Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

குழு : கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க

குழு : மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க

குழு : திருமகள் அருள் கொண்டு
பொருள் கொண்ட
திருவருட்செல்வரே வாழ்க வாழ்க

குழு : இயல் இசை நாடகம்
முத்தமிழ் காக்கின்ற
தலைவனே வாழ்க வாழ்க

குழு : குடி மக்கள் மனம் போல
முடியாட்சி காண்கின்ற
கொற்றவா வாழ்க வாழ்க

குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க
குடி வாழ்க குலம் வாழ்க
நலமும் பல்லாண்டு வாழ்க........!

--- மன்னவன் வந்தானடி தோழி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : வாழ்க்கையை தேடி
நானும் போறேன் காண்டுல
பாடும் பாட்டுக்காரன் போதையில்
பாடும் சோகப்பாட்ட சோடாவ
கலந்து பாடப்போறேன்

ஆண் : மாமன் ஓட்டாண்டி
பொிய லூசாண்டி அடிவாங்கியே
நா ஸ்ட்ராங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும்
தான் தாண்டி போராடுவேன்
நா வெறியான விருமாண்டி

ஆண் : { அட ஊதுங்கடா
சங்கு நா தண்டச்சோறு
கிங்கு தமிழ் ஸ் மை மதா்
டங் ஐ எம் சிங்கிள் அன்ட்
ஐ எம் யங்கு } (2)

ஆண் : ஊது சங்கு நான்
தான்கிங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான்
தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு

ஆண் : எருமைக்கு கூட
புளுக்ராஸ் இருக்கு எனக்காக
யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும்தான்
ஆச இருக்கு மானம் ரோசம்லாம்
டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக்
பூ கூட வாடி போயாச்சுடா வெளிய
சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா......!

 

--- அட ஊதுங்கடா சங்கு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பூவாசம் புறப்படும்
பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ
என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும்
ஓவியம் நீயடி

ஆண் : ம்ம்ம்ம் புள்ளி
சேர்ந்து புள்ளி சேர்ந்து
ஓவியம் உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து காவியம்

பெண் : கோடு கூட
ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல்
என்று ஆகுமே

ஆண் : ஒரு வானம்
வரைய நீல வண்ணம் 
நம் காதல் வரைய
என்ன வண்ணம்

பெண் : என் வெட்கத்தின்
நிறம் தொட்டு விரல்
என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா….....!

---பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஏய்...
என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ

என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற
 
வண்டா சுத்தும் காத்து
என்ன ரெண்டா உடைக்குதே
சும்மா நின்ன காதல்
உள்ள நண்டா துளைக்குதே...
 
தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா பறவையே
பறந்து போவமா மரணமே
மறந்து போவமா
உப்பு காத்துல
இது பன்னீர் காலமா.......!
 
---என்னடி மாயாவி நீ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நினைவோ ஒரு
பறவை விரிக்கும் அதன்
சிறகை பறக்கும் அது
கலக்கும் தன் உறவை

ஆண் : ரோஜாக்களில்
பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்ன தேன்

பெண் : அதுவல்லவோ
பருகாத தேன் அதை
இன்னும் நீ பருகாததேன்

ஆண் : அதற்காகத்தான்
அலைபாய்கிறேன்
பெண் : வந்தேன்
தரவந்தேன்

பெண் : பனிக்காலத்தில்
நான் வாடினால் உன்
பார்வை தான் என்
போர்வையோ

ஆண் : அணைக்காமல்
நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி
சாய்கிறேன்

பெண் : மடி என்ன
உன் மணி ஊஞ்சலோ
ஆண் : நீ தான் இனி
நான் தான்.......!

--- நினைவோ ஒரு பறவை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
 

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ.......!
 

--- வைகைக் கரை காற்றே நில்லு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஏ…ஏ…ஏ…ஏ….
{ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே…} (2)
அடி நானே ஆண்குயிலே

ஆண் : அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற

ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா} (2)

ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன

பெண் : தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட

பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீ தான் ஆண்குயிலே

ஆண் : ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண் : நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு

ஆண் : வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்

பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது......!

--- ஆடி மாச காத்தடிக்க---

  • Like 1
Posted

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
பறவைகளில் அவள் மணி புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
பறவைகளில் அவள் மணி புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தாவிடும் ஓடையை தேக்கிட
காதலின் வாய் மொழி தேங்கிட
வேதனை வாசமோ…..ஓ…..ஓ……ஓ…..

ஆண் : தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

ஆண் : கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தேதான் துடிச்சா
கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சா
கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சா

ஆண் : கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி புட்டா ஒருத்தி
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி புட்டா ஒருத்தி.......!

--- காதல் அரை ஒன்னு விழுந்துச்சு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
ஆண் : பூவோடு ஆ……ஆ…..ஆ……தேனாட
பெண் : தேனோடு ஓ……ஓ…..ஓ….. நீயாடு

பெண் : ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
 

ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க
 

பெண் : வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது
ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே
 

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண் : காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
 

பெண் : ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
 

ஆண் : கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது
பெண் : உறவும் நெருங்குது நெருங்குது
உலகம் மயங்குது உறங்குது
ஹோ……ஓஓ…..ஓஓ….ஓஓ……ஓஓ…...!

--- மாசி மாசம் ஆளான பொண்ணு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : வடக்கே கேட்டு பாரு
என்ன பத்தி சொல்லுவான்
பாம்பே அல்வா போல
என் பேர்தான் மெல்லுவான்

பெண் : எவனும் ஏறலாமா
கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம்
சீரிடுவா ஹிஸ்சுனு

பெண் : மல்லிகா நீ கடிச்ச
நெல்லிக்கா போல் இனிப்பா
பஞ்சன நீ விரிச்ச
பாட்டு தான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச
கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா

பெண் : புடிச்சா வச்சிகையா
மனசுல தச்சுகையா
வெடிச்ச வெள்ளரிக்கா
வேண்டாத ஆள் இருக்கா
மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா.......!

--- கலாசலா கலசலா கலாசலா கலசலா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!  

பெண் : நீர்வீழ்ச்சி போலே
நின்றவன் நான் நீந்த ஒரு
ஓடை ஆனாய் வான் முட்டும்
மலையை போன்றவன் நான்
ஆட ஒரு மேடை ஆனாய்

ஆண் : என்னுள்ளே என்னை
கண்டவள் யாரென்று எனை
காணச்செய்தாள் கேளாமல்
நெஞ்சை கொய்தவள் சிற்பம்
செய்து கையில் தந்தாள்

பெண் : யுகம் யுகம்
காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன்
நெஞ்சம் மட்டும் போதும்

ஆண் : மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும்
வாசம் வீச வந்தாளே

ஆண் : ஹே ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா
பெண் : ஹே ஐ என்றால்
அது தலைவன் என்றால்
அந்த ஐகளில் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ
என வியக்கும் ஐகளுக்கெல்லாம்
விடுமுறையை அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்.......!

--- பூக்களே சற்று ஓய்வெடுங்கள்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

.

பெண் மற்றும் குழு :
{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)

பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்

பெண் : கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

பெண் : கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

பெண் : காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்.......!


--- என்னுள்ளே என்னுள்ளே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!  

சொல்லிட்டாலே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேரொரு வார்த்தையே கேட்டிடவும் என்னி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
 
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேரொரு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
 
அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
 
எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்......!
 
---சொல்லிட்டாளே  இவ காதல---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
 
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
 
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
 
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
 
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி......!
 
---ஆனந்த யாழை மீட்டுகிறாய்---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஹே கொட்டா
பாக்கும் கொழுந்து
வெத்தலையும் போட்டா
வாய் சிவக்கும்

பெண் : மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்

பெண் : ஹே நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும் நானும்
செவக்க மாப்பிள்ளை வேணும்

பெண் : தாலி கட்டியதும்
தாளிக்க வேணும்

ஆண் : தாமர பூவும்
இருக்கு சந்தன பூவும்
இருக்கு ரெண்டுல
ஒன்னு பாக்கட்டுமா

பெண் : ஹா கற்பனை
எல்லாம் உனக்கு கட்சிதமாக
இருக்கு கண்டதையெல்லாம்
கழிக்கட்டுமா

ஆண் : ஹே பொத்தி
மறைச்ச ஆசைகளாலே
பொட்டு துடிக்குது
புருவத்தின் மேலே

பெண் : ஹான் கத்திரி
வெயிலு கொதிப்பது
போலே காய்ச்சல்
அடிக்குது இடுப்புக்கு
மேலே

ஆண் : காதல் பொறப்பது
கழுத்துக்கு கீழே

பெண் : ஹே வெத்தல
போட்ட உதட்டில் நித்திரை
போட துணிஞ்சி சித்திரவதை
செய்ய போறியா

ஆண் : ஹே வெத்தல
கையில் எடுத்து முன்னும்
பின்னும் தொடச்சி காம்பு
கிள்ளி தாரேன் வாரியா

பெண் : ஏ சுத்தி வருவது
சோதிக்க தானே

பெண் : சுந்தரி அழகு
சாமிக்கு தானே

ஆண் : கற்பூரம் எதுக்கு
காமிக்கதானே கட்டிலும்
எதுக்கு சாதிக்க தானே

பெண் : சரணம் முடிஞ்சா
பல்லவி தானே......!

--- கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பாவி பயல
இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம
ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம
நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா
உன் நினைவுலதான்
நான் குடியிருந்திடத் தான்
என தெரியுதடா
ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம
பாத்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம

கோடி சென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான்
நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான்
கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால... ஹேய்.
கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ...ஹா.ஹ...

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி.....!

---டார்லிங் டம்மக்கு---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : காட்டு பயலே
கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல
தூக்கி போக வந்த பையடா நீ

பெண் : கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ

பெண் : என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ

பெண் : யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி…...!

--- காட்டு பயலே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்
 
இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல
வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல
உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்
 
இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குதே
உன்னை இழுக்க என்ன இழுக்க
என் மனசு நெறையுமே
இந்த மீன் உடம்பு வாசன
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்
 
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்.......!
 
--- இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஹோய் { நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா } (2)

ஆண் : { அஞ்சி அஞ்சி
வாழ்ந்தது போதும் ராஜா } (2)

ஆண் : நீ ஆற்று
வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா

ஆண் : { அடிமையின்
உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு } (2)

ஆண் : { கொடுமையை
கண்டு கண்டு பயம் எதற்கு } (2)
நீ கொண்டு வந்ததென்னடா
மீசை முறுக்கு ஹோய்

ஆண் : { அண்ணாந்து
பார்கின்ற மாளிகை
கட்டி அதன் அருகினில்
ஓலை குடிசை கட்டி } (2)

ஆண் : { பொன்னான
உலகென்று பெயருமிட்டால் } (2)
இந்த பூமி சிரிக்கும் அந்த
சாமி சிரிக்கும் ஹோய்

ஆண் : { உண்டு உண்டு
என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால்
பூமியேது கவலை விடு } (2)

ஆண் : { ரெண்டில் ஒன்று
பார்பதற்கு தோளை நிமிர்த்து } (2)
அதில் நீதி உன்னை தேடி
வரும் மாலை தொடுத்து......!

--- ஹோய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…

ஆண் : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

ஆண் : உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்

ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

பெண் : இரு கைகள் தீண்டாத
பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

ஆண் : மலா் மஞ்சம் சேராத
பெண்ணிலா எந்தன் மாா்போடு
வந்தாடுதோ

பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…...!

--- புது வெள்ளை மழை ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { பெண்ணல்ல
பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ கண்ணல்ல
கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ } (2)

ஆண் : சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

ஆண் : சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

ஆண் : தென்றலைப் போல
நடப்பவள் என்னைத் தழுவ
காத்து கிடப்பவள் செந்தமிழ்
நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு
வாய்த்த மருமகள்

ஆண் : சிந்தையில் தாவும்
பூங்கிளி அவள் சொல்லிடும்
வார்த்தை தேன்துளி அஞ்சுகம்
போல இருப்பவள் கொட்டும்
அருவி போல சிரிப்பவள்

ஆண் : மெல்லிய தாமரை
காலெடுத்து நடையை பழகும்
பூந்தேரு மெட்டியை காலில்
நான் மாட்ட மயங்கும் பூங்கொடி.......!

--- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே

ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெண் : மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்

ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்

பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால

ஆண் : பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது

பெண் : பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு

ஆண் : காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே......!

--- கொடியிலே மல்லிகைப்பூ ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல

நான் பதினெட்டு பட்டிக்கு ராசா
என் நகம் பட்டு மலராதோ ரோசா
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி
என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விச மாட்டேன்

நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
(வச்சிக்க..)

மூவாறு நீயே அட நாளாறு நானே
பசி கோளாறு தானே வந்துடுச்சி
தேனாகத்தானே விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
வேனா வெக்கப்படும் கிளியே
பூனா தொட்டுடுச்சி உரிய
மீச குத்திடுச்சு பயலே
ஆசை பொத்தி வச்ச புயலே

நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாரேன்
நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாரேன்
மல மேலே மழை தூர
அல மேல அல மோதும்

யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
மாரோடு நானே தினம் போராடுகிறேனே
பசி தாளாமல்தானே தின்றால் என்ன
வேரோடு நீயே விழி கோடாளியாலே
என் சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன்

கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வரியா
பஞ்சி பஞ்சி மிட்டாஉ தாரியா
வாடி வாடிப்பட்டி தவுலா
தேடி செந்துக்கடி நிழலுல

ஒரு பச்சைக்கிளி போல
நான் தொட்டுகவா தோள
இரு வெட்டுக்கிளி போல
கண்ணு வெட்டுதடி ஆள
கரும்போரம் எறூம்பேற
நரம்போரம் குறும்பேர........!

 

--- யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : வசீகரா என்
நெஞ்சினிக்க உன் பொன்
மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள்
தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே ஏங்குகிறேன்
தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

பெண் : அடை மழை
வரும் அதில் நனைவோமே
குளிா் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய் அது
தொிந்தும் கூட அன்பே மனம்
அதையேதான் எதிா்பாா்க்கும்
எங்கேயும் போகாமல் தினம்
வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

பெண் : தினம் நீ குளித்ததும்
என்னை தேடி என் சேலை
நுனியால் உந்தன் தலை
துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே
திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே அது
கவிதை யாரேனும் மணி
கேட்டால் அதை சொல்லக்கூடத்
தொியாதே காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே......!

---  வசீகரா என் ---




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.