Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : { பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம் } (2)

ஆண் : ஒரு மூன்றாம்
பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி

ஆண் : பனிபூக்கள்
தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி

ஆண் : பிரம்மன்
செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்
போது தான் மொழிகள்
இனிக்கிறது

ஆண் : புறா இறகில்
செய்த புத்தம் புதிய
மெத்தை உந்தன் மேனி
என்று உனக்கு தெரியுமா

பெண் : சீன சுவரை
போலே எந்தன் காதல்
கூட இன்னும் நீளமாகும்
உனக்கு தெரியுமா

ஆண் : பூங்கா என்ன
வாசம் என்று உந்தன்
மீதுதெரியும்

பெண் : தந்தம் என்ன
வண்ணம் என்று உன்னை
பார்க்க தெரியும் காதல் வந்த
பின்னாலே கால்கள் ரெண்டும்
காற்றில் செல்லும்

ஆண் : கம்பன் ஷெல்லி
சேர்ந்து தான் கவிதை
எழுதியது எந்தன் முன்பு
வந்து தான் பெண்ணாய்
நிற்கிறது

பெண் : மழை வந்த
பின்னால் வானவில்லும்
தோன்றும் உன்னை பார்த்த
பின்னால் மழை தோன்றுதே

ஆண் : பூக்கள் தேடி
தானே பட்டாம் பூச்சி
பறக்கும் உன்னை தேடி
கொண்டு பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை
என்ன என்று மின்னல்
உன்னை கேட்கும் எங்கே
தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்

ஆண் : உன்னை பார்த்த
பூவெல்லாம் கையெழுத்து
கேட்டு நிற்கும்

பெண் : நீ தான் காதல்
நூலகம் சேர்ந்தேன்
புத்தகமாய் நீ தான்
காதல் பூ மழை
நனைவேன் பாத்திரமாய்

பெண் : அரை நொடி
தான் என்னை பார்த்தாய்
ஒரு யுகமாய் தோன்ற
வைத்தாய்

பனி துளியாய் நீயும்
வந்தாய் பாற் கடலாய்
நெஞ்சில் நின்றாய்........!

--- பெண்ணே நீயும் பெண்ணா ---

  • Replies 5.9k
  • Views 334.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில்
அழைக்கின்ற நேரம்

ஆண் : விடு விடு வெனவே
வாலிப மனது விண்வெளி
விண்வெளி ஏறும்

பெண் : மன்னவா ஒரு
கோயில் போல் இந்த
மாளிகை எதற்காக

ஆண் : தேவியே என்
ஜீவனே இந்த ஆலயம்
உனக்காக

பெண் : வானில் ஒரு புயல்
மழை வந்தால் அழகே எனை
எங்கனம் காப்பாய்

ஆண் : கண்ணே உன்னை
என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள்
அடைப்பேன்

பெண் : சாத்தியமாகுமா
ஆண் : நான் சத்தியம் செய்யவா

பெண் : இந்த பூமியே
தீா்ந்து போய்விடில்
என்னை எங்கு சோ்ப்பாய்

ஆண் : நட்சத்திரங்களை தூசு
தட்டி நான் நல்ல வீடு செய்வேன்

பெண் : நட்சத்திரங்களின்
சூட்டில் நான் உருகிப்போய்விடில்
என் செய்வாய்

ஆண் : உருகிய துளிகளை
ஒன்றாக்கி என் உயிா் தந்தே
உயிா் தருவேன்

பெண் : ஹே ராஜா
இது மெய்தானா

ஆண் : ஏ பெண்ணே தினம்
நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான்
பாய் விாிப்பேன் என்னை

பெண் : நான் நம்புகிறேன் உன்னை

பெண் : நீச்சல் குளம் இருக்கு
நீரும் இல்லை இதில் எங்கு
நீச்சலடிக்க

ஆண் : அத்தா் கொண்டு
அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க

பெண் : இந்த நியதியில்
அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு

ஆண் : காற்று வந்து உன்
குழல் கலைத்தால் கைது
செய்வதென ஏற்பாடு

பெண் : பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்

ஆண் : ஹே ராணி அந்த
இந்திரலோகத்தில் நான்
கொண்டு தருவேன் நாள்
ஒரு பூ வீதம்

பெண் : உன் அன்பு அது போதும் .......!

 

--- தொடு தொடு வெனவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : { உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி } (2)

ஆண் : என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ

ஆண் : { உன்னை
கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம்
ஆனதடி } (2)

ஆண் : உன்னை
மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி

ஆண் : கால சுமைதாங்கி
போலே மார்பில் எனை
தாங்கி வீழும் கண்ணீர்
துடைப்பாய் அதில் என்
இன்னல் தணியுமடி

ஆண் : { ஆழம் விழுதுகள்
போல் உறவு ஆயிரம்
வந்தும் என்ன } (2)
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து
விடாதிருந்தேன்

ஆண் : முள்ளில்
படுக்கையிட்டு இமையை
மூடவிடாதிருக்கும் பிள்ளை
குலமடியோ என்ன பேதமை
செய்ததடி

ஆண் : { பேருக்கு பிள்ளை
உண்டு பேசும் பேச்சுக்கு
சொந்தமுண்டு } (2)
{ என் தேவையை யார்
அறிவார் } (2)
உன்னை போல் தெய்வம்
ஒன்றே அறியும் .......!

 

--- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : கடவுள் தந்த
அழகிய வாழ்வு உலகம்
முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து
பாடு

பெண் : கருணை பொங்கும்
உள்ளங்கள் உண்டு கண்ணீர்
துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

பெண் : எதை நாம் இங்கு
கொண்டு வந்தோம் எதை
நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை
அன்பில் வாழ்ந்து விடைப்
பெறுவோம்

பெண் : பூமியில் பூமியில்
இன்பங்கள் எங்கும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ

ஆண் : எது வரை வாழ்க்கை
அழைக்கிறதோ அது வரை
நாமும் சென்றிடுவோம் விடை
பெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

ஆண் : பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமல்
இங்கே வாழுமே

ஆண் : நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை
பார்த்து பொழியாது

ஆண் : கோடையில் இன்று
இலை உதிரும் வசந்தங்கள்
நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும்
வந்துவிட்டால் குயில்களின்
பாட்டு காற்றில் வரும்

ஆண் : முடிவதும் பின்பு
தொடர்வதும் இந்த
வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தான் நீ கேளடீ........!

--- கடவுள் தந்த அழகிய வாழ்வு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
 
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
 
நாக்குல மூக்கையே ஹே ஹே
தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓகோ
தொட்டவ நீயடி
 
ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா
சமஞ்ச
ஐத்தமகென் பஞ்சத்துக்கு ஆதரமா
அமஞ்ச
குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
பல்லுப் போட துணிஞ்ச
 
சொந்தக்காரன் நான் தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டமை
தான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்தப் பூ ஒகோ
ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ
சண்டையா சத்தமா?

மாலையும் சூடவில்ல
கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா
 
நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா
 
நிலாக் கறைய அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது
பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது

போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது
கிள்ளவா அள்ளவா ஓகோ
சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒகோ
பட்டிமன்றம் வைக்கலாம்.......!
 
--- தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : அடியே மனம்
நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு
நீ சொக்காதடி தாப்பாள
போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

ஆண் : வெட்கம் என்னடி
துக்கம் என்னடி உத்தரவ
சொன்ன பின்பு தப்பு
என்னடி

ஆண் : முத்தம் என்னடி
முத்து பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன
வந்து கட்டிக்கொள்ளடி

பெண் : { மனம் கேட்காத
கேள்வியெல்லாம்
கேட்குதய்யா பாக்காத
பார்வையெல்லாம்
பாக்குதய்யா } (2)

பெண் : காலம் கடக்குது
கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன்
கைய கொஞ்சம் புடி

ஆண் : தாப்பாள
போடாம கேட்பார
கேளாம கூப்பாடு
போடாதடி அடியே
மனம் நில்லுனா
நிக்காதுடி

ஆண் : கட்டிலிருக்கு
மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட
பின்பு சொர்க்கம்
இருக்கு

பெண் : கிட்டயிருக்கு
கட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள
தட்டி முழக்கு

ஆண் : தூங்காம
நான் காணும்
சொப்பனமே
பெண் : உனக்காக
என் மேனி அா்ப்பனமே

பெண் : சாய்ந்து
கெடக்குறேன் தோள
தொட்டு அழுத்திக்க
சோலைக்கிளி என்ன
சொக்க வச்சுப்புடி

ஆண் : இச்சை என்பது
உச்சம் உள்ளது இந்திரன
போல ஒரு மச்சம்
உள்ளது

பெண் : பக்கம் உள்ளது
பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம்
மட்டும் மிச்சம்
உள்ளது

ஆண் : இது பாலாக
தேனாக ஊறுவது
பெண் : பாராத மோகங்கள்
கூறுவது

ஆண் : பாசம் இருக்குது
பக்கம் வந்து அணைச்சிக்க
பெண் : காலு தவிக்குது
பக்குவமா புடி ..........!

 

--- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே விண்ணை
தாண்டி வருவாயா விளையாட
ஜோடி தேவை இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்

ஆண் : இது இருளல்ல அது
ஒளியல்ல இது இரண்டோடும்
சேராத பொன் நேரம் இது
இருளல்ல அது ஒளியல்ல
இது இரண்டோடும் சேராத
பொன் நேரம்

ஆண் : தலை சாயாதே
விழி மூடாதே சில
மொட்டுக்கள் சட்டென்று
பூவாகும் பெண்ணே பெண்ணே
பூலோகம் எல்லாமே தூங்கிபோன
பின்னே புல்லோடு பூவிழும் ஓசை
கேட்கும் பெண்ணே நாம் இரவின்
மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலுாட்ட நிலவுண்டு

பெண் : எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை
வைத்தவன் யாரு

ஆண் : இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு
பெண் : பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவை
திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்

ஆண் : அட உலகை ரசிக்க
வேண்டும் நான் உன் போன்ற
பெண்ணோடு ........!

 

--- வெண்ணிலவே வெண்ணிலவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பச்சரிசி சோறு..ம்ம் ..
உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ
எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து
என்னை மீறுது

பெண் : பாவக்கா கூட்டு
பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து
ஆக்கி முடிச்சாச்சு
சிறுகாலான் வருத்தாச்சு
பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது
ரொம்ப பொருத்தமைய்யா
தெனங்குடிச்சா ஒடம்பு இது
ரொம்ப பெறுக்குமைய்யா

பெண் : பழையதுக்கு தோதா
புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா
போட்டறச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம்
சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை ஒலகத்துல
இல்லவே இல்ல
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும்
அலுக்கவே இல்ல

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன்
பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க.......!

 

--- நித்தம் நித்தம் நெல்லு சோறு ---

  • கருத்துக்கள உறவுகள்

ccc.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

குழு : மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக

பெண் : சீர் செனத்தையோட
வந்து சீமையில கேட்டாக

குழு : அந்த சிங்கப்பூரிலும்
கேட்டாக நம்ம
சின்னமனூர்லயும் கேட்டாக

பெண் : { அதை எல்லாம்
உன்னால வேணாமுன்னு
சொன்னேன் தன்னால என்
மச்சான் உன் மேலே ஆச
பட்டு வந்தேன் முன்னால } (2)

பெண் : கொண்ட முடி
அழக பார்த்து கோயம்பத்தூரிலே
கேட்டாக நெத்தியில பொட்ட
பார்த்து நெல்லூரில கேட்டாக

குழு : ரெண்டு புருவ அழக
பார்த்தாக ஒரு கோட்டையில்
இவள கேட்டாக

பெண் : கண்ணழக பார்த்து
பார்த்து கண்டமனூரிலே
கேட்டாக மூக்கழக பார்த்து
என்ன மூக்கையன்
கோட்டையில் கேட்டாக

பெண் : கோபமுள்ள
பொண்ணுன்னு என்ன
கோட்டையில கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு
என்ன பண்ணைபுரத்தில
கேட்டாக

பெண் : இத்தனை பேரு
சுத்தி வளைச்சும் உத்தம
ராசா உன்ன நினைக்கும்
பத்தினி உள்ளமையா

பெண் : வேண்ட ஒரு
சாமியுமில்ல விரும்பி
வந்தேன் உங்கள உன்ன
விட யாரும் இங்கே
உருப்படியா தோணல

குழு : நல்ல வாட்டமுள்ள
ஆம்பள உன்ன மறக்க
இவளுக்காகல

பெண் : வாரி கட்டி தோளில்
அணைச்சு வெச்சுக்கங்க வேற
கேக்கல மாறி நீங்க
போனீங்கன்னோ மனசு
இப்போ ஆறல

பெண் : தொட்டணைக்க
கூடாதா என்ன சூடி கொண்டா
ஆகாதா பட்டு துணி மேலாக்கு
அத தொட்டு இழுக்க கூடாதா

பெண் : உள்ளத எல்லாம்
சொல்லி முடிச்சேன் நல்ல
முடிவு சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லனுமா .........!

 

--- என்னை மானமுள்ள பொண்ணு இன்னு ---

  • கருத்துக்கள உறவுகள்

ccc.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : { முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே } (2)

பெண் : நாடகம் ஆடிய
பாடகன் ஓ நீ இன்று நான்
தொடும் காதலன் ஓ

ஆண் : நீ சொல்ல
நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு
கூறினேன்

பெண் : தேர் அழகும்
சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா
உடன் வாராதா

ஆண் : மான் அழகும்
கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா
இசை கூட்டாதா

பெண் : பாலாடை
இவன் மேலாட
வண்ண நூலாடை
இனி நீயாகும்

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே

ஆண் : நான் ஒரு
பூச்சரம் ஆகவோ ஓ
நீள் குழல் மீதினில்
ஆடவோ ஓ

பெண் : நான் ஒரு
மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில்
ஆடவோ

ஆண் : நான் படிக்கும்
தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும்
உந்தன் சீர் பாடும்

பெண் : பூ மரத்தில்
பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன்
பேர் பாடும்

ஆண் : மா கோலம்
மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும்
இந்த ஊர்கோலம்......!

 

--- மலை கோவில் வாசலில் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

ஆண் : சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

பெண் : ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில் கொண்டு வந்து போடும்

ஆண் : இதுதான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ண பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு

பெண் : வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு

பெண் : முதல் நாள் இரவில் தனியே
என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர்தான் கொஞ்சம் கவனி
என்று இழுத்தோடி வரும் கண்கள்

ஆண் : அருகில் மிக அருகில்
கண்டு அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும்
இன்று அலை பாய்ந்து வரும் உள்ளம் ......!

--- பறக்கும் பந்து பறக்கும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

பெண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன் வா

பெண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது

பெண் : ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்

பெண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்

பெண் : இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்.......!

--- பூவே பூச்சூடவா ---

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


ஆண் :
கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன

ஆண் : இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன கூந்தல்
கோர்வையில் குடிசைய
போட்டு கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு கண்ணே
தலையாட்டு காதல் விளையாட்டு

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன

ஆண் : கலகலவென ஆடும்
லோலாக்கு நீ பளபளவென
பூத்த மேலாக்கு நீ தளதளவென
இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென
பேசும் புல்லாக்கு நீ

ஆண் : அய்யாவே அய்யாவே
அழகியப் பாருங்க அம்மாவும்
அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க

ஆண் : தழுதழுவென கூந்தல்
கை வீசுதே துருதுருவென
கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண்
கூசுதே பகல் இரவுகள்
என்னை பந்தாடுதே

ஆண் : உன்னோட கண்
ஜாட இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க
நீ தானே பஞ்சாரம் உன்
மூச்சு காதல் ரீங்காரம் .........!

--- கத்தாழ கண்ணால ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண் : கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ஆண் : தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்

ஆண் : கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்

ஆண் : நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு

ஆண் : நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு

ஆண் : மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே
அறம் உண்டாகும் மண்மேலே

ஆண் : மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும் ........!

--- தல கோதும் இளங்காத்து ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!


ஆண் :
அனுபவிக்க காத்திருப்பது இளமை
அதை அறிந்தே வாழ்வில்

இன்பம் பெறுவது இனிமை

ஆண் : சுகம் தரும் இது சொர்க்கலோகமே
குழு : இது சொர்க்கலோகமே
ஆண் : தேன் சுவை பெருகவே
தேவி நீ ஓடி வா

ஆண் : லைப் இஸ் ஷார்ட் மேக் இட் ஸ்வீட்
கம் ஆன் டோன்ட் ஜெஸ்ட் இட் கம் ஆன் சுதா

ஆண் : நேற்று என்பது கடந்தகாலம்
குழு : லலாலா
ஆண் : நாளை என்பது வருங்காலம்
குழு : லலாலா

ஆண் : இன்று இனியது நிகழ்காலம்
இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்

ஆண் : சுதா ஏன் சைலண்ட்டா நிக்குற
கம் ஆன் நீயும் ஆடு

பெண் : மங்கை சொல்லும் ரகசியம்
மணந்து விட்டால் இலக்கியம்
பெண் : பருவம் காட்டும் அதிசயம்
பார்த்திட வேண்டும் அவசியம்

பெண் : மேலாடை கொஞ்சும் பாலாடை மேனி
ஆண் : பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனீ
பெண் : இணையாக என்னோடு துணையாகவே நீ
ஆண் : இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ

பெண் : மயங்க வைப்பது நெருக்கம்
மற்றும் பின்னே கிறக்கம்
மயங்க வைப்பது நெருக்கம்
மற்றும் பின்னே கிறக்கம்

ஆண் : தயங்கி நிற்பது வெட்கம்
அதை தடுத்திட வேண்டும் பெண் வர்க்கம்..........!

--- சுகம் தரும் இது சொர்க்கலோகமே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா

பெண் : பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு

ஆண் : குணமிருக்கு

பெண் : ஆணழகும்
சேர்ந்திருக்கு
கண்ணையா

ஆண் : கண்ணையா

பெண் : இந்த
ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

ஆண் : சொல்லையா

ஆண் : தாயாரின்
சீதனமும் ஓஓஓ
தம்பிமார் பெரும்
பொருளும் ஓஓஓ

ஆண் : மாமியார்
வீடு வந்தால் போதுமா
அது மானாபி மானங்களை
காக்குமா மானாபி மானங்களை
காக்குமா

பெண் : { மானமே
ஆடைகளாம் மரியாதை
பொன் நகையாம் } (2)

பெண் : நாணமாம்
துணை இருந்தால்
போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்
பெருமை தோன்றுமே

ஆண் : அங்கம்
குறைந்தவனை…
அங்கம் குறைந்தவனை…
ஓஓஓ… அங்கம்
குறைந்தவனை

ஆண் : அழகில்லா ஆண்
மகனை மங்கையர்கள்
நினைப்பதுண்டோ
பொன்னம்மா

ஆண் : வீட்டில்
{ மணம் பேசி
முடிப்பதுண்டோ
சொல்லம்மா } (2)

பெண் : { மண் பார்த்து
விளைவதில்லை
மரம் பார்த்து
படர்வதில்லை } (2)

பெண் : கன்னியரும்
பூங்கொடியும் கண்ணையா
{ கண்ணிலே களங்கமுண்டோ
சொல்லையா } (2) ........!

--- தாழையாம் பூ முடிச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

thatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : நாளைப் பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா..ஆஆ…

ஆண் : பசி என்று வந்தவர்க்குப்
புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து
பக்கத்தில் வருவானடா

ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன்
நீதியும் ஒன்றேயடா……!

ஆண் : போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை
எய்தவன் மடிவானடா

ஆண் : சத்திய சோதனையை
சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே
வேதத்தின் முடிவாமடா……..!

--- நாளைப் பொழுது உந்தன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : அடியே மனம்
நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு
நீ சொக்காதடி தாப்பாள
போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

ஆண் : வெட்கம் என்னடி
துக்கம் என்னடி உத்தரவ
சொன்ன பின்பு தப்பு
என்னடி

ஆண் : முத்தம் என்னடி
முத்து பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன
வந்து கட்டிக்கொள்ளடி

பெண் : { மனம் கேட்காத
கேள்வியெல்லாம்
கேட்குதய்யா பாக்காத
பார்வையெல்லாம்
பாக்குதய்யா } (2)

பெண் : காலம் கடக்குது
கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன்
கைய கொஞ்சம் புடி

ஆண் : தாப்பாள
போடாம கேட்பார
கேளாம கூப்பாடு
போடாதடி அடியே
மனம் நில்லுனா
நிக்காதுடி

ஆண் : கட்டிலிருக்கு
மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட
பின்பு சொர்க்கம்
இருக்கு

பெண் : கிட்டயிருக்கு
கட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள
தட்டி முழக்கு

ஆண் : தூங்காம
நான் காணும்
சொப்பனமே
பெண் : உனக்காக
என் மேனி அா்ப்பனமே

பெண் : சாய்ந்து
கெடக்குறேன் தோள
தொட்டு அழுத்திக்க
சோலைக்கிளி என்ன
சொக்க வச்சுப்புடி

ஆண் : இச்சை என்பது
உச்சம் உள்ளது இந்திரன
போல ஒரு மச்சம்
உள்ளது

பெண் : பக்கம் உள்ளது
பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம்
மட்டும் மிச்சம்
உள்ளது

ஆண் : இது பாலாக
தேனாக ஊறுவது
பெண் : பாராத மோகங்கள்
கூறுவது

ஆண் : பாசம் இருக்குது
பக்கம் வந்து அணைச்சிக்க
பெண் : காலு தவிக்குது
பக்குவமா புடி ---

--- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

ஆண் : சொன்ன என்
சொல்லில் இல்லை
உண்மைகள் ஏனோ
கோபங்கள் சொல்லடி

ஆண் : உன்னை
தீண்டாமல் உன்னை
பார்க்காமல் கொஞ்சி
பேசாமல் கண்ணில்
தூக்கமில்லை

ஆண் : என்னுள் நீ
வந்தாய் நெஞ்சில்
வாழ்கின்றாய் விட்டு
செல்லாதே இது
நியாயமில்லை

பெண் : கண்ணை மூடி
கொண்டாலும் உன்னை
கண்டேன் மீண்டும் ஏன்
இந்த ஏக்கம்

பெண் : வெள்ளை மேக
துண்டுக்குள் எழும் மின்னல்
போல் எந்தன் வாழ்வெங்கும்
மின்னல்

பெண் : என் இதழ்
மேல் இன்று வாழும்
மௌனங்கள் என் மனம்
பேசுதே நூறு எண்ணங்கள்

பெண் : சொன்ன
சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே தூரம்
தள்ளி சென்றாலும் உயிர்
தேடுதே

பெண் : ஆசை வார்த்தை
எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில்
பாய செய்கிறாய்

பெண் : என்னுள் நீ
வந்தாய் இன்னும்
வாழ்கின்றாய் உந்தன்
சொல்லாலே தூரம்
உண்டாக்கினாய்

பெண் : என்னை
தீண்டாதே என்னை
பார்க்காதே ஒன்றும்
பேசாதே போதும் துன்பங்கள்

ஆண் : என்னை விட்டு
செல்லாதே எந்தன்
அன்பே வேண்டும் உன்
காதல் ஒன்றே

ஆண் : உன்னை மட்டும்
நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்

ஆண் : என் உயிர்
காதலை உந்தன்
காதோரம் ஒரு
முறையாவது
சொல்ல நீ வேண்டும்

ஆண் : எந்தன் ஆசை
முத்தங்கள் உன்னை
சேருமோ இல்லை காதல்
யுத்தங்கள் இன்னும் நீளுமோ

ஆண் : உந்தன் கண்ணில்
நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில்
பாரம் வேண்டாமே என்னை பாரடி ........!

--- என்னை கொள்ளாதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

பெண் : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி நெஞ்சைத் தொட்டு
பின்னிக்கொண்ட கண்ணன்
ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி

பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

பெண் : சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும்
தருணம் சொர்க்கம்
சொர்க்கம் என்னை
சீராட்ட வரணும் பொன்னி
பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ
ஆள வரணும்

பெண் : பெண் மனசு
காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து
விடு என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை கண்டு
கொஞ்சம் காப்பாற்றி
தந்து விடு

ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி

ஆண் : மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான
மலரே ஊஞ்சல் ஊஞ்சல்
தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி
போலாடும் அழகே கண்ணால்
கண்ணால் மொழி நீ பாடு குயிலே

ஆண் : கட்டுக்குள்ள
நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே அக்கறையும்
இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த
பைங்கிளியே

ஆண் : என்னில் நீயடி
உன்னில் நானடி என்னில்
நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும் ........!

--- என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து
யோசிக்கிறேன் அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்

பெண் : கேட்டுக் கேட்டு நான்
கிறங்குகிறேன் கேட்பது
எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை

பெண் : புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி

பெண் : உள்ளே உறங்கும்
ஏக்கத்திலே உனக்கும்
எனக்கும் சாிபாதி

பெண் : கண்களை வருடும்
தேனிசையில் என் காலம்
கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்

பெண் : உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா

பெண் : இரக்கம் இல்லா
இரவுகளில் இது எவனோ
அனுப்பும் ஆறுதலா

பெண் : எந்தன் சோகம்
தீா்வதற்கு இதுபோல்
மருந்து பிறிதில்லையே

பெண் : அந்தக் குழலை
போல் அழுவதற்கு
அத்தனை கண்கள்
எனக்கில்லையே .........!

--- எவனோ ஒருவன் வாசிக்கிறான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

பெண் : வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க

பெண் : அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது .........!

--- மாலையில் யாரோ மனதோடு பேச ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.