Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது: ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது: ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

 
selfie_monkey_2688337h.jpg
 

ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத் துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது.

இந்நிலையில், 2011-ல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங் குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேடர், தனது கேமராவை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார். இதையடுத்து, அந்தக் கேமராவை எடுத்துக் கொண்ட நருடோ, வனப்பகுதி, மற்ற குரங்குகள் என பல புகைப் படங்களை எடுத்தது. அத்துடன் தன்னையும் (செல்பி) புகைப்படம் எடுத்துக்கொண்டது.

பின்னர் அந்தக் கேமராவை எடுத்துச் சென்ற ஸ்லேடர், புகைப் படங்களை வெளியிட்டார். அவை உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிலையில், இந்த புகைப்படங் களுக்கு உரிமை கொண்டாடிய ஸ்லேடர், அவரது நிறுவனம் மீது விலங்குகள் பாதுகாப்பு அமைப் பான பீட்டா சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

“பதிப்புரிமை சட்டத்தின்படி, தான் எடுத்த செல்பி புகைப்படத்துக்கு பதிப்புரிமை கோர நருடோவுக்கு உரிமை உள்ளது. எனவே, ஸ்லேடருக்கு பதிப்புரிமையை வழங்கக்கூடாது” என அந்த மனுவில் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நருடோ எடுத்த புகைப் படத்துக்காக அதற்கு பதிப்புரிமை வழங்க முடியாது என தீர்ப்பளித் தனர். பதிப்புரிமை சட்டம் விலங்குகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்படாத நிலையில், அதற்கு பதிப்புரிமை உண்டு என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8081363.ece

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் சிலேட்டர் ஒரு பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர்.

2011 ஆண்டு இந்தோனேசியாவில் படங்கள் எடுக்கும் போது, குரங்குகள், கண்ணாடிகளில் தோன்றும் விம்பங்களினால் கவரப் படுவதை அவதானித்த டேவிட்டுக்கு ஒரு ஐடியா வந்தது. 

குரங்குகள் செல்பி எடுக்குமாறு காமராவினை செட் பண்ணி வைத்து விட்டு தூரத்தே நின்று கவனித்தார்.

அவர் எதிர்பார்த்தது போலவே, அருமையான, உலகப் புகழ் அடைந்த, குரங்கின் செல்பி ஒன்று கிடைத்தது.

Monkey selfie

இந்த புகைப்படம் அவருக்கு பணத்தினை தந்து கொண்டிருந்த போது, தீடிரென, விக்கிபீடியாவில் இந்த படத்தினை வெளியிட்டது People for the Ethical Treatment of Animals (PETA) என்னும் விலங்கு உரிமை அமைப்பு.

வெகுண்ட டேவிட்டோ, தான் பொருளாதார ரீதியில் நஷ்ட மடைவதால், விக்கி பீடியா இந்த படத்தினை தனது தளத்தில் இருந்த நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் மறுத்த விக்கி பீடியவோ, காப்புரிமை, படத்தினை எடுத்த குரங்குக்குத் தான் உண்டு. டேவிட்டுக்கு இல்லை என்று கூறி மறுத்து விட்டது. அதேவேளை உலகெங்கும் இருந்து பலர், விக்கியில் இருந்த இந்த புகைப்படத்தினை இலவசமாக தரவிறக்கி தாரளமாக பயன் படுத்திக் கொண்டனர்.

போதாக்குறைக்கு, விக்கியில் படத்தினைப் போட்ட PETA,டேவிட் மீது அமெரிக்க, விக்கி பீடியா தலைமைப் பீடம் உள்ள சான்ஸ்பிரான்ஸ்சிஸ்கோ நீதிமன்றில் வழக்கு வேறு போட்டது.

இந்த புகை படத்தினால் வந்த சகல பணத்தினையும் டேவிட் தம்மிடம் அல்லது தம் போன்ற விலங்கு நல அமைப்பிடம் கொடுக்க வேண்டும் என்று நியாயம் பிளந்தது. தாம், குரங்கின் சார்பில் அதனது காப்புறுதி உரிமை தொடர்பில் வாதாடுவதாக நியாயம் வேறு பிளந்தது. இந்த பணம் அந்த குரங்கின் நலவுரிமைக்காக பயன் படுத்தப் பட வேண்டும் என்று காரணமும் கூறியது

அதிர்ந்து போனார் டேவிட். அவர் மட்டும் அல்ல. உலகெங்கும் உள்ள புகைப்பட கலைஞர்கள் கூட....

David Slater with crested macaque

மூன்று நாட்களாக, ரத்தத்தினை வியர்வையாக்கி, நான் அந்த படத்தினை எடுக்க பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும். குரங்குகள் என்னை நம்பி அருகில் வரவும், காமராவினை கையாளவும், நான் மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டேன்.

அவை எடுத்த படங்களில் சிறந்ததை மட்டும் நான் வெளியிட்டேன். நான் சொல்லாவிடில், யார் படம் எடுத்தது என்பது உலகத்துக்கு தெரியாமல் போயிருக்கும்.

எனது கடின உழைப்பை, எனது உழைப்பின் உரிமையினை, விலங்கு உரிமை என்ற பெயரில் திருடுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை என்று சொன்னார் டேவிட்.

உலகில் முதல் முறையாக, குரங்கினால் (விலங்கினால் ) மனிதன் வழக்கினை எதிர் நோக்கும் விசித்திரம் இது என்றார் அவர்.

இந்த தீர்ப்பில் எங்களது பக்கம் தீர்ப்பு வந்தால், உலகின் முதாவது மனிதர் அல்லாத மிருகத்துக் கிடைத்த காப்புரிமையாக இருக்கும் என்றது PETA அமைப்பு.

Selfie taken by macaque money in Indonesia in 2011

குரங்குகளின் படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்று, சரியான ஒளி, உள்ள இடங்களையும் தெரிவு செய்து,  குரங்குகள் செய்ய முடியாத நுட்பமான, சில setting கமெராவில் தான் செய்த படியாலே படம் சிறப்பாக வந்தது என்பதால், தயவுடன் எனது பெரும் முயற்சியினை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என்று மன்றாடினார் டேவிட்.

Monkey selfie

தீர்ப்பு

இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப் பட்டது. மனிதருக்கான சட்டங்களில், விலங்குகளுக்கான (இல்லாத) காப்புரிமையினை கோருவது அர்த்தமில்லாதது என்று நீதி மன்று தீர்ப்பு அளித்திருக்கின்றது.

பணத்தினையும், தமக்கான விளம்பரத்தினையும் வேண்டியே PETA இந்த வழக்கினைத் தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த நன்கொடைப் பணத்தினை தொலைத்து எனது வருமானத்தினையும் நாசமாக்கி விட்டனர் என்று சொல்கிறார் டேவிட்.

PETA வும் விக்கியும் நஷ்ட ஈடு செலுத்த நேரிடலாம்.

தர்ம தாபனங்களில் கிடைக்கும் பணத்தில், 60% அங்கே வேலை செய்வோரின் சம்பளத்துக்கே செல்வாதாகவும், பிரிட்டனின் பெரிய தர்ம ஸ்தாபன நிறுவனகளில் 6 ல் தலைமை அதிகாரிகள், பிரதமர் டேவிட் கமரூனில் பார்க்க அதிக சம்பளம் எடுக்கிறார்கள் என்றும், அடாவடியாக பணம் சேகரிக்க முனைகின்றன சில தர்ம ஸ்தாபனங்கள் என்று டைம்ஸ் செய்தித்தாள் அண்மையில் முதல் பக்க தலைப்புச் செய்தி வெளியிட்ட நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தீர்ப்புத்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.