரிசி - இரண்டரை கப்
 குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 4
 பட்டை - 2 இஞ்ச் துண்டு
 கிராம்பு - 4
 மிளகு - 10
 ஆரஞ்சுப்பழத் தோல் - (துருவியது)  ஒன்றரை டீஸ்பூன்
 பிஸ்தா பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 ஊறவைத்து தோல் நீக்கிய பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் 2 டேபிள்ஸ்பூன் சுடுநீரில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும். பாஸ்மதி அரிசி சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் 4 கப் தண்ணீர், உப்பு, ஊறிய குங்குமப்பூ, ஆரஞ்சுத் தோல் துருவல் கலந்து நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு, தீயை மிதமாக்கி 20 நிமிடங்கள் வேகவிடவும்.

பாதாம் பருப்பை நறுக்கி நெய்யில் வறுக்கவும். பிஸ்தா மற்றும் உலர்ந்த திராட்சையை தனித்தனியாக சிறிதளவு நெய்யில் வறுக்கவும்.  சாதம் நன்றாக வெந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காயை நீக்கிவிடவும். சாதக் கலவையுடன் வறுத்த பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


49p10.jpg

கோழி ஃபார்ஷா  (Chicken farsha)

தேவையானவை:

 பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
 எண்ணெய் - பொரிக்கத்   தேவையான அளவு

ஊறவைக்க தேவையானவை:

 கோழி இறைச்சி - ஒரு கிலோ
 இஞ்சி விழுது, பூண்டு விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
 உப்பு - தேவைக்கேற்ப மேல் பூச்சுக்குத் தேவையானவை:
 முட்டை - 2
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு துளி
 உப்பு - தேவையான அளவு

செய்முறை: ஊறவைக்க வேண்டியவற்றை ஒன்றாகச் சேர்த்து 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். அடுத்த நாள் ஒரு பாத்திரத்தில் மேல் பூச்சுக்குத் தேவையானவற்றை சேர்த்துக் கலக்கவும். ஊறிய சிக்கன் துண்டுகளை மேல் பூச்சு கலவையில் முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த சிக்கன் துண்டுகளை சாலட் மற்றும் வதக்கிய காய்கறிகளுடன் பரிமாறவும்.


49p11.jpg

மோரி தார் (Mori dar)

தேவையானவை:

 கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு - தலா அரை கப்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 தண்ணீர் - 3 கப்
 பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்)
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)
 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: நறுக்கிய வெங்காயத்தை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இரண்டு பருப்புகளையும் கழுவி தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் குழையும் வரை வேகவிடவும். கடாயில் நெய்யைச் சூடாக்கி சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும். பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பருப்பில் சேர்க்கவும். பின்பு, பொரித்த வெங்காயத்தால் அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறவும்.


49p12.jpg

கத்திரிக்காய் பேட்டியோ (Brinjal patio)

தேவையானவை:

 காம்புடன் கூடிய சிறிய கத்திரிக்காய் - அரை கிலோ
 சீரகம் - இரண்டரை டேபிள்ஸ்பூன்
 பூண்டு - 3 பல்
 வினிகர் - அரை கப்
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: கத்திரிக்காய்களை நான்காக கீறிக்கொள்ளவும் (எண்ணெய் கத்திரிக்காய்க்கு செய்வதுபோல). சீரகத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும். பூண்டு, வறுத்த சீரகம் மற்றும் வினிகரை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தீயைக் குறைத்து, தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு கத்திரிக்காயைச் சேர்த்து வேகவிட்டு, வெந்தவுடன் சூடாகப் பரிமாறவும்.

பின்குறிப்பு:

இதே முறையில் கத்திரிக்காய்க்குப் பதிலாக மீன், இறால், பாம்பே டக் கருவாடு கொண்டு தயாரிக்கலாம்..

Posted

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

 

திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

CB8C0D18-34B0-4BFC-815D-0E8265BB7E57_L_s

செய்முறை :

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.  

* தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

* குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.

* சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.
Posted

ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

 

101p1.jpg 

 பால் பாயசம்
 வாழைப்பூ வடை
 பாலக்காட்டு பொரித்த குழம்பு
 கதம்பக் கூட்டு
 கத்திரிக்காய் ரோஸ்ட்
 மைசூர் ரசம்
 இஞ்சி - கறிவேப்பிலை துவையல்
 மசாலா மோர்க்குழம்பு
 வெண்டைக்காய் புளிப்பச்சடி
 வத்தல் குழம்பு

101p2.jpg

ம் பாரம்பர்ய உணவை ரசனையோடு சமைத்து, தலைவாழை இலை விருந்தாக அளிக்கும் வகையில் ருசியான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.மரகதம்.

101p3.jpg

பால் பாயசம்

தேவையானவை:

 பச்சரிசி - கைப்பிடி அளவு
 சர்க்கரை - ஒரு கப்
 நெய் - 2 டீஸ்பூன்
 சாரைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 பால் - அரை லிட்டர்
 ஏலக்காய் - 4

செய்முறை: பச்சரிசியைக் குழைவான சாதமாக வடிக்கவும். பாலைத் தண்ணீர் விடாமல் காய்ச்சவும். சாதத்துடன்  ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.  காய்ச்சிய பாலில் பாதியைத் தனியாக எடுத்துவைக்கவும். மீதிப் பாலில் அரைத்த சாதத்தைப் போட்டு சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து ஒரு கொதிவிடவும்.  பிறகு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சுண்ட ஆரம்பித்தவுடன் தனியாக எடுத்துவைத்த பாலை ஊற்றி  ஒரு கொதிவிட்டு இறக்கவும்.  வாணலியில் நெய்விட்டு சாரைப்பருப்பை வறுத்து, நெய்யுடன் பாயசத்தில் சேர்க்கவும்.


101p4.jpg

வாழைப்பூ வடை

தேவையானவை:

 வாழைப்பூ – ஒன்று
 கடலைப்பருப்பு - ஒரு கப்
 உளுத்தம்பருப்பு - கால் கப்
 தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – 4
 இஞ்சி -  சிறிய துண்டு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பைத் தனியாக ஊறவைக்கவும். வாழைப்பூவை ஆய்ந்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். பருப்புகளைக் களைந்து... காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு, வாழைப்பூ சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.


101p5.jpg

பாலக்காட்டு பொரித்த குழம்பு

தேவையானவை:

 புளி - நெல்லிக்காய் அளவு
 பறங்கிக்காய் துண்டுகள் - அரை கப்
 குடமிளகாய் துண்டுகள், சௌசௌ துண்டுகள் - தலா  கால் கப்
 வெள்ளைக் காராமணி - ஒரு டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - ஒரு கப்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 முந்திரிப்பருப்பு – 2
 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
 கடுகு - சிறிதளவு
 தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெள்ளைக் காராமணி, காய்கறிகளைத் தனித்தனியாக உப்பு போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு... காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு ஆகியவற்றை வறுக்கவும். ஆறியபின் தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர்விட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பிறகு காய்கறிகள், காராமணி, அரைத்த விழுது சேர்த்து கொஞ்சம் கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.


101p6.jpg

கதம்பக் கூட்டு

தேவையானவை:

 புடலங்காய் – ஒன்று
 கேரட் – 2
 பீன்ஸ் – 10
 பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு
 தேங்காய்த் துருவல் - அரை கப்
 பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் – 3
 பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை
 சீரகம் - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்பு, காய்கறிகள் சேர்த்து  4 விசில் வரும் வரை வேகவிடவும். பச்சைப் பட்டாணியை தனியாக வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.  காய்கறி - பருப்பு கலவையோடு அரைத்த விழுது, வேகவைத்த பச்சைப் பட்டாணி,  மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.


101p7.jpg

கத்திரிக்காய் ரோஸ்ட்

தேவையானவை:

 கத்திரிக்காய் - அரை கிலோ
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப)
 கிராம்பு – 4
 பொட்டுக்கடலை - அரை டேபிள்ஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 கடுகு – சிறிதளவு
 அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் உப்பை வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கிராம்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் இவற்றுடன் பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். கத்திரிக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கத்திரிக்காய் துண்டுகள், அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மிக்ஸியில் அரைத்த பொடி சேர்த்து நன்கு பிசிறவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் கலவையைச் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் நன்கு ரோஸ்ட் ஆன பிறகு  இறக்கவும்.


101p8.jpg

மைசூர் ரசம்

தேவையானவை:

 தக்காளி – 2
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 புளி - நெல்லிக்காய் அளவு
 துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - முக்கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – 3
 மல்லி (தனியா) - ஒன்றரை டீஸ்பூன்
 மிளகு – 8
 கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம்பருப்பை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு... மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். ஆறியதும் தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து அரைக்கவும். தக்காளியை சுடுநீரில் போட்டு எடுத்து தோல் உரிக்கவும். ஆறியதும்  மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி விழுது, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு, தண்ணீர் சேர்த்து,  நுரைத்து வரும்போது இறக்கவும். நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


101p9.jpg

இஞ்சி - கறிவேப்பிலை துவையல்

தேவையானவை:

 இஞ்சி - 100 கிராம்
 கறிவேப்பிலை - ஒரு கப்
 புளி - கொட்டைப்பாக்கு அளவு
 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு   - தலா 5 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – 3
 மிளகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு  – தேவையான அளவு

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலையை அலசி, ஈரம் போக வடிய வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து...  உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து  சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைக்கவும்.


101p10.jpg

மசாலா மோர்க்குழம்பு

தேவையானவை:

 சுண்டைக்காய் வற்றல் – 2 டீஸ்பூன்
 புளித்த மோர் - 4 கப்
 தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
 பச்சை மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப)
 காய்ந்த மிளகாய் – 2
 மல்லி (தனியா), கடலை மாவு - தலா அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 பூண்டுப் பல், சின்ன வெங்காயம் - தலா 4
 இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 கடுகு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளித்த மோர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்த் துருவலுடன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலை மாவு, பூண்டு, தோலுரித்த சின்ன வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும் (கொரகொரப்பாகவோ, மிகவும் நைஸாகவோ இல்லாமல் மீடியமான விழுதாக அரைக்கவும்).  அடிகனமான பாத்திரத்தில்  தேங்காய் எண்ணெய்விட்டு... கடுகு, கறிவேப்பிலை, சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுக்கவும்.  இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மோர் கலவையைச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


101p11.jpg

வெண்டைக்காய் புளிப்பச்சடி

தேவையானவை:

 வெண்டைக்காய் - கால் கிலோ
 புளி - நெல்லிக்காய் அளவு
 பச்சை மிளகாய் – 4
 கறிவேப்பிலை – சிறிதளவு
 பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை
 கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடலை மாவை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெண்டைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.  பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, கடலை மாவு கரைசலை ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


101p12.jpg

வற்றல் குழம்பு

தேவையானவை:

 மணத்தக்காளி வற்றல் - ஒன்றரை டீஸ்பூன்
 கடுகு – கால் டீஸ்பூன்
 துவரம்பருப்பு - அரை டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 காய்ந்த மிளகாய் – 2
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 சாம்பார் பொடி - இரண்டே   முக்கால் டீஸ்பூன்
 புளி - எலுமிச்சைப் பழ அளவு
 நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: சுடுநீரில் புளி, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில்  நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பிறகு, சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

Posted

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

மும்பையில் மிகவும் பிரபலமானது இந்த தவா புலாவ். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த தவா புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி ( அ) புழுங்கலரிசி - 1 கப்
குடமிளகாய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கேரட் -  1
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு  -  சுவைக்கேற்ப

தாளிக்க :

பட்டை, ஏலக்காய், கிராம்பு.

9D35C713-CBF9-4E7A-8978-2C32B86A3D9B_L_s

செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், கேரட், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* நறுக்கிய கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும்.

* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.

* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் குடமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகப் பொடி, தனியா தூள், பாவ் பாஜி தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் வேக விடவும்.

* மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த கேரட், பீன்ஸ் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* பிறகு அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி காய்கறி, மசாலாவுடன் கலக்கும்மாறு கிளறி விடவும்.

* கடைசியாக அதன் மேலாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம்.

* சூப்பரான தவா புலாவ் ரெடி.

* இதனுடன், வெள்ளரிக்காய் ரைத்தா, வெங்காயம், தக்காளி ரைத்தா, அப்பளம், ஊறுகாய், தயிர் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
Posted

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

 

ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -  1/2 டீஸ்பூன்

C86334D8-541B-4AD3-AB0F-E38F27482C57_L_s

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

* அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!
Posted

கிட்ஸ் பார்ட்டி தீம் ரெசிப்பி

 

11P1.jpg

 ஹாட் சாக்லேட் ஃபளோட்
 வரகு க்ரோக்கெட்ஸ்
 நூடுல்ஸ் ஸ்பிரிங்ரோல்
 தாபேலி
 டோனட்ஸ் வித் சாக்லேட் டிப் & ஐசிங் கிளேஸ்
 சாக்லேட் ஸ்ப்ரெட் - பீனட் பட்டர் ஃபட்ஜ் 
 ட்ரை கலர் ஃப்ரூட்ஸ் பாப்சிகல்
 பிஸ்கட் மில்க் ஷேக்
 கார்லிக் புல்-அபார்ட் சீஸ் பாப்பர்ஸ்
 ஃப்ரைடு மஷ்ரூம் மோமோஸ்
 கேரட் அல்வா பார்ஃபை

11P2.jpg

குழந்தைகள் விரும்பும் வகையில் புதுமையான, வண்ணமயமான, சுவையான கிட்ஸ் பார்ட்டி தீம் உணவுகளை அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், இனி பிரமாதமாகட்டும்!

11P3.jpg

ஹாட் சாக்லேட் ஃபளோட்

தேவையானவை:

 பால் - 3 கப்
 சோள மாவு - ஒரு டீஸ்பூன்
 சாக்கோ சிப்ஸ் / ரெடிமேட் மில்க் சாக்லேட் பார் - 6 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - 4 டீஸ்பூன்
 கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
 வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப் (அலங்கரிக்க)

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலுடன், சோள மாவைச் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சோள மாவு கலந்த பாலை ஊற்றிச் சூடேற்றவும். அதனுடன் சாக்கோ சிப்ஸை சேர்த்துக் கிளறவும். சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, ஆறவைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றவும். அதன் மேலே ஒரு கரண்டி வெனிலா ஐஸ்கிரீம் வைக்கவும்.

குறிப்பு:

ஹாட் சாக்லேட்டை குறைவான தீயில்தான் செய்ய வேண்டும்.


11P4.jpg

வரகு க்ரோக்கெட்ஸ்

தேவையானவை:

 வரகு அரிசி  - அரை கப்
 உருளைக்கிழங்கு – அரை கப் (வேகவைத்து மசித்தது)
 சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்
 சீஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
 எண்ணெய் – தேவையான அளவு
 கார்ன் - தேவையான அளவு
 உப்பு – தேவையான அளவு

செய்முறை: வரகு அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து வேகவைக்கவும். இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து... மசித்த கார்ன், உருளைக்கிழங்கு, சோள மாவு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதன் நடுவில் குழியாக்கி அரை டீஸ்பூன் சீஸ் துருவல் வைத்து மூடவும். ஓவல் வடிவில் உருண்டைகளை உருட்டி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

க்ரோக்கெட்ஸை சுடச்சுட சாஸுடன் பரிமாறவும்.


11P5.jpg

நூடுல்ஸ் ஸ்பிரிங்ரோல்

தேவையானவை:

மேல் மாவுக்கு:

 மைதா - ஒரு கப்
 சோள மாவு – அரை கப்
 தண்ணீர் - ஒன்றரை கப்
 உப்பு - தேவையான அளவு

பூரணத்துக்கு:

 வேகவைத்து வடிகட்டிய நூடுல்ஸ் – அரை கப்
 கேரட் - கால் கப் (துருவியது)
 கோஸ் - கால் கப் (துருவியது)
 வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
 பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 வெங்காயத்தாள் - கால் கப் (மிகப்பொடியாக நறுக்கியது)
 சர்க்கரை - ஒரு சிட்டிகை
 மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஸ்பிரிங் ரோல் ஷீட்ஸ் செய்ய:

ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், சோள மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக வார்க்கவும். மேல் பக்கம் லேசாக வெந்ததும் திருப்பிப் போட்டு உடனே எடுத்து தட்டில் வைக்கவும். அதிக நேரம் வேகவைக்க வேண்டாம். தோசையின் ஈரத்தன்மை போனால் போதும். இதேபோல் மீதம் உள்ள மாவை தோசைகளாக வார்க்கவும்.

ஸ்பிரிங் ரோல்ஸ் செய்ய:

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம், கோஸ், கேரட், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த நூடுல்ஸ், உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து வதக்கி இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி ஆறவிடவும். சிறிய பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதாவுடன், தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட் பதத்துக்கு கலந்து கொள்ளவும். நூடுல்ஸ் கலவையை ஒரு கரண்டி எடுத்து, தயார் செய்த தோசையின் ஒரு ஓரத்தில் நீளவாக்கில் வைத்து ஒரு முறை சுருட்டிக்கொள்ளவும். பின்னர், இரண்டு பக்கங்களிலிருந்தும் மடித்து, மீண்டும் சுருட்டி மைதா பேஸ்ட்டை தடவி ஓரத்தை ஒட்டிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சுருட்டிய தோசைகளை ஒவ்வொன்றாகப்  போட்டு நன்கு பொரித்து எடுத்தால், ருசியான ஸ்பிரிங் ரோல்ஸ் தயார்.


11P6.jpg

தாபேலி

தேவையானவை:

 பாவ் – 12
 உருளைக்கிழங்கு – 2 கப் (வேகவைத்து, தோலுரித்து, மசித்தது)
 மாதுளை முத்துகள் – அரை கப்
 எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
 சேவ் – அரை கப்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 வேர்க்கடலை (வறுத்தது) – கால் கப்
 வெண்ணெய் – கால் கப்
 வெங்காயம் (நறுக்கியது) – 2
 கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு (நறுக்கவும்)
 புதினா சட்னி - அரை கப்
 மிளகாய் சாஸ் - அரை கப்
 உப்பு – தேவையான அளவு

தாபேலி மசாலா செய்வதற்கு:

 காய்ந்த மிளகாய் – 8
 தனியா – 4 டீஸ்பூன்
 சீரகம் – ஒரு டீஸ்பூன்
 லவங்கம் – 4
 பட்டை (பெரியது) – ஒன்று
 மிளகு – அரை டீஸ்பூன்
 கொப்பரைத் தேங்காய் (துருவியது) - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) – அரை டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தாபேலி மசாலா செய்ய...

காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், லவங்கம், பட்டை, மிளகு, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை வாணலியில் வறுக்கவும். அதனுடன் ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

தாபேலி செய்ய...

ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் வறுத்த வேர்க்கடலை, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வைத்துக்கொள்ளவும். மீண்டும் எண்ணெயைச் சூடாக்கி, அரைத்த மசாலா பொடியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு பாத்திரத்தில், மாதுளை முத்துகள், சேவ், வறுத்த வேர்க்கடலை, வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை மிதமான சூட்டில் சூடாக்கிக்கொள்ளவும். பாவ்-வின் நடுவில் வெண்ணெய், புதினா சட்னி மற்றும் மிளகாய் சாஸ் தடவி தோசைக் கல்லில் சுட வைக்கவும். பாவ்-வின் நடுவே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, அதன் மேலே மாதுளை முத்துகள் கலவையைத் தூவி புதினா சட்னி மற்றும் மிளகாய் சாஸுடன் பரிமாறவும்.


11P7.jpg

டோனட்ஸ் வித் சாக்லேட் டிப் & ஐசிங் கிளேஸ்

தேவையானவை:

டோனட்ஸ் செய்ய...

 மைதா – ஒரு கப்
 சர்க்கரை - கால் கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் (உருக்கவும்)
 டிரை ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
 பால் - கால் கப்
 முட்டை – ஒன்று
 எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
 4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று
 வட்டமான பிஸ்கட் கட்டர் - ஒன்று

சாக்லேட் டிப்பிங் செய்யவதற்கு:

 கோகோ பவுடர் - கால் கப்
 சர்க்கரை – கால் கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஐசிங் கிளேஸ் செய்வதற்கு:

 ஐசிங் சுகர் – 2 கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
 ஃபுட் கலர் - (பிங்க் அல்லது க்ரீன் அல்லது ஆரஞ்ச்) - சிறிதளவு
 வெனிலா அல்லது ஏதாவது ஃப்ரூட் எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை: கால் கப் வெதுவெதுப்பான (கைபொறுக்கும் அளவு சூடு) பாலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஈஸ்டை கலந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். மைதாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்துக்கொள்ளவும். மீதமுள்ள சர்க்கரையை மிக்ஸியில் பொடியாக்கவும். பொடித்த சர்க்கரை, வெண்ணெய் இரண்டையும் ஒரு மரக்கரண்டி கொண்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். வெண்ணெய் கலவையில் மைதா, ஈஸ்ட் கலவையைச் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து, ஒரு தடவை பிசைந்துகொள்ளவும். சாத்துகுடி அளவில் மாவை எடுத்து சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு இன்ச் உயரம் இருக்கும்படி மெதுவாகத் திரட்டி பெரிய வட்டமான மூடியினால் வெட்டிக்கொள்ளவும். நடுவில் சிறிய மூடியினால் வெட்டிவிட்டு, ஒரு தட்டில் வைக்கவும். இப்போது உளுந்துவடை போன்ற வடிவத்தில் இருக்கும்.  இதுபோல எல்லா மாவிலும் செய்துகொண்டு, மீண்டும் 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். டோனட் அழகாக பொங்கி வரும். சூடாக இருக்கும்போதே மேலே பொடித்த சர்க்கரையைத் தூவிவிடவும்.

சாக்லேட் டிப்பிங் செய்ய...

சர்க்கரையை அரை கப் தண்ணீர்விட்டு, கோகோ பவுடர், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும். சாஸ் போல திக்காக இருக்க வேண்டும்.

ஒரு டோனட்டை எடுத்து  சாக்லேட் சாஸில் பாதி அளவுக்கு டிப் செய்து சாக்லேட் கோட்டிங் மேலே இருக்குமாறு ஒரு தட்டில் வைத்து ஆறவிட்டு உபயோகிக்கலாம்.

ஐசிங் கிளேஸ் டிப்பிங் செய்ய...

அடிகனமான பாத்திரத்தில் ஐசிங் சுகர், வெண்ணெய், தண்ணீர் (மிதமான சூட்டில்) கலக்கவும். சுற்றி ஓரங்களில் குமிழிகள் வரும். பார்க்க மென்மையாகவும் பளபளவென வருவதையும் கவனிக்கலாம். சூடாக இருக்கும்போதே எசன்ஸ், கலர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு டோனட்டை எடுத்து  ஐசிங் கிளேஸைப்  பாதி அளவுக்கு டிப் செய்து கிளேஸ் கோட்டிங் மேலே இருக்குமாறு ஒரு தட்டில் வைத்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ஐசிங் செட் ஆகிவிடும்.


11P8.jpg

சாக்லேட் ஸ்ப்ரெட் - பீனட் பட்டர் ஃபட்ஜ் 

தேவையானவை:

 சாக்லேட் ஸ்ப்ரெட் ஹேசல்நட் (நியூட்டெல்லா) - 2 கப்
 ரெடிமேட் டார்க் சாக்லேட் பார் – 150 கிராம்
 சர்க்கரை – அரை கப்
 வெண்ணெய் – அரை  கப்
 சிலிக்கான் மஃபின் மோல்ட் - தேவையான அளவு
 பீனட் பட்டர் - 2 கப்
 சர்க்கரை (பொடித்தது) – முக்கால் கப்
 வெண்ணெய் – அரை கப்

செய்முறை:

அடிகனமான பாத்திரம் ஒன்றில் பார் சாக்லேட்டுகளை சிறிய துண்டுகளாக உடைத்துப் போடவும். நியூட்டெல்லா, சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து சாக்லேட்டை உருக்கவும். இந்தக் கலவையை மோல்டில்  ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றி நிரப்பவும். இந்த மோல்டை ஃப்ரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் வேர்க்கடலை வெண்ணெய் (பீனட் பட்டர்), சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கலவை சேர்ந்து வரும் வரை கிளறவும். மோல்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, பீனட் பட்டர் கலவையை மோல்டில் ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றவும். இந்த மோல்டை ஃப்ரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

மீண்டும் மோல்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதன் மேல் சாக்லேட் - நியூட்டெல்லா கலவையை ஊற்றவும். ஃப்ரிட்ஜில் 40 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். மோல்டில் இருந்து ஃபட்ஜ்ஜை வெளியே எடுக்கவும்.


11P9.jpg

ட்ரை கலர் ஃப்ரூட்ஸ் பாப்சிகல்

தேவையானவை:

 நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி – அரை கப்
 கொட்டை, தோல் நீக்கி, நறுக்கிய   கிவி பழம் – அரை கப்
 தோல் நீக்கி, நறுக்கிய மாம்பழம் - அரை கப்
 சர்க்கரை - தேவையான அளவு
 தண்ணீர் - ஒரு கப்
 பாப்சிகல் மோல்டுகள் - 4 அல்லது 5

செய்முறை: மூன்று பழங்களையும் தனித்தனியாக சிறிது சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜூஸரில்  போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பாப்சிகல் மோல்டுகளில் அரைத்த ஜூஸ்களில் ஒன்றை 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி,  2 மணி நேரம் ஃப்ரீஸரில்  வைத்து எடுக்கவும். பிறகு அதன் மேல் மற்றொரு ஜூஸை ஊற்றி  2 மணி நேரம் ஃபிரீஸரில்  வைத்து எடுக்கவும். பிறகு அதன் மேல் மூன்றாவது ஜூஸை ஊற்றி, பாப்சிகல் ஸ்டிக்குகள் எடுத்து சொருகி 4 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும்.

பின்பு மோல்ட்டுகளில் இருந்து பாப்சிகல்களைப் பிரித்தெடுக்க... கிச்சன் சிங்க் குழாயைத் திறந்து வைத்து ஓடும் நீரில் மோல்டுகளை பின்புறவாக்கில் காட்டினால் பாப்சிகல் தனியாகப் பிரிந்து வந்துவிடும்.

குறிப்பு:

இந்தப் பழங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் விரும்பும், அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களையும் பயன்படுத்தலாம்.


11P10.jpg

பிஸ்கட் மில்க்‌ஷேக்

தேவையானவை:

 பிஸ்கட் (ஒரியோ) – 4-5
 வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப்
 குளிர்ச்சியான பால் – 2 கப்
 சர்க்கரை - 2 டீஸ்பூன்
 சாக்லேட் சிரப் – 2 டீஸ்பூன்
 குளிரவைக்கப்பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) – அரை கப்

அலங்கரிக்க:

 பிஸ்கட் (ஒரியோ) துகள் – ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை: முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் சர்க்கரை, பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.  பின்னர், அதில் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக்கொள்ளவும்.

மில்க்‌ஷேக்கை கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றவும். பின்னர் அதன் மேல் விப்பிங் க்ரீம், சாக்லேட் சிரப், பிஸ்கட் ‌ துகள்களைச் சேர்த்து ஸ்ட்ரா போட்டு பரிமாறவும்.


11P11.jpg

கார்லிக் புல்-அபார்ட் சீஸ் பாப்பர்ஸ்

தேவையானவை:

 வெட்டப்படாத முழு பிரெட் (பெரியது) – ஒன்று
 உருக்கிய வெண்ணெய் - அரை கப்
 குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 ஆலிவ்  - ஒன்று
 மிகப்பொடியாக நறுக்கிய பூண்டு   – 4 டேபிள்ஸ்பூன்
 சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 செஷ்வான்  பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 சீஸ் – அரை கப்

செய்முறை: பிரெட்டை முக்கால் பாகம் வரை சிறிய சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும். உருகிய வெண்ணெய், நறுக்கிய குடமிளகாய், ஆலிவ், பூண்டு மற்றும்  சில்லி ஃபிளேக்ஸ், செஷ்வான்  பேஸ்ட், தக்காளி சாஸ் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை பிரெட்டில் ஸ்டஃப் செய்யவும். சீஸை மேலே தூவி அலுமினிய காகிதத்தால் மூடவும். 180° பாரன்ஹீட் செட் செய்த அவனில் வைத்து 10 நிமிடஙகள் பேக் செய்து பரிமாறவும்.


11P12.jpg

ஃப்ரைடு மஷ்ரூம் மோமோஸ்

தேவையானவை:

மேல் மாவுக்கு...

 மைதா / கோதுமை மாவு - ஒரு கப்
 தண்ணீர்  - தேவையான அளவு
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

பூரணத்துக்கு...

 பட்டன் காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
 கோஸ் - கால் கப் (துருவியது)
 வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
 பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 வெங்காயத்தாள்    - கால் கப் (மிகப்பொடியாக நறுக்கியது)
 சர்க்கரை - ஒரு சிட்டிகை
 மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு சிறிது கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். மேலே  ஓர் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும் (இது மாவு உலர்ந்து போவதைத் தடுக்கும்).

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும், வெங்காயம், கோஸ், காளான், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து வதக்கி, இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி ஆறவிடவும்.

ஒரு சப்பாத்தி செய்யும் அளவு மாவு எடுத்து சிறிது தட்டையாக்கி நடுவில் பூரணம் வைத்து, கொசுவம் வைத்து மடிக்கவும். கொழுக்கட்டை வடிவிலும் மடிக்கலாம். பிறகு, ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, இரண்டிரண்டாக போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ருசியான மஷ்ரூம் மோமோஸ் தயார். சூடான மோமோஸை காரமான சாஸுடன் பரிமாறவும்.

சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:
 
 தக்காளி - ஒன்று
 காய்ந்த மிளகாய்  - 8
 பூண்டு - 6 பல்
 வினிகர் – ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய், உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்முறை: குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர், முழுத் தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். பிறகு இவற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். வினிகர் சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதைச் சூடான மோமோஸுடன் பரிமாறவும்.


11P13.jpg

கேரட் அல்வா பார்ஃபை (Carrot halwa Parfait)

தேவையானவை: 

கேரட் அல்வா தயாரிக்க...

 துருவிய கேரட் - 4 கப்
 பால் - 2 கப்
 சர்க்கரை –  ஒன்றரை கப்
 நெய் - 3 டேபிள்ஸ்பூன்
 முந்திரி - 12
 துருவிய பாதாம் மற்றும் பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் ஊற்றி, 2 விசில்விட்டு இறக்கவும். அதேசமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு பிரஷர் குக்கரைத் திறந்து, அதை அப்படியே அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, கலவை சற்று கெட்டியாகும் வரை தீயைக் குறைவாக வைத்துக் கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறிவிடவும். கலவை நன்கு அல்வா பதத்துக்கு வந்த பின்னரே, அதை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

க்ரீம் சீஸ் கலவை தயாரிக்க...

தேவையான பொருட்கள்:

 விப்பிங் கிரீம் - ஒரு கப்
 வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்
 க்ரீம் சீஸ் – ஒரு கப்

செய்முறை: விப்பிங் கிரீம்மை நன்கு விப் செய்து, அத்துடன் இதரப் பொருள்களை கலந்துகொள்ளவும்.

அலங்கரிக்கும் முறை:

சிறிய கண்ணாடி கப்பில் கால் இன்ச் அளவுக்கு கேரட் அல்வாவை சரிசமமாகப் பரப்பவும். அதன் மேல் கால் இன்ச் அளவு க்ரீம் சீஸ் கலவையைச் சரிசமமாகப் பரப்பிவிடவும். மறுபடியும் கேரட் அல்வாவைச் சமமாகப் பரப்பிவிடவும். இதன் மேலே மறுபடியும் க்ரீம் சீஸ் கலவையை பரப்பலாம். இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். துருவிய பாதாம் மற்றும் பிஸ்தாவை மேலே தூவி அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நவீனன் said:

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

 

ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -  1/2 டீஸ்பூன்

C86334D8-541B-4AD3-AB0F-E38F27482C57_L_s

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

* அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!

 

புளிச்ச கீரை?

Posted

Bildergebnis für புளிச்சகீரை

27 minutes ago, ரதி said:

 

புளிச்ச கீரை?

 

சரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை

 

p41a.jpg

ந்திராவின் கோங்குரா சட்னி மிகவும் பிரசித்தம். அதன் காரத்தை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்துவிடும். நம் ஊரில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுவதுதான் ஆந்திராவில் கோங்குரா. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் முதன்மையானது புளிச்சகீரை. எனினும், தென் இந்தியாவில்தான் இந்தக் கீரையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் இந்தக் கீரைக்கு உள்ளன.

புளிச்சகீரையைக் கடைந்து, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். சிலர், புளிச்சகீரையை ஊறுகாயாகவும் பயன்படுத்துகிறார்கள். பெயருக்கு ஏற்றார்போல புளிப்புச்சுவைகொண்ட இந்தக் கீரைக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உண்டு.

பித்தம் உடலில் அதிகமாகி, சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், கரப்பான், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை சிறந்த தீர்வு.

p41b.jpg

இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் அளவாகச் சாப்பிட்டுவர, உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை நீங்கும். சொறி, சிரங்கு முதலிய சருமப் பிரச்னைகளும் நீங்கும்.

புளிச்சகீரை, காமப்பெருக்கியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

புளிச்சகீரை இலைகளை நசித்து, உடலில் உள்ள பெருங்கட்டிகளின் மீதுவைத்துக் கட்ட, வீக்கம் குறைந்து, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. உடல் வலுவின்றி இருக்கும் குழந்தைகளுக்குப் புளிச்சகீரையை கொடுத்துவந்தால், உடல் புஷ்டி அடையும்.

புளிச்சகீரையை, மிளகாய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால், குடற்புண்கள் ஆறும்; சிறுநீரக நோய்கள் நீங்கும். உப்பு சேர்க்காமல் புளிச்சகீரையை உணவில் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

http://www.vikatan.com/doctorvikatan/2016-feb-01/food/114731-health-benefits-of-spinach.html

புளிச்ச கீரை கடைசல்

 

என்னென்ன தேவை?

புளிச்ச கீரை - 1 கட்டு,
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1.
13.jpg
எப்படிச் செய்வது? 


கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அரிந்த வெங்காயம்,
வெந்தயம், தனியா, பச்சை மிளகாய், மிளகாய் தூள் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். அதை ஆறவிட்டு மிக்ஸி யில் போட்டு, சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாதி அரைத்த பின் வதக்கிய புளிச்ச கீரையைப் போட்டு அரைக்கவும்.

அரைத்ததை இறக்கி வைக்கவும். பூண்டு, காய்ந்த மிளகாயை வதக்கி, பொடித்து புளிச்ச கீரை கடைசலில் போட்டுப் பிரட்டவும். இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ். சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். 1 வாரம் வரை கெடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்தியும் உதைக் கேட்ட ஞாபகம் இருக்குtw_cold_sweat:...உந்தக் கீரை லண்டனில் இருக்கோ?...அதன் இந்தியப் பெயர் என்ன?

Posted
15 hours ago, ரதி said:

முந்தியும் உதைக் கேட்ட ஞாபகம் இருக்குtw_cold_sweat:...உந்தக் கீரை லண்டனில் இருக்கோ?...அதன் இந்தியப் பெயர் என்ன?

லண்டனில் இல்லாததா.. தமிழ், இந்தியன் கடைகளில் கேட்டு பாருங்கள்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.