Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா

பெண் : மூக்கு கீழ
ஆண் : பலே பலே
பெண் : முத்தம்கொடு
ஆண் : பலே பலே
ஆண் : கடிச்சுப்புட்டா
ஆண் : பலே பலே
கத்த கூடாதே

ஆண் : முந்தானையில்
ஆண் : பலே பலே
மூட்டை கட்டு
ஆண் : பலே பலே
பெண் : முள்ளு குத்தும்
ஆண் : பலே பலே
ரத்தம் வராதே
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா கம் ஆன் கம் ஆன்
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா கம் ஆன் கம் ஆன்

ஆண் : டோண்ட்
அங்கிரி மீ ராஸ்கல்

பெண் : ஹே மைக்ரோ
மினி போடட்டா பூனை
நட நடக்கட்டா ஜோலிக்கே
பீஜேன்னு சோக்கா பாடட்டா

ஆண் : ஹே இங்கிலிபீசு
வேணா டி ஹிந்தி சிரிப்பு
வேணா டி கரகாட்டம்
ஆடிக்கிட்டே தமிழில்
பாடேன்டி

பெண் : விண்ணோடும்
ஆண் : பலே பலே
முகிலோடும்
ஆண் : பலே பலே
விளையாடும்
ஆண் : பலே பலே
வெண்ணிலாவே
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

 

பெண் : கம்பரசம் தரட்டுமா
இன்பரசம் தரட்டுமா நயாகரா
போல நானும் பொங்கி வரட்டுமா

ஆண் : ஹே சொன்ன
தெல்லாம் சந்தோஷம்
சொல்லி தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தா
டபுள் சந்தோஷம்

பெண் : தை பொறந்தா
ஆண் : பலே பலே
வழி பொறக்கும்
ஆண் : பலே பலே
பொங்கலுக்கு
ஆண் : பலே பலே
பரிசம் போடு
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி.......!

--- ஹே வாடா மாப்பிள்ள ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : { ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2)

ஆண் : சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

ஆண் : வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக
சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே காணுகின்ற
காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்

ஆண் : காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி.......!

--- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே
 
ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)
 
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)......!
 
---மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ---
.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : மின்சார பூவே பெண் பூவே…
மெய் தீண்ட வேண்டும்…
என்னோடு வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

ஆண் : மாலையில் பொன் மார்பினில்…
நான் துயில் கொள்ள வேண்டும்…
காலையில் உன் கண்களில்…
நான் வெயில் காய வேண்டும்…

ஆண் : சகியே சகியே சகியே…
என் மீசைக்கும் ஆசைக்கும்…
பூசைக்கும் நீ வேண்டும்…

பெண் : மின்சார கண்ணா என் மன்னா…
என் ஆணை கேட்டு…
என் பின்னே வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

பெண் : கூந்தலில் விழும் பூக்களை…
நீ மடியேந்த வேண்டும்…
நான் விடும் பெருமூச்சிலே…
நீ குளிர் காய வேண்டும்…

பெண் : மதனா மதனா மதனா…
என் பூவுக்கும் தேவைக்கும்…
சேவைக்கும் நீ வேண்டும்…

பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்…
உன்னிடத்தில் கண்டேன்…
என் பாதத்தில் பள்ளிகொள்ள…
உனக்கொரு அனுமதி தந்தேன்…

பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்…
உன்னிடத்தில் கண்டேன்…
என் பாதத்தில் பள்ளிகொள்ள…
உனக்கொரு அனுமதி தந்தேன்…

பெண் : என் ஆடை தாங்கிக்கொள்ள…
என் கூந்தல் ஏந்திக்கொள்ள…
உனக்கொரு வாய்ப்பல்லவா…

பெண் : நான் உண்ட மிச்சபாலை…
நீ உண்டு வாழ்ந்து வந்தால்…
மோட்சங்கள் உனக்கல்லவா…

பெண் : வானம் வந்து வளைக்கிறதே…
வணங்கிட வா…......!

--- மின்சார பூவே பெண் பூ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது } (2)

ஆண் : { ராணி உந்தன்
மேனி என்ன ராஜ வீதி
தோற்றம் தானோ } (2)

பெண் : { கேள்வி கேட்ட
மன்னன் மேனி தேவன்
கோவில் தோற்றம்
தானோ } (2)

பெண் : வென்பட்டு
மேனியில் கண்படும்
வேளையில் மூடுது மேலாடை

ஆண் : கண் படும்
வேளையில் கை
படுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்

பெண் : இலைகளில்
ஆடும் கனியாட்டம்

ஆண் : கண்ணோட்டம்
பெண் : என் தோட்டம்

பெண் : தென்மலை
மேகங்கள் பொன்வலை
போட்டன கூந்தலில் நீராட

ஆண் : மின்னலில்
மேனியும் பின்னலில்
கூந்தலும் மிதப்பது
யாராட புது மழை
போலே நீரோட

பெண் : அதிசய
நதியில் நானாட

ஆண் : நீயாட

பெண் : ஆஹா தேனோட .......!

--- மாணிக்க தேரில்மரகத கலசம் மின்னுவதென்ன ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

குழு : எங்கே என் புன்னகை
ஓ எவர் கொண்டு போனது
ஓ தீ பட்ட மேகமாய் ஹா
என் நெஞ்சு ஆனது ஹா
மேக தீ அணைக்க வா வா
வா வா தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

பெண் : { மழை நீரில்
தேகமோ தெப்பம் போல்
நனைந்தது தெப்பம் போல்
நனைந்ததில் வெட்கம் ஏன்
கரைந்தது } (2)

பெண் : என் நாடி போலவே
என் நெஞ்சம் குலைந்தது
நீா் செய்யும் லீலையே
நேர் செய்ய மனம் ஏங்குது

பெண் : முகிலாயம்
நனைந்ததை முத்ததால்
காயவை எந்தன் தனிமையை
தோள் செய்யவா ஓ

குழு : தாளத்தில் நீ
சேரவா ஓ தாளிசை
நான் பாடவா

ஆண் : பனி சிந்தும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது
உந்தன் மேனியோ கண்ணே
உன் நெஞ்சமோ கடல்
கொண்ட ஆழமோ நம்
சொந்தம் கூடுமோ ஒளியின்
நிழல் ஆகுமோ

ஆண் : காதல் மழை
பொழியுமோ கண்ணீரில்
நிரம்புமோ அது காலத்தின்
முடிவல்லவோ ஓ தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா.......!

--- எங்கே என் புன்னகை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன் குத்தமா } (2)

 

ஆண் : அடி ஒத்தையில
தனியாக மெத்தையில
தூங்காதே அக்கா மகன்
வாரான்டி அழைச்சுப் போக

குழு : சித்திரைனா வெயில்
அடிக்கும் காா்த்திகைனா
மழையடிக்கும் அடாா்
புடாா் கடாா் தடாா்
மாப்பிள்ளைதான் தங்கம்

குழு : ஆடியின்னா
காத்தடிக்கும் மாா்கழின்னா
ஹா ஹா ஹா டமால் டமால்
கபால் கபால் மாப்பிள்ளைதான்
சிங்கம்

ஆண் : ஹோ… மருதாணி
தோட்டத்துக்கே அட மருதாணி
யாரு வச்சா ஹோ தேரா தேரா
இவ வாரா வாரா

பெண் : ஹோ.. காட்டு
குயிலும் கட்டிக்கத்தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஹோய் ஜோரா ஜோரா வரும்  வீரா வீரா

ஆண் : நான் அக்கரையில்
இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சக்கரையா
இருப்பாளே ஆசையாலே.........!

--- மதுரைக்கு போகாதடி அங்க ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தூது வருமா
தூது வருமா
கனவில் வருமா
கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை
சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா
முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
 
நல்லதே நடக்கும் என்றே
சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே dragon படமும்
சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம்
பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே
என்னைத் தூக்கி சில்லவா........!
 
--- தூது வருமா தூது வருமா ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : வாய்பாட்டு பாடும்
பெண்ணே மெளனங்கள்
கூடாது வாய் பூட்டு சத்தம்
எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

பெண் : வண்டெல்லாம்
சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம்
போட்டால் வண்டுகே கேட்காது

ஆண் : ஆடிக்கு பின்னாலே
காவேரி தாங்காது
பெண் : ஆளான பின்னாலே
அல்லி பூ மூடாது
ஆண் : ஆசை துடிக்கின்றதோ

ஆண் : உன் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் உன்
வீட்டு தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பெயர் சொல்லுமே

பெண் : சொல்லுக்கும்
தெரியாமல் சொல்லத்தான்
வந்தேனே சொல்லுக்குள்
அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

ஆண் : சொல்லுக்கும்
அர்த்ததுக்கும் தூரங்கள்
கிடையாது சொல்லாத
காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

பெண் : எண்ணிக்கை
தீர்ந்தாலும் முத்தங்கள்
தீராது
ஆண் : எண்ணிக்கை
பார்த்தாலே முத்தங்கள்
ஆகாது
பெண் : ம்ம் அனுபவமோ.......!

--- என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
 
வாராயோ வாராயோ Monalisa
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
 
இங்கே இங்கே ஒரு Marilyn Monroe நான்தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
 
ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு Cindrella.......!
 
--- வாராயோ வாராயோ காதல்கொள்ள ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : எத்தனை முகமோ உனக்கு
தினம் எத்தனை குணமோ எனக்கு
அத்தனையும் பழங்கணக்கு
இன்று சமரசமானது வழக்கு….
 

பெண் : இதயம் எதையோ நினைக்கின்றது
என் எண்ணம் எங்கோ பறக்கின்றது
எதையும் உன்னிடம் மறைக்கவில்லை
அது இன்னும் உனக்கேன் புரியவில்லை

பெண் : அன்னை ஏற்றிய தீபமிது
உன் அன்னை ஏற்றிய தீபமிது
இதை அன்றே இறைவன் எழுதியது
உன் மனம் இதனை அறியாது
ஊமையின் பாஷை புரியாது.


பெண் : மாதா என்பவள் தாயல்ல
உன் மனைவி என்பவளும் துணையல்ல
யார்தான் உனக்கு உறவென்றால்
இனி நான்தான் நான்தான் உலகெல்லாம்........!
 

--- எத்தனை முகமோ உனக்கு ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

என்னுயிர் என்றும் உன்னை சேரும்

எத்தனை காலம் வாழ்ந்தாலும்

என்னுயிர் சுவாசம் உனதாகும்

 

உன் மூச்சில் இருந்து

என் மூச்சை எடுத்து

நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே

 

நீ வேணுண்டா என் செல்லமே

மனசு குள்ளே வாசல் தெளித்து

உந்தன் பெயரை கோலம் போட்டு

காலம் எல்லாம் காவல் இருப்பேனே

உயிர் கரையிலே உன் கால் தடம்

மன சுவரிலே உன் புகை படம்

 

உன் சின்ன சின்ன மீசையினை

நுனி பல்லில் கடிதிளுப்பேன்

உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி

தீர்த்தம் என்று குடிதுக்கொல்வேன்

 

என் மேலே பாட்டெழுது

உயிர் காதல் சொல் எடுத்து

நம் உயிரை சேர்த்தெடுத்து

அவன் போட்டான் கை எழுத்து......!

 

--- எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
 
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
 
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்
 
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாலே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடையே கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி.......!
 
--- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெதவெதமாய் இனிச்சிருக்கும்
வெடலப்பொண்ணு நானு
விருப்பப்பட்டு நெறுங்கி... வந்தா
வெலக்கணைக்குன்னு
வாம்மான்னு நீ சொன்னா
தருவேனே தே... னு
வட்டியோட அசலவாங்கும்
அதுதானே சீ... னு
 
ஏன்டா எலி புடிக்கிற
ஈயா இலை விரிக்கிற
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி
வான்டா சுழல வைக்கிற
வாகா வழி மறிக்கிற
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி

ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற
ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும்
பாசி பயிறக்கண்ணுல
பாதாம் பறுப்பு செய்யிற
ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும்
மத்தாக மனச நீ கடையாம
என்ன மாராப்பில் பதம்பாரு
சொத்தாக சகலமும் தரப்போறேன்
மத்த சாப்பாட்டில் பசியா... ற
உசுரே... கேக்கா...
ஒன நான் தூக்க வாரேன்
மாமன் கூத்தடிக்க
 
பாலும் கொதிச்சிருக்குது
பாயும் விரிச்சிருக்குது
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா?
காயும் கனிஞ்சிருக்குது
பாயும் நனஞ்சிருக்குது
ஆனா அது ஒனக்குன்னு புரியாதா?
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம
உன்ன கட்டோட மடிப்பேனே...
என் கண்டாங்கி பொடவையும் கசங்காம
தொட மல்லாந்துக்கிடப்பேனே...
ஒடனே வாடி... ஒழுங்கா தாடி...
மூடி போட என்னாதடி........!

--- லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி ---

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே
குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே

ஆண் : மருதையில வாங்கித் தந்த
வளவி ஓடையலையே
குழு : மல்லு வேட்டி மத்தியில
மஞ்சக் கர மாறலையே

ஆண் : அந்தக் கழுத்து தேமலையும்
காதோர மச்சத்தையும்
பாப்பதெப்போ
குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ
பௌர்ணமியும் வாரதெப்போ

ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும்
கேட்பதெப்போ
குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரதண்டும் பூப்பதெப்போ

ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
கரிச்சான்குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா
தொணையத்தான் காணோமின்னு

ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ…
குழு : {கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்‌துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)......!

--- ராசாத்தி என் உசுரு என்னதில்ல ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தும்பி பறந்ததுனா
தூரத்துல மழை அடிக்கும்
கம்பு விளைஞ்சதுன்னா
மேகத்துல இடி இடிக்கும்

ஆண் : பூம் பூம் மாடு தலையாட
பொண்ணும் பையனும் விளையாட
கூடி நிக்கிற ஊரு சனம்
கொண்டாட போகுதையா

ஆண் : ராசாத்தி
ராசாத்தி போகாத சூடேத்தி

பெண் : பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி

ஆண் : மாராப்பு போட்ட
என் மறிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காி விருந்தே

பெண் : பொல்லாத ஆச
எல்லாம் உம் முன்னால
கொட்டாயி போடா

ஆண் : சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட

பெண் : ஒதட்டுக்கு சிாிப்பு
உரலுக்கு இடிப்பு உன்னால
ஆனேனே செவப்பு உயிா்
போனாலும் போகாதோ நெனப்பு

ஆண் : இடுப்புக்கு மடிப்பு
இளமைக்கு வனப்பு உன்
மேல உண்டாச்சு மதிப்பு
ரதி தேவி நீ என்னோட சிறப்பு

ஆண் : மஞ்சளும் குங்குமம்
தொட்டு வையி நீ மல்லிக பூ
வாங்கி கட்டி வையி

ஆண் : அச்சத தட்டோட
பொட்டு வையி உன்சீதனம்
நான் இன்னு தட்டு வையி

குழு : டமுக்கு டப்பாங்குத்து
நீ அய்யாவோட ஊரு சுத்து
ஏன் குமுக்கு கும்மாங்குத்து
நீ கூட வந்தா தானே கெத்து.......!

 

--- ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் :  ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

 ஆண் :{ இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)

பெண் : மௌனமே
சம்மதம் என்று
ஆண் : 
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : 

பெண் : மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு

 

பெண் : { வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)

ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
பெண் : 
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
பெண் : ஆ  நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன் .....!
 

--- ரோஜாவை தாலாட்டும் தென்றல் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

ஆண் : என் கண்மணி காதோடு சொல்…
உன் முகவரி… ஓ ஓ…
எந்நாளுமே என் பாட்டுக்கு…
நீ முதல் வரி… ஹே ஹே ஹே…

ஆண் : ஏ உன்னுடைய நெற்றி…
உன்னை பற்றி கூறுதே…
உள்ளிருக்கும் பொட்டு…
உந்தன் குட்டு சொல்லுதே…

ஆண் : என்னுடைய பார்வை…
கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ… ஓஓ…
எனக்கிருக்கும் சக்தி…
பரா சக்தி புரிஞ்சுக்கோ…

ஆண் : கால் கொலுசுதான்…
கல கலக்குது…
கையின் வளையல்…
காது குளிர கானம் பாட… ஹே ஹே…

ஆண் : போட்டிருக்கும் கோஷா வேஷம்…
பேஷா பொருந்துதே…
பெண் அழகு மொத்தம்…
காண சித்தம் விரும்புதே…

ஆண் : வெண்ணிலாவின் தேகம்…
மூடும் மேகம் விலகுமா…
வண்ண உடல் யாவும்…
காணும் யோகம் வாய்க்குமா…

ஆண் : கொஞ்சம் கொழுப்பு…
கொஞ்சம் திமிரு…
எனக்கும் இருக்குஉனக்கு மேலே…
அன்பு தோழி ஹே ஹே…....!

 

--- அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : சாராயம் குடிச்சாக்கா
அட சங்கீதம் தேனா வரும்
ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ சாராயம்
குடிச்சாக்கா அட சங்கீதம்
தேனா வரும் சங்கீதம் தேனா
வந்தா கூட இங்கிதம் தானா வரும்

ஆண் : அட தவக்களை
சத்தம் சகிக்கலை குட்டை
குளத்துலே கத்தி பழகலே

ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ
வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை
வச்சிருக்கேன் பாத்துக்கோ

ஆண் : உச்சந்தலை கீழுருக்க
உள்ளங்கால் மேலிருக்க
நிக்கட்டுமா நடக்கட்டுமா

ஆண் : நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய அட ஊத்திக்கிட்டேன்
மில்லிய நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க
போறேன் டில்லியை

ஆண் : முன்னாடி இருக்குதடா
நம்ம மூக்காயி இட்லி கடை
பின்னாலே ருசிக்குமடா
இவ சூடான கீரவடை

ஆண் : இது மணக்குது
என்னை மயக்குது
பசி எடுக்குது பக்கம் இழுக்குது

ஆண் : புத்தம் புது ஆப்பமா
தொட்டு கொஞ்சம் பாப்போமா
தின்னுபுட்டு மொத்தமா துட்டு
என்ன கேப்போமா

ஆண் : சுட்ட கருவாடிருக்கு
வாத்துமுட்டை வறுத்திருக்கு
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்......!
 

--- நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மழை நீரில் கரைந்தோடும்
மணல் வீடு மனம் அல்ல
மழை நீர் போல் குணம் மாறும்
குணம் உந்தன் குணம் அல்ல

ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு
எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு
வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…உ……

ஆண் : அலங்காரம் கலந்தாலே
அதற்காக அழுவாய் நீ
அகங்காரம் குறை கூற
புழு போல துடித்தாய் நீ

ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான்
மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான்
மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது….உ……

ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது….உ……!

--- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஹோய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

பெண் : சி சி சினுங்க
மாட்டேன் எங்க வேணா
கிள்ளு இ இ ஏங்கமாட்டேன்
என்ன வேணா சொல்லு
ஓஹோ ஓஹோ

ஆண் : ஒன் டு த்ரின்னு
சொல்லி கண்ண மூடி
நில்லு உன் உன் ஒதட்ட
வந்து மோதும் முத்த வில்லு

ஆண் : நீ அழகிய ரோசு
கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன்
உதட்டையும் ஒட்டி நீ பேசு

ஆண் : ரவுண்ட் ரவுண்ட்
ரவுண்டடிச்சு உன்ன
நெஞ்சி சுத்தும் சவுண்ட்
சவுண்ட் சவுண்ட் ஏத்தி
காதல் செய்ய கத்தும்

பெண் : மைன்ட் மைன்ட்
மைன்டுக்குள்ள எல்லாம்
பேட் திங்க்சு பைன்ட் பைன்ட்
பைன்டாகத்தான் மாத்திக்கணும் ரிங்சு

ஆண் : ஹனிமூன் போகத்தான்
மூனே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான்
கேட்டேன் கூரையப்பிச்சிக் கொட்டுது

பெண் : உன் மனசுல
ஆட்டம் என் நெஞ்சு
குதிரை ஓட்டம் தாம்
தரிகிட்ட தோம் தரிகிட்ட
காதல் கொண்டாட்டம்........!


---  ராக்கம்மா ராக்கு ராக்கு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா
 
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா

கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு
 
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே.......!
 
--- பூஜைக்கு வந்த மலரே வா ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது சரிதானா

பெண் : சிக்க வைக்கிற
செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற
சொழல வைக்கிறியே நீ
அழகா பத்த வைக்கிற பதற
வைக்கிறியே இது முறைதானா

ஆண் : ஒத்த பார்வை
நெஞ்சுக்குள்ள ஊசி நூலும்
கோர்க்குதடி தெத்து பல்லு
சிரிப்பில் எல்லாம் பத்து
நிலவு தெறிக்குதடி

பெண் : தை தைன்னு
ஆடிகிட்டு உன்னோடு
நானும் வரேன் நை
நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்

பெண் : இந்த ஆட்டம்
போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா......!

--- ஹோய் அப்புடி போடு போடு போடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே
ஆவலா வா வா நிலா………….

பெண் : உன் தேகம்
தேக்கிலா தேன்
உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பல உன்
சொல்லிலா ஆஆ…

ஆண் : கல்யாண தேன்
நிலா காய்ச்சாத பால்
நிலா நீதானே வான்
நிலா என்னோடு வா நிலா

பெண் : தேயாத
வெண்ணிலா உன்
காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா.......!

--- கல்யாண தேன் நிலா ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.