Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது

Featured Replies

தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது

வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது

அமெரிக்க போர் விமானம் ஒன்று தென்கொரியாவுக்கு மேலாக மிகவும் தாழ்வாக பறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குவாம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட, அணு ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த B-52 ரக போர் விமானத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க மற்றும் தென்கொரிய போர் விமானங்களும் உடன் பறந்துள்ளன.

வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது.

ஹைட்ரஜன் குண்டு ஒன்றை பரிசோதித்ததாக வடகொரியா கூறியிருந்த நிலையில், அதற்கு சர்வதேச மட்டத்தில் கண்டனங்கள் கிளம்பியிருந்தன.

பலதரப்பட்ட வல்லுநர்களும் அவ்வகையான சோதனை குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், அந்நாட்டின் இராணுவத் தலைமையகத்தை சுற்றிப்பார்க்கும் காட்சிகளை அந்நாட்டு அரச ஊடகம் வெளிப்படுத்தியிருந்தது.

'இறையாண்மை உள்ள ஒரு நாட்டின் சட்டரீதியான உரிமை' இது என்று அரச ஊடகம் வர்ணித்திருந்தது.

'அமெரிக்கா தலைமையிலான வல்லாதிக்க சக்திகளின் அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு எதிராக நாட்டைக் காக்கும் தற்காப்பு நடவடிக்கை' இது என்றும் வடகொரியாவின் தலைவர் கிம் கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/global/2016/01/160110_korea_us_flight

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

'இறையாண்மை உள்ள ஒரு நாட்டின் சட்டரீதியான உரிமை' இது என்று அரச ஊடகம் வர்ணித்திருந்தது.

'அமெரிக்கா தலைமையிலான வல்லாதிக்க சக்திகளின் அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு எதிராக நாட்டைக் காக்கும் தற்காப்பு நடவடிக்கை' இது என்றும் வடகொரியாவின் தலைவர் கிம் கூறியிருந்தார்.

 

வல்லரசு நாடுகள் இவற்றை செய்யலாம். சிறிய நாடுகள் செய்தால் அவர்களின் நாட்டுக்கு மேலால் பறந்து அச்சுறுத்தலாமா??
 

  • கருத்துக்கள உறவுகள்

எதோ வடகொரியாவுக்கு  மேலால பறந்த மாதிரி  சும்மா பூச்சாண்டி காட்டிறாங்கள். ஈராக் சிரியா லிபியா மாதிரி என்று நினைக்கினம் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவும் கன குண்டுகளை வெடிக்க வைச்சது தானே......ஏலுமெண்டால் மேலாலை  கீழாலை  பறக்கட்டும் பாப்பம்!!!!! tw_lol:

Edited by குமாரசாமி
f7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.