Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க பிரதமர் மறுப்பு

Featured Replies

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க பிரதமர் மறுப்பு
 
 
மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க பிரதமர் மறுப்பு
யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
 
பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை சிறிலங்கா படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.அந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகவே நிராகரித்துள்ளார்.
 
பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதைக்கு நெருக்கமாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் இருப்பதாகவும், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டங்கள் இருப்பதால் அதற்கு துறைமுகப் பகுதி அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தவேளையில் குறுக்கிட்ட இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன, கட்டுநாயக்க  விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கடலேரியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. விமானங்கள், தரையிறங்குவதற்கும், மேலெழுவதற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார்.இதயனையடுத்து, காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
 
                            ranil-3.jpg
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நவீனன் said:
பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை சிறிலங்கா படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.அந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகவே நிராகரித்துள்ளார்.
 
பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதைக்கு நெருக்கமாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் இருப்பதாகவும், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டங்கள் இருப்பதால் அதற்கு துறைமுகப் பகுதி அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல செட்டப் மீட்டிங்...:cool:

  • தொடங்கியவர்
மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது என வெளியான செய்தி தவறானது
 
 
மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது என வெளியான செய்தி தவறானது
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி துறைமுகப் பகுதியை மக்களிடம் மீள வழங்குவதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவித்ததாக வெளியான செய்திகள் தவறானவை என பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
 
அவ்வாறான தீர்மானத்தை பிரதமர் எடுக்கவில்லை எனவும் அவ்வாறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெறவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
 
கடந்த 15ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர்மட்டச் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
 
இதன்போது மயிலிட்டி துறைமுகப் பகுதியை மக்களிடம் வழங்குவதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.இந்த விடயம் தொடர்பாக பிரதமர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மயிலிட்டி துறைமுகம் மற்றும் காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றை பொருளாதார நோக்கில் மேம்படுத்த வேண்டும். அவற்றை பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்காமல், அபிவிருத்திக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
 
விரைவில் செயற்படுத்தப்படவுள்ள பிராந்தியங்களின் அபிவிருத்தி செயற்றிட்டத்தில் வடபிராந்தியத்தில் இந்த இரு துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்யவேண்டும். அதற்காக இந்த இரு துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பான மேம்பட்ட திட்டவரைபை தயாரிப்பதற்கு மாகாணத்திலுள்ள முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், படையினர் இணைந்து ஒரு சந்திப்பை மேற்கொண்டு குறித்த திட்டவரைபை தயாரிக்குமாறும் பிரதமர் தெரிவித்தார்.
 
மயிலிட்டி துறைமுகத்தின் தேவையையும் நிவர்த்திக்கும் வகையில் பருத்துறையில் ஒரு பாரிய துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.இந்நிலையில் அந்தத் துறைமுகம் அமைக்கும் பணியை தற்காலிகமாக பிற்போடுமாறும் பிரதமர் பணித்தார்.
 
மயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் தொடர்பாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள்? என்பதை அறிந்து கொண்டு அதற்கப்பால் எதுவானாலும் செய்யலாம் எனவும் இதன்போது பிரதமர் கூறினார்.
 
மக்கள் விரும்பும் அபிவிருத்தியை செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத அல்லது மக்களுக்கு பயன்படாத விடயங்களில் அபிவிருத்தியின் பெயரால் பணத்தை செலவிட முடியாது என்பதையே 15ஆம் திகதி நடை பெற்ற உயர்மட்ட குழு சந்திப்பில் பிரதமர் சுட்டிக்காட்டினார் எனவும் பிரதமர் செயலகம் மேலும் விளக்கமளித்துள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.