Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !

Featured Replies

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !

இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள்  சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி   பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால்  செய்தியாளர் காட்டில் மழை.

 உண்மையில்லாமல் தானாக கை கால் முளைத்து அந்த செய்தி உலாவரவில்லை. அதனால் தான்  புகைந்தது. அதைப்பற்றி மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம், முன்னாள் சட்டமா அதிபருக்கு உரியதல்ல. ஏனெனில் அவர் ஓய்வு பெற்ற பின் அவுஸ்ரேலியா சென்றுவிட்டார். புலிகள் சார்பாக சட்டவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டும் அவர் செயல். ஆனால் உயர் நீதிமன்ற நீதியரசர் ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகிவிட்டார். அதனால் மக்களுக்கு பதில் சொல்லும் கடமை அவருக்கு உண்டு. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, அதுவும் முக்கியமாக தமிழ் அரசு கட்சி தெரிவில் முதல்வர் கதிரையில் அமர மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

 அப்படி இருக்கையில் வாக்களித்த மக்களின் அபிப்பிராயம் அறிய முன்பே, அவர்களின் ஆதரவை இழந்தவர்களின் அழைப்பை ஏற்று, புத்திஜீவிகளின் கூட்டுக்கு தலைமை தாங்கி தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்துக்கு ஊக்கம் கொடுப்பவர் முதல்வர். அதனால் அதன் நடவடிக்கைக்கு உகந்தவராக தன் சார்பில் முன்னாள் சட்டமா அதிபரை செயல்ப்பட அழைத்தாரா? இல்லையா? அந்த அழைப்பை அவர் ஏற்றாரா? இல்லையா? என்ற செய்திக்கு நேரடியாக பதில் கூற கடமைப்பட்டவர் முதல்வர். அதை விடுத்து பேரவைக்கு எதிரான விசமத்தனமான செயல், அது பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறுவது, அவரின் முன்னுக்கு பின்னான முரண்பட்ட செயலாகத்தான் பார்க்கப்படும்.

 எதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும், மக்களுக்கு நடப்பதை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்த வேண்டும் என, இதுவரை நடந்த இரண்டு பேரவை அமர்விலும் முதல்வர் உறுதியாக கூறிவிட்டு இப்போது, இவ்வாறு தெளிவாற்ற பதிலை கூறி ஊகங்களுக்கு வழிவிடுவது, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதா ஒன்றாகவே பார்க்கப்படும். உண்மையில் அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அதில் தவறில்லை. சட்டவாக்கத்தில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவரை உள்ளடக்க முனைதல் வரவேற்கத்தக்கது. அதே வேளை அவ்வாறான அழைப்பை அவர் ஏற்க மறுத்திருந்தால், அதுபற்றி வெளிப்படையாக நான் அழைத்தேன், அவர் ஏற்கவில்லை என்ற ஒரு வரி பதில் கூட பலவிதமான வதந்திகளை வடிகட்டி இருக்கும்.

  ஊகத்தில் திரு சிவா பசுபதி என்ன சொல்லி மறுத்தார் என அவரவர் விருப்பு தெரிவுக்கு ஏற்றவாறு எழுதும் நிலையை முதல்வரே ஏற்படுத்தி உள்ளார். தெளிவற்ற பேச்சு, செயல் தேவையற்ற விமர்சனங்களை, ஊகங்களை மக்கள் மனதில் மாட்டுமல்ல மூத்தவரான தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதை அவரது அறிக்கை அறியத்தருகிறது.

தமிழ் மக்கள் பேரவையை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமெனவும், அவ்வாறு செயற்பட்டால் அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கக் தயாராக இருப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

  அவரது அறிக்கையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒத்தாசையாகவே செயற்படும், இதற்கு எதிர்ப்பில்லை ஆதரவாகவே செயற்படும் என தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை அறிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது. இக்கருத்து உண்மையாக இருக்குமானால் அது பிரயோசனம் எதையும் தராது என்பது மட்டுமல்ல மாற்று வழியை கையாளுவதற்கு முட்டுக்கட்டையாகவே அமையும். எனவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

 மொத்தத்தில் வடமாகாண முதல்வரும் தமிழ் மக்கள் பேரவை தலைவருமான திரு விக்னேஸ்வரன் அவர்களின் செயல் வெளிப்படைத் தன்மை அற்றதாகவே தொடர்கிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல முதல்வராக பதவி ஏற்றது முதல் தொடரும் நிகழ்வுகள் ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னால் இயலாதவனுக்கு கோபம் என்பது போலவே நடைபெறுகின்றன. யார் சரி யார் பிழை என்பதற்கு அப்பால் எவரிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மட்டும் உண்மை.

 உண்மையில் நடந்தது என்ன என விசாரித்ததில் விசமத்தனமற்ற தகவல் கிடைத்தது. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி சில மாதங்களுக்கு முன்பே இலங்கைக்கான தனது தனிப்பட்ட பயண ஏற்பாட்டை செய்துள்ளார். அவர் வரும் தகவல் அறிந்த உள்நோக்கம் கொண்ட பயனாளிகள்  அவர் முதல்வரின் அழைப்பில் வருவதுபோலவும், அவரது சார்பில் சட்டவாக்க செயல்பாட்டில் ஈடுபட போவதாகவும் செய்தியை வெளியிட்டு, திரு சிவா பசுபதியை சங்கடத்துக்கு உட்படுத்தியதால் அவர் கொழும்பில் நின்ற வேளை, பலரை சந்திப்பதை தவிர்ப்பதற்காக கையடக்க தொலைபேசியை கூட பாவிக்கவில்லை.

 அதே வேளை மிக முக்கியமான தமிழ் அரசியல் பிரமுகரை தொடர்புகொண்டு தன்னை சம்மந்தபடுத்தி வந்த தகவலால் தனக்கு ஏற்பட்டுள்ள சங்கத்தை கூறி விசனப்பட்டிருக்கிறார். திரு விக்னேஸ்வரனின் செயல்பாடு காலத்துக்கு ஒவ்வாதது, தற்போது எமக்கு தேவைப்படுவது ஒற்றுமையே அன்றி பிரிவினை அல்ல, நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்பட்டிருக்கும் எமக்கு சாதகமான சூழ்நிலையை நாம் சரியாக கையாண்டு ஒரு தீர்வை நோக்கி நகரவேண்டும் என கூறி, தான் எந்த வகையிலும் விக்னேஸ்வரன் அழைப்பை ஏற்கப்போவதில்லை இது எனது தனிப்பட்ட விஜயம் எனவும் விளக்கியுள்ளார்.

 திரு சிவா பசுபதியை தொடர்புகொள்ள எடுத்த விடாமுயற்சியில் வெற்றிகண்ட விக்னேஸ்வரன் யாழ்பாணத்தில்வைத்து அவருடன் தொலைபேசியில் தனது கோரிக்கையை வைத்துள்ளார். அதை ஏற்க மறுத்த திரு சிவா பசுபதி அதன் பாதகதன்மையை விளக்கி, வேண்டாம் இந்த பிரிவினை என கூறியபோதும் விக்னேஸ்வரன் விடாப்பிடியாய தமிழ் மக்கள் பேரவையின் ஆழ அகலம் பற்றியும், அது ஏன் காலத்தின் கட்டாயம் எனவும் விளக்கிய போதும், திரு சிவா பசுபதி விடாப்பிடியாக தனது முடிவில் உறுதியாக இருந்ததால் விசனம் அடைந்த முதல்வர் முன்நாள் சட்டமா அதிபரிடம் “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார்.           

 –ராம்-   

http://www.whathits.com/thinakkathir

1 hour ago, Iraivan said:

அப்படி இருக்கையில் வாக்களித்த மக்களின் அபிப்பிராயம் அறிய முன்பே, அவர்களின் ஆதரவை இழந்தவர்களின் அழைப்பை ஏற்று, புத்திஜீவிகளின் கூட்டுக்கு தலைமை தாங்கி தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்துக்கு ஊக்கம் கொடுப்பவர் முதல்வர். அதனால் அதன் நடவடிக்கைக்கு உகந்தவராக தன் சார்பில் முன்னாள் சட்டமா அதிபரை செயல்ப்பட அழைத்தாரா? இல்லையா? அந்த அழைப்பை அவர் ஏற்றாரா? இல்லையா? என்ற செய்திக்கு நேரடியாக பதில் கூற கடமைப்பட்டவர் முதல்வர். அதை விடுத்து பேரவைக்கு எதிரான விசமத்தனமான செயல், அது பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறுவது, அவரின் முன்னுக்கு பின்னான முரண்பட்ட செயலாகத்தான் பார்க்கப்படும்.

 எதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும், மக்களுக்கு நடப்பதை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்த வேண்டும் என, இதுவரை நடந்த இரண்டு பேரவை அமர்விலும் முதல்வர் உறுதியாக கூறிவிட்டு இப்போது, இவ்வாறு தெளிவாற்ற பதிலை கூறி ஊகங்களுக்கு வழிவிடுவது, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதா ஒன்றாகவே பார்க்கப்படும். உண்மையில் அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அதில் தவறில்லை. சட்டவாக்கத்தில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவரை உள்ளடக்க முனைதல் வரவேற்கத்தக்கது. அதே வேளை அவ்வாறான அழைப்பை அவர் ஏற்க மறுத்திருந்தால், அதுபற்றி வெளிப்படையாக நான் அழைத்தேன், அவர் ஏற்கவில்லை என்ற ஒரு வரி பதில் கூட பலவிதமான வதந்திகளை வடிகட்டி இருக்கும்.

இந்த பகுதி சரியாகத்தான் படுகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Iraivan said:

தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை அறிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.

மக்கள் யாரும் இங்கு குழம்பவில்லை. சில பத்திரிகைகள் குழப்புகின்றன. சில குழப்பியள் குழம்புகிறார்கள்.

முதல்வர் பேட்டி கொடுத்தால் சம்பந்தருக்கு பேதி வருகுது. பேட்டி கொடுக்காவிட்டால் குழப்பியளுக்கு கோபம் வருகுது. ஆகவே முதல்வர் தனது காரியத்தில் சாதிப்பதே சாலச் சிறந்தது. என்ன அவரின் வாயைக்கிளறி குழி பறிக்க முடியாது.

ஐயா முதல்வரே! வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் உலகம். அதற்காக வாழாமல் இருக்க முடியுமா? உங்களால் முடிந்ததை செய்யுங்கள். காலமும், கடவுளும் கைகொடுக்கும் உங்களுக்கு.

எட்டாக்கனியாகிய சிவா பசுபதி

 

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், சட்டநிபுணர் சிவா பசுபதியும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அவரை அதற்குள் இணைத்துக் கொள்ளும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முயற்சிகள், தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இதற்கான 15 பேர் கொண்ட உபகுழுவும், தமிழ் மக்கள் பேரவையினால் அமைக்கப்பட்டது.

அதில் இடம்பெறும் 11 பேரின் விவரங்கள் மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டன. முதலமைச்சரின் இரு பிரதிநிதிகள், புளொட் அமைப்பின் ஒரு பிரதிநிதி மற்றும், சிவில் சமூகத்தின் ஒரு பிரதிநிதி, நான்கு பேர் யார் என்ற விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. கூடிய விரையில், இந்த உபகுழுவின் உறுப்பினர்களின் விவரங்கள், ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான், முதலமைச்சரின் பிரதிநிதியாக சிவா பசுபதி இடம்பெறவுள்ளதாக, ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியாகின.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு, அதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் கூட, செய்திகள் வெளியாகின. அதற்கு, தமிழ் மக்கள் பேரவையின் தரப்பில் இருந்து யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதால், அந்தச் செய்திகளில் தவறு இருக்கும் எனக் கருத முடியாது.

சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர். ஜனாதிபதி சட்டத்தரணி. அரசியலமைப்புச் சட்ட நிபுணர். 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1988ஆம் ஆண்டு வரையில், இலங்கையின் 34ஆவது சட்டமா அதிபராக, 13 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் சட்டமா அதிபராக இருந்த காலத்தில் தான், ஜே.ஆர்.ஜெயவர்தன, 1978ஆம் ஆண்டு அரசியல்யாப்பை உருவாக்கினார். அதுமட்டுமன்றி, 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டதும், இவர் சட்டமா அதிபராக இருந்த காலத்தில் தான். இதற்காக, இவரே அதன் சூத்திரதாரி என்று சொல்ல முடியாது.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் உத்தரவுகளை நிறைவேற்றுகின்ற நிலையில் இருந்த ஒருவர் என்ற வகையில் தான், அவர் அதனைச் செய்திருந்தார். சிறந்த அரசியலமைப்புச் சட்டநிபுணராக பெயரெடுத்த சிவா பசுபதி, ஓய்வுபெற்ற பின்னர், அவுஸ்ரேலியாவில் குடியேறினார். 2002ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பித்த போது, விடுதலைப் புலிகளால், அரசியல் விவகாரக் குழுவொன்று அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவுக்கு உதவவும் ஆலோசனைகளை வழங்கவும், இந்த அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டது.

இதில், சிவா பசுபதி, மலேஷிய

பேராசிரியர் இராமசாமி, சிங்கப்பூர் பேராசிரியர் சொர்ணராஜா, அவுஸ்ரேலிய பேராசிரியர் இமானுவேல்பிள்ளை போல் டொமினிக், சட்ட நிபுணர் விஸ்வேந்திரன் மற்றும் வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், இரேனியஸ் செல்வில் உள்ளிட்ட வளவாளர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அரசியல் விவகாரக் குழுவினரே, 2003இல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி வரைவைத் தயாரித்திருந்தனர். அதில் சிவா பசுபதி, முக்கிய பங்கு வகித்திருந்தார். அதாவது, சட்டமா அதிபராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற வகையில், அவரது சட்டவரைவு நிபுணத்துவம், இதற்குத் துணையாக இருந்தது.

2006ஆம் ஆண்டு அரசாங்கத்துடனான பேச்சுகள் முறியும் வரை, விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரக் குழுவில் இடம்பெற்றிருந்தார், வெளிநாடுகளில் நடந்த பேச்சுகளிலும் பங்கெடுத்திருந்தார்.

எனினும், அதற்குப் பின்னர், சுமார் 10 ஆண்டுகளாக ஊடகங்களால் அவர் மறக்கப்பட்டிருந்த நிலையில் தான், மீண்டும், கடந்த ஓரிரு வாரங்களாக, அவர் பற்றிய செய்திகளை அதிகளவில் காண முடிந்தது. அவர், யாழ்ப்பாணம் வருவதற்கு எடுத்த முடிவு தான் இதற்குக் காரணம் எனச் சொல்ல முடியாது. அவரது யாழ்ப்பாண வருகை இடம்பெற்ற சூழல் தான், அவர் பற்றிய செய்திகளை ஊடகங்களில் பரபரப்படைய வைத்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் களம் ஏற்கெனவே பரபரப்படைந்திருந்தது. தமிழ் மக்கள் பேரவையினால், தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கான உபகுழு நிறுவப்பட்ட காலமும், சிவா பசுபதியின் யாழ்ப்பாணப் பயணமும் நெருக்கமாக இருந்ததால், இந்த இரண்டுக்கும் இடையில் முடிச்சுப் போடப்பட்டதில் ஆச்சரியமில்லை.

சிவா பசுபதியின் யாழ்ப்பாணப் பயணம், மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் உபகுழுவில் பங்கேற்பதற்காகத் தான் யாழ்ப்பாணம் வருவதாக, ஊடகங்களில் தகவல்கள் பரவின.

தற்போது 82 வயதை எட்டியுள்ள சிவா பசுபதி, தனது சொந்த இடமான யாழ்ப்பாணத்தைப் பார்வையிட்டு, பொழுதைக் கழிப்பதற்காகவே திட்டமிட்ட பயணம். இது இந்தளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அவர், சிறிதேனும் எதிர்பார்த்திருக்கமாட்டார். எவ்வாறாயினும், தமிழ் மக்கள் பேரவையில், முதலமைச்சரின் பிரதிநிதியாக சிவா பசுபதியை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதால் தான், ஊடகங்களில் இந்தச் செய்திகள் கசிந்தன.

அதேவேளை, யாழ்ப்பாணம் வந்த சிவா பசுபதியை, உப குழுவில் இடம்பெறச் செய்ய, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. தொலைபேசி மூலம் இதுபற்றி முதலமைச்சர் பேசிய போது, உடனடியாகவே அதற்கு சிவா பசுபதி மறுத்து விட்டதாகவும், அவரை இணங்க வைக்க தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்,  பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் செய்தியை, இந்திய ஊடகம் ஒன்று தான் வெளியிட்டது.

அதுமட்டுமன்றி, ஒன்றுபட்ட இலங்கைக்குள், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய தனியான முயற்சிகள் தேவையில்லை என்று சிவா பசுபதி கூறிவிட்டதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

சிவா பசுபதியை உபகுழுவில் இடம்பெறச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட தரப்புகளுக்கு அவர் மறுப்புத் தெரிவித்ததை விட, தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவர் வெளியிட்டதாகக. கூறப்படும் தகவல் தான், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு தயாரிக்கும் உபகுழுவுக்கு,  சிவா பசுபதி போன்ற கனதியானவர்கள் அவசியம் தேவை. அவர் இதற்குள் உள்வாங்கப்பட்டிருந்தால், அது உபகுழுவின் பெறுமானத்தை அதிகரிக்கச் செய்திருக்கும். விடுதலைப் புலிகள், தன்னாட்சி அதிகார வரைவைத் தயாரித்த போது, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபரொருவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆவணம் என்பதையே, பிரதானமாக வலியுறுத்தினர். அதுவே, அந்தத் திட்டத்துக்கு கூடுதல் பெறுமானத்தைக் கொடுத்தது.

அதுபோலத் தான், தற்போது, சிவா பசுபதிக்கு, இரண்டு தகைமைகள் உள்ளன. ஒன்று, முன்னாள் சட்டமா அதிபர் என்பது. இரண்டாவது, விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரப் பிரிவில் இருந்தவர் என்பது. விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரப் பிரிவில் ஆலோசகராக இருந்த ஒருவரையும் உள்ளடக்கியே, தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது எனும் போது, அது தமிழ் மக்களிடம் கூடுதல் ஈர்ப்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காகத் தான், அவரை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள், தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டன.

அவர் அதற்கு உடன்பட மறுத்தது, தமிழ் மக்கள் பேரவைக்கு ஏற்பட்டிருக்கின்ற சறுக்கல் என்றே கூறலாம். சிவா பசுபதி இணைந்தாலும் சரி இணையா விட்டாலும் சரி, தமிழ் மக்கள் பேரவை, தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்குக் கூடுதல் பெறுமானத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பு, பறிபோயிருக்கிறது. அதேவேளை, அவர் மறுப்புத் தெரிவித்தமைக்குக் கூறியிருக்கும் காரணம், இந்திய ஊடகம் குறிப்பிட்டது போலவே அமைந்திருந்தால், அது, தமிழ் மக்கள் பேரவையினால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து, அதாவது, இந்திய ஊடகத்தில் வெளியான தகவல்கள் குறித்து, எந்தக் கருத்தையும் வெளியிட முதலமைச்சர் மறுத்திருக்கிறார்.

அதேவேளை, விசமத்தனமான செய்திகள் வெளியாவதாகவும், அவர் கூறியிருக்கிறார். எது எவ்வாறாயினும், உபகுழுவை நியமிப்பதில் வேகம் காட்டியளவுக்கு, அதற்குத் பொருத்தமானவர்களைக் கண்டறிவதில், தமிழ் மக்கள் பேரவை, வேகத்தைக் காட்ட முடியவில்லை.

சிவா பசுபதி விவகாரத்தில், அவரது உடன்பாட்டைப் பெறாமல், அதுபற்றிய செய்திகளைக் கசிய விட்டு, தம்மைப் பரபரப்பாக்கிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதன் விளைவு தான், தமிழ் மக்கள் பேரவைக்கு இந்த சறுக்கல் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

 
 

- See more at: http://www.tamilmirror.lk/163389#sthash.2y7ejveB.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறவாமலா போகும்? பசுபதியின் மறுப்பு பத்திரிகையில் வந்த  விதம் அவருடைய பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது. காலம் சென்றாலும் ஒரு நல்லவர் வராமலா போகப்போறார்? நல்லது செய்ய அவருக்கு கொடுப்பினை இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.