Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: Essen
 

"வாழைப்பூ போண்டா செய்யும் முறை

தேவையான பொருள்கள் :

உளுந்து - கால் கிலோ
வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை - ஓரு கொத்து
தேங்காய்ப்பூ - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

உளுந்தை ஊறவைத்து நைசாக அரைக்கவும். தேங்காயுடன் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காயவைத்து, பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான வாழைப்பூ போண்டா தயார். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

  • Replies 782
  • Views 228.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழினி
    தமிழினி

  • இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....! 

  • நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

  • தொடங்கியவர்

30 வகை ஹெல்த்தி ரெசிப்பி

 

சாப்பிடும் உணவு சுவையாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு சமீபகாலமாக  அதிகரித்துவருகிறது. குடும்பத்தில், குழந்தைகள் முதல் சீனியர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழ ஆரோக்கியமான உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டு, செய்துகாட்டுகிறார் சமையல்கலைஞர்  ஹரிதா படவா கோபி.

p103b2.jpg

பீட்ரூட் சாப்ஸ்

தேவையானவை: பெரிய பீட்ரூட் - 2 (வேகவைத்து, தோல் உரித்து, சதுர துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு - 8 பல், மிளகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, கடுகு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

p10c1.jpg

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, சிறிது நேரம் வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

இதைச் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.


பொட்டேட்டோ - கேஷ்யூ கிரேவி

p103c1.jpg

தேவையானவை: குட்டி உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து, தோலுரிக்கவும்), வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை- சிறிய துண்டு, தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், ஏலக்காய் - 2, லவங்கம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) இலைகள் - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தயிர் - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்த மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முந்திரிப்பருப்புடன், ஏலக்காய், தனியா, பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருளைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு... பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிக்ஸியில் அரைத்த பொடி, தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். தயிர் நன்கு கலந்தவுடன் மிளகாய்த் தூள், சர்க்கரை, உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கஸூரி மேத்தி (வெந்தயக்கீரை) இலைகள், கொத்தமல்லித்தழை தூவவும்.

இதைச் சூடான சாதத்துடனோ, சப்பாத்தி, பூரியுடனோ பரிமாறலாம்.


பனீர் பசந்தா

p103d.jpg

தேவையானவை: பனீர் - 500 கிராம், தக்காளி - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - பாதியளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் பனீருடன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி தனியே எடுத்துவைக்கவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடாக்கி, பனீர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), சோம்புத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கி இறக்கவும். மேலே எலுமிச்சைப் பழம் பிழிந்து பரிமாறவும்.


கருணைக்கிழங்கு - லெமன் ஃப்ரை

p103e.jpg

தேவையானவை: கருணைக்கிழங்கு - 250 கிராம், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, டைமண்ட் வடிவத்தில் நறுக்கி, வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்கவும். இதில் கருணைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் பிசிறி, எலுமிச்சைச் சாற்றை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, கருணைக்கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


பேக்டு காலிஃப்ளவர்

p103f.jpg

தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, மெக்ஸிகன் ஹெர்ப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - சிறிதளவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சுடுநீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, நீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி காலிஃப்ளவர் துண்டுகளைப் பரப்பவும். மெக்ஸிகன் ஹெர்ப்ஸ், ஆரிகானோ, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து மேலே தூவவும். 108 டிகிரியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசைக்கல்லில் சமைக்கலாம்.


பீன்ஸ் - பனீர் டிலைட்

p103g.jpg

தேவையானவை: பீன்ஸ் - 250 கிராம், பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸ், பனீரை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியே வைக்கவும். பனீருடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசிறி தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி, பனீரைப் போட்டு பொரித்து எடுத்து, தனியே வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மேலும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் பீன்ஸ் கலவை, தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, பனீர் கலவை சேர்த்து மூடி வேகவிட்டு இறக்கவும்.


வெண்டைக்காய் - வேர்க்கடலை ஸ்டஃப்பிங்

p103h.jpg

தேவையானவை: வெண்டைக்காய் - 500 கிராம், வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயின் மேல், கீழ் பாகங்களை நறுக்கிவிட்டு நடுவில் ஒரு கீறல் போட்டு உள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும். வெறும் வாணலியில் கடலை மாவைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் கடலை மாவுடன் வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியை கீறிய வெண்டைக்காய் உள்ளே நிரப்பவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் சற்று கூடுதலாக எண்ணெய்விட்டு, வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுக்கவும். பொரித்த வெண்டைக்காய் மீது வறுத்த வெங்காயம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


கேழ்வரகு - பனீர் சேமியா

p103i.jpg

தேவையானவை: கேழ்வரகு சேமியா (ராகி சேமியா) - 250 கிராம், பனீர் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும். நன்கு கொதிக்கும் நீரில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பனீரைச் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை மேலும் வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சேமியா, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும்.


பச்சைப் பயறு சமோசா

p103j.jpg

தேவையானவை: பச்சைப் பயறு - 200 கிராம், மைதா மாவு - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பச்சைப் பயறை நன்றாக வேகவைத்து மசிக்கவும். இதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா உருண்டைகளை முக்கோண வடிவத்தில் திரட்டவும். ஒவ்வொரு முக்கோணத்தையும் கப் போல செய்து, நடுவே பச்சைப் பயறு மசாலாவை வைத்து ஓரங்களைத் தண்ணீர் தொட்டு மூடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.


சௌசௌ பொடிமாஸ்

p103k.jpg

தேவையானவை: சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்) - 2 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். சௌசௌவைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மொறுமொறுவென்று வரும்வரை வறுக்கவும்.. இதனுடன் வேகவைத்த சௌசௌ சேர்த்துக் கிளறி இறக்கவும்.


மஷ்ரூம் - பூண்டு மசாலா

p103l.jpg

தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம், பூண்டுப் பல் - 10, பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமின் அடிப்பாகம் நீக்கி இரண்டாக நறுக்கி, கழுவி சுத்தம் செய்யவும். பூண்டைத் தோல் உரித்து தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி... வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்கு வதங்கி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், ம‌ஷ்ரூம் - பூண்டு மசாலா ரெடி.


பனீர் சில்லி ஃப்ரை

p103m.jpg

தேவையானவை: பனீர் - 250 கிராம் (டைமண்ட் வடிவில் நறுக்கவும்), குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - சிறிதளவு, சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பனீருடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, அஜினமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். குடமிளகாய் பாதி வெந்த பின்பு பனீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக வேகவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


சோயா கபாப்

p103n.jpg

தேவையானவை: மீல் மேக்கர் (சோயா சங்க்ஸ்) - 250 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், மிளகு - 8 (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மீல் மேக்கரை வெந்நீரில்             ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்திருந்து நீரைப் பிழிந்து எடுக்கவும். கடலைப்பருப்பை நன்கு வேகவைக்கவும். ஆறிய பின் கடலைப்பருப்புடன் மீல் மேக்கர் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டவும். பிறகு, தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி, செய்து வைத்த கபாப்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு: எண்ணெயில் பொரித்து எடுத்தும் தயாரிக்கலாம்.


கோதுமை சேமியா பிரியாணி

p103o.jpg

தேவையானவை: கோதுமை சேமியா - 250 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பீன்ஸ் - 3, கேரட் - ஒன்று, பிரிஞ்சி இலை - ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு, காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்), உருளைக்கிழங்கு - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, கோதுமை சேமியா சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பூசணிக்காய் கோஃப்தா கறி

p103p.jpg

தேவையானவை: வெள்ளை அல்லது மஞ்சள் பூசணிக்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணிக்காயை விதை, தோல் நீக்கித் துருவவும். இந்தத் துருவலில் உள்ள நீரை கைகளால் பிழிந்து வடித்துவிடவும். துருவிய பூசணிக்காயோடு சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.. பிறகு, அதே வாணலியில் மீதமிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மீதமுள்ள மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்றாக கொதித்து கிரேவி பதத்துக்கு வரும்போது பொரித்து வைத்த கோஃப்தா உருண்டைகளைப் போடவும். மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


சன்னா புலாவ் 

p103q.jpg

தேவையானவை: சன்னா (கொண்டைக்கடலை) - 100 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சன்னா மசாலா பொடி - 2 டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சன்னாவை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து, வேகவைத்து எடுக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து  பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சன்னா மசாலா பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, வேகவைத்த சன்னா சேர்த்து நன்கு வதக்கவும். சன்னாவில் மசாலா நன்றாக சேர்ந்த பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பேபி கார்ன் பெப்பர் ஃப்ரைடு ரைஸ்

p103r.jpg

தேவையானவை: பேபி கார்ன் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), பாசுமதி அரிசி - 100 கிராம், வெள்ளை மிளகு - 4 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), அஜினமோட்டோ (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து வேகவைத்து எடுக்கவும். பேபி கார்னை தனியாக வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வும். இதனுடன் பேபி கார்ன், மிளகுத்தூள், உப்பு, (விருப்பப்பட்டால்) அஜினமோட்டோ சேர்த்து வதக்கவும். பிறகு, வடித்து வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து கிளறி இறக்கவும்.


சொதி

p103s.jpg

தேவையானவை: தக்காளி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் (முதல் பால், இரண்டாவது பால்) - தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, இரண்டாவது தேங்காய்ப் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும், முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


கேப்ஸிகம் - வேர்க்கடலை கறி

p103t.jpg

தேவையானவை: குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - தலா ஒன்று (விரும்பிய வடிவில் நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - 100 கிராம், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்த பொடி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

குறிப்பு: குடமிளகாய் நன்கு வேகாமல், கொஞ்சம் `நறுக் நறுக்’கென்று இருந்தால், மிகவும் சுவையாக இருக்கும்.


இன்ஸ்டன்ட் கோஃப்தா கறி

p103v.jpg

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து வைக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு, ஒரு பாகம் வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மீதம் உள்ள வெங்காயம் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்ப்பாலை சேர்த்து, பொரித்து வைத்த உருண்டைகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


லேடிஸ் ஃபிங்கர் -  கேஷ்யூ மசாலா

p103w.jpg

தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். சுடுநீரில் முந்திரிப் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் வெண்டைக்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பு விழுது, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியாக வந்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கலக்கவும்.


காலிஃப்ளவர் பூரி

p103x.jpg

தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, கோதுமை மாவு - 200 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசையவும். காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும்.


மீல் மேக்கர் மஞ்சூரியன்

p103y.jpg

தேவையானவை: மீல் மேக்கர் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சூடான நீரில் மீல் மேக்கரைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து எடுக்கவும். அதைப் பிழிந்துவிட்டு, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், மீல் மேக்கர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிட்டு இறக்கவும்.


கொள்ளு சாம்பார்

p103z.jpg

தேவையானவை: கொள்ளு - 200 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), விரும்பிய காய்கறிகள் கலவை (முருங்கைக்காய், மாங்காய், பூசணிக்காய்) - ஒரு கப், தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடியளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெல்லம் - 50 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு, வெந்தயம், புளி, வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். கொள்ளுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைச் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொள்ளு, அரைத்து வைத்த விழுது, உப்பு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். இதைச் சாதத்துடன் பரிமாறலாம்.


ஸ்பானிஷ் ரைஸ்

p103za.jpg

தேவையானவை: பாசுமதி அரிசி - 200 கிராம், டொமேட்டோ ப்யூரி - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் - 10 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் வெண்ணெயைவிட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த சாதம், டொமேட்டோ ப்யூரி, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


பாகற்காய் மசாலா

p103zb.jpg

தேவையானவை: சிறிய பாகற்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாகற்காயின் ஓரங்களை நறுக்கிவிட்டு, நடுவில் சிறு கீறல் போட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும். (முழுவதுமாக நறுக்கக் கூடாது). வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். ஆறிய பின் இந்தக் கலவையைப் பாகற்காயின் நடுவே அடைக்கவும். பிறகு பாகற்காயை நூலால் கட்டி சிறிது நேரம் ஊறவிடவும் (உள்ளிருக்கும் மசாலா வெளியில் வராமல் இருப்பதற்காக). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பாகற்காய்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் (நூல் தானாகப் பிரிந்து வந்துவிடும்). சுவையான பாகற்காய் மசாலா ரெடி.


பொட்டேட்டோ கப்ஸ்

p103zc.jpg

தேவையானவை: உருளைக் கிழங்கு - 250 கிராம் (தோல் சீவி துருவவும்), க்யூப் சீஸ் - 6 (துருவவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: துருவிய உருளைக் கிழங்கில் இருந்து தண்ணீரைப் பிழிந்தெடுக்கவும். இதனுடன் சீஸ் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிய கப்களில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை உள்ளே போட்டு நன்றாக அழுத்தவும். பின்னர் கப்பை திருப்பித் தட்டினால், சிறு சிறு கப் வடிவில் கலவை வெளியே வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொட்டேட்டோ கப்புகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


தானியம் - சம்பா பிசிபேளாபாத்

p103zd.jpg

தேவையானவை: சம்பா ரவை - 200 கிராம், தானியக் கலவை (பச்சைப் பயறு, மொச்சை, வெள்ளைக் காராமணி, சிவப்புக் காராமணி, வெள்ளைக் கொண்டைக்கடலை, கறுப்புக் கொண்டைகடலை) - ஒரு கப், துவரம்பருப்பு - 2 கப், வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புளிக்கரைசல் - ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே தானியங்களைத் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் களைந்து அரைவேக்காடு பதத்தில் வேகவைத்து எடுக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தானியங்கள், உப்பு, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, புளிக்கரைசல், சம்பா ரவை, சாம்பார் பொடி சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


ராஜ்மா பிரியாணி

p103ze.jpg

தேவையானவை: ராஜ்மா - 200 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை விட்டு இறக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு உருக்கி, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், ராஜ்மா பிரியாணி ரெடி.


சோயா பக்கோடா

p103zf.jpg

தேவையானவை: சோயா - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி, சோயாவைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு சோயாவைப் பிழிந்து எடுக்கவும். பிறகு, சோயாவைக் கையால் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு மசித்து தனியே எடுத்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சோயா, கடலை மாவு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோயா கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெஜ் கபாப் ரெசிப்பி

 

49p1.jpg

 உருளைக்கிழங்கு கபாப்
 காலிஃப்ளவர் மலாய் டிக்கா
 மஷ்ரூம் டிக்கா
 பனீர் டிக்கா
 ஹரா பரா கபாப்

49p2.jpg

பாப் போன்றவற்றை நான்–வெஜ் விரும்பிகள் மட்டும்தான் சுவைக்க முடியுமா, என்ன? சைவத்திலும் சகல ருசிகளும் உண்டு என்கிற தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞரும் உணவுப்புகைப்பட நிபுணருமான திவ்யா, கபாப் செய்முறைகளை அளித்திருக்கிறார்!

49p3.jpg

உருளைக்கிழங்கு கபாப்

தேவையானவை:

 உருளைக்கிழங்கு - 3
 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள்  - 2 டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - கால் கப்
 சீரகம்  - அரை டீஸ்பூன்
 தோல் சீவித் துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 பூண்டு பல்  - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 மூங்கில் குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) - தேவையான அளவு
 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சித் துருவல், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை சேர்த்து, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்), சீரகத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு, தேவையான அளவு கலவை எடுத்து, மூங்கில் குச்சிகள் மீது வைத்து விரல்களால் அழுத்திப் பரப்பவும். மேலே மைதா தூவி தடவவும். இப்படியே விழுது முழுவதையும் செய்துகொள்ளவும். தோசைக்கல்லில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு, செய்துவைத்திருக்கும் கபாப்களை அதில் வைத்து இருபுறமும், பொன்னிறமாக, மொறுமொறுவென்று ஆகும்வரை வாட்டியெடுத்து, `கெச்சப்’ உடன் பரிமாறவும்.


49p4.jpg

காலிஃப்ளவர் மலாய் டிக்கா

தேவையானவை:

 காலிஃப்ளவர்  - 10 சிறிய பூக்கள் (முழு காலிஃப்ளவரை உதிர்த்தது)
 ஃப்ரெஷ் க்ரீம்  - 4 டேபிள்ஸ்பூன்
 புளிப்பில்லாத கெட்டி தயிர் - 4 டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவர் பூக்களைப் படத்தில் காட்டியுள்ளபடி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். துண்டுகளைச் சூடான தண்ணீரில் போட்டு எடுக்கவும். ஃப்ரெஷ் க்ரீமுடன் உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். இதனுடன் காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்து பிசிறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சூடான தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, காலிஃப்ளவர் துண்டுகளை அடுக்கி  இருபுறமும் நன்றாக  டோஸ்ட் செய்து எடுக்கவும்.


49p5.jpg

மஷ்ரூம் டிக்கா

தேவையானவை:

 மஷ்ரூம் - 10 (கழுவி துடைத்து துண்டுகளாக நறுக்கவும்)
 மிளகாய்த்தூள் - 3  டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள்  - முக்கால் டீஸ்பூன்
 குடமிளகாய் - பாதியளவு (சதுரங்களாக நறுக்கவும்)
 பெரிய வெங்காயம் - பாதியளவு (சதுரங்களாக நறுக்கவும்)
 எண்ணெய் - 2 டேபிஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மூங்கில் டிக்கா குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) - தேவையான அளவு
 
செய்முறை:

மூங்கில் குச்சிகளை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கடலை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து பேஸ்ட் போல ஆக்கவும். இதனுடன் மஷ்ரூம், வெங்காயம், குடமிளகாய் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டு குடமிளகாய், வெங்காயம்  சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு, அதே கடாயில் மஷ்ரூம் சேர்த்து வதக்கி எடுக்கவும். டிக்கா குச்சியில் குடமிளகாய், வெங்காயம், மஷ்ரூம் என மாற்றி மாற்றிக் குத்தி வைக்கவும். பிறகு டிக்கா குச்சிகளை நேரடியாகத் தணலில் காட்டி, சுட்டு எடுத்து புதினா சட்னியுடன் பரிமாறவும்.


49p6.jpg

பனீர் டிக்கா

தேவையானவை:

 பனீர் - 150 கிராம்
 பெரிய வெங்காயம், குடமிளகாய்  - ஒன்று (சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கவும்)
 தக்காளி - 2 (சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 கெட்டித் தயிர் - ஒரு கப்
 மிளகாய்த்தூள், தந்தூரி மசாலாத்தூள் - தலா 2 டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
 கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 மூங்கில் அல்லது மெட்டல் டிக்கா குச்சி (ஸ்கீவர்ஸ் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தேவையான அளவு
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

49p7.jpg

செய்முறை:

தயிரை ஒரு மெல்லிய துணியில் வைத்து மூட்டையாகக் கட்டித் தொங்கவிடவும். அதிலுள்ள அதிகப்படியான தண்ணீர் வடிந்துவிடும். ஒரு பாத்திரத்தில் தயிருடன் மிளகாய்த்தூள், தந்தூரி மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கஸூரி மேத்தி, எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும் (கலவை நீர்க்க இருப்பின் சிறிதளவு கடலை மாவு அல்லது சோள மாவு சேர்த்துக் கலக்கவும்).

பனீர் துண்டுகளைச் சூடான தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்து டிஷ்யூ பேப்பரால் துடைக்கவும். பனீர், நறுக்கிய பெரிய வெங்காயம், குடமிளகாய், தக்காளித் துண்டுகளை தயிர் கலவையில் முக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் வெளியில் எடுத்து அறை வெப்பநிலைக்கு வரும் வரை அப்படியே வைக்கவும்.

ஒரு நான்-ஸ்டிக் தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பனீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளித் துண்டுகளைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வாட்டி எடுக்கவும். பிறகு அவற்றை கைபொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக குச்சியில் செருகவும் (மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்). அதை சில விநாடிகள் நேரடியாகத் தணலில் காட்டி எடுத்து மேலே சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.


49p8.jpg

ஹரா பரா கபாப்

தேவையானவை:

 கீரை -  ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்)
 உருளைக்கிழங்கு  - 2 (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)
 பச்சைப் பட்டாணி  - அரை கப் (வேகவைத்து மசிக்கவும்)
 சீரகம் - அரை டீஸ்பூன்
 தோல் சீவி துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்
 கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
 பச்சை மிளகாய் - ஒன்று
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் சீரகம் தாளித்து கீரை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் கீரையுடன் பட்டாணி, இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்), உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த கடலை மாவு சேர்த்துக் கலந்து பிசைந்து  மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும் (கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு செய்யவும்). தோசைக்கல்லைச் சூடாக்கி, எண்ணெய்விட்டு  தட்டிய கபாப்களை அடுக்கி, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும். புளிப்பு சட்னியுடன் (சாட் சட்னி) பரிமாறவும்.

  • தொடங்கியவர்

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

 

தினமும் உணவில் சாலட் சேர்த்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சாலட் செய்துவது எப்படி என்று பார்க்கலாம்.

 
உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்
 
தேவையான பொருட்கள் :

கேரட் - 2
முட்டைகோஸ் - 50 கிராம்,
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
குடமிளகாய் - 1,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - அரை ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

201704251054418062_vegetable-salad._L_st

செய்முறை :

* பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும்.

* வெள்ளரிக்காய், கேரட், முட்டைகோஸை துருவி கொள்ளவும்.

* தக்காளியின் விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடமிளகாயை மெலிதாக வெட்டி கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும்.

* துருவிய வெள்ளரிக்காய், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

* பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

* வெஜிடபிள் சாலட் ரெடி.
  • தொடங்கியவர்

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். காய்கறிகளுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 
அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?
 
தேவையான பொருள்கள் :

அவரைக்காய் - 150 கிராம்
முட்டை - 1
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகு தூள் - 1 ஸ்பூன்

201704261530297509_kidk._L_styvpf.gif

செய்முறை :

* அவரைக்காய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

* அவரைக்காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

* முட்டை வெந்து பூப்போல உதிரியாக வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

* சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.
  • தொடங்கியவர்

தர்பூசணி ரெசிப்பிகள்

 

57p1.jpg

 வாட்டர்மெலன் பீட்சா57p2.jpg
 வாட்டர்மெலன் மூஸ்
 வாட்டர்மெலன் ஸ்டார்டர்ஸ்
 வாட்டர்மெலன் கீர்
 வாட்டர்மெலன் மொஜிடோ
 வாட்டர்மெலன் மொசரல்லா
 வாட்டர்மெலன் பாப்சிகல்
 வாட்டர்மெலன் சோர்பெட்
 வாட்டர்மெலன் சூஜி ஸ்லைஸ்
 வாட்டர்மெலன் க்ரீம் சீஸ் சாலட்

கொளுத்தும் கோடை வெயிலிலும் குளிர்ச்சியான விஷயம் என்றால், அது தர்பூசணிதான். வைட்டமின்-சி சத்து நிறைந்து காணப்படும் அருமையான பழம் இது. ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், உலகின் பல பகுதிகளில் தர்பூசணி விளைகிறது. தர்பூசணியைப் பயன்படுத்தி செய்து ருசிக்க வித்தியாசமான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

57p3.jpg

வாட்டர்மெலன் பீட்சா

தேவையானவை:

 தர்பூசணி – ஒன்று (வட்டமாக நறுக்கவும்)
 ஆரஞ்சு சுளைகள் – 10 (கொட்டைகளை நீக்கவும்)
 கிவிப் பழத்துண்டுகள்  – கால் கப்
 அன்னாசிப் பழத்துண்டுகள் – ஒரு கப்
 கறுப்பு திராட்சை – கால் கப்
 பச்சை திராட்சை – கால் கப்
 ஸ்ட்ராபெர்ரி – 5 (பொடியாக நறுக்கவும்)
 தேன் – 2 டீஸ்பூன்
 சாக்லேட் சாஸ் – ஒரு டீஸ்பூன்
 வெள்ளை சாக்லேட் சாஸ் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அகலமான தட்டில் தர்பூசணி துண்டை பீட்சா பேஸ் ஆக கட் செய்து வைக்கவும். இதன் மீது தேனைப் பரவலாக ஊற்றி ஆரஞ்சு சுளைகள், கிவித் துண்டுகள், அன்னாசித் துண்டுகள், திராட்சை வகைகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள் சேர்க்கவும். பிறகு மேலே சாக்லேட் சாஸ் வகைகளை ஊற்றி குளிரவைத்துப் பரிமாறலாம்.


57p4.jpg

வாட்டர்மெலன் மூஸ்

தேவையானவை:

 தர்பூசணி பழத்துண்டுகள்  – ஒரு கப்
 ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்
 சர்க்கரை – ஒரு கப்
 ஜெலட்டின் – 2 டீஸ்பூன்

செய்முறை:

தர்பூசணித் துண்டுகளுடன் பாதி அளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு எடுத்து ஒரு டீஸ்பூன் ஜெலட்டின் சேர்த்து  நன்கு கரைக்கவும். பிறகு இதனுடன் தர்பூசணி அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். சிறிய கண்ணாடி டம்ளர்களில் பாதியளவு தர்பூசணி கலவையை ஊற்றி ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வரை வைத்து எடுக்கவும்.

 ஃப்ரெஷ் க்ரீமுடன் மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து நன்கு அடிக்கவும். மீதமுள்ள ஜெலட்டினை வெந்நீரில் கலந்து க்ரீம் கலவையுடன் சேர்க்கவும். பிறகு கண்ணாடி டம்ளர்களை வெளியே எடுத்து, அவற்றில் ஃப்ரெஷ் க்ரீம் கலவையை ஊற்றி மீண்டும் ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.


57p5.jpg

வாட்டர்மெலன் ஸ்டார்டர்ஸ்
 
தேவையானவை:

 தர்பூசணிப்பழ கியூப் துண்டுகள் –  கால் கப் (விதைகளை எடுத்துவிடவும்)
 புராசஸ்டு சீஸ் கியூப்ஸ் – கால் கப்
 அன்னாசிப் பழ கியூப் துண்டுகள் – கால் கப்
 கிவிப் பழ கியூப் துண்டுகள் – கால் கப்
 சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
 டூத் பிக் – தேவையான அளவு
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

டூத் பிக்கில் தர்பூசணித் துண்டு, கிவிப் பழத்துண்டு, புராசஸ்டு சீஸ் கியூப், அன்னாசிப் பழத்துண்டு என நறுக்கிய துண்டுகளை மாற்றி மாற்றி அடுக்கவும். இதன் மேலே உப்பு, சாட் மசாலாத்தூள் தூவி, குளிரவைத்துப் பரிமாறலாம்.


57p6.jpg

வாட்டர்மெலன் கீர்

தேவையானவை:

 பொடியாக நறுக்கிய தர்பூசணித் துண்டுகள் –  ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்)
 பால் – ஒரு லிட்டர்
 கண்டன்ஸ்டு மில்க் – 2 டீஸ்பூன்
 சர்க்கரை – கால் கப்
 முந்திரி – 5 (பொடியாக நறுக்கவும்)
 ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். ஆறிய பின் தர்பூசணித் துண்டுகள் சேர்த்துக் கலந்து, குளிரவைத்துப் பரிமாறலாம்.


57p7.jpg

வாட்டர்மெலன் மொஜிடோ

தேவையானவை:

 தர்பூசணித் துண்டுகள்  –  ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்)
 சோடா – ஒரு கப்
 புதினா இலைகள் – கைப்பிடியளவு
 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
 சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு
 ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

சிறிதளவு தர்பூசணித் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள தர்பூசணித் துண்டுகளுடன் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

உயரமான கண்ணாடி கோப்பைகளின் ஓரங்களில் சிறிது எலுமிச்சைச் சாறு விட்டு, அதன் மேல் உப்பைத் தூவவும். கோப்பையின் உள்ளே தர்ப்பூசணித் துண்டுகளைப் போடவும். பிறகு அதன் மீது அரைத்த தர்பூசணி விழுது, சேர்த்து ஐஸ் கட்டிகளைப் போட்டு  சோடா சேர்த்துப் பரிமாறவும்.


57p8.jpg

வாட்டர்மெலன் மொசரல்லா

தேவையானவை:

 தர்பூசணித் துண்டுகள்  –  ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்)
 மொசரல்லா சீஸ் – 100  கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
 புதினா இலைகள் – சிறிதளவு
 ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்
 வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
 கறுப்பு ஆலீவ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் – ஒரு  டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தர்பூசணித் துண்டுகளை விருப்பத்துக்கேற்ப `கட்’ செய்து தட்டில் அடுக்கவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். சீஸ் துண்டுகளைத் சூடான தண்ணீரில் முக்கி எடுத்து தர்பூசணித் துண்டுகள் மீது அடுக்கவும். இதன் மீது புதினா இலைகள், மிளகுத்தூள், உப்பு, வினிகர் அல்லது எலுமிச்சைச்சாறு, கறுப்பு ஆலீவ், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைப் பரவலாக சேர்த்து உடனே பரிமாறவும்.


57p9.jpg

வாட்டர்மெலன் பாப்சிகல்

தேவையானவை:

 தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப்
 தேங்காய்ப்பால்  - கால் கப்
 கிவிப் பழம் – ஒன்று
 சர்க்கரை – கால் கப்
 கறுப்பு உப்பு – அரை டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
 பாப்சிகல் மோல்டு – தேவையான அளவு

செய்முறை:

தர்பூசணியை விதைகள் நீக்கி கியூப்களாக துண்டுகள் போடவும். பிறகு, மிக்ஸி ஜாரில் சேர்த்து இத்துடன் சர்க்கரை, கறுப்பு உப்பு, சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து எடுக்கவும். பாப்சிகல் மோல்டுகளில் இந்தக் கலவையை முக்கால் பாகம் வரை ஊற்றி, ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வரை வைத்து எடுக்கவும்.

பிறகு, தேங்காய்ப்பாலில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கி, மோல்டுகளில் ஊற்றவும். கிவி ஜூஸ் ஊற்றுவதற்கு சற்று இடம் விடவும். மீண்டும் மோல்டுகளை ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். கிவிப் பழத்துண்டுகளை மிக்ஸியில் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். ஃப்ரீசரில் இருந்து மோல்டுகளை எடுத்து கிவிப்பழச் சாற்றை ஊற்றி மறுபடியும் ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைத்தெடுக்கவும். பிறகு, வெளியே எடுத்து குழாய் நீரில் காட்டினால், மோல்டில் இருந்து பாப்சிகலை எளிதாக வெளியே எடுக்க வரும்.


57p10.jpg

வாட்டர்மெலன் சோர்பெட் (sorbet)

தேவையானவை:

 தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்)
 கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்

செய்முறை:

விதைகள் நீக்கிய தர்பூசணித் துண்டுகளுடன்  கண்டன்ஸ்டு மில்க்  சேர்த்து மிக்ஸியில் நுரை வரும் வரை அடித்து எடுக்கவும். விரும்பிய மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு மோல்டில் இருந்து வெளியே எடுத்து பரிமாறலாம்.


57p11.jpg

வாட்டர்மெலன் சூஜி ஸ்லைஸ்

தேவையானவை:

 தர்பூசணிச் சாறு – 2 கப்
 ரவை   – ஒரு கப்
 சர்க்கரை – ஒரு கப்
 பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)
 ஸ்ட்ராபெர்ரி ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
 ஆப்பிள் பச்சை நிற ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
 சாக்கோ சிப்ஸ் – ஒரு டீஸ்பூன்
 நெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி உருக்கி, ரவையைச் சேர்த்து பச்சை வாசனை போக வறுத்தெடுத்து, சரிபாதியாக பிரித்து வைக்கவும். அதே பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கி தர்பூசணிச் சாறு, அரை கப் சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். இத்துடன் அரை கப் ரவை சேர்த்து வேகவிடவும். ஸ்ட்ராபெர்ரி ஃபுட் கலர் சேர்த்து பச்சை வாசனை போனதும் கிளறி இறக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பால், மீதமுள்ள சர்க்கரை, சேர்த்து நன்கு கரைய விடவும். இத்துடன் மீதம் இருக்கும் ரவையைச் சேர்த்து வேகவிடவும். இதில் ஒரு பகுதியைத் தனியாக பிரித்து வைக்கவும்.
பேனில் ஒரு சிட்டிகை ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலரைச் சேர்த்து ஒரு லேசாக கிளறி பாலில் வெந்த ரவையில் (தனியாக எடுத்து வைத்திருக்கும் ஒரு பாகத்தில்) சேர்த்துக் கிளறவும்.

குழிவான பாத்திரத்தில் நெய் தடவி, பச்சை நிற வெந்த ரவை கலவையைச் சேர்த்து கைகளால் நன்கு சமப்படுத்தவும். பிறகு, தனியாக எடுத்து வைத்திருக்கும் வெள்ளை ரவை கலவையை மெதுவாக  சமப்படுத்தவும். பச்சை கலர் மற்றும் வெள்ளை கலர் இரண்டும் ஒன்றாகிவிடக் கூடாது.

இறுதியாக ஸ்ட்ராபெர்ரி ஃபுட் கலர் கலவையை நடுவில் வைத்து கத்தியால் மெதுவாக மற்ற இடங்களுக்குப் பரப்பி விடவும்.  ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்தெடுத்து ஒரு தட்டில் கலவையை மெதுவாக கவிழ்க்கவும். பிறகு வட்ட ஸ்லைஸ்கள் போட்டு நடுவில் சாக்கோ சிப்ஸ் வைத்துப் பரிமாறவும்.


57p12.jpg

வாட்டர்மெலன் க்ரீம் சீஸ் சாலட்

தேவையானவை:

 தர்பூசணி – அரை கிலோ
 க்ரீம் சீஸ் – 3 டேபிள்ஸ்பூன்
 ஐஸிங் சுகர்  – 3  டேபிள்ஸ்பூன்
 வால் நட்ஸ் – கால் கப்

செய்முறை:

தர்பூசணியை முக்கோண வடிவ துண்டுகளாக கட் செய்து வைக்கவும். க்ரீம் சீஸுடன் ஐஸிங் சுகர் சேர்த்து அவை பொங்கிவரும் வரை நன்கு அடிக்கவும். பிறகு பைப்பிங் பேக்கில் க்ரீம் சீஸைச் சேர்த்து ரெடியாக வைக்கவும்.

இனி ஒரு முக்கோண வடிவ தர்பூசணி துண்டின் மேல் `பைப்பிங் பேக்’கில் உள்ள க்ரீம் சீஸைப் பிழிந்து, அதன் மேல் வால் நட்ஸால் அலங்கரிக்கவும்.  இதன் மேல் மற்றொரு தர்பூசணி முக்கோண வடிவ துண்டை வைத்து க்ரீம் சீஸ் பிழிந்து, வால் நட்ஸால் அலங்கரிக்கவும். இதேபோல மூன்றாவது துண்டையும் வைத்து அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

குழந்தைகளுக்கு சிக்கன், மட்டனை ஃபிரை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மட்டனை வைத்து மட்டன் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65
 
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத மட்டன் - 250 கிராம்
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்  டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்  (அல்லது) வினிகர் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

201704281044134193_mutton-65._L_styvpf.g

செய்முறை :

* மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்).

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).

* ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும் வரை பொரித்தால் போதும்.

* சூப்பரான மட்டன் 65 ரெடி.  

குறிப்பு :

நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.

அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • தொடங்கியவர்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்வீட் கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ஸ்வீட் கார்னை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை
 
தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப்,
உளுந்து - ஒரு டீஸ்பூன்,
பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 10,
சோம்பு - அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்
புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லை - அனைத்தும் சேர்ந்து ஒரு கப் (நறுக்கியது),  
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

201704291305341891_Sweet-Corn-vada._L_st

செய்முறை :  

* சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூழ்குமளவு நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஊற வைத்த உளுந்து, பச்சரியுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும்.

* அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான ஸ்வீட் கார்ன் வடை ரெடி.
  • தொடங்கியவர்

ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி

 

மிஸ்ஸி ரொட்டி ராஜஸ்தானில் மிகவும் பிரபலம். இந்த ரொட்டியை செய்வது மிகவும் சுலபமானது. இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி
 
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
உலர்ந்த கஸ்தூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

201704281530123112_Missi-roti._L_styvpf.

செய்முறை :

* பாசிப்பருப்பை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், உலர்ந்த கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசைந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

* பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய ரொட்டிகளாக தேய்த்துக்கொள்ளவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும், உருட்டிய ரொட்டிகளைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி ரெடி.
  • தொடங்கியவர்

30 வகை ஒன் பாட் குக்கிங்

 

 

திக நேரம் செலவிடாமல், குறைந்த அளவு பொருட்களைக் கொண்டு எளிதாகச் சமைப்பதுதான் ‘ஒன் பாட் குக்கிங்’. புதிதாகச் சமையல் செய்வோரும், பணிக்குச் செல்வோரும் பக்குவமாகவும் ருசியாகவும் சமைக்கும் வகையில் பயனுள்ள ரெசிப்பிகளை படங்களுடன் வழங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அனிதா கிருபாகரன்.

p103a.jpg

திடீர் திரட்டுப்பால்

தேவையானவை: பால் பவுடர் - 2 கப், சர்க்கரை - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் (அ) பால் - அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

1.jpg

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி 4 (அ) ஐந்து விசில் விட்டு இறக்கினால், திடீர் திரட்டுப்பால் ரெடி.


ஆந்திரா புளியோதரை

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6, பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப், மஞ்சள்தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

2.jpg

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால்... ஆந்திரா புளியோதரை ரெடி.

இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.


அவகாடோ டோஸ்ட்

தேவையானவை: பழுத்த அவகாடோ ஒன்று, வெங்காயத்தாள் - ஒன்று (வெங்காயத்துடன் பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் – 2, உப்பு - தேவையான அளவு.

3.jpg

செய்முறை: பாத்திரத்தில் அவகாடோ, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து மசிக்கவும். பிரெட்டின் மீது வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லை காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும். டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் தடவிப் பரிமாறவும்.


அவல் இனிப்பு பொங்கல்

தேவையானவை:  ஊறவைத்த அவல், வெல்லக் கரைசல் - தலா அரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி - 4, வறுத்த திராட்சை - 8, கிராம்பு - ஒன்று, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, நெய் - 4 டேபிள்ஸ்பூன்

4.jpg

செய்முறை:  வாணலியில் பாசிப்பருப்பு, ஊறவைத்த அவல், வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, கிராம்பு, பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, 5 அல்லது 6 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.


மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

தேவையானவை: கோதுமை மாவு, கோகோ பவுடர் - தலா கால் கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரைக்கால் டீஸ்பூன், பால், சாக்லேட் சிப்ஸ் -  தலா அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

5.jpg

செய்முறை:  கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை மைக்ரோவேவ் கப்பில் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இதை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் முதல் 2 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால், சாக்லேட் கேக் தயார்.

குறிப்பு: ஒரு  டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும்.


குடமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2,  நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,  சீஸ்  துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

6.jpg

செய்முறை: பாத்திரத்தில் சீஸ் துருவல், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது சீஸ் கலவையைப் பரப்பவும். அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு, சீஸ் உருகிய உடன் இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.


காலிஃப்ளவர் - பட்டாணி புர்ஜி

தேவையானவை: பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 2 கப், பச்சைப் பட்டாணி - கால் கப், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

7.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, வேகவைத்து இறக்கினால், காலிஃப்ளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.


புரோக்கோலி ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப், புரோக்கோலி துண்டுகள் - கால் கப், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயத்தாள், முட்டைகோஸ் கலவை - அரை கப், எண்ணெய், சோயா சாஸ், மிளகுத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

8.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பாசுமதி அரிசி சாதம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மஞ்சூரியனுடன் பரிமாறவும் (எல்லாவிதமான மஞ்சூரியனுடனும் பரிமாறலாம்).


பஜ்ஜி மிளகாய் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பஜ்ஜி மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

9.jpg

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கிராம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன்  தேங்காய்த் துருவல்  சேர்த்து மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... பஜ்ஜி மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும் இத்துடன் சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கலந்து இறக்கினால், பஜ்ஜி மிளகாய் சாதம் ரெடி.


பனீர் பாயசம்

தேவையானவை:  பால் - இரண்டரை கப், பனீர் - அரை கப், முந்திரிப்பருப்பு - 5, குங்குமப்பூ - சிறிதளவு, சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாதாம் – சிறிதளவு.

10.jpg

செய்முறை: பனீர், முந்திரிப் பருப்பை அரை கப் பாலுடன் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு சூடான பாலில் பாதியளவு  குங்குமப்பூவை சேர்த்துக் கரைக்கவும். மீதமுள்ள பாலை சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைத்த விழுது, குங்குமப்பூ கரைசல், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். நறுக்கிய பாதாமையும் மீதமுள்ள குங்குமப்பூவையும் தூவவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.


இன்ஸ்டன்ட் கேரட் அல்வா

தேவையானவை: கேரட் துருவல்  - 2 கப், கண்டன்ஸ்டு மில்க் - அரை கப், முந்திரி, பாதாம், திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

11.jpg

செய்முறை: குக்கரில் கேரட் துருவல், கண்டன்ஸ்டு மில்க், முந்திரி, பாதாம், திராட்சை, நெய்  சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 4 (அ) 5 விசில் விட்டு இறக்கவும். ஆவி அடங்கிய பின் மூடியைத் திறந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, அல்வா பதம் வரும் வரை கிளறி எடுக்கவும். வெனிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும்.


கடுகு சாதம்

தேவையானவை: வேகவைத்த சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

12.jpg

பொடி செய்ய: தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பெருங்காயத்தூள், வெல்லம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து (வறுக்க வேண்டாம்) கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள்  சேர்த்துக் கிளறி... வேகவைத்த சாதம், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் கடுகு சாதம் ரெடி.


இன்ஸ்டன்ட் பால் பாயசம்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 5 (அ) 6 டேபிள்ஸ்பூன், பால் – அரை லிட்டர்.

13.jpg

செய்முறை: குக்கரில் சற்று அதிகமாக தண்ணீர்  ஊற்றவும். பாசுமதி அரிசியை எவர்சிவர் டப்பாவில் போட்டு பால் விட்டு மூடி குக்கரில் வைக்கவும். அடுப்பை `சிம்’மில் வைத்து 40 நிமிடம் வேகவிடவும். ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் பரிமாறவும்.


மசாலா பரோட்டா

தேவையானவை:  பரோட்டா - 2 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய குடமிளகாய்  - கால் கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க: முந்திரிப்பருப்பு - 3, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2.

14.jpg

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன்  வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள்  சேர்த்து வதக்கவும். இறுதியாக பரோட்டா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.  வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.


முள்ளங்கி டோஸ்ட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 5, சிவப்பு முள்ளங்கித் துருவல் - அரை கப், வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

15.jpg

செய்முறை: பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லைக் காயவைத்து மிதமான தீயில் டோஸ்ட் செய்து எடுக்கவும். பாத்திரத்தில் முள்ளங்கி, வெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது வைத்துப் பரிமாறவும்.


பட்டாணி பிலாஃப் (Pilaf)

தேவையானவை:ஊறவைத்த பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி – அரை கப், முந்திரிப்பருப்பு - 5, திராட்சை - 10, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய புதினா - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - அரை டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 2, பட்டை - ஒரு துண்டு, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

16.jpg

செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதக்கியவுடன் ஊறவைத்த பாசுமதி அரிசி, பச்சைப்பட்டாணி, உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். பிறகு, மூடியைத் திறந்து புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


சாக்லேட் புடிங்

தேவையானவை:  பால் - இரண்டரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - முக்கால் கப், கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப், சர்க்கரை - 1/3 கப், கோகோ பவுடர் - கால் கப், சாக்லேட் சிப்ஸ் – 1/3 கப், வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், அலங்கரிக்க: புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் – சிறிதளவு.

17.jpg

செய்முறை:  வாணலியில் பால், க்ரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளறவும். பிறகு இதை ஆறவிட்டு, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். செட் ஆனவுடன்  கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரிக்கவும்..

குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.


சில்லி பிரெட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்  - 2, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளிப்பழம் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்), தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

18.jpg

செய்முறை: தோசைக்கல்லை காயவைத்து நெய் விட்டு பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுத்து சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி... தக்காளிப்பழம், தக்காளி சாஸ், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தொக்கு பதத்துக்கு வரும் வரை வதக்கவும். இதனுடன் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்கு கலந்து கொத்தமல்லித்தழை  சேர்த்து இறக்கவும்.


புதினா புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி, விரும்பிய காய்கறி கலவை – தலா அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - அரை டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை – சிறு துண்டு, கிராம்பு - 3, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: புதினா – ஒரு கட்டு (ஆய்ந்து. தண்ணீரில் அலசவும்), இஞ்சி -  சிறிய துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, சோம்பு - அரை டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு.

19.jpg

செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு... சோம்பு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்கவும். இதனுடன் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த விழுது, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி... அரிசி, தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால்... புதினா புலாவ் தயார்.

இதை வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.


ஓமவல்லி இலை மோர்க்குழம்பு

தேவையானவை: கெட்டித் தயிர் - அரை கப், தண்ணீர் - கால் கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

அரைக்க: கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், ஓமவல்லி இலை - 5 - 6, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2

21.jpg

செய்முறை:  அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை பத்து நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, கெட்டித் தயிர் சேர்த்து உடனே இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.


வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு

தேவையானவை: நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப், சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். 

20.jpg

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியபின் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து 5-6 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால்... வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு தயார்.


முருங்கைக்கீரை புலாவ்

தேவையானவை:  பாசுமதி அரிசி, ஆய்ந்த முருங்கைக்கீரை - தலா ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பட்டை - ஒரு துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 2, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

22.jpg

அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - சிறிய துண்டு.

செய்முறை: பாசுமதி அரிசியைத் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி... பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு கீரை, அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி... அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.


பறங்கிக்காய் புலாவ்

தேவையானவை: நறுக்கிய பறங்கிக்காய், பாசுமதி அரிசி - தலா அரை கப், பச்சை மிளகாய் – 3 (இரண்டாகக் கீறவும்), தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ - தலா ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சின்ன துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன்.

23.jpg

செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பறங்கிக்காய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி... அரிசி, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.


உருளைக்கிழங்கு கறி

தேவையானவை: தோலுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, தோல் உரித்து நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. 

24.jpg

செய்முறை: வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.


பனீர் பட்டர் மசாலா

தேவையானவை: பனீர் - 100 கிராம், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - தலா அரை டீஸ்பூன், பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, சர்க்கரை, உப்பு - தேவையான அளவு.

அரைக்க: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பாதாம் - 8, கிராம்பு - 2, ஏலக்காய் - ஒன்று, பட்டை - சிறிய துண்டு.

25.jpg

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, கஸூரி மேத்தி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு பனீர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். இதனுடன் பால் சேர்த்துக் கலந்தால்... பனீர் பட்டர் மசாலா தயார்.


உருளைக்கிழங்கு - பிரெட் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா - கைப்பிடியளவு, கிராம்பு - 2, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 4, உருளைக்கிழங்கு - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,  பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - கால் கப், புதினா இலை - கைப்பிடியளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

அலங்கரிக்க: பொரித்த பிரட், பொரித்த வெங்காயம், புதினா இலை – தேவையான அளவு.

27.jpg

செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம்  ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி... கிராம்பு, பட்டை, ஏலக்காய் தாளித்து, ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை  மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரெட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


சாகு

தேவையானவை: வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி) - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்.

26.jpg

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு காய்கறிகள், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த உடன் அரைத்த விழுது சேர்த்து நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.


கோவைக்காய் மசாலாபாத்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நீளமாக நறுக்கிய கோவைக்காய் - அரை கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த முந்திரி – சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

29.jpg

செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி... கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.


தேன் சில்லி கார்ன்

தேவையானவை: சோளம் - 2, தேன், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை, வெண்ணெய் - தேவை யான அளவு.

 

28.jpg

செய்முறை:  தணலில் கார்னை ரோஸ்ட் செய்து எடுக்கவும். அதன் மேல் வெண்ணெய் தடவி, உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும்.


கரம் மசாலா ரைஸ்

தேவையானவை:  பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன், விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்) - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

30.jpg

செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மஞ்சள்தூள், அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். மூடியைத் திறந்தவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

  • தொடங்கியவர்

காரசாரமான வரகரசி - மிளகு மினி இட்லி

 

சிறுதானியங்களில் வரகரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த வரகரசியுடன் மிளகு சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காரசாரமான வரகரசி - மிளகு மினி இட்லி
 
தேவையான பொருட்கள் :

வரகரிசி - 200 கிராம்,
பச்சரிசி - 50 கிராம்,
முழு உளுந்து - 100 கிராம்,
அவல் - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
மிளகு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

201705021100345852_mini-idli._L_styvpf.g

செய்முறை :

* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும்.

* வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

* நன்றாக ஊறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து(நைசாக) உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

* மாவு புளித்துப் பொங்கியவுடன் அதில் கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் மினி இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

* சூப்பரான வரகரசி - மிளகு மினி இட்லி ரெடி.
  • தொடங்கியவர்

மாலை நேர ஸ்நாக்ஸ் இட்லி பக்கோடா

இட்லி என்றாலே சலித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலை சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்து கொடுக்கலாம்.

 
 
 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் இட்லி பக்கோடா
 
தேவையான பொருட்கள் :

இட்லி - 6
பெரிய வெங்காயம் - 100 கிராம்
சோம்பு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு விழுது - 50 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

201705041522257104_idli-pakora._L_styvpf

செய்முறை :

* சோம்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், பொடித்த சோம்பு, உப்பு, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் தயார் செய்துகொள்ளவும்.

* வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் சேர்க்கவும்.

* இட்லியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லித் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போடவும். பிறகு, மாவைக் கிள்ளியெடுத்து எண்ணெயில் போட்டு மொறுமொறுவென வந்ததும் எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான இட்லி பக்கோடா ரெடி.
  • தொடங்கியவர்

சத்தான காலை டிபன் தயிர் சாண்ட்விச்

காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சீக்கிரமாகவும், சுலபமாவும் சத்தானதாகவும் செய்ய இந்த தயிர் சாண்ட்விச் சிறந்தது. இந்த சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்தான காலை டிபன் தயிர் சாண்ட்விச்
 
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடமிளகாய் - 1 சிறியது
கேரட் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய்  - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

201705050907310364_Yogurt-sandwich._L_st

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், குடமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு மெல்லிய துணியைக் கொண்டு தயிரை வடிகட்டவும்.

* வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

* இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.

* பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.

* சத்தான சூப்பர் டேஸ்ட் தயிர் சாண்ட்விச் ரெடி.

குறிப்பு :

* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.

* தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.
  • தொடங்கியவர்

சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

 

இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். உருளைக்கிழங்கைக் கொண்டு, பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 
சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்
 
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

201705051304415877_pepper-potato-roast._

செய்முறை :

* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தனியாக ஒரு தட்டில் வைத்து, தோலுரித்துக் கொள்ளவும். பின் கையால் அதனை உதிர்த்து விடவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

* அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து 20 நிமிடம் பொன்னிறமாகும் வரை கிளறவும்.

* கடைசியாக மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!
  • தொடங்கியவர்

காரசாரமான சைடிஷ் கருணைக்கிழங்கு லெமன் வறுவல்

 

சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு காரசாரமான கருணைக்கிழங்கு லெமன் வறுவல் சூப்பரான சைடிஷ். இன்று இந்த வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
காரசாரமான சைடிஷ் கருணைக்கிழங்கு லெமன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு நசுக்கியது - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
லெமன் சாறு அல்லது புளிச்சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி

201705091530124717_Elephant-Yam._L_styvp

செய்முறை :

* கருணைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக‌ நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக‌ வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது.

* ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு, உப்பு, சிறிது, லெமன் அல்லது புளிச்சாறு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.

* பிரைந்த மசாலாவில் வேக வைத்த‌ கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற‌ விடவும்.

* தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த‌ கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும்.

* ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான‌ கருணைக்கிழங்கு வறுவல் தயார்.
  • தொடங்கியவர்

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

 

அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் - 500 கிராம்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம் பழ அளவு,
மிளகாய்தூள் - 50 கிராம்,
வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

201705111302041052_brinjal-pickle._L_sty

செய்முறை :

* கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து கலக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

* மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

* பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.

* கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்… கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.
  • தொடங்கியவர்

ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி

அனைவரும் புளியோதரை மிகவும் பிடிக்கும். அன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 6,
பச்சை மிளகாய் - 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

201705131317331674_andhra-recipes-puliho

செய்முறை :

* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

* கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

* சூப்பரான ஆந்திரா புளியோதரை ரெடி.

* இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.
  • தொடங்கியவர்

சூப்பரான சைடிஷ் காலி பிளவர் - பட்டாணி புர்ஜி

தயிர் சாதம், சாம்பார் சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள காலி பிளவர் - பட்டாணி புர்ஜி சூப்பரான சைடிஷ். இன்று இந்த புர்ஜியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான சைடிஷ் காலி பிளவர் - பட்டாணி புர்ஜி
 
தேவையான பொருட்கள் :

காலி பிளவர் - 1,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

201705161303186024_12cauliflower-peas-bh

செய்முறை :

* காலி பிளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.

* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வெந்ததும காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக விடவும்.

* அனைத்து நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* காலி பிளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.
  • தொடங்கியவர்

சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி

 

அசைவம் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு, பிரட் வைத்து இன்று சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபமானது.

 
சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
புதினா - கைப்பிடியளவு,
கிராம்பு - 2,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய் - 4,
உருளைக்கிழங்கு - 2 ,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,  
பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - கால் கப்,
புதினா இலை - கைப்பிடியளவு,
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

அலங்கரிக்க :

பொரித்த பிரட்,
பொரித்த வெங்காயம்,
புதினா இலை - தேவையான அளவு.

201705161519110221_potato-bread-biryani.

செய்முறை :

* உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

* இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.

* பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி ரெடி.
  • தொடங்கியவர்

செட்டிநாடு ஸ்டைல் காளான் ரோஸ்ட்

காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
செட்டிநாடு ஸ்டைல் காளான் ரோஸ்ட்
 
தேவையான பொருட்கள் :

காளான் - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

ஊற வைப்பதற்கு...

கெட்டியான தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

201705171257306835_chettinad-mushroom-ro

செய்முறை :

* கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

* காளானில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி சுண்டி வரும் போது அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* காளான் ரோஸ்ட் ரெடி!!!

 

 

வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி

பழனி பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
பேரீச்சை - 20
காய்ந்த திராட்சை - கால் கப்
தேன் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
பனங்கற்கண்டு - கால் கப்
ஏலக்காய் - 2
201705171532194179_palani-panjamirtham._

செய்முறை :

* பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

* வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

* வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும்.

* கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும்.

* சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி.

* இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

201705171532194179_palani-panjamirtham._

குறிப்பு :

* கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம்.

* வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.
  • தொடங்கியவர்

30 வகை பிரியாணி

 

 

`வழக்கத்தைவிடச் சில கவளங்களை அதிகமாக சாப்பிடவைக்கும் திறன் கமகம, விறுவிறு பிரியாணிக்கு உண்டு. அதிலும் அமர்க்களமான சுவையுடன், விதம்விதமாக பிரியாணி வகைகளைச் செய்து பரிமாறினால்... உறவு, நட்பு வட்டத்தில் உங்கள் கொடி உயர உயரப் பறக்கும். இந்தப் பெருமையை நீங்கள் பெற      30 வகை வெஜ் பிரியாணிகளை இங்கே செய்துகாட்டி அசத்துகிறார் சமையல்கலைஞர்  சுதா செல்வகுமார்.  

p103b.jpg

தேங்காய்ப்பால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப்பால் - 2 கப், காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப், பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, கிராம்பு - 3, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நீளமாக நறுக்கிய பீன்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (கீறவும்), பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. 

p103c.jpg

செய்முறை: அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, வெயிட் போடவும். 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


நவதானிய பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒன்றரை கப், கொண்டைக்கடலை, பட்டாணி, முழு கோதுமை, சிவப்பு காராமணி, சோள முத்துக்கள், மொச்சை, பச்சைப் பயறு, முழு உளுந்து, கொள்ளு (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை -  சிறிதளவு, மராட்டி மொக்கு -  ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

p103d.jpg

அரைத்துக்கொள்ள: சின்ன வெங்காயம் - அரை கப் (நறுக்கியது), சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு (தோல் சீவவும்), பூண்டுப் பல் - 4, காய்ந்த மிளகாய் - 6, தக்காளி - ஒன்று, கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தானியங்களைத் தனித்தனியாக நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் தேவையான நீர்விட்டு ஊறிய தானியங்களைச் சேர்த்து, உப்பு போட்டு குழையவிடாமல், மெத்தென்று வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு அரிசியைப் போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும்.

குக்கரில் சிறிதளவு எண்ணெய்விட்டு, சூடானதும் மராட்டி மொக்கு தாளித்து, அரைத்து விழுதைச் சேர்த்து வதக்கி, உப்பு, கரம் மசாலா சேர்த்துக் கிளறி, வெந்த நவதானியங்களைச் சேர்த்துப் புரட்டவும். 3 கப் நீர்விட்டு அரிசியைச் சேர்த்துக் கிளறி, 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கியப் பின் கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


ஹைதராபாத் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக சிறிதாக நறுக்கிய காய்கறிக் கலவை (உருளைக்கிழங்கு, டர்னிப்ஸ், கேரட், பீட்ரூட்) மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து - ஒன்றரை கப், எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), தயிர் - ஒரு கப், புதினா (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பூண்டுப் பல் - 6, நெய் எண்ணெய், உப்பு -  தேவையான அளவு. அரைத்துக்கொள்ள: முந்திரிப்பருப்பு - 10, கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2, இஞ்சி - அரை அங்குல நீளத் துண்டு (தோல் சீவவும்), கொத்தமல்லித்தழை - அரை கப் (அலசி ஆய்ந்தது).

p103e.jpg

செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும். தயிரைக் கடைந்து உப்பு, ஒரு கப் நீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் அரிசியைப் போட்டு குக்கரை மூடி, தீயைக் குறைத்து வைத்து 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.


ஹாட் வெஜ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக நறுக்கிய காய்கறிக் கலவை - ஒரு கப் (சௌசௌ, புடலங்காய், காலிஃப்ளவர், தோல் சீவிய உருளைக்கிழங்கு), வறுத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மராட்டி மொக்கு - ஒன்று, உலர்ந்த அன்னாசிப்பூ - 2 இதழ், பிரியாணி இலை - ஒன்று, சோம்பு, சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

p103f.jpg


வறுத்துப் பொடிக்க: தனியா - 2 டேபிள்ஸ்பூன், முழு உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து, மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். பிறகு, அதை நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, சோம்பு தாளித்து, நறுக்கிய காய்கறிக் கலவை சேர்த்து வதக்கி... உப்பு, வறுத்து அரைத்த பொடி, சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, 2 கப் சுடுநீரை ஊற்றி, அரிசியைச் சேர்க்கவும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தைச் சூடாக்கிக்கொள்ளவும். அரிசிக் கலவையை அந்தப் பாத்திரத்துக்கு உடனே மாற்றவும். ஒரு கொதி வரும் வரை சூடாக்கி உடனே மூடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந்திருக்கிறதா என பார்த்து முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும்.


கார்ன் - காலிஃப்ளவர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர் (உதிர்த்த பூ) - அரை கப், ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப், பட்டை - சிறிய துண்டு, தேங்காய்ப் பால் - 2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு, கறுப்பு  ஏலக்காய் - 3, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

p103g.jpg

அரைக்க: புதினா (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பட்டை, கறுப்பு ஏலக்காய் தாளித்து, உதிர்த்த காலிஃப்ளவர் பூ, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கவும்.


ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்), ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு.

p103h.jpg

செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள்  வறுத்துக்கொள்ளவும். தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும். இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளிச் சாறு ஊற்றவும். பிறகு, தேவையான நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் நிறுத்தவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும்.


வெஜ் கோஃப்தா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்), வாழைக்காய் - ஒன்று, அலசி ஆய்ந்த பசலைக்கீரை (பாலக்கீரை) - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, பிரெட் - 2 ஸ்லைஸ், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், மசாலாப்பொடி (பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை பொடித்தது)  - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p103i.jpg

செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, சூடானதும் அரிசியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். வாழைக்காயைத் தோல் சீவி மெத்தென்று வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட்டைத் தண்ணீரில் முக்கி எடுத்து உடனே பிழிந்து வாழைக்காயோடு சேர்க்கவும். பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். அதையும் வாழைக்காயோடு சேர்த்து உப்பு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பச்சை மிளகாய், மசாலாப் பொடி சேர்த்து வதக்கி, தேவையான நீர்விட்டு, கொதிவந்ததும் அரிசியைப் போட்டு, உப்பு, மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். குக்கரை `வெயிட்’ போட்டு
மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, பொரித்த கோஃப்தா உருண்டைகள் சேர்த்துக் கிளறவும். பொரித்த வெங்காயத்தைச் சேர்த்துப் பரிமாறவும்.


பைனாப்பிள் டம்ளிங் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி, அன்னாசிப்பழச் சாறு - தலா ஒரு கப், நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப், பனீர் துண்டுகள் - 10, சர்க்கரை - அரை டீஸ்பூன், பாதாம் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த  திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், டைமண்ட் கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (கீறவும்), கிராம்பு - 2, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. 

p103j.jpg

செய்முறை: பாதாம் பருப்பை சுடுநீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மையாக அரைத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் கொஞ்சம் நீர் சேர்த்து, அன்னாசிபழத் துண்டுகளைப் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரிசியைக் கழுவி, ஊறவைக்காமல் நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் அன்னாசிபழச் சாறு, ஒன்றரை கப் நீர் விட்டு சூடாக்கி, நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, கல்கண்டு சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து... அரிசி, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறவும். குக்கரை மூடி, சாதம் வெந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் பச்சை மிளகாய், கிராம்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள், பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி பரிமாறவும். இனிப்பு, காரம், உப்பு சேர்ந்து வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பிரியாணி.


கேபேஜ் - கோவைக்காய் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கோவைக்காய் (வட்டமாக நறுக்கியது) - அரை கப், முட்டைகோஸ் துருவல் - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (நறுக்கவும்), கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பஜ்ஜி மிக்ஸ் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. 

p103k.jpg

செய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடித்து நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸில் சிறிதளவு  நீர் விட்டுக் கரைத்து, கோவைக்காயை முக்கி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம், கடலைப்பருப்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, முட்டைகோஸ் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன்  ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதிவந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடவும். வெந்ததும், பொரித்த கோவைக்காய் சேர்த்துப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


மின்ட் - மேத்தி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முளைகட்டிய வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், புதினா - ஒரு சிறிய கட்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - அரை அங்குலத் துண்டு, மஞ்சள்தூள் - சிறிதளவு, ஓமம் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), பிரியாணி இலை - ஒன்று, குட்டி உருளைக்கிழங்கு - 10, லவங்கம் - 2, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

p103l.jpg

செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரிக்க வும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருளைக்கிழங்கைப் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கவும். அதில் பாதியளவு எடுத்துக்கொண்டு... தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, ஓமம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வதக்கிய மீதி புதினாவைத் தனியே வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, முளைகட்டிய வெந்தயம், அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, மீதி புதினாவைச் சேர்த்து, வெந்ததும் எலுமிச்சை சாறு, பொரித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


கலர்புஃல் கேப்சிகம் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப், குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு... சதுரமாக நறுக்கியது, மூன்றும் சேர்த்து) - ஒரு கப், பச்சை வேர்க்கடலை - கால் கப் (ஒரு மணி நேரம்  ஊறவைக்கவும்), தயிர் - ஒரு கப் (கடையவும்), தனியாத் தூள் - அரை டீஸ்பூன், பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p103m.jpg

செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தாள், கலர்ஃபுல் குடமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து... ஊறிய வேர்க்கடலை, கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான நீர்விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி, தனியாத்தூள் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்தவுடன் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத்  திறந்து, கிளறிப் பரிமாறவும்.


பிரெட் - பட்டாணி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நெய் - சிறி தளவு, பிரெட் ஸ்லைஸ் - 6, ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - அரை கப், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (நீள வாக்கில் நறுக்கவும்), பிரியாணி இலை, உலர் அன்னாசிப்பூ -  தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

p103n.jpg

அரைக்க: சின்ன வெங்காயம் - 8, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 4 பல், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிரியாணி இலை, அன்னாசிப்பூ தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துக் கிளறவும். இதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு, கஸூரி மேத்தி சேர்த்துக் கிளறவும். பின்னர் தேவையான நீர்விட்டு, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் குக்கரைத் திறந்து, வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக்கிளறி பரிமாறவும்.


பண்டிகைக் கால பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக நறுக்கிய நாட்டுக் காய்கறிகள் - 2 கப், பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p103o.jpg

செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று சாதம் வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நாட்டுக் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சேர்த்துக் கிளறி... மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு போட்டு மேலும் வதக்கவும். பிறகு, சாதத்தைச் சேர்த்து,  எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பூண்டு, வெங்காயம், மசாலா சேர்க்காததால் பண்டிகைக்காலத்துக்கு உகந்த பிரியாணி இது.


பபடி காண்டியா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப்,   மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பொடித்த ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், சன்ன ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, நெய், உப்பு - சிறிதளவு.

p103p.jpg

செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்க வும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். கடலை மாவு, உப்பு, அரிசி மாவு சமையல் சோடா, மஞ்சள்தூள், பொடித்த ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்து நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து சப்பாத்தியாக திரட்டி, சிறு சிறு சதுரமாக வெட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பபடி காண்டியா ரெடி. இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் தேவையான நீர்விட்டு... கொதி வந்ததும் அரிசி, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, பபடி காண்டியா போட்டுப் புரட்டவும். பரிமாறும் முன் சன்ன ஓமப்பொடி தூவி பரிமாறவும். இந்த வகை பிரியாணிக்கு சைட் டிஷ் தேவையில்லை.


நட்ஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், உடைத்த முந்திரிப் பருப்பு (வறுத்தது) - கால் கப், பால் - இரண்டரை கப், பாதாம், பிஸ்தா துருவல் (சேர்த்து) - கால் கப், வறுத்த வேர்க்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள், நறுக்கிய அக்ரூட் - தலா 2 டேபிள்ஸ்பூன், கிராம்பு - பட்டை பொடி - ஒரு டீஸ்பூன், பழுப்பு சர்க்கரை - ஒரு டீஸ்பூன். உப்பு, நெய் - தேவையான அளவு.  

p103q.jpg

வினிகர் மிளகாய் செய்ய: பச்சை மிளகாய் - 5 (வட்டமாக நறுக்கவும்), உப்பு - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - கால் கப் (ஃபுட் வினிகர் பிளெய்ன்).

செய்முறை: வினிகர் மிளகாய் செய்யக் கொடுத்துள்ளவற்றைக் கலந்துகொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக்கொண்டு, பால் விட்டு (நீருக்குப் பதில்) பொல பொலவென சாதம் வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, வெள்ளை மிளகுத்தூள், உப்பு, கிராம்பு - பட்டை பொடி சேர்த்துக் கலந்து... பாதாம், பிஸ்தா துருவல் சேர்த்துக் கிளறி, நறுக்கிய அக்ரூட் போட்டுப் புரட்டவும். இதில் சாதத்தைப் சேர்த்து, வினிகர் மிளகாய் போட்டுப் புரட்டி, வேர்க்கடலைப் பொடி, முந்திரி, பழுப்புச் சர்க்கரை தூவி இறக்கவும்.


அமிர்தப்பொடி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், மிளகு, சீரகம், வெந்தயம், எள், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சுக்குப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன், நாரத்தை இலைகள் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), மராட்டி மொக்கு - ஒன்று, பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், சீரகம் (அலங்கரிக்க) - சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் -  கால் கப், நெய், உப்பு - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. 

p103r.jpg


செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, தேவையான நீர், உப்பு சேர்த்து பொலபொலவென்று சாதமாக வடித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், வெந்தயம், எள், ஓமம், சோம்பு  ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடித்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் கறிவேப்பிலை, நாரத்தை இலையை ஒவ்வொன்றாக வறுத்து, தனித்தனியே மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் மராட்டி மொக்கு, பட்டைப் பொடி சேர்த்து, வடித்த சாதம், கறி வேப்பிலை - நாரத்தை பொடி, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சிறிது உப்பு, மற்ற பொடிகள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். சீரகத்தையும், சின்ன வெங்காயத்தையும் நெய்யில் வதக்கி மேலே தூவிப் பரிமாறவும்.


வாழைப்பூ பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வாழைப்பூ (ஆய்ந்து, நறுக்கியது) - ஒரு கப் (மோரில் போட்டு வைக்கவும்), கெட்டித் தயிர் - ஒரு கப் (கடையவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 6,  பூண்டுப் பல் - 8, நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், சிவப்பு காராமணி - கால் கப், பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி - அரை அங்குலத்துண்டு, மிளகு - அரை டீஸ்பூன். 

p103s.jpg

செய்முறை: சிவப்பு காராமணியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். அரிசியை   10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். காராமணியுடன் உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிடவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயம், சேர்த்து வதக்கி, அரைத்த
விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். நறுக்கிய வாழைப் பூவை ஒட்டப்பிழிந்து சேர்த்து, வேகவைத்த காராமணியும் சேர்த்து, கடைந்த தயிர் ஊற்றி, தேவையான நீர்விட்டுக் கலக்கவும். ஒரு கொதிவந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, அரிசியைப் போட்டு, குக் கரை மூடி 2 விசில் வந்து வெந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறிப் பரிமாறவும்.


மீல்மேக்கர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சின்ன மீல்மேக்கர் - அரை கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, காய்ந்த பட்டாணி - கால் கப், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சோள மாவு, மைதா மாவு - தலா ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், அப்பளம் (பொரித்தது) - 10, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. 

p103t.jpg

செய்முறை: காய்ந்த பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து, வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு எடுத்து, ஒட்டப்பிழிந்து வைத்துக்கொள்ளவும். பெரிய பவுலில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு, ஃபுட் கலர், ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்), எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீர் தெளித்து, மீல்மேக்கரைப் போட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கி... வெந்த பட்டாணி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டவும். தேவையான நீர்விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். அதனுடன் பொரித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கிளறி பரிமாறவும்.


கொள்ளு - எள் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கொள்ளு - அரை கப், எள் - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய் - 5, ஜாதிக்காய்ப்பொடி - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், - சிறிதளவு, நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேங்காய்ப்பால் - 2 கப்.

p103v.jpg

செய்முறை: கொள்ளு, எள் இரண்டையும்  அலசி, உலர்த்தி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஜாதிக்காய்ப்பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளவும். அரிசியை            15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு, சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொண்டு, தேங்காய்ப்பால் சேர்த்து (நீருக்குப் பதில்) சாதம் வடித்துக்கொள்ளவும். ஏலக்காய், புதினாவை நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்க்கவும். கலந்து வைத்துள்ள இனிப்பு எள் - கொள்ளுப் பொடி சேர்த்துப் புரட்டி, முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும்.


பாதுஷாஹி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பாதாம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவிட்டு அரைக்கவும்), சிறிய குடமிளகாய் - 4, நறுக்கிய அவரைக்காய் - கால் கப், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 3, தேங்காய்த் துருவல் - கால் கப், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் (ஆய்ந்தது), உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

p103w.jpg


செய்முறை: தேங்காய்த்துருவலுடன் மிளகு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கைக் கழுவி, வேகவிட்டு தோலுரித்து மசித்துக்கொள்ளவும். குடமிளகாயை குறுக்காக நறுக்கி விதை நீக்கி உப்பு கலந்த சுடுநீரில் 5 நிமிடங்கள் போட்டு மூடி வைத்து பிறகு நீரை வடித்துவிடவும். மசித்த உருளைக்கிழங்குடன் சாட் மசாலா, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லித்தழை, தேங்காய் - மிளகு விழுது சேர்த்துப் பிசையவும். நறுக்கிய குடமிளகாயில் இந்தக் கலவையை  நிரப்பவும். தவாவில் எண்ணெய் - நெய்விட்டு சூடானதும் இதைப் போட்டு கவனமாக இருபக்கமும் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும். அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய் தாளித்து, அவரைக்காய் சேர்த்து வதக்கி, சாம்பார் பொடி போட்டு, ஊறிய அரிசியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதில் கொதிக்கும் நீர் 2 கப் ஊற்றவும். மாங்காய்த்தூள், உப்பு, பாதாம் விழுது சேர்த்துக் கிளறி மூடி, அடுப்பை  குறைந்த தீயில் வைக்கவும். அரிசியை அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு இறக்கவும். வேறு பாத்திரத்தில் எண்ணெய் தடவி பாதி சாதத்தை போட்டு, மேலே பாதி கடைந்த தயிர் சேர்த்து, அதன் மீது வதக்கிய ஃபில்லிங் குடமிளகாய்களை அடுக்கி, மேலே மீதி சாதத்தையும், மீதி தயிரையும் பரப்பி குக்கரில் வெயிட் போடாமல், ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து, தட்டில் கவிழ்க்கவும். வளையமாக நறுக்கிய வெங் காயத்தை சிவக்க வறுத்து, மேலே சேர்த்துப் பரிமாறவும்.


புடலை - பலாக்கொட்டை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், இளசான புடலங்காய் (நறுக்கியது) - ஒரு கப், பலாக்கொட்டை - 10, தேங்காய்த் துருவல் - கால் கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - (சேர்ந்தது) 50 கிராம், துவரம்பருப்பு நீர் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 4 (நசுக்கிக்கொள்ளவும்), பூண்டுப் பல் - 2 (நசுக்கிக்கொள்ளவும்), வெந்தயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - ஒன்று (நறுக்கவும்), பிரியாணி மசாலாப்பொடி - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு (தாளிக்க) - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p103x.jpg

செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை 10 நிமிடங்கள்  ஊறவிடவும். அரிசியை ஊறவைத்து நீரை வடித்து, நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து, தக்காளி, நசுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, நறுக்கிய புடலங்காய், நறுக்கிய பலாக்கொட்டை சேர்த்து மேலும் வதக்கி, துவரம்பருப்பு  நீர் விட்டு... பிரியாணி மசாலாப் பொடி, அரிசி சேர்த்து, ஊறிய பருப்புகள் போட்டுக் கிளறவும். பின்னர் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் குக்கரைத் திறந்து, மேலே நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: கால் கப் துவரம்பருப்பை நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர்  சேர்த்து நன்கு வேகவிட்டு மசித்து எடுத்துக்கொள்ளவும். இதுதான் பருப்பு நீர்.


டபுள் பீன்ஸ் பிரியாணி

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், டபுள் பீன்ஸ், மசாலா வேர்க்கடலை - தலா அரை கப்,  எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு, வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப் அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு. அரைக்க: பட்டை - அரை அங்குலத் துண்டு, இஞ்சி - அரை அங்குலத் துண்டு, சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்), பச்சை மிளகாய் - 4, பூண்டுப் பல் - 2, க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,

p103y.jpg

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறி, க்ரீன் சில்லி சாஸ், அன்னாசிப்பூ, உலர் வெந்தயக் கீரைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, மசாலா வேர்கடலை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும்.


காஷ்மீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சிறிய சதுரமாக நறுக்கிய பழத் துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை - டின்னில் கிடைக்கும்) - அரை கப், வெங்காயம் - 2 (நறுக்கவும்), உலர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது), உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

p103z.jpg

செய்முறை: அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, அளவான உப்பு சேர்த்து வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெண்ணெயை சூடாக்கி வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் சீரகம் தாளித்து, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி... உலர் திராட்சை, பேரீச்சை, உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம், சர்க்கரை சேர்த்துக் கிளறி... சாதம், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து மேலும் கிளறவும். இதனுடன் பனீர் துருவல், பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, குங்குமப்பூவைச் சிறிது பாலில் கரைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயத்தை மேலே சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.


வேர்க்கடலை - சீஸ் பிரியாணி

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், துருவிய சீஸ் - அரை கப், பச்சை வேர்க்கடலை - அரை கப், பட்டை - ஒரு அங்குலத் துண்டு, கிராம்பு - 3, பிரியாணி இலை - ஒன்று, வெங்காயம் - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய மாங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு. 

p103z1.jpg

செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மாங்காய்த் துருவல், பச்சை வேர்க்கடலை போட்டுப் புரட்டி தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத்  திறந்து, துருவிய சீஸ் தூவி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.


பிரிஞ்சால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பிஞ்சுக் கத்திரிக் காய் - கால் கிலோ (நறுக்கவும்), சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளித்தண்ணீர் - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், சிறு துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - அரை கப், தக்காளிச் சாறு - கால் கப், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

p103z2.jpg

அரைக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துப் பொடி செய்துகொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங் காயம் சேர்த்து வதக்கி... தக்காளிச் சாறு, வறுத்து அரைத்த பொடி,  மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காயைச் சேர்த்து வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.


ரெயின்போ பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சேப்பங்கிழங்கு - 2, இனிப்பான ஆரஞ்சுபழச் சாறு (ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து, விதை நீக்கி, தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்) - இரண்டரை கப், துருவிய கேரட், பீட்ரூட் - தலா 2 டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் (வட்டமாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (நறுக்கவும்), வேர்க்கடலைப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய குடமிளகாய்  - 2 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி, சதுரமாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், நெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. 

p103z3.jpg

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து வட்டமாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலி
யில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், வெண்டைக்காய், தக்காளி, துருவிய கேரட், பீட்ரூட் சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, நீருக்குப் பதில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி வேகவிட்டு, வேர்க்கடலைப் பொடி, வறுத்த சேப்பங்கிழங்கு தூவிக் கிளறி பரிமாறவும்.


இளநீர் - ட்ரை ஃப்ரூட்ஸ் பிரியாணி

தேவையானவை - பாசுமதி அரிசி - ஒரு கப், இளநீர் - 2 கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (கொட்டை நீக்கவும்), உலர் அத்திப்பழம் (சேர்த்து) - ஒரு கப், உரித்த முலாம்பழ விதை - ஒரு டீஸ்பூன், சர்க்கரை சேர்க்காத கோவா - 50 கிராம், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, ஏலக்காய் - 3, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன் (துருவியது), கேசரி கலர் அல்லது விருப்பமான ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை. 

p103z4.jpg

செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொண்டு, நீருக்குப் பதில் இளநீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு காய்ந்த திராட்சை, பேரீச்சை, உலர் அத்திப்பழம் உரித்த முலாம்பழ விதை, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதனுடன் பனீர் துருவல், உதிர்த்த கோவா, கேசரி கலர் (அ) விருப்பமான ஃபுட் கலர் சேர்த்துக் கிளறி, வெந்த சாதத்தைப் போட்டு மேலும் கிளறி இறக்கவும். துருவிய பிஸ்தாவை மேலே தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: உலர் அத்திப்பழத்தை நீரில் 15 நிமிடங்கள்  ஊறவைக்கவும். பேரீச்சையைக் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும்.


கதம்ப பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி, நறுக்கிய தக்காளி  - தலா ஒரு கப், ஆய்ந்த முளைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை (சேர்த்து) - ஒரு கப், முளைகட்டிய பயறு - அரை கப் (பச்சைப் பயறு, கேழ்வரகு, உளுந்து போன்றவை), நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, சோம்பு (சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 5 (விழுதாக அரைக்கவும்), பிரியாணி இலை - ஒன்று, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - அலங்கரிக்கத் தேவையான அளவு, எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு.

p103z5.jpg

செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, ஆய்ந்த கீரைகளையும் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, உப்பு, முளைக்கட்டிய பயறு சேர்த்துக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும். பிறகு, தேவையான நீர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், ஆய்ந்த கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி பரிமாறவும்.


முகலாய் வெஜ் பிரியாணி

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பாகற்காய், பீன்ஸ் (சேர்த்து) - அரை கப் (நீளவாக்கில் நறுக்கியது), பொடித்த சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பழம் - அரை கப் (ஆப்பிள், மாம்பழம்), வெண்ணெய், உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

p103z6.jpg

அரைக்க: முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (15 நிமிடங் கள் ஊறவைக்கவும்), கசகசா - ஒரு டீஸ்பூன் (10 நிமிடங்கள் ஊறவைக்கவும்), மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - அரை அங்குலத் துண்டு (தோல் சீவவும்).

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி... காய்கறி, உப்பு சேர்த்து மேலும் வதக்கி, சர்க்கரை, உலர் திராட்சையைப் போட்டுப் புரட்டவும். பிறகு தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, குக்கரை  மூடி 2 விசில் விட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


செஷ்வான் ஃப்ரைடு ரைஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முட்டைகோஸ் (துருவியது) - கால் கப், டொமேட்டோ கார்லிக் சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன், வொர்செஸ்டர்ஷயர் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப், குடமிளகாய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலாப் பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 4, பூண்டுப் பல் - 3, தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன்.

p103z7.jpg

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 3 கப் நீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதில் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி பாதி வெந்ததும் அடுப்பை நிறுத்தி, நீரை வடித்து தட்டில் சாதத்தைக் கொட்டி உதிர்த்துவிடவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, வெங்காயத்தாள், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பிரியாணி மசாலாப் பொடி, டொமேட்டோ கார்லிக் சாஸ் சேர்த்து... சாதத்தையும் போட்டுக் கிளறவும். பிறகு வோர்செஸ்டர்ஷயர் சாஸ், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 10 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவிட்டு எடுக்கவும்.

  • தொடங்கியவர்

பச்சை சுண்டைக்காய் ஊறுகாய் 

p66a.jpg

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்

பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்: வெந்தயத்தை வறுத்துப் பொடித்து சேர்த்தால் வாசனை அள்ளும்.

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - ஒரு கப், துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு (தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  வெல்லம் - கோலிகுண்டு அளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, வெந்தயம், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சை சுண்டைக்காயை இடித்து தண்ணீரில் அலசி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு உப்பு சேர்க்கவும். சுண்டைக்காய் வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்கவிடவும். பின்னர், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுண்டைக்காய் குடலில் உள்ள பூச்சிகளை வெளியேற்றிவிடும்; பற்கள், எலும்புகளைப் பலப்படுத்தும்.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்


சோயா சோலாங்கி 

p66b.jpg

சோயா சோலாங்கி: சோயா மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்தால் சுவை கூடும்.

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சோயா மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட் (சேர்த்து) - ஒன்றரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு - சிறிதளவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சோலாங்கி மசாலா செய்முறை: பொடியாக நறுக்கப்பட்ட காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை வேகவைத்துக்கொள்ளவும். தவாவில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து...  வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு சுருள வதங்கியதும் வெந்த காய்கறிகளைப் போட்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து அடுப்பை ‘சிம்’மில் வைத்து மெதுவாகக் கிளறி இறக்கவும். சோலாங்கி மசாலா தயார்.

சோலாங்கி செய்முறை: கோதுமை மாவு, சோயா மாவு, தேவையான அளவு உப்பு மூன்றையும் கைகளால் நன்றாகப் பிசிறவும். அத்துடன் நான்கு டீஸ்பூன் எண்ணெயைக் கலந்து பிசறி வைக்கவும். பின்னர் இரண்டு கப் நீரைக் கொதிக்கவிடவும். அந்த நீரை மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். பின்னர் மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து கையால அடித்து மாவை நன்றாகப் பிசையவும். பிறகு, மாவை சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ஒரு சப்பாத்தியை பாதியாக வெட்டி, அந்தப் பாதியை கூம்பு வடிவமாக செய்து, பிரியாத வண்ணம் ஒரு கிராம்பை செருகி வைக்கவும். இதுதான் சோலாங்கி. இதைப் போலவே நிறைய சோலாங்கிகளை தயார் செய்துகொள்ளவும். பரிமாறும் முன் சோலாங்கிகளை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றுள் காய்கறிக் கலவையை போட்டு,  நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கவும்.

 - சுகந்தா ராம், கிழக்கு தாம்பரம்


ஃபுல் க்ரீன் சூப் 

p66c.jpg

ஃபுல் க்ரீன் சூப்: சிறிது வெற்றிலை சேர்ப்பது இன்னும் சிறப்பு.

தேவையானவை: பச்சைத் தக்காளி - ஒன்று (நறுக்கவும்), புதினா, துளசி, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, கற்பூரவல்லி இலை - 5, சுக்குத்தூள் - அரை டீஸ்பூன், மிளகு - 5, அரிசி மாவு - 2 டீஸ்பூன் (வறுத்து அரைத்தது), பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளி முதல் மிளகு வரை உள்ள பொருள்களை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து, மூன்று நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். அதனுடன் அரிசி மாவு, பனங்கற்கண்டு, உப்பு சேர்த்து, வாசனைக்காக அரை டீஸ்பூன் நெய் சேர்க்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஃபுல் க்ரீன் சூப் தயார்.

  • தொடங்கியவர்

சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

 

இட்லி, தோசை, ஆப்பமுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - இரண்டு (பெரியது)
பச்சை மிளகாய் - மூன்று
வர மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சிக்கன் மசாலா தூள் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி(தேங்காய் பால்)
கொத்தமல்லி - சிறிதளவு

201705231525340692_chicken-curry-coconut

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்.

* பாதியாக சிக்கன் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும்.

* தேங்காய்ப் பால் வற்றி, திக்கான குழம்பு நிலைக்கு வரும் வரை வைத்திருக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
  • தொடங்கியவர்

ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி

 
 

 

p51a.jpg

red-dot9.jpgதென்னிந்திய ஸ்பெஷல் இறால்

red-dot9.jpgபுதினா - பனீர் டிக்கா

red-dot9.jpgமண் பானையில் வறுத்த சிக்கன்

red-dot9.jpgஇறால் வித் பூண்டு சாஸ்

red-dot9.jpgடிராகன் பொட்டேட்டோஸ்

red-dot9.jpgபென்னே பாஸ்தா வித் வெஜிடபிள்

red-dot9.jpgபெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ்

red-dot9.jpgபாட் தாய் வெஜ் நூடுல்ஸ்

red-dot9.jpgஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ்

red-dot9.jpgபெரிபெரி மஷ்ரூம்

red-dot9.jpgதாய் சிக்கன் ஷாட்டே

p51b.jpg

ஸ்டார் ஹோட்டல்களில் ருசிக்கு மட்டும்தான் முக்கியத்துவமா என்ன? `இல்லவே இல்லை... ருசியோடு சத்து மிகுந்த உணவுகளையும் நாங்கள் பரிமாறுகிறோம்’ என்கிற ஜிஎல்எம் மெரிடியன் ஹோட்டல் செஃப் நாச்சியப்பன், அவள் கிச்சன் வாசகர்களுக்காக புதுமையான ஊட்டச்சத்து ரெசிப்பிகளை வழங்குகிறார்.

p51c1.jpg

தென்னிந்தியா ஸ்பெஷல் இறால்

தேவையானவை:

red-dot9.jpgஇறால் – 200 கிராம்

red-dot9.jpgஎலுமிச்சைப் பழம் – ஒன்று

red-dot9.jpgஇஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

red-dot9.jpgகாஷ்மீர் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgகார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgமைதா மாவு – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgகறிவேப்பிலை – சிறிதளவு

red-dot9.jpgஎண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். பாத்திரத்தில் இறாலுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு), மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மசாலா கலந்த இறால்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த இறால்களின் மீது கறிவேப்பிலையைத் தூவிப் பரிமாறவும்.


p51d.jpg

புதினா - பனீர் டிக்கா

தேவையானவை:

red-dot9.jpgபனீர் – 200 கிராம் (சதுரங்களாக நறுக்கவும்)

red-dot9.jpgபுதினா - ஒரு கட்டு

red-dot9.jpgபச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgதயிர் – 50 மில்லி

red-dot9.jpgவெங்காயம் – நான்கு சதுரத் துண்டுகள்

red-dot9.jpgகுடமிளகாய் – நான்கு சதுரத் துண்டுகள்

red-dot9.jpgவெண்ணெய் – 20 கிராம்

red-dot9.jpgகறுப்பு உப்பு – சிறிதளவு

red-dot9.jpgசீரகத்தூள் – 10 கிராம்

red-dot9.jpgகரம் மசாலாத்தூள் – 10 கிராம்

red-dot9.jpgஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgகடுகு எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஉப்பு – தேவையான அளவு

red-dot9.jpgடிக்கா குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) – தேவையான அளவு

செய்முறை:

புதினாவை ஆய்ந்து அலசி சிறிதளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் தயிருடன் பச்சை மிளகாய், புதினா விழுது, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். இதனுடன் கடுகு எண்ணெய், கறுப்பு உப்பு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பனீர் துண்டுகள், வெங்காயத் துண்டுகள், குடமிளகாய் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். டிக்கா குச்சியில் குடமிளகாய், வெங்காயம், பனீர் என மாற்றி மாற்றி குத்தி வைக்கவும். தோசைக்கல்லில் வெண்ணெய்விட்டு உருக்கி, செய்து வைத்திருக்கும் டிக்காக்களை அடுக்கி டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, குச்சியில் இருந்து குடமிளகாய், வெங்காயம், பனீரை எடுத்து தட்டில் பரப்பி, புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


p51e.jpg

மண்பானையில் வறுத்த சிக்கன்

தேவையானவை:

red-dot9.jpgஇளம் சிக்கன் – ஒன்று (800 கிராம் - ஒரு கிலோ)

red-dot9.jpgதயிர் – 100 மில்லி

red-dot9.jpgஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஎலுமிச்சைப் பழம் – 2

red-dot9.jpgகாஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

red-dot9.jpgகறுப்பு உப்பு – 20 கிராம்

red-dot9.jpgகஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – 10 கிராம்

red-dot9.jpgகடுகு எண்ணெய் – 50 மில்லி

red-dot9.jpgதனியாத்தூள் (மல்லித்தூள்) – 2 டீஸ்பூன்

red-dot9.jpgசீரகத்தூள் – அரை டீஸ்பூன்

red-dot9.jpgகரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgவெண்ணெய் – 50 கிராம்

red-dot9.jpgஉப்பு – தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். சிக்கனின் தோலைச் சீவி நான்கு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு எலுமிச்சைச் சாறு, சிறிதளவு இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தயிருடன் மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கறுப்பு உப்பு, கஸூரி மேத்தி, கடுகு எண்ணெய், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிக்கன் கலவையைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஒவ்வொரு சிக்கன் துண்டையும் ஒவ்வொரு கம்பியில் குத்தி வைக்கவும். ஒரு மண் பானையில் சிறிதளவு மரக்கரி துண்டுகள் சேர்த்து எரியவிடவும். கம்பியில் குத்திய சிக்கன் துண்டுகளை வறுத்தெடுத்து வெண்ணெய் சேர்க்கவும் (கன்வென்‌ஷன் அவனில் ரோஸ்ட் செய்தும் எடுக்கலாம்).

இதைச் சூடாக வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.


p51f.jpg

இறால் வித் பூண்டு சாஸ்

தேவையானவை:

red-dot9.jpgஇறால் – 200 கிராம்

red-dot9.jpgகார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்

red-dot9.jpgமைதா மாவு – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgபூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஇஞ்சி (தோல் சீவி, பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgசெலரி (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgபச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgகாய்ந்த மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgடொமேட்டோ கெச்சப் – 50 மில்லி

red-dot9.jpgசர்க்கரை – சிறிதளவு

red-dot9.jpgநறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

red-dot9.jpgஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் இறாலுடன் மைதா, கார்ன்ஃப்ளார் (சோள மாவு), உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி இறால்களைப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி... இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய் விழுது, டொமேட்டோ கெச்சப், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு வறுத்த இறால் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.


p51g.jpg

டிராகன் பொட்டேட்டோஸ்

தேவையானவை:

red-dot9.jpgஉருளைக்கிழங்கு – 100 கிராம்

red-dot9.jpgகார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgமைதா மாவு – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஇஞ்சி (தோல் சீவி, பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgபூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgதக்காளி கெச்சப் – 25 மில்லி

red-dot9.jpgசர்க்கரை, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப

red-dot9.jpgமுந்திரிப்பருப்பு – 20 கிராம்

red-dot9.jpgவெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு

red-dot9.jpgவெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgஎண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், மைதா மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி கெச்சப், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இதனுடன் பொரித்த உருளைக்கிழங்கு, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். இறுதியாக, வெங்காயத்தாள் தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.


p51h.jpg

பென்னே பாஸ்தா வித் வெஜிடபிள்

தேவையானவை:

red-dot9.jpgபால் – ஒரு கப் (காய்ச்சாதது)

red-dot9.jpgபென்னே பாஸ்தா (வேகவைத்தது) – 200 கிராம்

red-dot9.jpgமைதா மாவு – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgவெண்ணெய் - 2 டீஸ்பூன்

red-dot9.jpgசீஸ் துருவல் – 25 கிராம்

red-dot9.jpgக்ரீம் – 20 மில்லி

red-dot9.jpgபூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgகேரட், பீன்ஸ் துண்டுகள் – தலா 50 கிராம்

red-dot9.jpgபேபி கார்ன் – 20 கிராம்

red-dot9.jpgபுரோக்கோலி – 50 கிராம்

red-dot9.jpgஒரிகானோ – சிறிதளவு

red-dot9.jpgமிளகு, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை வேகவைத்து எடுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்விட்டு உருக்கி, மைதா மாவு சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்த மைதா சேர்த்துக் கொதிக்கவிடவும். சாஸ் போல வந்த பின் இறக்கி வடிகட்டவும் (இதுவே வொயிட் சாஸ்).

மற்றொரு கடாயில் ஆலிவ் ஆயில், பூண்டு, சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகள், வொயிட் சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு க்ரீம், சிறிதளவு சீஸ், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், உப்பு, மிளகு, ஒரிகானோ, வேகவைத்த பாஸ்தா சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே சீஸ் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.


p51i.jpg

பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ்

தேவையானவை:

red-dot9.jpgஎலும்பில்லாத சிக்கன் – 250 கிராம் (நீளவாக்கிலோ சதுரவாக்கிலோ நறுக்கவும்)

red-dot9.jpgஅன்னாசிப் பழ கியூப் துண்டுகள் – 10

red-dot9.jpgகாய்ந்த மிளகாய் – 4

red-dot9.jpgவெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgசிவப்பு குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgநறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

red-dot9.jpgவெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஎலுமிச்சைப் பழம் – ஒன்று

red-dot9.jpgஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgமிளகு, உப்பு – தேவையான அளவு

red-dot9.jpgஸ்கீவர்ஸ் - தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். கடாயில் வெண்ணெயை உருக்கி... வெங்காயம், குடமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். ஸ்கீவர்ஸில் அன்னாசிப் பழ கியூப், ஊறவைத்த சிக்கன், மீண்டும் அன்னாசிப் பழ கியூப் என மாற்றி மாற்றி குத்தி வைக்கவும். இதை தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கவும். மயோனைஸுடன் சூடாகப் பரிமாறவும்.


p51j.jpg

பாட்  தாய் வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை:

red-dot9.jpgபாட் தாய் நூடுல்ஸ் (pad thai noodles) – 200 கிராம்

red-dot9.jpgபுளி – 2 எலுமிச்சை அளவு

red-dot9.jpgவெல்லம் – 50 கிராம்

red-dot9.jpgகாய்ந்த மிளகாய் - 5

red-dot9.jpgமுளைகட்டிய பயறு – 25 கிராம்

red-dot9.jpgசைனீஸ் முட்டைகோஸ் துண்டுகள் – 25 கிராம்

red-dot9.jpgகலர் குடமிளகாய் துண்டுகள் – 25 கிராம்

red-dot9.jpgவெங்காயத்தாள் – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgசீமை சுரைக்காய் துண்டுகள் – 25 கிராம்

red-dot9.jpgஉடைத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஎண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் மிளகாயை வறுத்து மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசலுடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து சாஸ் போல கெட்டியான பிறகு இறக்கவும். சூடான நீரில் நூடுல்ஸைப் போட்டு வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டு சுரைக்காய், முட்டைகோஸ், குடமிளகாய் துண்டுகள், முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் புளி சாஸ், நூடுல்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வெங்காயத்தாள், உடைத்த வேர்க்கடலை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.


p51k.jpg

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ்

தேவையானவை:

red-dot9.jpgசிக்கன் பிரெஸ்ட் (நெஞ்சுக்கறி - ஆர்கானிக்) - 2

red-dot9.jpgதைம் – சிறிதளவு

red-dot9.jpgமிளகு (ஒன்றிரண்டாகப் பொடித்தது) – ருசிக்கேற்ப

red-dot9.jpgஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgமஷ்ரூம் – 5 (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgஒய்ஸ்டர் சாஸ் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgசிக்கன் ஸ்டாக் – 50 மில்லி

red-dot9.jpgபூண்டு பல் – 4 (பொடியாக நறுக்கவும்)

red-dot9.jpgஉப்பு – தேவையான அளவு

red-dot9.jpgவேகவைத்து மசித்த உருளைகிழங்கு, காய்கறிகள் - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் சிக்கனுடன் உப்பு, பொடித்த மிளகு, தைம், ஆலிவ் ஆயில், பூண்டு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு சிக்கனை தோசைக்கல்லில் போட்டு மூடிபோட்டி க்ரில் செய்யவும் (இதற்குத் தண்ணீர் தேவையில்லை. சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது).

வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு மஷ்ரூம் சேர்த்து வதக்கவும், இதனுடன் சிக்கன் ஸ்டாக், ஒய்ஸ்டர் சாஸ், உப்பு, மிளகு சேர்த்துக் கிளறி சாஸ் பதமாக வந்தபின் இறக்கவும். சிக்கனை மஷ்ரூம் சாஸ், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, காய்கறிகள் உடன் பரிமாறவும்.


p51l.jpg

பெரிபெரி மஷ்ரூம்

தேவையானவை:

red-dot9.jpgமஷ்ரூம் – 200 கிராம்
 
red-dot9.jpgமைதா மாவு – 50 கிராம்
 
red-dot9.jpgடொமேட்டோ கெச்சப் – 25 கிராம்
 
red-dot9.jpgபார்பிக்யூ சாஸ் – 25 கிராம்

red-dot9.jpgசில்லி ஃப்ளேக்ஸ் – 10 கிராம்

red-dot9.jpgசிவப்பு மிளகாய் விழுது – 20 கிராம்

red-dot9.jpgசர்க்கரை, மிளகு – ருசிக்கேற்ப

red-dot9.jpgகாஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgவெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgநறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

red-dot9.jpgஎண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் மஷ்ரூம், மைதா மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மஷ்ரூம்களைப் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, சிவப்பு மிளகாய் விழுது, டொமேட்டோ கெச்சப், பார்பிக்யூ சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இதனுடன் பொரித்த மஷ்ரூம்களைப் போட்டு நன்கு கலந்து எடுக்கவும். கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.


p51m.jpg

தாய் சிக்கன் ஷாட்டே (Thai chicken sataya)

தேவையானவை:

red-dot9.jpgசிக்கன் ஸ்ட்ரிப்ஸ் (நீளவாக்கில் நறுக்கிய சிக்கன் துண்டுகள்) – 250 கிராம்

red-dot9.jpgலெமன் கிராஸ் – ஒரு இன்ச் அளவு

red-dot9.jpgஎலுமிச்சை இலைகள் – 3

red-dot9.jpgஇஞ்சி (தோல் சீவியது) – சிறிதளவு

red-dot9.jpgகாய்ந்த மிளகாய் – 2

red-dot9.jpgதேங்காய்ப்பால் – 50 மில்லி

red-dot9.jpgகறி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்

red-dot9.jpgஉப்பு – தேவையான அளவு

செய்முறை:

லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், இஞ்சி, காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, தேங்காய்ப்பால், உப்பு, கறி மசாலாத்தூள், சிக்கன் துண்டுகள் சேர்த்துக் கலக்கி ஊறவிடவும். பிறகு சிக்கன் துண்டுகளை ஸ்கீவர்களில் குத்தி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சிக்கனை அடுக்கி டோஸ்ட் செய்து எடுக்கவும். இதனை ஸ்வீட் சில்லி சாஸூடன் சூடாகப் பரிமாறவும்.

  • தொடங்கியவர்

சமையலில் செய்யக்கூடாதவை.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.


தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.


தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.


அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

 
Kein automatischer Alternativtext verfügbar.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.